07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 7, 2011

மாணவன் ஆசிரியர் ஆன கதை...(அறிமுகம்)

என்ன செய்கிறாய் இப்போது
இனிமேல் நானும் கேட்கலாம்
ஏனென்றால் எனக்கும் வேலை
கிடைத்துவிட்டது”

அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் மாணவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
வலைச்சரம் மூலம் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..

எனக்கு வலைச்சரத்தில் ஆசியராக வாய்ப்பு கொடுத்த மதிப்பிற்குரிய திரு. சீனா ஐயா அவர்களுக்கும் மற்றும் வலைச்சர நிர்வாக குழுவினருக்கும் எனது முதற்கண் வணக்கங்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்

வலைச்சரத்தில் என்னை ஏற்கனவே அறிமுகபடுத்திய மரியாதைக்குரிய  திரு.பன்னிகுட்டி ராம்சாமி அவர்களுக்கும் பிரபல பதிவர் அருமை அண்ணன் சிரிப்புபோலீஸ் ரமேஷ் (ரொம்ப நல்லவன் சத்தியமா) அவருக்கும் மற்றும் கடந்த வாரம் வலைச்சர ஆசிரியராக பணியாற்றிய அன்புடன் மலிக்கா மேடம் அவர்களுக்கும் இந்த தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்...

வலைச்சர வழக்கப்படி ஒவ்வொரு வாரமும் ஆசிரியராக பொறுப்பேற்கும் பதிவர் முதல் நாள் தனது சொந்த பதிவுகளை (சுய அறிமுகம்) செய்துகொண்டு அடுத்துதான் பதிவர்களை அறிமுகபடுத்துவது வழக்கம். அந்த வகையில் இன்று எனது பதிவுகள் சிலவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.

பதிவுலகத்தில் நீண்டகால வாசகனாக இருந்தாலும் அன்பு நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி கடந்த வருடம் (2010) ஜூலை மாதம்தான் கணினிபற்றிய ஒரு சின்ன கவிதையின் அறிமுகத்தோடு எழுத ஆரம்பித்தேன். பதிவுகள் எழுத ஆரம்பித்தபிறகு சிறந்த நண்பர்களின் நட்புகள் கிடைத்தன.

வளர்ந்து வரும் அறிவியல் உலகில் கணினிபற்றி கலைச்சொற்களையும், கணிதத்தில் எண்களின் சொற்கள் பற்றியும் மற்றும் பொது அறிவு தகவல்களையும் கற்று வருவதில் இன்னும் மாணவனாக இருக்கிறேன்.

பள்ளிபருவ காலத்திலிருந்தே அறிவியலிலும் வரலாற்றிலும் கொஞ்சம் ஈடுபாடு அதிகம் அதன் முயற்சியாகத்தான் வரலாற்றில் சாதனை புரிந்த சில வரலாற்று நாயகர்களின்  தகவல்களை சேகரித்து பதிவுகள் எழுதி வருகிறேன்...

அவ்வபோது எனது கனவு, காதல், படிப்பு பற்றி கவிதை என்ற பெயரில் எழுதுவதுண்டு. எனக்கு பொழுதுபோக்கு நல்ல இசையை தேடி கேட்பது பாடல்கள் கேட்பதுதான். அதுவும் இசைஞானியின் ரசிகனாக இருப்பதில் மிகவும் பெருமையடைகிறேன். அதன் வெளிப்பாடாக நான் எழுதிய ஒரு பதிவு தாலாட்டு கேட்க எத்தனை நாள் காத்திருந்தேன்... என்ற பாடல் பதிவு.

இயல்பாகவே நான் ரொம்ப அமைதியான பையன் எல்லோரிடமும் அன்பாக பழக வேண்டும் என நினைப்பவன் (அட நம்புங்கபா) அதற்காகவே மனதை அமைதியாக வைத்துகொள்வதற்கு நேரம் கிடைக்கும்போது தியானம் செய்து எதிலும் அதிக பற்று இல்லாமல் அனைவரிடமும் அன்பாக இருப்பதற்கு ஆசைபடுபவன்.

எனது அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன்... வலைச்சரத்தில் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட முயல்கிறேன் அதோடு பல புதிய நண்பர்களை (பதிவர்கள்) அறிமுகபடுத்துகிறேன். நண்பர்கள் அனைவரும் எனது தளத்திற்கு வருகைதந்து ஊக்கபடுத்தியதுபோல வலைச்சரத்துக்கும் உங்களின் நல்ஆதரவைதந்து ஊக்கபடுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி

என்னை வலைசரத்தில் ஆசிரியராக்கி அழகுபார்த்த திரு. சீனா ஐயா அவர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு, மீண்டும் நாளை... சிறந்த மற்றும் புதிய பதிவர்கள் அறிமுகத்தோடு சந்திப்போம் நண்பர்களே... நன்றி

மாணவன் ஸ்பெஷல்: 
முடியாது என முடங்கி விடாதே
முடியும் என முனைந்து நில்...

பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே...!!!

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

69 comments:

 1. //பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
  ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே...!!! //

  ஆம்.. ஒவ்வொரு மனிதனும் சாதனையாளந்தான்..
  நன்றாகச் சொன்னீர்கள்.
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. தங்களின் பதிவுகள் தகவல் தரும்படியும் இருக்கும், வார்த்தைகள் நம்பிக்கை அளிக்கும்படியும் இருக்கட்டும்! ஆசிரியர் ஆனதற்கு மிக்க மகிழ்ச்சி! மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  தொடர்ந்து சிறப்படையுங்கள் நண்பரே!

  ReplyDelete
 3. வாங்க மாணவன். வாழ்த்துக்கள் கலக்குங்க

  ReplyDelete
 4. இனி ஒரு வாரமும் உங்கள் ராஜ்ஜியம் தான். கலக்குங்க மாணவன்

  ReplyDelete
 5. யோவ் என் பேருக்கு முன்னாடி ஏன்யா பிரபல பதிவர்னு போடல....? பிச்சிபுடுவேன் பிச்சி, எல்லாம் எனக்கு தெரியும்.. இது அந்த சிரிப்பு போலீசு வேலதானே....? ஆமா இதுக்கு எவ்வளவு கொடுத்தாரு.....? (அவரு இதுக்கு வழக்கமா ஓசில கெடச்ச மீந்து போன காஞ்ச பன்னுதானே கொடுப்பாரு...?)

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் மாணவன்....
  சிறப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்....
  செய்யவேண்டும் என்ற பிராத்தனையுடன்...........

  என்றும் அன்புடன்.
  வைகை

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் மாணவன்....
  சிறப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்....
  செய்யவேண்டும் என்ற பிராத்தனையுடன்...........

  என்றும் அன்புடன்.
  வெறும்பய..

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் மாணவன் .........தொடரட்டும் உங்கள் பணி .பின்னால் நண்பர்கள் நாங்கள் இருக்கிறோம்

  ReplyDelete
 9. வெறும்பய said...
  வாழ்த்துக்கள் மாணவன்....
  சிறப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்....
  செய்யவேண்டும் என்ற பிராத்தனையுடன்...........

  என்றும் அன்புடன்.
  வெறும்பய..////


  அடப்பாவி,,,,இங்கயுமா?

  ReplyDelete
 10. /////// எனக்கு பொழுதுபோக்கு நல்ல இசையை தேடி கேட்பது பாடல்கள் கேட்பதுதான். அதுவும் இசைஞானியின் ரசிகனாக இருப்பதில் மிகவும் பெருமையடைகிறேன்.////////

  ஆமாம்..நானும்...! ராஜாவுக்கு ரசிகனாக இருப்பதே நமக்கு பெருமையான் ஒன்றே.....

  ReplyDelete
 11. தொடரட்டும் உங்கள் பொறுப்பான பணி.... !

  ReplyDelete
 12. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  யோவ் என் பேருக்கு முன்னாடி ஏன்யா பிரபல பதிவர்னு போடல....? பிச்சிபுடுவேன் பிச்சி, எல்லாம் எனக்கு தெரியும்.. இது அந்த சிரிப்பு போலீசு வேலதானே....? ஆமா இதுக்கு எவ்வளவு கொடுத்தாரு.....? (அவரு இதுக்கு வழக்கமா ஓசில கெடச்ச மீந்து போன காஞ்ச பன்னுதானே கொடுப்பாரு...?)
  ///

  யோவ் மரியாதை தானா வரணும். இப்படி கேட்டு வாங்க கூடாது. அப்பிடியே வாங்கினாலும் வெளில சொல்லக் கூடாது..

  ReplyDelete
 13. ஒரு மக்கு மாணவன்
  ஆசிரியர் ஆகி விட்டாரே
  அடடே ஆச்சரிய குறி

  ReplyDelete
 14. அண்ணே வணக்கம் ....
  வாங்க வாங்க ,.,,,
  உங்களின் சுய அறிமுகம் அதுவே அசத்தல் ....
  தொடர்ந்து கலக்குங்க ....

  ReplyDelete
 15. தொடரட்டும் உங்கள் பொறுப்பான பணி.... !

  ReplyDelete
 16. உங்களின் திறமையை அங்கீகரித்த அய்யா அவர்களுக்கும் நன்றிகள் //

  ReplyDelete
 17. தலைப்பே ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது ....

  ReplyDelete
 18. ஆரம்பமே அசத்தல்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. மாணவன் கலக்குங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. //
  Madhavan Srinivasagopalan said...
  //பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
  ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே...!!! //

  ஆம்.. ஒவ்வொரு மனிதனும் சாதனையாளந்தான்..
  நன்றாகச் சொன்னீர்கள்.
  வாழ்த்துக்கள்..//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...

  ReplyDelete
 21. // எஸ்.கே said...
  தங்களின் பதிவுகள் தகவல் தரும்படியும் இருக்கும், வார்த்தைகள் நம்பிக்கை அளிக்கும்படியும் இருக்கட்டும்! ஆசிரியர் ஆனதற்கு மிக்க மகிழ்ச்சி! மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  தொடர்ந்து சிறப்படையுங்கள் நண்பரே!//

  என்னை ஊக்கப்படுத்தியதில் உங்களின் பங்கு முக்கியமானது நண்பரே... கண்டிப்பாக உங்களின் ஆசியோடு தொடர்ந்து சிறப்பாகவே செய்ல்படுவேன் நன்றி...

  ReplyDelete
 22. //மோகன் குமார் said...
  வாங்க மாணவன். வாழ்த்துக்கள் கலக்குங்க///

  தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 23. // ரஹீம் கஸாலி said...
  இனி ஒரு வாரமும் உங்கள் ராஜ்ஜியம் தான். கலக்குங்க மாணவன்//

  நன்றி நண்பரே

  ReplyDelete
 24. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் என் பேருக்கு முன்னாடி ஏன்யா பிரபல பதிவர்னு போடல....? பிச்சிபுடுவேன் பிச்சி, எல்லாம் எனக்கு தெரியும்.. இது அந்த சிரிப்பு போலீசு வேலதானே....? ஆமா இதுக்கு எவ்வளவு கொடுத்தாரு.....? (அவரு இதுக்கு வழக்கமா ஓசில கெடச்ச மீந்து போன காஞ்ச பன்னுதானே கொடுப்பாரு...?)//

  ஆமாம் அண்ணே போலீசுதான் மிரட்டுனாரு....ஹிஹி

  ReplyDelete
 25. // வைகை said...
  வாழ்த்துக்கள் மாணவன்....
  சிறப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்....
  செய்யவேண்டும் என்ற பிராத்தனையுடன்...........

  என்றும் அன்புடன்.
  வைகை//

  வாங்கண்ணே, கண்டிப்பாக உங்களின் வழிகாட்டுதலோடு நமது பொன்னான பணி சிறப்பாக தொடரும்.... :)))

  ReplyDelete
 26. // வெறும்பய said...
  வாழ்த்துக்கள் மாணவன்....
  சிறப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்....
  செய்யவேண்டும் என்ற பிராத்தனையுடன்...........

  என்றும் அன்புடன்.
  வெறும்பய..//

  வாழ்த்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி அண்ணே...

  ReplyDelete
 27. // இம்சைஅரசன் பாபு.. said...
  வாழ்த்துக்கள் மாணவன் .........தொடரட்டும் உங்கள் பணி .பின்னால் நண்பர்கள் நாங்கள் இருக்கிறோம்

  நன்றி நண்பரே

  ReplyDelete
 28. // வைகை said...
  வெறும்பய said...
  வாழ்த்துக்கள் மாணவன்....
  சிறப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்....
  செய்யவேண்டும் என்ற பிராத்தனையுடன்...........

  என்றும் அன்புடன்.
  வெறும்பய..////


  அடப்பாவி,,,,இங்கயுமா?//

  விடுங்கண்ணே நம்ம அண்ணந்தானே அவரு ஜோதி மயக்கத்துல இருக்காரு... ஹிஹி

  ReplyDelete
 29. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////// எனக்கு பொழுதுபோக்கு நல்ல இசையை தேடி கேட்பது பாடல்கள் கேட்பதுதான். அதுவும் இசைஞானியின் ரசிகனாக இருப்பதில் மிகவும் பெருமையடைகிறேன்.////////

  ஆமாம்..நானும்...! ராஜாவுக்கு ரசிகனாக இருப்பதே நமக்கு பெருமையான் ஒன்றே.....//

  உண்மைதான் அண்ணே, அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்தோம் என்பதே மிகவும் பெருமைபட வேண்டும்..

  ReplyDelete
 30. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  தொடரட்டும் உங்கள் பொறுப்பான பணி....//

  :))))

  ReplyDelete
 31. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  யோவ் என் பேருக்கு முன்னாடி ஏன்யா பிரபல பதிவர்னு போடல....? பிச்சிபுடுவேன் பிச்சி, எல்லாம் எனக்கு தெரியும்.. இது அந்த சிரிப்பு போலீசு வேலதானே....? ஆமா இதுக்கு எவ்வளவு கொடுத்தாரு.....? (அவரு இதுக்கு வழக்கமா ஓசில கெடச்ச மீந்து போன காஞ்ச பன்னுதானே கொடுப்பாரு...?)
  ///

  யோவ் மரியாதை தானா வரணும். இப்படி கேட்டு வாங்க கூடாது. அப்பிடியே வாங்கினாலும் வெளில சொல்லக் கூடாது..//

  ஆமாம் அண்ணே, ஆனால் நீங்க மிரட்டுனத நான் வெளியே சொல்லல...ஹிஹி

  ReplyDelete
 32. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  ஒரு மக்கு மாணவன்
  ஆசிரியர் ஆகி விட்டாரே
  அடடே ஆச்சரிய குறி//

  ஆமாம் உங்ககூட சேர்ந்தா அப்படித்தான் ஆகும்...ஹிஹி

  ReplyDelete
 33. // அரசன் said...
  அண்ணே வணக்கம் ....
  வாங்க வாங்க ,.,,,
  உங்களின் சுய அறிமுகம் அதுவே அசத்தல் ....
  தொடர்ந்து கலக்குங்க ....//

  வாங்கண்ணே, வரவேற்புக்கு நன்றி
  கண்டிப்பாக கலக்கிடுவோம்...:))

  ReplyDelete
 34. //
  ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  தொடரட்டும் உங்கள் பொறுப்பான பணி.... !//

  நன்றி :))

  ReplyDelete
 35. // அரசன் said...
  உங்களின் திறமையை அங்கீகரித்த அய்யா அவர்களுக்கும் நன்றிகள் //

  சீனா ஐயாவுக்கு நன்றி சொன்ன உங்களுக்கு என் சார்பாகவும் நன்றி அண்ணே...

  ReplyDelete
 36. // அரசன் said...
  தலைப்பே ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது ....//

  நன்றி அண்ணே...

  ReplyDelete
 37. // Chitra said...
  ஆரம்பமே அசத்தல்! வாழ்த்துக்கள்!//

  வாழ்த்துக்கு நன்றிங்க மேடம்...

  ReplyDelete
 38. // நா.மணிவண்ணன் said...
  மாணவன் கலக்குங்க வாழ்த்துக்கள்//

  நன்றி நண்பரே

  ReplyDelete
 39. //பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
  ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே...!!! //

  நிச்சயமாக. வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியர் அவர்களே! தாங்களின்பணி சிறக்க எனது நல்வாழ்த்துக்கள்..

  அசத்துங்க..

  ReplyDelete
 40. ஆசிரியரான மாணவனுக்கு என் வாழ்த்துக்கள்..
  கலக்கல் சரங்கள் ஆரம்பமாகட்டும்..

  ReplyDelete
 41. // அன்புடன் மலிக்கா said...
  //பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
  ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே...!!! //

  நிச்சயமாக. வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியர் அவர்களே! தாங்களின்பணி சிறக்க எனது நல்வாழ்த்துக்கள்..

  அசத்துங்க..//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க மேடம்... அசத்திடுவோம்....

  ReplyDelete
 42. // இந்திரா said...
  ஆசிரியரான மாணவனுக்கு என் வாழ்த்துக்கள்..
  கலக்கல் சரங்கள் ஆரம்பமாகட்டும்..//

  வாழ்த்துக்கு நன்றிங்க சகோ....

  ReplyDelete
 43. //சி.பி.செந்தில்குமார் said...
  வாழ்த்துக்கள்//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாஸ்...

  ReplyDelete
 44. அறிமுகத் தலைப்பே அருமையாக உள்ளது. வலைச்சரத்தில் இவ்வாரத்தின் புதிய ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் தங்களுக்கு என் ஆசிகள். தொடரட்டும் தங்கள் நற்பணி. வாழ்த்துக்களுடன் ..............
  gopu1949.blogspot.com

  ReplyDelete
 45. நல்ல அறிமுகங்கள் தர வாழ்த்துக்கள்!!

  ஆயிரம் கைகள் மறைத்தாலும் என் தலைவன் சிரிப்புக் காவலன் முகம் மறையாது. பன்னி வீனா அண்ணா கிட்ட வம்பு நோ...நோ.

  அஞ்சநஞ்சன், இனைய தளபதி, சிங்கப்பூர் கொண்ட வேங்கை அன்பு அண்ணண் போலீஸ் வாழ்க!! அவர் புகழ் வளர்க!!

  ReplyDelete
 46. Anonymous said...
  நல்ல அறிமுகங்கள் தர வாழ்த்துக்கள்!!

  ஆயிரம் கைகள் மறைத்தாலும் என் தலைவன் சிரிப்புக் காவலன் முகம் மறையாது. பன்னி வீனா அண்ணா கிட்ட வம்பு நோ...நோ.

  அஞ்சநஞ்சன், இனைய தளபதி, சிங்கப்பூர் கொண்ட வேங்கை அன்பு அண்ணண் போலீஸ் வாழ்க!! அவர் புகழ் வளர்க!////

  குடுத்த காசுக்கு மேல கூவுறியே ராசா? யாரு பெத்த புள்ளையோ? இப்படி திரிஞ்சு அலையுது!

  ReplyDelete
 47. அனைத்துமே நல்ல அறிமுகங்கள்! நன்றி!

  ReplyDelete
 48. வாழ்த்துக்கள்

  வாழ்த்துக்கள்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 49. // VAI. GOPALAKRISHNAN said...
  அறிமுகத் தலைப்பே அருமையாக உள்ளது. வலைச்சரத்தில் இவ்வாரத்தின் புதிய ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் தங்களுக்கு என் ஆசிகள். தொடரட்டும் தங்கள் நற்பணி. வாழ்த்துக்களுடன் ..............
  gopu1949.blogspot.com//

  தங்கள் வருகைக்கும் ஆசிக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்கய்யா...

  ReplyDelete
 50. // Anonymous said...
  நல்ல அறிமுகங்கள் தர வாழ்த்துக்கள்!!

  ஆயிரம் கைகள் மறைத்தாலும் என் தலைவன் சிரிப்புக் காவலன் முகம் மறையாது. பன்னி வீனா அண்ணா கிட்ட வம்பு நோ...நோ.

  அஞ்சநஞ்சன், இனைய தளபதி, சிங்கப்பூர் கொண்ட வேங்கை அன்பு அண்ணண் போலீஸ் வாழ்க!! அவர் புகழ் வளர்க!!//

  ரமேஷ் அண்ணன் எவ்வளவு கொடுத்தாரு??? ஹிஹி

  ReplyDelete
 51. // வைகை said...
  அனைத்துமே நல்ல அறிமுகங்கள்! நன்றி!//

  நன்றி அண்ணே....

  ReplyDelete
 52. // Jaleela Kamal said...
  வாழ்த்துக்கள்

  வாழ்த்துக்கள்

  வாழ்த்துக்கள்//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...

  ReplyDelete
 53. வாழ்த்துக்கள் மாணவன்.. கலக்குங்க...

  ReplyDelete
 54. வாழ்த்துகள் மாணவன் இந்த வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...

  ReplyDelete
 55. அழகான அறிமுகங்கள்!
  அசத்தலான அறிமுக உரை!

  -கலையன்பன்.

  (இது பாடல் பற்றிய தேடல்!)
  ஒரு ஊரில் ஊமை ராஜா!

  ReplyDelete
 56. மனமார்ந்த வாழ்த்துக்கள்!
  மாணவன் கலக்குங்க

  ReplyDelete
 57. // பட்டாபட்டி.... said...
  வாழ்த்துக்கள் மாணவன்.. கலக்குங்க...//

  வாங்கண்ணே, வாழ்த்துக்கு நன்றி...

  கலக்கிடுவோம்...எல்லாம் உங்களின் ஆசிர்வாதந்தான்...

  ReplyDelete
 58. // ப்ரியமுடன் வசந்த் said...
  வாழ்த்துகள் மாணவன் இந்த வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்..//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணே...

  ReplyDelete
 59. //
  கலையன்பன் said...
  அழகான அறிமுகங்கள்!
  அசத்தலான அறிமுக உரை!//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

  ReplyDelete
 60. // r.v.saravanan said...
  மனமார்ந்த வாழ்த்துக்கள்!
  மாணவன் கலக்குங்க//

  வாழ்த்துக்கு நன்றி நண்பரே

  தொடர்ந்து வருகை தாருங்கள்..

  ReplyDelete
 61. // வெளங்காதவன் said...
  வாழ்த்துக்கள்.///

  வாங்கப்பு, வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 62. வாழ்த்துகள் மாணவன்

  ReplyDelete
 63. அறிமுகப் பதிவு மிக அருமையா சொல்லியிருக்கீங்க... தல...!!

  ReplyDelete
 64. கடைசியில் கூறிய தத்துவம் மிக அருமை நண்பா..!!!

  ReplyDelete
 65. //S Maharajan said...
  வாழ்த்துகள் மாணவன்//

  வாழ்த்துக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 66. // பிரவின்குமார் said...
  அறிமுகப் பதிவு மிக அருமையா சொல்லியிருக்கீங்க... தல...!!//

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 67. // பிரவின்குமார் said...
  கடைசியில் கூறிய தத்துவம் மிக அருமை நண்பா..!!!//

  நன்றி நண்பரே...தொடர்ந்து இணைந்திருங்கள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது