07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 6, 2008

நன்றிச்சரம்

சில வார்த்தைகளை தவிர்க்கவே முடியாது. அப்படிப்பட்ட வார்த்தைகளை அந்தந்த நேரத்தில் சரியாக சொல்லாவிட்டால் அதனால வரும் இழப்பு நமக்கு தான். அப்படிப்பட்ட வார்த்தைகளில் ஒன்றுதான் நன்றி. இந்த நேரத்தில் யாருக்கு நன்றி சொல்லுவது?


வாழ்க்கையில் கிடைக்கின்ற ஒவ்வொரு நாளையும் அனுபவிக்கும் ஒரு சாதாரண பயணி நான். அந்த பயணங்களில் சக பயணிகளிடம் ரசித்தவைகளை பகிர்ந்துகொள்ளும்பொழுது ஏற்படுகின்ற அனுபவத்தை எந்த வார்த்தையை கொண்டு சொல்வது! வார்த்தைகளில் சொல்ல முடியாத அனுபவம் அது..!! அப்படி ஒரு அனுபவம்தான் இந்த வாரம் முழுக்க கிடைத்தது. இந்த வாரம் முழுக்க என்னை தினமும் பதிவு போட வைத்து புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிங்க. அதுவும் வருடத்தின் ஆரம்பத்தில்!. ரொம்ப மகிழ்ச்சியான அனுபவம் இது. இந்த வாரம் முழுக்க என் பழைய‌ நினைவுகளோடு என்னை நானே ரசித்தேன்னுதான் சொல்லணும். இவ்வளவு அழகாக என்னை ரசிக்க வைத்த அனைத்து பதிவர்களுக்கும் என்னோட நன்றிகள்.


பின்னூட்டத்தில் அனைவரும் எனக்கு நன்றி சொல்லியிருந்தார்கள். உண்மையில் நான்தான் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ரசிக்கும்படியாக எழுதியது நீங்கள் தான்! அதனால் உங்களுக்குத்தான் என்னோட நன்றிகள். எத்தனை எத்தனை பதிவர்கள்.. எத்தனை எத்தனை பதிவுகள்.. மிகச்சிறப்பாக எழுதுகிறார்கள். அவர்களின் எழுத்துகளில் இருந்து தினமும் ஒரு செய்தி கற்றுக்கொண்டுதான் இருக்கின்றேன். விடுபட்ட பதிவர்கள், பதிவுகள் இன்னும் நிறைய உள்ளது. இந்த ஒரு வார காலத்தில் என் நினைவுக்கு தோன்றிய‌ பதிவுகளையும், பதிவர்களையும் சரமாக தொடுத்திருந்தேன். அனைவருக்கும் சரியான அறிமுகம் கொடுத்தேனா என்று தெரியவில்லை. எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு குறையாவது இருக்கும். என்னோட இந்த வாரத்திலும் குறைகள் கண்டிப்பாக இருக்கும். அதுதான் நான் இன்னும் கற்று கொள்ள வேண்டியிருக்கிறது என்று நினைவு படுத்தும்.


குறிப்பாக முத்துக்காவிற்கு என்னோட சிறப்பு நன்றிகள். வேலை நேரம் சரியாக அமையாத‌தால் சரியான நேரத்திற்கு பதிவுகளை போட முடியவில்லை. என்னோட அனைத்து சரங்களையும் பதிவிட்டு அதை தமிழ்மணத்தில் அனுப்பி உதவி செய்தார்கள். இந்த சமயத்தில் அவர்களுக்கு என்னோட சிறப்பு நன்றியை சொல்லிக் கொள்கின்றேன்.

நான் ரசித்த பதிவுகளை பகிர்ந்து கொள்ள அருமையான வாய்ப்பை கொடுத்தவலைச்சர ஆசிரியர் குழுவுக்கும் பின்னூட்டத்தில் உற்சாகம் அளித்த சக பதிவர்கள் அனைவருக்கும் என்னோட நன்றிகள். அடுத்து வரவிருக்கும் சக பதிவருக்கும் என்னோட வாழ்த்துக்கள்.

சரி நேரம் ஆகிடுச்சி! பதிவுகள் படிச்சி பின்னூட்டம் போட வேண்டும் வரட்டா...!!

18 comments:

 1. அண்ணே.. இந்த வாரம் சூப்பாரா சரம் தொடுத்திருந்தீங்க. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. போய்ட்டு வாய்யா!
  இந்த வாரம் ஃபுல்லா கலக்கிட்ட மாப்பி.

  ReplyDelete
 3. கலக்கிப்புட்டீங்க அண்ணாத்த!! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. எப்படிடா இப்படில்லாம்..
  கலக்கிட்ட போ..
  வலைச்சரம் இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சு போச்சா :(
  ஆனாலும் கடைசியா நீ போட்ட முடிச்சு சூப்பர் மாப்பி :))

  ReplyDelete
 5. //வாழ்க்கையில் கிடைக்கின்ற ஒவ்வொரு நாளையும் அனுபவிக்கும் ஒரு சாதாரண பயணி நான்.//

  டிக்கட் எடுத்தியா.. இல்ல வித் அவுட்டா :))

  ReplyDelete
 6. கோபி,
  பார்வைக்கு பல புது பதிவுகளை கொண்டுவந்துட்டீங்க ஒவ்வொரு சரத்திலும், பாராட்டுக்கள்!

  ஒரு வாரம் சரம் தொடுத்து அசத்தோ அசத்துன்னு அசத்திப்புட்டீங்க கோபி!

  ReplyDelete
 7. @ மை ஃபிரண்ட்

  \\அண்ணே.. இந்த வாரம் சூப்பாரா சரம் தொடுத்திருந்தீங்க. வாழ்த்துக்கள்\\

  எல்லாம் உங்களை போல சீனியர்களை பார்த்து தான் ;))

  நன்றி ;)

  @ தம்பி

  \\போய்ட்டு வாய்யா!
  இந்த வாரம் ஃபுல்லா கலக்கிட்ட மாப்பி.\\

  உண்மையாவா கதிரு!!..நன்றி ;)

  ReplyDelete
 8. @ கப்பி பய

  \\கலக்கிப்புட்டீங்க அண்ணாத்த!! வாழ்த்துக்கள்!\\

  நன்றி செல்லம் ;)

  @ சென்ஷி

  \\ஆனாலும் கடைசியா நீ போட்ட முடிச்சு சூப்பர் மாப்பி :))

  மிக்க நன்றி மாப்பி ;)

  //வாழ்க்கையில் கிடைக்கின்ற ஒவ்வொரு நாளையும் அனுபவிக்கும் ஒரு சாதாரண பயணி நான்.//

  டிக்கட் எடுத்தியா.. இல்ல வித் அவுட்டா :))\\

  ;-)))))

  ReplyDelete
 9. @ திவ்யா

  \\கோபி,
  பார்வைக்கு பல புது பதிவுகளை கொண்டுவந்துட்டீங்க ஒவ்வொரு சரத்திலும், பாராட்டுக்கள்!\\

  நன்றி :)

  \\ஒரு வாரம் சரம் தொடுத்து அசத்தோ அசத்துன்னு அசத்திப்புட்டீங்க கோபி!\\

  எல்லாம் நம்ம மக்கள் கொடுத்த உற்சாகத்தில் தான்..நன்றி திவ்யா ;)

  ReplyDelete
 10. தல

  நீண்ட நாளைக்குப் பிறகு கடமை, கண்ணியம், கட்டுப்பாடோட ஒவ்வொரு நாளும் வேலைகள் மத்தியில் "சைக்கிள் கேப்பில்" சிரமமெடுத்துப் பதிந்து கலக்கீட்டீங்க.
  நம்ம செட்டுங்கிறதால கூடுதல் பெருமை.

  னம்ம கவலையெல்லாம் இனி ஆறு மாசத்துக்கு உங்க பதிவுகளைப் பார்க்கமுடியாதோ? ;(

  ReplyDelete
 11. கலக்கல் வாரம் கோபி.

  நல் வாழ்த்துகள்.

  இனிமே 'கிக்' கிடையாதாமே:-))))

  ReplyDelete
 12. @ கானா பிரபா

  \\தல

  நீண்ட நாளைக்குப் பிறகு கடமை, கண்ணியம், கட்டுப்பாடோட ஒவ்வொரு நாளும் வேலைகள் மத்தியில் "சைக்கிள் கேப்பில்" சிரமமெடுத்துப் பதிந்து கலக்கீட்டீங்க.
  நம்ம செட்டுங்கிறதால கூடுதல் பெருமை.\\

  :)) நன்றி தல

  \\னம்ம கவலையெல்லாம் இனி ஆறு மாசத்துக்கு உங்க பதிவுகளைப் பார்க்கமுடியாதோ? ;(\\

  ஆகா..முடிவே பண்ணிட்டிங்களா..அந்த அளவுக்கு எல்லாம் போகது தல..எப்படியும் மாதம் ஒரு மொக்கை உண்டு ;)))

  @ துளசி கோபால்

  \\கலக்கல் வாரம் கோபி.

  நல் வாழ்த்துகள்.\\

  நன்றி டீச்சர் ;)

  \\இனிமே 'கிக்' கிடையாதாமே:-))))\\

  எப்போதும் "கிக்" தான் ;))

  ReplyDelete
 13. இப்பத்தான் உக்காந்து எல்லா சரமும் படிச்சேன்... அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.... :))

  ReplyDelete
 14. நல்ல சரம் தொடுத்திருந்தீர்கள்...வாழ்த்துகள்

  ReplyDelete
 15. //பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை//

  இதுக்கு நானோ, மைபிரண்டோ காரணம் கிடையாது :))

  ReplyDelete
 16. //இனிமே 'கிக்' கிடையாதாமே:-))))//

  @ துளசி கோபால்..

  யாரு சொன்னது.. உதைக்கறதுக்கு தனியா தனிமடல் அனுப்புவாங்க. வாங்கிக்கச்சொல்லி :)) (கிக் : உதை)

  ReplyDelete
 17. திவ்யா சொன்ன மாதிரி புது பதிவர்களை அறிமுகப் படுத்துனதுக்கு நன்றி கோபி. அதுக்குள்ள ஒரு வாரம் முடிஞ்சிபோச்சா....ரசிகனா ஆரம்பிச்சி, நன்றிச்சரத்தோட முடிச்சது கவிதைத்துவம். வாழ்க! வளர்க!

  ReplyDelete
 18. @ ஜி

  \\இப்பத்தான் உக்காந்து எல்லா சரமும் படிச்சேன்... அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.... :))\\

  நன்றி ஜி ;)

  @ பாச மலர்

  \\\நல்ல சரம் தொடுத்திருந்தீர்கள்...வாழ்த்துகள்\\

  நன்றி பாச மலர் ;)


  @ காட்டாறு

  \\திவ்யா சொன்ன மாதிரி புது பதிவர்களை அறிமுகப் படுத்துனதுக்கு நன்றி கோபி. \\\

  நன்றி அக்கா ;)

  \\அதுக்குள்ள ஒரு வாரம் முடிஞ்சிபோச்சா....ரசிகனா ஆரம்பிச்சி, நன்றிச்சரத்தோட முடிச்சது கவிதைத்துவம். வாழ்க! வளர்க!\\

  கவிதைத்துவமா!!!?? கவிஞரே சொல்லிட்டிங்க அப்போ சரியாக தான் இருக்கும்..;))

  நன்றி ;)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது