07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 5, 2009

வாழ்த்தி வழியனுப்புதலும் - வரவேற்றலும்

அன்பின் சக பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பினை ஏற்ற அமுதா தன் கடமையினைச் செவ்வனே செய்து, மனநிறைவுடன் விடைபெறுகிறார். இவர் எட்டு இடுகைகள் இட்டு ஏறத்தாழ தொண்ணூறு மறுமொழிகள் பெற்றுள்ளார். பல அரிய இடுகைகளை ( ஏறத்தாழ 67 ) - பல தலைப்புகளில் - தமிழின் அருமை, மலரும் நினைவுகள், கவிதைகள், சமூகம், இயற்கை, அன்பு, தொகுப்பு, யோசிப்பு என்ற பல தலைப்புகளில் சுட்டிக்காட்டி இருக்கிறார். தேடிப்பிடித்து, பலரும் படிக்க வேண்டிய இடுகைகளைச் சுட்டி இருக்கிறார்.

கடின உழைப்பு, பொறுமை இவற்றினை அடிப்படையாகக் கொண்டு பணியாற்றிய அமுதா அவர்களுக்கு நன்றி கூறி நல்வாழ்த்துகளை வலைச்சரம் சார்பாக அளித்து - பிரியா விடை அளிக்கிறோம்.

அடுத்து சூலை ஆறாம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் சகோதரி தமிழரசி. இவர் எழுத்தோசை என்னும் பதிவினில் எழுதி வருகிறார். கவிதைகள் எழுதுவதில் சிறந்தவர். இளமை விகடன் இணைய இதழில் ஏறத்தாழ 18 படைப்புகள் படைத்திருக்கிறார்.

சகோதரி தமிழரசியை வருக வருக - தமிழ்க் கவிதைகள் தருக தருக என வரவேற்று நல்வாழ்த்துகளை வலைச்சரம் சார்பினில் அளிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

சீனா
----------

7 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. சாதனை வரும் மொழி..

  அம்மொழி நம் "தமிழ்" மொழி.

  நம் தமிழரசியின் கவிதை மொழி..

  வருக .. வருக.. தமிழரசி.

  வந்து

  தருக.. தருக.. பல்சுவை ருசி.

  ReplyDelete
 3. அமுதாவிற்கு நன்றியும்
  தமிழரசிக்கு வாழ்த்துகளுடன் வரவேற்பும்... வாருங்கள் தோழி கலக்குங்க...

  ReplyDelete
 4. வலையுலக தமிழ் கவிதைகளின் அரசி

  `ஹைதை` தமிழரசியை வருக வருக

  எனவர வேற்க்கிறோம்.....

  ReplyDelete
 5. நன்றி அமுதா!

  வருக தமிழரசி!

  ReplyDelete
 6. நன்றி அமுதா!

  வருக தமிழரசி

  ReplyDelete
 7. நன்றி அமுதா !!!

  நன்றி சீனா அவர்களே !!!

  ( வாங்க !!! ) தமிழரசி !!!! ( வந்து தான் பாருங்களேன் !! )

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது