07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 15, 2014

தொழில்நுட்ப பதிவர்கள்


புதிதாக வலைப்பூ எழுதும் அனைவருக்கும் திரட்டி இணைப்பை எப்படி செய்வது மற்றும் வலைப்பூ வடிவமைப்பை எவ்வாறு மாற்றுவது என தெரியாது . அப்படியே இணைய தளத்தில் ( ஆங்கிலத்தில் )  நாம் பார்த்தாலும் நம்மால் முழுமையாக அதை செய்திட முடியாது. வலைப்பூ சம்பந்தமான மற்றும் அணைத்து தொழில்நுட்ப விஷயங்களை  பல  தமிழ் வலைப்பூ தோழர்கள் நம் தாய் மொழி வழியாகவே சொல்லித்தருகிறார்கள். நான் வாசிக்கும் சில தொழில்நுட்ப வலைப்பூக்கள் பற்றி இந்த பதிவில் கூறுகிறேன்..  

 அண்ணன் சூர்யா 2009 முதல் தொழில்நுட்ப பதிவு எழுதி உள்ளார் . 2012 முதல் அவர் எழுதுவது இல்லை .. காரணம்  என்ன என்று தெரியவில்லை .. எனது ஆய்வறிக்கை தயார் செய்யும் போது மிகவும் உதவியாக இருந்தார் . அனைவரும் நாம் பொதுவாக ஜிமெயில் வைத்திருப்போம் . இவரின் மின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க - GMail Backup மிக உதவியாக இருக்கும் என நம்புகிறேன் .

ப்ளாக்கர் நண்பன் : அண்ணன் அப்துல் பாஷித், இவரை தெரியாத பதிவர்களே இல்லை. பிட் பைட் மெகாபைட் மிக பயனுள்ளது .
 
பொன்மலர் : பொன்மலர் அக்கா எழுதியதில் என்னை கவர்ந்த மற்றும் மிக உதவியுள்ள பதிவுகள் அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள் , எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் .  அக்காவின்  வலைப்பூ ஹேக் செய்யப்பட்டுவிட்டது.அதனால் தற்பொழுது தகவல் அதிகமா இல்லை .
 
சிம்மன்  தொழில் நுட்ப வல்லுனர் .. இவரின் வலைத்தளம் ஒரு அமுத சுரபி .. அறியாதவை அனைத்தையும் அறிந்து கொள்ளவும் , தெரியாததை தெரிந்து கொள்ளவும் உதவும் .
 
வேலன் ஜி தளம் மிக பயனுள்ளது . சுமார் 700 கட்டுரை எழுதி உள்ளார் ..

கற்போம்: பிரபு கிருஷ்ணா அவர்களின் தளம். கற்போம் என்ற தொழில் நுட்ப மாத இதழ் தருகிறார் . சமீபத்தில் விகடனில் அவரின் கட்டுரை வந்தது ..


- ராஜா 

என்னால் பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்க இயலவில்லை. நண்பர்கள் யாராவது இணைத்து விடுங்கள் . மன்னிக்கவும்
 
 


12 comments:

 1. அன்புடையீர்..
  தொழில் நுட்ப பதிவர்களின் அறிமுகம் அருமை.
  அனைத்தும் பயனுள்ள தளங்கள்..
  அறிமுக நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. தொழில்நுட்ப பதிவர்கள் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி.பதிவை தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்.

  ReplyDelete
 3. பிரபு கிருஷ்ணா, அப்துல் பாசித் ஆகியோர் என் இனிய நண்பர்கள். ஆனால், பிரபு கிருஷ்ணா அவர்களின் கட்டுரை விகடனில் வெளிவந்தது கூடத் தெரியாமல் நான் இருந்திருக்கிறேன். தகவலுக்கு நன்றி!

  தொழில்நுட்ப வலைப்பூக்களுக்கென்றே ஒரு தனித் தானியங்கித் திரட்டி கூட இருக்கிறது ராஜா அவர்களே! பார்க்க: http://www.nutpamthiratti.blogspot.com/

  ReplyDelete
 4. இந்தப் பதிவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட நுட்பங்கள் நிறைய..

  ReplyDelete
 5. தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 6. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 7. வணக்கம்
  பயனுள்ள தளங்களை அறிமுகம் செய்துள்ளீர்கள் அறிமுகங்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

 8. வணக்கம்!

  பொன்மலை போன்றொளி மின்வலை பின்னிட
  நன்வலை தேடி நவின்றுள்ளீா்! - இன்கவி
  சாற்றும் இனியதமிழ் தாசன்யான் வாழ்த்துகிறேன்
  போற்றும் புகழைப் புனை!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 9. தொழில்நுட்ப வலைப்பூக்களுக்களின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 10. மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 11. சிறந்த பயனுள்ள பகிர்வு

  ReplyDelete
 12. பயனுள்ள தகவல்கள்.... அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது