07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 19, 2008

வலையும், வலைச்சரமும், நானும் !

சும்மா பதிவு போட்டுகிட்டு இருந்த என்னையும் மதித்து, ஆசிரியராக ஒருவார காலம் இருக்கிறீர்களா எனக் கேட்ட சீனா ஐயாவின் தைரியத்தை என்னனு சொல்ல, நன்றி பாராட்டுவதைத் தவிர !!! மனம் ஒரு விநாடி மெய்சிலிர்த்தது உண்மையோ உண்மை. முதற்கண் அவர்களுக்கு என் நன்றிகள்.

செல்வி ஷங்கர் மேடம், நல்ல பதிவர்களை அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறார்கள். சரியா பதிவுகள் இடமுடியவில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் சீனா அவர்களையும், மேடம் அவர்களையும், அவர்களது உழைப்பிற்காக மனம் திறந்து வாழ்த்துகிறேன்.

'வலைச்சரம்' மூலம் பல ஆசிரியர்கள் நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட‌ அந்தப் பணியை இந்த வாரம் நல்ல விதமா செய்யணும் என்று அந்த ஆண்டவனை வேண்டி, நான் படித்த, அதில் பிடித்த, பல பதிவுகளை சரங்களாய் தொகுத்து வழங்குகிறேன். இயன்றவரை புதுமுகங்களை அறிமுகம் செய்கிறேன், வெகு சில இடங்களில் வலைச்சர விதிகளுக்கு உட்படாமல் போய்விடுகிறது. பொறுத்தருள்வீர் !

சுயதம்பட்டம் அடிச்சுக்கலாமாமே !!! முதலிலேயே மைக் கிடைத்த கடைநிலை பேச்சாளரின் மனநிலையில் இருக்கிறேன். அதனால் அனைவரையும் பொறுமையுடன் தொடர்ந்து வாசிக்குமாறு ஆரம்பத்திலேயே கேட்டுக் கொள்கிறேன் :))

வலையுலகில் நுழையும் வரை, தவறாது பண்டிகைகளுக்கு கவிதை எழுதி நண்பர்களுக்கு அனுப்பும் பழக்கம் இருந்தது. முதலில் வாழ்த்து அட்டைகள், பின் மின்-அஞ்சல் எனச் சென்ற ஆண்டு வரை விருப்பத்துடன் செய்த செயல். வலைப் பதிய ஆரம்பித்து, அது நின்று விட்டது. வருடக்கணக்கில் வாழ்த்து அனுப்பும்போது அமைதி காத்த நண்பர் கூட்டம், எங்கேப்பா கவிதைய காணோம் என மௌனம் கலைக்கின்றனர் இப்போது !!!

பதிவுலகில் நம்மில் பலர் இன்னும் ஓரிரு எழுத்துப் பிழைகள் செய்யத் தான் செய்கிறோம். ஆனால் இவ்வியசயத்தில் ஆச்சரியப்பட வைப்பவர் நாகு. சில ஆண்டுகள் வாழ்ந்த சிங்கை வாழ்வு துறந்து ரிச்மண்ட் வாழ்வு ஏற்றபோது, கிடைத்த அற்புத நண்பர் நாகு மற்றும் அவர் குடும்பத்தினர். தாய்மொழி தெலுங்காயினும், தமிழில் இவரை அடித்துக் கொள்ள முடியாது. வலையுலகைப் பயன்படுத்தும் முறையை அறிமுகப் படுத்திய நண்பரும் அவரே. எனது ஆக்கங்களுக்கு உடனே (தனி மடல்களில் எழுத்துப் பிழை(கள்)) மறுமொழியிட்டு இன்றும் தவறாது ஊக்கப் படுத்துபவர்களில் நாகு முதல்வர்.

முதலில் பதிய ஆரம்பித்தது ரிச்மண்ட் தமிழ் சங்கத்தில். சென்ற ஆண்டு ஒரு நாள், ஒரு நண்பரின் வீட்டில் நாகுவின் அறிமுகம் கிடைத்தது. தமிழில் எழுதுவேன் என்று தான் சொன்னேன், மறுநாளே அழைப்பு அனுப்பி விட்டார் மனுஷன். ஆரம்பத்தில் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. ஒரு கதை, பின் சில கவிதைகள் என ஆரம்பித்தாலும், இளையராஜா அவர்களின் திருவாசகம் குறித்த பதிவு மறக்க முடியாத ஒன்று. முன்பு வேலை செய்த அலுவலகத்தில் கிடைத்த அனுபவம் அது.

நல்லா பேசறவங்களைப் பார்த்தாலே பொறாமையாக இருக்கும். என் எழுத்துக்கள் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் 'பேச்சு' ... சுத்தம். நானும் என்னவெல்லாமோ பயிற்சி எடுக்கறேன், ஹூம்ம்ம் .... இதை மையப்படுத்தி, 'மொழி' திரைப்படம் பார்க்கும்போது, சிந்தனை றெக்கை கட்டிப் பறக்க எழுதிய கவிதை 'யாரிடம் கற்றோம் ?'

அயல்நாட்டிலிருந்து, விடுமுறைக்கு இந்தியா போகும்போதெல்லாம் சென்னையில் டெண்ட் அடித்து ஷாப்பிங் திருவிழா தான். அதிலும் ஒவ்வொரு முறை செல்லும் போதும், இனி இந்தத் தெருப் பக்கமே வரக்கூடாது என மனம் உறுதி எடுக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் உறுதி குலைக்கப்பட்டு, இத் தெருவில் நிற்போம்.

எதையுமே முறையாகக் கற்றுக் கொண்டதில்லை என்பதற்கு இவ்விரு வெண்பா (என்ற நினைப்பு தான் !!!) பாடல்கள் சாட்சி :) இலக்கண வல்லுநர்கள் தயவு செய்து அடிக்க வராதீர்கள். ஏதோ ஒரு ஆர்வத்துல எழுதிட்டேன், விட்டுருங்க.


போன பனி காலத்தில் வெண்பா (என்ற பெயரில்) பதிவு போட்டதால், இந்த வருடம் ஏதாவது வித்தியாசம் பண்ணலாம் என நினைத்து, அசையாப் பொருள்கள், பெய்யும் பனியை அரிதாரம் பூசுவதாக கற்பனையில் உதிக்கவே, கவிதையாய் பதிவிட்டேன்.

குட்டீஸ் எப்பவுமே குதூகலம் தான். இந்தக் கால மாற்றத்தால் பேரன், பேத்திகள் அயல்நாடுகளில் வாழ, அவர்கள் பக்கத்தில் இல்லையே எனும் பெரியவர்களின் வருத்தம் குறித்த மழலை கவிதை.

கிராமத்தில் பிறந்து, அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் ஆனது நகரத்து ஹாஸ்டல் வாழ்க்கை. விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும்போதெல்லாம் உற்சாகம் தழும்பும். நண்பனின் வீடு / வயல் / கிணறு வாழ்வில் மறக்க முடியாத இடங்கள். அதையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் மையப் படுத்தி எழுதிய கதை 'வரப்பு உயர்ந்த வீடு'.

பள்ளி விடுமுறைகளில், மதுரையில பஸ்ஸு புடிச்சு, சிவகங்கை தாண்டி .... (சரி பேரு சஸ்பென்ஸ் போல, ஊரும் சஸ்பென்ஸா இருந்துட்டுப் போகட்டும்.) ஊரு சேருகிற வரை, பஸ் பயணம் முழுதும் ஒரே சிந்தனை மழை தான். பின் சிவகங்கையில் +1, +2 படிக்கையில், கிராமத்தில் இருந்து தினம் பஸ் பயணம். அந்த இரு ஆண்டுகள் என் மனதில் பதிந்த பேருந்து பற்றின காட்சிகளை மையப்படுத்தி எழுதிய கவிதை 'கிராமத்துப் பேருந்துப் பயணம்'.

ஊருல மண்ணின் மைந்தர்களைப் பார்த்தால், அநேகம் பேர் முரட்டு மீசையுடன் இருப்பார்கள். சிறுவயதில் அவர்களைப் பார்த்து பயந்ததுண்டு. இப்போது வியந்து, மீசை கவிதை வடிவில்.

காதல் இல்லாமல் கவிதையா ? காதல் ... பருவத்திற்கே உரிய செயல் அல்லவா. நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லை என்றாலும், ஒவ்வொருவருக்குள்ளும் இந்த உணர்வு இல்லாமல் இருக்க முடியாது.

தோப்பு, கணிதம், சமீபத்தில் எழுதிய கோவில் திருவிழா என எதை விடுப்பது, எதைச் சேர்ப்பது என்று மனம் குழம்பிய நிலையில் தான் புரிகிறது, உங்களை ரொம்ப இம்சிக்கிறோமோ என்று ! "அவ்வளவு தான், கொஞ்சம் பொறுத்துக்கங்க. அடுத்த பதிவுல எல்லாம் மற்றவர்களைப் பற்றி தான்" :))

கிராமங்களில் பார்த்த, கேட்ட, ரசித்த காட்சிகள். பின் மற்ற வசிக்கும் ஊர்களில், நாடுகளில் ரசிக்கும் காட்சிகள் என்று எதிலும் இயல்பான நடைமுறை வாழ்வுகளைப் பதிந்து வருகின்றேன்.

தொடர்ந்து ஒரு ஆண்டு காலமா எழுதுவதற்கு மூல காரணம் யாருனு இவ்வளவு நேரம் சொல்லவில்லை பாருங்கள். சாட்சாத் நீங்கள் தான். உங்கள் ஒவ்வொருவரின் வாசித்தலும், பின்னூட்டங்களும் தான் அடுத்த பதிவை நோக்கி என்னை நகர்த்துகிறது என்றால் அது மிகையல்ல. வருகைக்கும், வாசித்தலுக்கும் மிக்க நன்றி நண்பர்களே. தொடர்ந்து வாசியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

16 comments:

  1. சதங்கா

    அருமை அருமை - சுய தம்பட்டம் என்பது நம்மைப் பெருமைப் படுத்திக் கொள்ள அல்ல - மணக்கும் மல்லிக்கும் விளம்பரம் வேண்டும் காலமிது. தவறில்லை- அழகாக தன்னுடைய படைப்புகளில் சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுக்கும் திறமைசாலியான சதங்காவிற்கு வாழ்த்துகள். அத்தனை சுட்டியையும் படிக்கிறேன் ( மறுபடி ?) - மறு மொழி இடுகிறேன்

    நல்வாழ்த்துகள் - வளர்க ஆசிரியப் பணி

    ReplyDelete
  2. தரமான பதிவுகளையே தொடர்ந்து தந்து வரும் தாங்கள் வலைச்சரம் தொடுப்பது சிறப்பே சதங்கா, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சதங்கா, வித்தியாசமான வலைப்பதிவுகள எங்களுக்கு காட்டி அசத்துங்க

    ReplyDelete
  5. வாழ்த்துகள் ஆசிரியரே! :)

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சதங்கா.

    நல்ல ஆரம்பம். உங்கள் பதிவுகளுக்கு அருமையான அறிமுகத்துடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். கலக்குங்கள்.

    ReplyDelete
  7. நன்கு தொடங்கியிருக்கிறீர்கள், சதங்கா. சரம் கமழ வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. நன்றி சீனா ஐயா, (மறுபடியும்) படிங்க, படிச்சிட்டு சொல்லுங்க.

    //மணக்கும் மல்லிக்கும் விளம்பரம் வேண்டும் காலமிது.//

    இது என்னவோ வாஸ்தவம் தான்.

    ReplyDelete
  9. துளசி டீச்சர்,

    மிக்க மகிழ்ச்சி. அனைத்து பதிவுகளையும் வாசியுங்கள், கருத்து சொல்லுங்கள்.

    ReplyDelete
  10. ஜீவா,

    ரொம்ப சந்தோசமாக இருக்கிறது உங்களின் பின்னூட்டம் வாசிக்கையில். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.

    ReplyDelete
  11. திகழ்மிளிர்,

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.

    ReplyDelete
  12. சின்ன அம்மிணி,

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக வித்தியாசமான பதிவுகள்/பதிவர்கள் வரிசை கட்டி வரப் போகிறார்கள். தொடர்ந்து வாசியுங்கள்.

    ReplyDelete
  13. நியூபீ,

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.

    ReplyDelete
  14. நாகு,

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. எல்லாம் உங்களின் ஆதரவு இருக்கும் வரை கலக்க எனக்கு ஏது குறை.

    ReplyDelete
  15. கவிநயா,

    சரம் கமழ உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது