07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 2, 2012

கைக்குள் இலக்கியம்




இன்றைய ஸ்பெஷல்
உப்புமடச் சந்தி
எழுத்துப்பிழை
சிவகுமாரன் கவிதைகள்
அன்பே சிவம்
உள்ளக் கமலம்
எங்கள் Blog


    ணப்பொறிக்கும் காட்டுத்தீக்கும் என்ன வேறுபாடு?
காதலர் கவிஞராவதற்கும் கவிஞர் காதலராவதற்கும் இடையிலான வேறுபாடு.
        "அங்கிருந்து நீயனுப்பும் அஞ்சலுறைக் குள்தேடி
        எங்கேயும் இல்லையடி இன்பங்கள் - இங்கெனக்கு
        முத்தங்கள் சேர்ந்துபோய் மூச்சிரைப்பு வாங்குதடி
        இத்தோ டிணைத்துள்ளேன் இச்."

        "கிடைத்தது உங்கள் கிறங்கிய முத்தம்
        அடைத்துத் திணித்திருந்த அஞ்சல் - எடைக்கு
        எடைதருவேன் முத்தங்கள் இங்குவந்தால்- கொஞ்சம்
        அடக்கி இருந்திடுங்கள் அங்கு."
நீங்கள் படித்தது சிவகுமாரனின் போதையூட்டும் வெண்பா உரையாடல். இவருடைய 'காதல் வெண்பாக்கள்' வலையுலக blockbuster. காட்டுத்தீ.

தான் பணிபுரியும் ஆலையில் விழிப்புணர்ச்சி பரவ இவர் எழுதியவற்றுள் சில:
    காலணி தலைக்கவசம் கண்ணாடி இம்முன்றும்
    ஆளைக் காக்கும் அரண்.
    கருகும் வாசனை நுகர்ந்தால் கவனி
    அருகே எங்கோ ஆபத்து.
    தூசியும் கழிவும் துளிகூடத் தேங்காத
    மாசில்லா ஆலையாய் மாற்று.
பாதுகாப்பு சுகாதாரம் உற்பத்தி முன்னேற்றம் காண விழையும் ஒவ்வொரு ஆலையிலும் ஆளுயர போஸ்டர் அடித்துப் பரப்ப வேண்டிய குரல். முழுமையாகப் படிக்க: ஆலைக்குரல்.

காதல், ஈழம், அரசியல், பாமரன் நிலை, சமூகம் என்று பல வகையிலும் குரல் கொடுக்கும் குமாரனின் கவிதைகளில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு கவிதை: மதுரையில் மீனாட்சி-சுந்தரேசர் திருக்கல்யாணம் நடக்கும் அதே வேளையில் வெளிப் பிரகாரத்தில் ரிக்ஷா தொழிலாளி மாரிமுத்துவுக்கும், அவன் கூட்டாளி மாடசாமியின் தங்கை செல்வராணிக்கும் திருமணம் இனிதே முடிய, புதுத் தம்பதியரின் பேச்சைக் கேளுங்களேன்?.

தன் கவிதைகளைப் பற்றிய சிவகுமாரனின் அறிமுகம் இது: வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்.

உண்மை. பதிவுலக நண்பர்கள் பத்துப் பேரைக் கூட்டி, ஒரு சிறிய மேடையமைத்து சிவகுமாரனை மேலேற்றி, வரம்புடைத்து வரும் வார்த்தை வெள்ளத்தைக் கேட்க வேண்டும் என்ற தீராத ஆவலை உண்டாக்குமளவுக்கு உண்மை. வெண்பா, சிந்து, புதுக்கவிதை என்று வகை வகையாக வரம்புடையும் வார்த்தை வெள்ளம். இவர் எழுதிய எந்தக் கவிதைக்கும் மரபு வந்துவிடுவது போல் ஒரு மயக்கம் (குரல், குறளைப் போலத் தோன்றுகிறதா இல்லையா?).

தன் ஆன்மீகத் தேடலுக்கு அருட்கவி எனும் வலைப்பூவில் அருமையான ஆத்திகக் கவிதைகள் வடிக்கும் இளைய சிவகுமாரனுக்கு முப்பது மணி நேர நாளும் கணினி வசதியும் கவிபாட அமைதியும் வழங்கப்பா, மூத்த சிவகுமாரா.



    ளைக்காமல் எழுதும் பதிவர்கள் பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன். எங்கள் Blog அந்த வகை. வருடத்துக்கு முன்னூறு இடுகைகளாவது எழுதுகிறார்கள். நானறிந்த வலைப்பூக்களில் least common denominator வாசக அடிப்படையில் எழுதப்படும் ஒரே வலைப்பூ எங்கள் Blog என்று நினைக்கிறேன். படிக்கும் பொழுதெல்லாம் அந்த நாள் குமுதம் நினைவுக்கு வரும். தத்துவம், நகைச்சுவை, புதிர், போட்டி, புகைப்படம் (ஞாயிறு தோறும்), அனுபவம், சிறுகதை, தொடர்கதை, கவிதை, சினிமா, இசை, அரசியல், ஆத்திகம், புத்தகம்,... எல்லாத் தரப்பு வாசகருக்கும் சுவாரசியமாக ஏதாவது இருக்கும். ஆபாசம் மட்டும் கிடையாது.

ஏதோ ஒரு க்ரிகெட் இடுகையில் உண்டான அறிமுகம் எங்கள் Blog என்று நினைக்கிறேன். குண்டப்பாவைப் பற்றிப் புகைப்படங்களுடன் எழுதுவதாகச் சொல்லி விரிக்கப்பட்ட வலைக்குள் விழுந்தேன். விடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். நான் அதிகமாக பின்னூட்டங்கள் எழுதுவதும் இங்கேதான். பின்னூட்டக் கும்மியில் anything goes.

simple இடுகை. புரிகிறதா பாருங்களேன்? கண பூஜை. இது போல டஜன் கணக்கில் இடுகைகள் உள்ளன. இரண்டு நிமிடம் படித்தோம், இரண்டு நிமிடம் சிந்தித்தோம், ஒரு புன்னகையோ வருத்தமோ மௌனமோ வெளிவர முடித்தோம். இதுவே எங்கள் Blog வாசிப்பனுபவம்.

முதன் முதலாக லஞ்சம் கொடுத்த அனுபவம். எளிமையான வித்தியாசமான இடுகை. லஞ்சம் கொடுக்கும் பழக்கம் உங்களுக்கு எப்போது உண்டானது என்று நினைவிருக்கிறதா? கொடுத்துக் கொடுத்து மறந்து விட்டதா?

நான் மிகவும் ரசித்த ஒரு சிறுகதை இதோ: சாயங்காலங்கள். கதையில் வரும் முதியவரை தினசரி சந்திக்கிறோம்; அடையாளம் புரிவதில்லை.

உள் பெட்டியிலிருந்து என்று அடிக்கடி வரும் இடுகைகளில் சிலவற்றைச் சேர்த்து வைத்திருக்கிறேன்.

சமீபத்தில் படித்து நினைவில் நின்றத் தொடர்: நடக்கும் நினைவுகள். நானும் தினம் வாக்கிங் போகிறேன், பதிவெழுதுற மேட்டராத் தோணுதா? (அதை ஏன் 'வாக்கிங் போகிறேன்' என்கிறோம், 'வாக் போகிறேன்' என்றல்லவா சொல்லவேண்டும்? - இதான் எங்கள் பிளாக் influence என்பது.)

மொக்கைக்கும் இலக்கியத்துக்கும் நடுவில் தங்களுக்கென்று வசதியான இடம் தேடிக்கொண்டிருக்கும் 'எங்கள் Blog', வலைப்பூக்களின் under recognized செம்பருத்தி என்று அடிக்கடி தோன்றும்.



    ல வருடங்களாகப் படித்து வரும் 'அன்பே சிவம்' ஒரு வித்தியாசமான வலைப்பூ. அன்பர் முரளிகுமாரின் எழுத்து படிப்பவரைச் சுண்டியிழுக்க வல்லது. பெரும்பாலும் திரைப்பட விமரிசனங்கள் (பன்னாட்டுத் திரைப்படங்கள்) எழுதி வந்தவர் கவிதை, கட்டுரை, இசை, புத்தகம் என்று பல பரிமாணங்களில் கலக்குகிறார்.

என்னைக் கவர்ந்தத் திரை விமரிசனங்கள் இரண்டு:
ரோஸ்மேன் பாலத்தின் நான்கு நாட்கள் எப்போதோ பார்த்த சுமாரான படம். இவருடைய விமரிசனத்தைப் படித்ததும் மீண்டும் தேடிப்பிடித்துப் பார்த்தேன். அந்த அளவுக்கு இருந்தது இவருடைய விமரிசனம். க்லிந்ட் இவருக்குத் தனியாகக் காணிக்கை தரவேண்டும் :)
ஜூலியட்டுக்குக் கடிதங்கள் நூலகத்தில் கண்ணில் பட்ட போதெல்லாம் புறக்கணித்த டிவிடி. பார்க்கத் தூண்டிய விமரிசனம்.

கிறுக்கல்கள் என்ற தலைப்பில் நல்ல கவிதைகள் பல எழுதியிருக்கிறார்.
"இன்னும் மூணு நாளுக்குள்ள
போனஸ் பணம் கிடைச்சுப்புடும்" எனத் தொடங்கும் இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள்.

இவருடைய சிறுகதைகளில் என்னைக் கொஞ்சம் உறுத்தியது இறக்காத இரவுகள்.
"அதிகநேரம் ஆகாததால் பிரேதம் இன்னும் உப்பிவிடவில்லை. மல்லாக்காய் படுக்க போட்டிருந்தார்கள். கருப்பாய் இருந்தாலும் கலையாய் இருக்கிறான் என்றே பெயரெடுத்தவர் இன்று மேலுதடு சற்று வீங்கி வாய் திறந்திருந்தது. இவ்வளவு கோரமாய் அவரை நான் என்றுமே பார்த்தது இல்லை. எல்லோரும் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள், நான் அவருடைய கால்களையே பார்த்துகொண்டிருந்தேன். பாலம் பாலமாய் வெடித்து வீங்கியிருந்தது. எத்தனை தூரம் இந்த கால்கள் விடியலை தேடி நடந்திருக்கும்?".
அந்தக் கடைசி வரி.. விடியலைத் தேடிய கால்கள்.. அது தான் என்னைத் தொடர்ந்து படிக்க வைத்தது.

இடையே சிறிது ஓய்வெடுத்திருந்த பதிவர் மீண்டும் எழுதத் தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி.



    ழத்து முற்றம் வழியே அறிமுகமானவர் பதிவர் மணிமேகலா. உள்ளக் கமலம் என்ற இவரது பதிவில் ஆன்மீகம், ஆத்திகம், தன்முனைப்பு, சுயமுன்னேற்றம், சமூகநோக்கு என்று "பிறவி நோக்கம்" என வழங்கப்படும் கனமான topicகளில் எழுதி வருகிறார்.

    ":உயிர்கள் இடத்திலே குண வேற்றுமைகள் இருப்பது ஏன்?
    :ஒரே கடலின் நீரானாலும் கொதிக்கின்ற பாத்திரத்திலே வைத்த நீர் கொதிக்கும். குளிர்ந்த பாண்டத்திலே வைத்த நீர் குளிர்ந்திருக்கும். அவ்வாறே அந்தந்த ஆத்மாக்களின் உடலங்களுக்கேற்பவே குண பேதங்களும் அமையும்".
நசிகேதன் கதையல்ல. காளிதாசன் கதை. மகாகவி காளிதாஸ் படத்தில் வரும் உரையாடலாம். சுவையான இடுகை. உயிரோடிருந்தால் உடலம்; செத்தால் சடலம். ஈங்கு சிறிதுத் தமிழும் ஈயப்படும்.

ஒரு பற்றின் பயணம் என்ற இந்த இடுகை நீண்ட நாட்கள் மனதில் அசைந்து கொண்டிருந்தது. ஒரு வரி எழுதியிருந்தாலும் தாக்கம் மாறுபட்டிருக்குமோ?

இனங்களைத் தாண்டியும் என்ற இந்த இடுகையைப் படித்துப் பாருங்கள். உங்கள் மனம் கனத்து ஒரு சொட்டுக் கண்ணீராவது சுரக்கும் என்பேன். சிட்டுக்குருவி கவிதை எழுதியவன் சொல்கிறேன்.

ஏறக்குறைய நான்கு வருடங்களில் ஐம்பதுக்கும் குறைவான இடுகைகள் எழுதியிருக்கிறார். பெரும்பாலும் அரைப்பக்க இடுகைகள். அமைதிப்படுத்தும் இரவு நேர வாசிப்பு.



    ஹேமா என்றதும் வலையுலகில் பலருக்கும் அவருடைய கவிதைகள் நினைவுக்கு வரும். காதல் கவியரசிக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. கதை, கட்டுரை, சமூகம் என்று ஆழமான இடுகைகள் கொண்ட இவரின் 'உப்புமடச் சந்தி' என்னுடைய favorite பதிவுகளில் ஒன்று.

சந்தியில் நான் முதலில் முழுமையாகப் படித்த இடுகை மீண்டும் மகளாகிறாள் என்றத் தொடர்கதை (உண்மைக்கதை பின்புலம்). ஈழமும் தமிழும் மணக்க உயிரைப் பிழியும் கதை. (நிஜக் கதை(?)யின் நாயகி நலமாக இருக்கிறாரா ஹேமா?)

    "ஏண்டா கோயில்ல இருக்க சாமி கிரீடத்தை திருடினே?"
    "சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்...அதான்"
சத்தியமாக ஹேமாவின் பதிவிலிருந்து திருடியது. சிரித்து மாளவில்லை. இப்படியொரு கோணமா? முழுமையாகப் படிக்க:எமக்கு இப்போ வேண்டிய இரண்டும்

நூற்றாண்டு கால சிங்கள-தமிழ் இனப் பகைக்கு வட்டாரப் பிரிவினை ஒரு தீர்வு என, இலங்கை சுதந்திரம் பெறுமுன் இங்கிலாந்து அரசு அறிந்தும் ஏதும் செய்யாதிருந்தது என்று படித்திருக்கிறேன். இங்கிலாந்து அரசு இந்தியத் தலைவர்களையும் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று இப்போது சொல்கிறார்கள். இந்தியாவையே பிரிக்க எண்ணியிருந்தவர்கள் எங்கே செய்திருக்கப் போகிறார்கள்?! ஸ்ரீமா இங்கிலாந்தின் பிரிவினைத் தந்திரங்களில் தேர்ச்சி பெற்றவர் என்று இப்போது வரும் புத்தகங்கள் சொல்கின்றன. பிள்ளைப் பிராயத்தில் கொழும்பு நகரை வைத்து இலங்கையை எடை போட்டப் பலருள் நானும் ஒருவன். தமிழ்நாட்டை விடச் செழிப்பானது இலங்கை என்ற எண்ணம் இருந்தது. எழுபதுகளில் இலங்கையில் வளர்ந்த தமிழர் நிலை பற்றிய அருமையான கண் திறக்கும் கட்டுரை நிறைய உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறது.

என் தேசம் என் ஊர் என்று இவர் எழுதிய நெகிழ்ச்சியானக் கட்டுரை இது.

இந்தியா 2020 பற்றிக் கொஞ்ச வருடங்கள் முன்பு நிறைய அடிபட்டது. எந்த அளவுக்கு வந்திருக்கிறது தெரியாது. இந்த இடுகையில் இடம்பெறும் ஏதாவது நிறைவேறியிருக்கிறதா? அந்தக் கடைசி கணிப்பு - ஹிஹிஹி.

ஈழத்து முற்றம் இங்கிருந்து அறிமுகமான பொக்கிஷம் - உப்புமடச் சந்திக்கு நன்றி.



    "மனம் ஒரு சந்தோஷ நிலையில் இருக்கும் தருணத்தில் உம்ம கதையவோ, கவிதையவோ படிப்பதில்லை. படிச்சா ஒரு விதமான எரிச்சல் கலந்த மனோநிலை நிகழும். இருந்தாலும் படிக்காமல் இருந்ததில்லை... காலையில் இருந்து நல்லா இருந்திச்சு. எளவு, இப்ப இந்த கவிதையை படிச்சிட்டேன்"

இத்தகையப் பின்னூட்டம் போகனின் எழுத்துக்கு மட்டுமே கிடைக்கும் அங்கீகாரம். ultimate compliment. பின்னூட்டமிட்ட ராஜகோபால், "படிக்காமல் இருந்ததில்லை" என்பதைக் கவனியுங்கள். என் நிலையும் இதே தான். 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' சத்தியம் போல. பின்னணியில் நிர்வாணக் கவர்ச்சியும் sinister musicம் விரவ, நம் உள்மன வக்கிரங்களை துருப்பிடித்த நூறு கொக்கிகள் போட்டு இழுப்பது போன்ற மெல்லிய மெரிவானா எழுத்துக்குச் சொந்தக்காரர் போகன். this man has two sides, dark and darker என்று இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். ஏதாவது எழுதியிருக்கிறாரா என்று தினம் ஏங்கிப் பார்க்க வைக்கும் பதிவு இவருடையது என்பதை போகனின் வாசகர் வட்டம் அறியும். முதிர்ந்த வாசகருக்கான மேல்தட்டு இலக்கியம்.

மேலே குறிப்பிட்டப் பின்னூட்டத்தை elicit செய்த போகனின் 'புணர் நிமித்தம்' கவிதை இதோ.

இவருடைய சூட்சுமக் கவிதைகள் படிக்கவும் சிந்திக்கவும் சுவையானவை. சமீபப் படைப்புகளான எலிப் பத்தாயம் மற்றும் இலக்கியம் பேசுதல் கவிதைகளைப் படித்துப் பாருங்கள். இலக்கியம் பேசுதல் கவிதையில் உடையவிழ்வதையும், குறி துடிப்பதையும் எப்படிப் புரிந்து கொள்கிறீர்களென்று அறியத் துடிக்கிறேன்.

களவு காதல் கற்பு எனும் தொடர்கவிதை சுவையானக் கற்பனை. என்னை சிரிக்க வைத்தப் பாலியல் கவிதை இது.

பேரழகியான யட்சி ஒருத்தி ரகசியமாகக் குளிக்கிறாள். 'அம்பு போல் எழுந்த குறியோடு' மனிதன் ஒருவன் தன்னை அணுகுவதை உணர்ந்த யட்சி, வாள் போன்ற பற்கள் வெடிக்கச் சிரித்து, "ஓராயிரம் சலிப்பான இரவுகள் வேண்டுமா, கடைசி அணுவும் சிதறும் ஒரு இரவு வேண்டுமா?" என்று கேட்கிறாள். மனிதன் தேர்வைக் கவிதையில் தெரிந்து கொள்ளுங்கள். யட்சி என்ற இந்தக் கவிதை பெண் வர்ணணையில் ஒரு உச்சம்.

மூடியப் பெட்டியாகவே பெரும்பாலும் கையாளப்படும் காம variantகளை அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்கிறார் தன்னுடையப் பதிவுகளில். no inhibitions. படிப்பவர் கவனம். இவர் எழுதிவரும் தொடர்களான உடல் தத்துவம் மற்றும் கண்ணி இரண்டையும் படித்துப் பாருங்கள். போகன் என்றைக்குத் தொடரப்போகிறாரோ தெரியாது, உளவியல் ஆழங்களை மூடியக் காமச்சருகுகள் விரவியிருக்கும் இரண்டு தொடர்களுமே புத்தகமாக வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் தகுதியுடையவை. rockstar போகன் மனது வைக்க வேண்டும்.



    ங்கரநாராயணனும் கிங்கரயானையும் எனும் இடுகையைப் படித்திருக்கிறீர்களா? வித்தியாசமான தலைப்பு என்று படித்தால், முதலில் புரியவில்லை. பிறகும் புரியவில்லை. திடீரென்று நெற்றியலடித்தது. தமிழ் புரிந்து கொள்ளும் நாலைந்து மழலைகளுக்கு ஒரு நாள் இதைக் கொஞ்சம் அசைபோட்டுச் சொல்ல வேண்டும் என்றுத் துடித்துக் கொண்டிருக்கிறேன். 'கரிசக்காடு' உதயசங்கருக்கு இன்றைய shoutout.


➤➤7. நன்றி






20 comments:

  1. சிவகுமாரன், உப்புமடச்சந்தி. எங்கள் ப்ளாக் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். உள்ளக் கமலம், எழுத்துப் பிழை உங்கள் மூலம் கிடைத்த நல்லறிமுகங்கள். அருமையாய்த் தொடரும் வலைச்சர வாரத்தில் உங்களுடன் பயணிப்பதில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு.

    ReplyDelete
  2. -கணப்பொறி - காட்டுத்தீ.... நல்ல உவமை. ஆளைக்குரல் தவிர மற்றவை படித்துள்ளேன்.
    -எங்கள் பற்றிய உங்கள் வரிகள் நெகிழ்ச்சி + சந்தோஷம் தருகின்றன.... நன்றி.
    -அன்பே சிவமும், ஈழத்து முற்றமும் பார்த்ததில்லை..... நோடட்
    -ஹேமாவின் இரண்டு தளங்களையும் பெரும்பாலும் தவற விடுவதில்லை. ஜோக் உண்மையிலேயே பிரமாதம்.
    -போகனின் தளத்தில் அந்த பின்னூட்டம் நானும் மிக ரசித்த ஒன்று!
    -கரிசக்காடு பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  3. அடச்சே.... (ஸ்ரீ)ராமா.... ! ஆளைக்குரலை ஆலைக்குரலாகப் படிக்கவும்!

    ReplyDelete
  4. கணப்பொறிக்கும் காட்டுத்தீக்கும் என்ன வேறுபாடு?
    காதலர் கவிஞராவதற்கும் கவிஞர் காதலராவதற்கும் இடையிலான வேறுபாடு.

    ஆரம்பமே அமர்க்களம்..

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ஹேமா, எங்கள் , போகன் அனைவரும் என்னால் ரசித்து உணரப்பட்டவர்கள். வாழ்த்துக்களும் நன்றியும்

    விஜய்

    ReplyDelete
  7. அறிமுகங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ஒவ்வொரு பதிவையும் குறித்த உங்கள் எழுத்து அந்தப் பதிவுகளை நோக்கி இழுத்துச்செல்கிறது. அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  10. அன்பின் அப்பாதுரை சார்,

    அலுங்காமல், குலுங்காமல் உள்ளதை உள்ளபடி எடுத்துக் காட்டிய வல்லமை ஆச்சரியப்படுத்துகிறது.. மிகச் சிறந்த விமரிசகர் தாங்கள் என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது.. அழகான அறிமுகங்கள்...

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  11. அன்பின் அப்பாதுரை சார்,

    அலுங்காமல், குலுங்காமல் உள்ளதை உள்ளபடி எடுத்துக் காட்டிய வல்லமை ஆச்சரியப்படுத்துகிறது.. மிகச் சிறந்த விமரிசகர் தாங்கள் என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது.. அழகான அறிமுகங்கள்...

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  12. சிவக்குமரன், எழுத்துப்பிழ-போகன், உப்புமடச்சந்தி-ஹேமா என் விருப்ப பதிவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள். மற்ற பதிவர்கள் உங்களால் அறிந்துக்கொண்டேன். நன்றிங்க அப்பாதுரை.

    ReplyDelete
  13. நானும் எழுதுறேன் என்று அப்பாஜி சொல்லிட்டார்.சந்தோஷமாயிருக்கு.மோதிரக் கையால் குட்டுப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறன்.அதுவும் நான் உணர்ந்து எனக்குள் உள்வாங்கி எழுதப்பட்ட பதிவுகள்.நன்றி அப்பாஜி.

    ’மீண்டும் மகளானவள்’நல்ல சுகமே.வெளியில் காட்டிக்கொள்ளாத அதே சோகத்தோடுதான் இப்போதும்.பிள்ளைகளைக் கரை சேர்க்க நினைத்து அவள் அப்படியே வாழ்ந்துவிட்டாள்.ஆனால் அவளுக்குள் வாழ்வைத் தவறவிட்ட ஏக்கம்.இரு பேரப்பிள்ளைகளுக்குப் பாட்டி இப்போ ரதி !

    எங்கட புளொக்,மணிமேகலா, சிவக்குமரன்,போகன் பக்கங்கள் போயிருக்கிறேன்.நன்றி அப்பாஜி !

    ReplyDelete
  14. //பதிவுலக நண்பர்கள் பத்துப் பேரைக் கூட்டி... //

    'உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை'!

    //இளைய சிவகுமாரனுக்கு முப்பது மணி நேர நாளும் கணினி வசதியும் கவிபாட அமைதியும் வழங்கப்பா, மூத்த சிவகுமாரா.//

    உணர்வு கொப்பளிக்கும் வேண்டுகோள். மனசார வெளிப்படும் பொழுது நாத்திகமும் ஆத்திகமும் ஒன்றரக் கலந்து அன்பு அக்கார வடிசலாய் வடிகின்ற அற்புதம்!

    இனியும் பொறுபதற்க்கில்லை; இனிமேலாவது 'எங்கள் Blog'கை 'நம்ம Blog'காக மாற்றுவார்களாக!

    இன்று எனக்கோ கவியரங்கத்திற்குள் நுழைந்த உணர்வு! கவியரங்கத் தலைவராய் ஒவ்வொரு வாசிப்பிற்கும் ஆழ்ந்த அனுபவிப்பு உற்சாகத்தோடு கவிதையே போன்ற
    உரையாய் மலர்ச்சொரிந்த நேர்த்தி மனத்தின் அடிஆழத்தில் தித்திக்கிறது.

    நன்றி சொல்ல வேண்டும், அப்பாஜிக்கு!

    ReplyDelete
  15. கைதேர்ந்த பதிவர்களை தேர்ந்து, பூக்குடலையை மேலே கவிழ்த்தது போல் வரிசையிட்டிருக்கிறீர்கள். என் மனதுக்கு நெருங்கிய இந்த வலைப்பூக்களை இனம் காட்டிய துரையே! நீர் வாழ்க!

    ReplyDelete
  16. சுட்டிக் காட்டிய அனைத்து அறிமுகங்களும் அருமை...

    ReplyDelete
  17. மிக அருமை அறிமுகங்கள். அனைவருக்கும் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. கலந்துகட்டி வாசிக்கிறீர்கள்.... பரந்த கவிப்பதிவுகளில் குறிப்பிட்ட பதிவுகள் முத்திரை பதிவுகள்...

    சிவாவின்... காதல் வெண்பாக்கள் இனியவை. சமுக கோபக்கவிகள் கரைபுரண்ட வெள்ளம்.....

    ReplyDelete
  19. நன்றி சொல்லக் கூட நான்கு நாட்களாகிறது எனக்கு. என்னைப்பற்றி எழுதியிருப்பீர்கள் என்று அறிந்தும் படிக்க முடியாமல் நான் தவித்ததன் வலிக்கு இணையாய் காதலியைப் பிரிந்த காதலனின் வலியைச் சொல்லலாம்.
    ||இளைய சிவகுமாரனுக்கு முப்பது மணி நேர நாளும் கணினி வசதியும் கவிபாட அமைதியும் வழங்கப்பா, மூத்த சிவகுமாரா.?///
    நாத்திகரான நீங்கள் எனக்காக பிரார்த்தித்தது (Recommend? ) கண்களை கசிய வைத்தது அப்பாஜி.
    நன்றிகள் பல.

    ReplyDelete
  20. பின்னூடங்களில் நினைவு கூர்ந்தவர்களுக்கும் என் நன்றிகள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது