07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 16, 2011

அத்தியாயம் 6 - இன்றே இப்படம் கடைசி

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். தப்பா நினைச்சுக்காதீங்க. இன்னிக்கு மாட்டுப்பொங்கல். அதான் வாழ்த்தினேன். 


கடந்த ஒரு வாரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. பதிவர்களை அறிமுகம் செய்யவேண்டும் என்பதற்காகவே நிறைய பதிவுகளை படிக்க நேர்ந்தது. உங்களோடு சேர்ந்து நானும் பல நண்பர்களை பற்றி தெரிந்து கொண்டேன். இதற்கு வாய்ப்பளித்த நண்பர் சீனா அவர்களுக்கு மீண்டும் நன்றி. இன்று நாம் பார்க்க போகும் பதிவர்கள் யாரென்றால் ,


வானம் எனக்கொரு போதிமரம் என்கிறார் நண்பர் இளவரசன். கவிதைக்கு உண்மையும் அழகு என்று வித்தியாசமான பதிவுகளால் நம்மை அசரவைக்கிறார். காதல் என்றால் குழப்பம் என்று மிகத்தெளிவாக சொல்கிறார். காதலியின் பிணம் என்று தடாலடியாக அதிர வைக்கிறார். ஒரு விபசாரியின் குரலில் கவிதையின் வாயிலாக நாம் மனசாட்சியுடன் பேசுகிறார். பால்பூத் பூச்சாண்டி என்று பால்ய கால நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார். நடுநிலைன்னா என்ன என்று கேள்வியும் எழுப்புகிறார்.


நண்பர் ஸ்பீட்மாஸ்டர் தான் கண்ட உலகத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ஜாலி பேர்வழி என்று இவரின் பதிவுகளே சாட்சி சொல்கின்றன. அலுவலகத்தில் சும்மா இருந்தால் பொழுதுபோக என்னவெல்லாம் செய்யலாம் என்று ஐடியா தருகிறார். மேலும் சங்கர் அடுத்து எடுக்கப்போகும் 500 கோடி பட்ஜெட் படத்தை பற்றி ஸ்கூப் தருகிறார். பட்டுக்கோட்டை அவர்களைப்பற்றி அறிய தகவல்களை தொகுத்து தருகிறார். வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல விரும்புவோருக்கு பயனுள்ள தகவல்களை தருகிறார்.

நண்பர் பொன்ராஜ் பொன்னான வரிகளால் உள்ளத்தை அள்ளுகிறார். சிந்தனைகள் என்ற தலைப்பில் உபயோகமான செய்திகளை தருகிறார். ஒரு ராணுவ வீரர் சொன்ன உண்மைக்கதையையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். சில இல்லுஷன் படங்களையும், நெஞ்சை உலுக்கும் ஏழ்மை படங்களையும் தந்து இதயங்களை கனக்க வைக்கிறார். ரொம்ப நக்கலாக அரசியல் வேறு பேசுகிறார். அட போடவைக்கும் சமாச்சாரம் ஒன்றையும் சொல்கிறார். மிக அருமையாக இருக்கிறது.

பலே பாண்டியா, பலே ஆசாமியாகத்தான் இருக்கிறார். ஈசியாக கணக்கு பண்ணுவது எப்படி என்று கற்று தருகிறார். மேலும் போட்டோஷாப் சொல்லி கொடுக்கிறார். கணக்கு புதிர் போட்டு எல்லோரையும் யோசிக்க வைக்கிறார். உங்கள் கணினியை பற்றி புதிது புதிதாக பல துணுக்குகள் அளிக்கிறார். மிகவும் பயனுள்ளதாக உள்ளன. ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் கருத்து வேறு சொல்கிறார்.


நீ நான் அவன் என்று எழுதி வரும் வெற்றி அவ்வப்போது வெற்றி டைம்ஸ் என்று சுவாரசியமாக செய்தி தொகுப்பு அளிக்கிறார், காஃபி குடிக்கிற கேப்பில் காஃபி பற்றி அரிய தகவல்களை அடுக்குகிறார். தண்ணீர் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று காரணங்களை அடுக்குகிறார். புயல்களுக்கு பெயர் வைப்பதை பற்றியும் தகவல் தருகிறார்.


நண்பர்களே, இதோ முடிந்து விட்டது எனது தொல்லை. எனக்கு தெரிந்த சில நண்பர்களின் வலைதளத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறேன். என்னுடைய எழுத்து நடை போராடித்தாலும் பொறுமையாக படித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நன்றி வணக்கம்.

8 comments:

  1. நண்பர்களின் தளங்களை சிறப்பாக அறிமுகபடுத்தி இன்று விடைபெறும் உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் சார்

    ReplyDelete
  2. நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்..!

    ReplyDelete
  4. கடந்த ஒரு வாரமாக சிறப்பானதொரு அறிமுகத்தை கொடுத்த நண்பர் பாலா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  5. கடந்த ஒரு வாரமாய் அற்புதமான பணி செய்தீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பொங்கல் கொண்டாடி களைப்பாய் இருப்பீங்க...
    குக்கர் பொங்கல் வைத்திருந்தால் நம்ம வீட்டு பக்கமா வாங்க...

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. என்னை இங்கு அறிமுகப்படுத்திய நண்பர் பாலாவுக்கும், வலைசரத்துக்கும் ரொம்ப நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது