07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 27, 2014

கோச்சடையான் - முடிவாக சொல்வது என்ன?

மக்களவைத் தேர்தல், ராஜபக்சே வருகை போன்றவற்றை விட 
பரபரப்பாக இணையத்தில் விவாதிக்கப்படுகிற ஒரு விஷயத்தைப்
பற்றி இங்கே பார்ப்போம்.

முன்னெல்லாம் ஒரு திரைப்படம் வெளி வந்தால் அதற்கடுத்த
வாரப் பத்திரிக்கையில்தான் விமர்சனம் படிக்க முடியும். ஒரே
நாளில் நான்கைந்து படங்கள் வெளியானால் அவை தியேட்டரை
விட்டு வெளியேறியதற்குப் பின்பு கூட விமர்சனம் வரும்.

இப்போதெல்லாம் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே முகநூலில்
உடனடியாக ஸ்டேட்டஸ் வந்து விடுகிறது. அன்றிரவே வலைப்பக்கத்தில்
பிரித்து மேய்ந்து விடுகிறார்கள்.  சமீபத்தில் ஒரு படம் பார்த்துக் கொண்டு
இருக்கும் போதே "மரண மொக்கை, மாட்டிக் கொண்டோம்" என்று
என் மகன் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தான்.

வரும், ஆனா வராது என்ற வடிவேலுவின் காமெடிக்கு இலக்கணமாக
திகழ்ந்த கோச்சடையான் பற்றி நம்ம பதிவர்கள் போட்டுள்ள
விமர்சனம் பற்றி பார்ப்போம்.பிளேடிபீடியாவில் கார்த்திக் சோமலிங்கம் சொல்வது "உயிரற்ற பொருட்கள், உயிரோட்டத்துடன் தத்ரூபமாக இருக்கின்றன - இதற்காகவே இப்படத்தைப் பார்க்கலாம்! ஆனால், உயிருள்ள ஜீவன்கள் தான் உயிரற்று பரிதாபமாக நடமாடுகின்றன!"

தமிழ் சினிமாவுக்குபுதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அது நிஜ உருவங்களை நிழலாமட்டுமே காட்டுகிறது என்பது இன்றைய வானத்தின் அழுத்தமான 
கருத்து.

அவதாருக்கும் கோச்சடையானுக்கும் பெருமை தரக் கூடிய ஒரு ஒற்றுமை.. இரண்டு படங்களையுமே முதல் முறை திரையரங்கில் பார்க்கும்போது கிளைமாக்ஸ் காட்சியில் நான் தூங்கிவிட்டேன்.. ஹிஹிஹி என்று நம்மை சிரிக்க வைக்கிறார் கோவை ஆவி

மேக்கப் என்ற பெயரில் மாவுக்கலவையை முகத்தில் பூசிக்கொண்டு, சின்ன உடலில் பெரிய தலையோடு நடிப்பது புதிய முயற்சி என்றால், கொஞ்சம் எசக்குபிசக்காக, தொழில்நுட்ப ரீதியில் ரொம்பவே மொக்கையாக இருந்தாலும், கோச்சடையானில் ரஜினி செய்திருக்கும் motion capture முயற்சியை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.  மொத்தத்தில் ஆகச்சிறந்த படமெல்லாம் இல்லை என்றாலும் மொக்கைப்படமும் இல்லை.  கேலி கிண்டல்களை எல்லாம் உடைத்து நல்ல பொழுதுபோக்கு படமாகத்தான் வெளிவந்திருக்கிறது கோச்சடையான். கண்டிப்பாக அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். பார்க்கலாம் என கமலைக் கொஞ்சம் நக்கலடித்து ரஜனியை பாராட்டுகிறார்      டான் அசோக்

கோச்சடையானின் ஸ்டன்ட் காட்சி உண்மையில் கலக்கல் கிராபிக்ஸ் தான். வாழ்த்துக்கள் சவுந்தர்யா. அடுத்து ராணாவின் காட்சி. க்ளைமாக்ஸ் காட்சி பயங்கர அப்ளாஸ் மழை.. ரஜினியின் ஒவ்வொரு பஞ்சும் கத்தி கூர்மையாய் வந்து விழுகிறது.. படத்தில் குறிப்பிட்டு சொல்ல கூடிய வசனங்களும் நிறைய.. என்பது ஹாரியின் கருத்து

எம்.ஜி.ஆர்.-சிவாஜியை போல் வயதானவராக இருந்து இளைஞனாக வேடம் போடும் முறையை தாண்டி; அடுத்தக் கட்ட வளர்ச்சிப்போல், இன்றைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு வயதான நோயாளி நடிக்காமலேயே இளம் மாவீரனைப் போல் மாயாஜாலத்தில் மக்களை ஏமாற்றலாம் என்கிற முறை மிக மோசமான முன் உதாரணம் என்று வே.மதிமாறன் கண்டிக்கிறார்.

ஆசியாவின் முதல் மோஷன் கேப்சரிங் திரைப்படத்தைவிட நிக்கில்டன் சேனலில் வரும் நிஞ்சா ஹட்டோரி சூப்பராக சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒருவேளை நிஜ ரஜினியையே வைத்து கே.எஸ்.ரவிக்குமார் ராணாவை இயக்கியிருந்தால் வேற ரேஞ்சுக்கு போயிருக்கலாம். அறிமுக இயக்குனர் சிம்புதேவனுக்கே ஒரு வரலாற்றுப் படத்தில் ரிஸ்க் எடுக்கும் தில் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாருக்கு ஏன் அச்சமென்று தெரியவில்லை. புதிய டெக்னாலஜியை அறிமுகப்படுத்தும்போதே அதை ரொம்ப டம்மியாக கொண்டுவந்தால், அந்த தொழில்நுட்பம் மீதே ரசிகர்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும். இந்த மாதிரி வேலைக்கெல்லாம் கமல்தான் சரிபட்டு வருவார். வெகுஜன ரசிகனுக்கு புரியாதவாறு அறிவுஜீவித்தனமாக எதையாவது செய்து கையை சுட்டுக் கொண்டாலும் கலக்கலாக புது டெக்னாலஜியை எஸ்டாப்ளிஷ் செய்வார்
என்று டான் அசோக்கிற்கு முற்றிலும் மாறான கருத்துக்களை முன்வைப்பது புதிய தலைமுறை யுவகிருஷ்ணா 

சரி முடிவாக என்ன சொல்வது?

அதற்கு முன்பாக எனது வலைப்பக்கத்தில் பதிவு செய்ததை
இங்கே பகிர்கிறேன்.
 
படத்திற்குப் போக
பணம் கேட்ட மகனிடம்
"பரிட்சைக்கு போகும் போதே
படம் பார்க்கும் திட்டமா?"
உரத்த குரலில்
திட்டத்தான் ஆசைப்பட்டேன்.
பரிட்சை முடியும்
முதல் நாளே
படம் பார்க்க பரவசப்பட்டு
பரிட்சையை கோட்டை விட்ட
கதை மறந்தாயா நீ
என மனசாட்சி
என்னைக் குட்ட
பணத்தை அளித்தேன்
மௌனமாக.
 
அவன் இன்று சென்றது கோச்சடையானுக்குத்தான். 
 
அவனிடம் கேட்டேன். "நோ கமெண்ட்ஸ்" என்று நழுவி விட்டான்.
 
என் மனைவியின் தங்கை மகனும் போயிருந்தான். அவனிடமும்
கேட்டேன். 
 
"செமையா இருக்கு. சூப்பர், சான்சே இல்லை" என்றெல்லாம்
வர்ணித்தான். 
 
ஆக டெக்னாலஜி, திரைக்கதை, இயக்கம் இது பற்றியெல்லாம்
தெரியாத, கவலைப்படாத நான்காம் வகுப்பு போகும் பசங்களுக்கு
பிடிக்கிறது.
 
 23 comments:

 1. ****ஆக டெக்னாலஜி, திரைக்கதை, இயக்கம் இது பற்றியெல்லாம்
  தெரியாத, கவலைப்படாத நான்காம் வகுப்பு போகும் பசங்களுக்கு
  பிடிக்கிறது.****

  ஆஹா! இது கோடை விடுமுறை ஆரம்பம். ஒரு சிலர் இன்னும் பரீச்சையை முடிக்காமல் இருக்காங்க. நீங்க சொல்வதைப்பார்த்தால் சிறுவர்களை கவர்ந்த கோச்சடையான் வெற்ரிவாகை சூடுவான் என்பதுதன உண்மை! :)

  ReplyDelete
 2. சினிமா விமர்சனம் என்பது ஓரளவுக்காவது உண்மையை எழுதணும். ஒரு படம் ஜெயா டிவிக்கு ரைட்ஸ் வித்துவிட்டார்கள் என்பதாலும், பல சமீப அர்சியல் காரணங்களுக்காகவும் தன்னுடைய வெறுப்புணர்வை அசிங்கமாக வெளியில் காட்டும் விமர்சகர்களை எல்லாம் வெல்லக்கூடிய ஒரு சக்திதான் சிறுவர்களை கவரும்படி வெளிவந்துள்ள ஒரு படம்.

  இதுவரை 40 கோடி வசூல்! எப்படி கணக்குப் போட்டுப்பார்த்தாலும் இன்னும் மூன்று வார வசூலில் இந்தப்படம் வருவாய் தர ஆரம்பித்துவிடும். இது சவுந்த்ர்யாவுக்கு வெற்றிதான். "மடகிருஷ்ணா"வின் விமர்சனம் அரசியல் ஆதாயம் கலந்த அப்பட்டமான உளறல் என்று காட்டப்போவது சிறுவர் பட்டாளம்தான்!

  ReplyDelete
 3. ஆஹா வருண், இங்கயும் வம்பு பண்ண வந்துட்டீங்களா?

  ReplyDelete
 4. நாளை எதைப் பற்றி... இறை நாட்டமிருந்தால் வருவேன்!

  ReplyDelete
 5. நாளை கவிதைக்கான தினம் திரு நிஜாமுத்தீன்

  ReplyDelete
 6. இன்னும் பார்க்கவில்லை சிலரின் விமர்சனம் படிக்கவும் இல்லை:))) அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. பார்க்க பயமாக இருக்கிறது

   Delete
 7. இப்போ வலைச்சரத்திலும் சமூக கடமையா ,வாழ்த்துக்கள் அய்யா!

  ஆனால் செவப்பு சித்தாந்தம் இல்லாம சினிமா சித்தாந்தம் பேசுறிங்க ,நல்ல முன்னேற்றம் :-))

  #//ஆசியாவின் முதல் மோஷன் கேப்சரிங் திரைப்படத்தைவிட நிக்கில்டன் சேனலில் வரும் நிஞ்சா ஹட்டோரி சூப்பராக சுவாரஸ்யமாக இருக்கிறது//

  இது அவரோட கருத்தா, நல்லா தான் கண்டுப்பிடிக்கிறான்க அவ்வ்.

  இந்தியாவில் கூட கோச்சடையான் முதல் மோஷன் கேப்சரிங் படமல்ல, போன ஆண்டு கூட விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றினை மோஷன் கேப்சர் 3டி அனிமேஷனாக எடுத்து வெளியிட்டாங்க, சென்னை விவேகானந்தர் இல்லத்தில் தினமும் படம் காட்டுறாங்க!

  விவேகானந்தர் படம் டாக்குமெண்டரி வகைனு ஒதுக்கியாச்சா?

  எனவே தமிழின் முதல் மோஷன் கேப்சரிங் என சொல்லலாம்.

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவில் முதன் முறையாக "ராச சின்ன ரோசா" படத்தில் ஒரு பாடல் முழுவதும் 2டி அனிமேஷன் + நடிகர்கள் என அக்காலத்திலேயே ரஜினி நடிச்சாச்சு. என்னமோ லோகநாயகர் மட்டுமே புதுடெக்னாலஜி பயன்ப்படுத்துறாப்போல சிலர் நினைச்சிக்கிறாங்க.

   Delete
 8. தொழிலநுட்ப வளர்ச்சியைப் பாராட்டுவோம்.

  ReplyDelete
  Replies
  1. அதை சரியாகவும் பயன்படுத்திட வேண்டும்

   Delete
 9. மனசாட்சி நல்லாத்தான் கொட்டியிருக்கு. மற்றவர்கள் விமர்சனம் இருக்கட்டும். நீங்க அந்த படம் பார்த்தீர்களா?

  ReplyDelete
  Replies
  1. இல்லீங்க, இதெல்லாம் படிச்சதுக்கு அப்புறமா பார்க்க பயமா இருக்கு

   Delete
 10. இன்று தங்களின் பதிவு கண்டேன்.. மனம் அமைதியாக இருக்கின்றது. ஏனென்று தெரியவில்லை.. நன்றி..

  ReplyDelete
 11. ராமன் அவர்களே!

  நான் வம்பு பண்ணுறேன்னு சொல்லிட்டு இப்போ, "கோச்சடையான் சர்ச்சை"னு சொல்லி எல்லாரையும் வந்து "விவாதிக்க" சொல்றீங்க? இது எந்த ஊரு நாயம்? வேலூரில் இப்படித்தானா? :)))

  என்னவோ போங்க, நல்ல பகிர்வு, நல்ல பதிவு, தம 7 னு அர்த்தமில்லாத பின்னூட்டமிடுவதை விட எங்களைமாரி நாலு பேரு மனந்திறந்து உள்ளதை உள்லபடி வெலுளியா உண்மையைச் சொல்லுவதால்தான் பதிவுலகம் இன்னும் உயிரோட இருக்குனு தெரியாதா உங்களுக்கு? :)))

  ReplyDelete
 12. அது "வெலுளி" இல்லை வெகுளினு வாசிக்கவும்! :)

  ReplyDelete
 13. கோச்சடையான் பட விமர்சனங்களை வைத்து ஒரு அறிமுகம்...... :)))

  நடத்துங்க..........

  ReplyDelete
 14. கோச்சடையானை இன்று நான் பார்த்தேன், இது எல்லோராலும் ரசிக்கக்கூடிய படம் எனபது உண்மை. மற்றபடி ரஜினி கமல் என்று காண்டு காட்டுவோர்கள் ஏதாவது சொல்லிவிட்டுப் போகட்டும். புதிய தொழில் நுட்பத்தை வரவேற்போம். ஆனால் அவதார் தான் பெஸ்ட் என்று சொல்லி மொண்ணை மூஞ்சியை ரசித்தவர்களுக்கு நமது தொழில் நுட்ப வளர்ச்சி பிடிக்காதுதான்.

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. வலைச்சரத்தில் நல்ல ஒரு முயற்சி...... நானும் என் வலைப்பூவில் கோச்சடையானை பற்றி எழுதியுள்ளேன்.... படித்து விட்டு விமர்சனங்களை சொல்லலாம்...

  மக்களின் மனம் கவர்ந்த கோச்சடையான் !
  http://pazhaiyapaper.blogspot.in/2014/05/kochadaiiyaan-review.html

  ReplyDelete
  Replies
  1. படித்தேன். ரஜனி ரசிகரின் விமர்சனம்

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது