07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 15, 2013

ஸ்தல புராணம்... கொஞ்சம் சுய புராணம்...:)

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், அல்லாகே அந்தரிகி யூகாதி சுபகாஞ்சலு
 
என்னது? சுபா அக்காவுக்கு காய்ச்சலா?
 
ஆமா டெங்கு காய்ச்சல்
 
ஒ.. எந்த சுபா? நம்ம மன்னார்குடி சுபாவா?
 
இல்ல மால்குடி சுபா
 
ஹையோ ஹையோ அது மால்குடி இல்ல மால்காடி, அப்படினா ஹிந்தில சரக்கு ரயில்னு அர்த்தம், சுபா சரக்கு ரயில் பத்தி ஒரு பாட்டு பாடி பேமஸ் ஆனதுனால அந்த பேர் வந்தது
 
இதெல்லாம் சரியா சொல்லு, ஆனா நான் தெலுகுல ஒரு வார்த்தை சொன்னது உனக்கு புரியலையா?
 
அ...அது... சுபா அக்காவுக்கு காய்ச்சல் பத்தி கிளாஸ் எடுத்த அன்னைக்கி எனக்கும் காய்ச்சல். அதான் அது மட்டும் தெரியாம போச்சு
 
நல்லாவே சமாளிக்கற. என்ன பிரெண்ட்ஸ்? நான் யார் கூட பேசிட்டு இருக்கேன்னு புரியலையா? வேற யாருங்க, டாங்கி கெட்டா ஸ்மால் வால்...:)
 
அப்பாவி ப்ளீஸ்... உன்னை நீயே கழுதைனு சொல்லிக்கறத என்னால அனுமதிக்க முடியாது
 
உஸ்ஸ்ப்ப்ப்பா... முடியல மைண்ட்வாய்ஸ் முடியல
 
அப்பாவி, நமக்குள்ள ஆயிரம் தான் இருந்தாலும்....
 
எந்த ஆயிரத்த சொல்ற, போன வாரம் கடன் வாங்கினியே அந்த ஆயிரமா? இல்ல போன மாசம் வாங்கினயே அந்த நாலாயிரமா?
 
அப்பாவி, ஓராயிரமோ, நாலாயிரமோ, வாரணமாயிரமோ... அதெல்லாம் இப்ப எதுக்கு? இப்ப இங்க வந்த மேட்டர் சொல்லு
 
அது வேற ஒண்ணுமில்ல, வலைச்சரத்துல ஒரு வாரம் ஆசிரியர் பொறுப்பு எடுத்து இருக்கேன்
 
அதை நீ 2011லயே செஞ்சு இருக்கியே
 
வாஸ்துவம் தான், அந்த லிங்க் இதோ, இப்ப இன்னுமொரு வாய்ப்பு குடுத்து இருக்காங்க
 
ஒரு வாட்டி உன்னை கூப்டுட்டு மறுபடியுமா? அவங்களுக்கு உன்னை பத்தி சரியா தெரியலியோ
 
என்ன நக்கலா? பேசு பேசு...இன்னைக்கி முதல் பதிவு என்னை பத்தி சொல்லிக்கலாம்னு சொல்லி இருக்காங்க
 
அதான் உனக்கு அல்வா சாப்பிடற மாதிரி ஆச்சே...:)
 
சரி சரி நீ எடத்த காலி பண்ணு, நான் என் ப்ளாக் பிரெண்ட்ஸ்கிட்ட கொஞ்சம் பேசணும்
 
நீ பேசு, அதுக்கு நான் ஏன் எடத்த காலி பண்ணனும்?
 
இல்லேனா நீ நடு நடுல கமெண்ட் அடிச்சு என்னை காலி பண்ணுவியே
 
ஹி ஹி... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. சரி சரி, நான் ஜூட் விடறேன், நீ பேசு
 
அப்பாடா, இனி நிம்மதியா பேசலாம். என்னங்க எல்லாரும் சௌக்கியமா? நான் நல்லா இருக்கேன். என்னை பத்தி சொல்லனும்னா என்னோட ப்ளாக் லிங்க் குடுத்தாலே போதும், இருந்தாலும் வந்ததுக்கு நாலு வார்த்தை சொல்லிட்டு நாலு லிங்க் குடுத்துட்டு போறேன்
 
என் இயற்பெயர் புவனா கோவிந்த், சொந்த ஊர் கொங்கு தமிழ் கொஞ்சும் கோயமுத்தூர். பத்து வருஷம் கனடாவில் இருந்தோம், சமீபத்தில் ஜாகை சொந்த ஊர் கோவைக்கு மாறியது. இப்போதைக்கு வெட்டி ஆபிசர், இன்னும் சில நாட்களில் ஒரு மேலாண்மை கல்லூரியில் பேராசிரியரா ஜாயின் பண்ண போறேன். கல்லூரி போக காத்துட்டு இருக்கேன்... பிகாஸ் கேள்வி கேக்க எனக்கு ரெம்ப புடிக்கும் யு சி...:)
 
அப்புறம் 2010ல இருந்து ஏக்டிவா ப்ளாக் எழுத ஆரம்பிச்சேன். முதல் வருஷம் எக்கசக்கமா மொக்கை போட்டு இருக்கேன். இதுவரைக்கும் 182 பதிவுகள் போட்டு இருக்கேன். நெறைய நல்ல நண்பர்கள் கிடைச்சு இருக்காங்க இங்க. அந்த வகைல ரெம்ப சந்தோஷம்
 
விகடன், திண்ணை, வல்லமை, அதீதம் போன்ற இணைய இதழ்களில் என்னோட கதைகள் / கவிதைகள் பிரசுரம் ஆகி இருக்கு. சில பரிசுகளும் வாங்கி இருக்கேன். அது மேலும் எழுத தூண்டுகோளாகவும் இருக்கு. இந்த வருடம் சிறுகதை தொகுப்பாய் ஒரு புத்தகம் வெளியிடும் எண்ணம் இருக்கு, எப்படி போகுதுனு பாப்போம்
 
என்னோட பதிவுகளில் எனக்கே பிடித்த சிலதை உங்ககிட்ட பகிர இந்த வாய்ப்பை உபயோகிச்சுக்கறேன். ஒவ்வொரு ஜோனர்லையும் எனக்கு பிடிச்ச டாப் 5 லிஸ்ட் இதோ:-
 
சிறுகதைகள்:-
 
நகைச்சுவை:-
ஜஸ்ட் ஒன் மோர் ப்ளீஸ்...
 
கவிதை:-
 
தொடர்வதைகள்... சாரி சாரி தொடர்கதைகள்..:) :-
5..................ஹி ஹி இனிமே தான் வரணும்.... இதுவரை மொத்தமே நாலு தான் எழுதி இருக்கேன், அதுக்கே 40 கதை எழுதின ரெஸ்பான்ஸ்...:) ஆனா டிராப்ட்ல எக்கசக்கமா இருக்கு, விரைவில் தொடரும்...:)
 
போதும்னு நினைக்கிறேன்... இதுக்கு மேல மொக்கை போட்டா இந்த வாரம் பூரா யாரும் இந்த பக்கம் எட்டி பாக்க மாட்டீங்க... இதோட நிறுத்திக்கறேன். இனி அறிமுகங்கள் நாளை முதல் பார்ப்போம். நன்றி
 
வாய்ப்பளித்தமைக்கு வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா சாருக்கு நன்றி

29 comments:

  1. உங்கள் வலைச்சரப் பணி சிறக்க வாழ்த்துக்கள் அக்கா....

    தொடர்ந்து கலக்குங்க... நாங்களும் தொடர்கிறோம்.

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான சுய ஆரம்பம்...

    மேலும் அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தமிழ்மணம் (+1) இணைத்தாகி விட்டது.... தொடர்க... நன்றி...

    ReplyDelete
  4. அறிமுகமே மிக அருமையாக நகைச்சுவையாக அழகாக எழுதி அசத்தியுள்ளீர்கள்.

    மிகவும் ரஸித்தேன்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. நல்ல நகைச்சுவையுடன் ஆரம்பித்திருக்கிறது .உங்கள் லிங்க் போய் படிக்கிறேன்.

    ReplyDelete
  6. சூப்பரா சிறுகதை எழுதுகின்றீர்கள்.பிரசவ வைராக்கியமும் என் உயிர் நின்னதன்றோவும் என்னை மிகவும் கவர்ந்தன

    ReplyDelete
  7. வாங்க அப்பாவி, இந்த வாரம் வலைச்சரத்தில் கலக்கப்போவது நீங்கதானா? இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துகள் அப்பாவி.....

    உங்க லிஸ்ட்ல டாப் மோஸ்ட் இடத்தில இட்லி இருக்கணுமேன்னு பார்த்தேன்! இருக்கு! :)

    வாரம் முழுவதும் வலைச்சரத்தில் கலக்க [எதை!] வாழ்த்துகள்.

    எப்ப கேள்வி கேட்கப் போறீங்க - அட கல்லூரியில் தாங்க!

    ReplyDelete

  9. சுபாவுக்கு காய்ச்சல் அப்படின்னு படிச்சு பயந்தே போயிட்டென்.

    இப்பதானே இந்த பொண்ணு நாலு நாளா முதுகு வலி தாங்க முடியல்லைன்னு சொன்னா..

    இப்ப காய்ச்சல் வேற யா...

    அப்பறம் தான் புரிஞ்சது ...

    இது உங்க ஸ்னேகிதி சுபாவா...

    உங்களது வலைச்சர வருகை

    எல்லா சுபங்களும் நிகழட்டும்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  10. Welcome Valaichara Aasiriyar soon to be Professor!

    ReplyDelete
  11. வலைச்சர
    வருகைக்கு
    வாழ்த்துகள்..

    ReplyDelete
  12. இரண்டாம் சுற்றிலும் கலக்க வாழ்த்துகள் அப்பாவி.

    ReplyDelete
  13. எப்பவும் சொலோவாவே எல்லாமா இருந்து கலக்குவீங்க இப்ப வலைச்சரத்தில் கேக்கவாவேனும் வாழ்த்துகள்

    ReplyDelete
  14. அசத்துங்க அப்பாவி! நான் உங்க பரம விசிறின்னு ப்ளாக்ஸ்பாட் உலகத்திற்கு சொல்லிக்கறேன்.நீங்க ஏக்டிவா(டச் பண்ணீட்டீங்க,ஏக்டிவ் என்று அடிக்கடி சொல்லும் எங்க சாயில் சைன்ஸ் ப்ரபஸர் நினைவு வந்து விட்டது).தொடருங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. உங்க இட்லி பதிவு படிச்சேன்,இட்லிக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா அருமை. இட்லிய போட்டு பிச்சிட்டீங்க. அப்படியே உப்புமா பண்ணிடுங்க! அங்க ஏற்கனவே ஏராளமான கம்மென்ட் இருந்தததால இங்க போடறேன். உங்க மத்த பதிவுகளையும் விரைவில் படிச்சிடறேன்.
    நல்ல தொடக்கம் தொடர்க

    ReplyDelete
  16. அட! அப்பாவி வாரமா? கலக்குங்க...

    ReplyDelete
  17. அன்பின் புவனா கோவிந்த் - நல்லதொரு சுய அறிமுகம் - ஆமாம் விதி முறைகளின் படி லேபிள் இட வேண்டுமே ! மறந்து விட்டீர்களே ! லேபிள் இடுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. வாழ்த்துகள் புவனா.. சுமேதாவின் தீவிர ரசிகர்கள் பலர் இன்றும் உள்ளனர்.. ஹி ஹி ஹி..

    ReplyDelete
  19. மறுபடி உங்களை ஆசிரியராக்கினாரா? சில பேருக்குப் பட்டாக்கூடத் தெரியலே பாருங்க.. :)
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. இனிய வாழ்த்து.
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  21. indha varam jagaiya valaicharathuku mathida vendiyathu than :))

    valthukkal

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் தொடருங்கள் மொக்கை என்றாலும் தொடர்வோம் ஆசிரியர் நண்பரை!

    ReplyDelete
  23. மறுபடியுமா...???!!

    :-))))

    ReplyDelete
  24. வணக்கம்!உங்க ப்ளாக் கேள்விப்பட்டிருக்கேன்,பட் படிச்சதில்ல.இந்த வாரம் தேறுவீங்க ளான்னு பார்ப்போம்,ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
  25. சுயபுராணம் சூப்பர் அப்பாவி.

    ஆமாம்...அது என்ன கோள்? அதான் அந்த தூண்டுகோள்!!!!

    தூண்டிவிடும் கிரகம்தானே? :-))))

    எழுதத்தூண்டி விடும் என்றும் சொல்லலாம்.

    ச்சும்மா....:-))))

    ReplyDelete
  26. vazhthukkal appaavi ! aana onnu therijukkonga collegela yellam ippo vaathiyaar kelvi ketkamudiyaathu, pasanga thaan ketpaanga. aagamotham yenakku onnu nalla puriyuthu, neenga pesaratha panam koduthu ketka oru kootam kaathukitirukku, enjoy! :))

    ReplyDelete
  27. @ To all - தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்... கொஞ்சம் பிஸி

    @ சே. குமார் - தேங்க்ஸ் பிரதர்...

    @ திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க தனபாலன் சார்

    @ வை.கோபாலகிருஷ்ணன் - மிக்க நன்றி

    @ rajalakshmi paramasivam - ரெம்ப நன்றிங்க

    @ S.டினேஷ்சாந்த் - தேங்க்ஸ் எ லாட்

    @ தி.தமிழ் இளங்கோ - நன்றி

    @ கீதமஞ்சரி - தேங்க்ஸ்'ங்க கீதா

    @ வெங்கட் நாகராஜ் - ஹை அண்ணா, தேங்க்ஸ். அதானே இட்லி இல்லையேல் அப்பாவி இல்லை அல்லவா...:) கேள்வி தானே, இன்னும் ரெண்டு மாசத்துல ஆரம்பிச்சுடும்... அப்புறம் நான்-ஸ்டாப் தான்...:)

    @ sury Siva - தேங்க்ஸ் தாத்தா

    @ middleclassmadhavi - ரெம்ப நன்றிங்க

    @ இராஜராஜேஸ்வரி - தேங்க்ஸ்'ம்மா

    @ அமைதிச்சாரல் - தேங்க்ஸ் அக்கா

    @ poovizi - தேங்க்ஸ்'ங்க

    @ Asiya Omar - ஆஹா, சும்மாவே என்னை கைல புடிக்க முடியாது, இதுல விசிறினு எல்லாம் சொன்னா அவ்ளோ தாங்க...:) தேங்க்ஸ் எ லாட்

    @ T.N.MURALIDHARAN - ரெம்ப நன்றிங்க

    @ ஸ்ரீராம். - நன்றிங்க

    @ cheena (சீனா) - நன்றிங்க... மன்னிக்கணும், லேபில் இணைத்து விட்டேன்

    @ கோவை ஆவி - இன்னுமா அந்த ரசிகர் மன்றம் ஓடிட்டு இருக்கு ஆனந்த்...:)

    @ எல் கே - தேங்க்ஸ் LK

    @ அப்பாதுரை - அவ்வ்வ்வ்வ்வ்...:))

    @ kovaikkavi - நன்றிங்க

    @ புதுகைத் தென்றல் - நன்றி அக்கா

    @ தனிமரம் - நன்றிங்க

    @ ஹுஸைனம்மா - வாட் அன் எக்ஸ்பிரசன் அக்கா....ஹ ஹ ஹ...:)

    @ Subramaniam Yogarasa - :)

    @ துளசி கோபால் - ஹ ஹ... நன்றிங்க டீச்சர்

    @ Thanai thalaivi - ஹ ஹ... அது வேணா நிஜம் அக்கா... பேச காசு குடுத்தா கசக்குமா என்ன...:)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது