07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 1, 2010

ஆரவாரமற்ற நீரோடைகள்...

வணக்கம். அன்பு நெஞ்சங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்.அண்ணே எவ்வளவு கஷ்டம், சலிப்பு, இயலாமை, ஏமாற்றம், கோபம்னு வலிக்க வலிக்க இருந்தாலும் கடவுளோ இயற்கையோ மனுசப்பயலோ இதையும் தாண்டி மருந்திருக்குன்னு நம்மள சுத்தி மறைச்சி வெச்சிருக்காங்க. சிலது தானே வந்து சேரும் ஆறுதலா. சிலத தேடி நாம போய் அடையணும் தேறுதலா.

நடுராத்திரி அமைதியில் ஓ.எஸ். அருண் கஜல், அதிகாலையில் பிஸ்மில்லா கான் ஷெனாய்ல வைஷ்ணவ ஜனதோ, டி.என்.கிருஷ்ணன் வயலின்ல சங்கராபரணம், ரமணியோட புல்லாங்குழல்ல ஹமீர்கல்யாணி, மாமரத்து குயிலின் குக்கூ, கரையோயரம் வளைஞ்சி ஆத்துக்குள்ள நீண்ட கிளை வளைவில சாய்ஞ்சி உட்கார்ந்து ஆற்றின் சலசலப்புக்கு எதிரா காற்றின் சலசலப்பில் ஆல மரத்து இலையோசை இப்படி நிறைய இறைஞ்சி கிடக்கும்.

எல்லாத்தையும் மறக்கடிச்சி மனசு துடைச்சி விட்டா மாதிரி, ரொம்ப சுத்தமா ஒரு உணர்வு வரும் அனுபவிக்கிறப்ப. சில எழுத்துக்கள் அப்படிப்பட்டது. ஆரவாரம் இல்லாம, வலிக்க வைக்கிற விஷயம் கூட ஒரு டாக்டர் மாதிரி அளவான வலியோட இருக்கும். படிச்சிட்டு மனசார ஒரு புன்னகையோட கை குலுக்கி நன்றி சொல்ல வைக்கிற எழுத்து.

ஒண்ணுமில்லை...ச்சும்மான்னு ரெண்டு கை விரிச்சி அழைக்கிற அண்ணன் அப்துல்லா வலைமனைக்குப் போனா இப்படி கை குலுக்கிட்டு எல்லாம் இருக்குன்னு மனசு லேசாகி வரலாம். தமிழ்மணம் நட்சத்திர பதிவர் ஆனதைப் பத்தி ஒரு இடுகை போட்டிருக்காரு. சிரிப்போட என்னை மாதிரி பல பேருக்கு இவங்கல்லாம் படிக்கறாங்கன்னு ஊக்கம் தர விஷயம் சொல்லியிருக்கார். இது ஒன்னுமில்லையா? இதுதான் எல்லாம். இதுக்குதான் எல்லாம்.

அப்துல்லா  மாதிரியே எழுத்துக்கள் ஒரு மனிதனை சரியாக உருவகப் படுத்தும் பதிவர் முரளிகுமார் பத்மநாபன். மனிதம் தோய்ந்த எழுத்தின் படைப்பாளி போலியற்ற மனிதனாய். ஈரோட்டில் அறிமுகப்படுத்திக் கொண்டபோது என் மனதில் கரம்கூப்ப வேண்டுமெனத் தோன்றியது. அமைதியான பேச்சு. கூட இருப்பது கண்ணியம் என்ற உணர்வு. கட்டிப் பிடி வைத்தியம் என்ற இவரின் இடுகை ஒன்று போதும் இவரை வெளிக்காட்ட.

பதிவுலக தென்றல் இவர். இன்னும் சொல்லப் போனால் பல பதிவருக்கு ஏற்றிவிட்ட ஏணி. ஏனோ எல்லோரும் பின்னூட்ட மன்னர் என்றே அடையாளம் காண்கின்றனர். பின்னூட்டமோ, இடுகையோ அந்தக் கண்ணியம், பிரபலம் கத்துக்குட்டி என்ற பாகுபாடு அற்றவர், பொங்கிவரும் நகைச்சுவை, அண்ணே என்ற ஒற்றை வார்த்தையில் பதிவுலகைக் கட்டிப்போட்டவர். ஜலதோஷத்துக்கு வைத்தியரிடம் போய் வந்த வினையும் நவாஸுடன் அடித்த லூட்டியும் புத்தாண்டு கொண்டாட்டமாய் இதோ. இதற்கப்புறமும் நைஜீரியா இராகவன் என்று பேர் சொல்லுவது ஒட்டுமொத்த பதிவுலகின் சார்பில் நன்றி கூறத்தான். அண்ணே! இனிமேலாவது சும்மா வலைப்பூ வெச்சிருக்கேன்னு சொல்லாதீங்க.

My thoughts da machchi. சிங்கப்பூர் மாணவர் தமிழ்மாங்கனியின் அழகான வலைப்பூ. இடக்கையோர வகைகளைப் பார்த்தால் போதும். இவரின் காதல் கவிதைகள் ஒரு விஷுவல் ட்ரீட். விழி மூடி யோசித்தால் என்ற இவரின் இடுகை ஒரு சாம்பிள்.

புதிய பதிவர்கள் அறிமுகத்துக்காக தேடவேண்டிய அவசியமின்றி ‘பூப்பூக்கும் ஓசை’ என்ற வரி நிஜமாகிவிட்டது வலையுலகில். எப்படியோ ஈர்க்கிறார்கள் இவர்கள்.

பேநா மூடி என்ற பெயரில் எழுதுகிறார் ஆனந்த். திறமை இருக்கிறது. சீரியசாக எழுத முயற்சியிருக்கிறது. நன்றாக எழுதுவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. டிஸ்கி மன்னன். 2009ம் வருடத்தை வழியனுப்பும் ஒரு வாலிபனின் உள்ளம்.

கவிதைக் காதலன் மணிகண்டவேல். நல்ல எழுத்தோட்டம். இயல்பான நகைச்சுவை. என் கேள்விக்கென்ன பொருள் என்ற இவரின் இடுகை ஓர் உதாரணம்.

சிதறல்கள் என்ற வலைப்பூவின் தோட்டக்காரன் றமேஸ் என்ற வித்தியாசமான இந்த புதுசு. புதுவருட வாழ்த்து சொல்லும் இவரை வாழ்த்துவோமே.

இப்போது தான் வலையுலகுக்கு வந்திருக்கும் இன்னொரு நம்பிக்கையூட்டும் கவிஞன். ருத்ரவீணை. மரக்கட்டில் என்ற சின்ன ஒரு கவிதை சொல்லும் அழகு இங்கே.

மீண்டும் ஒரு முறை இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துகளுடன்..

சந்திப்போம்.

17 comments:

 1. அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள். இந்த பெரிய வாய்ப்பை அளித்த சீனா அய்யாவுக்கு நன்றியும் கூட.

  ReplyDelete
 2. அய்யா,

  நன்றி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  அப்துல்லா, ராகவன் அண்ணா தவிர ஏனையோர் புதியவர்கள். தொடர்கிறேன்.

  பிரபாகர்.

  ReplyDelete
 3. நாஙாம் நாள் வாழ்த்துக்களோடு தங்களுக்கும் தங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 4. உங்களுக்கும், எனக்கும், எல்லோருக்கும் இனிதே துவங்கட்டும் புத்தாண்டு ...::))

  ReplyDelete
 5. புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 6. அன்பின் பாலா

  இதயங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  அறிமுகங்கள் அருமை - புதியவர்களைத் தேடிக் கண்டு பிடித்து அறிமுகப் படுத்தியது நன்று

  நல்வாழ்த்துகள் பாலா

  ReplyDelete
 7. நன்றி சீனா..
  புது வருட முதல் பரிசு
  எனக்கும் ஒரு இடம் தந்ததுக்கு..

  அனைத்து உள்ளங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள்

  வாசிக்கப்படாமல் போன
  பலபக்கங்கள் கொண்டு
  வாழ்கைப் புத்தகம்
  எழுதுவோம்
  புது வருடத்தில்
  வாருங்கள் தோழர்களே...

  ReplyDelete
 8. புத்தாண்டு வாழ்த்துக்கள் வானம்பாடிகள் மற்றும் சீனா ஸார் நலமே பொலிக

  ReplyDelete
 9. நீரோடைகளுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 10. அனைத்து நேச நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 11. இன்றைய அறிமுகப்படுத்தலும் அருமை...நிறைய (வலைப்பூ)வீட்டுக்கு போகவேண்டியிருக்கிறது. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அண்ணே புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  அறிமுகப் படுத்தியதற்கு நன்றிங்க.

  ReplyDelete
 13. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...! அருமை சார்....

  ReplyDelete
 14. புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. @@ நன்றி பிரபாகர்
  @@நன்றி வசந்த்
  @@நன்றி பலா பட்டறை
  @@நன்றி டி.வி.ஆர்
  @@நன்றி சீனா
  @@வாங்க றமேஸ் நன்றி. சீனா சார்பிலும்.
  @@நன்றி தேனம்மை
  @@நன்றி யூத்து.
  @@நன்றி சூர்யா
  @@நன்றி பாலாசி
  @@அண்ணே அறிமுகமா? சூரியனுக்கு டார்ச்சா
  @@ நன்றி அம்மா
  @@ நன்றி இயற்கை

  ReplyDelete
 16. இந்நாளும் இனி வரும் நாட்களும் சிறப்பாய் அமையட்டும் அனவருக்கும்..

  அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருமே சிறந்த பதிவர்கள். நிச்சயம் எல்லோரும் எல்லோரையும் வாசிக்கவேண்டும்.

  ReplyDelete
 17. என்னை அறிமுக படுத்தியமைக்கு நன்றி ஐயா...,

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது