07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 3, 2008

16. நான் அபிஸ்ல ரொம்ப பிச்சி

வெட்டியா பொழுதை கழிப்பது எப்படி
ஆபீஸில் நம்மளைப் போன்ற வெட்டி ஆபிஸ்ரா நீங்க நம்ம ஆபிஸ்ல எப்படி பொழுதை போக்கலாம் அப்படின்னு செல்லி இருக்காங்க பாருங்க.
Sangam Technologies-ஆப்புரைசல் டைம்
ஆப்புரைசல் மாசம் வந்துட்டாலே எல்லோருக்கும் வயித்துல புளிய கரைக்கும். ஆணி புடுங்கறேன்னு கதைவுட்டே ஒரு வருசத்தை ஓட்டினாலும் இந்த மாசம் அதை கண்டுபுடிச்சு ஆப்பு வெச்சுருவாங்களே இந்த டேமேஜருங்க. சே சே மேனேஜருங்க. இந்த பிராஜக்ட் மானேஜருங்களுக்கு உண்மையாலுமே ரொம்ப ஞாபக சக்தி அதிகமோ? போன வருசம் நான் கண்டுபுடிக்காத ஒரு பக்கை இப்போ ஒரு bugஆ சொல்லீ ஆப்புரைசல்ல ஒரு பாயிண்ட கம்மி பண்ணிபுடுறாங்கப்பா. ஜால்ரா அடிக்கிறவங்க எல்லாம் இந்த மாசம் காலரை தூக்கிவிட்டுக்குவாங்க, அப்படியே குட்மார்னிங் சார், குட் ஆப்டர்நூன் சார், குட் ஈவிங் சார் அப்படின்னு சொல்லிகிட்டே இருப்பானுங்க. சரி சரி இந்தப் படங்களையும் பார்த்துட்டு ஆப்புரைசலுக்கு போயிருங்க..

From: "M.RISHAN SHAREEF
Subject: ஆபிஸில் ஃபிலிம் காண்பிப்பது எப்படி?
1) கையில் எப்போதுமே எதாவது டாக்குமெண்டையோ இல்லது கம்பெனி பைலையோ தூக்கிட்டு அலைவது அப்படியே நீங்கள் கம்பெனிக்கு மாஞ்சி மாஞ்சி வேலைப்பார்ப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும். வெறும் கையோடு உங்க பாஸ் ஆபிஸின் முன் நடந்து சென்றால் அவர் நீங்கள் தம் அடிக்கவோ இல்ல கேண்டீனுக்கோ போகிறார் என்று நினைத்துக் கொள்வார். தவறி அன்றைய நியூஸ் பேப்பரைக் கொண்டு அலையாதீர்கள். அப்படி அலைந்தால் நீங்கள் டாய்லெட்டை நோக்கி செல்வதாக உங்கள் பாஸ் நினைத்துக் கொள்வார்.ஆகவே டாக்குமெண்ட் அல்லது கம்பெனி லோகோ போட்ட பைல் நல்ல அபிப்ராயத்துக்கு 100% உத்திரவாதம்.
2) முகத்தை எப்போதுமே சீரியஸாக வைத்துக் கொண்டு கணனி முன் உட்கார்ந்து வலைப்பதிவோ, சி.என்.எனோ, அல்லது ஆனந்த விகடனோ, தமிழ்மணமோ படித்துக் கொண்டிருங்கள். மறந்தும் புன் சிரிப்பை கொண்டு முகத்தில் கொண்டு வந்துவிடாதீர்கள். Alt+TAB எப்போதும் உங்கள் கைவசம் இருக்கட்டும். பாஸ் வந்தால் டக்கென்று பக்கத்தில் உள்ள excel, word சாஃப்ட்வேருக்கு தாவிவிடுங்கள்.
3) உங்கள் அலுவலக மேஜையை எப்போதும் குப்பையாக வைத்திருப்பதால் நீங்கள் நிறைய வேலை பார்க்கிறீர்கள் என்ற தோரனையை ஏற்படுத்தும். பிரிண்ட் அவுட்டை எக்கசக்கமாக எடுத்து தள்ளி மேஜை நிறைய நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்
4) பாஸ் உங்களை பார்க்கும் போது எல்லாம் நீங்கள் பொறுமையற்றவராக, ஏதோ பிரச்சனையில் சிக்கி தவிப்பது போல் பாவலா காட்டுங்கள். தலையை சொரியுங்கள். உஸ் உஸ் என்று சத்தம் போடுங்கள். மெதுவான குரலில் ஏதாவது முணுமுணுங்கள். பாஸ் காதுக்கு உங்கள் குரல் எட்டுமானால் மெதுவாக 'shit' என்று அடிக்கடி கூறுங்கள். உங்கள் ப்ரோகிராமோ இல்லை உங்கள் schedule-ஓ உதைக்கிறது என்று அதற்கு பொருள்படும்.
5) எந்த காலத்திலும் பாஸ் வீட்டுக்கு கிளம்புவதற்கு முன் நீங்கள் கிளம்பி விடாதீர்கள். இருக்கவே இருக்கு கம்பியூட்டர் தமிழ் படிங்க... பின்னூட்டம் விடுங்க. நல்ல டைம் பாஸ். ஒரு வேளை நீங்கள் கட்டாயம் பாஸ் இருக்கும் போதே வெளியேற வேண்டுமென்றால் உங்கள் ஆபிஸ் பேக்கை(office bag) உங்கள் மேஜையிலேயே பாஸ் கண்ணில் படும்படு விட்டுவிட்டு செல்லுங்கள். அது நீங்கள் இன்னும் ஆபிஸில் இருக்கிறீர்கள் என்ற தோற்றத்தை உருவாக்கும்.மறுநாள் பாஸ் ஆபிஸிற்கு வரும் முன் நீங்கள் வந்து விடுங்கள். இல்லையேல் குட்டு வெளிப்பட்டுவிடும்.
6) நல்ல பெரிய பெரிய கம்பியூட்டர் புத்தகங்களை உங்கள் மேஜை குப்பைகளுக்கு இடையில் திறந்து வைத்து அவ்வப்ப்போது அதில் ஏதோ தேடுவது போல பாவ்லா காட்டுங்கள். புத்தகத்தை எப்போதும் மூட வேண்டாம். நீங்கள் ப்ராஜக்ட் மேனஜராகயிருந்தால் கிளையண்ட் requirement, functional specification போன்ற தடிமனான பைலை உங்கள் முன் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். MS-project schedule உங்கள் முன் இருந்தால் மிகச் சேமம்.
7) வலைப்பதிவில் யாரோ இந்த ஃபிலிமை போட்டிருந்தார்கள். அதை தொகுக்கும் பொருட்டு இங்கே கொடுக்கிறேன். எனக்கு தெரிந்து நிறைய பேர் க்யூபிக்களில் அலங்கார கண்ணாடியை வைத்திருப்பார்கள். என் அலுவலகத்தில் ஒரு காரின் சைடு கண்ணாடியே அழகாக வைத்திருந்தார். அதன் பயன் மிக எளிது. பாஸ் மெதுவாக பூனையாக உங்கள் பின்னால் வந்து பார்க்கும் முன்னர் தூரத்திலிருந்தே அந்த கண்ணாடியில் பார்த்துவிடலாம். அதற்கேற்ப அரெஞ்மெண்ட் செய்துக் கொள்ளலாம்.
ஆயிரக்கணக்கான ஃபிலிம் காட்டும் முறைகளில் சிலவற்றை தொகுத்து உங்களுக்கு தந்திருக்கிறேன். இதை பயன்படுத்தி உங்கள் extra curricular activities -ஐ கூட்டிக் கொள்வது உங்கள் திறமை...
http://mrishanshareef.blogspot.com

ஆபிசர் ஆன கதை,
அம்மா உங்க பையன் இப்போ ஆபிசர்,
ஆபிசருக்கு இன்னிக்கு அப்புரேசல்,
அட அநியாய ஆபிசரே,
ஆபிசர் விடைபெறுகிறார்,
எங்க ஆபிஸ் பருத்திவீரன,
எம்.ஜி.ஆரையே எதிர்த்தவன்டா இந்த ஆபிசர்,
ஆபிசர் கவிஞர் ஆகிறார்
சீனியருக்கு எல்லாம் சீனியர்டா இந்த ஆபிசர்

7 comments:

  1. கீரைய பத்தி ஒரு பதிவு போட்டுட்டு இத மாத்தீட்டீங்களா?

    ReplyDelete
  2. எவ்ளோ தாங்க ஒரு நாளைக்கு படிக்கிறது?
    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா...... கண்ண கட்டுது சாமி.

    ReplyDelete
  3. இன்னைக்கு படிச்ச ஒரு பதிவ அப்பிடியே காப்பி பேஸ்ட் பண்ணி வெச்சிருக்கீங்களே இம்சை

    ReplyDelete
  4. கச்சேரி தேவ் லிங் போன பதிவுலயும் இங்கயுமா???

    பரவால்ல இருக்கட்டும்

    ReplyDelete
  5. மங்களூர் சிவா said...
    இன்னைக்கு படிச்ச ஒரு பதிவ அப்பிடியே காப்பி பேஸ்ட் பண்ணி வெச்சிருக்கீங்களே இம்சை

    உனக்கு அடுத்த பதிவு போட்டாச்சிப்பா... நீ படிக்காத பதிவுக்கு நான் எங்க போவேன் :(

    ReplyDelete
  6. ஓஓ ஆபீஸ்லே ஆப்பிசர் எல்லாம் இப்படித்தான் பிலிம் காட்டிக்கினு திரியுறானுங்களா ?

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது