07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 12, 2009

வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்!

உறவு-குடும்பம்!

உறவுகளும் குடும்பமும் நம் இந்தியக் கலாச்சாரத்தின் தூண்கள்.

இந்தியர்கள் எங்கே சென்றாலும் தங்கள் குடும்பப் பின்னணியை கூடவே எடுத்துப் போகிறார்கள். அதன் காரணமாய் எப்போதும் தங்கள் குடும்பத்துக்குள் இருப்பது போலவே உணர்கிறார்கள்''! என்பது உளவியல் அறிஞர் ஆலன் ரோலண்ட் கருத்து.

சுற்றத்தால்சுற்றப்படஒழுகல்செல்வந்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்!

குறள்.

ஆதலினால் இந்த வலைச்சரத்தில் நான்காம் நாளில் என் வாழ்வின் வழியில் இணந்து நிற்கும் என் உறவுகளை நினைவு கூர்கிறேன்!

-------------------------------

மூட்டு தேய்மானம்

மூட்டு தேய்மானம் என்பது நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு விசயம். இது வயதாவதால் நம் உடலின் பாரம் தாங்கும் மூட்டுக்களான முழங்கால்,இடுப்பு ஆகியவற்றில் அதிகம் ஏற்படுகிறது! உடல் பருமனானவர்களிடம் இது அதிகம் காண்ப்படுகிறது.

எலும்பின் மூட்டுப்பகுதி வழுவழுவென்று இருக்கும்!அந்த வழுவழுப்பு பகுதி தேய்ந்து போய்விடும்!மூட்டின்உறை தடிமனாகி விடும்! மூட்டில் நீர் கோர்த்து வீங்கிவிடும்! இதற்கு அப்புறம் கால் முழுவதும் நன்றாக மடக்க முடியாமல் போய்விடும்!

இதைத்தடுக்க உடற்பயிற்சி முக்கியம்! உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எலும்பில் கால்சியம் அதிகமாகி எலும்பு வலிமையுடன் கனமாக ஆகிவிடும். தசைகள் வலிமையுடன் இருந்தால் மூட்டின் வேலைகள் எளிமையாகிவிடும்!இதை சரியாக கவனிக்காவிட்டால் மூட்டின் இடைவெளி குறைந்து எலும்புகள் உரசி கடுமையான வலி ஏற்படும்.

முதலில் மாத்திரைகள் மூலம் எலுமபு வலியையும்,தேய்மானத்தையும் குறைக்கலாம்.தற்போது எலும்பு ஜவ்வு வளர உதவி செய்யும் மாத்திரைகள் வந்து உள்ளன! அவைபக்கவிளைவு இல்லாதவை! வெளிநாட்டினர் இதைத்தொடந்து சாப்பிடுகிறார்கள்!இங்கும் அந்த மருந்துகள் வந்துவிட்டன!

அடுத்து பிஸியோதெரபி,பயிற்சிகள் மூலம் இதைக்கட்டுக்குள் கொண்டு வரலாம்.

அப்படியும் ரொம்ப மூட்டு தேய்மானம் ஏற்பட்டால் சிறு அறுவை சிகிச்சை அல்லது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டி வரும்!

நம்ம வாஜ்பாய்க்கு இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் செய்யப்பட்டு உள்ளது!

--------------------------------

சில பதிவர்கள்!

புதியவர்களைத் கண்டு பிடிப்பதில் மிகுந்த சிரமம் உள்ளதுசிலர்நமக்குத்தெரியாதவர்களாக இருப்பாங்க! ஆனா வேற வட்டத்தில் பிரபலமாக இருப்பார்கள்! ஆகவே இதில் நான் சொல்லும் யாரும் புதியவர் அல்லர்! புதிய கருத்துக்கள் சொல்பவர்கள்!

1.டொன் லீ பதுங்கிப்பாயும் சிங்கை சிங்கம்!அதுவும் பகிடி விட வரும் சிங்கம்!!!ஜென்னி மனதில் சிவா என்று காதல்கதை எழுதுகிறார்! பிரபலமானகதைஇது!http://donthelee.blogspot.com/2009/01/jenni.html

சங்கி மங்கி தொடர் ஓட்டம் என்று விளையாட்டுப்போட்டியில் நகச்சுவையை அள்ளித்தருகிறார்!http://donthelee.blogspot.com/2009/01/relay.html போய் படிச்சு ரசிங்க.

2.சிறகுகளில் பெரியண்ணன் பற்றி பாசமாகப் பேசுகிறார் தாரா. இவர் தற்போது ஒரு வாஷிங்டன் பறவை. இவர் ”தன் எண்ணச் சிறகுகளை விரித்து இணையவெளியில் பறக்கிறேன்! கூட வாருங்கள் ”என்கிறார்.

அவர் அபியும் நானும் படத்தை ஆராயும் பதிவும் உள்ளது.http://www.siragugal.blogspot.com/இந்த முகவரியில் அவரைப்படியுங்கள்.

3.வற்றாயிருப்பு சுந்தர்-10 வலைப்பக்க சொந்தக்காரர் தன் நாய் பற்றி அழகாக எழுதியுள்ளார்!http://akavithaikal.blogspot.com/2009/02/blog-post.html

பின்னிரவில் வெள்ளிநிலா கவிதையில் காதல் பாடுகிறார்!http://akavithaikal.blogspot.com/2009/01/blog-post_28.html

4.மின்னல் பேசும் என்னும் இவரின் காற்றும் கனமான அட்டைகளும் கவிதையை ரசிக்கவும்http://minnalpakkam.blogspot.com/2009/02/blog-post_11.html

இருளில் மிதக்கும் வெயிலின் துகள் இனிய கவிதைhttp://minnalpakkam.blogspot.com/2009/01/blog-post_07.html

5.ந.உதயகுமார் 4 வலைத்தளம் கொண்டவர்தி பிரெசிடெண்ட் இஸ் கமிங் ஆங்கில சினிமாவை போட்டு அலசி எடுக்கிறார்.நம்ம படிச்சுட்டு பீட்டர் விட தோதாக. இருக்கும்.http://karuththukal.blogspot.com/

குட்டிக்கதைகளுக்காக ஒரு வலை!-ஒரு கல்லின் கதையை அவரின் பச்சோந்திக்கல்லில் படியுங்கள்http://tamil-kutti-kathaikal.blogspot.com/

நானும் ஒரு குட்டிக்கதையோட முடிக்கிறேனே!

”என்ன கவலையாக இருக்கிறாய்?” என்று கேட்டார் குரு.

”என்னன்னு தெரியலை குருவே.யாரைப்பார்த்தாலும் பொறாமையாக இருக்கு”

’அப்படியா?”

“ஆமா. நான் ரொம்ப தாழ்ந்தவனாக உணருகிறேன்.அது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது”

”யாரைப்பார்த்தா அப்படித்தோணுது?”

“என்தெருவில்ஒருபணக்காரன்இருக்கிறான்.அவனைப்பார்த்தா, அப்புறம் என் பக்கத்து வீட்டுக்காரன் நிறையப் படித்து இருக்கான் அவனைப்பாத்தா” என்றான் ரொம்ப கவலையோட!

குரு அறையின் ஜன்னலைத்திறந்தார். வெளியே அழகான தோட்டம்.மரங்கள் எல்லாம் பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்தன.

“இங்கே பார். இந்த தோட்டத்து மரங்களைப்பார்.ஒவ்வொரு மரமும் எவ்வளவு உற்சாகமாய் சந்தோஷமாய் இருக்கிறது பார்.” என்றார்.

“என்ன சொல்கிறீர்கள் குருவே?”

“இந்த மரங்கள் எல்லாம் ஒன்றையொன்று பார்த்து அவன் குட்டை இவன் நெட்டை, இது காய்க்குது,அது பூக்குதுன்னு பொறாமைப்பட்டுக்கொண்டிருந்தால் இத்தனை சந்தோஷமாக இருக்க முடியுமா?” என்று கேட்டார் குரு.

சிஷ்யனுக்கு வாழ்க்கையின் தத்துவம் புரிந்து விட்டது. நமக்குந்தான்!!

அடுத்த பதிவில் பார்ப்போம்!

தேவா.

123 comments:

 1. நான்காம் நாள் வாழ்த்துக்கள்

  உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தேவா!!!

  ReplyDelete
 2. நான்காம் நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. பிறகு சந்திப்போம் !!!

  ReplyDelete
 4. மூட்டுத் தேய்மானம் அதிகமாக மெனோபாஸிற்கு பிற்கு பெண்களுக்குத்தான் வரும் என்கிறாகளே? உண்மையா?

  தடுக்க ஏதும் வழி இருந்தால் பதிவிடுங்கள்.

  நன்றி

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்

  4 நாட்கள் ஆயிடிச்சா ...

  ReplyDelete
 6. வெற்றிகரமான நான்காம் நாள் வாழ்த்துகள் தேவா...

  ReplyDelete
 7. நான்காம் வாழ்த்துக்கள் தேவா! மூட்டுவலி பற்றிய தங்கள் கட்டுரை பயனுள்ளதாக இருக்கும். தத்துவக்கதையும் நன்று. அறிமுகப் பதிவர்களை படித்துவிட்டு வருகிறேன்.

  ReplyDelete
 8. //புதுகைத் தென்றல் said...
  மூட்டுத் தேய்மானம் அதிகமாக மெனோபாஸிற்கு பிற்கு பெண்களுக்குத்தான் வரும் என்கிறாகளே? உண்மையா?

  தடுக்க ஏதும் வழி இருந்தால் பதிவிடுங்கள்.

  நன்றி//
  நானும் எதிர்பார்க்கிறேன்!

  ReplyDelete
 9. மூட்டு தேய்மானம்

  நல்ல பகிர்வு மருத்துவரே !!!!!!!

  ReplyDelete
 10. டொன்லீ யைப் பற்றி குறிப்பிட்டு விட்டு அவருடைய சிங்கை பதிவர் சந்திப்புகள்
  பற்றிய வர்ணனைப் பதிவுகளை மிஸ் பண்ணிட்டீங்களே !!!!

  அங்க தாங்க நிக்கிறார் டொன்லீ...

  ReplyDelete
 11. ஹையா டொன் ‘லீ’

  மிக அருமையான வர்ணனையாளர்

  ReplyDelete
 12. இவரோடு நான் சில சந்திப்புகளுக்கு சென்றுள்ளேன் ...

  அப்படியே அழகாக வர்ணிப்பார்.

  ReplyDelete
 13. அதுலையும்

  ஒரு வெட்டுக்கிளியின் தற்கொலை

  ஆஹா ரொம்ப பிரமாதம்.

  ReplyDelete
 14. சங்கி மங்கின்னு ஒரு மேட்டர்

  அருமையான பகிடிகள்

  ReplyDelete
 15. உறவுகளும் குடும்பமும் நம் இந்தியக் கலாச்சாரத்தின் தூண்கள்.//
  ஆமாம்..

  ReplyDelete
 16. இந்தியர்கள் எங்கே சென்றாலும் தங்கள் குடும்பப் பின்னணியை கூடவே எடுத்துப் போகிறார்கள். //

  குடும்பம்தானே தேவை...

  ReplyDelete
 17. அதன் காரணமாய் எப்போதும் தங்கள் குடும்பத்துக்குள் இருப்பது போலவே உணர்கிறார்கள்''! ///
  குடும்பம் இல்லாமல் நிரய சிரமம்..

  ReplyDelete
 18. சுற்றத்தால்சுற்றப்படஒழுகல்செல்வந்தான்

  பெற்றத்தால் பெற்ற பயன்!//

  நான் எங்கெ/
  சொந்தம் எங்கே?

  ReplyDelete
 19. ஆதலினால் இந்த வலைச்சரத்தில் நான்காம் நாளில் என் வாழ்வின் வழியில் இணந்து நிற்கும் என் உறவுகளை நினைவு கூர்கிறேன்!//

  உற்வுகள் தொடர்கதை!!!!!

  ReplyDelete
 20. நான்காம் நாள் வாழ்த்துக்கள் தேவா...பிறகு வருகிறேன்...

  ReplyDelete
 21. நான்காம் நாள் வாழ்த்துக்கள் மருத்துவரே

  ReplyDelete
 22. சில சமீபத்திய திரைபடங்களின் காட்ச்சிகளை பழைய வெளிநாட்டு படங்களில் பார்த்து ‘அம்பல’ படுத்தி இருந்தார்.

  ReplyDelete
 23. //நட்புடன் ஜமால் said...
  ஹையா டொன் ‘லீ’

  மிக அருமையான வர்ணனையாளர்
  //

  ஆமாங்க..

  டொன்லீ வலையுலகின் ஜெஃப்ரி பாய்கோட்..

  ReplyDelete
 24. லெக் செஞ்சுரி நம்ம தான்..

  ReplyDelete
 25. ஒரு டென்னீஸ் ஆட்டம்

  அட அட அடா என்னமா ஆடியிருந்தார்

  வார்த்தைகளில்

  ReplyDelete
 26. \\அ.மு.செய்யது said...

  லெக் செஞ்சுரி நம்ம தான்..\\

  ஹே! எலி

  உளிஞ்சிருந்து அடிச்சிட்டியா

  ReplyDelete
 27. தாராவின்
  "வாசிங்டன் டிசியிலிருந்து தாரா" பதிவு நல்லா இருக்குங்க...

  http://siragugal.blogspot.com/2008/02/8.html

  ReplyDelete
 28. டொன் லீ ஒரு ப்ரூஸ் லீ!!

  ReplyDelete
 29. @ஜமால்

  ஹா ஹா.....

  கொரில்லா போர் தந்திரமுறை.

  ReplyDelete
 30. 4-ம் நாளுக்காக வாழ்த்துகள் தேவா...

  //உறவு-குடும்பம்! உறவுகளும் குடும்பமும் நம் இந்தியக் கலாச்சாரத்தின் தூண்கள்//

  உண்மை...அவர்களை நினைவுக்கூர்ந்தது நன்று...

  மூட்டு தேய்மானம் பற்றிய கட்டுரை நல்ல உபயோகமான பதிவு...

  ஏற்கனவே அறிமுகப்படுத்தியவங்களையே இன்னும் பார்க்கல... பார்த்துட்டு வரேன் தேவா....

  குட்டிக்கதையும் நல்லாருக்கு....

  மீண்டும் வாழ்த்துகள்....

  ReplyDelete
 31. மூட்டு தேய்மானம் என்பது நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு விசயம். இது வயதாவதால் நம் உடலின் பாரம் தாங்கும் மூட்டுக்களான முழங்கால்,இடுப்பு ஆகியவற்றில் அதிகம் ஏற்படுகிறது! உடல் பருமனானவர்களிடம் இது அதிகம் காண்ப்படுகிறது.

  வெயிட் குரங்க அப்பா!

  ReplyDelete
 32. எலும்பின் மூட்டுப்பகுதி வழுவழுவென்று இருக்கும்!அந்த வழுவழுப்பு பகுதி தேய்ந்து போய்விடும்!மூட்டின்உறை தடிமனாகி விடும்! மூட்டில் நீர் கோர்த்து வீங்கிவிடும்! இதற்கு அப்புறம் கால் முழுவதும் நன்றாக மடக்க முடியாமல் போய்விடும்!///

  அப்பட்யா?

  ReplyDelete
 33. //டொன் லீ ஒரு ப்ரூஸ் லீ!!//

  கோல்கேட் ப்ரூஸ் ஆ... ஓரல்-B ப்ரூஸா...

  ReplyDelete
 34. @ஜமால்

  ஹா ஹா.....

  கொரில்லா போர் தந்திரமுறை.//

  புரியலியே!

  ReplyDelete
 35. //டொன் லீ ஒரு ப்ரூஸ் லீ!!//

  கோல்கேட் ப்ரூஸ் ஆ... ஓரல்-B ப்ரூஸா...//

  பகிடியா?

  ReplyDelete
 36. இதைத்தடுக்க உடற்பயிற்சி முக்கியம்! உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எலும்பில் கால்சியம் அதிகமாகி எலும்பு வலிமையுடன் கனமாக ஆகிவிடும்.//

  பயிற்சி செய்து புருஸ் லீ ஆகுங்க!

  ReplyDelete
 37. //கழுத்துச் சலங்கைகள் கலகலக்க
  கடந்து போனது மாட்டு வண்டியொன்று
  பின்னே குழந்தைகள் நிரம்பிய
  ரிக்‌ஷாவும் ஒரு ஆட்டோவும் தொடர
  கதவில் கட்டிய பையில் பால்காரன்
  பாக்கெட்டுகளைப் போட்டுவிட்டுப் போனான்
  ஜிம்மியின் வாலாட்டமும் குரைப்பும் நிற்கவேயில்லை//

  சூப்பரா எழுதியிருக்காருங்க வற்றாயிருப்பு சுந்தர்...
  ஒரு சிறுகதைக்குரிய வர்ணனையை ஒரு கவிதையில் சொல்லியுள்ள விதம் அழகு.

  ReplyDelete
 38. முதலில் மாத்திரைகள் மூலம் எலுமபு வலியையும்,தேய்மானத்தையும் குறைக்கலாம்.தற்போது எலும்பு ஜவ்வு வளர உதவி செய்யும் மாத்திரைகள் வந்து உள்ளன! அவைபக்கவிளைவு இல்லாதவை! வெளிநாட்டினர் இதைத்தொடந்து சாப்பிடுகிறார்கள்!இங்கும் அந்த மருந்துகள் வந்துவிட்டன!//

  விலை அதிகமோ?

  ReplyDelete
 39. நம்ம வாஜ்பாய்க்கு இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் செய்யப்பட்டு உள்ளது!//

  அப்படியா?

  ReplyDelete
 40. புதியவர்களைத் கண்டு பிடிப்பதில் மிகுந்த சிரமம் உள்ளதுசிலர்நமக்குத்தெரியாதவர்களாக இருப்பாங்க! ஆனா வேற வட்டத்தில் பிரபலமாக இருப்பார்கள்! ஆகவே இதில் நான் சொல்லும் யாரும் புதியவர் அல்லர்! புதிய கருத்துக்கள் சொல்பவர்கள்!///

  அப்ப புதியவன் மட்டும்தான் புதியவரா?

  ReplyDelete
 41. //iniya said...
  டொன் லீ ஒரு ப்ரூஸ் லீ!!//

  கோல்கேட் ப்ரூஸ் ஆ... ஓரல்-B ப்ரூஸா...//

  பகிடியா? //

  அட..ஆமாங்க..சண்டைக்கு யாரும் வர்லனா நாங்க இப்படித்தான்.

  ReplyDelete
 42. டொன் லீ பதுங்கிப்பாயும் சிங்கை சிங்கம்!அதுவும் பகிடி விட வரும் சிங்கம்!!!//

  நல்ல அறிமுகம்!!

  ReplyDelete
 43. /iniya said...
  டொன் லீ ஒரு ப்ரூஸ் லீ!!//

  கோல்கேட் ப்ரூஸ் ஆ... ஓரல்-B ப்ரூஸா...//

  பகிடியா? //

  அட..ஆமாங்க..சண்டைக்கு யாரும் வர்லனா நாங்க இப்படித்தான்.///

  சிங்கம் வலுச்சண்டைக்கு வராதுதான்

  ReplyDelete
 44. //iniya said...
  @ஜமால்

  ஹா ஹா.....

  கொரில்லா போர் தந்திரமுறை.//

  புரியலியே!
  //

  அதாவது மறைந்திருந்து தாக்குதல்..

  25,50,100 பின்னூட்டங்கள் நெருங்குகிறதென்றால் கொஞ்ச நேரம் பதுங்கியிருந்து,
  சத்தமே இல்லாமல், தடாலடியாக அந்த எண்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

  இதுதான் கொள்கை விளக்கம்.

  ReplyDelete
 45. கொள்கை விளக்கத்துக்கு அப்புறம் சத்தத்தையே காணோம்,,,

  ஆஹா..நீங்க ஒரு குத்து மதிப்பா தான் கேட்டீங்களா...

  நானாத் தான் உளறிட்டனா..

  ReplyDelete
 46. நான்காம் நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 47. நான்காம் நாள் வாழ்த்துக்கள்///

  வணக்கம் வணங்காமுடி.

  ReplyDelete
 48. அ.மு.செய்யது said...
  50//

  செய்யது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 49. @ஹரிணி அம்மா

  நன்றி அம்மா...

  ReplyDelete
 50. 4‍ம் நாள் வாழ்த்துக்களோடு உள்ளே போய்ட்டு வாரேன்

  ReplyDelete
 51. //சிஷ்யனுக்கு வாழ்க்கையின் தத்துவம் புரிந்து விட்டது. நமக்குந்தான்!!

  //

  உஙகளுக்கு புரிஞ்சுதா தேவா

  ReplyDelete
 52. டொன்லீ தவிர்து மற்றவர்கள் புதியவர்கள்
  நன்றி அறிமுகப்படுத்தியதற்கு

  ReplyDelete
 53. டொன்லீ இவர் குழம்பாமல் பதிவு போட்டு படிப்பவர்களை குழப்புவார் (டென்னிஸ் விளையாட்டு ஒரு உதாரணம்)

  ReplyDelete
 54. யாருமே இல்லியா.. யாருமே இல்லாத கடையிலே யாருக்கு டீ ஆத்துரேனே தெரியலே... ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 55. //இருப்பவை நிகழ்பவை அனைத்துக்கும்
  காரணங்கள் சொல்ல முடியுமென்றால்
  மனிதன் கடவுளாகிவிடுவானே
  நான் கடவுள் அல்ல!//

  வற்றாயிருப்பு சுந்தர்,நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை. இயல்பாக இருந்தது கவிதை. உரல் = கிணறுதானே? நன்று!

  ReplyDelete
 56. நாளும் ஒரு வியாதி பற்றி ரொம்ப அழகா சொல்றீங்க.. நீங்க மருத்துவர்தான் ஒத்துக்கறேன்...

  ஆக மொத்தம் எல்லா வியாதிகளுக்கும் Excercise தான் Important தெரியுது

  ReplyDelete
 57. நாளும் ஒரு வியாதி பற்றி ரொம்ப அழகா சொல்றீங்க.. நீங்க மருத்துவர்தான் ஒத்துக்கறேன்...

  ஆக மொத்தம் எல்லா வியாதிகளுக்கும் Excercise தான் Important தெரியுது//

  Abu you are right..

  ReplyDelete
 58. //இருப்பவை நிகழ்பவை அனைத்துக்கும்
  காரணங்கள் சொல்ல முடியுமென்றால்
  மனிதன் கடவுளாகிவிடுவானே
  நான் கடவுள் அல்ல!//

  கவிதை பியூட்டிஃபுல்..

  ReplyDelete
 59. டொன்லீ யைப் பற்றி குறிப்பிட்டு விட்டு அவருடைய சிங்கை பதிவர் சந்திப்புகள்
  பற்றிய வர்ணனைப் பதிவுகளை மிஸ் பண்ணிட்டீங்களே !!!!//

  பிரபலமானது அது..

  ReplyDelete
 60. உதயகுமாரின் 'பச்சோந்தி கல்' என்றதும் ஏதும் விஞ்ஞானக்கதையோ என்று நினைத்தேன். தமாசோ தமாசு.

  ReplyDelete
 61. என் வலைப்பதிவில் கவிதைக் கோலம் வரைந்திருக்கிறேன். வருக! கருத்து தருக!

  ReplyDelete
 62. நான்காம் நாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 63. நியமா அந்த மரங்கள் எல்லாம் சந்திசமாவா இருக்கு எனக்கு தெரியவில்லையே அண்ணா. இருக்கும் கவலைகளை எல்லாம் வெளிக் காட்டாமல் இருக்கின்றன என்று நினைக்கிறேன்....

  ReplyDelete
 64. தொடரட்டும் உங்கள் பணி.....

  ReplyDelete
 65. புதியவர்களைத் கண்டு பிடிப்பதில் மிகுந்த சிரமம் உள்ளதுசிலர்நமக்குத்தெரியாதவர்களாக இருப்பாங்க! ஆனா வேற வட்டத்தில் பிரபலமாக இருப்பார்கள்! ஆகவே இதில் நான் சொல்லும் யாரும் புதியவர் அல்லர்! புதிய கருத்துக்கள் சொல்பவர்கள்!//
  சரியா சொன்னிங்க..

  ReplyDelete
 66. இந்தியர்கள் எங்கே சென்றாலும் தங்கள் குடும்பப் பின்னணியை கூடவே எடுத்துப் போகிறார்கள். //

  ஆமாம்! நம் மரபு அதுதானே!

  ReplyDelete
 67. Jenni ன் மனதில் இடம் பிடித்த சிவாவிற்கு இன்னொரு நிறுவனத்தில் இருந்து நேர்முகத்தேர்வு அழைப்பு வந்தது. நல்லவேளை அங்கே HR Admin அரைக் கிழவியாக இருந்ததால் என்னமோ, 2 நேர்முகத்தேர்வுகளிலும் (HR, Engineering Manager) தேறினான். வேலையிலும் இணைந்தான்.///

  அரைக் கிழவியாக--கண்டிக்கிறோம்

  ReplyDelete
 68. Jenni ன் மனதில் இடம் பிடித்த சிவாவிற்கு இன்னொரு நிறுவனத்தில் இருந்து நேர்முகத்தேர்வு அழைப்பு வந்தது. நல்லவேளை அங்கே HR Admin அரைக் கிழவியாக இருந்ததால் என்னமோ, 2 நேர்முகத்தேர்வுகளிலும் (HR, Engineering Manager) தேறினான். வேலையிலும் இணைந்தான்.///

  அரைக் கிழவியாக--கண்டிக்கிறோம்///

  நானும் கண்டிப்பாக..

  ReplyDelete
 69. மாதங்கள் ஓடின.சிவா, Jenni இருவரும் Prohibition காலம் முடிந்து வேலையில் மட்டுமில்லாமல் காதலிலும் நிரந்தரமாகிவிட்டிருந்தனர். ///

  வேலை வேலையாத்தான் இருக்கும்..

  ReplyDelete
 70. டொன்லீயை தவிர மற்ற அனைவர்களும் எனக்கு புதிது

  புதிய அறிமுகங்களுக்கு நன்றி

  உங்கள் கதையும் அருமை!

  ஒப்பிடுதல் இயற்கையாக நமது மனதுக்கு வருவதில்லை, அதற்கு சமூகமும் ஒரு காரணம்

  ReplyDelete
 71. நான்காம் நாள் வாழ்த்துக்கள் தேவா

  ReplyDelete
 72. //ஹரிணி அம்மா said...
  நான்காம் நாள் வாழ்த்துக்கள்///

  வணக்கம் வணங்காமுடி.
  //

  வணக்கம்...

  செய்திகள் வாசிப்பது அண்ணன் வணங்காமுடி!!!

  ReplyDelete
 73. குட்டிக்கதை,மூட்டு வலிக்கு நிவாரணம் சொல்லி நான்காம் நாளின் உற்சாகத்தோடு களித்திருக்கும் தேவாவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 74. நான்காம் நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 75. வாழ்த்துக்கள் தேவா...

  ReplyDelete
 76. நான்காம் நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 77. intha oru vaarathula yella noikalai pathium therinchidum..mm..nandri

  ReplyDelete
 78. //இந்தியர்கள் எங்கே சென்றாலும் தங்கள் குடும்பப் பின்னணியை கூடவே எடுத்துப் போகிறார்கள்.//

  kandippa..repeatoo repeatuu

  ReplyDelete
 79. intha oru vaarathula yella noikalai pathium therinchidum..mm..nandri

  ReplyDelete
 80. வாருங்கள் என் வலைப்பக்கமும்
  புதிய சிந்தனையுடன் ஒரு பதிவு

  ReplyDelete
 81. //தங்கள் குடும்பத்துக்குள் இருப்பது போலவே உணர்கிறார்கள்''! என்பது உளவியல் அறிஞர் ஆலன் ரோலண்ட் கருத்து//

  athuthavarkalukku than nammai pathi nalla theriyuthu:-)

  ReplyDelete
 82. நன்றி தேவா..என்னையும் கெளரவப்படுத்தியதற்கு..வேலை முடிந்த பின்பு தான் வலைப்பூ பக்கம் வர முடிகின்றது..உங்கள் பதிவுகளை படித்துக் கொண்டே உள்ளேன்..

  மருத்துவ தகவல்களுக்கிடையே அப்படியே கதைகள், பகிடி என்று கலக்கிறியள்..உங்கட்ட வாறவை கொடுத்து வைச்சவை தான்...:-)

  ReplyDelete
 83. ஜமால், அமு செய்யது...2 பேரும் என்னை வைச்சு நல்லா பகிடி விடுறியள்..

  ReplyDelete
 84. நன்றி இனியா..அப்ஸர்..என்னைப் பற்றிய பாராட்டுகளுக்கு :-)

  ReplyDelete
 85. மின்னல் அவர்களின் பதிவுகளை படிக்க முடியாமல் எழுத்துரு காட்சியளிக்கிறது. எனக்கு மட்டுமா இப்படி?

  ReplyDelete
 86. \\’டொன்’ லீ said...

  ஜமால், அமு செய்யது...2 பேரும் என்னை வைச்சு நல்லா பகிடி விடுறியள்..\\

  இல்லை நண்பரே

  ReplyDelete
 87. நான்காம் நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 88. டொன் ‘லீ’

  மிக அருமையான வர்ணனையாளர்

  ReplyDelete
 89. மூட்டு தேய்மானம்

  நல்ல பகிர்வு மருத்துவரே !!!!!!!

  ReplyDelete
 90. 4 நாட்கள் ஆயிடிச்சா ...

  ReplyDelete
 91. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தேவா!!!

  ReplyDelete
 92. / iniya said...

  டொன் லீ ஒரு ப்ரூஸ் லீ!!/

  :))

  ReplyDelete
 93. யாராவது இருக்கீங்களா?

  ReplyDelete
 94. அப்படின்னா இது தான் நூறாவது கமெண்ட்..:)

  ReplyDelete
 95. புதியவன் நலமா??

  ReplyDelete
 96. அப்படின்னா இது தான் நூறாவது கமெண்ட்..:)///

  சென்சுரி புதியவன்!!

  ReplyDelete
 97. அது புதியவன் இல்லை

  நல்லவர்

  ReplyDelete
 98. நூறு அடிச்சவருக்கு வாழ்த்துக்கள்

  (சொல்லலாம் தானே)

  ReplyDelete
 99. கழுத்துச் சங்கிலியிலிருந்து விடுபட்டதும்
  ஜிம்மிக்குத் தலைகால் புரியவில்லை
  தாவிக் குதித்து வீடு முழுதும் ஓடியது
  உடல் வளைத்துக் கால்களையுரசி//

  நாயின் சந்தோச்ம்

  ReplyDelete
 100. மின்னல் அவர்களின் பதிவுகளை படிக்க முடியாமல் எழுத்துரு காட்சியளிக்கிறது. எனக்கு மட்டுமா இப்படி?///

  அப்படியா?

  ReplyDelete
 101. கனமான அட்டைகளிடையும்
  அடங்காத காற்றிற்கு
  படபடக்கும் பக்கங்களாய்
  உடலோடு
  மறைந்திருந்த உணர்ச்சிகளை
  ஒவ்வொன்றாய் புரட்டினாய்///

  அழகிய ஆரம்பம்..

  ReplyDelete
 102. தூரிகையின் வண்ணத்
  தீண்டல்களில்
  சுயம் தொலைத்த ஓவியமாய்
  அலைகழிந்து தவித்தாலும்
  கோர்க்கப்பட்ட தையல்களை
  அறுத்தொழிக்க இயலாமல்
  கழிவிரக்கத்தால் பரிதவித்தாலும்
  விட்டொழிய போவதில்லை
  காற்றும் கனமான அட்டைகளும்///
  நல்லா எழுதி உள்ளீர்.

  ReplyDelete
 103. இப்போது அதன் எல்லை திண்ணையோடு
  நிற்காமல் வீடு முழுதும் பரந்து விரிந்துவிட்டது///

  set it free

  ReplyDelete
 104. உற்சாகம்
  பாலாய் பொங்கிட
  நெருப்பணைக்க கூடாதென்ற
  அக்கரையோடு
  அட்டைகள் அணைத்திருக்க///
  அட்டைக்கு இவ்வள்வு அக்கறையா?

  ReplyDelete
 105. கழுத்துச் சலங்கைகள் கலகலக்க
  கடந்து போனது மாட்டு வண்டியொன்று
  பின்னே குழந்தைகள் நிரம்பிய
  ரிக்‌ஷாவும் ஒரு ஆட்டோவும் தொடர
  கதவில் கட்டிய பையில் பால்காரன்
  பாக்கெட்டுகளைப் போட்டுவிட்டுப் போனான்
  ஜிம்மியின் வாலாட்டமும் குரைப்பும் நிற்கவேயில்லை///

  ஜிம்மியும் ஒரு குழந்தைதான்

  ReplyDelete
 106. எதிர்வீட்டு முன் விளக்குக் கம்பத்தில் தோன்றியது
  அந்தக் கரிய தெருநாய்
  கழுத்துப்பட்டை எதுவுமில்லா முகவரியற்ற
  நாய் அது
  காலைத் தூக்கிக் கம்பத்தில் சிறுநீர் கழித்தது
  ஓரமாய்க் கிடந்த வாழையிலையைப் பிரித்து
  முகர்ந்து லேசாக நக்கியது - பின்பு
  விறுவிறுவென்று என் வீட்டை நோக்கி வந்தது///

  அதன் வேலை அதற்கு...

  ReplyDelete
 107. தூரிகையின் வண்ணத்
  தீண்டல்களில்
  சுயம் தொலைத்த ஓவியமாய்
  அலைகழிந்து தவித்தாலும்
  கோர்க்கப்பட்ட தையல்களை///

  மின்னல் அருமை.

  ReplyDelete
 108. அறுத்தொழிக்க இயலாமல்
  கழிவிரக்கத்தால் பரிதவித்தாலும்
  விட்டொழிய போவதில்லை
  காற்றும் கனமான அட்டைகளும்//

  அட்டையை வைத்த் இப்படி ஒரு கவிதையா?

  ReplyDelete
 109. சமீபத்திய கொண்டாட்டத்தை நிறுத்தி
  ஜிம்மி மெதுவாக உள்ளே நடந்துவந்தது
  என் காலடியில் நின்றது - ஒருமுறை
  தன்னைச் சுற்றிவிட்டு அமர்ந்து
  முன்னங்கால்களின் மீது தலையைச்
  சாய்த்துக்கொண்டது
  வீட்டினுள் மௌனம் நிரம்பியிருக்க
  என் விழிகள் வாசிப்பைத் தொடர்ந்//

  சூப்பர்!!

  ReplyDelete
 110. பெரியண்ணன் என்னைவிட 15 வருடங்கள் மூத்தவர். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அவர் வீட்டிலேயே இல்லை. அதனால் அவரது இளமைக் காலத்தைப் பற்றி பின்னால் மற்றவர்கள் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.//

  உண்மயில் பெரிய அண்ணன்!!

  ReplyDelete
 111. இது ஒரு பாலிவுட் படம். ஜனவரியில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை டாடா ஸ்கை 'ஷோ கேஸ்' இல் பார்க்கலாம். குனால் ராய் கபூர் என்பவர் இயக்கியிருக்கிறார்.///

  மொழிபெயர்ப்பு அருமை..

  ReplyDelete
 112. பொழுதென்று புல‌ராத
  ஒரு உன்ன‌த‌ க‌ண‌த்தில்
  தொட‌ங்கிய‌ப் பேச்சுக‌ள்
  முடிவிலிக‌ளாய்
  தொட‌ர‌//

  மின்னல் கலக்குகிறார்..

  ReplyDelete
 113. எனக்கு 3 அல்லது 4 வயதிருக்கும்போதே பெரியண்ணன் சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் படிக்கச் சென்றுவிட்டார். எப்போதாவது விடுமுறைக்கு சிதம்பரம் வருவார். கூடவே தனது zimbabwe, Iran நாட்டு நண்பர்களை அழைத்து வருவார். தஸ்புஸ் என்று ஆங்கிலத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை நான் வியப்பாக வேடிக்கைப் பார்த்தது நினைவிருக்கிறது //
  பசுமையான நினைவுகள்!.

  ReplyDelete
 114. விழி வ‌ழி விழுங்கிய‌
  உருவ‌ம்
  ஒன்று ப‌ல‌வாகி
  உயிர் முற்றிலும்
  நிறைத்திட‌//

  பயங்கரமா இருக்கே!

  ReplyDelete
 115. வலைச்சர ஆசிரியராய் தங்களைக் காண்பதில் மகிழ்கிறேன்... கடந்த சில நாட்களாக உடல்நலமின்மை காரணமாக இணையத்தில் வரவில்லை... அதன் காரணமாகவே தங்களை வாழ்த்த இயலாமற் போயிற்று..

  சகோதரி பிரியாவும், ஜமால் அண்ணாவும் தாங்கள் என்னையும் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்திருப்பதாகச் சொன்னார்கள்.. நன்றிகள் நண்பரே..

  உங்கள் அறிமுகங்கள் தகுதியானவர்களாய் இருப்பார்கள் என்பதில் நம்பிக்கை உள்ளது... ( என் இலைக்குப் பாயசம் இட்டுக் கொள்கிறேனோ.. :) )

  இருபினும், அவர்களை உடல்நலம் தேறிய பின் வாசிக்கிறேன்.. மன்னியுங்கள் அதுவரை...

  ReplyDelete
 116. கொஞ்சம் வேலை......

  நான்காம் நாள் வாழ்த்துக்கள் சார்..

  இப்ப எனக்கு படிக்க நேரமில்லை. ஆனா நிச்சயம் குறித்த வலைப்பூக்களைப் பார்வையிடுகிறறன்,,,

  ReplyDelete
 117. உங்கள் தத்துவக் கவிதை அருமை.....

  யாரும் யாருக்கும் உயர்வில்லை... சிலர் தமக்குள்ளான திறமையைக் கண்டுபிடிக்கிறார்கள், சிலர் அது இல்லை.. அவ்வளவ்தான்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது