07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 27, 2009

ரசனையின் பின்புறம்

வணக்கம் நண்பர்களே!

வலைச்சரத்தில் ஆசிரியராக பதிவிட அழைத்த திரு.சீனா அவர்களுக்கு என் பணிவான நன்றிகள்! தொடர்ந்து இவ்வளவு தூரம் என்னைத் தூக்கி வைத்த நண்பர்களுக்கும் நன்றி!!

தொடர்பில்லாத கருப்பொருள், ரசனையின் தீண்டலில் கவிதையாகிவிடுவதைப் போலவே அறிமுகமில்லாத நபர்களின் எழுத்துக்களை உருவகித்து வலைத்தளங்களில் நட்பு கொள்ளுகிறோம். வலைத்தள நட்பு எழுத்துக்கும் எழுத்துக்கும் இடையிலான பாலத்தை நன்கு இறுக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. நண்பர்கள் ஆங்காங்கே சங்கமிக்கின்றனர். தம்மது கருத்துக்கள், விமர்சனங்கள் என சந்திப்பிடத்தை எழுத்துக்களின் கூடாரமாக்குகின்றனர். வலைஞர்கள், டிஜிட்டல் எழுத்துக்களிலிருந்து அச்சக எழுத்துக்களுக்குள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைந்து கொண்டு வருகின்றனர். ஊடகங்கள் வலைத்தளங்களை உற்று நோக்க ஆரம்பித்திருக்கின்றன. ஊடகவியலர், திரையுலகினர், அறிஞர், முதல் மாணவர்கள் வரை இணையமொழி அறிந்த அனைவரும் வலைத்தளம் ஆரம்பித்து எழுதி வருகின்றனர். தமிழ் வலையுலகம் அடுத்த கட்ட நகர்வுக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. 

வலைஞர்களை அறிமுகப்படுத்தவேண்டும் என்பது வலைச்சரத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. எனக்குத் தெரிந்த எல்லா தளங்களையும் இங்கே அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். பிரபலமாகாத நல்ல எழுத்துக்கள் அடங்கிய வலைத்தளங்கள் பல இணையத்தில் உலவுகின்றன. எனக்குத் தெரிந்த வரையில் அதிகம் அறிமுகப்படுத்தியிராத சில வலைத்தளங்களை அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.

இணையத்தில் வந்தபிறகு எனக்கு பாதிப்பு ஏற்படுத்திய கவிதையொன்றைக் கூறிவிட்டுத் தொடர்கிறேன்.

ஒன்றுமில்லை!! 

அநேக திருமண வீடுகளில்
நானும் இருக்கிறேன்..
வித்தியாசமொன்றுதான்...நீ பந்திக்கு பின்..
நான் பந்திக்கு முன்

அடுத்தவேளை
உணவு யார் வீட்டில்..
எனக்குள்ளும்தான் வினா..
விருந்தினன் நான்!

நல்லவேளை தப்பிவிட்டாய்..
கிழிந்த உடையில் 
தைத்துக் கொண்டாய் வயிற்றை..
உருப்படியாய் 
உனக்குமொரு உடையிருப்பின்..
வறட்டுக் கவுரதையில் 
சுருண்டிருப்பாய்..என்போலே..

இரு கரங்களிருப்பதாய்
எள்ளி நகைப்போரிடம் சொல்..
நான்கு வயிறிருப்பவன்படும் 
வேதனைகளை..

உனக்கு வானம் கூரை..
எங்கு சென்றாலும் உடன்வரும்..
இருக்கும் கூரையை
பிரிக்கமுடியா நிலையெனக்கு..
இன்னொரு கூரைக்கு
உறுதியென்ன...

வீசியெறிந்து
வீதியில் நடக்க உம்மிடமெதுவுமில்லை..
என் கரங்களிலிருப்பது 
இரு பிஞ்சுகள்..

ஊழியமில்லாயுனக்கு
ஊறுவதைவிடவும்
குறைவென் ஊதியம்..

உம் கரங்கள் நீளுவதற்கு
யோசிப்பதில்லை..
நீளத் துடிக்குமென் கரங்களை 
யாசிக்கிறேன்..
நாலெழுத்து படித்தவன் நான்..
நல்ல உடை தரித்தவன் நான்..

என் பிரதியாயிருக்கும்
பிச்சைக்காரரே...
அடுத்த முறையேனும்
கை நீட்டியென்னை
சங்கடத்தில் ஆழ்த்தாதீர்!!

கவிஞர் பூ


விமர்சனம் என்பது படைப்பின் நிறைகுறைகளை அலசி ஆராயும் யுக்தி. ஒரு பொருளின், உணர்வின், நிகழ்வின் விமர்சனம் கதையாகவோ, கவிதையாகவோ படைப்புகளாக உருவாகிறது. விமர்சிக்கத் தெரிந்தவனுக்கு, ரசனையின் பின்புறம் நன்கு புலப்படும். படைப்பின் எழுத்தை மீறிய ரசனா சக்தி விமர்சனத்தின் எழுத்தெங்கும் ஊர்ந்து ஓடும். சினிமா விமர்சனத்தை, கவிதை விமர்சனத்தை, அரசியல் விமர்சனத்தை, சமூகத்தின் விமர்சனத்தை பலவேறாக, பலகோணங்களில் பல தளங்களில் நாம் பார்த்திருக்கலாம். அவைகளின் நிறைகுறைகளை அலசும் பொழுது, அந்தந்த துறை சம்பந்தப்பட்ட மனிதர்கள் அலசப்படுவார்கள். படைப்பின் விமர்சனம் எனும் பார்வை மறைந்து, படைப்பாளியின் விமர்சனம் என்ற பார்வைக்குள் ஒடுங்கி அலசுவார்கள். விமர்சனம் என்ற ஒரு யுக்தி இல்லையெனில் படைப்புகளுக்கான தரம் பலவாறாகப் பிரிந்து தாழ்ந்து போயிருக்கக் கூடும். முகஸ்துதியும், முகத்தில் அறைவதுவும் அடுத்தடுத்த படைப்புகளுக்கான ஏணிப்படிகளென ஏறிச் செல்லுபவர்களுக்கு விமர்சனம் நிச்சயம் ஒரு இடத்தைக் கொடுக்கும்.. இப்படி பலவுண்டு...சரி... 


இப்படி விமர்சிப்பதற்கென்றே கிருஷ்ணபிரபு ஒரு வலைத்தளம்  வைத்திருக்கிறார். கிருஷ்ணபிரபு வாசித்த தமிழ்புத்தகங்களை (மட்டும்) தனது எழுத்துக்களால் வலையெங்கும் நிரப்புகிறார்.  புத்தக விமர்சனத்திற்கென பிரத்யேக யுக்திகள் என்று பெரியதாக எதையும் அவர் கையாளுவதில்லை. ஆற்று நீரை கையால் மொண்டு எடுத்து குடிப்பதைப் போன்ற யுக்தி அவருடையது. வாசிப்பை அனுபவமாக்கி விமர்சிக்கும் யுக்தி அது. நேரடி சொல்லாளுமை மட்டுமே நிறைந்திருக்கிறது. சிறுவயதிலிருந்தே (சிறுவயது என்பது எதுவரை?) வாசிக்கும் அனுபவமிருப்பதால் அவ்வப்போது புதிய புத்தகங்களுக்குப் பின்னே அல்லது எழுத்தாளர்களுக்குப் பின்னே சென்றும் நினைவு மீள்கிறார். புத்தகங்கள் எனும் பூட்டின் துவாரமாக இவ்விமர்சனங்கள் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. சென்றவார ஆனந்த விகடனில் இவரது தளம் குறித்த அறிமுக விமர்சனத்தைக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. நிறைய வாசிக்கும் இவர் சென்னையில் வசிக்கிறார். ஓரிருமுறை மடலில் பேசிய தொடர்புண்டு. புத்தக வாசிப்புக்கு நேரம் குறைவாக (இல்லாமலேயே) இருந்தாலும், புத்தகம் வாங்குவதற்கான எண்ணமே இல்லாமல் இருந்தாலும் மறக்காமல் நான் வாசிக்கும் தளம் " நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்"

2. 
நண்பர் கார்த்திகைப் பாண்டியன் வீட்டிற்கு வந்த பொழுது தந்தையின் மரபு சார் ஓவியங்களை எடுத்துக் காண்பித்திருந்தேன். நேரக்குறைவினால் எல்லாமே காண்பிக்க இயலவில்லை. ஓவியங்களைத் தவிர்த்து, என் தந்தை செதுக்குவதிலும் வல்லவர். கண்ணாடி ஓவியங்கள் (Glass Painting)  Emboss Painting  போன்றவைகளையும் செய்திருக்கிறார். அவற்றுள் பலவற்றை மழை தின்றிருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாம் இன்னும் மிச்சமிருக்கிறது. என் தங்கையும் ஒரு ஓவியர் தான். இணையத்தில் தமிழ் எழுதும் வலைஞர்களில் தர்ஷினி ஒரு நல்ல கலைஞராக இருக்கிறார். தான் செதுக்கி/செய்து வைத்த ஓவியங்களை படமெடுத்து இணையத்தில் வெளியிடுகிறார். எல்லாவிதமான கலைப்பொருட்களையும் உருவாக்குவதில் வல்லவராக இருக்கும் இவர், தனது தளத்தில் ஆயில் பெயிண்டிங், காஃபி பெயிண்டிங், பானை அலங்காரம், கண்ணாடி அலங்காரம், போஸ்டர்கலர் பெயிண்டிங், இலையலங்காரம் என வகைவகையான Art மற்றும் Craft களை சேமித்து வைத்திருக்கிறார். நுணுக்கமான விளக்கங்களை அவரது எழுத்துக்களில் காணமுடியாவிடினும் படங்கள் ஓரளவு தெளிவாக்குகின்றன. அவரது ஓவியத்திறம் நன்கு புலப்படுகிறது. ஒரேயொரு கவிதை அவரது அம்மாவுக்கென எழுதியிருக்கிறார். எனக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவரது தளத்திற்குச் சென்று பார்வையிட்டிருக்கிறேன். புதிதாக ஓவியம் கற்க முனைபவர்கள், Craft முறை செய்பவர்கள், இங்கே இவரிடம் கற்றுக் கொள்ளலாம்....

3. சமீபத்தில் வலைத்தளத்தில் எழுதத் துவங்கியிருக்கும் தூறல்வெளி கெளரிப்பிரியாவின் கவிதைகளைப் படிக்கையில் மழையில் நனைந்த குழந்தையைப் போன்றதொரு உணர்வு ஏற்படுகிறது. இவரது கவிதையொன்றை எடுத்துப் பேசுவது சிறந்ததாக இருக்குமென்று கருதுகிறேன்.  

(தாத்தாவின்..
அம்மாவின்...
அப்பாவின்...
தங்கையின்..)

அனைவரின் தகவலையும் 
தட்டச்சு செய்யும்
தங்கையின் இன்றைய மின்மடலைக் 
கூர்ந்து நோக்குகையில் 
தெரிகின்றன 
கணினித்திரையின் நுண்சதுரங்கள் .

காணாமல் போனவை என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இக்கவிதை நடப்பியலையும், தகவல் பரிமாற்றத்தின் பரிணாமத்தையும் வாஞ்சையோடு சொல்லுகிறது. கவிதையியலை அழகாக படிக்கிறார். 
சில கவிதைகளை ஆழ்ந்து பார்க்கையில், தேடல் அல்லது திரும்ப மீளுதல் போன்று இருக்கிறது பால்யத்தில் அவரது மனப்பொந்தில் அவர் தொலைத்த எண்ணவிதைகள் இன்று கவிதையென முளைத்து நிற்கின்றன. அதிக வாசகர் வாசனை அல்லாத இத் தளம்... வலைக்கிடங்கு முழுக்க கவர்ந்திழுக்கும் கவிதைகளோடு காத்திருக்கிறது.


நாளை சந்திப்போம் நண்பர்களே!

32 comments:

 1. முதல் நாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. வாழ்த்துகள்
  /அநேக திருமண வீடுகளில்
  நானும் இருக்கிறேன்..
  வித்தியாசமொன்றுதான்...நீ பந்திக்கு பின்..
  நான் பந்திக்கு முன்

  அடுத்தவேளை
  உணவு யார் வீட்டில்..
  எனக்குள்ளும்தான் வினா..
  விருந்தினன் நான்!

  நல்லவேளை தப்பிவிட்டாய்..
  கிழிந்த உடையில்
  தைத்துக் கொண்டாய் வயிற்றை..
  உருப்படியாய்
  உனக்குமொரு உடையிருப்பின்..
  வறட்டுக் கவுரதையில்
  சுருண்டிருப்பாய்..என்போலே..

  இரு கரங்களிருப்பதாய்
  எள்ளி நகைப்போரிடம் சொல்..
  நான்கு வயிறிருப்பவன்படும்
  வேதனைகளை..

  உனக்கு வானம் கூரை..
  எங்கு சென்றாலும் உடன்வரும்..
  இருக்கும் கூரையை
  பிரிக்கமுடியா நிலையெனக்கு..
  இன்னொரு கூரைக்கு
  உறுதியென்ன...

  வீசியெறிந்து
  வீதியில் நடக்க உம்மிடமெதுவுமில்லை..
  என் கரங்களிலிருப்பது
  இரு பிஞ்சுகள்..

  ஊழியமில்லாயுனக்கு
  ஊறுவதைவிடவும்
  குறைவென் ஊதியம்..

  உம் கரங்கள் நீளுவதற்கு
  யோசிப்பதில்லை..
  நீளத் துடிக்குமென் கரங்களை
  யாசிக்கிறேன்..
  நாலெழுத்து படித்தவன் நான்..
  நல்ல உடை தரித்தவன் நான்..

  என் பிரதியாயிருக்கும்
  பிச்சைக்காரரே...
  அடுத்த முறையேனும்
  கை நீட்டியென்னை
  சங்கடத்தில் ஆழ்த்தாதீர்!!/

  வலிக்கிற்து

  ReplyDelete
 3. ம்ம். நல்ல கவிதை. யார் எழுதினது? என்ன ஒரு coincidence. நான் கூட இதே போல ஒன்றை எழுதியுள்ளேனே!

  ReplyDelete
 4. கலக்குங்க ஆதவன்

  ReplyDelete
 5. /-- ...தந்தையின் மரபு சார் ஓவியங்களை எடுத்துக் காண்பித்திருந்தேன்.... ஓவியங்களைத் தவிர்த்து, என் தந்தை செதுக்குவதிலும் வல்லவர்....--/

  ஒ கலைக் குடும்பமா!

  /--...அவற்றுள் பலவற்றை மழை தின்றிருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாம் இன்னும் மிச்சமிருக்கிறது... --/

  கூடுமான வரையில் நல்ல முறையில் பாதுகாக்கலாமே...

  மேலும், என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஆதவா... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வாழ்த்துகள் ஆதவா

  ReplyDelete
 7. வாழ்த்துகள் ஆதவா!

  ReplyDelete
 8. நல்லதொரு ஆரம்பம் தொடருங்கள் ஆதவா... கவிதை வலியுடன் இருக்கின்றது..

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் ஆதவா..கவிதை வலி..உண்மைகள் வலிக்கத்தான் செய்யும்....

  ReplyDelete
 10. முதல் நாள் வாழ்த்துகள் ஆதவா.

  ReplyDelete
 11. //பிரபலமாகாத நல்ல எழுத்துக்கள் அடங்கிய வலைத்தளங்கள் பல இணையத்தில் உலவுகின்றன. எனக்குத் தெரிந்த வரையில் அதிகம் அறிமுகப்படுத்தியிராத சில வலைத்தளங்களை அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.//
  செய்யுங்க ஆதவா. நாங்களும் சுவாரசியமான வலைப்பதுவுகளை தேடிக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களின் தேடலில் உங்க பங்கும் இருக்கட்டும்.

  ReplyDelete
 12. //நாலெழுத்து படித்தவன் நான்..நல்ல உடை தரித்தவன் நான்..
  என் பிரதியாயிருக்கும்பிச்சைக்காரரே...அடுத்த முறையேனும்கை நீட்டியென்னைசங்கடத்தில் ஆழ்த்தாதீர்!!//

  அருமையான வெளிப்பாடு. நாட்டில் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் வெளியில் சொல்லமுடியாமல்....

  ReplyDelete
 13. ஆதவா,
  வலைச்சர பொறுப்பிற்கு வாழ்த்துக்கள். நன்றாக செய்வீர்கள் என அறிவேன்.
  கிருஷ்ணபிரபு மிகச்சரியான, அவசியமான அறிமுகம்.


  “அகநாழிகை“
  பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 14. வாழ்த்துகள் ஆதவா

  ReplyDelete
 15. வாங்க ஆதவா..

  ஆரம்பமே அசத்தலாக பூவின் கவிதையோடு ஆரம்பித்திருக்கிறீர்.

  தொடர்ந்து கலக்குங்கோ....வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 16. அன்பின் ஆதவா

  அருமையான துவக்கம்

  நல்ல கவிதை - பலரின் மனம் படும் பாடு இதுதான்.

  அறிமுகம் செய்த பதிவர்களும் அருமையான பதிவர்கள்

  தொடர்க - பணியினை

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 17. வாங்க ஆதவா

  வலைச்சர ஆசிரியராக பார்ப்பதில் எழுத்தை படிப்பதில் சந்தோஷம்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. முதல் நாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 19. இதுபோன்று மேலும் பல நல்ல அறிமுகங்களைத் தாருங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. அனைவரின் அன்புக்கும் நன்றி!!!
  அன்புடன்
  ஆதவா

  ReplyDelete
 21. வலைச்சர ஆசிரியருக்கு நண்பனின் அன்பான வாழ்த்துகள்..

  ReplyDelete
 22. இன்றைக்குதான் நினைத்துக்கொண்டிருந்தேன் நம்மளோட ப்ளாக் யாராவது படிக்கிறார்களா என்று?! நீண்ட நாட்களாக பதிவுகளை பப்ளிஷ் பண்ணவேயில்லை( நேரமின்மை காரனமாகவும்).
  உங்கள் அன்புக்கு நன்றி அண்ணா.
  கவிதையும் அருமை..
  புத்தகங்களையும், கவிதைகளையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்..

  ReplyDelete
 23. அருமையான கவிதையோடு தொடங்கியிருக்கிறீங்க ஆதவா,வாழ்த்துக்கள்.கலக்குங்க.

  ReplyDelete
 24. தொடர்பில்லாத கருப்பொருள், ரசனையின் தீண்டலில் கவிதையாகிவிடுவதைப் போலவே அறிமுகமில்லாத நபர்களின் எழுத்துக்களை உருவகித்து வலைத்தளங்களில் நட்பு கொள்ளுகிறோம்]]

  நல்லா சொன்னீங்க ஆதவா.

  ReplyDelete
 25. வாழ்த்துகள் ஆதவா!

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள் நண்பரே!

  எனக்கும் ஓவியத்தின் மீது அலாதி உண்டு!

  ReplyDelete
 27. நல்லதொரு துவக்கம் ஆதவன்.
  எனக்கு அறிமுகமில்லாத இருவரை அறியவைத்துள்ளீரகள். இன்னும் மேலும் அறிய காத்திருப்பு...!!

  ReplyDelete
 28. முதல் நாள் வாழ்த்துகள்!!

  ReplyDelete
 29. முதல் நாள் வாழ்த்துக்கள். இன்றே பலரை அறிமுகம் செய்து வீட்டிர்கள். தொடரட்டும் உங்கள் பணி.

  ReplyDelete
 30. அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.
  நெகிழ்ச்சியான தருணமிது!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது