07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 22, 2010

வலைச்சரம் - ஐந்தாம் நாள்

கவிதை எழுதுவதற்கு ஒரு தனித் திறமை வேண்டும்.நம் இணையத்தில் பலர் அதில் சிறந்து விளங்குகிறார்கள்.குறிப்பாக பா.ரா., அனுஜன்யா, ஜ்யோவ்ராம், கலகலபிரியா, உயிரோடை லாவண்யா..போன்றோர் உண்மையான கவிதை எழுதும் பதிவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

மண்டபத்தில் யாரும் எழுதித் தராவிடினும்..என்னைப் போன்றோர் இணையத்தில் கவிதை என்று லேபிள் போட்டு எழுதி ..இல்லை..இல்லை..கிறுக்கி வருகிறோம்.சமயத்தில்..எங்களாலும் சில நல்லக் கவிதைகள் எழுதிவிட முடிவதுண்டு.

இணையத்தில்..நான் படித்த சில கவிதைகளும்..அதை எழுதியவர்களும்..இன்றைய இடுகையில்.

ஈரோடு கதிர்..நம்பிக்கை நுனி கவிதை மட்டுமல்ல இவர் இடுகைகள் அனைத்தும் படிக்கப் படவேண்டியவை..ஆகவே தான் இந்த பதிவில் அவரையும் சேர்த்துள்ளேன்.

ஹேமா எழுதிய வானம் வெளுத்த பின்னும்..வலைப்பூவில் பெண் பற்றிய கவிதையும்..கூட்டாஞ்சோறு கவிதையும் தவறாமல் படிக்க வேண்டிய கவிதைகள்.வாழ்த்துகள் ஹேமா

தேனம்மை லட்சுமணனின் ..சும்மா வலைப்பூவில் இன்னா(வோ) நாற்பது அருமையான கவிதை

மயாதியின் கொஞ்சு(ச)ம் க(வி)தைகள் வலைப்பூவில் எழுதியுள்ள sms கவிதைகள் படியுங்கள்..கவிதைகள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன.

நேசமித்திரன் கவிதைகள் இது இவர் வலைப்பூவின் பெயர்.காலுறைகள் திருடுபவன் படியுங்கள்..புரிதல் சிறிது கஷ்டம்..புரிந்து விட்டாலோ அடடா....

D.R.அசோக் நான் இங்கே அவள் எங்கே கவிதை இவரையும் தொடர்ந்து படியுங்கள்.

புலவன் புலிகேசியின் வழிப்போக்கன் தரும் அருமையான கவிதை பொங்குமா பொங்கல் நான் தட்டச்சு செய்கையில் என் நினைவிற்கு வந்த கவிதைகள் இவை..

தவிர..நிலா ரசிகன்,வசந்தகுமார்,ரவிஷங்கர்,நர்சிம்,அகநாழிகை,தியாவின் பேனா ,தண்டோரா ஆகியோர் கவிதைகளையும் நான் ரசித்ததுண்டு.

22 comments:

 1. அன்பின் டிவிஆர்

  கவிஞர்கள் அறிமுகம் அருமை

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. மயாதி படித்ததில்லை..அறிமுகத்திற்கு நன்றி..:)

  ReplyDelete
 3. என் கவிதை அறிமுகத்திற்கு மிக்க நன்றி...மற்ற அறிமுகங்களையும் பார்க்கிறேன்.

  ReplyDelete
 4. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. \\உண்மையான கவிதை எழுதும் பதிவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.\\

  பொய்யான கவிதை யார் எழுதுவா..?
  கவிதைக்கே பொய்தானங்க அழகு.
  :-)

  ReplyDelete
 6. மயாதி இப்போது ரொம்ப நாளா காணோம்... எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அழைக்கிறோம்.. :)

  அருமையான அறிமுகங்கள்.

  என் அபிமான கவிஞர்கள் / சகோதரர்கள் யாத்ரா செந்தில்-மற்றும் சேரல் அவர்களை நினைவில் கொள்ளாமைக்கு :( என்ன சார்???

  கூல்:))

  ReplyDelete
 7. சார். நீங்கள் குறிப்பிட்டுள்ளவர்களில் பெரும்பாலோனவர்களின் கவிதைளைப் படித்திருக்கிறேன். மயாதி, தேனம்மை போன்றோர்கலின் கவிதைகள் படித்ததில்லை. அறிமுகத்திற்கு நன்றி. இனி வாசிக்கிறேன்.

  ReplyDelete
 8. மயாதி, படிக்கவேண்டும்... நன்றிங்கய்யா!

  பிரபாகர்.

  ReplyDelete
 9. //ராஜு ♠ said...
  பொய்யான கவிதை யார் எழுதுவா..?
  கவிதைக்கே பொய்தானங்க அழகு.
  :-)//

  உண்மைதான்..கவிதைக்கு பொய் அழகுதான்..எழுதுவது கவிதையாய் இருந்தால்

  ReplyDelete
 10. //என் அபிமான கவிஞர்கள் / சகோதரர்கள் யாத்ரா செந்தில்-மற்றும் சேரல் அவர்களை நினைவில் கொள்ளாமைக்கு :( என்ன சார்???

  கூல்:))//

  முதலில் இவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை
  இரண்டாவதாக..எல்லோரைப் பற்ரியும் நான் சொல்லிவிட்டால்..பின் நாட்களில் ஆசிரியப் பொறுப்பேற்போருக்கு சொல்ல கவிஞர்களே இல்லாமல் போவார்களே!
  எப்படி என் சமாளிப்பு..ஹி..ஹி..

  ஆமாம்..வினாயகமுருகனை விட்டு விட்டீர்களே!..இந்த வார விகடனில் அவர் கவிதை அட்டகாசம்

  ReplyDelete
 11. அருமையான அறிமுகங்கள்...

  ReplyDelete
 12. \\T.V.Radhakrishnan said... உண்மைதான்..கவிதைக்கு பொய் அழகுதான்..எழுதுவது கவிதையாய் இருந்தால்\\

  கவிதையென்பதற்கு என்ன வரையறை இருக்கின்றது..? அல்லது யாரால் வரையறுக்கப்படும்..?

  ReplyDelete
 13. என் பழைய பதிவுகளை படித்ததில்லை என்பது தெரிகிறது... :)
  தங்களின் அறிமுகத்திற்கு நன்றி !

  ReplyDelete
 14. //கவிதையென்பதற்கு என்ன வரையறை இருக்கின்றது..? அல்லது யாரால் வரையறுக்கப்படும்..?//

  ராஜு, வரையறை எல்லாம் ஏதுமில்லை. ”கவிதை என்பது உணர்வுகளின் கொதிநிலை” கவிதாயினி பெருந்தேவி சொன்னது.

  பெருங்காவியங்களை இரு வரியிலும் சொல்லலாம்.

  பல சமயங்களில் கவிதை தன்னைதானே எழுதிசெல்கிறது. நாம் ஒரு Instrument அவ்வளவே :)

  ReplyDelete
 15. \\பல சமயங்களில் கவிதை தன்னைதானே எழுதிசெல்கிறது. நாம் ஒரு Instrument அவ்வளவே :)\\

  அப்போ, கவிஞர்கள்ன்னு யாருமே இல்லைன்னு சொல்ல வர்றீங்களா..?
  :-)

  ReplyDelete
 16. //D.R.Ashok said...
  என் பழைய பதிவுகளை படித்ததில்லை என்பது தெரிகிறது... :)
  தங்களின் அறிமுகத்திற்கு நன்றி !//

  உண்மை..சமீப காலமாகத்தான் உங்கள் இடுகைகளை படித்து வருகிறேன்

  ReplyDelete
 17. நன்றி என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு.வலைச்சர வாழ்த்துக்கள் இன்னும் தொடராக.

  ReplyDelete
 18. வலைச்சர வாழ்த்துகள். அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 19. என்ன தவம் செய்து விட்டோம்.... ரொம்ப நன்றி :) TVR... :)

  ReplyDelete
 20. வலைச்சரம் - ஐந்தாம் நாள்"..பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது