07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, January 8, 2008

எப்படி இருக்க வேண்டிய நாம்..ஏன் இப்படி ஆயிட்டோம்

தென் ஆப்பிரிக்காவில், நெல்சன் மண்டேலாவை கைது பண்ணி சிறையில் தள்ளிய போது, இனவெறி/நிறவெறி ஏன் இன்னும் உலகத்தில் இருக்கிறது எனத் தோன்றியது. ஆனால், அந்த நாட்டில் நடப்பவைக்கும் நமக்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லை . பழங்குடியினர்களை அழித்தெடுத்த அமெரிக்காவிற்கும் , ஆஸ்துரேலியாவிற்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. நம் பழங்குடிகளை போற்றி பாதுகாத்து அவர்களை நம் சமூகத்திற்குள் கொண்டு வர முயற்சிகள் செய்யாவிடிலும், அவர்களை எக்ஸ்பிளாட் செய்யாமல் இருக்கலாமே. இந்த சுட்டியில் இருளர்களுக்கு நடந்தக் கொடுமைகள் பதிவேற்றப்பட்டுள்ளது. நாம் இன்னும் மாற்ற வேண்டியவை நிறைய என்பதை மீண்டும் உணர்த்தும் பதிவு. இங்கே இருளர்கள் பற்றிய சிறு குறிப்பு.

தமிழர்கள் இதுப் போன்ற பிரச்சனைகளை கண்டுக் கொளவதில்லை. ஏன் என்றால், அவர்களின் ஆக்கமும் , ஊக்கமும், இந்த வாரம் என்ன படம் வருகிறது, எப்படி போய் பார்ப்பது என்பதிலே. தமிழர்கள் ஏன் இன்னும் திரையிலே தங்கள் தலைவர்களைத் தேடுகிறார்கள் என்று உலகின் பல மூலைகளிலும் ஆரய கிளம்பியிருக்கிறார்களாம். . தமிழகத்தில் குஷ்புவிற்கு மட்டும் கோவில் கட்டவில்லை. நடிகர்களுக்கும்/நடிகைகளுக்கும் அர்பணிப்பு என்ற அளவிற்குப் போகும் முட்டாள் தமிழர்களைப் பற்றிய ஒரு பதிவை இங்கேப் பாருங்கள். சரியப்பா, படிக்காதவர்கள் தானே இப்படி, படித்தவர்கள் அப்படி இல்லை என்பவர்கள் கொஞ்சம் பொறுங்கய்யா. இன்னைக்கு விஜய்க்கும், அஜிக்கும், திரைஅரங்குக்கு வெளியே கொடி கட்டுவது வேண்டும் என்றால், படிக்காதவனா இருக்கலாம், ஆனா, மல்டிப்பிளெக்ஸ் திரைஅரங்குகள் எவ்வளவு தூரம் புக் ஆகின்றது, ஓப்பனிங்க் கலெக்ஷ்ன் என்ன, படம் ஹிட் ஆகுமா, ஆகாதா என்று ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை செலவழிப்பது படித்த இளைஞர்கள் என்பது வேதனைக்குரியது. ஒரு திரைப்படம் வெளி வரும் முன்னும், வந்த பின்னும் இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக விவாதிப்பதை காணுங்கள்.

இப்படி எல்லோரும் திரைப்படத்தில் தங்களை ஆழ்த்திக் கொண்டு இல்லை என்பது ஆறுதலான செய்தி. தமிழகத்தில் இரட்டைக் குவளை முறை இன்னும் வழக்கில் உள்ளது என்பதை முகத்திலடித்தவாறு கொண்டு வந்ததோடு நில்லாமல், அதனை ஒழிக்கும் முயற்சியில், இன்னும் தமிழர்களில் ஒரு சிலராவது முனைப்போடு செயலபடுவது மகிழ்ச்சி.

வலையுலகம் என்பது ஒரு அறிவுச் சுரங்கம் மட்டுமல்ல, தெளிவற்று இருக்கும், மக்களுக்கு பல வகையான தகவல்களை அள்ளித் தரும் இடமும் கூட. இப்படி இருக்கும் காலக்கட்டத்தில், பிரச்சனைகளை திசை திருப்பி, மக்களை மழுங்கடிக்கும் சில முயற்சிகள் நடைப்பெறும். வலையுலகத்தில் தமிழ் துள்ளி விளையாடுவதால், இப்படிப் பட்ட முயற்சிகளுக்கு எதிர் வினைகள் சட்டென்று உருவாகி, பரவலாகவும் அறியப்படுகிறது. சுஜாதாவின் அயோத்தியா மணடபம் என்ற ஒரு கதையில் உள்ள அரசியலை பதிவர்கள் பிச்சி கொத்துப் புரோட்டா போடுவதை கில்லி தொகுத்து தந்திருக்கிறதுப் பாருங்கள்.


பி.கு:

1.முதல் பதிவில் கும்மியடித்து விளையாண்ட நன்பர்களுக்கு நன்றி.
2.இந்தப் பதிவிலாவது, சுட்டிகளை அமுக்கிப், படித்துப் பின் பின்னுட்டம் போடவும். :D

21 comments:

 1. //
  2.இந்தப் பதிவிலாவது, சுட்டிகளை அமுக்கிப், படித்துப் பின் பின்னுட்டம் போடவும்.
  //
  புரியலை தயவு செய்து விளக்கவும்!!

  ReplyDelete
 2. //
  2.இந்தப் பதிவிலாவது, சுட்டிகளை அமுக்கிப், படித்துப் பின் பின்னுட்டம் போடவும்.
  //
  ஏன் இந்த கொலை வெறி

  ReplyDelete
 3. //
  2.இந்தப் பதிவிலாவது, சுட்டிகளை அமுக்கிப், படித்துப் பின் பின்னுட்டம் போடவும்.
  //
  கோவி அண்ணனை கலாய்ப்பதை நிறுத்தவும்
  :-)))))

  ReplyDelete
 4. இத்தனை கோவில்களா??? அடப்பாவிகளா!

  இரட்டைக்குவளை ...முழுமையான மாற்றத்துக்காய் அடுத்த நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டுமோ?

  படிக்க மிஸ் பண்ணிய அயோத்தியா மண்டபம் படிக்க முடிந்தது. நன்றி..

  ReplyDelete
 5. TBCD,

  சில சுட்டிகளைப் படித்தேன். குறிப்பாக இருளர்களுக்கு இழைக்கப்படும் கரும்பு மேஸ்திரிகளின் கொடுமைகள் வேதனைப் பட வைத்தது. இருளர்கள் பற்றியக் குறிப்புகளை வேறொரு சமயம் படிக்கிறேன். கீற்று, முருகப்பன் ஆகியவைகளை புக்மார்க் செய்துவிட்டேன்!

  சில சுட்டிகளைப் படித்து என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அல்லது, படித்து விட்டு கோபத்தோடு படுக்கைக்கு செல்ல விரும்பவில்லை.

  தொகுத்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 6. //மங்களூர் சிவா said...

  //
  2.இந்தப் பதிவிலாவது, சுட்டிகளை அமுக்கிப், படித்துப் பின் பின்னுட்டம் போடவும்.
  //
  ஏன் இந்த கொலை வெறி
  //

  அதானே, நாங்கெல்லாம் ஸ்கூல் வாத்தியார் சொன்னாலே படிக்க மாட்டோம், பினாங்கு சிங்கம் ஓவராக உரிமை எடுத்துக்கிறாரே.
  :)

  ReplyDelete
 7. //தமிழர்கள் இதுப் போன்ற பிரச்சனைகளை கண்டுக் கொளவதில்லை. ஏன் என்றால், அவர்களின் ஆக்கமும் , ஊக்கமும், இந்த வாரம் என்ன படம் வருகிறது,//

  அதுவும் ரொம்ப ஈசியாகப் போச்சு இண்டர்நெட்டுலேயே அலுவலக நேரத்திலேயே பார்த்துடுறாங்க

  ReplyDelete
 8. வலையுலகில் இதுக்கு எப்படி பதில் சொல்லனும் தெரியும்மா..

  புரிதலுக்கு நன்றி. ;)

  ////

  மங்களூர் சிவா said...
  //
  2.இந்தப் பதிவிலாவது, சுட்டிகளை அமுக்கிப், படித்துப் பின் பின்னுட்டம் போடவும்.
  //
  புரியலை தயவு செய்து விளக்கவும்!!

  January 8, 2008 10:27:00 AM IST


  மங்களூர் சிவா said...
  //
  2.இந்தப் பதிவிலாவது, சுட்டிகளை அமுக்கிப், படித்துப் பின் பின்னுட்டம் போடவும்.
  //
  ஏன் இந்த கொலை வெறி

  January 8, 2008 10:27:00 AM IST


  மங்களூர் சிவா said...
  //
  2.இந்தப் பதிவிலாவது, சுட்டிகளை அமுக்கிப், படித்துப் பின் பின்னுட்டம் போடவும்.
  //
  கோவி அண்ணனை கலாய்ப்பதை நிறுத்தவும்
  :-)))))
  ////

  ReplyDelete
 9. எனக்கு இன்னும் வைக்கவில்லையே என்கிறார்..விஜயின் மகன் சஞ்சய்

  ///பாச மலர் said...
  இத்தனை கோவில்களா??? அடப்பாவிகளா!

  இரட்டைக்குவளை ...முழுமையான மாற்றத்துக்காய் அடுத்த நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டுமோ?

  படிக்க மிஸ் பண்ணிய அயோத்தியா மண்டபம் படிக்க முடிந்தது. நன்றி..///

  ReplyDelete
 10. நன்றி தஞ்சாவூரான்

  //*தஞ்சாவூரான் said...
  TBCD,

  சில சுட்டிகளைப் படித்தேன். குறிப்பாக இருளர்களுக்கு இழைக்கப்படும் கரும்பு மேஸ்திரிகளின் கொடுமைகள் வேதனைப் பட வைத்தது. இருளர்கள் பற்றியக் குறிப்புகளை வேறொரு சமயம் படிக்கிறேன். கீற்று, முருகப்பன் ஆகியவைகளை புக்மார்க் செய்துவிட்டேன்!

  சில சுட்டிகளைப் படித்து என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அல்லது, படித்து விட்டு கோபத்தோடு படுக்கைக்கு செல்ல விரும்பவில்லை.

  தொகுத்தமைக்கு நன்றி!*//

  ReplyDelete
 11. நாங்கெல்லாம் பின்குறீப்பு மட்டும் படிச்சு பின்னூட்டம் போடுறவங்க.. :-))))

  ReplyDelete
 12. //2.இந்தப் பதிவிலாவது, சுட்டிகளை அமுக்கிப், படித்துப் பின் பின்னுட்டம் போடவும்.
  //

  சுட்டிகளை அமுக்குவோம்.. ஆனா படிப்போமான்னு கேட்காதீங்க.. ;-P

  ReplyDelete
 13. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். படித்த பிறகு உருப்படியா பின்னூட்டறேன் :P

  ReplyDelete
 14. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  நாங்கெல்லாம் பின்குறீப்பு மட்டும் படிச்சு பின்னூட்டம் போடுறவங்க.. :-))))

  //
  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 15. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  //2.இந்தப் பதிவிலாவது, சுட்டிகளை அமுக்கிப், படித்துப் பின் பின்னுட்டம் போடவும்.
  //

  சுட்டிகளை அமுக்குவோம்.. ஆனா படிப்போமான்னு கேட்காதீங்க.. ;-P
  //
  கலக்கல் மை ப்ரெண்ட்

  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 16. //
  SanJai said...
  படித்த பிறகு உருப்படியா பின்னூட்டறேன் :P
  //
  அப்ப இந்த பக்கம் திரும்ப வரமாட்டீங்க போல!!

  ReplyDelete
 17. //மங்களூர் சிவா said...

  //
  SanJai said...
  படித்த பிறகு உருப்படியா பின்னூட்டறேன் :P
  //
  அப்ப இந்த பக்கம் திரும்ப வரமாட்டீங்க போல!//


  :-)

  ReplyDelete
 18. பின்னுட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

  படிச்சுப் பின்னுட்டமிட்ட/பின்னுட்டமிடப் போகும் அனைவருக்கும் ஒரு சிறப்பு நன்றி..

  ReplyDelete
 19. //
  TBCD said...
  படிச்சுப் பின்னுட்டமிட்ட/பின்னுட்டமிடப் போகும் அனைவருக்கும் ஒரு சிறப்பு நன்றி..

  //
  அப்ப இந்த சிறப்பு நன்றி யாருக்கும் இல்லையா????
  அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 20. வேண்டாம்...விட்டுறுங்க..அழுதுடுவேன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ///மங்களூர் சிவா said...

  //
  TBCD said...
  படிச்சுப் பின்னுட்டமிட்ட/பின்னுட்டமிடப் போகும் அனைவருக்கும் ஒரு சிறப்பு நன்றி..

  //
  அப்ப இந்த சிறப்பு நன்றி யாருக்கும் இல்லையா????
  அவ்வ்வ்வ்வ்////

  ReplyDelete
 21. //தமிழகத்தில் குஷ்புவிற்கு மட்டும் கோவில் கட்டவில்லை. நடிகர்களுக்கும்/நடிகைகளுக்கும் அர்பணிப்பு என்ற அளவிற்குப் போகும் முட்டாள் தமிழர்களைப் பற்றிய ஒரு பதிவை இங்கேப் பாருங்கள். சரியப்பா, படிக்காதவர்கள் தானே இப்படி, படித்தவர்கள் அப்படி இல்லை என்பவர்கள் கொஞ்சம் பொறுங்கய்யா//

  மிகுந்த மன வருத்தம் தரும் உண்மைகளைத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. விடிவு எப்போது?

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது