07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 4, 2009

வலைச்சரத்தில் மூன்றாம் நாள் என் ஆசிரியர் பணிகடவுள் வாழ்த்து
=================

ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

பொறுமைக்கு கிடைத்த பரிசு
==============================


தொடர்ந்து சில வருடங்களாக மழை இல்லாமல் ஒரு ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.


மக்கள் அனைவரும் அந்த ஊரில் உள்ள மிகப் பெரிய செல்வந்தரிடம் வந்து, ஐயா!! பசியின் கொடுமை எங்களால் தாங்க முடியவில்லை. பெரியவர்கள் நாங்கள் எப்படியாவது இந்த கொடுமையை பொறுத்துக் கொள்வோம் ஆனால் சிறு குழந்தைகள் பசியையாவது தீர்த்து வையுங்கள் ஐயா என்று முறை இட்டனர்.

உடனே மனது மிகவும் இளகிய செல்வந்தர், கனத்த இதயத்துடன் மாளிகைக்குள் விரைந்தார்.


தனது மனைவியை அழைத்து அந்த ஏழைகளுக்கு செய்ய வேண்டிய உதவிகளை பற்றி முடிவெடுத்து, உடனே அதைச் செயல் படுத்துமாறு கூறினார்.செல்வந்தர் மாளிகை ஒரே பரபரப்பானது. பெரியவர்களுக்கு சாப்பாட்டுக்குத் தேவையான பொருட்களும்.


குழந்தைகளுக்கு மட்டும் தினமும் மாளிகையில் உணவு அளிப்பதாக செல்வந்தரின் அழைப்பு முரசு அடித்து உணவு விநியோகம் செய்வது பற்றித் தெரிவித்தார்கள்.


மாளிகை வாசலிலே சிறார்களின் பெரும் கூட்டம் கலகலத்து நின்றது. அனைவரையும் வரிசையாக நிற்கச் சொன்னார்கள். ஆனாலும், குழந்தைகள் உணவை பெரும் ஆர்வத்தினால் வரிசைகள் வழி மாறிப் போகின.


ஒருவருடன் ஒருவர் மோதி அடித்துப் பிடித்து, உணவை வாங்குவதில் அங்கு ஒரு யுத்தமே நடந்தது. ஒரே ஒரு சிறுமி மட்டும் இந்த யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் தனியாக நின்றிருந்தாள். கூட்டம் கலைந்த உடன் உணவு வாங்குவதற்குச் சென்றாள். என்ன பரிதாபம், உணவுப் பாத்திரத்தில் உணவு மிகச் சிறிய அளவே இருந்தது. அதையும் முகம் சுளிக்காமல் அந்தச் சிறுமி வாங்கிச் சென்றாள். இதை தினமும் அந்த செல்வந்தர் கவனித்துக் கொண்டு இருந்தார். இப்படி பல நாட்கள் நகர்ந்தன. அந்தச் சிறுமியின் உணவின் அளவும் அதிகரித்தப் பாடில்லை.

ஒரு நாள் எப்பவும் போல் உணவு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவள், இறை வணக்கம் செலுத்தி விட்டு, தட்டில் கொண்டு வந்த உணவை முழுவதுமாக வழித்துப் போட்டாள். சாப்பாட்டுடன் ஒரு சின்ன சிணுங்கல் சத்தத்தோடு தங்க நாணயங்கள் ஜொலித்தன. பதறிய சிறுமியோ பயந்து போயி பெற்றோர்களிடம் காட்டி, தவறாக என் உணவுடன் வந்து விட்டது. நான் உடனே இதை போயி செல்வந்தர் மாளிகையில் கொடுத்து விட்டு வந்து விடுகிறேன் என்று மாளிகையை நோக்கி ஓட்டம் பிடித்தாள். அங்கே செல்வந்தரை பார்க்க முடியாது என்று அந்த ஏழை சிறுமியை, உள்ளே அனுப்ப காவலாளி மறுத்து வெளியே அனுப்பும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார், செல்வந்தர் குழந்தையை உள்ளே அழைத்து வருமாறு காவலாளிக்குக் கட்டளை இட்டார்.

பயந்த முகத்துடன்.... ஓடி வந்த சிறுமியோ,


ஐயா!! ஒரு தவறு நடந்து விட்டது. ஆனால் எனக்கு எதுவுமே தெரியாமல் நடந்த தவறு ஐயா!! என்னை மன்னித்து வுடுங்கள் என்று கதறி விட்டாள்.சிறுமியின் பதை பதைப்பை கண்டு மனம் இளகி,

செல்வந்தர்: குழந்தை நீ முதலில் கொஞ்சம் நீர் அருந்தி விட்டு பிறகு சொல்ல வந்ததை தைரியமாகச் சொல்லு என்றார்.


சிறுமி: அதெல்லாம் வேண்டாம் ஐயா, நான் இன்று மாளிகையில் இருந்து கொண்டு சென்ற உணவில் இந்த தங்கக் காசு இருந்தது. ஆனால் இதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ஐயா. என்னை தவறாக நினைக்க வேண்டாம் என்று கூறி செல்வந்தரின் கால்களை கட்டிக் கொண்டு கதறினாள்.


செல்வந்தர்: சிறுமி பேசியதை அறியாதவர் போல், பேசத் தொடங்கினார் எழுந்திரி குழந்தை முதலில் கண்களை துடைத்துக்கொள்.


பசிக் கொடுமையையே இந்த சிறிய வயதில் எல்லாரும் பொறுத்துக் கொண்டீர்களே. அதற்கு மேல் உனக்கு என்ன குழந்தை கஷ்டம் வந்து விட்டது. உணவுகள் தவறாமல் கிடைக்கின்றனவா?


சிறுமி: ஐயா உணவு கிடைக்கிறது. இன்று எனக்கு அளித்த உணவில் இந்த பொற்காசுகள் இருந்தன. அதை அப்படியே எடுத்து வந்தேன் ஐயா.


செல்வந்தர்: அந்த பொற்காசுகளை நான் தான் உனக்களித்த சாப்பாட்டில் வைத்து கொடுக்கச் சொன்னேன்.


சிறுமி: ஐயா! எல்லாருக்கும் சாப்பாடு மட்டுதானே கொடுத்திருக்கிறீர்கள். எனக்கு மட்டும் ஏன்?


செல்வந்தர்: குழந்தை தினமும் நீ கூட்டத்தில் விழுந்து அடித்துக் கொண்டு சாப்பாடு வாங்காமல், பொறுமையாக தனியாக நின்றிருந்து, கடைசியாக சாப்பாடு இருக்கோ இல்லையோ என்ற பதை பதைப்பு இல்லாமல் இருப்பதை வாங்கிச் சென்றாய். அந்த உணவின் அளவு உனக்கு கண்டிப்பாக போதாது.


ஆனாலும் சலிப்படையாமல் பற்றாத உணவை வாங்கிச் சென்றுவந்த உன் நிதானமும், பொறுமையும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அந்த உன் பொறுமைதான் இந்தப் பரிசுக்கு காரணமானது. உனது இந்த குணம் உன் போன்ற எல்லாக் குந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இருக்குமேயானால், அவர்களை வெல்ல இந்த பூ உலகத்தில் வேறு இருக்கிறார்கள்!!

சிறுமி: நன்றி ஐயா!!

அந்த சிறுமி சந்தோஷக் குதியலுடன் வீட்டிற்கு ஓடினாள். தாய் மற்றும் தந்தையிடம் மாளிகையில் நடந்தவைகளைக் கூறினாள், பெற்றோர்கள் உச்சி முகர்ந்து தன் மகளை ஆரத்தளுவினார்கள்.


பொறுமை கடலினும் பெரிதல்லவா!! பொறுமை இல்லாதவர்கள் பொறுமையைக் கடை பிடித்தால் அனைத்துச் செல்வங்களும் வந்து சேருமே!!


என் வழியில் இந்த புது நண்பர்கள் அறிமுகம்
===============================================

அண்ணன் வணங்காமுடி
==========================
இவர் வந்த வேகத்திலேயே அமைதியா இருக்கிறார். இந்த அமைதி எதுக்குன்னு தெரியலை. புலி பதுங்குவது பாய்வதற்காக இருக்குமோ என்னோவோ சரி பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் ஒன்னுங்க இவரு எழுதி இருக்கிற கதை மிகவும் அருமையா இருக்கு. நேர்மையாக இருக்க, அவர்களாகவே திருந்த ஒரு வழி கூறி இருக்கிறாரு. அனைவரும் நேர்மையாகவும், உண்மையாகவும், சரியாகவும் நடந்து கொள்ள வேண்டும் அப்படீன்னு சொல்லி இருக்காரு. அண்ணன் வணங்காமூடி.
வெற்றியின் ரகசியம் - இளைஞன் ஒருவன் வெற்றி அடைய முயன்று அதை நடை முறைப்படுத்த ஒரு மகானிடம் சென்று, தன் குறைகளை சொல்லி அறிவுரையும் கேட்டு இருக்கிறான். மகானும் வாழ்க்கையில் வெற்றி பெற புது மாதிர்யான அறிவுரை கூறி அனுப்பி இருக்கிறார். மகானிடம் அனுபவம் பெற்று தன் வெற்றிக்கு வழி தேடி வந்த ஒரு இளைஞனின் கதை. மிக அழகாக கூறி இருக்கிறார். இவ்வளவு எழுத்துத் திறன் வைத்திருக்கும் அண்ணன் வணங்காமூடி ஒளிந்திருந்த இடத்தில் இருந்து வெளியே வந்து மறுபடியும் துடிக்குது புஜம் என்று வீறு கொண்டு எழுத வேண்டும். வருவாரா என்று கேள்விக்குறியாக இல்லாமல் விரைந்து வந்து நம்மை மகிழ்விக்க அழைக்கிறேன். (துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம்).

துள்ளல் நிறைந்த தத்துவங்களை நிறைய அள்ளித் தெளித்திருக்கிறார். அவ்வளவும் தத்துவம் மட்டும் இல்லை. நிறைய அறிவுரைகளும் கொடுத்து இருக்கிறார். போயி பாருங்க இதில் நமக்கு ஏதாவது உபயோகமா இருக்குமா? படித்து பாருங்களேன். பார்த்து எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.இவரை அறிமுகப் படுத்தினார்களா என்று தெரியவில்லை
இவரின் வலைபூக்கள் என் கண்ணோட்டத்தில்
=============================================================


ஊர் சுற்றி.
===========
இவரு புதுசுன்னு நான் அறிமுகம் எல்லாம் படுத்தலை. நான் ரசிச்சதை சொல்லிக்கிட்டு இருக்கேன். ஊர் சுற்றி... உலகை வலம் வந்துவிடலாம் என்ற கனவுகளோடு... தலைப்பிலே அசத்திட்டாரு போங்க.

ரொம்ப சுவாரசியமா சொல்லி இருக்காரு. இதை படித்தவுடன் என் கல்லூரி இறுதி நாட்களும் அதில் நாங்கள் செய்த குறும்புகளும் நினைவிற்கு வந்து விட்டன. பிரிவு என்பது மிகவும் கொடியது அதுவம் நட்பில். என்னதான் இன்றும் ஒருவருக்கொருவர் சந்தித்து கொண்டாலும் அந்த நாட்கள் திரும்ப வருமா. வராது! வராது! சரி, இங்கே நம் நண்பர் சொல்லி இருப்பதை பார்க்க்கலாம்.
ஒரு அதிசயமான கல்லூரி பிரிவுபசார விழா.


இவரு ரொம்ப குறும்புக்காரவருங்க பாருங்க சைக்கள்லே ஹெல்மெட் போட்டுக்கிட்டு சிக்கல் இல்லாமே தப்பிச்சு வந்திருக்காரு. இவருக்கு ரொம்ப தைரியம்ங்க. இதை படிச்சி சிரிப்பா வந்துச்சு. ஹெல்மெட் போட்டு பயமுறித்துட்டு என்னைய வேறே கேள்வி.... ம்க்கும்.... பாருங்க அந்த கண்கொள்ள காட்சியை. இது தொலைகாட்சியில் கூட ஒளி பரப்பி இருக்கலாம் . நம்ப கிட்டே சொல்லிட்டு இது மாதிரி புது புது முயற்சியா செய்ய சொல்லலாம். சைக்கிளுக்கு ஹெல்மெட்டாஆஆஆஆ

கல்விச்சாலைகள் எப்படி இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். பெற்றோர்களும் சிந்திக்கும் வகையில் எழுதி இருக்கிறார். இது படிக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ள பதிவு.
ஆலைகள் வைப்போம், கல்விச் சா(ஆ)லைகள் வைப்போம்?!


மனோஜ்
=========
கவிதை கவிதை எல்லாம் காதல் கவிதை அருமையா எழுதுவார், மனோஜ் எழுதியதில் நான் ரசித்தது.
பாருங்க பிரிவு பற்றி என்னா எழதி இருக்காருன்னா...

காதலை பற்றி மனோஜ் நினைப்பதை வெள்ளையா வெளிப்படுத்தி இருக்காரு பாருங்களேன். " காதலை எண்ணுகுறேன் ....

எப்படி எல்லாம் வாழ்த்த முடியும் அப்படின்னு நம்ம மனோஜ் சொல்லி இருப்பதை பாருங்க. வாழ்த்து..
எனக்குப் பிடித்த உலக நீதி
இயற்றிவர்: உலகனாதனார்
===========================

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை யுரவென்று நம்ப வேண்டாம்
தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
வனந்தேடுங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


இன்று என் முடிவுரை
======================
நல்லதையே நினைப்போம்
நல்லவைகளே செய்வோம்
இந்த நாள் இனிய நாளாக
எல்லோருக்கும் அமையட்டும்


மீண்டும் வருவேன்....
உங்கள் ரம்யா

120 comments:

 1. மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. மூன்றாம் நாள் வலைச்சர ஆசிரியர்
  ரம்யாவிற்கு வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 3. படித்து விட்டு அப்புறம் வாரேன் !!

  ReplyDelete
 4. இன்னைக்கு என்ன? 500 அல்லது 600?

  ReplyDelete
 5. ஹ்ம்ம்ம்.. ஜமாய்க்கிறிங்க போல.. :)

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்

  கதை சொந்த சரக்கா?

  நல்லாருக்கு

  ReplyDelete
 7. Hi

  We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

  Please check your blog post link here

  If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

  Sincerely Yours

  Valaipookkal Team

  ReplyDelete
 8. இப்போதைக்கு வாழ்த்துக்கள் ரம்யா மட்டும் சொல்லிக்கொள்கிறேன்... பிறகு வருகிறேன்..

  ReplyDelete
 9. பொறுமைக்கு கிடைத்த பரிசு கதை நன்றாக உள்ளது. மூன்றாம் நாளில் அறிமுகப்படுத்தியவர்களை படித்துவிட்டு வருகிறேன். தங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. வாழ்த்துக் கூறிய அனைத்து
  என் வலையுலக நண்பர்களுக்கும்
  சகோதர சகோதரிகளுக்கும்
  என் மனமார்ந்த நன்றிகள் !!!

  ReplyDelete
 11. கதை அருமைய். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது முன்னோர் வாக்கு.

  இப்பொழுது பலருக்கும் அந்த பொறுமை இல்லாத்தனத்தினால் தான் பிரச்சனை, ஸ்ட்ரெஸ் எல்லாம். அழகா சொல்லி அழகா அறிமுகப்படுத்தியிருக்கீங்க.

  பாராட்டுக்கள்

  ReplyDelete
 12. பொறுமைக்குக் கிடைத்த பரிசு அருமை. செய்து வரும் அறிமுகங்களுடன் சிறப்பான முன்னுரைகள் வரிசைப்படி கொடுத்து வரும் தலைப்புகள் என எல்லாமே நேர்த்தி.

  ReplyDelete
 13. என்னை அறிமுகபடுத்தியமைக்கு நன்றி, நன்றி, நன்றி

  ReplyDelete
 14. என்னை அறிமுகபடுத்தியமைக்கு நன்றி, நன்றி, நன்றி...

  ReplyDelete
 15. வெற்றிகரமான மூன்றாவது நாள்....

  கலக்கோ, கலக்கறீங்க ரம்யா...

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. //
  பொறுமை கடலினும் பெரிதல்லவா!! பொறுமை இல்லாதவர்கள் பொறுமையைக் கடை பிடித்தால் அனைத்துச் செல்வங்களும் வந்து சேருமே!! //

  சரியாகச் சொன்னீர்கள்..

  பொறுமை கடலினும் பெரிதுதான்... அதனால்தான் யாராலும் அதை புரிஞ்சு கடைபிடிக்க முடியலயா?

  ReplyDelete
 17. அண்ணன் வணங்காமுடி

  வாங்க வணங்காமுடி அவர்களே...

  உங்கள் சேவை வலைப்பூவிற்கு தேவை...

  அதனால்...

  மறைந்திருந்தே பார்க்கும் மர்மத்தை விட்டுவிட்டு...

  வாங்கோ... வாங்கோ...

  ReplyDelete
 18. இப்ப கொஞ்ச நேரம் ஆபீஸ் வேலைகளைப் பார்த்துவிட்டு வருகின்றேன்.

  தனியா டீ -- ரொம்ப போருப்பா...

  ReplyDelete
 19. //அண்ணன் வணங்காமுடி

  வாங்க வணங்காமுடி அவர்களே...

  உங்கள் சேவை வலைப்பூவிற்கு தேவை...

  அதனால்...

  மறைந்திருந்தே பார்க்கும் மர்மத்தை விட்டுவிட்டு...

  வாங்கோ... வாங்கோ...//

  விட்டால் மறைதிருந்தே பார்க்கும் மருமம் என்ன என்று பாடல் பாடிவீர் போல தெரிகிறது...

  கவலை வேண்டாம் சேவை தொடரும்...

  ReplyDelete
 20. மூன்றாம் நாள் வாழ்த்துகள் ஆசிரியரே !!!

  ReplyDelete
 21. தினமும் கடவுள் வாழ்த்தோடு ஆரம்பிக்கிறீர்கள்..

  வித்தியாசமான முயற்சி...என்ன இருந்தாலும் டீச்சர் இல்லையா ??

  ReplyDelete
 22. சிறுவயதில் இந்த கதையை கேட்ட ஞாபகம்..

  பொருள் பொதிந்த கதை..பொறுமை கடலினும் பெரிது..

  ஆகவே முழுவதுமாக பதிவை படித்து விட்டு வருகிறேன்.

  ReplyDelete
 23. மூவருமே எனக்கு புதியவர்கள்..ஆனால் கேள்விப் பட்டிருக்கிறேன்..

  பதிவுகளை இதுவரை பார்த்ததில்லை...

  ReplyDelete
 24. தொடர்ந்து சில வருடங்களாக மழை இல்லாமல் ஒரு ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.///

  உங்க ஊரிலா..

  ReplyDelete
 25. மக்கள் அனைவரும் அந்த ஊரில் உள்ள மிகப் பெரிய செல்வந்தரிடம் வந்து, ஐயா!! பசியின் கொடுமை எங்களால் தாங்க முடியவில்லை. பெரியவர்கள் நாங்கள் எப்படியாவது இந்த கொடுமையை பொறுத்துக் கொள்வோம் ஆனால் சிறு குழந்தைகள் பசியையாவது தீர்த்து வையுங்கள் ஐயா என்று முறை இட்டனர்.
  ///

  மனசைத்தொடுரீங்க..

  ReplyDelete
 26. உடனே மனது மிகவும் இளகிய செல்வந்தர், கனத்த இதயத்துடன் மாளிகைக்குள் விரைந்தார். //

  கண்கள் பணித்து இருக்குமே..

  ReplyDelete
 27. தனது மனைவியை அழைத்து அந்த ஏழைகளுக்கு செய்ய வேண்டிய உதவிகளை பற்றி முடிவெடுத்து, உடனே அதைச் செயல் படுத்துமாறு கூறினார்.///

  அய்யய்யோ சொதப்புறாரே

  ReplyDelete
 28. செல்வந்தர் மாளிகை ஒரே பரபரப்பானது. பெரியவர்களுக்கு சாப்பாட்டுக்குத் தேவையான பொருட்களும்.///

  எங்களுக்கு ரெடி பண்ணுங்கப்பா!!

  ReplyDelete
 29. குழந்தைகளுக்கு மட்டும் தினமும் மாளிகையில் உணவு அளிப்பதாக செல்வந்தரின் அழைப்பு முரசு அடித்து உணவு விநியோகம் செய்வது பற்றித் தெரிவித்தார்கள்.//

  எங்க வாயில வெரல விடுங்க..........

  ReplyDelete
 30. மாளிகை வாசலிலே சிறார்களின் பெரும் கூட்டம் கலகலத்து நின்றது. அனைவரையும் வரிசையாக நிற்கச் சொன்னார்கள். ஆனாலும், குழந்தைகள் உணவை பெரும் ஆர்வத்தினால் வரிசைகள் வழி மாறிப் போகின.///

  நாங்க நிற்க மாட்டோம் தவந்து தான் வருவோம்..

  ReplyDelete
 31. ஒருவருடன் ஒருவர் மோதி அடித்துப் பிடித்து, உணவை வாங்குவதில் அங்கு ஒரு யுத்தமே நடந்தது. ஒரே ஒரு சிறுமி மட்டும் இந்த யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் தனியாக நின்றிருந்தாள்.///

  ரம்யா தானே அது...

  ReplyDelete
 32. கூட்டம் கலைந்த உடன் உணவு வாங்குவதற்குச் சென்றாள். என்ன பரிதாபம், உணவுப் பாத்திரத்தில் உணவு மிகச் சிறிய அளவே இருந்தது. அதையும் முகம் சுளிக்காமல் அந்தச் சிறுமி வாங்கிச் சென்றாள்.///

  ஏற்கனவே ஒரு சுற்று முடுஞ்சதா?

  ReplyDelete
 33. ஒரு நாள் எப்பவும் போல் உணவு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவள், இறை வணக்கம் செலுத்தி விட்டு, தட்டில் கொண்டு வந்த உணவை முழுவதுமாக வழித்துப் போட்டாள். சாப்பாட்டுடன் ஒரு சின்ன சிணுங்கல் சத்தத்தோடு தங்க நாணயங்கள் ஜொலித்தன. //

  எங்க கண்ணே விரியுதே..

  ReplyDelete
 34. சிறுமியோ பயந்து போயி பெற்றோர்களிடம் காட்டி, தவறாக என் உணவுடன் வந்து விட்டது. நான் உடனே இதை போயி செல்வந்தர் மாளிகையில் கொடுத்து விட்டு வந்து விடுகிறேன் என்று மாளிகையை நோக்கி ஓட்டம் பிடித்தாள். //

  அப்ப அது ரம்யா தான் !
  நேர்மைக்கு ரம்யா..

  ReplyDelete
 35. ஐயா!! ஒரு தவறு நடந்து விட்டது. ஆனால் எனக்கு எதுவுமே தெரியாமல் நடந்த தவறு ஐயா!! என்னை மன்னித்து வுடுங்கள் என்று கதறி விட்டாள். //

  அய்யய்யோ
  புல்லரிக்குதே//

  ReplyDelete
 36. செல்வந்தர்: குழந்தை நீ முதலில் கொஞ்சம் நீர் அருந்தி விட்டு பிறகு சொல்ல வந்ததை தைரியமாகச் சொல்லு என்றார்.
  //
  சொம்ப எடுத்து உள்ள வைப்பா..

  ReplyDelete
 37. அதெல்லாம் வேண்டாம் ஐயா, நான் இன்று மாளிகையில் இருந்து கொண்டு சென்ற உணவில் இந்த தங்கக் காசு இருந்தது. ஆனால் இதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ஐயா. என்னை தவறாக நினைக்க வேண்டாம் என்று கூறி செல்வந்தரின் கால்களை கட்டிக் கொண்டு கதறினாள். ///

  அடடா அடடா அடடா....தாங்க முடியல டீச்சர்..ரீஸஸ் வருது..

  ReplyDelete
 38. செல்வந்தர்: சிறுமி பேசியதை அறியாதவர் போல், பேசத் தொடங்கினார் எழுந்திரி குழந்தை முதலில் கண்களை துடைத்துக்கொள்.


  பசிக் கொடுமையையே இந்த சிறிய வயதில் எல்லாரும் பொறுத்துக் கொண்டீர்களே. அதற்கு மேல் உனக்கு என்ன குழந்தை கஷ்டம் வந்து விட்டது. உணவுகள் தவறாமல் கிடைக்கின்றனவா? ///

  இப்ப மணி பாத்தீங்களா? 1.45 எங்க பசிக்கு யார் பதில் சொல்லுவது???????????

  ReplyDelete
 39. மூன்றாம் நாள் வாழ்த்துக்கள் ரம்யா...பிறகு வருகிறேன்...

  ReplyDelete
 40. கடவுள் வாழ்த்து தெரிவு மிக அருமை ரம்யா !!

  ReplyDelete
 41. //
  பொறுமைக்கு கிடைத்த பரிசு
  //

  பொறுத்தார் பூமி ஆழ்வார்.....
  என்ற பழமொழி தான்
  நினைவிற்கு வருகிறது.

  ReplyDelete
 42. தினம் ஒரு நீதிக்கதைகள்
  ரொம்ப அமர்க்களமாகவே
  உன் ஆசிரியர் பணி தொடர்கிறது

  வாழ்த்துக்கள் ரம்யா !!

  ReplyDelete
 43. //
  மாளிகை வாசலிலே சிறார்களின் பெரும் கூட்டம் கலகலத்து நின்றது. அனைவரையும் வரிசையாக நிற்கச் சொன்னார்கள். ஆனாலும், குழந்தைகள் உணவை பெரும் ஆர்வத்தினால் வரிசைகள் வழி மாறிப் போகின.
  //

  சொல்நடை விளக்கம் அருமை அருமை !!

  ReplyDelete
 44. இன்னும் படித்து விட்டு பிறகு வருகிறேன்.

  ReplyDelete
 45. மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 46. /thevanmayam said...
  தொடர்ந்து சில வருடங்களாக மழை இல்லாமல் ஒரு ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.///

  உங்க ஊரிலா..
  /

  அந்த சிறுமி தான் ரம்யாவா?

  ReplyDelete
 47. என்ன இன்னைக்கு யாரையுமே காணும்?

  ReplyDelete
 48. எல்லோரும் மெதுவா வருவாங்க போல...

  ReplyDelete
 49. சரி...யார் இருந்தா என்ன? இல்லாட்டா என்ன?

  ReplyDelete
 50. வந்த வேலையை பார்ப்போம்..!

  ReplyDelete
 51. ஐம்பதாவது கமென்ட் போட்டாச்சு...

  ReplyDelete
 52. இங்க செமையா மழை பெய்யுது...

  ReplyDelete
 53. ஒருத்தருக்கு குளிர் ஜுரம் வந்துடுச்சி போல...

  ReplyDelete
 54. அதனால கும்மிக்கு வரமாட்டார்...

  ReplyDelete
 55. /thevanmayam said...
  செல்வந்தர்: சிறுமி பேசியதை அறியாதவர் போல், பேசத் தொடங்கினார் எழுந்திரி குழந்தை முதலில் கண்களை துடைத்துக்கொள்.


  பசிக் கொடுமையையே இந்த சிறிய வயதில் எல்லாரும் பொறுத்துக் கொண்டீர்களே. அதற்கு மேல் உனக்கு என்ன குழந்தை கஷ்டம் வந்து விட்டது. உணவுகள் தவறாமல் கிடைக்கின்றனவா? ///

  இப்ப மணி பாத்தீங்களா? 1.45 எங்க பசிக்கு யார் பதில் சொல்லுவது???????????
  /

  பசிக்குதுன்னு தெரிஞ்சும் இங்கன கும்மிட்டு இருக்கிறது நீங்க தானே....நீங்க தான் பதில் சொல்லணும்....:)

  ReplyDelete
 56. /தொடர்ந்து சில வருடங்களாக மழை இல்லாமல் ஒரு ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.
  /

  பக்கத்து ஊர் எல்லாம் செழிப்பா இருந்திருக்கும் போல...!

  ReplyDelete
 57. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
  நற்றாள் தொழாஅர் எனின்
  ///

  நல்ல குறள்>...

  ReplyDelete
 58. பொறுமை கடலினும் பெரிதல்லவா!! பொறுமை இல்லாதவர்கள் பொறுமையைக் கடை பிடித்தால் அனைத்துச் செல்வங்களும் வந்து சேருமே!!
  ///
  பொறுத்தார் பூமியாள்வார்!!!

  ReplyDelete
 59. பொறுமை கடலினும் பெரிதல்லவா!! பொறுமை இல்லாதவர்கள் பொறுமையைக் கடை பிடித்தால் அனைத்துச் செல்வங்களும் வந்து சேருமே!!
  ///
  பொறுத்தார் பூமியாள்வார்!!!///

  எதை ஆள்வார்?
  ஆறடி நிலத்தையா?

  ReplyDelete
 60. இவர் வந்த வேகத்திலேயே அமைதியா இருக்கிறார். இந்த அமைதி எதுக்குன்னு தெரியலை. புலி பதுங்குவது பாய்வதற்காக இருக்குமோ என்னோவோ சரி பொறுத்திருந்து ///

  வணங்காமுடிக்கு ஆள் அனுப்புங்க அப்பா..

  ReplyDelete
 61. . புலி பதுங்குவது பாய்வதற்காக இருக்குமோ என்னோவோ சரி பொறுத்திருந்து///

  புலி பாய் போட்டு தூங்குதா?

  ReplyDelete
 62. அந்த வீட்டின் பத்திரத்தையும், சாவி கொத்தையும் அந்த மேற்பார்வையாளரிடம் கொடுத்து இதுநாள் வரை நீங்கள் என்னிடம் நேர்மையாக வேலை பார்த்ததற்காக இதை நான் உங்களுக்கு பரிசாக தருகிறேன் இதை வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.
  ///
  நல்ல குத்து

  ReplyDelete
 63. அவைவரும் நேர்மையாகவும், உண்மையாகவும், சரியாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த கதையின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது///

  சரி அய்யா! அய்யய்யா!!!

  ReplyDelete
 64. இவ்வளவு எழுத்துத் திறன் வைத்திருக்கும் அண்ணன் வணங்காமூடி ஒளிந்திருந்த இடத்தில் இருந்து வெளியே வந்து மறுபடியும் துடிக்குது புஜம் என்று வீறு கொண்டு எழுத வேண்டும். வருவாரா என்று கேள்விக்குறியாக இல்லாமல் விரைந்து வந்து நம்மை மகிழ்விக்க அழைக்கிறேன்.

  வணங்காமுடி
  வண்ங்காமுடி
  வணங்காமுடி

  ReplyDelete
 65. . புலி பதுங்குவது பாய்வதற்காக இருக்குமோ என்னோவோ சரி பொறுத்திருந்து///

  புலி பாய் போட்டு தூங்குதா?//

  புலி பாயும் பாய் போட்டு தூங்காது.

  ReplyDelete
 66. இவர் வந்த வேகத்திலேயே அமைதியா இருக்கிறார். இந்த அமைதி எதுக்குன்னு தெரியலை. புலி பதுங்குவது பாய்வதற்காக இருக்குமோ என்னோவோ சரி பொறுத்திருந்து ///

  வணங்காமுடிக்கு ஆள் அனுப்புங்க அப்பா..

  ஆளுக்கு ஆள் இப்படி சொன்ன என்ன அர்த்தம்...
  புலி பசிச்சாலும் புள்ள தின்னாது...
  திரும்பவும் வருவேன். வெயிட் & cccccccccccccccc

  ReplyDelete
 67. இவ்வளவு எழுத்துத் திறன் வைத்திருக்கும் அண்ணன் வணங்காமூடி ஒளிந்திருந்த இடத்தில் இருந்து வெளியே வந்து மறுபடியும் துடிக்குது புஜம் என்று வீறு கொண்டு எழுத வேண்டும். வருவாரா என்று கேள்விக்குறியாக இல்லாமல் விரைந்து வந்து நம்மை மகிழ்விக்க அழைக்கிறேன்.

  வணங்காமுடி
  வண்ங்காமுடி
  வணங்காமுடி //


  ஹரிணி அம்மாவுக்கு கோட்டுல டவாலி வேலையோ...
  இதுல இருந்து உங்க தொழில் நல்ல போகுதுன்னு தெரியுது

  ReplyDelete
 68. ஆஹா!
  வண்ங்காமுடி வந்து விட்டார்!
  வருக வருக...

  ReplyDelete
 69. அவன் வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தான். அதற்கு அவன் சிறு சிறு முயற்சிகளை மேற் கொண்டான். இருந்தாலும் அவனால் முழுமையாக வெற்றி பெற இயலவில்லை.
  //

  முயற்சி திருவினையாக்கும்..

  ReplyDelete
 70. ஒரு நாள் அந்த கிராமத்திற்கு மகான் ஒருவர் வந்தார். அந்த மகான் கிராம மக்களுக்கு நிறைய அறிவுரைகளை கூறினார். அவரிடம் அந்த இளைஞன் சென்று வெற்றிக்கான ரகசியம் என்ன என்று கேட்டான்///

  கேட்பது ரொம்ப எளிது...

  ReplyDelete
 71. ஹரிணி அம்மாவுக்கு எல்லாரும் சேர்ந்து தண்ணி கொடுங்கப்பா..
  பாவம் ரொம்ப நேரமா கூவிகிட்டே இருக்காங்க...

  ReplyDelete
 72. அந்த மகான் அவனை கழுத்து முங்கும் வரை நதிக்குள் அழைத்து சென்றார். அதன் பிறகு சற்றும் எதிபாராத விதமாக இளைஞனின் தலையை பிடித்து தண்ணீருக்குள் முக்கினார். சிறிது நேரத்தில் அவனால் தண்ணீருக்குள் இருக்க முடியவில்லை. அவன் மிகவும் தத்தளித்தான். இரண்டு மணித்துளிக்கு பிறகு அவர் அவனை நீரில் இருந்து வெளியே எடுத்தார். ///

  நல்லவேளை கொஞ்சம் லேட் ஆனா என்ன ஆவது?

  ReplyDelete
 73. ஹரிணி அம்மாவுக்கு எல்லாரும் சேர்ந்து தண்ணி கொடுங்கப்பா..
  பாவம் ரொம்ப நேரமா கூவிகிட்டே இருக்காங்க...//

  ஒரு ஸ்ட்ராங்க் டீயா போடுங்கப்பா
  ..

  ReplyDelete
 74. அப்போது அவர் அவனை பார்த்து நீ தண்ணீருக்குள் இருந்த போது உனக்கு என்ன தேவை பட்டது என்றார். சற்றும் தயங்காமல் காற்று என்றான். அதற்க்கு அவர் நீ தண்ணீரில் இருக்கும் போது உனக்கு காற்று எப்படி தேவைப்பட்டதோ அது போன்று, வெற்றி உனக்கு எப்போது உயிர் மூட்சாக விளங்குகிறதோ அப்போது தான் நீ வெற்றியை பெறமுடியும் என்று கூறினார்.//

  சிறந்த கதை!!!

  ReplyDelete
 75. //ஒரு நாள் அந்த கிராமத்திற்கு மகான் ஒருவர் வந்தார். அந்த மகான் கிராம மக்களுக்கு நிறைய அறிவுரைகளை கூறினார். அவரிடம் அந்த இளைஞன் சென்று வெற்றிக்கான ரகசியம் என்ன என்று கேட்டான்///

  //கேட்பது ரொம்ப எளிது...//

  அப்படினா கேளுங்க கேளுங்க கேட்டு கிட்டே இருங்க

  ReplyDelete
 76. இக்கருத்து அவனுல் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மிகவும் கடினமாக உழைத்து வெற்றிகளை குவித்தான். உங்கள் அனைவருக்கும் இந்த கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  ///

  கடின உழைப்பு ரம்யாவுக்கும் உயர்வைத்தந்து உள்ள்து...

  ReplyDelete
 77. நானும் ஹரிணி அம்மாவுக்கு பரிந்துரை பண்ணறேன் சீக்கிரமா தண்ணியாவது கொடுங்க பா !!

  ReplyDelete
 78. தத்துவம் என்: 1001
  வாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!
  //
  ஆஹா!!

  ReplyDelete
 79. எல்லாரும் சேர்ந்து வணங்காமூடியை
  பின்னி பெடல் எடுக்கிறீங்க விடாதீங்க,
  பதிவு போடாமே எமாத்தராறு

  ReplyDelete
 80. //ஒரு ஸ்ட்ராங்க் டீயா போடுங்கப்பா
  ..//

  பீர் கேட்காம இருந்தீகளே...
  ஜஸ்ட் மிஸ்சு...
  ரொம்ப நன்றி

  ReplyDelete
 81. தத்துவம் என்: 1002
  லைப்ல சின்ன சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும் எடுத்துகாட்டு : நமீதா எவ்ளோ பெரிய நடிகை ஆனா அவங்க பாபுலர் ஆக சின்ன சின்ன டிரஸ் தான் காரணம். நினைவில் கொள்க...///

  ஆஹா அருமை!!!

  ReplyDelete
 82. எல்லாரும் சேர்ந்து வணங்காமூடியை
  பின்னி பெடல் எடுக்கிறீங்க விடாதீங்க,
  பதிவு போடாமே எமாத்தராறு

  ReplyDelete
 83. //கடின உழைப்பு ரம்யாவுக்கும் உயர்வைத்தந்து உள்ள்து...//

  நுத்துக்கு நுத்துக்கு உண்மை

  ReplyDelete
 84. தத்துவம் என்: 1003
  பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்...
  அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க!//

  சரிங்க!!!எப்படி நம்ம மூஞ்சி அங்கே தெரியுது...ஹி..ஹி..ஹி...

  ReplyDelete
 85. //எல்லாரும் சேர்ந்து வணங்காமூடியை
  பின்னி பெடல் எடுக்கிறீங்க விடாதீங்க,
  பதிவு போடாமே எமாத்தராறு//

  ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்...
  இதுதான் நியதி

  ReplyDelete
 86. தத்துவம் என்: 1005
  ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்!
  பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்...///

  பெண்கள் பொய் சொல்லமாட்டார்கள்!
  ஏன்னா நம்மதான் கேள்வி கேக்கிறதே இல்லையே!!

  ReplyDelete
 87. //சரிங்க!!!எப்படி நம்ம மூஞ்சி அங்கே தெரியுது...ஹி..ஹி..ஹி...///

  இப்பவே கண்ண கட்டுதே

  ReplyDelete
 88. தத்துவம் என்: 1006
  வெற்றியை தேடி அலைந்த போது "வீண் முயற்சி" என்றவர்கள்.
  வெற்றி கிடைத்ததும் "விடா முயற்சி" என்றார்கள்.
  இதுதான் உலகம்.//

  என்ன உல்கமப்பா இது...

  ReplyDelete
 89. அருகில் இருந்தும் பேச முடியவில்லை
  உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை - எக்ஸாம் ஹால்லில்...
  என்ன கொடுமை சார்...///

  சரி விடுங்க...

  ReplyDelete
 90. பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய!
  எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க!
  மலரிடம் சொன்னது முள்...///

  யாருக்கு உரிமை உன்னை சூட!!

  ReplyDelete
 91. ஆசை படுவதை மறந்து விடு!
  ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே!
  //
  ஒரு கண்ணாவே இருக்கணும்கிறீங்க..

  ReplyDelete
 92. ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
  உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டுமே
  என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார்.//

  ஏவுகணை எதுவும் உண்டா?

  ReplyDelete
 93. \\ஆசை படுவதை மறந்து விடு!
  ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே!\\

  தத்துவும் 10இலட்ச்சத்தி 10

  ReplyDelete
 94. வேர்கள் மண்ணுக்குள் இருக்கும் வரை தான் பூக்கள் பூக்கும்.
  நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை தான் அன்பு நீடிக்கும்.///

  வேர்கள் வெளியே தெரியாது!
  கொடுமை...

  ReplyDelete
 95. //
  அண்ணன் வணங்காமுடி said...
  //எல்லாரும் சேர்ந்து வணங்காமூடியை
  பின்னி பெடல் எடுக்கிறீங்க விடாதீங்க,
  பதிவு போடாமே எமாத்தராறு//

  ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்...
  இதுதான் நியதி

  //

  இது தத்துவம் எத்தினாவது தம்பி ??

  ReplyDelete
 96. 100 அடிக்க ஜமால் வாராக..
  மூக்கில் வேர்த்துவிடுதே!!

  ReplyDelete
 97. கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்
  நீ என்னை அணைக்கும் வரை...
  இப்படிக்கு மெழுகுவர்த்தி.//

  என்ன தத்துவம்111111

  ReplyDelete
 98. //
  நட்புடன் ஜமால் said...
  \\ஆசை படுவதை மறந்து விடு!
  ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே!\\

  தத்துவும் 10இலட்ச்சத்தி 10

  //

  தம்பி ஜமால் நல்ல இருக்கீங்களா
  உடம்பு சரி இல்லைன்னு எல்லாரும்
  பேசிகிட்டாங்க ??

  ReplyDelete
 99. \\வேர்கள் மண்ணுக்குள் இருக்கும் வரை தான் பூக்கள் பூக்கும்.
  நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை தான் அன்பு நீடிக்கும்.\\

  தத்துவம் 10 இலட்ச்சத்தி 11

  ReplyDelete
 100. நீ உன் நண்பர்களிடம் பேசும்போது என்னை மறந்து விடுகிறாய்
  இப்படிக்கு கவலைகள்.//

  நட்பின் அருமை..

  ReplyDelete
 101. //
  thevanmayam said...
  ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
  உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டுமே
  என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார்.//

  ஏவுகணை எதுவும் உண்டா?

  //

  என்னா ஆச்சு இங்கே என்னா நடக்கது ??

  ReplyDelete
 102. நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ஆனால்
  காதலி மீது கோபம் கொள்ள கூடாது ஏன் என்றால் நண்பன் புரிந்து கொள்வான்
  காதலி புரியாமல் கொள்வாள்.//

  நண்பனை கழ்ட்டி விட்டுடுவீங்களே!

  ReplyDelete
 103. அருமையான் முறையில

  அறிமுகங்கள் அசத்தல் ரம்யா

  ReplyDelete
 104. //நண்பனை கழ்ட்டி விட்டுடுவீங்களே!//

  ஒன்றை இழந்தால் தான் இன்னொன்று கிடைக்கும்

  ReplyDelete
 105. கலை அக்கா said...
  //என்னா ஆச்சு இங்கே என்னா நடக்கது ??//

  ஆடு நடக்குது, மாடு நடக்குது, கோழி நடக்குது மற்றும்.......

  ReplyDelete
 106. மூன்றாவது நாள் வாழ்த்துக்கள் ரம்யா!

  நல்ல கதை. பொறுமை மட்டுமல்ல,பொறுமையுடன் கூடிய நேர்மை!

  ஏழ்மையில் நேர்மை! நல்ல எளிய நடையில் சொல்லி இருக்கீங்க!

  வாழ்த்துக்கள்! மேலும் நல்ல பல அறிமுகங்கள்! நன்றி ரம்யா!

  ReplyDelete
 107. எங்கப்பா யாரையும் கானோம்

  ReplyDelete
 108. \\நிஜமா நல்லவன் said...

  ஒருத்தருக்கு குளிர் ஜுரம் வந்துடுச்சி போல...\\

  ஆமாம் ஆமாம்.

  ReplyDelete
 109. நான் உங்களுக்கு மாணவன் இன்னையிலே இருந்து, குரு தச்சனையா இந்த பின்னூட்டம்

  ReplyDelete
 110. ஒரு 110 போட்டுக்கறேன்

  ReplyDelete
 111. \\நசரேயன் said...

  நான் உங்களுக்கு மாணவன் இன்னையிலே இருந்து, குரு தச்சனையா இந்த பின்னூட்டம்\\

  ரொம்ப கம்மியா இருக்கே

  ReplyDelete
 112. புதிய புராஜக்ட்டில் சிஸ்டம் கிடைக்காததால் சரிவர கும்மியில் கலந்து கொள்ள முடிவதில்லை..அதனால் கும்மி பதிவர் கூட்டமைப்பு என்னை மன்னிப்பீர்களாக..!!!

  ReplyDelete
 113. சரி...யாரு தான் நூறு போட்டதுன்னு சொல்லுங்க...

  ஒரே கொயப்பமா கீதுபா..

  ReplyDelete
 114. நான் ரொம்ப பிஸி, சாரி பார் லேட் கமிங்.

  ரொம்ப வித்தியாசமா எழுதறீங்க,கலக்குங்க.

  ReplyDelete
 115. சிறுமியின் கதை ரொம்ப நல்லா இருக்கு...

  இந்த முறை அறிமுகப் படித்தியிருக்கும் மூவரும் எனக்குப் புதியவர்கள் தான் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ரம்யா...

  ReplyDelete
 116. இந்த மூன்றாம் நாள் ஆசிரயர் பணியில்
  வந்து என்னை வாழ்த்திய அனைத்து
  உள்ளங்களுக்கும்

  என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல!!!

  ReplyDelete
 117. வெற்றிகரமா மூன்று நாட்கள் அருமையான தகவல்கள் தந்து அசத்தியிருக்கீங்க!!
  அப்படியே புது வலைப்பதிவுகளுக்கு அறிமுகமும் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. படிக்கவேண்டிய லிஸ்ட் கூடிக்கொண்டே போகிறது.

  /விஜய்

  ReplyDelete
 118. மூன்றாம் நாள் ஆசிரியர் பணியை வெற்றிகரமாகக் முடித்ததிற்கு வாழ்த்துக்கள் ரம்யா.

  ReplyDelete
 119. கடவுள் வாழ்த்தில் ஆரம்பித்து
  நன்னெறி கதை சொல்லி
  புது அறிமுகம் கொடுத்து
  நீதி கூறி சும்மா அசத்தலா
  கலக்கி இருக்கீங்க.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது