07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 26, 2009

பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்

இந்த ஒரு வார வலைச்சர ஆசிரியப்பணியில் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வலைச்சரத்தில் மல்லிப்பூக்களைத் தொடுத்துக் கொண்டு வருகிறேன். இந்த வலைப்பூச்சரம் மணமோடு கூடிய வாடா மல்லிப் பூச்சரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அஞ்சு, ஆறு, என்று போய்க் கொண்டிருக்கிறேன் . அதனால் கொஞ்சம் களைப்படையாமல் இருப்பதற்கு ஆறையும், அஞ்சையும் கூட்டிப்பார்த்தேன் ஆரஞ்சு கிடைத்தது(6+5=11) . அதில் நான் சொன்னது போல் 11 சுளை இருந்தது(இருக்கும்). சாப்பிட்டு, கொஞ்சம் இளைப்பாறிக் கொள்கிறேன்.

பழமொழி அல்லது முதுமொழி என்பது பண்டைய காலத்தில் வழங்கப்பட்டு வந்த சொல். முதுமொழி என்பதை முதுமைசொல் என்று, கெட்ட சொற்களை பயன் படுத்தி வைவதைக்(திட்டுவதைக்) கூட பெரும்பாலான இடங்களில் வட்டார வழக்கில் பயன்படுத்தும்போது பார்த்திருக்கிறோம். முதிர்ச்சியான பெரியோர் சொல் முதுமொழி என்றாலும், பிஞ்சிலே பழுத்த பழம் என்று சொல்வோம் அல்லவா அந்த வகையில் கெட்ட சொற்களை முதுமைசொல் என்று சொல்கிறாகளோ என்னவோ?

"அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால், வெங்காயம் கருவேப்பிலை என்று பாடுவாள்" இந்தப் பழமொழி சொல்வதைத் தான் வள்ளுவர் இப்படி சொல்கிறார்,
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

இதை எதற்கு கூறுகிறேன் என்றால், நான் இங்கு அங்காடிக்காரி சங்கீதம் பாடுவது போல் பாடிக்கொண்டிருக்கிறேனோ என்று ஒரு சிறிய சந்தேகம். கூட்டம் இல்லாவிட்டாலும் எனது பாகவதர் சங்கீதத்தை நான் நிறுத்தப் போவதில்லை. ஆமா!

ஆழம் தெரியாம காலை விடாதேன்னு சொல்லுவோம்(ஐயோ! எனக்கு இப்ப அப்படித்தான் தோனுது). முயலாதவரை(றை) நீ கற்றுக் கொள்ள முடியாது என்றும் சொல்கிறோம். கயிற்றில் நடக்கும் சர்க்கஸ் பெண்மணி, முயலாமல் இருந்திருந்தால், கயிற்றில் நடந்து சாகசம் செய்ய இயலுமா?

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு சொல்றோம், ஒரு மாணவன், நான் கலெக்டர் ஆவேன்னு சொன்னா சிரிக்கிறோம். இதையெல்லாம் நெருடலான விசயங்களாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஓட்டை ஒடச ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் போல், நாமளும் நம்ம பழமொழிகளுக்குள் நிறைய ஓட்டைகள் வைத்துகொண்டு சாக்கு போக்கு சொல்லி சமாளித்துக் கொண்டு வருகிறோம். ஏறத்தாழ அரசியல் வாதிகள் அல்லது சட்ட நிபுணர்கள் மாதிரி தான் நாமளும். அது நமக்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் கொடுக்கிறது.


தவறுகளின் தடயங்களை அழித்துக்கொண்டு, தற்காலிக மகிழ்வடையும் அழி ரப்பராக இல்லாமல் கூர் முனை எழுதுகோல் தடுக்கி விழுந்த இடங்களை தவறு என்று அடித்து வைத்திருந்தால் அதுவே நமக்குப் பாடமாக அமையும்.

பண்பாடு

பழமொழிகளைப் பற்றி பேசிக்கொண்டு வரும்போது இன்னொரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது. அண்மைய காலங்களில்(சென்ற தலைமுறை) , மனிதர்கள் முன் ஒன்றைச் செய்ய வெட்க்கப்படுபவர்கள், விலங்குகள் பறவைகள் முதலியவற்றின் முன் அவற்றைச் சிறிதும் நாணமிலாமல் செய்வார்கள். பழங்காலத்தில் வெள்ளைக்காரர்கள் நீக்ரோக்களான, கறுப்பின மக்களுக்கு முன் எது செய்யவும் வெட்கப் பட மாட்டார்களாம். பண்டையத் தமிழ்க் காதலி ஒருத்தி தன் தாயால் விதைத்து வளர்க்கப்பட்ட புன்னை மரத்தின் அருகில் இருந்து கொண்டு தன் காதலனுடன் பேசக் கூசினாளாம். இந்த நிகழ்வு, பயிருக்கும் உயிர் உண்டு என்னும் வள்ளலார் சிந்தனையை நினைவு கூர்கிறது. தற்காலத்தில் பேருந்திலிருந்து, பெருவிரைவு வண்டி வரை நாம் காணும் காட்சிகள் நம்மை விலங்குக்ளாக்கிச் செல்கின்றனவா? அல்லது வேறா? என்கிற மிகப்பெரிய கேள்விக்குறியை நம்முள் விதைத்துச் செல்கின்றன.

அண்மையில் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது உடன் பயணம் செய்த ஐம்பது வயது மதிக்கத்தக்க இரு தமிழர்கள் பேசிக்கொண்டு வந்ததை செவிமடுக்க நேர்ந்தது. எனக்கும் மட்டும் அது நேரவில்லை, அந்த பேருந்தில் பயணம் செய்த அனைவருக்கும் நேர்ந்தது. ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளை கலப்படம் செய்து பேசிவந்தவர்கள், தமிழைக் கலக்காதது கண்டு மகிழ்வோடு இருந்தேன். அந்த மகிழ்ச்சி எனக்குத் தொடர்ந்து வாய்க்கவில்லை. ஆங்கிலம் மற்றும் மலாய் கலந்து பேசியவர்கள் மருந்துக்குக் கூட தமிழைக் கலக்கவில்லை. மாறாக அவ்வப்போது கெட்ட வார்த்தைகளால் மட்டும் தமிழைக் காறித் துப்பினார்கள். பேருந்தில் பயணம் செய்ததில் அவ்விருவர் தவிர நான் மற்றும் இன்னொரு தமிழ் இளைஞர் பயணம் செய்தார், மற்றவர்கள் எல்லாம் சீனர்கள். அப்போது சிந்தித்தேன், இளைய சமுதாயத்திற்கு பெரியவர்கள் விட்டுச்செல்லும் தமிழ் இதுமட்டும் தானா என்று.........!?

அறிமுகம்

சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று பல்வேறு இலக்கிய சூழலில் பயணிக்கும் கவிஞர் மாதங்கி அவர்கள் "பெரிதினும் பெரிது கேள்" என்கிறார். இயற்கையிலிருந்து எண்ணங்கள் வரை நாடிபிடித்துப் பார்த்து எழுதியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். புனைவுகளைப் புகுத்தாமல் புன்னகைக்கிறது இவரது கவிதைகள். சிங்கையில், ஞாயிற்றுக்கிழமைகளில் குட்டி இந்தியா எனப்படும் தேக்கா வெட்டவெளியில் கூடும் வெளிநாட்டு ஊழியர்களின் கனவுகள், எந்தத் தடத்தில் ஊர்கின்றன என்று பாத்திரமாகிப் பார்த்திருக்கிறார். சிறுகதைகள் பல எழுதி இருக்கிறார். அவருடைய வலைப்பூவிற்கு நாமும் பயணிக்கலாமே!

கவிஞர் கிருத்திகா, கவிதைகளை அழகுற அழகியலைக் கொண்டுவந்து, பளீரென்று உரைக்கிறார். தனது என்ன உணர்வுகளை அணைபோட்டுத் தேக்கி வைக்காமல் வடிகால் வலைப்பூவில் வகை வகையாய் விவசாயம் செய்து வைத்திருக்கிறார். அவர் எழுதிய பெண்பால் கவிதைகள் மட்டும் நம்பால் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. மற்ற கவிதைகளும் தான். முகமூடிக் கவிதைகள் கூட எழுதியிருக்கிறார். அதெயெல்லாம் படிப்பதற்கு முகமூடி தேவையில்லை. நாமும் அங்கு பயணித்து வடிகாலில் வலைபோடலாமே! நாம் விரும்பும் விண்மீன்கள் கூட சிக்கலாம்.

ஷைலஷா அவர்கள் தனது எண்ணிய முடிதல் வேண்டும் என்னும் வலைப்பூவில் முதுமையின் அவலத்தை தனது சருகு என்னும் கவிதையில் தோலுரித்துக் காட்டுகிறார். அடுத்த தலைமுறையின் அவமதிப்பை அவதானித்திருப்பார் போலும். எண்ணற்ற கவிதைகளை எழுதி, எண்ணிய முடிதல் வேண்டும் என்னும் வலைப்பக்கத்தில் சரம் தொடுத்து வைத்திருக்கிறார். நாமும் அம்மலர்ச்சரத்தைச் சூடி மகிழலாமே!

அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை என்று சொல்வோம், இது காதல் ஜோதி, அருட்பெருங்கோ. அழகான காதல் கவிதைகளை மெல்லிய வருடலோடு தருகிறார். காதலில் விழுந்திருப்பவர்களுக்கு பருவமழை போற்ற கவிதைகள். அனுபவித்து எழுதியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. காதலைப்பற்றிய நேர்மறையான சின்னச்சின்ன மௌன மொழிகளையும் கவிதையாக்கி வைத்திருப்பவர். நாமும் அமராவதி ஆற்றங்கரைக்குப் போய் அந்தப் பருவ மழையில் நனையலாமே!

வாங்க பேசலாம் என்று அழைக்கிறார் வா.மணிகண்டன். உணர்வுகளை ஒப்பனையில்லாமல் கவிதைகளாக எழுதி வருபவர். வலிமையான வரிகளை உள்ளிருத்தி எழுதும் பாங்கு நன்றாக இருக்கிறது. ஈழத்தில் நம் மக்கள் படும் துயரத்தை நினைத்து என்னால் கவிதை எழுத மட்டுமே முடிகிறதே என்று கசிந்துருகியிருக்கிறார். ஓர் இரவின் அகாலத்தில் அந்த மரணம் நிகழ்ந்தது என்ற கவிதையில் தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார். சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். நாமும் அவருடைய வலைப்பக்கத்தை அலசிப்பார்க்காலாமே!

இன்னும் தொடருவேன்...!

அன்பன்,
ஜோதிபாரதி.

ஜோதிபாரதி - வலைச்சர ஆசிரியப்பணி! இடுகைகள் அனைத்தும்!

வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்

விருந்துக்கு வாங்க! -வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

சரியா? தவறா?-வலைச்சரத்தில் நான்காம் நாள்

பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்

கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்

பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்


46 comments:

 1. வாழ்த்துகள்

  ReplyDelete
 2. /அஞ்சு, ஆறு, என்று போய்க் கொண்டிருக்கிறேன் . அதனால் கொஞ்சம் களைப்படையாமல் இருப்பதற்கு ஆறையும், அஞ்சையும் கூட்டிப்பார்த்தேன் ஆரஞ்சு கிடைத்தது(6+5=11) . அதில் நான் சொன்னது போல் 11 சுளை இருந்தது(இருக்கும்). சாப்பிட்டு, கொஞ்சம் இளைப்பாறிக் கொள்கிறேன்./

  அருமை
  படித்தவற்றை மீண்டும் சுவைக்க முடிந்தது

  ReplyDelete
 3. பல நல்ல மீண்டும் ஒருமுறை படிக்கும் வாய்ப்பு கிட்டது

  வாழ்த்துகள்

  ReplyDelete
 4. ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. வெற்றிகரமான ஐந்தாம் நாள் வாழ்த்துகள் !!!!!!

  ReplyDelete
 6. //அஞ்சு, ஆறு, என்று போய்க் கொண்டிருக்கிறேன் . அதனால் கொஞ்சம் களைப்படையாமல் இருப்பதற்கு ஆறையும், அஞ்சையும் கூட்டிப்பார்த்தேன் ஆரஞ்சு கிடைத்தது(6+5=11) . அதில் நான் சொன்னது போல் 11 சுளை இருந்தது(இருக்கும்). சாப்பிட்டு, கொஞ்சம் இளைப்பாறிக் கொள்கிறேன்.//

  வார்த்தை விளையாட்டு....

  ReplyDelete
 7. இந்த ஒரு வார வலைச்சர ஆசிரியப்பணியில் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வலைச்சரத்தில் மல்லிப்பூக்களைத் தொடுத்துக் கொண்டு வருகிறேன். இந்த வலைப்பூச்சரம் மணமோடு கூடிய வாடா மல்லிப் பூச்சரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\\

  மணம் இன்னும் வீசுகிறது

  தொடருங்கள் ...

  ReplyDelete
 8. பிஞ்சிலே பழுத்த பழம் என்று சொல்வோம் அல்லவா அந்த வகையில் கெட்ட சொற்களை முதுமைசொல் என்று சொல்கிறாகளோ என்னவோ?\\

  ஓஹ்! அப்ப இதுவும் கெட்ட வார்த்தையா

  ReplyDelete
 9. \\"அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால், வெங்காயம் கருவேப்பிலை என்று பாடுவாள்" இந்தப் பழமொழி சொல்வதைத் தான் வள்ளுவர் இப்படி சொல்கிறார்,
  இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
  அதனை அவன்கண் விடல்\\

  திருக்குரலை

  தெருக்குரல்

  வைத்து அழகாய்
  விளங்கவைத்து விட்டீர்கள்

  ReplyDelete
 10. ஷைலஷா அவர்கள் தனது எண்ணிய முடிதல் வேண்டும் என்னும் வலைப்பூவில் முதுமையின் அவலத்தை தனது சருகு என்னும் கவிதையில் தோலுரித்துக் காட்டுகிறார். அடுத்த தலைமுறையின் அவமதிப்பை அவதானித்திருப்பார் போலும். எண்ணற்ற கவிதைகளை எழுதி, எண்ணிய முடிதல் வேண்டும் என்னும் வலைப்பக்கத்தில் சரம் தொடுத்து வைத்திருக்கிறார். >>>>


  ் மிக்க நன்றி ஜோதிபாரதி என் வலைப்பூவினை தாங்கள் இங்கு தேர்ந்தெடுத்தமைக்கு.
  உங்கள் வலைச்சரம் மணம் வீசும் கதம்பமாக இருக்கிறதே! ஆறு அஞ்சு ஆரஞ்சு ரசித்தேன்!

  அங்காடி சங்கீதமெலாம் இல்லை நல்ல பாங்கான சபாகச்சேரியாத்தான் இருக்கு! வாழ்த்துகள் ஜோதிபாரதி!

  ReplyDelete
 11. அங்காடி சங்கீதமெலாம் இல்லை நல்ல பாங்கான சபாகச்சேரியாத்தான் இருக்கு! வாழ்த்துகள் ஜோதிபாரதி!//

  நானும் வழிமொழிகிறேன்.

  அருமையான தொகுப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  ReplyDelete
 12. அங்காடி சங்கீதமெலாம் இல்லை நல்ல பாங்கான சபாகச்சேரியாத்தான் இருக்கு! வாழ்த்துகள் ஜோதிபாரதி!//

  நானும் வழிமொழிகிறேன்.

  அருமையான தொகுப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  ReplyDelete
 13. ஜோதிபாரதிக்கு ஐந்தாம்நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. //திகழ்மிளிர் said...

  வாழ்த்துகள்//

  முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி திகழ்!

  ReplyDelete
 15. நட்புடன் ஜமால் said...

  ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்//

  ஜமால் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!

  ReplyDelete
 16. //அ.மு.செய்யது said...

  //அஞ்சு, ஆறு, என்று போய்க் கொண்டிருக்கிறேன் . அதனால் கொஞ்சம் களைப்படையாமல் இருப்பதற்கு ஆறையும், அஞ்சையும் கூட்டிப்பார்த்தேன் ஆரஞ்சு கிடைத்தது(6+5=11) . அதில் நான் சொன்னது போல் 11 சுளை இருந்தது(இருக்கும்). சாப்பிட்டு, கொஞ்சம் இளைப்பாறிக் கொள்கிறேன்.//

  வார்த்தை விளையாட்டு....//

  நன்றி செய்யது!

  ReplyDelete
 17. //நட்புடன் ஜமால் said...

  இந்த ஒரு வார வலைச்சர ஆசிரியப்பணியில் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வலைச்சரத்தில் மல்லிப்பூக்களைத் தொடுத்துக் கொண்டு வருகிறேன். இந்த வலைப்பூச்சரம் மணமோடு கூடிய வாடா மல்லிப் பூச்சரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\\

  மணம் இன்னும் வீசுகிறது

  தொடருங்கள் ...//

  கொஞ்சம் இடையில தப்பிக்கலாமென்று பார்த்தால் விடமாட்டீங்க போலிருக்கே!

  ReplyDelete
 18. //நட்புடன் ஜமால் said...

  பிஞ்சிலே பழுத்த பழம் என்று சொல்வோம் அல்லவா அந்த வகையில் கெட்ட சொற்களை முதுமைசொல் என்று சொல்கிறாகளோ என்னவோ?\\

  ஓஹ்! அப்ப இதுவும் கெட்ட வார்த்தையா//

  அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள் வட்டார வழக்கில்!

  ReplyDelete
 19. //நட்புடன் ஜமால் said...

  \\"அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால், வெங்காயம் கருவேப்பிலை என்று பாடுவாள்" இந்தப் பழமொழி சொல்வதைத் தான் வள்ளுவர் இப்படி சொல்கிறார்,
  இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
  அதனை அவன்கண் விடல்\\

  திருக்குரலை

  தெருக்குரல்

  வைத்து அழகாய்
  விளங்கவைத்து விட்டீர்கள்//

  ஆகா! வார்த்தை விளையாட்டில் கலக்குகிறீர்கள் ஜமால்!

  ReplyDelete
 20. //ஷைலஜா said...

  ஷைலஷா அவர்கள் தனது எண்ணிய முடிதல் வேண்டும் என்னும் வலைப்பூவில் முதுமையின் அவலத்தை தனது சருகு என்னும் கவிதையில் தோலுரித்துக் காட்டுகிறார். அடுத்த தலைமுறையின் அவமதிப்பை அவதானித்திருப்பார் போலும். எண்ணற்ற கவிதைகளை எழுதி, எண்ணிய முடிதல் வேண்டும் என்னும் வலைப்பக்கத்தில் சரம் தொடுத்து வைத்திருக்கிறார். >>>>


  ் மிக்க நன்றி ஜோதிபாரதி என் வலைப்பூவினை தாங்கள் இங்கு தேர்ந்தெடுத்தமைக்கு.
  உங்கள் வலைச்சரம் மணம் வீசும் கதம்பமாக இருக்கிறதே! ஆறு அஞ்சு ஆரஞ்சு ரசித்தேன்!

  அங்காடி சங்கீதமெலாம் இல்லை நல்ல பாங்கான சபாகச்சேரியாத்தான் இருக்கு! வாழ்த்துகள் ஜோதிபாரதி!//

  தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி ஷைலஜா!

  ReplyDelete
 21. பரிந்துரை சுட்டிகளுக்கு நன்றி... :)

  ReplyDelete
 22. //புதுகைத் தென்றல் said...

  அங்காடி சங்கீதமெலாம் இல்லை நல்ல பாங்கான சபாகச்சேரியாத்தான் இருக்கு! வாழ்த்துகள் ஜோதிபாரதி!//

  நானும் வழிமொழிகிறேன்.

  அருமையான தொகுப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்//

  பாராட்டுகளுக்கு நன்றி சகோதரி புதுகைத் தென்றல்!

  ReplyDelete
 23. //அன்புமணி said...

  ஜோதிபாரதிக்கு ஐந்தாம்நாள் வாழ்த்துக்கள்!//

  தொடர் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அன்பு!

  ReplyDelete
 24. //நட்புடன் ஜமால் said...

  தமிழ்மண வாழ்த்துக்கள்//

  ஓ! அதுவா! நன்றி ஜமால்!

  ReplyDelete
 25. //இராம்/Raam said...

  பரிந்துரை சுட்டிகளுக்கு நன்றி... :)//

  தங்கள் வருகைக்கு நன்றி இராம்!
  தாங்கள் தமிழ்மண விருது பெற்றதற்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 26. உறவுகளையும் தாண்டி, பணம் இங்கு பிரதானப்படுத்தப்படும்போது இத்தகைய இழப்புகளை நாம் சந்தித்துதானே ஆக வேண்டியிருக்கிறது. மாதங்கி, உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.

  ReplyDelete
 27. ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. ஷைலஷா அவர்களின் கவிதை...இது வாழ்க்கையின் தத்துவக்கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 29. காதல்ல விழுந்துட்டா... இதெல்லாம் சகஜம்தானே அருட்பெருங்கோ!

  ReplyDelete
 30. ஈழம் பற்றிய தங்களின் கவிதை வரிகள் நெஞ்சை ஆழமாகவே தைக்கிறது. கையாலாகத அரசின் கீழ் கைகட்டி நிற்கிறோம்...

  ReplyDelete
 31. //அன்புமணி said...

  உறவுகளையும் தாண்டி, பணம் இங்கு பிரதானப்படுத்தப்படும்போது இத்தகைய இழப்புகளை நாம் சந்தித்துதானே ஆக வேண்டியிருக்கிறது. மாதங்கி, உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.//

  கண்டிப்பாக!

  ReplyDelete
 32. //T.V.Radhakrishnan said...

  ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்//

  வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி டிவிஆர் ஐயா!

  ReplyDelete
 33. //அன்புமணி said...

  ஷைலஷா அவர்களின் கவிதை...இது வாழ்க்கையின் தத்துவக்கவிதை! வாழ்த்துக்கள்!//

  உண்மை!

  ReplyDelete
 34. //அன்புமணி said...

  காதல்ல விழுந்துட்டா... இதெல்லாம் சகஜம்தானே அருட்பெருங்கோ!//

  சகசம் இல்லை அன்பு, காதலில் விழுந்தவர்களுக்கு இதெல்லாம் சாகசம்!

  ReplyDelete
 35. //அன்புமணி said...

  ஈழம் பற்றிய தங்களின் கவிதை வரிகள் நெஞ்சை ஆழமாகவே தைக்கிறது. கையாலாகத அரசின் கீழ் கைகட்டி நிற்கிறோம்...//

  கவிஞனுக்கே உரித்தான வெப்பம் கனன்று கொண்டிருக்கிறது!

  ReplyDelete
 36. கிருத்திகாவின்

  ‘வடிகால்’

  தொடர்ந்து வாசிக்கின்றேன் நானும் ...

  ReplyDelete
 37. ’வடிகாலு’க்காகவே

  வலையில் உலா வருபவன் நானும்.

  ReplyDelete
 38. //நட்புடன் ஜமால் said...

  கிருத்திகாவின்

  ‘வடிகால்’

  தொடர்ந்து வாசிக்கின்றேன் நானும் ...//


  வாசியுங்கள் ஜமால்!

  ReplyDelete
 39. // நட்புடன் ஜமால் said...

  ’வடிகாலு’க்காகவே

  வலையில் உலா வருபவன் நானும்.//

  சரியாகச் சொன்னீர்கள்!
  வடிகாலில் கூட மலர் வகைகள், மிளகாய்ச் செடி, கத்தரி, தக்காளி போற்றவற்றை பயிர்செய்து பயன் பெறலாம்.

  ReplyDelete
 40. மறுபடியும் ஒரு அறுசுவைப் பதிவு...

  பலவிடயங்களை அழகாக கோர்த்து கட்டுரையாக தந்திருக்கிறீர்கள்..

  வாழ்த்துகள்...

  ReplyDelete
 41. ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 42. //டொன்’ லீ said...

  மறுபடியும் ஒரு அறுசுவைப் பதிவு...

  பலவிடயங்களை அழகாக கோர்த்து கட்டுரையாக தந்திருக்கிறீர்கள்..

  வாழ்த்துகள்...//

  வருகைக்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றி டொன் லீ!

  ReplyDelete
 43. //அண்ணன் வணங்காமுடி said...

  ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்//

  வருகைக்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றி அண்ணன் வணங்காமுடி!

  ReplyDelete
 44. //நிஜமா நல்லவன் said...

  வாழ்த்துக்கள்!//

  நன்றி நிஜம்ஸ்!

  ReplyDelete
 45. "இளைய சமுதாயத்திற்கு பெரியவர்கள் விட்டுச்செல்லும் தமிழ் இதுமட்டும் தானா என்று.........!?"
  எமது பண்பாடு செல்லும் கோலம் பற்றிய உங்கள் சிந்தனைகள் பயனுள்ளவை.
  வலைசர ஆசிரியராக உங்கள் பணிக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது