07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 11, 2013

ஒரு வெளம்பரம்.... நாம வாங்காத அஞ்சு பத்துக்கும் இது தேவை தான்...

ஒரு அருமையான மூன்றாம் பிறை நாளில், என்னை வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க வைத்திருக்கும் வலைச்சரத்திற்கும், ஐயா அன்பின் சீனா அவர்களுக்கும் முதல் நன்றி.. ஆரம்பமே ஏதோ மேடை பேச்சு மாதிரி இருக்கு.. சரி ஒரு ஃப்லோவா போய்ட்டு இருக்கும் போது அப்படியே மெயிண்டெயின் பண்ணுவோம்.. வளர்பிறை என்பது மற்றவர்களுக்கு எபப்டி என்று தெரியாது, சேல்ஸ் வேலையில் இருப்பதாலும் சில வியாபாரிகளைப் பற்றி தெரிந்திருப்பதாலும் சொல்கிறேன், அமாவாசை & மூன்றாம் பிறை நாட்களில் தான் முக்கியமான காரியங்களை ஆரம்பிப்பார்கள்.. சிவகாசிக்காரன் என்கிற ஒரு வலைப்பக்கத்தை வைத்துக்கொண்டு நான் உண்டு, பால் சோறும் பக்கோடாவும் போடும் என் சிவகாசி உண்டு என்று இருந்தவனை, இந்த மூன்றாம் பிறை நாள் கொஞ்சம் உயர்த்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.. ஏதோ சும்மா கிறுக்கிக்கொண்டிருக்கிறோம் என நினைத்துக்கொண்டிருந்தவனிடம், இந்த பொறுப்பை ஒப்படைத்திருப்பது தன்னம்பிக்கையையும் கொஞ்சம் கர்வத்தையும் கூட கொடுக்கிறது..  

சரி, இன்னும் ஆறு நாள் மற்ற பதிவுலக நண்பர்களைப் பற்றியும் அவங்க பதிவுகளைப் பற்றியும் தானே பேசப்போகிறோம்? அதுக்கு முன்னாடி நம்மள பத்தி பேச, நம்ம பதிவப்பத்தி பேச ஒரு சான்ஸ் கிடைச்சா விட்டு வைப்போமா?  என் ப்ளாக்ல நானே பேசுனா, பாசமிகு உடன்பிறப்புகள் “நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவையா?”னு வாரி விடுவார்கள்.. அதனால் கிடைச்ச இந்த சான்ஸை நான் விடவே மாட்டேன்.. 

நான் MBA படிச்சிட்டு இருந்தப்போ, “ஓசிலயே வெப்சைட் மாதிரி ஒன்னு ஆரம்பிக்கலாமாண்டா. நாம நெனைக்குற எல்லாத்தையும் எழுதலாமாம்.. ஒலகத்துல இருக்குற எல்லாரும் படிப்பாய்ங்கலாம்.. நா ஒன்னு ஆரம்பிக்கப்போறேன்”னு என்னிடம் ஒருத்தன் சொன்னான்.. என்னிடம் சொன்னவன் இன்று வரை எதுவும் ஆரம்பிக்கவில்லை.. ஆனால் அவனை பிடித்து நச்சரித்து, கை காலில் விழுந்து, கேண்டீனில் 4,5 சமோசாவும் 7அப்பும் வாங்கி கொடுத்து ப்ளாக்கரில் ஆரம்பிக்கப்பட்டது தான் சிவகாசிக்காரன்.. 

எங்கள் கல்லூரியில் டமில் பேஸ்வத் எல்லாம் இண்டீசண்ட் என்பதால் ஆரம்பத்தில் நான் எழுதிய மொக்கை பதிவுகளை கூட அவர்கள், “வாவ், ராம் யூ ஆர் சோ கிரேட் யார்” என்று பூரித்துப்போய்விட்டார்கள்.. பிறகு தான் தெரிந்தது ஒரு பக்கிக்கும் எதுவும் வாசிக்க தெரியாது என்று.. பிறகு ஒரு சிறு தாமதத்திற்கு பின், என் படிப்பு முடிந்து, வேலை என்னும் பணம் சார்ந்த நிஜ உலகில் வந்த பிறகு தான் எழுத்தை கொஞ்சமாவது புரிந்து எழுதினேன் என்று சொல்லலாம்.. ஆனாலும் அப்போதும் எதை எழுதலாம் எப்படி எழுதலாம் என்றெல்லாம் தெரியாது.. முன்பை விட ஓரளவு தெளிவாக இருந்தேன் என்று சொல்லலாம்..

அந்த மொக்கை காலத்தில் கூட நான் எழுதிய ஒரு உருப்படியான கதை இது.. வழக்கமான முடிவு தான் என்றாலும் எனக்கு கொஞ்சம் டச்சிங்காக இருக்கும் கதை. ஆரம்பத்தில் என் கதைகளில் ராம் என்று என் பெயரை தான் கொடுத்திருப்பேன் பாத்திரங்களுக்கு.. அதில் இருந்த சௌகரியம், என் பெயர் பலருக்கும் தெரியப்பட்டது.. அசௌகரியம், அந்த பாத்திரத்தை கிண்டல் செய்வது போல் என் இமேஜை டேமேஜ் செய்து கிழித்து தொங்க விட்டார்கள் நண்பர்கள்.. “இந்த ராம் பரதேசி இருக்கானே, சரியான பொறம்போக்கு நண்பா.. ஒரு ஃபிகர விட்டு வைக்காம பல்ப் வாங்குறான் பாரேன்” - என்பது கெட்ட வார்த்தை இல்லாத ஒரு  சாம்பிள்.. 

சரி, உங்கள் வீட்டில் எந்த பொருளை ரொம்ப நாள் காத்திருந்து கஷ்டப்பட்டு, ஏக்கத்தோடு எதிர்பார்த்து வாங்கியிருப்பீர்கள்? எத்தனை ஆண்டுகள் அதற்காக காத்திருந்திருப்பீர்கள்? 1 வருசம்? 2? அட்லீஸ்ட் 5 வருசம்? எங்க வீட்ல நானும் என் தம்பியும் 17ஆண்டுகள் ஏக்கத்தோடு காத்திருந்து, பக்கத்து வீடுகளில் அசிங்கப்பட்டு, அடம் பிடித்து ஒரு வழியாக எங்கள் வீட்டிலும் வாங்கிய டிவி பெட்டியின் கதை தான் இது.. ஒரு டிவிக்கு இவ்ளோ பில்ட்-அப்பா என கேட்கலாம்? ஊரெங்கும் இருக்கும் ஒரு விசயம் நம்மிடம் இல்லாமல் இருப்பதன் ஏக்கம் அது.. “என்னது ஒங்க வீட்ல டிவி இல்லையா?” ஆச்சரியத்தோடு இந்த கேள்வியை என்னை பார்த்து கேட்காத ஆசிரியர்களே இல்லை.. 

வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்து சினிமா & அரசியல் பதிவுகள் போடாவிட்டால் நாம் பிரபல பதிவர் ஆக முடியாதே? அதனால் நான் மாய்ஞ்சு மாய்ஞ்சு என் கற்பனையை கொட்டி அரசியலை அதில் மிகஸ் செய்து எழுதிய பதிவு தான் ”நீங்களே சொல்லுங்க”.. கலைஞரின் அப்போதைய அரசியல் ஸ்டண்டுகளை நையாண்டியாக எழுதிய பதிவு.. முதல் முதலாக நான் அதிக டோஸ் வாங்கிய பதிவும் இது தான்.. என்ன செய்வது, அரசியல்வாதிகள் என்றாலே தியாகிகள் தானே?

பின் 2010ம் ஆண்டின் இறுதியில் எங்கள் ஊரின் வரலாற்றை, சிவகாசி கலவரத்தின் பின்னணியாகக் கொண்டு, ஊர் முன்னேறியது போல் இரண்டு உண்மை காய்கறிகளை, கற்பனை மசாலா சேர்த்து எழுதிய கதை தான் வம்சம்.. இன்று சிவகாசி இவ்வளவு பெரிய அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்றால், அதற்காக இந்த மக்கள் பட்ட ஏச்சுக்களும், பேச்சுக்களும், அதில் இருந்து கிடைத்த வைராக்கியமும் தான் இந்தக்கதை.. சிவகாசி கலவரம் பற்றி வேறு யாரும் விரிவாக எழுதியிருந்தால் பின்னூட்டத்தில் இணைக்கவும்.. நான் இதை கதையாக படைத்ததால் நிறைய விசயங்களை சொல்லவில்லை.. ஊரே ஒரு போருக்கு தயாராவது போல் ஆகியிருந்தது.. எனக்கு சிவகாசி கலவரத்தை படிக்கும் போது, ’வந்தார்கள் வென்றார்கள்’ புத்தகத்தில், முகமதியர்கள், ராஜபுத்திரர்கள் மீது படை எடுத்து வந்த போது, அதற்கு ராஜ புத்திரர்கள் தயாரான சம்பவம் தான் ஞாபகம் வந்தது.. யாராவது சிவகாசி கலவரம் பற்றிய பதிவு இருந்தால் கண்டிப்பாக பகிருங்கள்..

நான் கேள்விப்பட்ட, அனுபவப்பட்ட காதல்களால் பெண்களின் மீது வெறுப்பின் உச்சத்தில் இருந்த போது எழுதிய கதை இது.. மிக மிக சீரியஸாக எழுத வேண்டும் என நினைத்தேன்.. ஆனால் என்னால் காதல் கதைகளை எப்போதுமே சீரியஸாக எழுதவே முடிந்ததில்லை (என் முதல் கதை மட்டும் விதிவிலக்கு).. இப்போதும் கூட சில தோழிகள் இதைப் படித்து என்னிடம் சண்டை போடுவதுண்டு.. சில தோழர்கள் ‘அருமை’ என பாராட்டுவதுண்டு.. ஆனால் ஒரு நல்ல நகைச்சுவை கதை என்பதில் மட்டும் மாற்றம் இல்லை.. நான் எழுதியதில் அதிக ஹிட்ஸ் கிடைத்த சிறுகதையும் இது தான்..

2009ல் இருந்து 2011 வரை நான் எழுதியதில் உருப்படியானவை இவைகள் தான்.. இவைகளைக்கூட ரொம்ப கஷ்டப்பட்டு தான் உருப்படியானவை என்று சொல்லலாம்.. எழுத்துக்காக மெனக்கட்டு, விசயங்களை தேடி அலைந்து, தூக்கத்தை இழந்து நான் எழுத ஆரம்பித்தது என்றால் அது 2012 முதல் தான்.. சிறு வயது முதலே எனக்கு சினிமா, அது சம்பந்தப்பட்ட் செய்தி என்றால் மிகவும் விருப்பம்.. எங்களை போன்ற காய்ஞ்ச பூமி ஆட்களுக்கு சினிமா மட்டும் தானே ஒரே பொழுது போக்கு? என் கல்லூரிக்காலம் வரை ரிலீஸ் ஆன முக்கியமான படங்களை, அது ரிலீஸ் ஆன தேதி முதற்கொண்டு ஞாபகம் வைத்திருக்கிறேன் இப்போது வரை.. அந்த ஞாபகங்களையும், அஜித் மீதான என் பார்வையையும் ஒன்றாக கலந்து நான் எழுதிய பதிவு தான் “அஜித்தின் பாப்புலாரிட்டி நீர்க்குமிழியா?”.. இது வரை நான் எழுதிய எந்த ஒரு பதிவும் இது அளவிற்கு ஹிட்ஸ் அடித்தது இல்லை.. இந்த பதிவு, ஃபேஸ்புக், பல கம்பெனி, கல்லூரி குரூப் மெயில்கள், சில பல ப்ளாக்குகளில் காப்பி என்று பல விதங்களில் இன்று வரை சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது.. ஒரு நடிகனுக்காக நான் எழுதிய பதிவு என்று இதை சொல்வதை விட, ஒரு நல்ல மனிதனை பற்றி நான் எழுதிய பதிவு என்று சொல்லலாம்..

கடந்த ஆண்டு செப்டம்பரில் எங்கள் ஊர் பட்டாசு ஆலை ஒன்றில் கோர விபத்து நடந்தது.. நம் மக்களும் மீடியாவும் விபத்துக்கான ஆராய்ச்சிகளில் தங்களுக்கு தெரிந்த யூகங்களை எல்லாம் கிளப்பி விட்டுக்கொண்டிருந்தனர்.. அந்த ஊரில் அலைந்து திரிந்தவன் என்பதாலும், என் அப்பா அது சம்பந்தமான வேலையில் தன் உடலையும் மனதையும் முழுதான அர்ப்பணித்தவர் என்பதாலும், சிவகாசியில் நடக்கும் விபத்துக்களுக்கு என்ன காரணம், அதை எப்படி சரி செய்வது என்பது பற்றி நான் எழுதிய பதிவு இது.. செல்ஃபோன் இல்லாத காலத்தில் எல்லாம், என் அப்பா தாமதமாக வீடு வரும் ஒவ்வொரு திக் திக் மாலையும் சொல்லும், சிவகாசியில் எந்த மாதிரி தொழிலில் நாங்கள் ஈடு பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை.. வீட்டு ஆம்பளை வீடு வந்து சேரும் வரை எதுவும் உறுதி இல்லை..

பின் கலர்க்காதல் என்கிற கதையில் கறுமையாக பிறந்த ஒரு பெண் படும் கஷ்டங்களை எழுதியிருந்தேன்.. இந்தக்கதை நான் பெங்களூருவில் training programல் இருந்த போது எழுதியது.. நான் ஏதோ நோட்ஸ் எடுத்துக்கொண்டிருப்பது போல் நினைத்து விட்டுவிட்டார்கள்.. 

தலைவர் சுஜாதா பாணியில் ஏதாவது எழுதி விட வேண்டும் என்கிற நப்பாசையில், அவர் இறந்து விட்டார் என்கிற தைரியத்தில் நான் எழுதிய சற்றே நீ............................ளமான சிறுகதை தான் “டைம் மிஷின்”.. தலைவர் என்னை சொர்க்கத்தில் கும்பி பாகம் கொடுத்து தண்டிக்கலாம் இந்த கதையை அவர் பாணி என்று சொன்னதற்காக.. ஆனால் நானும் சயின்ஸ் ஃபிக்சன் எழுதிவிட்டேன் என்று காலரை தூக்கி விட்டு கணக்குக்காட்ட ஒரு கதை உள்ளது.. பெர்சனலாக எனக்கு பிடித்த கதை இது..

பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்ட வீடுகளில், அப்பாக்கள் என்னவாகிறார்கள், அவர்களது ஆளுமை என்னவாகிறது என்று கொஞ்சம் சீரியஸாக நான் எழுதிய கதை இது.. நண்பர்கள் பலரும் அவர்கள் வீட்டில் இப்படித்தான் இருப்பதாக வாசித்து விட்டு சொன்னார்கள். எழுதிய என் வீட்டில் எப்படி என்பது என் வீட்டு ரகசியம்.. ஆனால் குடும்பத்தில் இன்று நாம் இவ்வளவு சம்பாதிக்க காரணம் அந்த மனிதரின் உழைப்பு தான் என்பதை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.. அப்பாக்கள் என்றுமே தியாகிகள் தான்..

ஊரில் பார்ப்பதையும், அங்கிங்கு கேள்விப்பட்டதையும், என்றோ எங்கோ படித்ததையும் எழுதியாகிவிட்டது.. லட்சம் லட்சமாக செலவழித்து படித்த MBAவுக்கு பிரயோஜனமாக ஏதாவது ஒன்றை எழுதினால் தானே அந்த படிப்புக்கு மதிப்பு.. நான் இருக்கும் சேல்ஸ் வேலையையும், படித்த படிப்பையும் மிகஸ் செய்து எழுதிய பதிவு தான் “சேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள்”... ஐந்து பாகமாக வந்த இது கிட்டத்தட்ட சேல்ஸ் வேலைக்கு தேவையான எல்லா முக்கிய விசயங்களையும் பேசியது.. மற்ற வேலைகளுக்கும் இதில் கூறியிருப்பது முக்கியம்.. அடுத்து நமது பொருளாதார கொள்கை, அரசியல் திட்டங்கள் எப்படி நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கின்றன என்பது பற்றி எழுதிய பதிவு.. 

படித்த MBAவிற்கும் மரியாதை செய்தாகிவிட்டது என்று பழைய படி மீண்டும் கதைகள் எழுத ஆரம்பித்து விட்டேன்.. கல்லூரிகளுக்குள் நடக்கும் யூத் ஃபெஸ்டிவலில் இருக்கும் நுன் அரசியல் பற்றியும், வயதான நடமாட முடியாத முதியவர்களை போட்டுத்தள்ளுவது பற்றியும் எனது சமீபத்திய கதைகள் அமைந்தன..

கதைகள் எழுதுவது தான் பிரச்சனை இல்லாதது.. யாரும் சண்டை போட முடியாது.. சினிமா, அரசியல், ஜாதி, மதம், என்று எதை எழுதினாலும் உங்களுக்கு எதிர் கோஷ்டி கண்டிப்பாக இருக்கும்.. ஆனால் கதையில் நீங்கள் மட்டும் தான் ஆதரவு கோஷ்டியும், எதிர் கோஷ்டியும்.. அதனால் கதை எழுதுவது என்பது எனக்கு என்னமோ மிக பிடித்திருக்கிறது.. இனியும் பெரும்பாலும் கதைகள் மட்டும் தான் என் பதிவுகளில் இருக்கும்.. ஜாதி, சினிமா, அரசியல் என்றெல்லாம் எழுதி டோஸ் வாங்கியது தான்.. சரி, நம்ம ஒடம்பு கதை எழுதுறதுக்கு தான் லாயக்கி, அடியெல்லாம் தாங்காதுனு சரியான நேரத்தில் முடிவெடுத்து விட்டேன்.. 

சரி இது தான் என்னுரை.. கொஞ்சம் ஓவரா பெருசா போயிருச்சில? அதான் சொல்லிடோம்ல, ஒரு வெள்மபரம்னு? இனி நான் படித்து வியந்த, என்னை எழுத தூண்டிய, நன்கு எழுதும் திறமை இருந்தும் ஊக்குவிப்பு இல்லாமல் சோர்ந்து போயிருந்த, எல்லா துறையிலும் பின்னிப்பெடலெடுத்த பல பதிவர்களை அவர்களின் பதிவுகளை பார்க்கலாம்.. ஒரு சின்ன பிரேக் எடுத்துட்டு வாங்க.. 

21 comments:

  1. அன்பின் ராம்குமார் - சுய அறிமுகம் அருமை - தங்களீன் சிறந்த பல பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள் - அனைத்தையும் சென்று பார்க்கிறேன் - நல்லதொரு துவக்கம் - தூள் கிளப்புக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. நன்றாக கதை எழுதுகிறீர்கள்.அஜித் பற்றிய அலசலும் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  3. ini sivakaasikaararai naanum thodarven..


    vaazhthukkal..

    ReplyDelete
  4. அறிமுகம் அருமை.தொடருங்கள்

    ReplyDelete
  5. 'ரசித்து' எழுதிய சுய அறிமுகம் அருமை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. சேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - அனுபவ பகிர்வுக்கு ஸ்பெசல் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  7. வலைச்சர அறிமுகப்பதிவுகளுக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  8. இன்றுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பூ பார்த்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். வலைச்சரப் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ஆரம்பமே அருமை ராம் குமார்... நீங்கள் குறிப்பிட்ட அத்தனை பதிவுகளையும் நீங்கள் குறிபிடாத பதிவுகளையும் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் வெறும் சிறுகதை என்று உங்கள் எல்லைகளை சுருக்கிக் கொள்ளாதீர்கள். மற்ற தளங்களிலும் இறங்கி விளையாடுங்கள்... கொஞ்சம் அடி விழத் தான் செய்யும் ஆனால் பல புரிதல்களும் தேடல்களும் கிடைக்கும்.

    அதற்காக உங்களை நாளையே அரசியல் குறித்து எழுத சொல்லவில்லை, எழுதும் எண்ணத்தை விட்டுவிடாதீர்கள் என்று சொல்கிறேன்....

    வலைசர வாரத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  10. அருமையான சுய அறிமுகத்துடன் அழகிய தொடக்கம்.... பல பழைய பதிவுகளை அறியத்தந்தமைக்கு நன்றி.. வாழ்த்துக்கள் ராம்குமார்....

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் நண்பரே. கலர்க்காதல் என் பர்சனல் பேவரைட்.

    ReplyDelete
  12. அருமையான சுய அறிமுகத்துடன் அழகிய தொடக்கம்.... பல பழைய பதிவுகளை அறியத்தந்தமைக்கு நன்றி.. வாழ்த்துக்கள் ராம்குமார்

    ReplyDelete
  13. உங்கள் கதை ஏதோவொன்று நான் படித்துப் பின்னூட்டமும் இட்டிருந்தேன். பாசிடிவ் approach கதைகளில் இருக்கட்டும் என்று சொல்லியதாக நினைவு.
    இன்று உங்கள் சுய அறிமுகம் நிறைய பாசிடிவ் approach - உடன் எழுதியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
    மேலும் மேலும் எழுத்துத் துறையில் வளர்ந்து பிரகாசிக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. ராம்.... பெர்சனல் அசத்தல்...

    புதியவர்களை ராமிடம் இருந்து எதிர்பார்கிறேன்...

    ReplyDelete
  15. உங்களின் அனைவரின் பாராட்டிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் கோடி :-)

    ReplyDelete
  16. சிறப்பான சுய அறிமுகம் சார் பணி தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. நீண்ட சுய அறிமுகம்...... சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். மற்றவற்றையும் படிக்க வேண்டும்.....

    வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  18. சிறப்பான அறிமுகம்.

    ReplyDelete
  19. உங்களை அறிமுகபடுத்திய வலைசரதிர்க்கு நன்றி.
    ராம் உங்கள் சிறுகதைகள் சிலவற்றை படித்து சிரித்தேன்.தலைகூத்தல் படித்து...எங்க அப்பா ஞாபகம் வந்துவிட்டது. காட்சியை கண்முன் நிறுத்தும் எழுத்துநடை அட்டகாசம்.பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.ஊக்கமுடன் எழுத வாழ்த்துக்கள் ராம்.

    ReplyDelete
  20. அருமை ராம்குமார்.
    அனேகமாக உங்களது எல்லா பதிவுகளும் படித்திருப்பேன். விட்டுப் போனவைகளை தேடி படிக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது