07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 6, 2010

தூண்டும் இன்பம் ....

வணக்கம் நண்பர்களே!

கொஞ்சம் வேலை அதிகமா இருந்திச்சிங்க. அதான் நேற்றைய இடுகை வரவில்லை. அடுத்த இடுகைகள்ள கூடுதலா அறிமுகம் செய்துட்டா போச்சி. வேலைன்னா வேலை அப்படி ஒரு வேலை. களைச்சுட்டேன். அட ஃபிலிமெல்லாம் காட்டலைங்க. நிசமாத்தான்.

ஃபிலிமெல்லாம் நமக்கு காட்றதுக்கு கூட பதிவர்கள் இருக்காங்க. தேடி தேடி திரட்டி, பார்த்து, விமரிசனம் பண்ணி, தேவைப்பட்டத பாருங்க சாமின்னு கொடுக்கிற விஷயம் ரொம்ப பெருசு.ஒரு காலத்துல நாங்களும் ரவுடிதான்னு மவுண்ட்ரோட் தியேட்டர்ல புது ஆங்கிலப் படம் ரிலீஸ் ஆனா முதல் வாரம், ப்ளாக்ல டிக்கட் விக்கிற அண்ணாச்சிங்க மூணு டிக்கட் நியூஸ் ரீல் முடியற வரைக்கும் நமக்காக வச்சிருக்கிற அளவுக்கு இருந்திச்சி.

சினிமா போறது அறவே நின்னு போனாலும், ஆடின காலும் பாடின வாயும் மாதிரி படம் பார்த்து பழகின மனசும் சினிமாவ தேடும்போது அலுங்காம குலுங்காம நேர நாம போற திரையரங்கு பட்டர்ஃப்ளை. டெண்டு கொட்டாய் படல்ல விரல விட்டு ஓட்ட பண்ணி இடுக்கால திருட்டுத்தனமா பார்க்கிறா மாதிரி விமரிசனம் படிச்சிட்டு பின்னூட்டம் கூட போடாம வந்துடுவேன். சாரி சூர்யா.:)).படத்தோட கதையை பார்க்கத் தூண்டும் விதமா சொல்லி, படம், நடிகர்கள் பற்றிய குறிப்பும் அழகான நடையில் சொல்லி படம் பார்க்க இயலாவிடினும் அந்த நிறைவைத் தரும் எழுத்து சூர்யாவினுடையது. அருணா மேம் பூங்கொத்துனு சொல்றா மாதிரி நான் சொல்றது ஒரு சோறு பதத்துக்கு, இதோ! இது தவிர பட்டர்ஃப்ளை சிறகடிக்க நந்தவனமும் வைத்திருக்கிறார். புத்தகக் கண்காட்சி பற்றிய இடுகை பாருங்கள்.

இன்னோரு மனம் கவர்ந்த ஃபிலிம் காட்டி ஹாலிவுட் பாலா. அக்கரைச் சீமை என்ற இவர் வலைப்பூவில் சினிமாவும் சினிமா மட்டும் என்றாலும், டிக்கட் கட்டணத்துக்கு பதில் மனதைப் பறித்துக் கொள்கிறார். படக்கதையை விட இவர் சொல்லும் விதமும் தகவலும் வித்தியாசம். இதோ ஒரு சோறு பதத்துக்கு.


சோறு சோறுன்னு பறக்கறேன்னு பார்க்கறீங்களா. இதை எழுதும்போது பசி.   சரி இதுக்கும் வலைப்பூ இருக்குமே பார்க்காலாம்னு தேடினா அம்முவின் சமையல் அழைத்தது. சமையலைப் பாராட்டுமுன் இவங்க பெண்ணாதிக்கத்துக்கு கண்டனம் சொல்லியே ஆகணும். அதென்னங்க உங்க தளத்துக்கு பெண்கள்தான் வருவாங்கன்னு தீர்மானம் பண்ணிட்டீங்களா? அவங்கள மட்டும் வாங்க வாங்கங்கறீங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ். பார்க்கப் போனா ஆம்பிளைங்கதான் நீங்க சொல்றத கவனமா பார்த்து சரியா செய்வாங்க. கவுரவப் பிரச்சினை பாருங்க அதான். ஹி ஹி. சமையல் எப்படி இருக்குமுங்கறத அந்த ஃபோட்டோல பார்க்கும்போதே தெரியுது. நீங்களே பாருங்கப்பா.


போன இடுகையிலயே சொல்லி இருக்க வேண்டியவர் ஒருத்தர் இருக்காருங்க. கணினி மென்பொருள்ள பல மென்பொருள் பயன்பாடு, தரவிறக்கம் போன்ற விளக்கங்களோட வேறு சில பொது அம்சங்களும் அழகா தருவாரு. அதாங்க நம்ம வேலன். நகைச்சுவையா புகைப்படத்துக்கு கமெண்ட், புகைப்படத்தில் ஒட்டு வேலைன்னு அசத்தலான ஒரு இடுகை உங்களுக்கு.

நிலா அது வானத்து மேலேன்னா அந்த வலைப்பூவின் பதிவரும் அங்கதான். ஸ்டார்ஜன். கவிதை, கட்டுரை, நகைச்சுவைன்னு எல்லாம் எழுதி இருக்கார். தமிழ்மணம் போட்டியில் இவரின் படைப்பு முதல் சுற்றில் தேர்வாகி இருப்பது ஒன்றே இவரின் எழுத்தின் அங்கீகாரம் சொல்லும். ரெஃபரன்ஸ் புஸ்தகம் புதுப் பதிவர்களுக்கு.

விஜய் கவிதைகள் வலைப்பூவும் சரி, கவிதைகளும் சரி மிக மிக வித்தியாசமான ஒரு அனுபவம். படிக்கப் பிடிக்கும். பாருங்கள் ஒன்றை.

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமாரின் எளிமையான கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. கதையும் கூட. அடிக்கடி எழுதலாமே சரவணக்குமார்:). திருக்கல்யாணம் என்ற அவரின் கவிதை இதோ.

கேசவனின் ஞானமேதவம் என்ற வலைப்பூ ஒரு இன்ப அதிர்ச்சி. ஆன்மீகமும் தமிழும் படிக்க படிக்க ஒரு இனம்புரியா அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக்கும் எழுத்து. ஔவையின் சிலேடை என்ற இவரின் இடுகை படிக்கவே எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது பாருங்கள்.

சேலம் வசந்த் இன்னோரு புது அறிமுகம் வலையுலகுக்கு. நல்ல நடையோடு சுவாரசியமாக எழுதுகிறார். கிதார் கற்றுக் கொண்ட கதையில் இவரின் அலப்பறையை அனுபவியுங்கள்.

நாளை மீண்டும் சந்திப்போம்.

14 comments:

 1. இத்தனை வேலை பளுவிலும் உங்கள் அற்பணிப்புக்கு மகிழ்ச்சியும் நன்றியும்.

  நகைச்சுவையான நடையுடன் அறிமுகத்துக்கு நன்றி.{அடடா, பொறுப்பு கூடிகிட்டே போகுதே..}

  தம்பி பாலாவை பற்றி சொல்லணுமா..?? ஹாலிவுட்டுக்கு ஜேம்ஸ் கேமரூன். ஹாலிவுட் படங்களுக்கு பாலா.

  மற்ற அறிமுகங்களுக்கும் நன்றிகள்.

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. சொன்ன மாதிரியே நிறைய அறிமுகங்கள்!

  மூவரைத்தவிர மற்றோரை முன்னதாகவே தொடர்கிறேன். ஒவ்வொரு துறையிலும் நீங்கள் அறிமுகப்படுத்தும் விதம் மிக அழகு...

  பிரபாகர்.

  ReplyDelete
 3. அசத்தல் சார்...::))))))))

  ReplyDelete
 4. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

  ஆசிரியருக்கு பாராட்டுக்கள்...!

  ReplyDelete
 5. நல்ல அறிமுகங்கள் பாஸ்.

  ReplyDelete
 6. அறிமுகங்களுக்கும் அறிமுகம் படுத்திய விதத்துக்கும் நன்றி. நல்லா இருக்குங்க.

  ReplyDelete
 7. ப்திவுலகுல உங்கல மாதிரி முடியாதுங்கோ...இங்கயும் எழுதுறீங்கோ அங்கயும் எழுதுறீங்கோ....

  ReplyDelete
 8. அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 9. அன்பின் பாலா
  அருமையான் அறிமுகங்கள் - புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தும் அழகே அழகு

  அபைவர் வீடுகளுக்கும் சென்று வந்தேன்

  நல்வாழ்த்துகள் பாலா

  ReplyDelete
 10. கதம்பம் போல் அனைத்து துறையும்(பூக்களும்) சேர்ந்த வலைச்சரம்!

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் பாலா சார். அரியர்ஸ் க்ளியர் பண்ணிட்டீங்களே சொன்ன மாதிரி.

  ReplyDelete
 12. விட்டதையும் சேர்த்து பிடிச்சிட்டீங்க....நல்ல அறிமுகங்கள்...

  ReplyDelete
 13. என்னையும் உங்கள் உள்ளத்தில் ஒருவனாக்கியதற்க்கு நெஞ்சார்ந்த நன்றி

  விஜய்

  ReplyDelete
 14. @@நன்றி சூர்யா
  @@நன்றி பிரபாகர்
  @@நன்றி பலா பட்டறை
  @@நன்றி வசந்த்
  @@நன்றி பூங்குன்றன்
  @@நன்றி சித்ரா
  @@நன்றி புலிகேசி
  @@நன்றி டி.வி.ஆர்
  @@நன்றி சீனா
  @@நன்றி வால்
  @@நன்றி நவாஸ்
  @@நன்றி ஸ்ரீராம்
  @@நன்றி விஜய்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது