07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, January 15, 2008

பணச்சரம் -4

உலகில் எது ஒன்றிலும் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது (uncertainity). உலகில் நிச்சயமான ஒன்று இதுதான் என்றால் அது நம் இறப்பு (only certain thing in the world is death). இதை தவிர மற்றவை எல்லாம் நடக்கலாம் நடக்காமலும் போகலாம். ஒரு குடும்பத்தின் வருமானத்தை ஈட்டக்கூடிய ஒருவர் அசம்பாவிதமாக இறக்க நேரிட்டாலோ அல்லது அவரால் பொருளீட்ட முடியாத நிலை (disability) ஏற்பட்டாலோ குடும்பத்தின் கதி என்ன ஆவது? இந்த இடத்தில்தான் வருகிறது இன்சூரன்ஸ்.

பலர் இன்சூரன்ஸ் என்றால் என்ன இன்வெஸ்ட்மெண்ட் என்றால் என்ன என்று தெரியாமல் குறைந்த அளவு காப்பீட்டுக்கு நிறைய ப்ரீமியம் செலுத்தும் திட்டங்களில் பணத்தை கட்டி வருகிறார்கள். அது தவறு இன்சூரன்ஸ் என்பதன் நோக்கமே வேறு என்பதை விளக்குகிறது இந்த பதிவு

இன்சூரன்ஸ்1
இன்சூரன்ஸ்2

டெக்கியா(Techie) இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஆசை கண்டிப்பா மனசுல இருக்கும் நம்மளும் ஒரு எண்டர்ப்ரனர் (Entrepreneur) ஆகனும்னு மத்த எந்த துறையிலும் இருக்கிற மாதிரி 60 வயசு வரைக்கும் ஒரு ப்ரொக்ராமராவோ அல்லது ப்ராஜக்ட் மேனேஜராவோ இருக்க முடியாது. ஒரு தொழிலை நடத்தும் முன்பு தெரிந்து கொள்ள வேண்டியவை எதாவது ஒரு இக்கட்டு வந்தால் எப்படி சமாளிப்பது என தன் சொந்த அனுபவத்தால் சொல்லியிருக்கிறார் திரு மா.சிவக்குமார் அவர்கள்.

போர்க்களம் 1
போர்க்களம் 2
போர்க்களம் 3
போர்க்களம் 4
போர்க்களம் 5

'அப்படி என்னதான் செய்யறீங்க? இத்தனை ஆயிரம் கோடி ஏற்றுமதி என்கிறாங்க, இத்தனை லட்சம் படிச்ச பசங்க வேலை பார்க்கிறாங்க. இன்னும் பல ஆண்டுகளுக்கு இது வளர்ந்து கொண்டே போகும் என்கிறாங்க. மென் பொருள்னா என்னங்க?' இதை படிங்க

மென்பொருள் துறையில் தொழில் வேலை வாய்ப்புகள்

டாலரின் மதிப்பு குறைந்து போனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என வலுவான ரூபாயின் விளைவுகள் பதிவுல எழுதியிருக்கார்.

இதுவும் டாலர் வீழ்ச்சியினால் நாட்டில் ஏற்றுமதியை நம்பியிருக்கும் தொழில் நிறுவனங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை பற்றி விரிவான அலசல்.
நாணய மாற்று வீதமும் ஏற்றுமதியும்


இவர் ERP பற்றி எழுதியுள்ள தொடர் மென்பொருள் துறை நண்பர்களுக்கு மிக்க பயனுள்ளதாக அமையும்.

மா. சிவக்குமார் அவர்களின் வலைப்பூ
‘பொருள் செய்ய விரும்பு’.

குறிப்பு : நண்பர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க பணச்சரம் வலைச்சரத்தில் இத்துடன் முடிவடைகிறது.

14 comments:

 1. அருமை, இதொ எங்க எதிர் பதிவு...

  ReplyDelete
 2. குறிப்பு : நண்பர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க பணச்சரம் வலைச்சரத்தில் இத்துடன் முடிவடைகிறது.

  ஹிஹிஹி சூப்பரு

  ReplyDelete
 3. இது நாங்க நாளைக்கு போட இருந்த பதிவு எங்க மாமாக்காக இதோ இப்போவே


  பணச்சரம்- வாரன் பபெட் இ-புக்ஸ்

  ReplyDelete
 4. மாம்ஸ் அடுத்த சரம் என்ன , நாங்களும் உங்களுக்கு உதவியா இல்ல இல்ல போட்டியா களத்தில குதிக்கலாம்னு இருக்கோம்...

  விட்டாச்சீ லீவுன்னு வீக் எண்டு பதிவு போட ஆரம்பிச்சிடாதிங்க...

  ReplyDelete
 5. சூப்பர் பதிவு...

  முடிஞ்சா படிச்சிட்டு வர்றேன்..

  ReplyDelete
 6. சிவா - பணச்சரம் பற்றிய சுட்டிகள் அனைத்துமே அருமையானவை. வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. ///TBCD said...
  சூப்பர் பதிவு...

  முடிஞ்சா படிச்சிட்டு வர்றேன்..///\

  தெரியுதா இப்ப நீங்க தொடுக்கும் பொழுதும் நாங்க ஏன் முன் குறிப்பு பின் குறிப்பு மற்றும் பின்னூட்டத்தை மட்டும் படிச்சோம் என்று:)))

  ReplyDelete
 8. ///Baby Pavan said...
  மாம்ஸ் அடுத்த சரம் என்ன , நாங்களும் உங்களுக்கு உதவியா இல்ல இல்ல போட்டியா களத்தில குதிக்கலாம்னு இருக்கோம்...///

  நம்ம பழக்கம் என்னா பவன் எப்பவும் எதிரியை வளரவிட்டு அடிக்கனும் இப்பதானே எழுத ஆரம்பிச்சு இருக்கார் கொஞ்ச நாள் ஆகட்டும். அப்புறம் கவனிச்சிடலாம்:))))

  ReplyDelete
 9. பண்ச்சரத்துக்காக உங்களுக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்தலாம்..

  ReplyDelete
 10. //
  Baby Pavan said...
  குறிப்பு : நண்பர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க பணச்சரம் வலைச்சரத்தில் இத்துடன் முடிவடைகிறது.

  ஹிஹிஹி சூப்பரு

  //
  முடிக்க வெச்சிட்டீங்களேப்பா!!

  ReplyDelete
 11. //
  TBCD said...
  சூப்பர் பதிவு...

  முடிஞ்சா படிச்சிட்டு வர்றேன்..

  //
  வாங்க டிபிசிடி
  நன்றி

  ReplyDelete
 12. //
  cheena (சீனா) said...
  சிவா - பணச்சரம் பற்றிய சுட்டிகள் அனைத்துமே அருமையானவை. வாழ்த்துகள்.

  ///
  நன்றி சீனா சார்

  ReplyDelete
 13. ///
  குசும்பன் said...
  ///TBCD said...
  சூப்பர் பதிவு...

  முடிஞ்சா படிச்சிட்டு வர்றேன்..///\

  தெரியுதா இப்ப நீங்க தொடுக்கும் பொழுதும் நாங்க ஏன் முன் குறிப்பு பின் குறிப்பு மற்றும் பின்னூட்டத்தை மட்டும் படிச்சோம் என்று:)))

  //
  அவ்வ்வ்வ்வ்வ்

  குசும்பா உன் பாசம் தொண்டைய அடைக்குதுப்பா பேச்சு வரமாட்டிக்குது

  ReplyDelete
 14. // ரூபஸ் said...
  பண்ச்சரத்துக்காக உங்களுக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்தலாம்..

  //
  வாங்க ரூபஸ்!
  நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது