07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 3, 2008

ஆன்மீக சரம்

ஆன்மீகச்சரத்தில் பக்திப்பாடலக்ளும் பக்திகட்டுரைகளும் இன்று தொடுக்கலாமா ?







முதலில் ஜீவா வெங்கட்ராமனின் சமீபத்திய பதிவு .

திருக்கைலாயத்தை தேடிச்சென்ற திருநாவுக்கரசர், பூலோக கைலாயமென பெரியவர் ஒருவர் குறிப்பிட திருவையாறு தலத்தை அடைகிறார். அங்கே அவர் தான் கண்ட காட்சியாக பாடுவதாய்க்கூறுவது விஜய்சிவாவின் கணீர்க்குரலில் பாடலும் விளக்கமும் மனதையும் செவியையும் அள்ளுகின்றன! நன்றி ஜீவா.



திராச அளிக்கும்நமச்சிவாய வாழ்க வலைத்தளத்தில் வருகலாமோ ஐயா பாடலை நித்யஸ்ரீ பாட விளக்கமுடன் அளித்திருப்பதைக்கேட்டு,பார்த்திருக்கிறீர்களா?

மதுரையம்பதி அளிக்கும் சௌந்தர்யலஹரி அனந்தலஹரியாய் இங்கே அன்னையின் அருள்வடிவத்தை அவள் கருணையை நமக்கு பாடலுடன் விளக்கமும் தருகிறார்.

கீதாசாம்பசிவம் அவர்களின் ஆன்மீகப்பயணத்தில் சிதம்பர ரகசியம் நமக்கு வெளிச்சமாய் தருகிறார் படிக்கும்போதே மன இருள் நீங்குவது நிஜம்.

சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே

என்னும் குமரனின் வலைப்பூ அன்னைக்கு அர்ப்பணம் அனைத்தும் அவளுக்கே சமர்ப்பணம் என்பதான பாடல்கள்.நிறைவுபெற குமரன் அளித்துள்ளதை இங்கு கண்டு மகிழலாம் அன்னையின் அருளையும் பெறலாம்.

கடுவெளி சித்தரின் இந்தப்பாடலைப்போல
எங்கும் சுயபிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சிவமுருகனின் சித்தர்பாடல்கள் வலைத்தளத்தில்அர்த்தம் நிறைந்த அபூர்வப்பாடல்களைக்காணலாம்.








கண்ணன்பாட்டு தளத்தில் மலைநாடன் அண்மையில்அளித்துள்ள கட்டுரையும் பாடலும் அருமை!பல்லாண்டெனும் பதங்கடந்தவனுக்குப் பல்லாண்டு கூறுதலா?. திருநெல்வேலிக்கே அல்வாவா? என்பதுபோலத் தோன்றுகிறதா?. நமக்கு விருப்பமானது, ஆண்டவனுக்கும் விருப்பமானது . வாழ்த்திப் பாடுவது நமக்குப் பிடிக்கிறது என்கிறார் மலைநாடன் நியாயம்தானே?

இங்கே ஜிரா முருகன்மீது பாட்டு இயற்றி என்னைப்பாடவும் வைத்திருக்கிறார்!

வல்லிசிம்ஹனின் பதிவில் சின்னராமனும் சின்னக்ருஷ்ணனும் மிகவும் பிடித்தவை எனக்கு அதன் எளிமை காரணமாகவே!

வீஎஸ்கே சிவனைப்பற்றி இங்க ஒரு பாடல் தந்திருக்கார் பாருங்க அப்படியே கண்முன் சிவம் நிற்கிறது!


கண்ணபிரான் ரவிசங்கர்! இந்த ஆன்மீகச்செம்மலின் மாதவிப்பந்தலும் கண்ணன்பாட்டும் அருமையான அழகான தெய்வீகப்படங்களினாலும் இனியபாடலக்ளினாலும் திகட்டாத தீந்தமிழில் கண்ணபிரான் ரவிசங்கர் அவருக்கே உரிய மெல்லிய நகைச்சுவையோடு எழுதும் கட்டுரைகளினாலும் அவரது பந்தலில் பல்காலமும் குயில்கள் கூவும் வண்ணம் சிறப்பாக இருக்கிறது.
விடியற் காலை, பிரம்ம முகூர்த்தம், வாசல் திறக்கப்படுகிறது!
ரங்கா, ரங்கா, ரங்கா என்று விண்ணதிரும் கோஷம்!
நல்லோர் நெஞ்சமெல்லாம் நிறைய, அரங்கன், சிம்ம கதி போட்டு வரும் அழகே அழகு!
அரங்கன் நடை அழகு!
ரத்னாங்கி உடை அழகு!
சக்கரப் படை அழகு!
சதிராடும் குடை அழகு
! என அரங்கனைப்பற்றி எழுதி படங்கள் அளித்து இனியபாடலும் கொடுத்துள்ள இந்தப்பதிவு என்னை அரங்க நகருக்கே இட்டுச்சென்றது நீங்களும் திருவரங்கம் போகவேண்டுமா முதலில் இங்கே செல்லுங்களேன்!

அரங்கன் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும் என வேண்டி ஆன்மீகப்பதிவினை இங்கே நிறைவு செய்கிறேன்.

22 comments:

  1. ரங்கநாதா காப்பாத்துப்பா!

    ReplyDelete
  2. ///மங்களூர் சிவா said...
    ரங்கநாதா காப்பாத்துப்பா///



    ரிப்பீட்டேய்.........

    ReplyDelete
  3. மங்களூர் சிவா said...
    ரங்கநாதா காப்பாத்துப்பா!

    >>>>!!!!!!!?


    நிஜமா நல்லவன் said...
    ///மங்களூர் சிவா said...
    ரங்கநாதா காப்பாத்துப்பா///



    ரிப்பீட்டேய்.........

    >>>>>>காப்பாத்தச் சொல்லிட்றேன்பா தம்பிகளா:)

    ReplyDelete
  4. ஆஹா..
    ஜிரா பாடலாசிரியரா? ஷைலஜா அக்கா,உங்க தயவுல இந்த விஷயத்தை நான் இன்னிக்குத் தான் தெரிஞ்சுக்கிட்டேன்..அந்தக் குட்டிப் பையன் கிட்ட எவ்ளோ திறமை இருக்கு பாருங்க :)

    ReplyDelete
  5. ஆன்மிகப் பதிவாச்சே..நம்ம கேயாரேஸ்ஸைக் காணோமேன்னு பார்த்தா..கடைசில சும்மா நச்னு போட்டிருக்கீங்க ஷைலஜா அக்கா..
    சூப்பரு..!

    ReplyDelete
  6. நல்ல தொகுப்பு ஷைலஜா.

    // எம்.ரிஷான் ஷெரீப் said...

    ஆஹா..
    ஜிரா பாடலாசிரியரா? ஷைலஜா அக்கா,உங்க தயவுல இந்த விஷயத்தை நான் இன்னிக்குத் தான் தெரிஞ்சுக்கிட்டேன்..அந்தக் குட்டிப் பையன் கிட்ட எவ்ளோ திறமை இருக்கு பாருங்க :) //

    ஆமாப்பா ஆமா... அந்த ஒரு பாட்டு எழுதுறதுக்குள்ளயே எனக்குப் போதும் போதும் ஆயிருச்சு. அதுக்கப்புறம் எழுதவேயில்லை :)

    // Blogger எம்.ரிஷான் ஷெரீப் said...

    ஆன்மிகப் பதிவாச்சே..நம்ம கேயாரேஸ்ஸைக் காணோமேன்னு பார்த்தா..கடைசில சும்மா நச்னு போட்டிருக்கீங்க ஷைலஜா அக்கா..
    சூப்பரு..! //

    இப்ப சொன்னீங்களே.. இது சூப்பர். ஆன்மீகம்னா கே.ஆர்.எஸ். கே.ஆர்.எஸ்னா ஆன்மீகம்.

    ReplyDelete
  7. எம்.ரிஷான் ஷெரீப் said...
    ஆஹா..
    ஜிரா பாடலாசிரியரா? >>>
    ஆமாம் ரிஷான்..
    நிறைகுடம் ஜிரா!

    ஷைலஜா அக்கா,உங்க தயவுல இந்த விஷயத்தை நான் இன்னிக்குத் தான் தெரிஞ்சுக்கிட்டேன்..அந்தக் குட்டிப் பையன் கிட்ட எவ்ளோ திறமை இருக்கு பாருங்க :)>>>>
    நிறைய இருக்கு...ஆனா அவ்ளோ குட்டிப்பையன் இல்லையே எங்கவீடுவந்தாரே தோசைகூட சாப்பிட்டாரே (மைபா தந்தேனா நினைவில்லை?:) ஆனா ஸ்மார்ட் ப்ரதர் தான் ஜிரா!
    நன்றி ரிஷான் வருகை+கருத்துக்கு

    May 3, 2008 12:23:00 PM IST

    ReplyDelete
  8. எம்.ரிஷான் ஷெரீப் said...
    ஆன்மிகப் பதிவாச்சே..நம்ம கேயாரேஸ்ஸைக் காணோமேன்னு பார்த்தா..கடைசில சும்மா நச்னு போட்டிருக்கீங்க ஷைலஜா அக்கா..
    சூப்பரு..!

    >>> பருப்பில்லாமல் சாம்பார் உண்டு
    மைபா இல்லாமல் ஷைலஜா உண்டு.
    ஆனா ரிஷான்தம்பீ......கேஆரெஸ் இல்லாமல் ஒரு ஆன்மீகப்பதிவா ஓ நெவர்!
    நன்றி கருத்துக்கும் வருகைக்கும்!

    ReplyDelete
  9. G.Ragavan said...
    நல்ல தொகுப்பு ஷைலஜா.



    ஆமாப்பா ஆமா... அந்த ஒரு பாட்டு எழுதுறதுக்குள்ளயே எனக்குப் போதும் போதும் ஆயிருச்சு. அதுக்கப்புறம் எழுதவேயில்லை ///

    யானை ஒருதட்வைதான் குட்டி போடும் ஆனா என்ன யானைக்குட்டின்னா சும்மாவா ஜிரா?
    உங்க கற்பனைல உருவாகும் ஒருபாடல் என் அரங்கனைப்பற்றி அடுத்து வரணும் அதை நான் உருகிப்பாடணும் ..என்ன செய்வீங்களா?!

    ReplyDelete
  10. ஆஹா.ரங்கநாதர் வந்துட்டார். ஆன்மீஇகமும் வந்துட்டது. இவ்வளவு ஜயண்ட்ஸ் பத்தின பதிவில
    என்னையும் சேர்த்ததற்கு நன்றி ஷைலஜா.
    ''அத்தனையும் தங்கம் ஆனந்த முடிச்சுனு'' பாட்டி அடிக்கடி ஆராவமுதனைச் சொல்லுவார். உங்க பதிவும் அப்படித்தான் இருக்கு.

    ReplyDelete
  11. //நிஜமா நல்லவன் said...
    ///மங்களூர் சிவா said...
    ரங்கநாதா காப்பாத்துப்பா///
    ரிப்பீட்டேய்.........
    //

    ரங்கநாதனுக்கே ரிப்பீட்டே-வா?
    ஆகா
    சரி, நானுஞ் சொல்லிக்கறேன்!
    ரிப்பீட்டேய்! :-)))

    ReplyDelete
  12. //என்னை அரங்க நகருக்கே இட்டுச்சென்றது நீங்களும் திருவரங்கம் போகவேண்டுமா முதலில் இங்கே செல்லுங்களேன்!
    //

    இப்படி எல்லாம் சொல்லி ஷைலு அக்கா எஸ்கேப்பு ஆக முடியாது!
    திருவரங்கம் போகத் தான் வேண்டும்! அரங்கன் வீட்டுக்கு அல்ல முதலில்!
    ஷைலஜா வீட்டுக்கு! அந்தச் சுவை மணக்கும் காபி+மசால்வடை காகவே! :-))))

    ReplyDelete
  13. //எம்.ரிஷான் ஷெரீப் said...
    ஆஹா..
    ஜிரா பாடலாசிரியரா?//

    என்ன இப்பிடிக் கேட்டுப்புட்டீங்க ரிஷானு?
    எங்க ஜிரா வனவேடன் ஒருவன் வந்தான்-னு தமிழ்ப் பாட்டும் எழுதுவாரு! திரை விலக லா காதா-ன்னு தெலுங்குப் பாட்டையும் மாத்தி எழுதுவாரு!

    அந்தக் குட்டிப் பையனைப் பத்தி இன்னும் நிறைய சொல்லுவான் இன்னொரு குட்டிக் குட்டிப் பையன்! அவனைப் போயி கேளுங்க! பேரு ஏதோ கேஆரெஸ்ஸாம்! :-)

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. ஆகா, நல்லதொரு தொடுப்பு. எடுப்பு கொஞ்சம் சுமாராய் இருந்தாலும், முடிப்பு பிரமாதம்!
    :-)

    ReplyDelete
  16. ///ஷைலஜா said...
    >>>>>>காப்பாத்தச் சொல்லிட்றேன்பா தம்பிகளா:)///



    ஆஹா அப்படியே இன்னும் சில வேண்டுதல்களும் இருக்கு. அதையும் சேர்த்துடுறீங்களா?

    ReplyDelete
  17. // ஆனா அவ்ளோ குட்டிப்பையன் இல்லையே //

    ஹி ஹி உண்மையப் போட்டு ஒடச்சிட்டீங்களே ஷைலஜா.

    // எங்கவீடுவந்தாரே தோசைகூட சாப்பிட்டாரே (மைபா தந்தேனா நினைவில்லை?:) //

    இல்லையே. தோசை, பொங்கல், சாம்பார், சட்னி, ஹல்வா என்று கதம்பமாக அல்லவா கட்டினேன்.

    // உங்க கற்பனைல உருவாகும் ஒருபாடல் என் அரங்கனைப்பற்றி அடுத்து வரணும் அதை நான் உருகிப்பாடணும் ..என்ன செய்வீங்களா?! //

    ஆகா. தாராளமாகச் செய்யலாமே. இந்த வாரமே எழுதீருவோம்.

    ReplyDelete
  18. ஜீவா (Jeeva Venkataraman) said...
    ஆகா, நல்லதொரு தொடுப்பு. எடுப்பு கொஞ்சம் சுமாராய் இருந்தாலும், முடிப்பு பிரமாதம்!
    :-)
    >>>நன்றீ ஜீவா:) கடுப்பா இல்லதானே?:0

    ReplyDelete
  19. நிஜமா நல்லவன் said...
    ///ஷைலஜா said...
    >>>>>>காப்பாத்தச் சொல்லிட்றேன்பா தம்பிகளா:)///



    ஆஹா அப்படியே இன்னும் சில வேண்டுதல்களும் இருக்கு. அதையும் சேர்த்துடுறீங்களா?

    >>>சமத்தா இருந்தா சேர்த்துடுவேன்:)

    ReplyDelete
  20. G.Ragavan said...
    // ஆனா அவ்ளோ குட்டிப்பையன் இல்லையே //

    ஹி ஹி உண்மையப் போட்டு ஒடச்சிட்டீங்களே ஷைலஜா.>>>

    >>>>>ஆமா ரொம்ப ரொம்ப குட்டிபையனா நீங்க அந்த ரவி எல்லாரும் ஆகிட்டா நான் என்னாறது?:):)

    // எங்கவீடுவந்தாரே தோசைகூட சாப்பிட்டாரே (மைபா தந்தேனா நினைவில்லை?:) //

    இல்லையே. தோசை, பொங்கல், சாம்பார், சட்னி, ஹல்வா என்று கதம்பமாக அல்லவா கட்டினேன்.>>>
    மைபா கொடுக்ல்யா? தப்பிச்சிட்டீங்களா என்ன?:)

    // உங்க கற்பனைல உருவாகும் ஒருபாடல் என் அரங்கனைப்பற்றி அடுத்து வரணும் அதை நான் உருகிப்பாடணும் ..என்ன செய்வீங்களா?! //

    ஆகா. தாராளமாகச் செய்யலாமே. இந்த வாரமே எழுதீருவோம்.>>>
    எழுதுங்கமுதல்ல...முருகன் அதற்கு அருளட்டும்! காத்திருக்கேன்!

    May 4, 2008 1:11

    ReplyDelete
  21. ஆன்மீக ஜாம்பவான்களைப் பத்தி அழகா சொல்லீட்டிங்க. நன்றி ஷைலஜா :)

    ReplyDelete
  22. //அரங்கன் வீட்டுக்கு அல்ல முதலில்!
    ஷைலஜா வீட்டுக்கு! அந்தச் சுவை மணக்கும் காபி+மசால்வடை காகவே!//

    ஓ.. அப்படியா சங்கதி. தவறவிட்டுட்டோமா? :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது