07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 28, 2014

கவிதை அரங்கேறும் நேரம்

இனி மின் வெட்டு இல்லை
என்றோர் தலைப்புச் செய்தி.

ஆதவன் வந்திடாத
முன் காலைப் பொழுதில்

இருளும் புழுக்கமும்
சூழ்ந்த அறையில்

கொட்டும் வியர்வையில்
கண்களைச் சுருக்கி

படித்து முடித்தேன்
அச்செய்தியை.

இப்போது இங்கே
மின் வெட்டு.

இன்றைக்கு சங்கப் பணியாக விருத்தாசலம் செல்லவுள்ளதால்
காலையிலேயே  பதிவெழுதிடலாம் என்றால் ஐந்து மணிக்குப் 
போன மின்சாரம் இப்போதுதான் வந்தது.

பக்கம் பக்கமாக பேசுவதை விட பத்து வரி கவிதை மூலம்
உணர்வுகளை வெளிப்படுத்துவது எளிமையானது. வலிமையானது.

இன்றைய களம் கவிதை.

இயற்கையின் சுழற்ச்சியாய் வருவதை தீட்டு என்று சொல்லி
மூன்று நாட்கள் ஒதுக்கி வைப்பதைக் கண்டு அறச்சீற்றத்துடன்
தேனம்மை லட்சுமணன் இங்கே கொதித்துள்ளார்.

தன் வாழ்வை பணயம் வைத்து நமக்கு சோறிடும் விவசாயியின்
வலியை இனியவன் இங்கே அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
மணமக்களை வாழ்த்திய ஒரு கவிதையையும் கூட நீங்கள்
பார்க்கலாம்.

ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறாததால் உருவான கோபத்தில்
பொங்கியுள்ளது மோகனன்.

உங்கள் கவிதைகளை பகிர்ந்து கொள்ளும் நல்லதொரு தளமாக 
லங்காஸ்ரீ கவிதைகள் உள்ளது. அதிலே பாலையும் தண்ணீரையும்
பிரித்துக் கொள்வது உங்கள் பொறுப்பு. அங்கே சென்றால் உங்களுக்கே
காரணம் புரியும்.

இந்தியா அதிர்ந்த நிர்பயா சம்பவத்தின் வேதனையை, வலியை,
அரசுகளின் அலட்சியத்தை கண்டு தோழர் இரா.தெ.முத்து
எழுதிய கவிதை இது. நிலைமை இன்னும் மாறவில்லை என்பது
பெருந்துயரம்.

அதே புதுடெல்லியில் காரணமே இல்லாமல் கொல்லப்பட்ட
வட கிழக்கு மாநில இளைஞனின் வேதனையை இங்கே 
கவின்மலர் கொட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் எனக்கு நிகழ்ந்த ஒரு அனுபவம் கவிதை
வடிவாக.

தென்றல் வலைதளத்தின் ஒரு அழகிய காதல் கவிதையோடு 
விடை பெறுகிறேன்

சரி, நாளை சந்திப்போம்

 

 


15 comments:

  1. இனி மின் வெட்டு இல்லை என்றோர் தலைப்புச் செய்தி!..

    - அந்த நாளும் வந்திடாதோ!?..
    இனிய பதிவில் நிறைய தெரிந்து கொண்டேன்.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வரும் என்கிற நம்பிக்கை குறைந்து கொண்டெ வருகிறது

      Delete
  2. கவிதையுடன் அருமையான கவிஞர்களை
    அறிமுகப்படுத்திய விதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எல்லாருமே நல்லா கவிதை எழுதுறவங்க. அதனால அசத்தாம இருப்பாங்களா? கலக்கல்..

    ReplyDelete
  4. கவிதை எழுதும் பதிவர்களின் அறிமுகம் - சிலர் தொடர்ந்து படிப்பவர்கள்.....

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. கவிஞர்களின் அறிமுகத்தை ஒரு கவிதையோடு ஆரம்பித்த விதம் அருமை.
    மீண்டும் நாளை...

    ReplyDelete
  6. அட... அனைத்தும் தோறும் தளங்கள்... அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இன்று முதல்
    மின்வெட்டு கிடையாது.
    பேட்டரியின் சக்தியில்
    பதிவு செய்த
    வார்த்தைகள் இது

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது