07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, February 4, 2011

வீசிய வலையில் சிக்கிய கல்வெட்டுக்கள்


வலையில் சிக்கிய கல்வெட்டுக்கள் என்னது கல்வெட்டுகள் சிக்கிகிச்சா, ஆமாங்கோ அதுவும் பூக்கள் செதுக்கிய கல்வெட்டுகள். பூப்பதும் காய்ப்பதும். உதிர்வது. மீண்டும் பூப்பதும். சிலவேலை கருகுவதும்.  என்றிருந்த பூக்கள் இன்று.
தன்னைலையில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்து பூத்து உதிர்வதற்குமுன். தன் எண்ணைங்கள் மறு உருவமாக்கி தன்னுணர்வுகளால் செதுக்கிய கல்வெட்டுகள்தான் கவிதைகளாய் மாறி உதிராத பூக்களாய் இவ்வுலகே அறிவதுபோல் உலாவரத் துடிக்கிறது உலா வரவும் செய்கிறது.

வண்டுகள் வடிக்கும் கவிதைக்கு [நிக]மேலா[ரா]க. பூக்களும் தன் உணர்வுகளையும், உணர்சிகளையும் மிக தத்ரூபமாக செதுக்குவதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுகிறது.

பூக்களெல்லாம் பூப்பதுமட்டுமல்ல, பூரிப்பதும், பூகம்பமாவதும்.
புல்லாங்குல் வாசிப்பதும். புழுங்கி கரைவதும் புண்பட்டு போவதும்.புயலாக வீசுவதும்.என்று அடுக்கிக்கொண்டே போகலாம் அனைத்துமாக
மாறி, மாறி தன் மன எண்ணங்களின் வெளிப்பாடுகளை மடை திறந்த வெள்ளம்போல் கொட்டுகிறார்கள்.
கவிதைகளென்னும் கல்வெட்டுகளாக செதுக்குகிறார்கள்!
நாங்கள் எதிலும் சலைத்தவர்கள் இல்லை என்று[காலர் இல்லை, இருந்தாலும் தூக்கிவிட்டுகிட்டோமுல்ல]
சலைக்காமல் சமையல், குடும்பம். நிர்வாகம்,
மற்ற பணிகளியும் செய்துகொண்டு மனதில் ஓடும் எண்ணங்களை மிக அழகாய் அருமையாய் வெளியிடுகிறார்கள்.

இங்கேயிருப்பது கொஞ்சந்தாங்கோ. வலையில் எண்ணிக்கையிலா கல்வெட்டுகள் செதுக்கிக்கிடக்கின்றன. அவைகள்   நம்ம வலையில் சிக்கியபோதும் அம்பூட்டையும் இங்கே போடுவதென்றால் ஊஹூம் வலைபோதாது அதேன் இங்கே கொஞ்சூண்டு கொண்டு வந்திருக்கேன்.
இதில் உங்களுக்கு தெரிந்த கல்வெட்டுகளுமிருக்கலாம் . சிக்கிய கல்வெட்டுகள் செதுக்கிய உணர்வுகளை, சின்னதாய் ஒரு கிளிக் செய்து போய்பாருங்கள். நில்லுங்க போறதுக்குமுன்னாடியும் போய்விட்டுவந்தும்,
இங்கிருப்பதில் உங்கள்  உணர்வுகளை கல்வெட்டாக்குங்கள். நாளை இந்த கல்வெட்டையும்  உலகம் காணுமல்லவா!

                   ஹா ஹா எப்படியெல்லாம் சொல்லி கருதுக்கள்             வாங்கவேண்டியிருக்குப்பா:{{{{{{ ஸ்ஸ்ஸ் அப்பாடா......கனவுகள் பூக்கும் தோட்டத்தை
கண்களுக்கு தேக்கி வைத்து
வெள்ளையருவியாய் விழிவழியே
வெளியேற்றும் வித்தைகளறிந்து

சிந்தனைகள் சிறகை விறிக்க
சில்வண்டாய் ஸ்ரிங்காரமிட்டு
சிலு சிலுக்கும் காற்றைக்கூட
சினேகம்கொள்ளும்  மலர்களாகி
மனகிடங்கில் கிடப்பெதெல்லாம்
மடைதிறந்த வெள்ளமாக்கி
உள்வெளிக்குள் சிக்கியதை
உலகவெளியில் உலவ விட்டு
பூவுக்குள் நிகழ்வதெல்லாம்
புள்வெளிக்குள் வெளிப்படுத்தி
புன்னகைக்கும் புது அர்த்தம் தந்து
புதுமை செய்யும் பதுமையாகி


எழுதுகோலின் வழியே
எண்ணிலடங்கா ஏக்கம் சொல்லி
சொல்லில் வடிக்கயிலா சுக துக்கங்களை
சூசகமாகமாய் தன் சொல்லில் வடித்து

மனதிலுள்ள சுமைகளனைத்தும்
மயிலிறகால் வருடிவிட்டு
மனக்கதவை திறந்துவிட்டு
மகத்துமிக்க மதிகளாகி
தன்னெழுத்துக்களால் தரணியையே
தன்னை நோக்கவைக்கும்
தார்மிக தமக்கைகளை
தளராமல் செழித்தோங்க

நற் சிந்தனையால் தன் எண்ணைங்களை
நல் விதைகளாக்கி விதைத்து
இந்நானிலமே போற்றி போற்ற
இனிதே உயர்ந்து வளரவேண்டுகிறேன்.

இன்று சிக்கியவைகள் இம்புட்டுதான்
இனி நாளை என்ன சிக்குதுன்னு பார்ப்போம்..

41 comments:

 1. முதலில் வலைசர வாழ்த்துக்கள். நன்றி , தங்கள் அன்புக்கு.
  நல்ல பகிர்வு

  ReplyDelete
 2. இன்றைய சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிங்க..
  மற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
  வலைச்சரத்தின் மூலம் தான் நிறைய பதிவர்களையும் அவர்களின் வலைகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
  வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் வலைச்சரத்திற்கும்.

  ReplyDelete
 3. மிக்க நன்றிங்க. நல்ல அறிமுகங்கள்

  ReplyDelete
 4. mikka nandri ennai arimugam seithamaikku....thodarga ungal pani..:-)

  ReplyDelete
 5. நிறைய நேரம் செலவழித்து, அருமையான பதிவர்களை அறிமுகப்படுத்தி...... நல்ல முறையில் வலைச்சரப் பணியை செய்து வரும் உங்களுக்கு முதலில், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 6. தோழி என்ன இது....?! இப்படி அசத்திடீங்க ! படங்களுடன் கவிதையாய் நீங்கள் அறிமுகபடுத்திய விதம் என்னை மிக கவர்ந்து விட்டது. மறுபடி மறுபடி தோழியரை பற்றி நீங்க சொல்லி இருக்கிற விதத்தை ரசித்து வாசித்து கொண்டே இருக்கிறேன்.

  உங்களுக்கு என் பாராட்டுகளும் , பிற தோழியருக்கு என் வாழ்த்துக்களும்

  உங்களுக்கு என் நன்றிகள் பல.

  ReplyDelete
 7. வள்ளுவனின் வாக்குவாக்கினை
  செயலில்
  செய்துக்காட்டிய
  மலிக்காவுக்கு வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 8. மூணு நாளா...
  வலைச்சரத்தில்...
  பதிவுத் திருவிழாவா...? என
  எண்ணும்படி...

  தெரிந்தவர்... தெரியாதவர்....!
  அறிந்தவர்... அறியாதவர்....!
  புரிந்தவர்... புரியாதவர்....! என
  விருப்புவெறுப்பின்றி...!
  "எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்" என்ற
  நல்ல நோக்கத்தோடு
  பதிவர்களை அறிமுகப்படுத்திவரும்
  "அன்புடன் மலிக்கா"வுக்கு....
  என் வாழ்த்துக்கள்....! வாழ்த்துக்கள்....! வாழ்த்துக்கள்....!

  அதோடு...
  இன்று தங்கள் குறிப்பிட்ட பதிவர்களில்... இந்திரா போன்ற ஒரு சிலர்தான் எனக்கு அறிமுகம்... மற்ற பதிவர்கள் பெரிய பதிவர்களாயும் இருப்பார்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....! வாழ்த்துக்கள்....! வாழ்த்துக்கள்....!

  சரி...!

  "encyclopedia" ன்னு சொல்லுவாங்க...! அதில் அனைத்து அடங்கும் என்றும் சொல்வார்கள்...!

  "மலிக்கா வார வலைச்சரம்" பதிவுலகின் "encyclopedia" என எடுத்துகொள்ளலாம் என நினைக்கிறேன்...!

  ReplyDelete
 9. //"மலிக்கா வார வலைச்சரம்" பதிவுலகின் "encyclopedia" என எடுத்துகொள்ளலாம் என நினைக்கிறேன்...!//

  இது வரை நீங்க நினைக்கலையா...ஹய்யோ..ஹய்யோ..!!

  ReplyDelete
 10. இங்கே ஒரு கவிதை இன்னெரு கவிதையை வர்னிக்கிறதே...!!

  ReplyDelete
 11. மின்னல்கள் ஒருசேர
  கலைவானில் மின்னிச்செல்ல.
  அவர்களின் கவித்திறனை
  கல்வெட்டுவென நல்லுரைத்த நளினம்.அறிமுகப்படுத்திய விதம் அருமையோ அருமை!.
  பெண்வரையும் கோலம் சிறப்பென்றால் சித்திரமாய் அமைந்திருக்கும்
  அவர்கள் கையெழுது!.
  அற்புதமாய் அமைய வல்ல கவிஆற்றல்
  ஒருமகத்தான வரபிரசாதம்.
  வாழ்துக்கள்.

  ReplyDelete
 12. மூணு நாளா...
  வலைச்சரத்தில்...
  பதிவுத் திருவிழாவா

  உண்மையோ உண்மை. மிக சிறப்பாக சிரமமெடுத்து நல்லமுரையில் பணீயார்றும் மலிக்காவுக்கு. என்ன பட்டம் கொடுக்கலாம் சொல்லுங்க.

  நிறைய பதிவர்கள் இங்குவந்து தெரிந்துகொண்டேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  அழகிய முறையில் செயலாற்றும் கவிதாயினிக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளூம்..

  ReplyDelete
 13. மிக மிக அருமையான தொகுப்புகள்.
  வித்தியாசமாக புகைப்படத்துடன் அறிமுகங்கள் அசத்துராங்காப்பா .இந்த மல்லி..

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 14. மிக மிக அருமையான தொகுப்புகள்.
  வித்தியாசமாக புகைப்படத்துடன் அறிமுகங்கள் அசத்துராங்காப்பா .இந்த மல்லி..

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 15. அனைவருமே சிறப்பான அறிமுகங்கள்

  வாழ்த்துக்கள்....

  தொடர்ந்து கலக்குங்க.......

  ReplyDelete
 16. வித்தியாசமாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் மல்லிக்கா.நன்றி தோழி.

  ReplyDelete
 17. வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

  ReplyDelete
 18. அனைவருமே சிறப்பான அறிமுகங்கள்
  தொடர்ந்து கலக்குங்க
  வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 19. //அமுதா said...
  முதலில் வலைசர வாழ்த்துக்கள். நன்றி , தங்கள் அன்புக்கு.
  நல்ல பகிர்வு.//

  வாங்க அமுதா. வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 20. //இந்திரா said...
  இன்றைய சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிங்க..
  மற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
  வலைச்சரத்தின் மூலம் தான் நிறைய பதிவர்களையும் அவர்களின் வலைகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
  வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் வலைச்சரத்திற்கும்.//

  வாங்க இந்திரா. வலைச்சரத்தின் மூலம் நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்துவதோடு நானும் அறிந்துகொள்ள நல்லதோர்வாய்ப்பு.

  தாங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி..

  ReplyDelete
 21. //உயிரோடை said...
  மிக்க நன்றிங்க. நல்ல அறிமுகங்கள்//

  வாங்க உயிரோடை.
  தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 22. //shammi's blog said...
  mikka nandri ennai arimugam seithamaikku....thodarga ungal pani..:-)//

  வாங்க சம்மி
  தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும்,
  வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 23. //Chitra said...
  நிறைய நேரம் செலவழித்து, அருமையான பதிவர்களை அறிமுகப்படுத்தி...... நல்ல முறையில் வலைச்சரப் பணியை செய்து வரும் உங்களுக்கு முதலில், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.//

  ஆமா சித்ராக்கா இதற்காக நிறைய நேரம் செலவுசெய்வது உண்மைதான்.இன்றைய பதிவுகூட நேற்று நடு இரவு போட்டுவைத்தது ஏனெனில் இன்று வெள்ளி, அவுட்டாஃப் துபை
  வெளியாகிவிட்டு இப்போதுதான் வந்தேன்.

  நாலுப்பேருக்கு உதவுவதுபோல் நல்லதேர்வாக செய்திருக்கிறோமா! என்று தெரியவில்லை
  இருந்தபோதும் ஓரு ஆத்ம திருப்தி.

  மிகுந்த மகிழ்ச்சி சித்ரா மேடமக்கா
  தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும்,
  வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 24. Kousalya said...
  தோழி என்ன இது....?! இப்படி அசத்திடீங்க ! படங்களுடன் கவிதையாய் நீங்கள் அறிமுகபடுத்திய விதம் என்னை மிக கவர்ந்து விட்டது. மறுபடி மறுபடி தோழியரை பற்றி நீங்க சொல்லி இருக்கிற விதத்தை ரசித்து வாசித்து கொண்டே இருக்கிறேன். //

  அப்படியா கெளசல்யா மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்களின் ஒவ்வொரு செயல்களும் கவனிக்கபடுகிறது. இருந்தபோதும் அதை கல்வெட்டாகவும் பதிக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமென்ற ஒரு சிறு நப்பாசைதான் தோழி..

  /உங்களுக்கு என் பாராட்டுகளும் , பிற தோழியருக்கு என் வாழ்த்துக்களும்

  உங்களுக்கு என் நன்றிகள் பல.//

  ரொம்ப சந்தோஷம்.தாங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும்,பாராட்டுக்களுக்கும்
  வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 25. //காஞ்சி முரளி said...
  வள்ளுவனின் வாக்குவாக்கினை
  செயலில்
  செய்துக்காட்டிய
  மலிக்காவுக்கு வாழ்த்துக்கள்...!//

  என்னமோ சொல்லுறீங்க சகோ, ஆனா என்னான்னுதான் புரியலை. ஏன்னா நான் பச்சபுள்ளையல்லவா அதேன் போல..[என்ன சத்தம் வருது பல்லை கடிக்கிறீங்களோ]

  மிக்க நன்றி சகோ..

  ReplyDelete
 26. காஞ்சி முரளி said...
  மூணு நாளா...
  வலைச்சரத்தில்...
  பதிவுத் திருவிழாவா...? என
  எண்ணும்படி...//

  திருவிழாவா. என்ன திருவிழா குடைவுஞ்சி அன்னல்வுஞ்சி ஒன்னையும் காணோமே!

  //தெரிந்தவர்... தெரியாதவர்....!
  அறிந்தவர்... அறியாதவர்....!
  புரிந்தவர்... புரியாதவர்....! என
  விருப்புவெறுப்பின்றி...!
  "எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்" என்ற
  நல்ல நோக்கத்தோடு
  பதிவர்களை அறிமுகப்படுத்திவரும்
  "அன்புடன் மலிக்கா"வுக்கு....
  என் வாழ்த்துக்கள்....! வாழ்த்துக்கள்....! வாழ்த்துக்கள்....!//

  ஆமாம் சகோ எனக்கே நிறைய பேர் தற்போதுதான் அறிமுகமே.
  ஓட்டுகள். மற்றும் கருத்துக்கள் மட்டுமே சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுப்பதில்லை என்பதையும் உணர்த்தும்படி சிலரின் எண்ணங்களும் எழுத்துக்களும் ஆச்சர்யப்படுத்துகிறது. அவர்களையும் இந்த 1 வாரத்திற்குள். அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்கிறேன்..

  மிக்க நன்றி சகோ அன்பான கருத்துக்களும் வாழ்த்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி..

  ReplyDelete
 27. அதோடு...
  இன்று தங்கள் குறிப்பிட்ட பதிவர்களில்... இந்திரா போன்ற ஒரு சிலர்தான் எனக்கு அறிமுகம்... மற்ற பதிவர்கள் பெரிய பதிவர்களாயும் இருப்பார்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....! வாழ்த்துக்கள்....! வாழ்த்துக்கள்....!//

  ஓ அப்படியா. பெரிய சிறிய
  என்று சொல்வதைவிட அனைவரும் மிக சிறப்பாக எழுதுகிறார்கள் சகோ அவரவர்களின் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் தகுந்தார்போல் என்று நினைக்கிறேன் சகோ சரிதானே!


  //சரி...!

  "encyclopedia" ன்னு சொல்லுவாங்க...! அதில் அனைத்து அடங்கும் என்றும் சொல்வார்கள்...!

  "மலிக்கா வார வலைச்சரம்" பதிவுலகின் "encyclopedia" என எடுத்துகொள்ளலாம் என நினைக்கிறேன்...!//

  ஹை ஹை இப்படியெல்லாம்
  சொன்னாலும் நான்
  சின்ன பச்சபுள்ளைதான் என்பதில் சிறிதளவும் மாற்றமில்லை.

  இருந்தபோதும் சகோதரரின் கருத்துக்களும் வாழ்த்துக்களும் என்றும் எனக்கு ஊக்கமே.மிக்க நன்றிசகோ

  ReplyDelete
 28. ஜெய்லானி said...
  //"மலிக்கா வார வலைச்சரம்" பதிவுலகின் "encyclopedia" என எடுத்துகொள்ளலாம் என நினைக்கிறேன்...!//

  இது வரை நீங்க நினைக்கலையா...ஹய்யோ..ஹய்யோ..!!//

  ஹய்யோ..ஹய்யோ..
  கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க. என்னத்த சொல்ல. எப்படியெல்லாம் புரளியை கிளப்பிவிடுறாங்கப்பு..ஏஏஏஏஏன்ன்ன்ன் இப்புடி..

  ReplyDelete
 29. ஜெய்லானி said...
  இங்கே ஒரு கவிதை இன்னெரு கவிதையை வர்னிக்கிறதே...!!//

  இதை எங்கோ கேட்டதுபோல் இருக்குதே. ஓ அதுவா இது..

  ரொம்ப நன்றிங்க அண்ணாத்தேஏஏஏஏஏஏஎ..

  ReplyDelete
 30. crown said...
  மின்னல்கள் ஒருசேர
  கலைவானில் மின்னிச்செல்ல.
  அவர்களின் கவித்திறனை
  கல்வெட்டுவென நல்லுரைத்த நளினம்.அறிமுகப்படுத்திய விதம் அருமையோ அருமை!.
  பெண்வரையும் கோலம் சிறப்பென்றால் சித்திரமாய் அமைந்திருக்கும்
  அவர்கள் கையெழுது!.
  அற்புதமாய் அமைய வல்ல கவிஆற்றல்
  ஒருமகத்தான வரபிரசாதம்.
  வாழ்துக்கள்.//

  வாங்க கவிஞரே.தங்களின் கவிதைக்கு நன்றி

  பெண்ணினங்கள்
  மனவுணர்களை மகிழ்ச்சியிலும் மனகஷ்டத்திலும் மடைதிறந்த வெள்ளமாகி தன் உணர்வுகளின் வெளிப்பாடுகளை மிக அழகாய் வெளிபடுத்துவதே
  கல்வெட்டின் எழுதுகளாய் பொறிக்கபடுவதுப்போல்தான் அதை ஊக்குவிக்கும்பொருட்டு கருதுக்களிடும் அனைவருக்கும் நன்றிகள் பல..

  தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும்,
  வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ..

  ReplyDelete
 31. M. தியாகராஜன் said...
  மூணு நாளா...
  வலைச்சரத்தில்...
  பதிவுத் திருவிழாவா

  உண்மையோ உண்மை. மிக சிறப்பாக சிரமமெடுத்து நல்லமுரையில் பணீயார்றும் மலிக்காவுக்கு. என்ன பட்டம் கொடுக்கலாம் சொல்லுங்க.

  நிறைய பதிவர்கள் இங்குவந்து தெரிந்துகொண்டேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  அழகிய முறையில் செயலாற்றும் கவிதாயினிக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளூம்..

  என்னது பட்டமா!!!!!!. ஆகா இப்படியெல்லாம் கூட கிளம்பியிருக்கீங்களா..
  தாங்களின் வருகைக்கும் புதுசா புரளியை கிளப்பிவிடும் கருத்துக்கும்,
  வாழ்த்துக்கும் மிக்க நன்றி தியாகராஜன்....

  ReplyDelete
 32. சிவா said...
  மிக மிக அருமையான தொகுப்புகள்.
  வித்தியாசமாக புகைப்படத்துடன் அறிமுகங்கள் அசத்துராங்காப்பா .இந்த மல்லி..

  வாழ்த்துக்கள்..//

  வாங்க சிவா.
  தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும்,
  வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 33. //மாணவன் said...
  அனைவருமே சிறப்பான அறிமுகங்கள்
  வாழ்த்துக்கள்....
  தொடர்ந்து கலக்குங்க.......//

  வாங்க மாணவன்..
  தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும்,
  வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 34. //ஹேமா said...
  வித்தியாசமாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் மல்லிக்கா.நன்றி தோழி.//

  வாங்க தோழி
  தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும், மிக்க நன்றி..

  ReplyDelete
 35. //பாரத்... பாரதி... said...
  வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.//  வாங்க பாரத்... பாரதி.
  தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும்,
  வாழ்த்துக்கும் பின்ன வாக்குகளுக்கும்
  மிக்க நன்றி..

  ReplyDelete
 36. teedummanam said...
  அனைவருமே சிறப்பான அறிமுகங்கள்
  தொடர்ந்து கலக்குங்க
  வாழ்த்துக்கள்.//


  வாங்க தேடும்மனம்..
  தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும்,
  வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 37. romba nandringa malikka...
  so sweet of u

  ReplyDelete
 38. பத்மா said...
  romba nandringa malikka...
  so sweet of u

  வாங்க பத்மா.
  தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 39. mikka nandri ennai arimugam seithamaikku....thodarga ungal pani..:-)

  ReplyDelete
 40. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 41. அசத்திடிங்கக்கா

  தங்கள் அன்புக்கு நன்றி...

  என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி...........

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது