07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 11, 2014

புதிர் பக்கங்கள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.





மூளை தன்னை
முடங்க  விடாதே
முயற்சித்துப் பார்ப்போம்
முனைப்பாய் புதிர்களையே !

புதிர்கள் நமக்கு நல்ல பொழுதுபோக்காகவும், நல்ல சிந்திக்கும் திறனை  வளர்க்கவும் பேருதவி புரிகின்றன. இன்று  நம்முடன் புதிர்களை பகிர்ந்து கொண்டு, நம்மையும் சற்று சிந்திக்க செய்யும் சில பதிவுலக நண்பர்களை காணலாம்.

1. திரு. முத்து சுப்ரமணியம் ஐயா அவர்கள் தனது முத்துவின் புதிர்கள் பக்கத்தில் பலவிதமான புதிர்களை வழங்கி வருகிறார்.

குறுக்கெழுத்துப் புதிர் , கலைமொழி புதிர், சொல்கலை புதிர் என்ற பலவகையான புதிர்களை இவர் வழங்குகிறார். புதிர்களை விடுவித்து மகிழ்வோமே !


2. திரு. யோசிப்பவர் அவர்கள் தனது யோசிங்க தளத்தில், வார்த்தை விளையாட்டு, புதிர்கள், குறுக்கெழுத்து புதிர்கள், வார்த்தை தேடல் விளையாட்டு, கலைமொழி புதிர் என்று பலவகையான புதிர்களை வழங்குகிறார். இவையனைத்தும் நம் மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

3. திரு. நாகராஜன் அவர்களது புதிய வலைப்பூ  தமிழ் புதிர்கள்.
 குறுக்கெழுத்து புதிர்கள்  வழங்கி வருகிறார்.

4. திரு. இராம் மலர் அவர்கள் தனது  வலைப்பூவில் பொது அறிவுப் புதிர் கேள்வி பதில்களை பகிர்ந்து வருகிறார்.

5. திரு. இராமராவ் அவர்கள் தனது திரைக்கதம்பம் வலைப்பூவில் திரைக் கதம்பம் மலர் மற்றும் திரை குறுக்கெழுத்து புதிர்களை வழங்கி வருகிறார்.

6. திரு. பார்த்தசாரதி அவர்கள் தமிழ் குறுக்கெழுத்து புதிர்கள் மற்றும் சொல்கலை, சொல்லடுக்கு புதிர்களை வழங்கி வருகிறார்.

7. மூங்கில்காற்று தளத்தில் எழுதி வரும் திரு. டி. என். முரளிதரன் அவர்களின் இந்தப் புதிர்களையும் பாருங்களேன்.


8. சீனுவாசன் பக்கங்கள் தளத்தில் திரு. கு. சீனுவாசன் அவர்கள் எந்த 
வருடமாயினும், அந்த வருடத்தின் எந்தத் தேதியாயினும், அதற்கான கிழமையைக் கண்டறிய  மிக எளிமையான வழி ஒன்றை சொல்கிறார் பாருங்கள்.

9. ஒரு பக்கம் தளத்தில் ஸ்ரீதர் நாராயணன் அவர்கள் ரீபஸ் புதிர் மற்றும் சொற்சித்திரப் புதிர்கள் வழங்கி இருக்கிறார். புதிர்களை விடுவிப்போம் வாருங்கள். 

10. தினேஷ் குமார்  அவர்கள் தனது முகிலனின் பிதற்றல்கள் தளத்தில் குறுக்கெழுத்து, சொல்கலை, ரீபஸ் புதிர்களை வழங்கியுள்ளார். 

நண்பர்களே, இன்றைய அறிமுகங்களின் பதிவுகளை  வாசித்து ஊக்கம் அளிப்போம்.



நல்லதொரு  வாய்ப்பினை   அளித்த  திரு. சீனா ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
கடந்த ஒருவார காலமாக, எனக்கு தங்களது மேலான ஆதரவை  அளித்த அன்பு  நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அறிமுகமான நண்பர்களுக்கு தகவலை உடனுக்குடன் தெரிவித்து பேருதவி புரிந்த திரு. திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கள், 
திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், நண்பர் திரு. ரூபன் அவர்கள்  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


31 comments:

  1. தமிழ்முகில்,

    இன்றும் வித்தியாசமான பதிவாகக் கொடுத்துள்ளீர்கள். இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    இந்த ஒரு வாரகால‌ ஆசிரியர் பணியை சிறப்பாக முடித்திட்ட தங்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  2. மிகவும் அருமையாக புதிர் பதிவோடு தங்களது பணியை முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  3. மூளைக்கு வேலை தரும் தளங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான கருத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  4. வணக்கம்
    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு எனது வாழ்த்துக்கள்பதிவின் பக்கம் சென்று வருகிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

      Delete
  5. புதிராகவும் சவாலாகவும் இருக்கக்கூடிய வலைச்சரப்பணியை புதுமையாகவும் புத்துணர்ச்சியுடனும் பொறுப்புடனும் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கும் வாழ்த்துகட்கும் மேலான ஊக்கத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

      Delete
  6. //அறிமுகமான நண்பர்களுக்கு தகவலை உடனுக்குடன் தெரிவித்து பேருதவி புரிந்த திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.//

    ஒரே ஒருநாள் மட்டும் இதனை என்னால் செய்ய முடிந்தது. அதுவும் ‘கோலங்கள்’ பற்றிய பதிவுகள் என்றதால், கோலங்கள் என்கிற ஆர்ட் வொர்க் மீது எனக்குள்ள தனி ஈடுபாட்டினால், அனைத்துத் தளங்களுக்கும் ஓர் விஸிட் கொடுத்து, அங்குள்ள கோலங்களையும் ரஸித்துவிட்டு, அப்படியே அவர்களுக்கு வலைச்சர இணைப்பினையும் தெரிவித்து பாராட்டி வாழ்த்தி வந்தேன்.

    மற்றபடி இதையெல்லாம் தினமும், மற்ற சிலரைப்போல ஓர் சேவையாகச் செய்ய நமக்கேது நேரம்?

    என் அந்த ஒரு நாள் சேவையையும் நினைவு கூர்ந்து தாங்கள் இங்கு நன்றி சொல்லியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  7. இந்த வாரத்தின் ஆசிரியர் பணியை சிறப்பாக செம்மையாக -
    நிறைவு செய்த தங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
    வாழ்க.. நலம்!..

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  8. அறியாத சில தளங்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. பதிவுகளைத் தாமதமாகக் காணமுடிந்தது. சிறப்பான பதிவுகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  10. புதிர்கள் சிலதளங்கள் புதுமை பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  11. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. இனிமையாக இந்த வாரம் ஆசிரியர் பணி சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் பல சகோதரரே.

      Delete
  13. எனது வலைப் பதிவையும் அறிமுகப் படுத்தியமைக்குநன்றி,
    ஒரு வாரப் பணியை மிக சிறப்பாக செய்திருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete
  14. வித்தியாசமான தளங்கள். அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  15. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே .

    ReplyDelete
  16. நன்றி !!!
    -

    ReplyDelete
  17. நன்றி..
    -
    அ.இராமநாதன்
    http://rammalar.wordpress.com

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது