07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 11, 2010

முதல் நாள் இன்று - நகைச்சுவை திங்கள்

வலைச்சரம் என்ற வலைப்பூ இருப்பது தெரிந்தப் பிறகு தினமும் பார்ப்பது வழக்கம்.யாராவது என்னை அறிமுகம் செய்து இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு ஏமாந்து செல்வது வழக்கம்.அதிகப்பட்சமான ஏமாற்றம் அடைந்தது அத்திரி ஆசிரியராக இருந்த சமயம் தான் ஏற்பட்டது.மதுரை - திருநெல்வேலி பதிவர்கள் என்பதில் என் பெயர் இல்லை.துபாய் ராஜா பின்னூட்டத்தில் என்னை குறிப்பிட்டு சொன்னார்.பிறகு அத்திரியின் நட்பும்,கண்டிப்பும் சாட் மூலம் வந்து சேர்ந்த்து.தண்டோரா அண்ணன் முதல் முறையாக என்னை அறிமுகம் ஊர்சுற்றிக்குப் பிறகு நீங்கள் ஆசிரியராக விருப்பமா என்று சீனா ஐயா கேட்டதும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.நான் எதையும் வெளியே காட்டுவதில்லை.குறிப்பாக மகிழ்ச்சியை.இரண்டு வாரம் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க வேண்டும் என்று அதை தள்ளிப் போட்டேன்

அதுவே எனக்கு இன்று ஒரு தடைக்கல்லாக தெரிகிறது.காரணம் - வானம்பாடிகள் பாலா ஐயா.

வானம்பாடிகள் பாலா ஐயா இரண்டு வாரங்களாக ஆசிரியராக பணியாற்றி இரட்டை சதம் அடித்தப் பிறகு என்னை மாதிரி ஒரு அறிமுக ஆட்டக்காரன் அதில் இறங்கி ரன்ரேட் குறையாமல் பார்த்துக் கொள் என்றால் அங்கு எகிறி வரும் பவுன்சர்களைக் கண்டு வயிற்றில் கொஞ்சம் புளி தான்.

வலைச்சரத்தில் பெயர் வருவதையே பாக்கியமாக நினைத்த ஒருவனுக்கு ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் உண்மையில் இது தான் எனக்கு கிடைத்த உச்சப்பட்ச பாராட்டு,அங்கீகாரம் என்று நினைக்கிறேன்.

ஆரம்பக் கட்டத்தில் இரும்புத்திரை என்று ஒருத்தன் என்று இருக்கிறான் என்று வெளியே சொன்னப் பதிவு இது.

சின்ன வயதில் ஒரு பெண்ணின் நட்பை சொன்ன கதை இது

இரயில் பயண்ங்களின் ஏக்கங்களை சொன்னப் பதிவு.

எனக்கும் ஆக்சன் திரில்லர் எழுத வரும் என்று எனக்கு நானே சொன்ன பதிவு.

என்னுடைய சுயதம்பட்டத்தை இந்த நகைச்சுவை திங்களில் பதிவு செய்கிறேன்.

நாளை காதல் செவ்வாய் - அதிரடி காதல் பதிவு எழுதும் பதிவர்களை பார்ப்போம்.

முதல் பந்தில் சிங்கிள் அடித்த சந்தோஷத்தில் நாளை மீண்டும் சந்திப்போம்.

எனக்கு இப்படி வாய்ப்பு அளித்த சீனா ஐயாவிற்கு நன்றிகள்.அதிரடி அறிமுகம் செய்த ராஜூவிற்க் நன்றிகள்.அவர் ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டால் எனக்கு அவரை பற்றிய அறிமுகம் எழுத வாய்ப்பு தர வேண்டும்.எதிர் அறிமுகம் போட வேண்டாமா.

எத்தனை மாதம் ஆனாலும் இந்த அங்கீகாரம் மனதில் ஒரத்தில் தித்தித்துக் கொண்டே இருக்கும்.மீண்டும் மீண்டும் நன்றிகள்.என்னை அறிமுகம் செய்த தண்டோரா மற்றும் பின்னூட்டத்தில் என்னை சுட்டி காட்டிய துபாய் ராஜாவுக்கும் என் நன்றிகள்.

18 comments:

 1. என் தம்பி போஸ்ட் செய்வதால் கணேஷ் என்ற பெயரில் வருகிறது

  ReplyDelete
 2. முதல் நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. இந்த போஸ்ட்டிங்கின் போது உங்கள் பெயர் வருவதற்கு உங்கள் தம்பியிடம் தங்கள் பெயராக அவர் புரோபைலில் மாற்ற சொல்லுங்கள் ... இந்த ஒரு வாரம்

  ReplyDelete
 4. நகைச்சுவை திங்களில் முதல் நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. இங்கேயாவது யார்கிட்டயும் வாங்கி கட்டிக்காம ஒழுங்கா வேலையப்பாரு

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் தம்பி...

  பிரபாகர்.

  ReplyDelete
 7. நல்வாழ்த்துகள் அரவிந்த்

  நல்ல சுய அறிமுகம் - அன்கும் சென்று அனைத்தையும் படிக்கிறேன்

  ReplyDelete
 8. நல்வாழ்த்துகள் அரவிந்த்

  நல்ல சுய அறிமுகம் - அன்கும் சென்று அனைத்தையும் படிக்கிறேன்

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் தல...

  :)

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 11. நல் வாழ்த்துகள்.வாரம் பூராவும்
  இனிதாகச் செல்ல இன்னும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. வலச்சர ஆசிரியரானதற்கு வாழ்த்துக்கள் அரவிந்த்..தொடருங்கள்

  ReplyDelete
 13. கலகலப்பான தொடக்கம். வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. வாங்க ஆசிரியரே!

  ReplyDelete
 15. இன்று நகைச்சுவை வாழ்த்துக்கள்
  வாங்க வாங்க ...
  கடன்தாங்க..

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் அரவிந்த்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது