07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 2, 2009

வலைச்சரத்தில் முதல் நாள் என் ஆசிரியர் பணி


கடவுள் வாழ்த்து
===============

அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு

மலர்மிசை ஏகினான் மாணடி
சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்

ஆசிரியருக்கும் மற்றும் - வலைச்சரம் அனைத்து நிர்வாகிகளுக்கும்

முத்துக்கள் பல எடுத்து
ரத்தினங்கள் பல சேர்த்து
வைரங்கள் இடையே பதித்து
கோமேதகத்தை அதனுடன் சேர்த்து
மாணிக்கங்களையும் பதித்து
எந்திரங்கள் இல்லாமல் - கை
என்ற இயந்திரத்தைக் கொண்டு
ஒவ்வொன்றாய் கோர்த்து
வலைச்சரம் தொடுத்த
பல முத்து சரங்களையும்
நான் தொடுத்த மாலையுடன்
சேர்த்து மாலையாக்கி - மணி
மாலையாக்கி அணிவிக்கின்றேன் .

வணங்கி ஏற்கிறேன் வலைச்சர ஆசிரியர் என்ற மேன்மையான பொறுப்பை.
ஒரு வார காலம் என்னையும் சரம் தொடுக்க அழைத்திருக்கிறார் வலைச்சரம்ஆசிரியர் சீனா அவர்கள். ஆசிரியர் சீனா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன். எனக்கு முன்னால் நண்பர் ஜமால் அழகாக சரம் தொகுத்து வழங்கினார். இதற்கு முன் தொகுத்தவர்களும் மிக அழகாக தொகுத்து முடித்தார்கள். அந்த அளவிற்கு என்னால் முடியமா என்று தெரியவில்லை. தவறுகள் இருந்தால் சுட்டி காட்டி என்னை வழி நடத்தஆசிரியர்க்கும், என் நண்பர்கள் குழுவிற்கும் முழு சுதந்திரம் அளிக்கிறேன்என்பதை இங்கு மிகவும் தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன்.

வலைச்சரம் இப்படி ஒரு தமிழ் வலைப்பூ கதம்பம் இருப்பதே எனக்கு தெரியாது. இந்த வலைப்பூ உலகத்தில் எந்த சட்ட திட்டங்களும் தெரியாது, இன்னும் சொல்லபோனால் எதுவுமே எனக்கு தெரியாது, தினம் தினம் நான் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன். தினம் தினம் நான் அறிவது எல்லாமே புதியவைகளாக நினைக்கிறேன்.

எது முடியும் எது முடியாது எனறெல்லாம் நான் யோசிக்க வில்லை. நண்பர் சீனா சொன்னார் வானமே எல்லை என்று. ஆம் எனது மனதில் ஓடும் மந்திரமும் அதே தான். என்னால் முடியும் என்ற நம்பிக்கை அது எனக்கு ரொம்ப முக்கியமா பட்டது. "நர்மதையின் பிரவாகத்தை கமண்டலத்திலே அடக்கினாராம் ஆதி சங்கரர், கடலையே குடித்தாராம் அகத்தியர்." எந்த காரியத்தை செய்தாலும் கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு செய். அப்படி செய்தால் வெற்றி நிச்சயம் என்று எங்க வீட்டு பெரியவங்க சொல்லுவாங்க. அதை மனதில் வைத்து இதோ ஆரம்பித்து விட்டேன் எனது வலைச்சர பயணத்தை. வாருங்கள் போகலாம்.

வலைச்சரம் எனக்கு அறிமுகம் ஆனது, அது ஒரு சுவையான விஷயம்.

1. திரு.ச்சின்னப்பையன் இவர் தான் எனக்கு வலைச்சரத்தை அறிமுகப்படுத்தியவர். அந்த நல்ல உள்ளத்திற்கு இன்று இந்த மேடையில் நான் நன்றி கூறிக்கொள்கிறேன். திரு.ச்சின்னப்பையன் அவர்கள் வலைச்சரத்தில் ஆசிரியராக இருக்கும்போது என்னை அறிமுகப் படுத்தினார்கள். அப்போ நான் எழுதிய இரண்டு பதிவுகள் அறிமுகம் ஆனது. அதில் இருந்து எனக்கு நிறைய பிண்ணுட்டங்களும் வந்தன.
நன்றி திரு.ச்சின்னப்பையன்.

2. திரு. கார்க்கி. இவர் எனக்கு வலைச்சரத்தில் இரண்டாவது அறிமுகம் கொடுத்திருக்கிறார். அந்த அறிமுகம் ஆன பதிவு எனக்கு தெரியாது. சில காரணங்களினால் நான் வலைப்பதிவு பார்க்காமல் இருந்தேன். அப்போது நண்பர் ஜமால், நண்பர் கார்கி எனக்கு கொடுத்திருந்த அறிமுகம் பற்றி தொலை பேசி மூலம் தெரிவித்தார். மன்னிக்கவும் கார்க்கி. காலம் கடந்து பார்த்து பிண்ணுட்டமும் அளித்தேன்.
நன்றி திரு. கார்க்கி.

சுய புராணம்
===========
நான் ஹைதையில் பிறந்து பள்ளி படிப்பு புதுகையில் முடித்து, கல்லூரி படிப்பை சென்னையில் முடித்து தற்சமயம் கணினித் துறையில் ஒரு உயர் பதவி வகித்து வருகிறேன்.

நான் பெண் என்பதால் பெண்களுக்காக மட்டும் எழுதுவேன் என்று நினைக்காதீர்கள். ரம்யா ஆண் / பெண் இரு பாலோருக்கும் தோழியானவள், சகோதரியானவள்.

நான் வலைப்பதிவிற்கு வந்தது சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க. நான் வாழ்க்கையை தொலைத்த, வாழ்வில் ஏமாந்த, வாழ்க்கை வாழ பயந்த ஒரு பிரிவிற்க்காகத்தான் இந்த வலை பதிவில் எழுத வந்தேன். அவர்களுக்கு மனத்தைரியமும், எதையும் எதிர் கொள்ளும் துணிவும், எந்த சமயத்திலும் தன்னைக் காப்பற்றி கொள்வதில் தெளிவாகவும் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு "வாழ்விழந்த பெண்கள் மறுவாழ்வு திட்டம்" என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தியது. அந்த அமைப்பு அரங்கேறும் நாளில் எனக்கு அவ்விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார்கள். ஏனெனில் நான் அங்கு அருகில் ஒரு பிரபல கணினி மையம் வைத்து நடத்திக் கொண்டு இருந்தேன். வேலைக்கு போவதை விட சொந்த தொழிலாக இருந்தால் பலருக்கு உதவலாமே என்ற ஒரு எண்ணம் தான் நான் முதலில் தொடங்கிய தொழிலுக்கு காரணம்.

அந்த மாவட்டத்தின் DRO அவர்களும் ஒரு பெண்தான். என் கணினி மையம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருந்தது. நானும் அந்த அழைப்பை ஏற்று கணினி மையத்தின் "நிர்வாகி" என்ற அடை மொழியுடன் அந்த விழாவிற்கு சென்றேன். கணினி பாடம் எல்லாம் எடுத்ததினால் மேடை பயம் எனக்கு இல்லை. ஏதோ அழைத்தார்கள் என்றுதான் போனேன்.

ஆனால் எனக்கு அங்கே கிடைத்த மரியாதை உள்ளதே என்னால் மறக்க முடியாது. பெரிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியாளர்கள் அமர்ந்திருந்த மேடையிலே எனக்கும் ஒரு இடம். நான் உள்ளே நுழைந்த உடன் விழா மேடை அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்து அங்கு நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். திடீர் என்று கூட்டத்தில் ஓர் சல சலப்பு. என்ன வென்று பார்த்தால் அதிகாரிகள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்து விட்டார்கள்.

கடவுள் வணக்கம் பாடி முடித்தவுடன் அந்த பெண் DRO என்னை மேடையில் வந்து அமருமாறு சொல்லி அனுப்பினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கட்டாயப் படுத்தியதால் மேடைக்கு செல்ல வேண்டியதாகியது.

அப்போதுதான் உணர ஆரம்பித்தேன் "கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு ". திடீரெண்டு என் அருகே ஒரு அதிகாரி வந்தார் உங்களை எங்கள் ஊர் மாவட்ட ஆட்சியாளர் பேசுவதிற்கு தயார் படுத்திக்க சொன்னாங்கன்னு சொன்னாரு.

ஐயோ மேடையில் பேசவா. எனக்கு முன்னறிவிப்பு எதுவுமே கொடுக்க
வில்லையே. என்ன பேச வேண்டும் என்று தலைப்பும் முன்பே கூறி இருந்தால் என்னை நான் தயார் படுத்திக் கொண்டிருப்பேனே, அதுதான் உதறல். அவர்களே அப்போதுதான் முடிவு செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். நான் என்ன பேச என்னால் முடியாது என்று மறுத்து விட்டேன். இல்லை பேச வேண்டும் என்று கூறி விட்டு அந்த அதிகாரி வெற்றி சிரிப்புடன் சென்று விட்டார்.

எனக்கு என்ன பேசுவது என்று ஒன்றுமே புரியவில்லை. ஆனால் எனக்குள் எப்போதும் ஒரு தைரியம் உண்டு. எங்கு சென்றாலும் வெற்றியுடன் தான் வருவேன் என்று என் உள் உணர்வு கூறிக் கொண்டே இருக்கும். அந்த தைரியத்தில் நான் பேசவேண்டிய நேரம் வந்தது. 3000 பேர் கூடி இருந்த சபையிலே என்ன பேசபோறோம்? உள்ளே உதறல், வெளியே தெரியலை. மைக் முன் செல்லும் வரைதான் போராட்டம். அதன் பின் என்ன, நான் அமர்ந்தது முதல் அங்கே நடந்த எல்லாவற்றையும்தான் கவனித்து வைத்திருந்தேனே, அது மிகவும் பயன் பட்டது நான் மேடையில் மேற்கோள் காட்ட. அப்பெண்களின் அறியாமைகளையும் அவர்களுக்குத் தேவையான தொழில் தொடங்க அறிவுரைகளும் அரங்கேற்றினேன். தகுதிக்கேற்ப தொழில் தேர்வு பற்றிய முக்கியத்துவத்தையும் கூறினேன். மேலும் அவர்களின் முன்னேற்றத்திற்கான வழி முறைகளை விரிவாகக் கூறினேன்.

எனக்கு பேசக் கொடுத்த அவகாசம் 20 நிமிடங்கள் மட்டும்தான். ஆனால் நான் பேசியதோ 45 நிமிடங்கள். அமைதி காத்து அனைவரும் நான் பேசுவதை கூர்ந்து கவனித்தார்கள். அது மிக பெரிய விஷயமாக எனக்கு இருந்தது. பலத்த கைத்தட்டல்கள் கிடைத்தது. அட பரவா இல்லையே நம்ப மானம் காப்பற்றப் பட்டு விட்டதாக என்னை நானே தேற்றிக் கொண்டு விழா மேடையில் இருந்து கீழே இறங்கினேன்.

மேடையை விட்டு இறங்கியவுடன் என்னிடம் அந்த சகோதரிகள் "ஆட்டோகிராப்" வாங்கினார்கள். அந்த நிகழ்வுகளை அசைபோட்டால் இப்போதும் கண்கள் பனிக்கின்றன. அங்கு நடந்தவைகளை என் சகோதரி பெருமையாக கூறும்போது மறுபடியும் என் கண்கள் பனித்தன. எனக்குள் ஒரு பொறி இந்த அபலை பெண்களின் அறியாமையை போக்க இந்த சமுதாயத்திற்கு என் பங்கு என்ன என்பதை உணர்ந்து பேசினேனே. பல வாக்குறிதிகளை கொடுத்தேன். அதை அதிகாரிகள் எதிர்பார்த்த நேர அவகாசத்தில் செய்தும் முடித்தேன். இன்றும் அவர்கள் மத்தியில் எனக்கு ஒரு நல்ல பெயரும், மதிப்பும் இருக்கிறது. இந்த என் வாழ்வில் கடந்து போன நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு வாய்ப்பு அளித்த ஆசிரியர் மதிப்பிற்குரிய சீனா அவர்களுக்கு மறுபடியும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பின் என் பல சூழ்நிலையின் காரணமாக வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். இப்போது சுற்றுகிறேன் உலகத்தை. என்னை சுற்றும் உலகம் அதை நான் சுற்றி வருவதும் ஒரே விளையாட்டுதான் போங்கள். அப்போது நலிவடைந்திருந்த பெண்கள் இப்போது பொருளாதாரத்தினால் உயர்வு அடைந்துள்ளார்கள் என்பதையும் இச்சபையினில் தெரிவித்துக்கொள்ள ஆசைப் படுகிறேன். வாழ்க்கை தரத்திலும் பொருளாதார அடிப்படையில் உயர்ந்து காணப் படுகிறார்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே. இதுதான் என் தாரக மந்திரம்.

நான் பெண்களுக்காக மட்டும் பேச வர வில்லை. யார் கேள்விக்குறியாக நின்றாலும் அவர்களுக்கு ஆச்சிரியகுறி போட சொல்லி கொடுக்கலாம். இதுதான் என் மனதில் எப்போதும் ஓடும் எண்ணச் சிதறல்கள். என் மனதில் உள்ளவைகளை வெளிப்படுத்த ஒரு வலுவான இடம் தேடினேன். அதில் பலரால் அறிமுகப் படுத்தப்பட்டதுதான் இந்த வலைப்பதிவு உலகம். சின்ன உலகத்தில் வலம் வந்து கொண்டிருந்த நான் உங்கள் எல்லாருக்கும் அறிமுகப் படுத்தப் பட்டேன். எனது வலைப்பதிவு "வாழ்ந்து காட்டுவேன்". இதுதான் அதன் பெயர். சிறு வயதில் இருந்தே கவிதைகள், கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். பல பெரிய படைப்பாளிகளிடம் பரிசும் வாங்கி இருக்கிறேன்.

என்னை நீங்க கேட்கலாம் இப்போ நீ என்ன சமுதாயப் பணி செய்கிறாய் என்று. செய்யத்தான் வந்தேன். ஆனால் ஆரம்பத்திலேயே முடக்கப்பட்டேன். இதை பிறகு சில அறிமுகங்களுடன் இவற்றிற்கு விளக்கம் கூறுகிறேன்.

அந்த என் அனுபவம் என்னை சரியான முறையில் அறிமுகப் படுத்த முடியாமல் அமிழ்ந்து போனேன். இதுதான் உனது தைரியமா? என்று பலர் கேட்பது என் காதில் விழுகிறது. யானைக்கும் அடி சறுக்குமாம். நான் என்ன ஒரு சின்ன எறும்பு. என் மனதும் சலசலத்து விட்டது.

இயற்கையிலேயே எனக்கு கொஞ்சம் குறும்பு அதிகம். அதனால் மறுபடியும் உயிர்த்தெழுந்தேன் சிரிக்கலாம் வாங்க என்று சிரிக்க ஆரம்பித்தேன். நிறைய இருக்கிறது. எழுதுவேன் எழுதிக் கொண்டே இருப்பேன்.

அந்த துடிப்பில் நான் எழுதிய சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த நான்கு பதிவுகளும் ஒரு மூன்றாவது நபராக அமர்ந்து படித்த போது என்னால் சிந்திக்க முடிந்தது , சிரிக்க முடிந்தது. இது எனக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். ஏன் என்றால் நான் ஒரு படைப்பாளி. நான் எழுதியதை பார்த்து எனக்கு சிரிப்பு வரக்கூடாது என்று நினைத்து படித்தேன். சிந்தித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.

1. சிந்திக்க.... ரம்யாவின் பங்கு.
இது ஒரு உண்மை சம்பவம். மிகவும் பிரபலமான ஒரு பள்ளி. அதில் 6 வயதே நிரம்பிய ஒரு சிறுவனின் கண்ணீர் சம்பவம் என் காதுகளுக்கு எட்டியது.

2. சிறு பையனும் மரமும்
பெற்றோர்கள் நமக்காக எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள், அவர்களுக்கு நாம் என்ன செய்கிறோம்? சிந்திக்க வேண்டிய விஷயம் அல்லவா? சிந்தித்தால் மட்டும் போதுமா! அவர்களை நல்ல முறையில் பேணி பாதுகாக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதியது. சிறு பையனும் மரமும்.

3. வைகை புயலும் சுப்பிரமணியும்
எனக்கு எப்பவுமே சிரிக்க ரொம்ப பிடிக்கும். சிரிப்பவர்களையும் பிடிக்கும். சிரித்தால் எந்த நோயும் வராது என்பது பொதுவான கருத்து. முதலில் சிந்த்திதேன், பிறகு சிரித்தேன். இரண்டுமே தேன் தானே. இரண்டுமே நினைத்தாலே இனிக்குமே. இவ்விரண்டையும் கலந்து பதிவு போடுவதாக மனதில் உறுதி செய்து எழுத ஆரம்பித்தேன். இங்கே பாருங்க சுப்பிரமணி படும் பாட்டை. வைகை புயலும் சுப்பிரமணியும்.

4. வைகை புயலும் பார்த்திபனும்
இரண்டு பேரும் ஜோடி சேர்ந்தால் என்ன ஆவது?? ஒரே களேபரம்தான் போங்க! இவர்கள் ஜோடி சேர்ந்து எல்லாரையும் சிரிக்க வைத்ததை வெள்ளித் திரையில் கண்டு களித்திருப்பீர்கள். நானும் இருவரையும் வைத்து ஒரு முயற்சி செய்து இருக்கேன். படிங்களேன். வைகைபுயலும் பார்த்திபனும்.


*************


எனக்குப் பிடித்த உலக நீதி
இயற்றிவர்: உலகனாதனார்
------------------------------------

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

இன்று என் முடிவுரை

===================

நல்லதை நினைப்போம்
நல்லவைகளே செய்வோம்
இந்த நாள் இனிய நாளாக
எல்லோருக்கும் அமையட்டும்!!!


மீண்டும் வருவேன்....
உங்கள் ரம்யா






320 comments:

  1. வாழ்த்துக்கள் ரம்யா...

    ReplyDelete
  2. தங்களின் அறிமுகம் அருமையாக உள்ளது. நல்லவை எதுவென்றாலும் பயப்படாமல் துணிந்து செய்யலாம். இதில் ஆண்/ பெண் என்பதென்ன வேண்டிக்கிடக்கிறது? உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். தங்களின் மற்றைய படைப்புகளை படித்துவி்ட்டு மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ரம்யா...

    நல்ல ஆரம்பம்.

    ReplyDelete
  4. அருமையான ஆரம்பம் தொடர வாழ்த்துக்கள்.

    முழுவதும் படித்து விட்டு பிறகு வருகிறேன்

    ReplyDelete
  5. தாங்கள் ஆசிரியர்பணி திறம்பட செயல்பட வாழ்த்துக்கள் ரம்யா..
    சும்மா கலக்குங்க நாங்க இருக்கோம்

    ReplyDelete
  6. ரம்யா! உங்கள் அறிமுக படலம் அருமையோ அருமை!நான் இதுவரை உங்களை பற்றி அறிந்தவன் இல்லை! இன்னும் பல தன்னம்பிக்கை தொடர் தந்து, சிரிக்கவும் வைத்து(சிரித்தாலே தன்னம்பிக்கை தானாக வரும் இல்லியா?) எங்களையும் சந்தோஷ படுத்தி நீங்களும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வாழ்த்துகள் ரம்யா அவர்களே... எங்கள் ஊர் பக்கமெல்லாம் வந்திருக்கிறிர்கள்... உங்களின் ஒரு வார ஆசிரியப் பணி சிறப்பாய் நடக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. வாழ்த்துகள்.. கலக்குங்க.

    ReplyDelete
  9. தங்களின் படைப்புகளை படித்தேன். பெற்றோர்களுக்கு, மரம் பற்றியது உணர்வுப்பூர்வமாக இருந்தது. வைகை/ சுப்பிரமணி, வடிவேலு /பார்த்திபன் நகைச்சுவையாக இருந்தது. சினிமா சான்ஸ் எதுவும் வந்ததா? நல்லா பண்ணியிருக்கீங்க. தொடருங்கள்... தொடருவோம்.

    ReplyDelete
  10. கண்டேன் ரம்யாவை !

    கடவுள் வாழ்த்தில் பக்தியைக் கண்டேன்.
    கவிதையாய் மலர்ந்த வணக்கத்தில்
    பண்பைக் கண்டேன். அறிமுகப் படலத்தில் அறிவைக் கண்டேன். சமுதாய அக்கறையைக் கண்டேன். திறமையும் கண்டேன். தங்கள் பதிவுகளின் சுட்டிகள்...இனிதான் படிக்கப் பட வேண்டும், தெரியும் உங்களுக்கே மிக மிகச் சமீபத்தில்தான் தங்கள் வலைப்பூ எனக்கு அறிமுகம்:)! உங்களுக்குப் பிடித்த உலகநீதி தங்கள் குறிக்கோள் உரைக்கக் கண்டேன். முடிவுரையில் நற்சிந்தனையின் வடிவைக் கண்டேன்.

    மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் ரம்யா...
    தங்களின் அறிமுகம் அருமையாக உள்ளது.
    உங்கள் பதிவுகளை ஏற்க்கனவே படித்துவிட்டேன்

    ReplyDelete
  12. வாழ்த்துகள் ரம்யா. அசத்துங்க நல்ல நல்ல சுட்டிகளாக வழங்கி :)

    //பள்ளி படிப்பு புதுகையில் முடித்து//

    ஹை நீங்க புதுக்கோட்டையா?? எங்க படிச்சீங்க??

    அப்புறம் புதுகையில் பிறந்து,ஹைதையில் இப்போது வசித்துவரும் ஒரு பதிவரை உங்களுக்குத் தெரியுமா???

    ReplyDelete
  13. வாழ்த்துகள்

    ReplyDelete
  14. ஆரம்பமே ஜெட் வேகத்தில ஆரம்பிக்குது..

    யம்மாடி இந்த வேகம்தான் ரம்யாவா?

    கடவுள் வாழ்த்தென்ன, நண்பர்கள் அறிமுகம் என்ன, சுய சரிதம் என்ன..

    பின்னி படல் எடுத்திட்டீங்க..

    ReplyDelete
  15. \\எம்.எம்.அப்துல்லா said...

    வாழ்த்துகள் ரம்யா. அசத்துங்க நல்ல நல்ல சுட்டிகளாக வழங்கி :)

    //பள்ளி படிப்பு புதுகையில் முடித்து//

    ஹை நீங்க புதுக்கோட்டையா?? எங்க படிச்சீங்க??

    அப்புறம் புதுகையில் பிறந்து,ஹைதையில் இப்போது வசித்துவரும் ஒரு பதிவரை உங்களுக்குத் தெரியுமா???\\

    எனக்கு தெரியுமே ...

    ReplyDelete
  16. யோவ்! அப்து, ஜமாலுதம்பி! இங்கிட்டு என்ன க்விஜ் போட்டியா நடத்துறீங்க!

    சரி போட்டின்னு வந்துட்டா இறங்கிடுவோம்ல!

    மாயவரத்துல பிறந்து, (ஒல்லியா)வளர்ந்து இப்ப துபாய்ல உக்காந்து ரகளை அடிக்கும் சின்ன பையன் யாரு? இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க:-))

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் ரம்யா

    ReplyDelete
  18. வாழ்த்துகள்

    ReplyDelete
  19. \\அபி அப்பா said...

    யோவ்! அப்து, ஜமாலுதம்பி! இங்கிட்டு என்ன க்விஜ் போட்டியா நடத்துறீங்க!

    சரி போட்டின்னு வந்துட்டா இறங்கிடுவோம்ல!

    மாயவரத்துல பிறந்து, (ஒல்லியா)வளர்ந்து இப்ப துபாய்ல உக்காந்து ரகளை அடிக்கும் சின்ன பையன் யாரு? இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க:-))\\

    சின்ன பையன்னா அது நீங்களாத்தான் இருக்கும்.

    ReplyDelete
  20. உங்கள விட சின்னவர் யார் இருக்கா.

    நாமளும் மாயவரத்து காலை தாங்கோ

    ReplyDelete
  21. சின்னவருன்னு தெரியும்

    ஒல்லியான்னு தெரியாதண்ணே

    ReplyDelete
  22. ரகளையும் அடிக்கிறீங்களா ...

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் ரம்யா..

    ReplyDelete
  24. தங்களின் அறிமுகம் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  25. வாழ்த்துகள் ரம்யா
    கலக்குங்க நாங்க இருக்கோம்

    ReplyDelete
  26. //முத்துக்கள் பல எடுத்து
    ரத்தினங்கள் பல சேர்த்து
    வைரங்கள் இடையே பதித்து
    கோமேதகத்தை அதனுடன் சேர்த்து
    மாணிக்கங்களையும் பதித்து
    எந்திரங்கள் இல்லாமல் - கை
    என்ற இயந்திரத்தைக் கொண்டு
    ஒவ்வொன்றாய் கோர்த்து
    வலைச்சரம் தொடுத்த
    பல முத்து சரங்களையும்
    நான் தொடுத்த மாலையுடன்
    சேர்த்து மாலையாக்கி - மணி
    மாலையாக்கி அணிவிக்கின்றேன் .//

    அட்டகாசமான அறிமுகவுரை ரம்யா...

    ReplyDelete
  27. நான் ஹைதையில் பிறந்து பள்ளி படிப்பு புதுகையில் முடித்து, கல்லூரி படிப்பை சென்னையில் முடித்து தற்சமயம் கணினித் துறையில் ஒரு உயர் பதவி வகித்து வருகிறேன்///

    ok ok ok

    ReplyDelete
  28. //ரம்யா ஆண் / பெண் இரு பாலோருக்கும் தோழியானவள், சகோதரியானவள். //

    இது தான் ரம்யா...

    ReplyDelete
  29. முத்துக்கள் பல எடுத்து
    ரத்தினங்கள் பல சேர்த்து
    வைரங்கள் இடையே பதித்து
    கோமேதகத்தை அதனுடன் சேர்த்து
    மாணிக்கங்களையும் பதித்து ///

    கலக்கல் கவிதையோ ஆரம்பமா..

    ReplyDelete
  30. நான் தொடுத்த மாலையுடன்
    சேர்த்து மாலையாக்கி - மணி
    மாலையாக்கி அணிவிக்கின்றேன் .///

    வலைச்சரம் சிறக்கட்டும்..

    ReplyDelete
  31. அந்த அளவிற்கு என்னால் முடியமா என்று தெரியவில்லை. தவறுகள் இருந்தால் சுட்டி காட்டி என்னை வழி நடத்தஆசிரியர்க்கும், என் நண்பர்கள் குழுவிற்கும் முழு சுதந்திரம் அளிக்கிறேன்என்பதை இங்கு மிகவும் தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன்///

    நல்லா செய்வீங்க!
    கவலை வேண்டாம்..

    ReplyDelete
  32. வலைச்சரம் இப்படி ஒரு தமிழ் வலைப்பூ கதம்பம் இருப்பதே எனக்கு தெரியாது. இந்த வலைப்பூ உலகத்தில் எந்த சட்ட திட்டங்களும் தெரியாது, இன்னும் சொல்லபோனால் எதுவுமே எனக்கு தெரியாது, தினம் தினம் நான் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன். தினம் தினம் நான் அறிவது எல்லாமே புதியவைகளாக நினைக்கிறேன்.///

    எனக்கும் இப்பத்தான் தெரியும்..

    ReplyDelete
  33. எது முடியும் எது முடியாது எனறெல்லாம் நான் யோசிக்க வில்லை. நண்பர் சீனா சொன்னார் வானமே எல்லை என்று.///

    பறக்க ஆரம்பித்தாகி விட்டது..

    ReplyDelete
  34. "நர்மதையின் பிரவாகத்தை கமண்டலத்திலே அடக்கினாராம் ஆதி சங்கரர், கடலையே குடித்தாராம் அகத்தியர்.

    எங்களுக்கு டீத்தண்ணி
    வாங்கித்தாங்க..

    ReplyDelete
  35. கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு செய். அப்படி செய்தால் வெற்றி ///

    பாரம் நாங்களும் சுமக்கிறோம்..

    ReplyDelete
  36. அதை மனதில் வைத்து இதோ ஆரம்பித்து விட்டேன் எனது வலைச்சர பயணத்தை. வாருங்கள் போகலாம்.

    அப்பா! எல்லாம் வண்டில ஏறுங்கப்பா!!

    ReplyDelete
  37. //நான் தொடுத்த மாலையுடன்
    சேர்த்து மாலையாக்கி - மணி
    மாலையாக்கி அணிவிக்கின்றேன்//

    நாங்களும் அணிவித்து வரவேற்கிறோம்

    ReplyDelete
  38. இவர் தான் எனக்கு வலைச்சரத்தை அறிமுகப்படுத்தியவர். அந்த நல்ல உள்ளத்திற்கு இன்று இந்த மேடையில் நான் நன்றி கூறிக்கொள்கிறேன். திரு.ச்சின்னப்பையன் அவர்கள் வலைச்சரத்தில் ஆசிரியராக இருக்கும்போது என்னை அறிமுகப் //

    சின்னப்பையனுக்கு நன்றி..

    ReplyDelete
  39. //வலைச்சரம் இப்படி ஒரு தமிழ் வலைப்பூ கதம்பம் இருப்பதே எனக்கு தெரியாது. இந்த வலைப்பூ உலகத்தில் எந்த சட்ட திட்டங்களும் தெரியாது, இன்னும் சொல்லபோனால் எதுவுமே எனக்கு தெரியாது, தினம் தினம் நான் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன். தினம் தினம் நான் அறிவது எல்லாமே புதியவைகளாக நினைக்கிறேன்.
    //

    என்னவொரு தன்னடக்கம்ங்க உங்களுக்கு

    ReplyDelete
  40. \\ தாரணி பிரியா said...

    வாழ்த்துகள் ரம்யா
    கலக்குங்க நாங்க இருக்கோம்\\

    ஆமா ஆமா

    ReplyDelete
  41. 100ஆவது ஆசிரியர் - வாழ்த்துக்கள்.

    நான் ஒருக்கா சொன்னா மருக்கா மருக்கா சொன்ன மாதிரி.

    ReplyDelete
  42. நான் வலைப்பதிவிற்கு வந்தது சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க. நான் வாழ்க்கையை தொலைத்த, வாழ்வில் ஏமாந்த, வாழ்க்கை வாழ பயந்த ஒரு பிரிவிற்க்காகத்தான் இந்த வலை பதிவில் எழுத வந்தேன்//

    வாழ்வாங்கு வாழ்க..

    ReplyDelete
  43. //எந்த காரியத்தை செய்தாலும் கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு செய். அப்படி செய்தால் வெற்றி நிச்சயம் என்று எங்க வீட்டு பெரியவங்க சொல்லுவாங்க.//

    எல்லா பிரியவங்களும் அப்படிதான் சொல்லுவாங்க‌

    ReplyDelete
  44. எந்த சமயத்திலும் தன்னைக் காப்பற்றி கொள்வதில் தெளிவாகவும் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான். ///

    பாராட்டுக்கள்!!!!!

    ReplyDelete
  45. //நான் பெண் என்பதால் பெண்களுக்காக மட்டும் எழுதுவேன் என்று நினைக்காதீர்கள். ரம்யா ஆண் / பெண் இரு பாலோருக்கும் தோழியானவள்//

    ஆஹா அடிச்சாங்கய்யா சிக்ஸரு

    ReplyDelete
  46. நாங்க எல்லோரும்

    சுமக்க துவங்கி விட்டோம்

    அப்புறம் எப்படி அது பாரமாகும்.

    ReplyDelete
  47. நாமக்கல் மாவட்டத்தில் அரசு "வாழ்விழந்த பெண்கள் மறுவாழ்வு திட்டம்" என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தியது. அந்த அமைப்பு அரங்கேறும் நாளில் எனக்கு அவ்விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார்கள். ஏனெனில் நான் அங்கு அருகில் ஒரு பிரபல கணினி மையம் வைத்து நடத்திக் கொண்டு///

    பரவாயில்லை!!தொழிலில் பெண்கள் இறங்குவது பாராட்டத்தக்கது..

    ReplyDelete
  48. அடிச்சாச்சி ரூம் - சதம்.

    ReplyDelete
  49. என் கணினி மையம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருந்தது.//

    முயன்றீர்கள்!
    வென்றீர்கள்!!!

    ReplyDelete
  50. பெரிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியாளர்கள் அமர்ந்திருந்த மேடையிலே எனக்கும் ஒரு இடம். ///

    தொழிலுக்கும் தொண்டுள்ளத்திற்கும் கிடைத்த பெருமை.

    ReplyDelete
  51. //நான் வாழ்க்கையை தொலைத்த, வாழ்வில் ஏமாந்த, வாழ்க்கை வாழ பயந்த ஒரு பிரிவிற்க்காகத்தான் இந்த வலை பதிவில் எழுத வந்தேன்//

    அந்தளவிற்கு சோகமா உங்கள் வாழ்க்கையில்

    ReplyDelete
  52. 10 நிமிஷத்தில் வருகிறேன்

    ReplyDelete
  53. அப்போதுதான் உணர ஆரம்பித்தேன் "கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு ".

    கல்வி ஒருவனுக்கு மாடல்ல மற்றையவை

    ReplyDelete
  54. //பெரிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியாளர்கள் அமர்ந்திருந்த மேடையிலே எனக்கும் ஒரு இடம்//

    இப்போது அதற்கும் மேலான இடத்தில் அமர்ந்திருக்கிருக்கிறீர் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  55. //அப்போதுதான் உணர ஆரம்பித்தேன் "கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு ".//

    இது உண்மையிலும் உண்மை.. Special respect is always there for Education & Educated

    ReplyDelete
  56. //மேடையை விட்டு இறங்கியவுடன் என்னிடம் அந்த சகோதரிகள் "ஆட்டோகிராப்" வாங்கினார்கள். //

    எங்களுக்கு எப்போது ஆட்டோகிராப் போட்டு தருவீங்க‌

    ReplyDelete
  57. உங்களுக்கும் எனக்கும் பயங்கர ஒத்துமை ரம்யா. (சேம் ப்ளட்)

    நான் புதுகையில் பிறந்து வளர்ந்து படித்து இப்போ இருப்பது ஹைதையில். உங்கள் சுயபுராணம் அருமை. அடுத்த பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  58. //என் கடன் பணி செய்து கிடப்பதே. இதுதான் என் தாரக மந்திரம்//

    நல்ல மந்திரம்.. தொடருங்கள்

    ReplyDelete
  59. //படித்தேன். சிந்தித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.
    //

    சிரிப்பைவிட வாழ்வை சிறப்பாக்க நல்ல மருந்து ஒன்று உண்டோ

    ReplyDelete
  60. //யார் கேள்விக்குறியாக நின்றாலும் அவர்களுக்கு ஆச்சிரியகுறி போட சொல்லி கொடுக்கலாம்.//

    வளைந்த கேள்வி குறியை நேரக்கி நேரான பாதையில் அழைத்துச் செல்லலாம்...அருமை...

    ReplyDelete
  61. //சிறு வயதில் இருந்தே கவிதைகள், கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். பல பெரிய படைப்பாளிகளிடம் பரிசும் வாங்கி இருக்கிறேன்.//

    உங்கள் எழுத்துகளைப் பார்த்தாலே தெரிகிறது ரம்யா..

    ReplyDelete
  62. //வைகை புயலும் பார்த்திபனும்//

    இந்தப் பதிவை என்னால் மறக்கவே முடியாது...
    சிரித்து சிரித்து வயிரே வலித்து விட்ட்து..

    ReplyDelete
  63. பணியை சிறப்பாக தொடருங்கள்...
    வாழ்த்துக்கள் ரம்யா...

    ReplyDelete
  64. //நாமளும் மாயவரத்து காலை தாங்கோ//

    ஆமா ஜமால்! மாயவரத்திலே காலைன்னா MMS அய்யாவை பார்த்துட்டு மதியம் அதிரையா? அப்புடி போடுங்க!

    ReplyDelete
  65. ஐயோ மேடையில் பேசவா. எனக்கு முன்னறிவிப்பு எதுவுமே கொடுக்க
    வில்லையே. என்ன பேச வேண்டும் என்று தலைப்பும் முன்பே கூறி இருந்தால் என்னை நான் தயார் படுத்திக் கொண்டிருப்பேனே, அதுதா///

    மேடையில் வச்சு பீதிய கிள்ப்பிட்டாங்களா,

    ReplyDelete
  66. அந்த அதிகாரி வெற்றி சிரிப்புடன் சென்று விட்டார். //

    மாட்டி விட்டுட்டு வெற்றிச்சிரிப்பா..

    ReplyDelete
  67. எங்கு சென்றாலும் வெற்றியுடன் தான் வருவேன் என்று என் உள் உணர்வு கூறிக் கொண்டே இருக்கும். அந்த தைரியத்//

    என்ன தைரியம்!

    ReplyDelete
  68. உள்ளே உதறல், வெளியே தெரியலை. மைக் முன் செல்லும் வரைதான் போராட்டம். அதன் பின் என்ன, நான் அமர்ந்தது முதல் அங்கே நடந்த எல்லாவற்றையும்தான் கவனித்து வைத்திருந்தேனே, அது மிகவும் பயன் பட்டது//

    கற்றலின் கேட்டலே நன்று..

    ReplyDelete
  69. \\அபி அப்பா said...

    //நாமளும் மாயவரத்து காலை தாங்கோ//

    ஆமா ஜமால்! மாயவரத்திலே காலைன்னா MMS அய்யாவை பார்த்துட்டு மதியம் அதிரையா? அப்புடி போடுங்க!\\

    ஆமாங்க்ண்ணா


    அதிகாலை அதிரை

    காலை மாயுரம்

    மீண்டும் மாலை அதிரை

    எத்துனை முறை

    மயில்-ஆடும்-துறையில் இருக்கும் மயிலை பார்க்க ...

    ReplyDelete
  70. தகுதிக்கேற்ப தொழில் தேர்வு பற்றிய முக்கியத்துவத்தையும் கூறினேன். மேலும் அவர்களின் முன்னேற்றத்திற்கான வழி முறைகளை விரிவாகக் கூறினேன்.///

    நல்ல மனம் வாழ்க..

    ReplyDelete
  71. எனக்கு பேசக் கொடுத்த அவகாசம் 20 நிமிடங்கள் மட்டும்தான். ஆனால் நான் பேசியதோ 45 நிமிடங்கள். //

    வுட்டா வூடு கட்டீருவமில்ல..

    ReplyDelete
  72. ஆடும் மயிலல்ல

    என்னை தேடும் மயில்

    ReplyDelete
  73. அது மிக பெரிய விஷயமாக எனக்கு இருந்தது. பலத்த கைத்தட்டல்கள் கிடைத்தது. //

    எல்லொரும் ஜோரா கைதட்டுங்கப்பா..

    ReplyDelete
  74. மேடையை விட்டு இறங்கியவுடன் என்னிடம் அந்த சகோதரிகள் "ஆட்டோகிராப்" வாங்கினார்கள். ///

    எனக்கு ஒரு ஆட்டொகிராப்..

    ReplyDelete
  75. அந்த நிகழ்வுகளை அசைபோட்டால் இப்போதும் கண்கள் பனிக்கின்றன.///

    நெஞ்சம் கணக்கின்றது விட்டிட்டீங்க..

    ReplyDelete
  76. எனக்குள் ஒரு பொறி இந்த அபலை பெண்களின் அறியாமையை போக்க இந்த சமுதாயத்திற்கு என் பங்கு என்ன என்பதை உணர்ந்து பேசினேனே. பல வாக்குறிதிகளை கொடுத்தேன். அதை அதிகாரிகள் எதிர்பார்த்த நேர அவகாசத்தில் செய்தும் முடித்தேன்///

    உண்மையில் பாராட்டுகிறேன்..

    ReplyDelete
  77. இன்றும் அவர்கள் மத்தியில் எனக்கு ஒரு நல்ல பெயரும், மதிப்பும் இருக்கிறது. ///

    நல்ல பெயர் கிடைப்பது கடினம்

    ReplyDelete
  78. ஆசிரியர் மதிப்பிற்குரிய சீனா அவர்களுக்கு மறுபடியும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.///

    நாங்களும்தான்..

    ReplyDelete
  79. இப்போது சுற்றுகிறேன் உலகத்தை. என்னை சுற்றும் உலகம் அதை நான் சுற்றி வருவதும் ஒரே விளையாட்டுதான் போங்கள்.///

    காலம் மாறிப்போச்சு..

    ReplyDelete
  80. அப்போது நலிவடைந்திருந்த பெண்கள் இப்போது பொருளாதாரத்தினால் உயர்வு அடைந்துள்ளார்கள் என்பதையும் இச்சபையினில் தெரிவித்துக்கொள்ள ஆசைப் படுகிறேன். ///

    பிறந்த பயனை அடைந்துவிட்டீர்..

    ReplyDelete
  81. என் கடன் பணி செய்து கிடப்பதே. இதுதான் என் தாரக மந்திரம்.

    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  82. எங்கள் கடன் பின்னுட்டம் இட்டுக்கிடப்பதே//

    ReplyDelete
  83. நான் பெண்களுக்காக மட்டும் பேச வர வில்லை. யார் கேள்விக்குறியாக நின்றாலும் அவர்களுக்கு ஆச்சிரியகுறி போட சொல்லி கொடுக்கலாம்.///

    என் முதுகு கொஞ்சம்
    வளைந்து இருக்கு!!
    கும்பிடுறேங்க!!
    சாதனை செல்வியை..

    ReplyDelete
  84. என் மனதில் உள்ளவைகளை வெளிப்படுத்த ஒரு வலுவான இடம் தேடினேன். அதில் பலரால் அறிமுகப் படுத்தப்பட்டதுதான் இந்த வலைப்பதிவு உலகம்.//

    மன பாரம் குறைந்ததா/

    ReplyDelete
  85. எனது வலைப்பதிவு "வாழ்ந்து காட்டுவேன்". இதுதான் அதன் பெயர். //

    வெற்றித்திருமகளே வாழ்க!!

    ReplyDelete
  86. என்னை நீங்க கேட்கலாம் இப்போ நீ என்ன சமுதாயப் பணி செய்கிறாய் என்று. செய்யத்தான் வந்தேன். ஆனால் ஆரம்பத்திலேயே முடக்கப்பட்டேன்.///

    பெண்ணை முடக்குவது சமுதாய நோய்..

    ReplyDelete
  87. அந்த என் அனுபவம் என்னை சரியான முறையில் அறிமுகப் படுத்த முடியாமல் அமிழ்ந்து போனேன். இதுதான் உனது தைரியமா? என்று பலர் கேட்பது என் காதில் விழுகிறது. யானைக்கும் அடி சறுக்குமாம். நான் என்ன ஒரு சின்ன எறும்பு. என் மனதும் சலசலத்து விட்டது.

    ///

    கவலை வேண்டாம் சகோதரி..

    ReplyDelete
  88. இயற்கையிலேயே எனக்கு கொஞ்சம் குறும்பு அதிகம்.///

    அதுதான் டீ அத்துரதுலே தெரியுதே..

    ReplyDelete
  89. அதனால் மறுபடியும் உயிர்த்தெழுந்தேன் சிரிக்கலாம் வாங்க என்று சிரிக்க ஆரம்பித்தேன். நிறைய இருக்கிறது. எழுதுவேன் எழுதிக் கொண்டே இருப்பேன்.//

    தலைவி படிக்க நாங்க ரெடி..

    ReplyDelete
  90. ஏன் என்றால் நான் ஒரு படைப்பாளி.

    ஆஹா ஆஹா ஹா!!!

    ReplyDelete
  91. வலைச்சரம் தொடுத்த
    பல முத்து சரங்களையும்
    நான் தொடுத்த மாலையுடன்
    சேர்த்து மாலையாக்கி - மணி
    மாலையாக்கி அணிவிக்கின்றேன் ///

    வலைச்சரம் வாழ்க..

    ReplyDelete
  92. வணங்கி ஏற்கிறேன் வலைச்சர ஆசிரியர் என்ற மேன்மையான பொறுப்பை.//

    வருக! தருக! பருக!

    ReplyDelete
  93. யார் அடிக்க இருக்கீங்க

    ReplyDelete
  94. கடவுள் வாழ்த்து
    ===============

    அகர முதல எழுத்தெல்லாம்
    ஆதி பகவன் முதற்றே உலகு

    மலர்மிசை ஏகினான் மாணடி
    சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்//

    கடவுள் வாழ்த்து சூப்பர்..

    ReplyDelete
  95. போச்சா

    சரி சரி

    101 மொய்

    ReplyDelete
  96. ஹரினி அம்மா அடிச்சாங்க சதம்.

    ReplyDelete
  97. காத்திருந்து 100ஐ கொத்திவிட்டாரே!

    ReplyDelete
  98. ஓ நான் தான் சதமா!!
    நன்றி
    சாப்பிடப்போறேன்..
    ரம்யா...

    ReplyDelete
  99. வாழ்த்துக்கள் ஹரினி அம்மா.

    ReplyDelete
  100. வாழ்த்துக்கள் ரம்யா:)

    ReplyDelete
  101. எல்லோரும் வாழ்த்தியதை பார்க்கும்போது எனக்கு மிக்க பெருமையாக இருக்கிறது
    சகோதரி இது ஆரம்பம் !!!

    நீ முன்பு போல் இன்னும்
    நிறைய சாதனைகள் படைக்க
    வாழ்த்துகிறேன் சகோதரி !!!

    ReplyDelete
  102. \\கலை அக்கா said...

    எல்லோரும் வாழ்த்தியதை பார்க்கும்போது எனக்கு மிக்க பெருமையாக இருக்கிறது
    சகோதரி இது ஆரம்பம் !!!

    நீ முன்பு போல் இன்னும்
    நிறைய சாதனைகள் படைக்க
    வாழ்த்துகிறேன் சகோதரி !!!\\

    வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  103. கடவுள் வாழ்த்து சூப்பர்..

    ReplyDelete
  104. தம்பி ஜமால் நீ அறிமுகம் செய்து வைத்த முத்தல்லவா சகோதரி ரம்யா!!

    அப்புறம் எப்படி இருப்பாள் - இல்லை
    உனது தெரிவுதான் தவறாகுமா?
    அருமையான அறிமுகம் ஜமால்
    வாழ்த்துக்கள் ஜமால்!!!

    ReplyDelete
  105. \\கலை அக்கா said...

    தம்பி ஜமால் நீ அறிமுகம் செய்து வைத்த முத்தல்லவா சகோதரி ரம்யா!!

    அப்புறம் எப்படி இருப்பாள் - இல்லை
    உனது தெரிவுதான் தவறாகுமா?
    அருமையான அறிமுகம் ஜமால்
    வாழ்த்துக்கள் ஜமால்!!!\\

    அக்கா ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete
  106. இந்த அனைத்து பிண்ணுட்டங்களும்
    என் கண்களில் நீரை வரவழைக்கின்றன.

    என் மீது நீங்கள் வைத்திருக்கும்
    அன்பிற்கும், பாசத்திற்கும்

    மிக்க நன்றி நண்பர்களே!!
    மிக்க நன்றி சகோதரர்களே !!
    மிக்க நன்றி சகோதரிகளே !!

    அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி!!!

    ReplyDelete
  107. \\RAMYA said...

    இந்த அனைத்து பிண்ணுட்டங்களும்
    என் கண்களில் நீரை வரவழைக்கின்றன.

    என் மீது நீங்கள் வைத்திருக்கும்
    அன்பிற்கும், பாசத்திற்கும்

    மிக்க நன்றி நண்பர்களே!!
    மிக்க நன்றி சகோதரர்களே !!
    மிக்க நன்றி சகோதரிகளே !!

    அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி!!!\\

    இவ்வளவு அன்பையும் நண்ப/நண்பிகளையும் பெற்றிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்களும்.

    நானும் இங்கே இருப்பதற்கு தங்களுக்கு நன்றியும்.

    ReplyDelete
  108. ahaa.... mee the 115th.. will come later with detailed reply..

    ReplyDelete
  109. ஆசிரியராகப் பொறுப்பேற்று முதல் நாளே அசத்தியிருக்கிறீங்க. மேலும் மேலும் பயனுள்ளவைகளைத் திகுக்க வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  110. /அபி அப்பா said...
    ரம்யா! உங்கள் அறிமுக படலம் அருமையோ அருமை!நான் இதுவரை உங்களை பற்றி அறிந்தவன் இல்லை! இன்னும் பல தன்னம்பிக்கை தொடர் தந்து, சிரிக்கவும் வைத்து(சிரித்தாலே தன்னம்பிக்கை தானாக வரும் இல்லியா?) எங்களையும் சந்தோஷ படுத்தி நீங்களும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்!
    /

    டபுள் ரிப்பீட்டேய்...!

    ReplyDelete
  111. /எம்.எம்.அப்துல்லா said...
    வாழ்த்துகள் ரம்யா. அசத்துங்க நல்ல நல்ல சுட்டிகளாக வழங்கி :)

    //பள்ளி படிப்பு புதுகையில் முடித்து//

    ஹை நீங்க புதுக்கோட்டையா?? எங்க படிச்சீங்க??

    அப்புறம் புதுகையில் பிறந்து,ஹைதையில் இப்போது வசித்துவரும் ஒரு பதிவரை உங்களுக்குத் தெரியுமா???
    /

    யாருண்ணே அவங்க?

    ReplyDelete
  112. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் நூற்றுக்கு தொன்னுத்தொன்பது மதிப்பெண்கள் வாங்கி
    உள்ளான். இதை பாராட்டும் வகையில் ராஜாவின் வகுப்பூ ஆசிரியை அவர்கள், ராஜாவை ஊக்குவிக்கும் வகையில், V.Good and * * *//

    3 ஸ்டார் ஆ!!

    ReplyDelete
  113. ராஜா சுமாராக படிக்கும் மாணவன் என்று கூறினார்கள். படிப்பது முதல் வகுப்பு இதில் சுமார் என்ன, சுமார் இல்லாமல் என்ன? ///

    முதல் வகுப்பிலேயே ராங்க் தேவையா..

    ReplyDelete
  114. \\நிஜமா நல்லவன் said...

    /எம்.எம்.அப்துல்லா said...
    வாழ்த்துகள் ரம்யா. அசத்துங்க நல்ல நல்ல சுட்டிகளாக வழங்கி :)

    //பள்ளி படிப்பு புதுகையில் முடித்து//

    ஹை நீங்க புதுக்கோட்டையா?? எங்க படிச்சீங்க??

    அப்புறம் புதுகையில் பிறந்து,ஹைதையில் இப்போது வசித்துவரும் ஒரு பதிவரை உங்களுக்குத் தெரியுமா???
    /

    யாருண்ணே அவங்க?\\

    அட இங்கப்பார்றா

    ReplyDelete
  115. / அபி அப்பா said...
    யோவ்! அப்து, ஜமாலுதம்பி! இங்கிட்டு என்ன க்விஜ் போட்டியா நடத்துறீங்க!

    சரி போட்டின்னு வந்துட்டா இறங்கிடுவோம்ல!

    மாயவரத்துல பிறந்து, (ஒல்லியா)வளர்ந்து இப்ப துபாய்ல உக்காந்து ரகளை அடிக்கும் சின்ன பையன் யாரு? இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க:-))
    /

    என்னது ச்சின்ன பையன் துபாய் ல இருக்காரா? அவரு வேற நாட்டில் இருக்கிறதா சொன்னாங்களே...:)

    ReplyDelete
  116. மாதந்திர தேர்வில் எல்லா பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் நூற்றுக்கு தொன்னுத்தொன்பது மதிப்பெண்கள்///

    அது எப்படி..

    ReplyDelete
  117. ஒரு சிங்கம்
    சிங்கிளா
    சிக்ஸர்
    அடிச்சிகிட்டு இருக்கு

    ReplyDelete
  118. சந்தொஷம் மகிழ்ந்திருக்கிறான், தலை கால் புரியவில்லை. ஒவ்வொரு பாடம் கற்பிக்க வரும் ஆசிரிகைகளிடம் காண்பித்து, அவர்களும் ராஜாவை பாராட்டி கொஞ்சி அனுப்பி இருக்கிறார்//

    கூட வாங்கினா கொஞ்சுவாங்க...

    ReplyDelete
  119. /thevanmayam said...
    மாதந்திர தேர்வில் எல்லா பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் நூற்றுக்கு தொன்னுத்தொன்பது மதிப்பெண்கள்///

    அது எப்படி..
    /

    ஹையோ .. ஹையோ...இது கூட தெரியாம கேள்வி கேக்குறீங்களே... ஜமால் எல்லா பாடத்திலும் நூத்துக்கு நூத்து தொண்ணூற்று ஒன்பது மார்க்குகள் வாங்கினது தெரியுமா?

    ReplyDelete
  120. ஆனால் ராஜாவோ அய்யோ என் ஸ்டார்ஸ் எல்லாம் காணாம போய்டுச்சு. மிஸ் என் ஸ்டாட்ஸ் எல்லாம் வேணும்///

    என்ன ஏமாற்றம்..

    ReplyDelete
  121. மிஸ் நான் 3 ஸ்டார்கள் வாங்கிஇருக்கிறேன் என்று காட்டி உள்ளான்///

    super star..

    ReplyDelete
  122. ஆனால் அந்த மதிப்பெண் தாளில் ராஜாவின் பெயர் மற்றும் அவன் வாங்கிய மதிப்பெண்கள் 66 என்று இருந்திருக்கிறது. ///

    சோகமப்பா...

    ReplyDelete
  123. \\
    என்னது ச்சின்ன பையன் துபாய் ல இருக்காரா? அவரு வேற நாட்டில் இருக்கிறதா சொன்னாங்களே...:)\\

    எந்த நாட்ல நல்லவரே

    ReplyDelete
  124. ஆனால் ராஜா அதை கேட்காமல் ஸ்டார்ஸ் ஸ்டார்ஸ் என்று அழுததினால், ராஜாவின் வகுப்பாசிரியையை அழைத்து விபரம் கேட்டு இருக்கிறார்கள்.///

    பாவமப்பா..

    ReplyDelete
  125. மதிப்பெண்கள் 99 என்பது 66 ஆக மாறியது என்று ஒன்றும் புரியாமல் விளித்திருக்கிறார்கள். பிறகு மதிப்பெண் regist///

    thalai keela paththuttaanga...

    ReplyDelete
  126. அதற்கு மாதவி எந்தவித தயக்கமும் இல்லாமல் 99 நான் தான் 99 வாங்கி இருக்குறேனே. என்று மதிப்பெண் தாளை கண்பித்துஇருக்கிறாள்.///

    என்னப்பா குழப்பம்..

    ReplyDelete
  127. ஒரு வார காலம் என்னையும் சரம் தொடுக்க அழைத்திருக்கிறார் வலைச்சரம்ஆசிரியர் சீனா அவர்கள். ஆசிரியர் சீனா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

    We also say thanks

    ReplyDelete
  128. பிறகு முதல்வர் இனிப்பு, பரிசுகள் எல்லாம் கொடுத்து மதிப்பெண்களை பற்றி விசார்த்திருக்கிறார். எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு, நான் 99 வாங்கி இருக்கிறேன் என்று மறுபடியும் அதே தான் கூறி இருக்கிறாள்.///

    என்ன குழப்பமா இருக்கே...

    ReplyDelete
  129. நான் தொடுத்த மாலையுடன்
    சேர்த்து மாலையாக்கி - மணி
    மாலையாக்கி அணிவிக்கின்றேன் ///

    we also garland you..

    ReplyDelete
  130. எனக்கு முன்னால் நண்பர் ஜமால் அழகாக சரம் தொகுத்து வழங்கினார்.///

    நண்பர்தான் நல்ல தொடுப்பாளர்...

    ReplyDelete
  131. ஒன்றும் கூறாமல் மாதவியயை அனுப்பி விட்டு. தவறு எப்படி நடந்திருக்கு என்று கண்டுபிடிக்குமாறு வகுப்பாசிரியைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.///

    நீதி விசாரணையா////

    ReplyDelete
  132. நண்பர் சீனா சொன்னார் வானமே எல்லை என்று.//

    வானத்துக்கு ஏது எல்லை..

    ReplyDelete
  133. நடந்தது என்ன?/

    என்ன என்ன என்ன......

    ReplyDelete
  134. \\ஹரிணி அம்மா said...

    நண்பர் சீனா சொன்னார் வானமே எல்லை என்று.//

    வானத்துக்கு ஏது எல்லை..\\

    அதானே ...!

    ReplyDelete
  135. நர்மதையின் பிரவாகத்தை கமண்டலத்திலே அடக்கினாராம் ஆதி சங்கரர், கடலையே குடித்தாராம் அகத்தியர்.///

    நம்ம மக்கள் கடலைதான் போடும்....

    ReplyDelete
  136. மாதவி ராஜாவின் விடைத்தாளில் உள்ள ராஜாவின் பெயரை அழித்துவிட்டு, அதில் தன் பெயரை எழுதி, தன் விடைத்தாளில் தன் பெயரை அழித்துவிட்டு ராஜாவின் பெயரை எழுதி இருக்கிறாள் என்று கண்டுபிடித்து விட்டார்கள். ///

    பேஷ் பேஷ்.... பலே..

    ReplyDelete
  137. \\ஹரிணி அம்மா said...

    நான் தொடுத்த மாலையுடன்
    சேர்த்து மாலையாக்கி - மணி
    மாலையாக்கி அணிவிக்கின்றேன் ///

    we also garland you..\\

    we 22222

    ReplyDelete
  138. அப்போ நான் எழுதிய இரண்டு பதிவுகள் அறிமுகம் ஆனது. அதில் இருந்து எனக்கு நிறைய பிண்ணுட்டங்களும் வந்தன.
    நன்றி திரு.ச்சின்னப்பையன்.//

    cinnappaiyan vazhga..

    ReplyDelete
  139. \\ஹரிணி அம்மா said...

    நர்மதையின் பிரவாகத்தை கமண்டலத்திலே அடக்கினாராம் ஆதி சங்கரர், கடலையே குடித்தாராம் அகத்தியர்.///

    நம்ம மக்கள் கடலைதான் போடும்....\\

    கடல போடனுமா

    கடல்ல போடனுமா

    ReplyDelete
  140. அவள் குறைந்த மதிபெண்கள் வாங்கும்போதெல்லாம் அவளுக்கு ஒரே திட்டு ஒரே அடியாம். அடி வாங்கி //

    ஒன்னாவதிலேயே திட்டினா..

    ReplyDelete
  141. \\ஹரிணி அம்மா said...

    அப்போ நான் எழுதிய இரண்டு பதிவுகள் அறிமுகம் ஆனது. அதில் இருந்து எனக்கு நிறைய பிண்ணுட்டங்களும் வந்தன.
    நன்றி திரு.ச்சின்னப்பையன்.//

    cinnappaiyan vazhga..\\

    வாழ்க வாழ்க

    ReplyDelete
  142. நான் ஹைதையில் பிறந்து பள்ளி படிப்பு புதுகையில் முடித்து, கல்லூரி படிப்பை சென்னையில் முடித்து தற்சமயம் கணினித் துறையில் ஒரு உயர் பதவி வகித்து வருகிறேன்.
    ///

    புதுக்கோட்டை ராணி ஸ்கூலா..

    ReplyDelete
  143. \\thevanmayam said...

    அவள் குறைந்த மதிபெண்கள் வாங்கும்போதெல்லாம் அவளுக்கு ஒரே திட்டு ஒரே அடியாம். அடி வாங்கி //

    ஒன்னாவதிலேயே திட்டினா..\\

    ஒன்னே ஒன்னு தானே

    ReplyDelete
  144. அந்த நண்பி குழந்தையும் ஒன்றும் புரியாமல், அழாதே என்று கூறுவாளாம்.//

    குழந்தையின் பெரிய மனம்..

    ReplyDelete
  145. அந்த நண்பி குழந்தையும் ஒன்றும் புரியாமல், அழாதே என்று கூறுவாளாம்.//

    வாங்க சகோதரி வாங்க..

    ReplyDelete
  146. பிறகு அவர்கள் வீட்டு பக்கத்தில் குடித்தனம் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளார்கள். அவர்களும் அந்த குழந்தையை எப்போதும் அடிப்பார்கள். ஏன்னு கேட்டால் சரியா படிக்க
    மாட்டேன்கிறாள் என்பார்களாம். இதை கேட்டு எனக்கு திக் என்று இருந்தது.///

    சின்னக்குழந்தையையா அடிக்கிறார்கள்?

    ReplyDelete
  147. \\thevanmayam said...

    அவள் குறைந்த மதிபெண்கள் வாங்கும்போதெல்லாம் அவளுக்கு ஒரே திட்டு ஒரே அடியாம். அடி வாங்கி //

    ஒன்னாவதிலேயே திட்டினா..\\

    ஒன்னே ஒன்னு தானே

    ReplyDelete
  148. இங்க என்ன நடக்குது?

    ReplyDelete
  149. நான் வலைப்பதிவிற்கு வந்தது சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க. நான் வாழ்க்கையை தொலைத்த, வாழ்வில் ஏமாந்த, வாழ்க்கை வாழ பயந்த ஒரு பிரிவிற்க்காகத்தான்//

    சகோதரி பாடுபடுவோம் வாங்க..

    ReplyDelete
  150. \\thevanmayam said...

    அவள் குறைந்த மதிபெண்கள் வாங்கும்போதெல்லாம் அவளுக்கு ஒரே திட்டு ஒரே அடியாம். அடி வாங்கி //

    ஒன்னாவதிலேயே திட்டினா..\\

    ஒன்னே ஒன்னு தானே

    ReplyDelete
  151. \\நிஜமா நல்லவன் said...

    இங்க என்ன நடக்குது?\\

    எங்க போய்ட்டிய ...

    ReplyDelete
  152. குழந்தைகள் ஏற்கனவே புத்தக மூட்டைகளை சுமந்து மிகவும் சொல்லவொண்ணா துயரத்தில் இருக்கிறாரகள் என்று தான் என் கண்ணோட்டத்தில் தெரிகிறது.///

    சரிதான்..

    ReplyDelete
  153. நான் இடம் மாறி வந்துட்டேன் போல....லிங்க் கொடுத்தவங்க சரியா கொடுக்கலை...:)

    ReplyDelete
  154. எதையும் எதிர் கொள்ளும் துணிவும், எந்த சமயத்திலும் தன்னைக் காப்பற்றி கொள்வதில் தெளிவாகவும் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான்.
    //

    எல்லாவற்றையும் எதிர்கொள்வோம் வாங்க...

    ReplyDelete
  155. \\நிஜமா நல்லவன் said...

    ஒண்ணுமே புரியலை...\\

    ஒன்னு பிப்ர-வரி தானே புரியலை சொல்லனும் அதுக்குள்ள மே எங்க வந்தது

    ReplyDelete
  156. யார் 200 அடிச்சாலும் அவங்களுக்கு என்னோட வாழ்த்துக்களை இப்பவே சொல்லிக்கிறேன்...:)

    ReplyDelete
  157. 6 வயதில் நல்ல மதிபெண் வாங்கவில்லை என்று அடித்ததில் அந்த சிறு குழந்தையின் போக்கு எவ்வளவு அபாயகரமாக மாறி இருக்கிறது பார்த்தீர்களா?//

    இப்ப எல்லாம் குழந்தைய அடிக்ககூடாதுங்க..

    ReplyDelete
  158. நாமக்கல் மாவட்டத்தில் அரசு "வாழ்விழந்த பெண்கள் மறுவாழ்வு திட்டம்" என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தியது. அந்த அமைப்பு அரங்கேறும் நாளில் எனக்கு அவ்விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார்கள்///

    great thing..

    ReplyDelete
  159. எமது நெஞ்சார வாழ்த்துகள் ரம்யா...

    உங்கள் ஆசிரியர் பணி சிறக்க நான் இறைவனை வேண்டுகிறேன்.

    இன்று அலுவலகத்திற்கு செல்லாமல் வேறு அலுவல்களை கவனிக்க வேண்டியிருந்ததால்
    வலைச்சரத்திற்கு வர இயலவில்லை.

    வ‌ரும் நாட்க‌ளில் எம் ஆத‌ர‌வு உங்க‌ளுக்கு எப்போதும் உண்டு என்ப‌தை க‌ண்க‌ள் ப‌னிக்க‌
    தெவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  160. பெற்றோர்களின் இந்த செய்கை அந்த பிஞ்சு குழந்தையின் மனதை எவ்வளவு மோசமான முறையில் மாற்றி உள்ளது பார்த்தீர்களா? இது ஒரு கெட்ட செயலாகவும் இந்த சமுதாயத்திற்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது அல்லவா?///

    நல்ல பாடம் இது...

    ReplyDelete
  161. ஒரு கமெண்ட் கூட புரிய மாட்டிங்குது...:)

    ReplyDelete
  162. நானும் எதுவும் புரியாத மாதிரி கமெண்ட் போட போறேன்...

    ReplyDelete
  163. வேலைக்கு போவதை விட சொந்த தொழிலாக இருந்தால் பலருக்கு உதவலாமே என்ற ஒரு எண்ணம் தான் நான் முதலில் தொடங்கிய தொழிலுக்கு காரணம்.///

    பெண்கள் முன்னேற்ரத்திற்கு தொழில் அதிபராவது நல்ல வழி..

    ReplyDelete
  164. ஆனாலும் நான் வ‌ர‌துக்கு முன்னாடியே 150 மேல‌ கும்மிய‌டிச்ச‌து கொஞ்ச‌ம் ஓவ‌ரு தான்..

    யாருப்பா அது ?? லேசா க‌ண் அச‌ற‌துக்குள்ள‌ இவ்ளோ நட‌ந்து போச்சா ??

    ப‌ர‌வாயில்ல‌..நான் 200 போட்டுக்குறேன்.

    ReplyDelete
  165. தயவு செய்து தாய்மார்களே, தந்தைமார்களே இது போன்ற நடவடிக்கைகளை குறைத்து கொள்ளவீர்கள் என்று நம்புகின்றேன். ///

    நாங்களும் கேட்டுக்கிறோம்,..

    ReplyDelete
  166. \\நிஜமா நல்லவன் said...

    யார் 200 அடிச்சாலும் அவங்களுக்கு என்னோட வாழ்த்துக்களை இப்பவே சொல்லிக்கிறேன்...:)\\

    நீங்க அடிக்க மாட்டீங்களா ...

    ReplyDelete
  167. எலே வேலு இங்கே வா. கிட்டே வா காதுலே ஒரு விஷயம் சொல்லறேன். மாடசாமி சரி இல்லை. அதுக்குதான் போன மாதம் ஆஸ்பத்திரிக்கி கூட்டிகிட்டு போனாங்க. அவருக்கு புத்தி பிசகிடிச்சாம் இங்கே எல்லாரும் அப்படிதான் பேசிக்கிறாங்க. அதனாலே சத்தம் போடாமே இந்தா டீ வாங்கிகிட்டு போய் சேர்.

    ReplyDelete
  168. என்னா மாடசாமி அண்ணனுக்கு புத்தி சரி இல்லையா? இவ்வளவு நேரம் என்கிட்டே நல்லா தானே பேசினாரு. நீ என்னா பொய் சொல்லறயா? அண்ணங்கிட்டே சொல்லட்டுமா? எனக்கு எம்புட்டு பழக்கம்? என்னா இது சின்னபிள்ளைதனமா இருக்கு?

    ReplyDelete
  169. டேய் வேலு ஒழுங்கா டீ எடுத்துகிட்டு போ. அலம்பல் பண்ணினா சுடுதண்ணி எடுத்து முஞ்சியிலே ஊத்திடுவேன். ஓடி போய்டு ஆமா சொல்லிட்டேன்.

    ReplyDelete
  170. எனாது சுடுதண்ணி ஊத்துவியா என்னாங்கடா ஆச்சு எல்லாரும் தப்பு தப்பா பேசறிங்க? சரி இவ்வளவு சொல்லறே நானு நபறேன். சுடுதண்ணி எல்லாம் வேணாம் நானே கிளம்பறேன்.

    ReplyDelete
  171. அந்தி மயங்கிய நேரத்தில்
    அழகான ஓர் திங்களில்
    அருமையான ஓர் பதிவில்
    கண்களை ஓடவிட்டேன் மெல்ல

    ReplyDelete
  172. பதிவு நீண்டு செல்ல - நேரம்
    ஆகித்தான் போனதே - நீண்ட
    நேரம் ஆகித்தான் போனதே
    பதிவும் முடிந்து தான் போனதே

    ReplyDelete
  173. \\அ.மு.செய்யது said...

    ஆனாலும் நான் வ‌ர‌துக்கு முன்னாடியே 150 மேல‌ கும்மிய‌டிச்ச‌து கொஞ்ச‌ம் ஓவ‌ரு தான்..

    யாருப்பா அது ?? லேசா க‌ண் அச‌ற‌துக்குள்ள‌ இவ்ளோ நட‌ந்து போச்சா ??

    ப‌ர‌வாயில்ல‌..நான் 200 போட்டுக்குறேன்.\\

    வாங்க தம்பி

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரலாம்ன்னு பார்க்கிறீங்களா

    ReplyDelete
  174. ஈரம் கலந்து வந்த
    உங்கள் பதிவு பலரை தீண்டி
    எங்கள் மதியை ஆட்கொண்டதே
    நாங்கள் என் செய்வோம்

    ReplyDelete
  175. \\அ.மு.செய்யது said...

    ஆனாலும் நான் வ‌ர‌துக்கு முன்னாடியே 150 மேல‌ கும்மிய‌டிச்ச‌து கொஞ்ச‌ம் ஓவ‌ரு தான்..

    யாருப்பா அது ?? லேசா க‌ண் அச‌ற‌துக்குள்ள‌ இவ்ளோ நட‌ந்து போச்சா ??

    ப‌ர‌வாயில்ல‌..நான் 200 போட்டுக்குறேன்.\\

    வாங்க தம்பி

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரலாம்ன்னு பார்க்கிறீங்களா

    ReplyDelete
  176. தெள்ளு தமிழ் துள்ள
    பதியும் உங்கள் பதிவுக்கு
    நாங்கள் என்றென்றும் அடிமை
    எங்களை மறந்தனையோ

    ReplyDelete
  177. //லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரலாம்ன்னு பார்க்கிறீங்களா//

    pesa kuda neram illinga..200 potutu ess aayiren...

    ReplyDelete
  178. என் கணினி மையம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருந்தது. நானும் அந்த அழைப்பை ஏற்று கணினி மையத்தின் "நிர்வாகி" என்ற அடை மொழியுடன் அந்த விழாவிற்கு சென்றேன்.//

    நிர்வாகின்னா பெருமை தானே..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது