07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, January 26, 2010

வலைச்சரத்தின் இரண்டாம் நாள்... சம கால நிகழ்வுகள்...

வாழ்நாளில் ஒரு பிழையையும் செய்ததில்லை என ஒருவர் நினைத்தால், அவர் புதிய முயற்சிகள் எதுவும் செய்தில்லை என்று அர்த்தம்.

-ஐன்ஸ்டின்.

வணக்கம், வலைச்சரத்தில் இன்று இரண்டாம் நாள். நேற்று சுய அறிமுகத்திலேயே முடித்துக்கொண்டதால் இன்று மனம் கவர்ந்த இடுகையாளர்களை பார்த்துவிடலாம்.

சிலருடைய இடுகைகளை படித்தால் நமது உள்ளக்கிடக்கையை அப்படியே அவரில் காண இயலும். சமகால நிகழ்வுகளை அவர்கள் விவரிக்கும் விதத்தில், நமக்கு நிறைய படிப்பினைகளோடு, அப்படியே பின்பற்றுவதற்கும் ஏதுவாய் இருக்கும். அந்த வகையில் எழுதுபவர்களில் முதன்மையானவர் செந்தில்வேலன்... இன்றுவரை இவரது இடுகைகளில் ஒன்றை கூட தவற விட்டதில்லை, ஒவ்வொன்றும் ஒரு முத்தாய் இடுக்கும்.

அயல் நாடுகளின் வசிப்பவர்கள் தனது அப்பா அம்மாவினை பிறவிப் பெருங்கடன் செலுத்துவதாய் அழைத்துச் செல்வதையும், அவர்கள் அங்கு வந்து எப்படி உணர்கிறார்கள் என்பதையும், அழைத்துச் செல்வதற்கு முன் செய்யவேண்டியன என்ன என்பதையும் எவ்வளவு அழகாய் தனது இடுகையான அயல்நாடுகளில் அம்மா அப்பா... வில் எப்படி சொல்லியிருக்கிறார் என பாருங்கள்! 

அடுத்து நாகா. ஒரு ஊர்ல என ஆரம்பித்து நமது தாத்தா பாட்டியிடம் கதை  கேட்டு வளர்ந்து வந்திருக்கிறோம். இவரும் ஒரு ஊரில் எனும் வலைப்பூவில் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். மிகவும் அருமையாய் எழுதும் இவர், பணிச்சுமையினால் பகிர்வது கொள்வதை குறைத்திருக்கிறார்.

தனது ஒரு இடுகையான பா(வே)லைத் திணை யில் ஒரு நிகழ்வினை எப்படி சொல்லியிருக்கிறார் என்பதைப் படித்துப்பாருங்களேன். நண்பா, ஒரு வேண்டுகோள், வாரத்திற்கு இரண்டாவது எழுதுங்கள்.

பறவைகள் வானில் பறப்பதை பார்த்திருக்கிறோம், ஆனால் அவை V வடிவில் பறப்பதை பார்த்திருக்கிறீர்களா? அது ஏன் தெரியுமா? இதோ சிறிய பறவை எனும் வலைப்பூவின் மூலம் எழுதிவரும் ஜோதியின் பறவைகள் V வடிவத்தில் பறப்பது ஏன்? எனும் இடுகையை பாருங்கள், தெளிவாய் விளங்கும்...

வானவில் எனும் வலைப்பூவில் யோகேஸ்~பொன்வண்டு எனும் பெயரில் எழுதி வருபவர் உலக வெப்பமயமாதலைப்பற்றி அருமையாய் பசுமை இல்ல வாயுக்கள் - நம் பங்களிப்பு என்ன? என ஒரு இடுகையை தந்திருக்கிறார், படித்துப்பாருங்கள். எத்தனை தகவல்கள், என்ன அருமையான விளக்கங்கள்?

செ.சரவணக்குமார் பக்கங்கள் வலைப்பூவை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். அவரின் ‘ஏமாற்றமும் வேதனையும்’ எனும் இடுகையை படித்து அவரது பாதிப்பால் நானும் பாதிப்படைந்தேன். உடன் இருக்கும் சக மனிதர்களுல் இப்படியும் இருப்பார்களோ? எனும் ஒரு பெரும் ஐயத்தை ஏற்படுத்தியது. இது போன்ற ஏமாற்றங்களை பகிரும் போது நமது மனச்சுமை கொஞ்சமாவது குறையுமல்லவா?

மழைமேகம் என்னும் வலைப்பூவில் கலிகாலப் புகையும், கம்பராமாயணத்தில் புகையும்! என்னும் இடுகையில் புகை பற்றி மிக அழகாய் ஒரு சம்பவத்தோடு சொல்லியிருக்கிறார். படித்துப்பாருங்களேன், நடப்பு நிகழ்வோடு புராணத்தை தொடர்புபடுத்துதல் அழகுதானே?

காந்திய கிராமங்களில் அந்தமானிலிருந்து எழுதிவரும் க.நா.சாந்தி லெட்சுமணன்அவர்களின் வீட்டு மனைகளாகும் விளைநிலங்கள் என்னும் இந்த இடுகையைப் பாருங்கள், நமது எண்ணத்தை பிரதிபலிப்பதாய் இருக்கும். செட்டி நாட்டு பலகாரங்கள்செய்து பார்க்க சமையல் குறிப்புகளையும், கவிதைகளையும் எழுதி வருகிறார். படித்து பின்தொடர ஒரு அருமையான வலைப்பூ.

அன்பு நண்பர் சங்கவியை  ஏற்கனவே வலைச்சரத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அவரது வலைப்பூவான உங்களில் ஒருவனில் நேற்று இட்டிருக்கும் நோயின்றி வாழ நடைப்பயிற்சி இடுகையைப் படித்துப் பாருங்களேன், கண்டிப்பாய் நடக்க ஆரம்பித்துவிடுவீர்கள், அல்லது தோன்றும். மிக அருமையான எழுத்து, கவனிக்கப்பட வேண்டியவர்.

சொல்லத்துடிக்குது மனசு எனும் வலைப்பூவில் நேற்று வந்திருக்கும் இடுகையில்மொபைல் போன் பேச்சு - போது இடங்களில் தவிர்க்க வேண்டியவை என்பது பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என படித்துப் பாருங்களேன், பயனுள்ளதாய் இருக்கிறது. படித்துத் தொடர ஒரு நல்ல வலைப்பூ...

இவையெல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என எண்ணுகிறேன். உங்களின் கருத்துக்களால் என்னை செம்மைப்படுத்துங்கள்.


இன்றைக்கு இது போதும், நாளை இன்னும் பல புதியவர்களோடு சந்திப்போமா?

22 comments:

 1. நல்ல பகிர்வு...வாழ்த்துக்கள் பிரபா

  ReplyDelete
 2. மிக நல்ல பகிர்வு பிரபாகர்
  சற்றே விரிவாகவும் துறை சார்ந்ததாகவும் பதியலாமே :)

  அவசர கதியில் பதிவதை போன்று ஒரு
  பாவனை,,,,

  ReplyDelete
 3. பகிர்ந்து கொள்ள வேண்டிய பதிவு.வளர்க வலைச்சரம்.

  ReplyDelete
 4. அனைத்தும் நல்ல அறிமுகம் நண்பா....

  என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே...

  ReplyDelete
 5. தல நல்ல அறிமுகங்கள். பார்க்கிறேன் நன்றி.

  ReplyDelete
 6. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்

  சங்கவி மட்டுமே நமக்கு தெரிந்தவர்

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு நண்பரே..சிலர் நான் பின் தொடர்கிறேன், சிலறை இன்றும் முதல்..:))

  தொடருங்கள்.

  ReplyDelete
 8. வலைச்சரப்ப்ங்களிப்பிற்கு வாழ்த்துக்காள்.

  ReplyDelete
 9. நல்ல பகிர்வு பிரபாகர். இதன்மூலம் உங்கள் வாசிப்பைப் பற்றி புரிந்துகொள்ளவ்முடிகிறது. என்னைப் பற்றியும் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 10. நன்றி சகோதரரே! என் வலைப்பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்ததற்கும்,நானறியாத் தளங்களை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி!
  அன்புடன்
  க.நா.சாந்தி லெட்சுமணன்

  ReplyDelete
 11. நல்ல அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 14. தாமதம் என்றாலும் என் தரமான வாழ்த்துகள் பிரபாகர். நீங்கள் சொன்ன அறிமுகம் அத்தனை பேர்களையும் வாசித்துக்கொண்டு இருப்பவன். முத்து தான் சந்தேகம் இல்லை.

  ReplyDelete
 15. வாழ்க்கை முழுவதும் இந்த பிழைகள் தானே கற்றும் தருகிறது. ஆசானாகவும் இருக்கிறது. நல்ல வார்த்தைகள். நான் பார்த்தவரையில் இது போன்ற கொட்டேஷன் மூலம் அறிமுகம் செய்த உங்கள் ஆளுமை பாராட்டுக்குரியது.

  ReplyDelete
 16. அருமையான பகிர்வு பிரபா. என்னைப் பற்றி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா.

  ReplyDelete
 17. அனைத்தும் நல்ல அறிமுகங்களாய் இருக்குங்க பிரபாகர்... வாழ்த்துகளுடன்

  ஆ.ஞானசேகரன்

  ReplyDelete
 18. அருமையான அறிமுகம். இதிலுள்ள அனைவருமே எனக்குப் புதியவர்கள். அவர்கள் பதிவுகளைப் படிக்கிறேன். நன்றி.

  ReplyDelete
 19. வாழ்த்துகள் பிரபா.

  ReplyDelete
 20. நன்றி நண்பரே வலைசரத்தில் என்னை அறிமுகப் படுத்தியதற்கு .........

  ReplyDelete
 21. வாழ்த்திய அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. நேசமித்திரன், நடக்கும் நிகழ்வுகளாய் இருப்பவற்றை தொகுத்தேன். உங்களின் கருத்தும் மிகச்சரியே, நிச்சயம் நாளை மற்றும் வரும் நாட்களில் நீங்கள் சொல்வது போல் துறை சார்ந்து மட்டும் இருக்கும்.

  அன்புடன்,
  பிரபாகர்.

  ReplyDelete
 22. நல்ல அறிமுகங்கல்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது