07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 8, 2014

பயன்தரும் வீட்டுத் தோட்டம்

மண்ணை  முட்டி மோதி
தலையெடுக்கும் விதை
ஒவ்வொன்றுமே -
நம்பிக்கையின் சாட்சி !
துளிர்க்கும் ஒவ்வோர் இலையும்
மொட்டவிழ்த்து மணம் பரப்பும்
வண்ண மலர் ஒவ்வொன்றும்
கண்களுக்கு விருந்தாக்குமே 
எழில் கொஞ்சும்
இயற்கை காட்சி !


வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம், நமது அன்றாட தேவைக்கான காய்கறிகள், கீரைகளை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும். இன்று விவசாயத்திற்கு , பல வகையான பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்களை பயன்படுத்துகிறோம். நாம்  அன்றாடம் உண்ணும் உணவுகளில் எவ்வளவு இரசாயனங்கள் கலந்திருக்கின்றன என்பது நமக்கே தெரியாது. இயற்கையான முறையில் வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம் நம் அன்றாடத் தேவைக்கான காய்கறிகளை, இயற்கை முறையில், சத்து நிறைந்த காய்கறிகளை நாமே விளைவித்துக் கொள்ளலாம்.

வீட்டுத் தோட்டம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, நமக்கும் தோட்டம் அமைக்க உதவி புரியும் வலைப்பூக்கள் சிலவற்றை இன்று  பார்க்கலாம்.


1. சகோதரி மகி அவர்கள் தனது தளத்தில் புதினா மற்றும் கத்தரிக்காய் அறுவடை பற்றி சொல்லி இருக்கிறார் பாருங்களேன்.

இவரது வெந்தயக் கீரை வளர்ப்பு பற்றிய பயனுள்ள பதிவையும் பாருங்களேன்.

2. பருப்புக் கீரை வளர்க்க நமக்கு நல்ல யோசனை சொல்கிறார் சகோதரி சித்ரா சுந்தர் அவர்கள்.

மீழ் சுழற்சி முறையில் கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி என்றும்  சொல்கிறார் பாருங்களேன்.

3. மணத்தக்காளி / சுக்கட்டி கீரை வளர்த்த மற்றும் அறுவடை செய்த அனுபவத்தை தோழி  இமா க்றிஸ்  சொல்கிறார். வாருங்களேன் கேட்போம்.

செடிகள் நம்முடன் பேசும். தெரியுமோ ?  தன்  வீட்டு ரோஜா செடிகளுடன் தனக்கு இருக்கும் பிணைப்பைப் பற்றி இங்கு சொல்கிறார்.

4. வீட்டில் தோட்டம் போட இடமில்லையா ? கவலையே வேண்டாம். மொட்டை மாடியில் கூட அழகான பயன் தரும் தோட்டம் அமைக்கலாம் என்று சொல்கிறார் சிவா அவர்கள்.

இவர் கோவைவாசி ஆதலால், கோவையில் விதைகள் மற்றும் உரங்கள் எங்கு வாங்கலாம் என்ற விபரத்தையும் நமக்கு வழங்குகிறார். பயன்படுத்திக் கொள்வோமே.

5. சகோதரர் இளங்கோ அவர்கள் அவரது வீட்டுத் தோட்டத்தில் விளைந்திருக்கும் அற்புதமான செவ்வாழை மற்றும் கற்பூரவள்ளி வாழைப்பழம் பற்றி சொல்லி இருக்கிறார்.

இவரது வீட்டில் வளர்ந்த சேனை மற்றும் பாகல் பற்றிய பதிவு, அழகான புகைப்படங்களுடன்.

6.  குப்பைவண்டி தளத்தில்   தொங்கும் தோட்டம் அமைக்கும் முறை  குறித்து விளக்கி  இருக்கிறார்கள், பாருங்களேன்.

மண் புழுக்களின் மகத்துவம் பற்றி நாம் அறிவோம். அவற்றை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க இயலாதவர்கள், மொட்டை மாடியில் கூட வைத்து வளர்க்கலாம் என்கிறார். மண் புழுக்களை வளர்த்து உரம் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

7. நம்மவூர் குலசை தளத்தில் சகோதரர் முகமது சுல்தான் அவர்கள் காய்கறி தோட்டம் அமைப்பது எப்படி?  என்று விளக்குகிறார்.

8. வீட்டுத் தோட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமானவை குறித்து தெரிந்ததும் அறிந்ததும் தளத்தில் சகோதரர் சின்னப்பயல் அவர்கள் விளக்குகிறார்.

9. நண்பன் தமிழ் வலைப்பூவில் தோட்டத்தில் வளர்க்கக்கூடிய பொதுவான 10 செடிகள்  பற்றி சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள். வளர்த்துப் பயன் பெறுவோம்.

10.  வீட்டில்  அவசியம் இருக்க வேண்டிய ஒரு மூலிகைச்செடி துளசி.
என்று துளசியின்  பல்வேறு பயன்களையும், அவை குணமாக்கும் நோய்கள் பற்றியும் உமா அவர்கள் சொல்கிறார் பாருங்கள்.

11,  தோட்டத்திற்கு வரும் விருந்தினர்களை  திருமதி பக்கங்கள் தளத்தில் சகோதரி கோமதி அரசு  அவர்கள்  புகைப்படத்தினுள் பிடித்து நமக்கு காண்பிக்கிறார் பாருங்கள்.

12. உருளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, காய்கறி விதைகளை விதைக்கும் முறை, கொடிகளுக்கு பந்தல் போடும் முறை என்று பல விஷயங்களை இங்கு விளக்கிச் சொல்கிறார்  மனதோடு மட்டும் தளத்தில் எழுதி வரும் சகோதரி கௌசல்யா ராஜ் அவர்கள்.


இன்றைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.


மீண்டும்  நாளை,  வேறு  சில பதிவர்களுடன்  உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.

நன்றி !!!

37 comments:

  1. தமிழ்முகில்,

    வீட்டுத் தோட்டம் பற்றிய இன்றைய பதிவில் பல தளங்கள் தெரிந்தவை, சில தெரியாதவை. எல்லோருடைய தோட்டமும் எப்படி இருக்குன்னு போய் பார்க்கிறேன். தேடிப்பிடித்து பகிர்ந்துகொண்டதற்கு நன்றிங்க.

    என்னுடைய தளத்தினையும் இங்கே அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி. இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பாருங்கள் சகோதரி.

      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  2. வணக்கம்

    இன்றைய வலைச்சர அறிமுகங்கள்அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete
  3. தமிழ்முகில், நன்றிங்க! :)

    பகிரப்பட்ட மற்ற தளங்களைப் பார்க்க முயற்சிக்கிறேன், அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  4. தேடி வந்து தகவல் தந்த திரு.ரூபன் அவர்களுக்கும் நன்றிகள்! :)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ரூபன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete

  5. வணக்கம்!

    தோட்டக் கலையைத் தொகுத்துப் படைத்துள்ள
    நாட்டம் அறிந்து நவில்கின்றேன்! - கோட்டமென
    வண்ண வலைச்சரம் ஓங்கி ஒளிா்கிறது!
    தண்ணம் தமிழைத் தாித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  6. இயற்கையான முறையில் வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம் நம் அன்றாடத் தேவைக்கான காய்கறிகளை, இயற்கை முறையில், சத்து நிறைந்த காய்கறிகளை நாமே விளைவித்துக் கொள்ளலாம்.//

    நன்றாக சொன்னீர்கள். நம் வீட்டில் விளைந்த காய்கள், பழங்கள், பூக்கள் என்றால் அதில் அளவில்லா மகிழ்ச்சி ஏற்படும். அங்கு வரும் விருத்தினர்களால் மேலும் ஆனந்தம் தான்.

    இன்றைய வீட்டுத்தோட்டப் பதிவில் என்னுடைய பதிவும் இடபெற்றது மகிழ்ச்சி, நன்றி.
    சில பதிவர்கள் தெரிந்தவர்கள் மற்ற பதிவுகளை படித்து மகிழ்கிறேன் . இன்று இடம்பெற்ற பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ரூபன் அவர்கள் வாழ்த்துக்களுடன் தகவலை தந்தார் , ரூபனுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் சகோதரி.

      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  7. எனது வலைதள அறிமுகத்திற்கு நன்றி. மற்றவர்களின் தோட்டம் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கொடுத்ததற்கு நன்றி - 'தோட்டம்' சிவா

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete
  8. ரூபன் அவர்கள் தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ரூபன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  9. Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் சகோதரி.



      Delete
  10. இன்றைய தளங்கள் பயனுள்ள தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா.

      Delete
  11. பசுமையான தளங்களின் அறிமுகங்கள்..

    பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  12. நம் வீட்டுத் தோட்டத்தில் - நாம் பார்த்துப் பார்த்து வளர்க்கும்
    ஒவ்வொரு செடியும் கொடியும் நமது பிள்ளைகளைப் போன்றவையே!..

    இன்றைய அறிமுக தளங்கள் அனைத்தும் - வீட்டுத் தோட்ட ஆர்வலர்களுக்கு அரிய விருந்து.

    பயனுள்ள தளங்களை வழங்கியமைக்கு மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஐயா. ஒவ்வோர் நாளும் அவற்றின் வளர்ச்சியைக் காணக் காண மனதில் உற்சாகம் பிறப்பது நிச்சயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  13. வலைதள அறிமுகத்திற்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

      Delete
  14. அன்புடையீர்,

    வணக்கம்.

    நம் வீட்டில் விளைந்த காய்கள், பழங்கள், பூக்கள் என்றால் அதில் அளவில்லா மகிழ்ச்சி ஏற்படும் என்பதே உண்மை.

    வீட்டுத்தோட்டங்கள் பற்றிய அருமையான பசுமையான அறிமுகங்களுக்கு என் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    இன்று தங்களால் அடையாளம் காணப்பட்டுள்ள வலைத்தளப் பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஐயா. வீட்டில் வளர்க்கும் செடி கொடிகளும் நம்முள் ஒருவராக ஆகிப் போகின்றன.

      தங்களது அன்பான பாராட்டுதல்கட்கும் நல்வாழ்த்துகட்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  15. பல தளங்கள் எனக்குப் புதியவை. அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

      Delete
  16. அருமையான பகிர்வு தமிழ் முகில் ..பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .
    நாமே நமக்கு தேவையானவற்றை வீட்டில் வளர்த்து பயன்பெறுவது மிக நல்லது

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோதரி.

      தங்களது அன்பான பாராட்டுதல்கட்கும் நல்வாழ்த்துகட்கும் நன்றிகள் பல சகோதரி.

      Delete
  17. வீட்டுத்தோட்டம் பகிர்வு அருமை.இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

      Delete
  18. ரொம்ப சூப்பரான அறிமுகங்கள்,. நாங்களும் சென்னையில் இருந்தவரை முன்பு வெந்தயம் கொத்துமல்லி, பட்ரோஜா, மருதாணி போன்றவை வைத்திருந்தோம. நம் வீட்டில் விளைந்தததாக இருந்தால் அது ஒரு சந்தோஷம் தான்.
    .http://samaiyalattakaasam.blogspot.ae/2014/05/blog-post.html

    ஜலீலாகமால்

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோதரி.

      ஒவ்வொரு செடியும் கொடியும் வளர்வதைப் பார்க்கப் பார்க்க நிச்சயம் மனதுள் புது உற்சாகமும் புத்துணர்வும் பிறக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது