07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 25, 2009

விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான் என்று சொல்வார்கள். அதனால் விருந்து மருந்து போன்றவற்றைப் பற்றி பேசுவதை மூன்றாவது நாளுடன் முடித்துக் கொள்கிறேன் என்று உறுதியளிக்கிறேன்.

விருந்துக்கும், மருந்துக்கும் உள்ள உறவுகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

விருந்தாளி வீட்டுக்கு வந்திருக்கும் போது கணவன்,மனைவி சண்டையிட்டுக் கொண்டால், அது விருந்தல்ல, மருந்து.

கிடா(கடா) வெட்டி சோறாக்கிப் போட்டா தான் விருந்து என்று நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். வீட்டுக்கு வரும் விருந்தாளியை வாசலில்/முச்சந்தியில்/பேருந்து நிலையத்தில் போய் வரவேற்று வீட்டுக்கு அழைத்துவந்து அன்பு கலந்த தேநீர் கொடுத்து அவர்களை நல்ல முறையில் கவனித்து, பின்னர் அனுப்பி வைத்தால் அதுவே சிறந்த விருந்து.

அசைவம் பரிமாறப் பட்டால் அது விருந்து. சைவமாக இருந்தால் விருந்தல்ல என்கிற மாயத் தோற்றத்தை விட்டு முதல் வெளியில் வந்து விடவேண்டும்.

எதுக்கெல்லாம் விருந்து?
நான் கண்டது கேள்விப்பட்டது சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆட்டு லோன் கிடைத்தால் கிடாக்கறி விருந்து. அரசாங்கம் பயிர்க்கடன், பம்புசெட்டு கடன் தள்ளுபடி செய்தால் விருந்து (கடனை ஒழுங்கா கட்டுனவங்க பாவம்), பாஸ் பண்ணுனா விருந்து பெயிலானா மருந்து, அரசியல் வாதிகளுக்கு ஏழைத் தொண்டன் வீட்டின் ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை அறுசுவை விருந்து, கல்யாணத்துக்கு விருந்து, காடாத்துக்கு மறுநாள் விருந்து, தலைவன் படம் ரிலீஸ் ஆனா விருந்து, தேர்தலுக்குத் தேர்தல் மக்களுக்கு அரசியல் வாதிகள் வைக்கும் பிரியாணி விருந்து, வேலை கிடைச்சா விருந்து, வெளிநாடு போனா விருந்து, வெளிநாட்டுலேருந்து வந்தா விருந்து. லாட்டரியில பரிசு விழுந்தா விருந்து, கடன் பட்டு பணத்துக்கு லாட்டரி அடிப்பவனுக்கு மருந்து, போட்ட மொய்ய வாங்குறத்துக்கு மொய் விருந்து, போட்ட மொய்ய திரும்ப போட பணம் இல்லன்னா மருந்து, இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.

விருந்தாளியை மையமாக வைத்து நிறைய நகைச்சுவை உணர்வுகளை வெளிப்படுத்துவது நம்மவர்க்கு கை தேர்ந்த கலை. விருந்தாளி குறித்த ஜோக்ஸ் நிறைய கேட்டிருப்பீர்கள்.

ஒருவர் தனது நண்பன் வீட்டிற்கு விருந்தாளியாகச் சென்றிருந்தார், அன்போடு வரவேற்ற நண்பனும் நண்பனின் மனைவியும், குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டு கொஞ்ச நேரம் கழித்து ஒரு பிளேட்டில் அல்வா எடுத்து வந்து டேபிளில் வைத்து சாப்பிட சொன்னார்கள். அவர்களின் உரையாடல் இதோ,

நண்பன் : அல்வா சாப்பிடுங்க (அல்வா சாப்பிடுங்கன்னு சொல்றாரா அல்லது அளவா சாப்பிடுங்கன்னு சொல்றாரா என்று விளங்கிக் கொள்ளமுடியாத குழரலான குரலில்)

விருந்தாளி : ( சந்தேகத்தோடு அல்வாவை அளவா எடுத்து வாயில் போடுகிறார்)

நண்பனின் மனைவி: அல்வா நல்லா இருக்கா?(விருந்தாளியின் பதிலை எதிர் பார்த்து நிற்கிறார் கரண்டியுடன்)

விருந்தாளி : (வாயில் போட்ட அல்வாவை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கிறார். துப்பவும் முடியாது. துப்பினால் மரியாதை குறைவு என்று நினைத்துக் கொள்கிறார்)
நண்பனின் மனைவி: அல்வா நல்லா இருக்கா? நான் செய்தது. இருட்டுக் கடை அல்வா மாதிரி இருக்கும்.

நண்பனும் நண்பனின் மனைவியும் விருந்தாளியின் பதிலை எதிர் பாத்துக் கொண்டு நிற்கிறார்கள்.

விருந்தாளி : (பல், நாக்கு, உதடு எல்லாம் ஒட்டிக் கொண்ட நிலையில், நண்பனிடம் பேச முடியாமல் சைகையில் தண்ணீர் கேட்கிறார்)

நண்பன் : (தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறார்)

விருந்தாளி : (வாஸ் பேசினுக்குச் சென்று வாயில் விரலை விட்டு வலுக்கட்டாயமாக ஒட்டிக் கொண்ட அல்வாவை இழுத்து, வாஸ் பேசினில் போட்டுவிட்டு, வாயை கழுவி விட்டு அப்பாடா விடுதலை கிடைச்சிடுச்சு என்று நினைக்கிறார். அப்படியே ஹாலில் வந்து திரும்பவும் உட்காருகிறார்)


விருந்தாளி அல்வாவைச் சாப்பிட்டாரா துப்பினாரா என்று தெரியாத நிலையில், இன்னும் விருந்தாளியின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்த நண்பனின் மனைவி..

நண்பனின் மனைவி: அல்வா நல்லா இருந்துச்சா?

விருந்தாளி : அல்வா நல்லா தான் இருந்திச்சு....! ஒரு மாதத்துக்கு முன்னாடி.

நண்பனின் மனைவி: என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலையே !

விருந்தாளி :அதுவா? தப்பு என்மேலதான்....! நான் தான் ஒரு மாதத்துக்கு முன்னாடி உங்கவீட்டுக்கு வந்திருக்கணும்.....! நல்லாத்தான் இருந்திச்சு அல்வா!

கலைச்செல்வனின் விருந்தோம்பல்

கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவன் கலைச்செல்வன். ஒருநாள் திடீரென்று அவனது தொடக்கப்பள்ளி ஆசிரியர் அவனைத்தேடி அவனுடைய இல்லத்துக்கு வந்துவிடுகிறார். திண்ணையில் அமர வைக்கிறான். அவருக்கு குடிக்கக் கொடுக்க எதுவும் இல்லை என வருந்துகிறான். வீட்டில் இருப்பதோ, கொஞ்சம் பழைய சோறும் நீராகாரமும். அதை ஆசிரியருக்குக் கொடுக்க அவனது மனம் இடம் கொடுக்கவில்லை. சாப்பிடக் கொடுக்க வேறு எதுவும் இல்லையே என்று வருந்துகிறான் கலைச்செல்வன். பாரதி சொன்ன காணி நிலத்து தென்னைமரம் போல் கலைச்செல்வனின் வீட்டுக்கு எதிரில் வெகு சில தென்னை மரங்கள் இருந்தன. ஆசிரியருக்கு இளநீர் பறித்துக் கொடுத்தால் என்ன என்று கலைச்செல்வனுக்கு தோன்றியது. அவசரமாக ஓடிப்போய் தென்னை மரத்தில் ஏறி, இளநீர் பறிக்கையில், இளநீர் கலைச்செல்வனைப் பறித்துக் கொண்டு வருகிறது. இளநீரோடு மரத்திலிருந்து கீழே விழுகிறான். பலத்த காயப்படுகிறான். உடனே ஆசிரியரும், மற்றவர்களும் கலைச்செல்வனுக்கு முதலுதவி செய்து மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கிறார்கள். அங்கு பிராணவாயு செலுத்தப்படுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியில் ஆசிரியர் மாறா சோகத்துடன் அமர்ந்திருக்கிறார். அன்பு மட்டும் சாரை சாரையாக வெளிப்படுகிறது ஆசிரியரின் கண்களில் இருந்து...!
இந்த நிகழ்வு எனது மனதை மிகவும் பாதித்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னொரு நெருடலான, மனசைப் பாதித்த செய்தி

திருமண விருந்துக்குசெல்பவர்கள்(இதுக்கு மட்டுமா செல்கிறார்கள்?) குடித்துவிட்டு(சரக்குதான்) பின்னர் சாப்பிடும் பழக்கத்தை சில இடங்களில் வைத்துக் கொள்கிறார்கள். இதில் கார், வேன் ஓட்டுபவர்கள்(உறவுகள்) மட்டும் விரதமா என்ன? அவர்களும் இந்த புதிய சடங்குகளில் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? இரண்டு மணிக்குக் குடிக்க ஆரம்பிப்பவர்கள், நாலரை மணி இராகு காலம் ஆரம்பிப்பதற்குள் விருந்து சாப்பாடு சாப்பிட்டு விட்டு பொண்ணு மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு காரில் செல்ல வேண்டும் என்கிற கட்டாயம் வேறு. ஆயிரம் கனவுகளோடு இவர்களுடன் கார் அல்லது வேனில் பயணம் செய்கிறார்கள் ஆயிரம் காலத்துப் பயிர்கள்- மணமக்கள்! திருமண கோஸ்டி கார் கவிழ்ந்தது, வேன் மோதியது, பலர் படுகாயம், மணமகன் அல்லது மணமகள் உயிரிழப்பு, போன்ற செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம், நாளிதழ்களில் படிக்கிறோம்.

அறிமுகம்

கண்ணே மணியே என்று கொஞ்சுவது உண்டு, ஐம்புலன்களில் கண் முதன்மையானது. கண் தெரியவில்லை என்றால் இவ்வுலகில் எந்த அழகையும் ரசிக்க முடியாது. அப்படிப்பட்ட கண்ணை இப்போதெல்லாம் கணினி முன்பும், தொலைக்காட்சி முன்பும் அமர்ந்து கெடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்படியே போனால் கண்ணை இமை கூட காப்பாற்ற முடியாது. காதலுக்கு கண் இல்லை என்று சொல்லுவார்கள். கண் இல்லை என்றாலும் காதலிக்கலாம். ஆனால், கண்ணும் கண்ணும் கொள்ளை அடிப்பதைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். கண்ணின் அருமை பெருமை தெரிந்து மருத்துவர் எம்.கே.முருகானந்தன் அவர்கள் ஹாய் நலமா? என்று அன்போடு "கண்களின் பாதுகாப்பு பற்றிய சில தவறான நம்பிக்கைகள்" என்ற தலைப்பில் அலசலான கட்டுரையைக் கொடுத்திருக்கிறார். அந்தக் கட்டுரையை மட்டுமல்ல, அவருடைய மற்ற பயனுள்ள இடுகைகளையும் படித்துப் பயன் பெறுங்கள்!


நமக்கெல்லாம் முருங்கையின் மகிமையைத் தெரியும். இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் தனது முந்தானை முடிச்சு என்ற படத்தில் அதைப் பற்றி அளவுக்கு அதிகமாகவே சொல்லிவிட்டார் என்று சொல்லலாம். அவர் மருத்துவர் கிடையாது. ஒரு மருத்துவர் முருங்கைக் கீரை, மற்றும் முருங்கை மரத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்கள் பல மருத்துவர்களின் கட்டுரைகளை மருத்துவம் என்கிற வலைபக்கத்தில் தொடுத்து வைத்திருக்கிறார். அதில் மருத்துவர் இக்பால் அவர்களின் "முருங்கைக் கீரையின், முருங்கை மரத்தின் மருத்துவப் பயன்கள்" என்ற தலைப்பிலான கட்டுரையைப் படித்து பயன் பெறுங்கள்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்து/அளவு வேறு, பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்து/அளவு வேறு. சில நேரங்களில் குழந்தைகளை பொது மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் அவர்கள் கொடுக்கச் சொல்லும் மருந்து அளவைக் கேட்க வேண்டும். திரு சேவியர் தனது கவிதைச் சாலை என்கிற வலைபக்கத்தில் அழகிய கவிதைகளை பதிவுகளாக்கிக் கொண்டிருப்பவர். கவிஞர்களின் சிந்தனைகளுக்கு எல்லை இல்லை என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. திரு சேவியர் அவர்கள், "குழந்தை மருத்துவம் : பெற்றோர் கவனத்துக்கு !" என்கிற ஒரு கட்டுரையை எழுதி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வூட்டுகிறார். படித்து பயன் பெறுங்கள், அவருடைய கவிதைகளையும்தான்!

பெரியார் சொன்ன வெங்காயத்துக்கு இவ்வளவு அரிய குணங்களா? பயனுள்ள சித்த மருத்துவ குறிப்புகள் என்ற வலைபக்கத்தில் திரு சிவகுமார் சுப்புராமன் அழகாக பதிவு செய்திருக்கிறார். தொடர்ந்து இந்த பக்கத்தில் உள்ள பதிவுகளையும் படித்து பயன் பெறுங்கள்.

பெண்களில் சிலர் உடலைக் குறைக்கிறேன் என்று அரைப் பட்டினியும் குறை பட்டினியுமாக கிடப்பதை பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். அது தேவையா? அல்லது நியாயமா? மருத்துவ கலாநிதி வே.நாகநாதன் தனது மருத்துவம் வலைபக்கத்தில் பெண்களின் உடற்கட்டு மற்றும் உடற்கட்டுப்பாடு, அதனால் அவர்கள் படும் பாடு பற்றி தனது அறிவுரையைப் பகிர்கிறார். நாமும் படித்து பயன் அடையலாமே!


மொய் விருந்து கேள்விப் பட்டிருப்பீங்க. தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இந்த நிகழ்வு நடைபெறுவதுண்டு. பேராவூரணி பகுதியில் இது பிரசித்தம். மொய் விருந்தால் பயன் இருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு நிறைய சிரமங்கள் ஏற்படுகின்றன. மொய் விருந்தைப் பற்றி திரு குருமூர்த்தி அவர்கள் தஞ்சாவூர் என்ற வலைபக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். படித்து தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இது மொய் விருந்தல்ல. இருப்பினும் மொய் பிடிக்கப்படும். பதிவைப் படித்த நல்ல உள்ளங்கள், பின்னூட்டப் பெட்டியில் உங்கள் மொய்யை எழுதவும்.

இங்ஙனம்,

தங்கள் நல்வரவை நாடும்,
அன்பன்,
ஜோதிபாரதி.

ஜோதிபாரதி - வலைச்சர ஆசிரியப்பணி! இடுகைகள் அனைத்தும்!

வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்

விருந்துக்கு வாங்க! -வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

சரியா? தவறா?-வலைச்சரத்தில் நான்காம் நாள்

பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்

கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்


பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்

72 comments:

 1. வாழ்த்துகள்

  ReplyDelete
 2. உண்ட களைப்பு பின் வருகின்றேன்

  ReplyDelete
 3. //குறிப்பு: இது மொய் விருந்தல்ல. இருப்பினும் மொய் பிடிக்கப்படும். பதிவைப் படித்த நல்ல உள்ளங்கள், பின்னூட்டப் பெட்டியில் உங்கள் மொய்யை எழுதவும்.//

  மெய்யாலுமே விருந்து சாப்பிட்டால்
  மொய் எழுதலாம்.

  பதிவைக் காட்டி
  பணம் பறிக்கிறது

  ரொம்ப அநியாயங்கோ

  நான் இதுக்கு ஒத்து மாட்டேன்ங்கோ


  :)))))))))))))))

  ReplyDelete
 4. பட்டையைக் கிளப்புங்கோ

  ReplyDelete
 5. //திகழ்மிளிர் said...

  வாழ்த்துகள்//

  நன்றி திகழ்!

  ReplyDelete
 6. //திகழ்மிளிர் said...

  உண்ட களைப்பு பின் வருகின்றேன்//

  காலை உணவு உண்டு முடித்தவுடன் வந்ததா?

  ReplyDelete
 7. //திகழ்மிளிர் said...

  //குறிப்பு: இது மொய் விருந்தல்ல. இருப்பினும் மொய் பிடிக்கப்படும். பதிவைப் படித்த நல்ல உள்ளங்கள், பின்னூட்டப் பெட்டியில் உங்கள் மொய்யை எழுதவும்.//

  மெய்யாலுமே விருந்து சாப்பிட்டால்
  மொய் எழுதலாம்.

  பதிவைக் காட்டி
  பணம் பறிக்கிறது

  ரொம்ப அநியாயங்கோ

  நான் இதுக்கு ஒத்து மாட்டேன்ங்கோ


  :)))))))))))))))//

  திகழ், நான் பதிவைக் காட்டி பண மொய் பறிக்கவில்லை!
  உங்கள் மன, தமிழ் மண மொய் கேட்டு விழைகிறேன்!!
  ஒருநாள் சந்திக்கலாம்! பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்!!

  ReplyDelete
 8. //திகழ்மிளிர் said...

  பட்டையைக் கிளப்புங்கோ//

  பட்டையைக் கிளப்பலாம், காலத்துடன் போராடிக்கொண்டு!

  ReplyDelete
 9. எழுத நேரமில்லை என்று சொல்லிவிட்டு 2 ஆவது நாளும் அருசுவை உண(ர்)வுடன் வந்திருக்கிறது பதிவு. பயனுள்ள இணைப்புகள்.

  ReplyDelete
 10. விருந்து நல்லாயிருக்கு

  ReplyDelete
 11. சற்றே நீளமான பதிவு என்பதால் முழுவதும் படித்து விட்டு வருகிறேன்.

  ReplyDelete
 12. மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. //வீட்டுக்கு அழைத்துவந்து அன்பு கலந்த தேநீர் கொடுத்து அவர்களை நல்ல முறையில் கவனித்து, பின்னர் அனுப்பி வைத்தால் அதுவே சிறந்த விருந்து.//

  மிகச்சரியாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
 14. //பாஸ் பண்ணுனா விருந்து பெயிலானா மருந்து//

  ஹா ஹா..பாலிடால் பூச்சிக்கொல்லி பார்சல்.

  ReplyDelete
 15. அல்வா ஜோக்கு சூப்பர்...

  ReplyDelete
 16. மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்
  சகோதரர் ஜோதிபாரதி!!!

  ReplyDelete
 17. இரண்டு வரிகள் படித்தவுடனே விருந்து நல்லாயிருக்கு என்பது தெரிகிறது
  அப்புறம் முழுவதுமாக படிக்கிறேன்!!

  இப்போ ஆணிதான் பிரச்சனை!!!

  ReplyDelete
 18. //கோவி.கண்ணன் said...

  எழுத நேரமில்லை என்று சொல்லிவிட்டு 2 ஆவது நாளும் அருசுவை உண(ர்)வுடன் வந்திருக்கிறது பதிவு. பயனுள்ள இணைப்புகள்.//

  வருகைக்கு நன்றி கோவியாரே!
  எல்லாம் உங்களைப் போன்ற பெரியவங்களின் வாழ்த்துகளும்(ஆசீர்வாதங்கள்) தான்!
  காலம் எப்படிப்பட்டது என்று காலம் என்ற பதிவுக் களம் நடத்தும் தங்களுக்குத் தெரியாததா?

  ReplyDelete
 19. //அத்திரி said...

  விருந்து நல்லாயிருக்கு//

  விருந்துக்கு வருகை தந்தமைக்கு நன்றி அத்திரி!

  ReplyDelete
 20. //அ.மு.செய்யது said...

  சற்றே நீளமான பதிவு என்பதால் முழுவதும் படித்து விட்டு வருகிறேன்.//

  தொடர் வருகைக்கும் தமிழ் முழக்கத்திற்கும் நன்றி செய்யது!

  கண்டிப்பாக படியுங்கள்!

  ReplyDelete
 21. //RAMYA said...

  மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்
  சகோதரர் ஜோதிபாரதி!!!//


  தொடர் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சகோதரி ரம்யா!

  ReplyDelete
 22. //நட்புடன் ஜமால் said...

  மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்//

  தொடர் முழக்கம், அதிரை அதிரடி ஜமால்!
  வருகைக்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றி!

  ReplyDelete
 23. பயனுள்ள பதிவு அண்ணா.. தொடுப்பு கொடுத்தமைக்கு நன்றி...

  ReplyDelete
 24. மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. வாழ்த்துகள் ஜோதிபாரதி

  ReplyDelete
 26. உங்க அல்வா அனுபவம் நல்லா இருந்தது

  (உண்மைய சொல்லுங்க! சொந்த அனுபவம் தானே!

  ReplyDelete
 27. மூன்றாம் வாழ்த்துக்கள் கூறிக்கொள்வது உங்கள் அன்புமணி. இனிமே அல்வா சாப்பிடறதாயிருந்தா பார்த்துதான் சாப்பிடனும். நல்ல தமாசு. கலைச்செல்வனின் விருந்தோம்பல் என்னை மிகவும் பாதித்தது. அவரின் ஆன்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள். திருமணவிருந்தில் மருந்தை தவிர்க்க முடியாத கலாச்சாரமாக்கிவிட்டார்கள். என்ன செய்வது? அவர்களாக பார்த்து திருந்தினால்தான் உண்டு!

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள் தல‌

  நல்லாருக்கு உங்க பதிவு

  ReplyDelete
 29. விருந்துக்கும் மருந்துக்கும் (அட வி- ம) இதுதாங்க நான் பார்த்த வித்தியாசம்

  ஆனா உண்மைலேயே அதை நல்லாவே விளக்கி சொல்லிருக்கீங்க‌

  ReplyDelete
 30. அல்வா ஜோக்கை வைத்து எங்களுக்கெல்லாம் அல்வா கொடுக்காதீங்க, நல்லயிருந்தது ஜோக்

  ReplyDelete
 31. விருந்துக்கு அதிகமா போனால் மருந்தா (விருந்து தருபவன் அந்த 3 நாள்) போய்டும் என்று நல்லா எஸ்கேப் ஆயிட்டீங்க‌

  ReplyDelete
 32. விருந்து கடைலே யாராவது இருக்கேலா

  ReplyDelete
 33. விருந்து கடைலே யாராவது இருக்கேலா

  ReplyDelete
 34. சரி
  அவசரமா ஒரு விருந்துக்கு போய்ட்டுவந்து அப்புறமா கவனிச்சிக்கிறேன்

  ReplyDelete
 35. விருந்தும் மருந்தும் நல்லா இருந்துச்சி....அப்படியே பின்னூட்டமும் அளவா போட்டுட்டு கிளம்புறேன்!

  ReplyDelete
 36. //VIKNESHWARAN said...

  பயனுள்ள பதிவு அண்ணா.. தொடுப்பு கொடுத்தமைக்கு நன்றி...//

  அன்பின் தம்பி விக்கி,
  வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 37. //T.V.Radhakrishnan said...

  மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்//

  அன்பின் இராதாகிருஷ்ணன் ஐயா!,
  வாழ்த்துகளுக்கு நன்றி!

  ReplyDelete
 38. //அண்ணன் வணங்காமுடி said...

  வாழ்த்துகள் ஜோதிபாரதி//

  அன்பின் அண்ணன் வணங்காமுடி,
  வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி!

  ReplyDelete
 39. //வால்பையன் said...

  உங்க அல்வா அனுபவம் நல்லா இருந்தது

  (உண்மைய சொல்லுங்க! சொந்த அனுபவம் தானே!//

  அன்பின் வாலு,
  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
  சொந்த அனுபவமும் கிடையாது,
  நொந்த அனுபவமும் கிடையாது,:P
  நிறைய கேள்விப்படுகிற, பார்த்த அனுபவங்களை எழுதுகிறேன்.

  ReplyDelete
 40. //அன்புமணி said...

  மூன்றாம் வாழ்த்துக்கள் கூறிக்கொள்வது உங்கள் அன்புமணி. இனிமே அல்வா சாப்பிடறதாயிருந்தா பார்த்துதான் சாப்பிடனும். நல்ல தமாசு. கலைச்செல்வனின் விருந்தோம்பல் என்னை மிகவும் பாதித்தது. அவரின் ஆன்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள். திருமணவிருந்தில் மருந்தை தவிர்க்க முடியாத கலாச்சாரமாக்கிவிட்டார்கள். என்ன செய்வது? அவர்களாக பார்த்து திருந்தினால்தான் உண்டு!//  திரு அன்புமணி,
  தங்களுடைய தொடர் வருகையும், ஆதரவும்
  கருத்துகளும், வாழ்த்துகளும்
  நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.
  கலைச்செல்வன் குணமடைந்து தற்போது நல்ல நிலையில்
  வாழ்ந்து வருகிறார் என்பதை மகிழ்ச்சியுடன்
  தெரிவித்துக் கொள்கிறேன்.
  இறுதியில் அதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
  குறிப்பிடாதது எனது தவறுதான்.
  வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 41. //அபுஅஃப்ஸர் said...

  விருந்துக்கு அதிகமா போனால் மருந்தா (விருந்து தருபவன் அந்த 3 நாள்) போய்டும் என்று நல்லா எஸ்கேப் ஆயிட்டீங்க‌//

  நான் விருந்து தரத் தாயாராகத் தான் இருக்கிறேன்.
  அது மருந்தாகி விடக் கூடாது என்கிற பயம் தான்
  வேறொன்றும் இல்லை.
  தொடர் வருகை, வாழ்த்துகள், பதிவைப் படித்து கருத்துகள்,
  நெகிழ்ச்சியாக இருக்கிறது அபு!

  ReplyDelete
 42. //நிஜமா நல்லவன் said...

  விருந்தும் மருந்தும் நல்லா இருந்துச்சி....அப்படியே பின்னூட்டமும் அளவா போட்டுட்டு கிளம்புறேன்!//

  பாரதி,
  தொடர் வருகைக்கு நன்றி!
  விருந்துன்னு வந்துட்டா, அளவு சாப்பாடெல்லாம் கிடையாது,
  உங்க இஷ்டம் தான், அதிலயும் இது புபெ வேறையா?
  சும்மா பூந்து விளையாடுங்க!
  புல் கட்டு கட்டுங்க!

  ReplyDelete
 43. //RAMYA said...

  இரண்டு வரிகள் படித்தவுடனே விருந்து நல்லாயிருக்கு என்பது தெரிகிறது
  அப்புறம் முழுவதுமாக படிக்கிறேன்!!

  இப்போ ஆணிதான் பிரச்சனை!!!//

  நன்றி!
  தாங்களும் ஆணிய வாதி தானா?
  சரி சரி, போயிட்டு வாங்க!

  ReplyDelete
 44. //February 25, 2009 3:15:00 PM IST
  ஜோதிபாரதி said...

  //அபுஅஃப்ஸர் said...

  விருந்துக்கு அதிகமா போனால் மருந்தா (விருந்து தருபவன் அந்த 3 நாள்) போய்டும் என்று நல்லா எஸ்கேப் ஆயிட்டீங்க‌//

  நான் விருந்து தரத் தாயாராகத் தான் இருக்கிறேன்.
  அது மருந்தாகி விடக் கூடாது என்கிற பயம் தான்
  வேறொன்றும் இல்லை.
  தொடர் வருகை, வாழ்த்துகள், பதிவைப் படித்து கருத்துகள்,
  நெகிழ்ச்சியாக இருக்கிறது அபு!
  //

  தல இதுதான் கிவ் அன் டேக் பாலிசியா

  நல்லா இருந்தா நாங்க கருத்துப்போடுவோம்லே

  நல்லா பண்ணுங்க, வாழ்த்துக்கள்

  ReplyDelete
 45. //திரு அன்புமணி,
  தங்களுடைய தொடர் வருகையும், ஆதரவும்
  கருத்துகளும், வாழ்த்துகளும்
  நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.
  கலைச்செல்வன் குணமடைந்து தற்போது நல்ல நிலையில்
  வாழ்ந்து வருகிறார் என்பதை மகிழ்ச்சியுடன்
  தெரிவித்துக் கொள்கிறேன்.
  இறுதியில் அதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
  குறிப்பிடாதது எனது தவறுதான்.
  வருகைக்கு நன்றி!//

  நானும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 46. பத்து வலைப்பதிவு வைத்திருக்கிறார் சிவக்குமார் சுப்புராயன். அம்மாடி!

  ReplyDelete
 47. மொய் விருந்து பத்தி கேள்விப்பட்டிருக்கேன். ஆனால், இவ்வளவு விசயங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. வாழ்த்துக்கள். உங்களுக்கும், எங்க மாவட்டக்கார் திரு. குருமூர்த்தி அவர்களுக்கும்.

  ReplyDelete
 48. மருத்துவ கலாநிதி வெ.நாகநாதன் எழுதிய கட்டுரை
  இக்காலப்பெண்கள் அனைவரும் படிக்க வேண்டிய, தெரிந்துகொள்ள வேண்டிய தகவல். இனியாவது திருந்தினால் நல்லது.

  ReplyDelete
 49. விருந்து மட்டுமல்ல மருந்தும் இனிக்கின்றது

  அல்வா கதை சிங்கை நாதனை ஞாபகப்படுத்துகின்றது..:-)

  கலைச்செல்வன் கதை பரிதாபப்பட வைக்கின்றது..

  நாளைக்கு என்ன...?

  ReplyDelete
 50. அருமை :)

  சேவியர்

  ReplyDelete
 51. //அன்புமணி said...

  மொய் விருந்து பத்தி கேள்விப்பட்டிருக்கேன். ஆனால், இவ்வளவு விசயங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. வாழ்த்துக்கள். உங்களுக்கும், எங்க மாவட்டக்கார் திரு. குருமூர்த்தி அவர்களுக்கும்.//

  எல்லா எரிமுகங்களையு அலசி வந்திருப்பது தெரிகிறது.
  நன்றி அன்புமணி! நீங்கள் தஞ்சையா?

  ReplyDelete
 52. //’டொன்’ லீ said...

  விருந்து மட்டுமல்ல மருந்தும் இனிக்கின்றது

  அல்வா கதை சிங்கை நாதனை ஞாபகப்படுத்துகின்றது..:-)

  கலைச்செல்வன் கதை பரிதாபப்பட வைக்கின்றது..

  நாளைக்கு என்ன...?//

  அல்வா சாப்பிட்டவர் சிங்கை நாதனின் நண்பர்!
  பாவம் அவர்!
  கலைச்செல்வன், தற்போது நன்றாக இருக்கிறான்!
  நாளைக்கு என்னவா?
  ரசினி மாதிரி சொல்றேன்! இது வரைக்கும் நாளைக்கு என்னன்னே தெரியாது!!
  வருகைக்கு நன்றி டொன் லீ !

  ReplyDelete
 53. //Anonymous said...

  அருமை :)

  சேவியர்//

  வாங்க சேவியர்!
  வருகைக்கு நன்றி!!
  தங்கள் கட்டுரை அருமை!!!

  ReplyDelete
 54. நன்று நன்று ஜோதிபாரதி

  கலைச்செலவனின் கதை எங்கோ சமீபத்தில் படித்த மாதிரி ஒரு நினைவு.......

  ம்ம்ம் நல்ல பதிவர்களை சுட்டியது நன்று

  நல்வாழ்த்துகள் ஜோதிபாரதி

  ReplyDelete
 55. cheena (சீனா) said...

  // நன்று நன்று ஜோதிபாரதி

  கலைச்செலவனின் கதை எங்கோ சமீபத்தில் படித்த மாதிரி ஒரு நினைவு.......

  ம்ம்ம் நல்ல பதிவர்களை சுட்டியது நன்று

  நல்வாழ்த்துகள் ஜோதிபாரதி//

  தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா!

  கலைச்செல்வனைப் பற்றி நான் ஒரு கவிதை எழுதி இருந்தேன். அதைப் படித்திருக்கிறீர்கள். பின்னூட்டமும் இட்டிருக்கிறீர்கள்!
  இதோ சுட்டி
  http://athivettijothibharathi.blogspot.com/2008/03/blog-post_3106.html

  ReplyDelete
 56. 1. இவ்வார வலைச்சர ஆசிரியாரக அசத்தும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
  2. வாயில் ஒட்டிய அல்வா பதிவு சுவையாக இருக்கும் அதே நேரம் விருந்து பற்றிய பதிவு நல்ல சிந்தனைகளை விதைத்துச் செல்கிறது.
  3. என்னுடைய வலைப்பதிவை சிறந்த முறையில் அறிதமுகப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 57. விருந்தும் சரி, மருந்தும் ரொம்ப நல்லா இருக்கு.

  அடுத்த சனிக்கிழமை நீங்க சிங்கை சிங்களுக்கு எல்லாம் நீங்க வலைச்சர ஆசிரியரானதுக்கு விருந்து வைக்கிறேன்னு சொல்லியிருக்கீங்க. மறந்துடாதீங்க.

  ReplyDelete
 58. //கலைச்செல்வனைப் பற்றி நான் ஒரு கவிதை எழுதி இருந்தேன். அதைப் படித்திருக்கிறீர்கள். பின்னூட்டமும் இட்டிருக்கிறீர்கள்!
  இதோ சுட்டி
  http://athivettijothibharathi.blogspot.com/2008/03/blog-post_3106.html
  //

  உண்மை உண்மை ஜோதி பாரதி - தகவலுக்கு நன்றி
  நட்புடன் ..... சீனா

  ReplyDelete
 59. // நான்கை நாங்க எடுத்துக்குறோம். எட்டை எட்டாதவர்களுக்குக் கொடுத்துவிடுகிறோம்.(சீனர்களில் பெரும்பாலானவர்கள், உயரம் குறைவானவர்கள்தான்)
  //

  haahaa.:-)
  ரசித்தேன்..

  ReplyDelete
 60. //தமிழகத்தில் செழித்த அளவில் நூற்றில் ஒரு பங்கு கூட புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் நாத்திகம், பகுத்தறிவு, போன்ற விசயங்கள் எடுபடவில்லை அல்லது பெரியாரைப் போல் யாரும் அங்கு பிறக்கவில்லை. அயலகத்தில் இட ஒதுக்கீடு போன்ற வேறு சில விசயங்களுக்கு தேவை இல்லாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் இதைத் தேவையில்லாமல் இங்கு இழுக்கிறீர்கள் என்று சொல்கிறீர்களா? நியாயந்தான்//

  உண்மை தான்..எனக்கே பெரியார், தி.க பற்றி தெரியத் தொடங்கியதே சில வருடங்களுக்கு முன்பு தான் :-)

  ReplyDelete
 61. //டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
  1. இவ்வார வலைச்சர ஆசிரியாரக அசத்தும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
  2. வாயில் ஒட்டிய அல்வா பதிவு சுவையாக இருக்கும் அதே நேரம் விருந்து பற்றிய பதிவு நல்ல சிந்தனைகளை விதைத்துச் செல்கிறது.
  3. என்னுடைய வலைப்பதிவை சிறந்த முறையில் அறிதமுகப்படுத்தியதற்கு நன்றி.//


  அன்பின் மருத்துவர் முருகானந்தன் அவர்களுக்கு நன்றி!
  அல்வாவை ரசித்தது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
  தங்கள் வலைப்பக்கம் அருமையாக, பயனுள்ளதாக இருக்கிறது.

  ReplyDelete
 62. //ஜோசப் பால்ராஜ் said...
  விருந்தும் சரி, மருந்தும் ரொம்ப நல்லா இருக்கு.

  அடுத்த சனிக்கிழமை நீங்க சிங்கை சிங்களுக்கு எல்லாம் நீங்க வலைச்சர ஆசிரியரானதுக்கு விருந்து வைக்கிறேன்னு சொல்லியிருக்கீங்க. மறந்துடாதீங்க.
  //

  அப்படியா? எப்ப சொன்னேன்!
  நான் சொன்னத ஞாபகம் இல்லையே!
  எனக்கு செலக்டிவ் அம்னீசியா வேறையா!
  ஞாபகமூட்டுனா கண்டிப்பா உண்டு!
  வருகைக்கு நன்றி ஜோசப்!

  ReplyDelete
 63. //’டொன்’ லீ said...
  // நான்கை நாங்க எடுத்துக்குறோம். எட்டை எட்டாதவர்களுக்குக் கொடுத்துவிடுகிறோம்.(சீனர்களில் பெரும்பாலானவர்கள், உயரம் குறைவானவர்கள்தான்)
  //

  haahaa.:-)
  ரசித்தேன்..//

  நன்றி டொன் லீ
  எனக்கும் மகிழ்ச்சி!

  ReplyDelete
 64. //’டொன்’ லீ said...
  //தமிழகத்தில் செழித்த அளவில் நூற்றில் ஒரு பங்கு கூட புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் நாத்திகம், பகுத்தறிவு, போன்ற விசயங்கள் எடுபடவில்லை அல்லது பெரியாரைப் போல் யாரும் அங்கு பிறக்கவில்லை. அயலகத்தில் இட ஒதுக்கீடு போன்ற வேறு சில விசயங்களுக்கு தேவை இல்லாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் இதைத் தேவையில்லாமல் இங்கு இழுக்கிறீர்கள் என்று சொல்கிறீர்களா? நியாயந்தான்//

  உண்மை தான்..எனக்கே பெரியார், தி.க பற்றி தெரியத் தொடங்கியதே சில வருடங்களுக்கு முன்பு தான் :-)//

  அப்படியா? இப்ப உள்ள கல(ழ)கங்களுக்கெல்லாம் தாய் கழகம் தி.க.தான்! அதற்கு முன்னர் நீதி கட்சி!!

  ReplyDelete
 65. என் வலைத்தளத்தை அனைவரின் பார்வைக்கும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி... நன்றி... நன்றி

  ReplyDelete
 66. நான் சிவகுமார் சுப்புராயன் அல்ல, சிவகுமார் சுப்புராமன். நன்றி...

  ReplyDelete
 67. // சிவகுமார் said...

  என் வலைத்தளத்தை அனைவரின் பார்வைக்கும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி... நன்றி... நன்றி//

  வருகைக்கு நன்றி ஐயா!
  தங்கள் வலைப்பூக்கள் அனைத்தும்
  மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் அமைத்திருக்கிறீர்கள்!

  ReplyDelete
 68. //சிவகுமார் said...

  நான் சிவகுமார் சுப்புராயன் அல்ல, சிவகுமார் சுப்புராமன். நன்றி...//

  சுட்டிக் காட்டியதற்கு நன்றி!
  மாற்றிவிட்டேன்!!

  ReplyDelete
 69. நன்றி ஜோதிபாரதி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது