07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 13, 2009

வலைச்சரத்தில் நண்பர்களோடு ஓர் அறிமுகம்...

வலைச்சரத்தில் நண்பர்களோடு ஓர் அறிமுகம்...

வணக்கம், வலை நண்பர்களே!

முதலில்
வலைச்சரத்தை தொடங்கிவைத்து பல பதிவர்களின் ரசனைகளை பகிர இடமாக்கி வைத்தவர். தமிழ்கணிமை மற்றும் சாப்பிடவாங்க தளங்களை நிர்வகித்தவருமான சிந்தாநதி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் அவர்கள் குடுப்பத்தார்களுக்கு அனுதாபத்தையும் நண்பர்களின் சார்பாக தெரியப்படுத்துகின்றேன்.

இன்று உங்களோடு வலைச்சரத்தின் சந்திக்கின்றேன். அன்பின் ஐயா சீனா அவர்கள் இந்த பொறுப்பை அழித்துள்ளார். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். எந்த நம்பிக்கையில் என்கையில் கொடுத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அந்த பொறுப்பை நல்லப்படியாக நடத்த நீங்கள் என் அருகில் இருப்பது புதிய தெம்பை கொடுக்கின்றது. சென்ற வாரத்தில் தோழி தமிழரசி எழுத்தோசை மிக சிறப்பாக செய்து எல்லோருடைய பாராட்டையும் பெற்றார்கள். தோழி அவர்களுக்கு என் பாராட்டுகள். அந்த அளவிற்கு என்னால் செல்ல முடியுமா? என்ற பயமும் இருக்கதான் செய்கின்றது. இருப்பினும் ஒரளவிற்கு செய்ய துணிந்துள்ளேன்.

என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை, சாமானியர்களில் நானும் ஒருவன். என் இயற்பெயரும் ஆ.ஞானசேகரன் தான். உங்களோடு உறவாட அம்மா அப்பா தளத்தில் இருக்கின்றேன். படத்தை தட்டி தளத்திற்கு செல்லலாம்.

நான் முதன் முதலில் பார்த்த பிளாக் என்றால், ஏதோ ஒரு தேடுதலில் என் பார்வையில் பட்டது பிகேபி சாரின் PKPin வலைத்தளம். அப்பொழுதெல்லாம் வலைதளம் பற்றி அறிந்திருக்கவில்லை. பிகேபி சாரின் தளத்தில் எண்ணிலடங்கா தொழிற்நுட்ப தகவல்கள் இருந்தது. அவற்றை இன்றுவரை பார்த்து வருகின்றேன் என்றால் நீங்களே புரிந்துகொள்ளுங்கள். இவர் தளத்தின் சேவையை கருதி கூடுதுறை ஒரு பதிவு அட்டவணை தொகுத்துள்ளார்கள் PKP பதிவுகள் அட்டவணை. பிகேபி தளத்தை பின் தொடர்பவர்கள் இன்றைய நிலையில் 333 நண்பர்கள். பிகேபி தளத்தை நான் அறிமுகப்படுத்த தேவையில்லை நான் அவரோடு அறிமுகமாகின்றேன் என்றால் மிகையாகாது. பிகேபி தளம் செல்ல படத்தை தட்டவும்.


அடுத்ததாக நான் வலைப்பக்கம் வந்தது கோவி.கண்ணனின் காலம் பதிவுகளில். கோவி.கண்ணன் எனக்கு 12 ஆண்டுகள் பழக்கம் நல்ல குடும்ப நண்பர். அவரின் இடுக்கைகள் ஆன்மீகம் சார்ந்தும் முற்போக்கு சிந்தனைகள் சார்ந்தும் இருக்கும். இதைப்பற்றி அவரே அவர்தளத்தில் சொல்லியுள்ளார் எனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான் என்று. கோவி. கண்ணனை நான் அறிமுகம் செய்யவில்லை அவரோடு நான் இங்கு அறிமுகமாகின்றேன். கோவி.கண்ணன் தூண்டுதலாலும் மேலும் ஆலோசனைகளாலும் உறுவானதுதான் என்னுடைய அம்மா அப்பா. இவர் 900 பதிவுகள் தொட்டுயுள்ளார் 168 நண்பர்கள் பின் தொடர்கின்றார்கள். இவர் தளத்திற்கு செல்ல படத்தை தட்டவும்.


ஒவ்வொரு இடுக்கையாக பிரித்து சொல்ல முடியாவிட்டாலும் தற்பொழுது அவர் பதிவிடும் இடுக்கை குறிப்பிடுகின்றேன். பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை 6வது பிரிவாக எழுதிகொண்டுள்ளார்கள். பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5

இப்படியாக உருவானதுதான் அம்மா அப்பா. இன்றோ நான் சம்பாரித்த நண்பர்கள் ஏராளம். என்னையும் பின் தொடர்பவர்கள் 49 நண்பர்கள். இவற்றுகெல்லாம் இணையத்திற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். என் இடுக்கைகள் எல்லாமே என்னை பொருத்தவரை என் உணர்வுகள்தான். நான் ஏதோ பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை. எழுத்தும் அவ்வளவாக வருவதுமில்லை. என் உணர்வுகளை இந்த உலகிற்கு விட்டு செல்ல வேண்டும் அதற்காக எழுதுகின்றேன். நான் பார்த்த, நான் கேட்ட, நான் ரசித்த, நான் ருசித்த விடயங்கள் என்னோடு இல்லாமல் உலகிற்கு விட்டுசெல்ல எழுத ஆரம்பித்தேன் இன்றும் உங்களோடு பகிர்கின்றேன். அதற்காக இந்த சந்தர்ப்பத்தில் நன்றியும் சொல்லிக்கொள்கின்றேன்.

எனக்கு பிடித்த என் இடுக்கை என்று சொல்ல முடியாவிட்டாலும் தெரிந்துகொண்டால் நல்லது என் நினைக்கும் சுட்டிகள்
1.சாமானியனின் சத்தம் சந்தைக்கு வந்தால்...
2.சாமானியனுக்கு வாங்கும் சக்தி அதிகரித்தால் பணவீக்கம் அதிகமாகுமா? 3.பணவீக்கம் குறைந்தால் சாமானியனுக்கு என்ன லாபம்?
4.சாமானியனுக்கு தெரிந்த பணமதிப்பு....
5.மழுங்கடிக்கும் மந்தநிலை...
6.ஒன்று மட்டும் உண்மை!....

மேலும்..
1.என்மீது கல்லெறிந்தவர்கள்-புளியமரம்
2.அம்மா நான் கடலை ஆயப்போறேன்...
3."இயற்கையோடு மனிதன்"-துவரங்குச்சியோடு சில நினைவுகள்...

அப்பறம் சொல்லிகொண்டே போனால் அலுப்பாக இருக்கும் இந்த இடுக்கையை இத்துடன் முடித்துக்கொள்ளலாம். அடுத்த இடுக்கையில் என்னொடு கலந்த நண்பர்களின் தளங்களை அறிமுகம் செய்ய எண்ணியுள்ளேன். இதேபோல ஆதரவும் வேண்டும் என்ற கோரிக்கையுடன்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

71 comments:

 1. வாழ்த்துக்கள் சேகர்...ஓரளவுக்கு அல்ல முழுமையா துணிந்து செய்யுங்கள்... நாங்கள் இருக்கிறோம் துணையாக....அம்மா அப்பா உங்களை நடத்திய நல்வழிப் போலவே இந்த அம்மா அப்பா வந்த வழியும் வளமாகத் தான் இருக்கிறது.....

  ReplyDelete
 2. //தமிழரசி said...

  வாழ்த்துக்கள் சேகர்...ஓரளவுக்கு அல்ல முழுமையா துணிந்து செய்யுங்கள்... நாங்கள் இருக்கிறோம் துணையாக....அம்மா அப்பா உங்களை நடத்திய நல்வழிப் போலவே இந்த அம்மா அப்பா வந்த வழியும் வளமாகத் தான் இருக்கிறது.....//

  மிக்க நன்றிங்க தமிழ்

  ReplyDelete
 3. வாழ்த்துகள் ஞானசேகர்.

  ReplyDelete
 4. // நட்புடன் ஜமால் said...

  வாழ்த்துகள் ஞானசேகர்.//

  மிக்க நன்றி ஜமால்

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 6. வாழ்த்துகள் நண்பரே

  ReplyDelete
 7. //'இனியவன்' என். உலகநாதன் said...

  வாழ்த்துக்கள் நண்பா//

  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 8. // திகழ்மிளிர் said...

  வாழ்த்துகள் நண்பரே//

  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் ஞான சேகர்

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் நண்பா...:-))))))

  ReplyDelete
 11. // அமுதா said...

  வாழ்த்துக்கள்//

  நன்றிங்க

  ReplyDelete
 12. // பிரியமுடன்.........வசந்த் said...

  வாழ்த்துக்கள் ஞான சேகர்//

  மிக்க நன்றி வசந்த்

  ReplyDelete
 13. //கார்த்திகைப் பாண்டியன் said...

  வாழ்த்துக்கள் நண்பா...:-))))))//

  வணக்கம் நண்பா
  மிக்க நன்றிபா

  ReplyDelete
 14. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. //புதுகைத் தென்றல் said...

  வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்//

  நெஞ்சார்ந்த நன்றிங்க

  ReplyDelete
 16. கலக்குங்க சார்

  ReplyDelete
 17. // ஐந்தினை said...

  கலக்குங்க சார்//

  நன்றி நண்பரே

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 19. உங்களுக்கு துணை நிற்க நண்பர்கள் படையுண்டு.வெற்றிகரமாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பை நடத்துங்கள். முதல் நாள் வாழ்த்துகள் நண்பா.

  ReplyDelete
 20. வலைச்சர ஆசிரியருக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்!!

  மற்றவை அப்புறமா படித்து விட்டு பின்னூட்டமிடுகிறேன் சகோதரா!

  ReplyDelete
 21. ஆஹா நம்ம ஞானசேகர் வலைச்சரம் ஆசிரியர் !!!

  வாழ்த்துகள் !

  ReplyDelete
 22. வாங்க...வாங்க...

  புதுப் பதிவர்களை அறிமுகப்படுத்துவது எப்போ?

  ReplyDelete
 23. // Suresh Kumar said...

  வாழ்த்துக்கள் நண்பரே//

  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 24. //குடந்தை அன்புமணி said...

  உங்களுக்கு துணை நிற்க நண்பர்கள் படையுண்டு.வெற்றிகரமாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பை நடத்துங்கள். முதல் நாள் வாழ்த்துகள் நண்பா.//

  அந்த நம்பிக்கையில்தான் இன்று உங்களுடன்
  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 25. // RAMYA said...

  வலைச்சர ஆசிரியருக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்!!

  மற்றவை அப்புறமா படித்து விட்டு பின்னூட்டமிடுகிறேன் சகோதரா//

  மிக்க நன்றிக்கா

  ReplyDelete
 26. // கோவி.கண்ணன் said...

  ஆஹா நம்ம ஞானசேகர் வலைச்சரம் ஆசிரியர் !!!

  வாழ்த்துகள் !//

  நன்றி கண்ணன்

  ReplyDelete
 27. // அப்பாவி முரு said...

  வாங்க...வாங்க...

  புதுப் பதிவர்களை அறிமுகப்படுத்துவது எப்போ?//

  வணக்கம் நண்பா,.. புதிய பதிவர்கள் அறிமுகம் இன்று இரவு..
  மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 28. // சந்தனமுல்லை said...

  வாழ்த்துகள்!//

  நன்றி நண்பா

  ReplyDelete
 29. வாழ்த்துகள் நண்பரே

  ReplyDelete
 30. // ஜெஸ்வந்தி said...

  வாழ்த்துகள் நண்பரே//
  ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 31. வாழ்த்துகள் நண்பா

  ReplyDelete
 32. வாழ்த்துகள் ஞானசேகர்.

  ReplyDelete
 33. ஆனால் அந்த பொறுப்பை நல்லப்படியாக நடத்த நீங்கள் என் அருகில் இருப்பது புதிய தெம்பை கொடுக்கின்றது.

  கண்டிப்பாக துணையிருப்போம்

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள் நண்பரே..

  ReplyDelete
 35. /*
  அடுத்ததாக நான் வலைப்பக்கம் வந்தது கோவி.கண்ணனின் காலம் பதிவுகளில். கோவி.கண்ணன் எனக்கு 12 ஆண்டுகள் பழக்கம் நல்ல குடும்ப நண்பர். அவரின் இடுக்கைகள் ஆன்மீகம் சார்ந்தும் முற்போக்கு சிந்தனைகள் சார்ந்தும் இருக்கும். இதைப்பற்றி அவரே அவர்தளத்தில் சொல்லியுள்ளார் எனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான் என்று. கோவி. கண்ணனை நான் அறிமுகம் செய்யவில்லை அவரோடு நான் இங்கு அறிமுகமாகின்றேன். கோவி.கண்ணன் தூண்டுதலாலும் மேலும் ஆலோசனைகளாலும் உறுவானதுதான் என்னுடைய அம்மா அப்பா.
  */

  வாழ்த்துக்கள் நண்பா....
  கலக்கோ கலக்குன்னு கலக்கு நண்பா...

  நானும் அவரோட பதிவையும் ரத்னேஷ் அவர்களின் பதிவையும் படிச்சி... அப்புறம் அண்ணன் கோவி அவர்களின் ஊக்கத்துடன் தான் பதிவு எழுத வந்தேன்.

  ReplyDelete
 36. // சொல்லரசன் said...

  வாழ்த்துகள் நண்பா//

  வணக்கம் சொல்லரசன்
  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 37. // sakthi said...

  வாழ்த்துகள் ஞானசேகர்.

  ஆனால் அந்த பொறுப்பை நல்லப்படியாக நடத்த நீங்கள் என் அருகில் இருப்பது புதிய தெம்பை கொடுக்கின்றது.

  கண்டிப்பாக துணையிருப்போம்///


  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 38. // த.ஜீவராஜ் said...

  வாழ்த்துக்கள் நண்பரே..//

  மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 39. // நையாண்டி நைனா said...

  /*வாழ்த்துக்கள் நண்பா....
  கலக்கோ கலக்குன்னு கலக்கு நண்பா...

  நானும் அவரோட பதிவையும் ரத்னேஷ் அவர்களின் பதிவையும் படிச்சி... அப்புறம் அண்ணன் கோவி அவர்களின் ஊக்கத்துடன் தான் பதிவு எழுத வந்தேன்.//

  அப்படியா நைனா மகிழ்ச்சிங்கோ..
  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பா

  ReplyDelete
 40. அருமையாக அமைந்துள்ளது முதல் நாள் பதிவு. ஆசிரியருக்கு வாழ்த்துகள்.தொடருங்கள். ஆவலோடு காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 41. வாங்க வாங்க!

  வந்து கலக்குங்க!

  ReplyDelete
 42. வாழ்த்துக்கள் நண்பரே....

  கருத்துரைகள் வாயிலாகவே தங்களைப் பற்றி முதலில் அறிந்தேன்....

  எங்கு சென்றாலும் அங்கு தங்கள் கருத்துரைகளைக் கண்டு மலைத்தேன்...

  மிக்க மகிழ்ச்சி தொடருங்கள்...

  ReplyDelete
 43. ஞானசேகரன் ஆரம்பமே களை கட்டுகிறது. இன்னும் எழுதுங்கள்.

  ReplyDelete
 44. வாழ்த்துக்கள் நண்பரே கலக்குங்க..

  ReplyDelete
 45. // உமா said...

  அருமையாக அமைந்துள்ளது முதல் நாள் பதிவு. ஆசிரியருக்கு வாழ்த்துகள்.தொடருங்கள். ஆவலோடு காத்திருக்கிறோம்.//

  மிக்க நன்றிங்க உமா

  ReplyDelete
 46. // வால்பையன் said...

  வாங்க வாங்க!

  வந்து கலக்குங்க!//

  வணக்கம் நண்பா.. மிக்க நன்றிங்க

  ReplyDelete
 47. //முனைவர்.இரா.குணசீலன் said...

  வாழ்த்துக்கள் நண்பரே....

  கருத்துரைகள் வாயிலாகவே தங்களைப் பற்றி முதலில் அறிந்தேன்....

  எங்கு சென்றாலும் அங்கு தங்கள் கருத்துரைகளைக் கண்டு மலைத்தேன்...

  மிக்க மகிழ்ச்சி தொடருங்கள்...//

  வணக்கம் ... உங்கள் பதிவுகள் சில பார்த்துள்ளேன் மிக்க நன்றிங்க

  ReplyDelete
 48. // கடையம் ஆனந்த் said...

  ஞானசேகரன் ஆரம்பமே களை கட்டுகிறது. இன்னும் எழுதுங்கள்.//

  வணக்கம் நண்பா.. மிக்க நன்றிபா

  ReplyDelete
 49. // வினோத்கெளதம் said...

  வாழ்த்துக்கள் நண்பரே கலக்குங்க..//

  நன்றி நண்பா

  ReplyDelete
 50. முதல் நாள் வாழ்த்துக்கள் ஞானசேகரன்

  ReplyDelete
 51. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 52. அன்பின் ஞான சேகரன்

  அருமையான அறிமுக இடுகை. சுட்டிகளைச் சுட்டி அங்கும் சென்று படித்து ப்திலும் போட்டு விடுகிறேன்.

  நல்ல துவக்கம் வெற்றியில் முடிய நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 53. வாழ்த்துகள் ஞானசேகர்.அருமையா வலைச்சரம் தொடுக்க வாழ்த்துகள்

  ReplyDelete
 54. // S.A. நவாஸுதீன் said...

  முதல் நாள் வாழ்த்துக்கள் ஞானசேகரன்//

  நன்றி நண்பா

  ReplyDelete
 55. // நசரேயன் said...

  வாழ்த்துக்கள்//

  நன்றி நண்பா

  ReplyDelete
 56. // cheena (சீனா) said...

  அன்பின் ஞான சேகரன்

  அருமையான அறிமுக இடுகை. சுட்டிகளைச் சுட்டி அங்கும் சென்று படித்து ப்திலும் போட்டு விடுகிறேன்.

  நல்ல துவக்கம் வெற்றியில் முடிய நல்வாழ்த்துகள்//
  நன்றி ஐயா

  ReplyDelete
 57. // ச.பிரேம்குமார் said...

  வாழ்த்துகள் ஞானசேகர்.அருமையா வலைச்சரம் தொடுக்க வாழ்த்துகள்//

  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 58. வலைச்சர ஆசிரியர் சகோதரர் ஆ.ஞானசேகரன்
  உங்கள் அறிமுகங்கள் ஏற்கனவே நல்ல அறிமுகங்கள்
  அதை நீங்கள் அருமயா வெளிப்படுத்தி இருக்கீங்க.

  உங்கள் வலைத்தளம் பெற்றவர்களுக்கு பெருமை சேர்த்திருக்கீங்கன்னு சொன்னா அது மிகையாகாது. உங்கள் வலைத்தளம் வரும்போதெல்லாம் எனக்குள் இந்த உணர்வுதான் ஏற்படும் சகோதரா. வாழ்க பல்லாண்டு.

  வலைச்சர ஆசரியர் யார் என்று வேகமாக பார்க்க வந்தேன்
  வந்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது
  பார்த்தால் சகோதரன் ஞானசேகரன். வேலைப்பளு இருந்த போதிலும்
  உடனே ஆசிரியருக்கு வாழ்த்துக் கூறி ஓடிவிட்டேன்.

  இப்போதுதான் நிதானமாக ஒவ்வொன்றாக படித்துக் கொண்டே வந்தால் மறுபடியும் ஒரு இன்ப அதிர்ச்சி, என்னோட வலைத்தளம் கண்களில் பட்டது.

  மிக்க நன்றி சகோதரா.

  உங்களால் எனக்கு வலைச்சரத்தில் ஒரு அறிமுகம் சந்தோஷமா இருந்தது
  மிக்க நன்றி சகோதரா!!

  தினம் தினம் பல சுட்டிகளுடன் உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

  வலைச்சரத்தில் மிளிர எனதன்பான வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 59. // RAMYA said...

  வலைச்சர ஆசிரியர் சகோதரர் ஆ.ஞானசேகரன்
  உங்கள் அறிமுகங்கள் ஏற்கனவே நல்ல அறிமுகங்கள்
  அதை நீங்கள் அருமயா வெளிப்படுத்தி இருக்கீங்க.

  உங்கள் வலைத்தளம் பெற்றவர்களுக்கு பெருமை சேர்த்திருக்கீங்கன்னு சொன்னா அது மிகையாகாது. உங்கள் வலைத்தளம் வரும்போதெல்லாம் எனக்குள் இந்த உணர்வுதான் ஏற்படும் சகோதரா. வாழ்க பல்லாண்டு. >>>>>>> மெலும்///


  மிக்க நன்றி ரம்யா அக்கா

  ReplyDelete
 60. ஞானசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 61. //பிகேபி சாரின் தளத்தில் எண்ணிலடங்கா தொழிற்நுட்ப தகவல்கள் இருந்தது//

  வலைப்பூந்தோட்டத்திர்க்கு புதியவன் நான், சற்றுமுன் தான் சென்று வந்தேன், நீங்கள் கூறிய படி அவர் ஒரு தகவல் களஞ்சியம் தான்.

  ReplyDelete
 62. //காட்சிகள் எல்லாம் இவரிடம் கவிதையாகிவிடும் அப்படி பட்ட கவிதைகளில் பூச்சாண்டியும் ஒன்று//

  நானும் ரசித்தேன்

  ReplyDelete
 63. காமராஜின் //குபேரன் விளையாட்டுப்பிராயத்தைக் களவுகொடுத்தவன்//

  நல்ல கதை நடை

  ReplyDelete
 64. எழுத்தோசை 'தமிழரசி' மற்றும் 'ரம்யா' இருவரும் சமீபத்தில் நான் சந்தித்த வ்லைப்பூந்தோட்டத்து அபிமான அக்காக்கள். அவர்கள் கவிதகளும், ஆக்கங்களும் அருமை.

  ReplyDelete
 65. மருத்துவர் முனியப்பன் அவர்களின் //அப்பா உன்னிடம் படித்தது// ஆக்கம் அருமை

  ReplyDelete
 66. வாழ்த்துக்கள் தோழா :-)

  ReplyDelete
 67. // ஷ‌ஃபிக்ஸ் said...

  ஞானசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி நண்பரே

  // ஷ‌ஃபிக்ஸ் said...

  //பிகேபி சாரின் தளத்தில் எண்ணிலடங்கா தொழிற்நுட்ப தகவல்கள் இருந்தது//

  வலைப்பூந்தோட்டத்திர்க்கு புதியவன் நான், சற்றுமுன் தான் சென்று வந்தேன், நீங்கள் கூறிய படி அவர் ஒரு தகவல் களஞ்சியம் தான்.//

  மிக்க நல்லது


  //காட்சிகள் எல்லாம் இவரிடம் கவிதையாகிவிடும் அப்படி பட்ட கவிதைகளில் பூச்சாண்டியும் ஒன்று//

  நானும் ரசித்தேன்//
  காமராஜின் //குபேரன் விளையாட்டுப்பிராயத்தைக் களவுகொடுத்தவன்//

  நல்ல கதை நடை///


  Blogger ஷ‌ஃபிக்ஸ் said...

  மருத்துவர் முனியப்பன் அவர்களின் //அப்பா உன்னிடம் படித்தது// ஆக்கம் அருமை///


  உங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 68. // " உழவன் " " Uzhavan " said...

  வாழ்த்துக்கள் தோழா :-)//

  நன்றி நண்பா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது