07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 29, 2010

வலைச்சரத்தின் ஐந்தாம் நாள் : நகைச்சுவை

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல

-வின்ஸ்ட்டன் சர்ச்சில்

வாரத்துல அஞ்சி நாள உங்க ஆதரவில ஓட்டியாச்சு. எழுதுற நடையில ஒரே மாதிரி பண்ணினா போரடிக்குமில்ல! இன்னிக்கு நடய மாத்தி கொஞ்சம் காமெடிய பத்தி பாப்போமா?

சிறுகதைன்னா அதுல ஒரு விஷயம் சொல்லப் போறோங்கறதுல தெளிவா இருப்போம், பெரும்பாலானவங்க ஏத்துக்கிற மாதிரி இருக்கும்.

ஆனா, காமெடி எழுதறது அவ்வளவு ஒன்னும் சாதாரண விஷயமில்லைங்கோ... ரொம்ப கஷ்டம். நாம சரியான காமெடின்னு நினைச்சிக்கிட்டு ரொம்ப ரசிச்சி உசிர கொடுத்து எழுதுவோம், ஆனா படிச்சிட்டு நல்லா இருக்கிற மொகத்த இன்னும் சோகமா வெச்சிகிட்டு ஆமா என்னா சொல்ல வர்றேம்பாங்க. அதுக்கெல்லாம் அசந்துடுவோமா நாம? முயற்சி பண்ணி நிறையா எழுதுவோம்ல...

சில பேருக்கிட்ட ஒரு காமெடின்னு சொன்னதுமே பயங்கரமா சிரிச்சி வெறுப்பேத்தி, ஆமா இப்ப சொல்லுன்னு நம்மளயே காமெடி பீஸ் ஆக்கிடுவாங்க.

நம்மள பொறுத்தவரைக்கும் காமெடிங்கறது மத்தவங்கள புண்படுத்தாம, படிக்கிறவங்க நராசமா உணராம, ரசிச்சி சிரிக்கிற மாதிரி இருக்கனும், அம்புடுத்தேன்.

அதுக்குன்னு இடுகை மொத்தமா எல்லாரும் சிரிக்கனும்னு மூச்சக் கட்டி எழுதத் தேவையில்ல. சொல்ல வர விஷயத்த நாசூக்கா காமெடி தூவி கொடுத்தோம்னா அதுவே பெரிய சக்சஸா ஆயிடும்.

அப்படி நாம கஷ்டப்பட்டு தேடிப்புடிச்சதில கிடைச்ச சில காமெடி பீஸ கீழ குடித்திருக்கேன், படிச்சிட்டு சிரிப்பு வரலன்னா, என்ன கன்னா பின்னன்னு திட்டிட்டு கடைசியா கொஞ்சம் சிரிச்சிடுங்க... சரியா?

 உக்காந்து யோசிப்போமில்லே... அட இடுகை எழுதறதுக்காக செய்யறதப் பத்தி இல்லங்க, ஒரு வலைப்பூவோட பேரே அதுதான். அங்கதான் நமக்கு இந்த சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.01 சிக்கினாரு. படிச்சிப்பாருங்க, சிரிப்புக்கு நான் உத்திரவாதம். சேட்டைக்காரன் நாலு பாகம் வரைக்கும் எழுதிட்டாரு. உங்களுக்கும் பிடிச்சிருக்கான்னு படிச்சிட்டு சொல்லுங்க.

பட்டாபட்டின்னு ஒருத்தரு ப.மு,கழகம்னு ஆரம்பிச்சி ரவுசு வுட்டுட்டிருக்காரு. அவரோட இடுகை கணிதம் பழகலாம் வாங்க படிச்சிட்டு எனக்கு கணக்கே மறந்துடிச்சின்னா பாருங்களேன். அவிங்க கட்சி ஆபீஸ் போட்டோ பாத்துட்டு ஒரே சிரிப்புத்தான் போங்க. கீழ ஒருத்தர் செய்யறத பாத்து இன்னும்...

உங்களுக்கு கவிதை எழுதனும்னு ஆசையா? கவலையே உடுங்க, டக்ளசாயிருந்து இப்ப ராஜுவா இருக்கிற தம்பி எழுதின 30 நாட்களில் கவிதை எழுதுவது எப்படி..?. படிச்சி பாருங்க, உடனே பேனாவ எடுத்து எதாச்சும் எழுத ஆரம்பிச்சிடுவீங்க.

பார்த்ததும் படித்ததும்-ல நம்ம சங்கரு அமி கொல்கொத்தா ஜாக்ச்சி னு கல்கத்தா போன கதைய எழுதிருப்பாரு பாருங்க, ரொம்ப ஆர்வமா படிச்சி.... வேணாம், நீங்களே படிச்சிப்பாருங்க...

டுபுக்குன்னு ஒரு வலைப்ப்பூவ பாக்குறப்போ வயலின்னு ஒரு இடுகை. வயலின் கத்துக்கறதப்பத்தி எப்புடி சொல்லியிருக்காப்ல.... படிச்சி டரியலாயிட்டேன், காமடிய லேசா தூவி கலக்கியிருக்காப்ல... நீங்களும் படிச்சி பாருங்க....

சாமின் வலையுலகம்....னு ஒரு ஒரு வலைப்பூ கண்ணுல மாட்ட சும்மா லுக்கு உட்டா உள்ள ஒரு சூப்பர் இடுகை சிக்குச்சி. குருவி படத்தில் Mr.Bean னு தலைவரு சும்மா கலக்கலா ஒரு யூ டியூப் விடியோவ போட்டிருந்தாரு. பாத்துட்டு டரியலாயிட்டேன். நீங்களும் பாருங்க, ஆபீஸ்ல வேணாம், சவுண்டோட வீட்ல பாருங்க.

அகசியம்ங்ற வலைப்பூவ நேத்துத்தான் பாத்தேன், அதுல எழுதற வரோதயன் கனகநாயகம் கற்பித்த ஆசிரியருக்கு கல்லால் எறி! ன்னு ஒரு இடுகை. சும்மா கூலா கலக்கியிருக்காரு. ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுங்க, செம கூலாகலாம் வாங்க...ன்னு கூப்பிடறாரு.

சிரிச்சது போதுங்களா? நாளைக்கு கொஞ்சம் சீரியஸா பார்க்கலாம். இப்போ நான் ஜூட்!

21 comments:

 1. மிக்க நன்றி பிரபாகர்

  வாழ்த்துகள்

  ReplyDelete
 2. கணிதம் பழகலாம் , 30 நாட்களில் கவிதை எழுதுவது எப்படி..? தவிற வேற எதுவும் இதுவரை படிக்கல..பகிர்வுக்கு நன்றி தல படிச்சிற வேண்டியதுதான். ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நல்ல நகைச்சுவை எல்லோருக்கும் தேவையான ஒன்று. அறிமுகங்களுக்கு நன்றி நன்றி நண்பா..:))

  ReplyDelete
 4. அறிமுகங்களுக்கு நன்றி நண்பா...

  ReplyDelete
 5. ஐந்தாம் நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 6. ்ம்ம்ம்ம அசத்தல் வாழ்துக்கள் அறிமுகங்களுக்கு

  ReplyDelete
 7. சிலரை படித்திருக்கிறேன். அறிமுகங்களுக்கு நன்றி. பிரபாகர் சார்.

  ReplyDelete
 8. சிரி(ற)ப்பான அறிமுகங்கள்.

  ReplyDelete
 9. வலைப்பதிவு ஆரம்பிச்சு முழுசா பதினைந்து நாட்கள் கூட ஆகாத நிலையில், இவ்வளவு பெரிய மனசோட என்னோட பதிவையும் குறிப்பிட்டிருக்கீங்களே! நன்றி சொல்ல வார்த்தையில்லை. நல்லாயிருக்கணும்!

  ReplyDelete
 10. அறிமுகத்துக்கு நன்றிங்கண்ணா :)

  ReplyDelete
 11. இது போன்று மற்றவர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத பதிவுகளை அறிமுகப்படுத்தும் உங்களுக்கு நன்றி. உங்கள் உழைப்பு வியப்புக்கு உரியது.

  ReplyDelete
 12. அப்போ நான் நகைச்சுவை பதிவரும் இல்லையா???? :(((((

  ReplyDelete
 13. அறிமுகங்களுக்கு நன்றி. எல்லோருமே எனக்குப் புதியவர்கள். இனித்தான் படிக்க வேண்டும்.

  ReplyDelete
 14. அறிமுகங்களுக்கு நன்றி.
  ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. நல்லா இருக்குங்க உங்க அறிமுகங்கள்

  ReplyDelete
 16. நல்ல நகைச்சுவையாளர்களைத்தான் அறிமுகப்படுத்தியிருக்கீங்க...

  ReplyDelete
 17. /-- காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல

  -வின்ஸ்ட்டன் சர்ச்சில் --/

  அசத்தல் வாசகம்...

  ReplyDelete
 18. ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 19. பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றி.

  பிரபாகர்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது