07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 12, 2013

இசையில் ஒரு ஜீவன்.


இசையில் ஆர்வம் வந்தது எப்போது ?
அதன் பின் ஒரு கதை எனக்கும்  இருக்கு

.இலங்கை வானொலி கேட்ட போதா ?இல்லை ,திருச்சிராப்பள்ளி வானொலியில் திரைகடல் ஆடிவரும் நாதம் கேட்ட காலத்திலா ?இல்லை சாதாரண தரத்தில் சங்கீத தேர்விற்கு பாடப்போனபோது புலிச்சந்தேகப் பேர்வழி என்று விளக்கமறியலில் இருந்தபோதா?!

சத்தியமா எதுவும் தெரியாது  என்ற போதும் .சகோதரமொழி உயர் அதிகாரி காவல்நிலையம் வரும் வரை  விளக்கமறியலில் இருந்து வெளியவிடவில்லை இலங்கையின் இனவாதம். இந்தப்பிள்ளை ஒரு அப்பாவி என்று என்னை பரீட்சைத் தேர்வு நடக்கும் கண்டிக்கு அழைத்துச் சென்ற வேளையில் சகோதரமொழித் தாத்தா காவல்நிலையத்தில் சண்டைபோட்டது இன்னும் சிலிப்பாகவும் ,சிரிப்பாகவும் இருக்கு.

 அதன் பின் என் விருப்பில் கொழும்பிற்கு  தனிவழியில் நான் வேலைக்கு வந்த போதும் என்னிடம் அவர் எதுவும் கேட்டது இல்லை . அவர் எப்போதும் சொல்லும் ஒரு வசனம் தாய் ,தந்தையை மறந்துவிடாதே !! அத்துடன் நிற்காமல் பலசோதர மொழிக்கதைகளும் ,பாடல்களும் ரசிக்க தூண்டுதல் தந்தவர் அவர் என்பதை நான் எப்போதும் மறந்தவன் இல்லை

.என்றாலும் அவருக்கு என்மீது சிறுகோபம் இருந்தது என்னை வளர்த்தவர்களை விட்டு விட்டு வேற ஊரில் விற்பனைப்பிரதிநிதி வேலைக்குச் சென்றதில்  .

அதனால் ஏற்பட்ட கசப்பான அரசியலினிலால் வெளிநாடு வந்த நிலையினால்  காலச்சக்கரத்தில் அவரும் என்னைப்புரிந்துகொண்டார் .கடல்கடந்து  வந்தபின்  நான் போகும் பாதை சரி என்று உம்ப ரத்தரங் புத்தே  (நீ தங்கமகன் )என்ற  அவரின் ஆசி இன்னும் தொடர்கின்றது .அவருக்காக நானும் பாடல் பகிர்ந்து என் அன்பை என் தளத்தில் சொல்லி இருக்கின்றேன் .இந்தக்கதை எல்லாம் தெரியாது இந்தத்தோழிக்கு !

எப்போதும் கவிதையை அதிகம் நாடும் என் பள்ளிக்காலம் அதனால்  போட்டி என்று பல இடத்தில் முந்திக்கொண்டு நான் போனால். என்னோடு போட்டிக்கு பெண்கள் கல்லூரியில் இருந்து இந்த தோழி வருவா ஒரு காலத்தில். நல்லாக கதை ,கவிதை ,கட்டுரை ,வடிக்கும் ஒரு  திறமையான சங்கீத வித்தகி .தனிமரத்திற்கே சங்கீதம் சொல்லித்தரும் சக நண்பி .இவரின் ஊக்கிவிப்புக்கு நன்றி சொல்ல வாய்ப்புகிட்டவில்லை இன்றுவரை . இந்த  காற்றில் என் கீதம் தளத்தில் இந்தப் பாடலை ரசித்துக்கொண்டே தோழியின் பல  பதிவை படியுங்கள்!http://sutharsshini.blogspot.fr/2011/07/1.html


அங்கிருந்து இந்த கண்டியின் சின்னம்மா இவா மிகவும் தத்துவம் சொல்லுவா. கொஞ்சம் ஜாலியானவா எனக்கு ஆவோக்காவில் கண்டம் என்று சொல்லுவதுடன் இன்னும் ஐராங்கனியை அறிமுகம் செய்யாமல் !எங்க தனிமரம் தவிர்க்குது என்று மாம்பழயூஸ் தந்து கேட்கும் என் பக்கம் பூசார் என்று அன்புடன் நான் சொல்வது அதிரா  அவர்களை!:)))))

அதிகம் புகைப்படம் ,சமையல் கடந்து ,நல்ல பாட்டுக்கள் பகிர்வது எனக்கு அதிகம் பிடிக்கும் அதிராவின் தளத்தில்.http://gokisha.blogspot.fr/2012_06_01_archive.html

காத்து இருங்கள் கதிர்காம கந்தனுக்கு அலகு குத்துவது போல ஆத்துக்காரி குத்துவாள் என் நண்பர்களுடன் சேர்ந்து ஐராங்கனியிடம் ஜொல்லிவிட்ட கதை எல்லாம் சொல்லப்போறன் விரைவில் :)))

அதைச்சொல்லும் போதே இந்த சகோவின் தளத்தில் முரண் தனிமரம் தொடர் தொடர்ந்து எழுதினாலும் !நான் யாரையும் இப்படிச் சொல்லமட்டன் :)))http://riyasdreams.blogspot.com/2012/09/blog-post.html

இவருக்கு தொடர் பிடிக்காது என்றுவிட்டு இப்போது தான் பார்த்த மலையாள சினிமா பற்றி தொடர் எழுகின்றார் :))))ஜாலியானவர்  நல்ல கவிதைகள், சிங்களப்படங்கள் ,தன் ஊர்ப் பெருமைகள் ,உள்ளக்குமுறல் அரசியல் ,என இவர் தளம் உண்மையில் நான் வாழும் உலகம் வாருங்கள் ரியாஸ் உடன் இந்த பாட்டைக் கேட்டவண்ணம்!

அங்கிருந்து போனால் இந்த கவிதாயினி நல்ல பாடலை ரசிக்கலாம் http://rupika-rupika.blogspot.com/2012/12/blog-post_!

இங்கே பல இசை அறிவையும் ,நுணுக்கத்தையும் படிக்கலாம் .எப்போதும் நான் ராஜாவின் இசையின் தாற்பரியத்தை ரசிக்கும் ஒரு ஜீவன் ரவியாதவாஅவரும் பால்நிலாப் பாதையில் போகும் ஒருவர். நம் ரசனையின் ஒரு வழியில் ரசியுங்கள் அவர் தளத்தை.http://raviaditya.blogspot.fr/2011/10/king-of-heavenly-hummings-3.html

அங்கிருந்து இந்த தம்பியிடம் போனால் முதலில் சுடுசோறு கேட்பார் .அரசியல் முதல் அறிவியல் எல்லாம் எழுதும் தம்பிக்கு தொடர் பிடிக்காது என்றாலும் http://www.mathisutha.com/2012/09/blog-post_30.html!



நல்ல பலபதிவுகளை தரும் ஒரு கோபக்கார இளைஞர்  தனிமரம் மீதும் கோபம் தான் தொடர் தொடர்வதால்!ஹீஈஈஈஈஈஈஈஈஈ!எனக்கு சகோதரமொழிபாடல்களும் அதிகம் பிடிக்கும் அந்த தாத்தாவின் பேர்த்தி தான் ஐராங்கனி அவளுடன் ஜொல்லிவிட்டேன் தாத்தாவுக்குத் தெரியாமல் வீதியில் விற்பனை மேலதிகாரியாகி பின் .

இப்போது அவளும் ஒரு குடும்பத்தலைவி என் நண்பனை மணம் முடித்து என்னைப்போல :)))  !ஆனாலும் அந்த பாட்டை ரசியுங்கோஓஓஓஓஓஓஓஓஓஒ!


வரும் தனிமரம் .........

8 comments:

  1. முதல் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  2. இனிய வாழ்த்துக்கள் நேசன்!

    எங்கள் பூஸாரும் இன்று அறிமுகமோ...:) அருமை...:)

    அறிமுகமாகும் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. இரவு வணக்கம்,நேசன்!நலமா?அறிமுகங்கள் அருமை.தெரிவுகளும்!///இன்னும் எவ்வளவு புதைந்து கிடக்கிறதோ?ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
  4. முதல் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    April 12, 2013 at 6:21:00 AM GMT+05:30 //வாங்க் தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  5. இனிய வாழ்த்துக்கள் நேசன்!

    எங்கள் பூஸாரும் இன்று அறிமுகமோ...:) அருமை...:)

    அறிமுகமாகும் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

    April 12, 2013 at 11:21:00 A//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் இளமதி!

    ReplyDelete
  6. இரவு வணக்கம்,நேசன்!நலமா?அறிமுகங்கள் அருமை.தெரிவுகளும்!///இன்னும் எவ்வளவு புதைந்து கிடக்கிறதோ?ஹ!ஹ!!ஹா!!!

    April 13, 2013 at 12:20:00 AM GMT+05:30 //நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துக்கும்!ம்ம்ம் எல்லாம் சொல்ல் முடியாது!ஹீ தனிக்கை இருக்கும் நாட்டில் பிறந்தவன் நான் இல்லையா!ஹீஈஈஈஈஈஈஈஈஈ!

    ReplyDelete
  7. நன்றி நண்பர் தனிமரம் நேசன் வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு...
    :)

    ReplyDelete
  8. நன்றி நண்பர் தனிமரம் நேசன் வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு...
    :)//நன்றி தோழி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது