07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 2, 2012

வலைச்சரத்தில் நான்


வலைச்சர வாசகர்களுக்கு வணக்கம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த புது வருடம் எல்லோருக்கும், எல்லா வளங்களையும், எல்லா நலங்களையும் தரட்டும்.

என்னை வலைச்சர ஆசிரியராக இந்த வாரம் அழைத்து இருக்கும் திரு. சீனா அவர்களுக்கும், அவரிடம் என்னைப் பரிந்துரை செய்த திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிகளும், வணக்கங்களும்.

என்னைப் பற்றி:

என் சொந்த ஊர் பாளையங்கோட்டை. நான் பிறந்தது திருவனந்தபுரம். என் அப்பாவுக்கு ஊர் ஊராக மாற்றல் ஆகும் உத்யோகம். செட்டில் ஆனது மதுரை. பள்ளிப் படிப்பு பல ஊர்களில். பாதியில் திருமணம். என் கணவர் கல்லூரிப் பேராசிரியாராக இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். இப்போது வேறு ஒரு கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளாராய் இருக்கிறார்கள். நான் திருமணத்திற்குப் பின் பள்ளிப் படிப்பை முடித்து, B.A பொருளாதாரம் படித்தேன், அதுவும் ஒரு வருடப்படிப்புடன் நின்று விட்டது. காலையில் பிள்ளைகள் பள்ளிக்கும், கணவர் கல்லூரிக்கும் சென்றவுடன் ஆங்கிலத் தட்டச்சு, தமிழ்த் தட்டச்சு, தையல், என்று போனேன். நான் போகும்போது பள்ளி பிள்ளைகள் ’குட் மார்னிங் டீச்சர்’ என்பார்கள் . என்னைப் பார்த்தால் டீச்சர் போல் தோன்றி இருக்கிறது. குழந்தைகள் மனதில் பட்டது பலித்து விட்டது. நான் ஆசிரியர் ஆகிவிட்டேன். எப்படி என்று கேட்கிறீர்களா? உலக சமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்து யோகா , தியானம், முத்திரைகள் படித்து அதில் ஆசிரியர் பயிற்சி, பொறுப்பாசிரியர் பயிற்சி எல்லாம் எடுத்தேன்.

கடமைகள் முடிந்து விட்டன( இப்போது தான் பொறுப்புகள் அதிகமாகிறது) . சமுதாயத்திற்கு ஏதாவது பணி செய்யலாம் எனறு முடிந்த சர்வீஸ் செய்து கொண்டு இருக்கிறேன்.

விடுமுறைக்கு வந்த என் மகள் அம்மா நீங்களும் வலைத்தளத்தில் எழுதலாமே ஒன்றும் கஷ்டம் இல்லை என்று என்னை வலைத்தளம் ஆரம்பிக்க வைத்தாள்.
அவளும் வலையில் எழுதுபவள் தான் சிறுமுயற்சி வைத்து இருக்கும் முத்துலெட்சுமி.

என் மருமகள் ”திருமதி பக்கங்கள்” என வலைத்தளத்திற்குப் பெயர் சூட்டினாள், என் கணவரது பெயரையும் என் பெயரையும் சேர்த்து. எனக்கு வலைக் கல்வியை மகள், மகன், மருமகள், பேத்தி சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி. என்னை எழுத ஊக்கப் படுத்தும் என் கணவருக்கு நன்றி.

2009 மே மாதம் 31 ம் தேதி ’கிளிக்கோலம்’ என்று கிளிக்கோலம் போட்டு, மகரிஷியின் மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து கவிதையுடன் என் வலைத் தளத்தை ஆரம்பித்தேன்.

//எண்ணமே இயற்கைதன் சிகரமாகும்
இயற்கையே எண்ணத்தில் அடங்கி போகும்.//


முதல் முதலில் வந்து வாழ்த்தியது தெகா.
’அம்மா, அழகான எண்ணங்கள்.
இந்த அடிப்படை உண்மையை ரொம்ப உறுதியா நம்புறேன்!
உங்க எண்ணங்களையும் எங்களோட பகிர்ந்துக்கோங்க..’
June 2, 2009 8:55 AM

என் பதிவுக்கு வந்த முதல் பின்னூட்டம். அவருக்கு நன்றி.
அடுத்து சென்ஷி -வலைப்பதிவுலத்திற்கு வணக்கத்துடன் வரவேற்றார்.
மங்கை  ஜோதியில் ஐக்கியமாக வாருங்கள் என்றார்கள்.
நானானி , சந்தனமுல்லை, கோபி நாத்  கோலத்தைப் பாராட்டி என்னை வரவேற்றார்கள்.
ராமலக்ஷ்மி
கிளிக் கோலம் உங்களை காட்டிக் கொடுத்து விட்டது. நீங்கள் யாரென்று என்று எழுதி இருந்தார்கள். அவர்களை பதிவர் சந்திப்பில் பெங்களூரில் சந்தித்த போது நானும் பதிவு எழுத ஆரம்பித்து விட்டேன் என்று சொன்னதை வைத்துக் கொண்டு அடையாளம் கண்டு கொண்டார்கள்.

தீபாவின் பின்னூட்டம்:
‘வணக்கம் அம்மா,
வலைப்பதிவுலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
நீங்க ஸ்கூல்லே படிச்ச காலத்திலே நோட்டுபுத்தகத்திலே கிறுக்கினதை இனிமேல் வலைப்பதிவுகள் மூலமாக பதியுங்கள்.. இது கிழியாது,செதிலரிக்காது..எப்பவுமே பர்மனெண்ட்..

வாழ்த்துக்கள்
மேலும் மேலும் பதியுங்கள்
தீபா கோவிந்த்
July 14, 2009 9:07 PM’

தீபா சொன்னது போல் படித்ததை, நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கி வைத்ததை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

வலைஉலகம் பெரிய கடல் அதில் துளிதான் நான் கற்றுக் கொண்டது. தினம் அதில் கற்க வேண்டியது நிறைய உள்ளது.”கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு” என்பது போல் நான் கற்றுக் கொண்ட வலைக் கல்வி ஒருகைப் பிடி அளவு கூட இல்லை. எத்தனை திறமைகள் ஒவ்வொருவரிடமும்! எல்லோரும் நன்கு எழுதுகிறார்கள்.

அந்த காலத்தில் தாங்கள் எழுதிய கதை, கட்டுரை கவிதைகளை பத்திரிக்கையில் வருவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள் ! இப்போது அப்படியில்லை. நமக்கு என்று ஒரு தளம் நம் எண்ணங்களை ,அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. உடனுக்கு உடன் அதற்கு விமர்சனமும் கிடைக்கிறது. பத்திரிக்கையில் எழுதினால் அடுத்தவாரம் தான் வாசகர் கடித்தில் காணமுடியும். வாழ்க்கையில் நம்மாலும் எழுத முடியும் என்ற நினைப்பே மனதுக்கு உற்சாகத்தையும், தெம்பையும் தருகிறது. பத்திரிக்கைகளும் நம்மை வரவேற்கின்றன. என்னுடைய மார்கழிக் கோலங்கள் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்றது, போன மார்கழியில். தேவதையில் ’குருந்தமலை குமரன்’ என்ற என் ஆன்மிகப் பதிவும், ’தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம்’ என்ற பதிவிலிருந்து ஒரு சிறு பகுதியும், ’எண்ணம் முழுதும் கண்ணன் தானே’ என்று என் பேரனைப் ப்ற்றி எழுதிய பதிவிலிருந்து ஒரு சிறு பகுதியும் வெளி வந்தன. நம் எழுத்தை பத்திரிக்கையில் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இதுவரை 82 போஸ்ட்கள் எழுதி இருக்கிறேன். அவற்றில் சில:

குழந்தைகள் உடல் நலத்திற்கு விளையாட்டு மிக அவசியம் என்று சொல்லும்” ஓடி விளையாடு பாப்பா

சாலை பாதுகாப்பு தொடர் பதிவில் ”வேகம் விவேகம் அல்ல” சாலை பாதுகாப்பு சட்டத்தை மதித்து நடக்க வலியுறுத்தும் பதிவு.

வாழ்க்கை வாழ்வதற்கே!’ காதல்,கடவுள்,அழகு பணம் ஒன்றோடு ஒன்று தொடர் உடையதைப் ப்ற்றி எழுதியது.

பேரக்குழந்தையின் குறும்புகள்

சர்வதேச முதியோர் நாளுக்காக ”முதியோர் நாள்

ஆன்மீகப் பயணத் தொடர்கட்டுரையில் திருக்கயிலைப் பயணக் கட்டுரை எழுதியது எல்லாம் மனதுக்கு நிறைவு தந்தது.

எனக்கு வாய்ப்பு அளித்த திரு. சீனா அவர்களுக்கும், என்னைப் பரிந்துரைத்த
திரு. வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களுக்கும், என் குடும்பத்தார்களுக்கும், என பதிவுகளுக்கு தொடர்ந்து வந்து பின்னூட்டங்களால் என்னை ஊக்கப்ப்டுத்தினவர்களுக்கும், வலைச்சரத்தில் படிக்க வரும் புதிய அன்பர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறேன்.

கடல் போன்ற பதிவுலகத்தில் கரையோரமாய்க் கால் நனைத்துப் படித்துச் சுவைத்த என் நினைவில் உள்ள பதிவுகளைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

தொடர்ந்து வந்து ஆதரவு தருவீர்கள் தானே!

51 comments:

  1. வாழ்த்துகள் கோமதி அரசு..பணியை செவ்வனே செய்து முடிக்க வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. உங்களை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.
    உங்களது பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
    நன்றி.

    ReplyDelete
  3. வருக வருக கோமதி அரசு - அருமையான அறிமுகம். முத்து லெட்சுமி தங்கள் மகளா .... அவர் வலைச்சர நிர்வாகத்தில் இருக்கிறார் ... தெரியுமா தெரியாதா .... மக்ளின் நிர்வாகத்தில் இருக்கும் வலைச்சரத்தில் தாயார் ஆசிரியப் பொறுப்பேற்பது இருவருக்கும் பெருமை தான். சுய அறிமுகத்தில் - தங்களுடைய முதல் பதிவில் தெகா, சென்ஷி உள்ளிட்ட மறுமொழி இட்டவர்களை நினைவு கூறியது நன்று. நல்வாழ்த்துகள் கோமதி அரசு - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. அன்பின் கோமதி அரசு - திங்கள் காலை ஆறு மணி முதல் தான் பதிவிடத் துவங்குமாறு விதி முறைகள் கூறுகின்றன. பரவாய் இல்லை. ஞாயிறு அன்றே துவங்கி விட்டீர்கள். தங்களுடைய சிறந்த பதிவுகளைக் குறிப்பிட்டதுடன் அவைகளின் சுட்டியும் அளிக்க வேண்டும். படிப்பவர்கள் அங்கே சென்று படித்து மகிழ வேண்டும் அல்லவா. சுட்டிகள் அளிக்கவும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. கோமதி அரசு வாங்க வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள்.
    புது வருடம் உங்களுக்கு அமர்க்கள்மாக ஆரம்பிச்சு இருக்கு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வணக்கம் கோமதி அம்மா,
    அழகான சுய அறிமுகம். குடும்பத்தாரின் துணையில்லாமல்
    வலைத்தளம் நடத்துவது சிரமமான காரியம். அவர்கள் ஒத்துழைப்பு
    இருந்துவிட்டால் மனதில் உள்ளதை வார்த்தைகளாக வடிப்பதற்கு
    தடை ஏதும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தை இறைவன்
    உங்களுக்கு கொடுத்திருக்கிறார்.

    அனுபவங்கள் கலந்து அழகுற வலைச்சரத்தை
    தொடுத்திடுங்கள்.

    ReplyDelete
  7. இந்த வாரம் நீங்கதானா வலைச்சரத்திலம்மா... 2008ல போட்ட ஒரு பின்னூட்டத்தை ஞாபகத்தில வைச்சு இங்க கொண்டு வந்திருக்கீங்களே! :)ம்ம்ம் ரொம்ப சந்தோஷம்.

    இந்த வாரம் நிறைய பதிவுகளை, பதிவர்களை அறிமுகப் படுத்துங்க தெரிஞ்சுக்குவோம். சிறப்பாக அமைய வாழ்த்துகள்... அப்படியே என்னுடைய 2012 நல்லாண்டு வாழ்த்துகளும் :)

    ReplyDelete
  8. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். அறிமுகமே அருமையாக உள்ளது. கோமதிம்மா உங்கள் பணி சிறக்கட்டும்.

    ReplyDelete
  9. கயல்விழி நம்ம ஃப்ரெண்ட் தான். அவங்க கூட சொல்லலை. ம்ம தனியா கவனிச்சுக்கறேன் அவங்களை. :))

    கலக்குங்க. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அன்பு கோமதி, வலைச்சரம் பதிவில் உங்கலைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி..
    நாள் தோறும் சிறப்புச் செய்திகளைப் பகிர்ந்து கொள்வீர்கள்
    என்று தெரிகிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. அழகான அறிமுகப் பதிவு. ‘திருமதி’ பெயர்க் காரணம் சுவாரஸ்யம். மகளின் தேர்வு அருமை.

    தென்றல்://அவங்க கூட சொல்லலை. ம்ம தனியா கவனிச்சுக்கறேன் அவங்களை. :))//

    கிளிக்கோலத்தின் மூலமாக கோமதிம்மாவை அடையாளம் கண்டு கொண்ட பிறகு, நானும் கவனிச்சேன் தென்றல், அப்படிதான்:)! விடாதீங்க!

    ReplyDelete
  12. வாங்க மதுமதி,
    உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  13. வாங்க ரத்னவேல் ஐயா, உங்கள் மனப்பூர்வமான வரவேற்புக்கு நன்றி.

    ReplyDelete
  14. வாங்க சீனா சார்,

    //மகளின் நிர்வாகத்தில் இருக்கும் வலைச்சரத்தில் தாயார் ஆசிரியப் பொறுப்பேற்பது இருவருக்கும் பெருமை தான்.//

    நிச்சியம் இருவருக்கும் பெருமைதான்.

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  15. சீனா சார், காலை 6 மணிக்கு தான் அனுப்பினேன் போஸ்டை.
    டிராப்டில் சேமித்து வைத்த மணியை காட்டி விட்டது.

    சுட்டி விபரம் நீங்கள் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  16. வாங்க T.V. ராதாகிருஷ்ணன், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  17. புது வருடம் உங்களுக்கு அமர்க்கள்மாக ஆரம்பிச்சு இருக்கு. வாழ்த்துக்கள்//

    வாங்க லட்சுமி, நீங்கள் சொல்வது சரிதான்.
    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  18. வலைச்சர ஆசிரியர் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. வாங்க மகேந்திரன்,
    //குடும்பத்தாரின் துணையில்லாமல்
    வலைத்தளம் நடத்துவது சிரமமான காரியம்.//

    நீங்கள் சொல்வது சரிதான்.

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  20. வாங்க தெகா, முதல் பின்னூட்டத்தை மறக்க முடியுமா? 2009 லிருந்து எழுத ஆரம்பித்தேன்.

    வாழ்த்துக்கு நன்றி தெகா.

    ReplyDelete
  21. வாங்க ஆதி, வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  22. அருமையான பகிர்வு கோமதிம்மா.

    வாழ்த்துகள் வலைச்சர ஆசிரியரே..

    //கயல்விழி நம்ம ஃப்ரெண்ட் தான். அவங்க கூட சொல்லலை. ம்ம தனியா கவனிச்சுக்கறேன் அவங்களை. :))//

    @ தென்றல்.. விட்டுடாதீங்க :-)) ஆனா, கோமதிம்மாவோட நவராத்திரி கொலுப்பதிவுல அரசல் புரசலா தெரிவிச்சுருக்காங்கப்பா ;-)

    ReplyDelete
  23. வாங்க தென்றல், வாழ்த்துக்கு நன்றி.
    கயல்விழியை தனியாக கவனிங்க.

    ReplyDelete
  24. வாங்க வல்லி அக்கா, நீங்கள் தானே என்னை மேலும் மேலும் எழுத தூண்டியவர்கள்.

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  25. வாங்க ராமலக்ஷ்மி, ’திருமதி’ பெயர்க் கராணம் மருமகள்.

    பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  26. வாங்க சக்தி பிரபா, வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  27. வாங்க அமைதிச்சாரல், வாழ்த்துக்கு நன்றி.

    கயல்விழி தன் ’சிறுமுயற்சி’ 5வது வருட நினைவாய் ,வியல் விருது, வழங்கிய போது சொல்லி விட்டேன் சாந்தி, நவராத்திரி பதிவு அதன் பின் தான்.

    ReplyDelete
  28. //எண்ணமே இயற்கைதன் சிகரமாகும்
    இயற்கையே எண்ணத்தில் அடங்கி போகும்.//

    அழகான ஆழமான வரிகள்..

    நிறைவான பாராட்டுக்கள்..

    ReplyDelete
  29. என் கணவரது பெயரையும் என் பெயரையும் சேர்த்து. எனக்கு வலைக் கல்வியை மகள், மகன், மருமகள், பேத்தி சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி. என்னை எழுத ஊக்கப் படுத்தும் என் கணவருக்கு நன்றி.

    நல்லதொரு பல்கலைக்கழகமான குடும்பத்திற்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  30. ”கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு” என்பது போல் நான் கற்றுக் கொண்ட வலைக் கல்வி ஒருகைப் பிடி அளவு கூட இல்லை. எத்தனை திறமைகள் ஒவ்வொருவரிடமும்!

    ஆச்சரியமளிக்கும் உண்மை!

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள்..

    வலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்கும் புத்தாண்டிற்கும்...

    கலக்குங்க...

    ReplyDelete
  32. //அழகான ஆழமான வரிகள்..

    நல்லதொரு பல்கலைக்கழகமான குடும்பத்திற்கு வாழ்த்துகள்...நிறைவான பாராட்டுக்கள்..

    ஆச்சரியமளிக்கும் உண்மை!//

    வாங்க இராஜராஜேஸ்வரி,உங்கள் தொடர் வருகைக்கும், பாரட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  33. வாங்க இந்திரா, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள். கலக்குங்க .............

    ReplyDelete
  35. வலைசர வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  36. வாங்க கோமதி அரசு அடக்கமான அறிமுகம், ஓகே முத்துலட்சுமி உங்க மகளா ,அம்மாவும் மகளும் வலை எழுதிறீங்க. ரொம்ப சந்தோஷம்..

    ReplyDelete
  37. வாங்க பவி, வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  38. வாழ்த்துக்கு நன்றி ஜெய்லானி.

    ReplyDelete
  39. தாயாகும்போதே - ஏன், மனைவியாகும்போதே - டீச்சரும் ஆகிவிடுகிறோமே!! :-))))

    //”திருமதி பக்கங்கள்” - என் கணவரது பெயரையும் என் பெயரையும் சேர்த்து//

    ஓ, அப்படியா!! ஐடியா சூப்பர்.

    முத்துலெட்சுமிக்கா தன் மகள் என்று நீங்கள் வலைப்பூவிற்கு வரும்போதே சொல்லாதது எனக்குப் பிடித்திருந்தது. சொல்லியிருந்தால், அவரின் சாயல் உங்களிடம் எதிர்பார்க்கப்பட்டிருக்கலாம் அல்லவா?

    இப்பணியும் சிறக்க வாழ்த்துகள் அக்கா.

    ReplyDelete
  40. ஆசிரியப் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  41. வாழ்த்துகள் அம்மா.... இந்த வாரம் முழுவதும் சிறப்பாய் அறிமுகங்கள் செய்து கலக்குங்கள்....

    ReplyDelete
  42. வாங்க ஜலீலா,

    //அம்மாவும் மகளும் வலை எழுதிறீங்க. ரொம்ப சந்தோஷம்..//
    உங்கள் சந்தோஷ்ம் எனக்கும் சந்தோஷம்.
    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  43. அழகான அறிமுகம். வலைச்சர ஆசிரியரானதற்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் அம்மா.

    ReplyDelete
  44. தாயாகும்போதே - ஏன், மனைவியாகும்போதே - டீச்சரும் ஆகிவிடுகிறோமே!! :-))))//

    வாங்க ஹுஸைனம்மா, முதல் டீச்சர் தாய் தானே மாதா, பிதா, குரு என்று தானே சொல்கிறார்கள்.

    ReplyDelete
  45. நன்றி நிஜாமுதீன்.

    ReplyDelete
  46. வாங்க கீதா, வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  47. வாழ்த்துக்கள் கோமதியக்கா.தொடர்ந்து உங்கள் வாரத்தின் பதிவுகளைக்காண ஆவல்.உங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  48. புதுவருட தொடக்கத்திலேயே கலக்கப்போகும் வலைச்சர ஆசிரியரை அன்புடன் வரவேற்கின்றோம்.

    ReplyDelete
  49. அன்புள்ளம் கொண்ட வலைச்சர ஆசிரியர்
    திருமதி கோமதி அரசு அவர்களே!

    வணக்கம்.

    தங்களின் அறிமுகப்படலம் வெகு அருமையாகவே
    தொகுத்து அசத்தியுள்ளீர்கள்.

    //கடமைகள் முடிந்து விட்டன( இப்போது தான் பொறுப்புகள் அதிகமாகிறது) . சமுதாயத்திற்கு ஏதாவது பணி செய்யலாம் எனறு முடிந்த சர்வீஸ் செய்து கொண்டு இருக்கிறேன்.//

    நல்லதொரு முயற்சி தான். பாராட்டுக்கள்.

    //அந்த காலத்தில் தாங்கள் எழுதிய கதை, கட்டுரை கவிதைகளை பத்திரிக்கையில் வருவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள் ! இப்போது அப்படியில்லை. நமக்கு என்று ஒரு தளம் நம் எண்ணங்களை, அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. உடனுக்கு உடன் அதற்கு விமர்சனமும் கிடைக்கிறது. பத்திரிக்கையில் எழுதினால் அடுத்தவாரம் தான் வாசகர் கடித்தில் காணமுடியும். //

    மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். இதே காரணத்தினால் தான், நான் வலைப்பதிவுக்கு வந்த முதல் நாளான 01.01.2011 அன்றே, பத்திரிகைகளுக்குப் படைப்புகள் அனுப்புவதை சுத்தமாக நிறுத்திக்கொண்டு விட்டேன்.

    வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றதும், முதல் அறிமுகப்படலத்தையே வெகு அழகாக ஆரம்பித்துள்ளீர்கள்.

    இந்த வாரம் முழுவதுமே எங்களுக்கு நல்விருந்து படைக்கப்போகிறீர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    வாழ்த்துகள். பாராட்டுக்கள்.


    வெற்றி நடை போட்டுத் தொடருங்கள்.

    காத்திருக்கிறோம், தினமும் உங்களின் ருசியான விருந்தினை உண்டு மகிழ! ;))))

    பிரியமுள்ள
    வை. கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது