07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 24, 2011

பதிவுலக கவிஞர்கள் - பாகம் 1

(கவிஞர்கள் அறிமுகம் 01)
வணக்கம் மக்களே...

இன்றைய அறிமுகங்கள் அனைவரும் கவிதை சொல்லும் பதிவர்கள். மேலும் இவர்களில் சிலர் இப்போது வாடிக்கையாக பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் அவர்களது கவிதைகள் என்னை கவர்ந்ததால் சம்பந்தப்பட்ட இடுகைகளை முன்னிலைப்படுத்துகிறேன். அவர்கள் மீண்டும் பதிவுலகம் திரும்ப வேண்டுமென்பதே எனது விருப்பம்.

1. கவிதை என்பது...! http://kavithai80.blogspot.com/
யோகா, பலே பிரபு என்ற இருவர் இந்த வலைப்பூவின் உரிமையாளர்கள். பலே பிரபு ஏற்கனவே நமக்கு பரிட்சயமானவர். யோகா கிபி கவிதைகள் என்ற லேபிளின் கீழ் எழுதியிருக்கும் காதல் கொஞ்சம் காரம் கொஞ்சம் என்ற கவிதை தலைப்பிர்கேற்றபடி இருந்தது. மேலும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய கவிதையும் அவரது ஐம்பது வயது தந்தை பற்றிய கவிதையும் நெகிழ வைக்கின்றன.

2. !!! மழைக்காதலன் !!! http://aruniniyan.blogspot.com/
காதல், காதல், காதல் மட்டுமே இவரது கவிதைகளில் தென்படுகிறது. மேலே குறிப்பிட்ட பதிவுலகத்தில் இருந்து விலகியிருப்பவர்களில் இவரும் ஒருவர். என் இனிய இனியா என்று அவரது காதலியை நினைத்து உருகுகிறார். ஊமைத்தொலைபேசி...! என்ற பெயரில் வித்தியாசமாக ஒரு காதல் கவிதை வடித்திருக்கிறார் பாருங்கள். இதய நோய் என்றிவர் எழுதியிருப்பது மருத்துவம் சார்ந்த இடுகை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்.

3. NIROSH.N தரிப்பிடம் http://nirosh28.blogspot.com/
காமெடி கலந்த கவிதை எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட். இவரும் இப்போது பதிவுலக பக்கம் தலைக்காட்டுவதில்லை. இவருடைய நண்பர்கள் குழுவைப் பற்றி களவானிப் பசங்க நாங்க..! என்று சொல்கிறார். மேலும் சரக்கடித்துவிட்டு நான் மகான் அல்ல...! மப்புக்காரன்...! என்று கவிதை சொல்கிறார். அதிமுக்கியமாக நமீதா எழுதிய தமிழ் கவிதை...! என்றொரு இடுகை போட்டிருக்கிறார் அதுதான் ஹைலைட்.

4. சிவகுமாரன் கவிதைகள் http://sivakumarankavithaikal.blogspot.com
இவரைப் பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை. மரபுக்கவிதை, ஹைக்கூ கவிதை என்று ஆல்-ரவுண்ட் பெர்பாமான்ஸ் காட்டுபவர். கனவுகள் என்ற பெயரில் நம் பழைய நினைவுகளை கிளறிவிடும் விதமாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார் பாருங்கள். அதுதான் என்னுடைய பேவரிட். மேலும் இவர் ஹைக்கூ கவிதைகள், காதல் வெண்பாக்கள் என்ற தலைப்புகளின் கீழ் எழுதியிருக்கும் கவிதைகள் அட போட வைக்கின்றன.

5. அமானுஷ்யன் http://amanusiyan.blogspot.com/
பெயரைக் கேட்டாலே விஜய் டிவி காத்துகருப்பு நிகழ்ச்சிதான் நினைவுக்கு வருகிறது. இவர் ஒரு ஆசிரியர். இவருடைய கவிதைகள் கொஞ்சம் மற்ற கவிதைகளை நையாண்டி செய்யும் விதமாக நகைச்சுவையாக எழுதியிருப்பார். கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!! என்ற தலைப்பின் கீழ் எழுதியிருக்கும் அத்தனை கவிதைகளும் அந்த ரகத்தில் குபீர் சிரிப்பை வரவழைக்கக்கூடியவை. தன் மகனால் ஏற்பட்ட வலி என்னவென்று நம்மோடு பகிர்ந்திருக்கிறார் பாருங்கள்.

6. இளம்தூயவன் http://ilamthooyavan.blogspot.com/
இவர் கவிதைகள் மட்டுமல்லாமால் கட்டுரைகள், மருத்துவம் என்று பல துறைகளிலும் முத்திரை பதிப்பவர். இவர் சுயநலம் என்ற பெயரில் எழுதியுள்ள கவிதை என்னை மிகவும் கவர்ந்த கவிதைகளில் ஒன்று. மேலும் தற்கொலை பற்றி பிரமாதமாக ஒரு கவிதை சொல்கிறார் கேளுங்கள். இதயம் என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ள கவிதையும் நம் இதயத்திற்கு இதமாகவே இருக்கிறது.

7. கவிதைகள் http://kavithaiprem.blogspot.com/
இவர் தனது கோபம், கவலை, மகிழ்ச்சி என்று எல்லாவற்றையும் கவிதையாக வெளிப்படுத்துபவர். மல்லிகைப்பூவுக்கும் ரோஜாப்பூவுக்கும் ஏற்பட்ட போட்டியை பெருமை என்ற கவிதையில் அழகாக சொல்லியிருக்கிறார். நடப்பு செய்திகளை மையமாக வைத்து எழுதிய ஊழல் என்ற கவிதை சிந்திக்க வைக்கிறது. அவளின் வருகை என்று குட்டியாக இவர் எழுதிய காதல் கவிதையும் கடுகாக காரம் தருகிறது.

இவரது வலைப்பூவில் பெரும்பாலும் கவிதைகளாகவே தென்படுகின்றன, நந்தலாலா படம் குறித்த சில இடுகைகளை மட்டும் தவிர்த்து. இவர் எழுதிய ஒரு கறுப்பு பூனையும் ஆறு கோப்பை மதுவும் என்ற கவிதை தலைப்பைப் போலவே ரொம்பவும் புதுமையாக இருக்கிறது. ருத்ரதாண்டவம், கடவுள் பைத்தியம் என்று திண்ணை இணைய இதழில் வெளிவந்த இவரது இரண்டு கவிதைகளும் பிரமாதமாக இருக்கின்றன.

9. தமிழ்த்தென்றல் http://thamizhththenral.blogspot.com/
சமூகம் சார்ந்த இடுகைகளை தரும் சீரியஸான வலைப்பூ. கவிதைகள் மட்டுமில்லாமல் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அடிமை இந்தியா 2010, ஒதுக்கப்படும் இந்தியன்...? என்ற பெயரில் எழுதியுள்ள இரண்டு கட்டுரைகள் காரசாரமானவை. திருக்குறள் ஸ்டைலில் இரண்டடி வெண்பாவாக சிலவற்றை எழுதி இது எப்படி இருக்கு...? என்று கேட்டு வியக்க வைக்கிறார்.

10. துரோணா http://droana.blogspot.com/
ஓவியங்களில் மாடர்ன் ஆர்ட் எப்படியோ அதுபோல இருக்கின்றன இவருடைய கவிதைகள். எனது கவிதையின் கடைசி வரி என்று இவர் எழுதியிருக்கும் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுதவிர்த்து இன்னும் நிறைய கவிதைகள் பிடித்திருந்தன. அவற்றுள் அதிமுக்கியமாக சாத்தான் குகை மற்றும் இனியுமொரு பாதை என்ற தலைப்புகளின் கீழுள்ள கவிதைகளை கூறலாம்.

வசன கவிதை என்ற இந்த வலைப்பூற்கு மகாகவி பாரதியார் எழுதிய வசன கவிதைகள் தான் இன்ஸ்பிரேஷன் என்று கூறுகிறார். தந்தை பெரியார் பற்றி இவர் பகுத்தறிவு பகலவன் என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மேலும் எயிட்ஸ் எனும் எமன் என்று விழிப்புணர்வூட்டுகிறார். தன் காதலி மழையில் நனைந்த அழகை ரசித்தபடி என் தேகத்தில் சந்தேகம்...! என்ற கவிதையை எழுதியிருக்கிறார் பாருங்களேன்.

கவிஞர்கள் லிஸ்ட் இன்னும் நிறைவடையவில்லை. மீண்டும் நாளை மாலை கவிஞர்கள் குழுவோடு வருகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

28 comments:

 1. எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

  ReplyDelete
 2. நல்ல அறிமுகங்கள் சகோதரா அப்பறம் அவங்க தளத்தக்கு பயணிக்கிறேன்...

  ReplyDelete
 3. அறிமுகம் செய்யப்பட்ட கவிஞர்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. நிறைய பேர் எமக்கு புதியவர்களாக இருக்கிறார்கள். தேடி, தேடி தந்ததற்கு நன்றிகள்..

  ReplyDelete
 5. இன்றைய நாளில் அறிமுகமான கவிஞர்களுக்கு கவிதை வீதியின் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. அறிமுகம் செய்யப்பட்ட கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. பதிவுலக கவிஞர்கள் -பாகம் 1 அருமையான அறிமுகங்கள். பாகம் 2ன் கவிஞர்களையும் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 8. கவிஞர்கள் அறிமுகம், நிறைய புதிய முகங்கள்.

  ReplyDelete
 9. அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

  சிறப்பாக பகிர்ந்துகொண்ட உங்களுக்கு நன்றிகள் பிரபா

  ReplyDelete
 10. கவிஞர்களா.? கவிதையெல்லாம் எப்படி தான் எழுதுறாங்களோ.!! நீங்களெல்லாம் க்ரேட்.. எழுந்துட்டன் தோ வர்றேன்..

  ReplyDelete
 11. என்னை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அறிமுகபடுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

  ReplyDelete
 12. அசத்தல் நடக்கட்டும் நடக்கட்டும்...

  ReplyDelete
 13. இளம்தூயவன் நமது நண்பர்தான்.
  மற்றவர்கள் புதியவர்கள்.
  சென்று படிக்கிறேன்.
  நன்றி, பிரபா!

  ReplyDelete
 14. பெரும்பாலான கவிஞர்கள் எனக்கு புதியவர்களே..... அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. நிறைய படிப்பவன் என்ற கர்வம் எனக்கு இருந்தது. உங்கள் வாசிப்பு என்னை பிரமிக்கவும் வைக்கிறது. கர்வத்தையும் நீக்கியது. மனப்பூர்வமான நன்றிகள்

  ReplyDelete
 16. அணைத்து கவிஞ்சர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ..........

  ReplyDelete
 17. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. அருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. ஆஜர்.. அசத்துங்க பிரபா, புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள், உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 20. @ ♔ம.தி.சுதா♔, பாரத்... பாரதி..., # கவிதை வீதி # சௌந்தர், வேடந்தாங்கல் - கருன், தமிழ் உதயம், தமிழ்வாசி - Prakash, மாணவன், தம்பி கூர்மதியன், இளம் தூயவன், MANO நாஞ்சில் மனோ, NIZAMUDEEN, பன்னிக்குட்டி ராம்சாமி, பார்வையாளன், அஞ்சா சிங்கம், மாதேவி, சிவகுமாரன், Chitra, வசந்தா நடேசன்

  வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

  ReplyDelete
 21. @ தம்பி கூர்மதியன்
  // கவிஞர்களா.? கவிதையெல்லாம் எப்படி தான் எழுதுறாங்களோ.!! நீங்களெல்லாம் க்ரேட்.. எழுந்துட்டன் தோ வர்றேன்.. //

  தல... உங்களைப் பத்தி ஏற்கனவே எழுதிவிட்டதால் கவிஞர்கள் லிஸ்டில் சேர்க்கவில்லை... மற்றபடி நீங்களும் கவிஞர்தான்... எழுந்தெல்லாம் வரவேண்டாம் ப்ளீஸ்...

  ReplyDelete
 22. அட இது நம்ம ஏரியா... கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. நன்றி அன்பரே வேலை பளு காரணமாக எனது தளத்திற்கும் தங்கள் தளத்திற்கும் வருகை தர இயலவில்லை.என்னை வலை தளத்திற்கு அறிமுக படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
 24. thank u for sharing my blog praba.

  ReplyDelete
 25. அறிமுகத்துக்கு மிகவும் நன்றி. அத்துடன் கி.பி(கி.பிரபு), பலே பிரபு ஆகிய இரண்டும் நானே, யோகா எனது தோழி.

  ReplyDelete
 26. கடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...

  ReplyDelete
 27. எனது வசன கவிதைகள் தங்களைக் கவர்ந்தது கண்டு பேருவகை கொள்கிறேன்... நன்றி..!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது