07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, February 25, 2011

லேடீஸ் ஸ்பெஷல்


வணக்கம் மக்களே...

பெண் பதிவர்களுக்காக இந்த இடுகையை டெடிகேட் செய்கிறேன். சீனியர் பதிவர்கள் என்ற காரணத்தினால் கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா, அன்புடன் ஆனந்தி, காகித ஓடம் பத்மா, இந்திராவின் கிறுக்கல்கள், கவுசல்யா, தேனம்மை லக்ஷ்மணன், தோழி பிரஷா, அன்புடன் அருணா, என் வானம் அமுதா, வானதி ஆகியோரை இந்த இடுகையில் தவிர்த்துவிட்டேன்.

1. Geetha's Womens Special http://udtgeeth.blogspot.com/
பலதரப்பட்ட இடுகைகள் எழுதியிருந்தாலும் அட்வைஸ் ரக இடுகைகள் ரசிக்க வைக்கின்றன. அதுவும் பெண்களுக்கே அதிகமாக அட்வைஸ் செய்கிறார். டீன் ஏஜ் பெண்களுக்காக என்ன அட்வைஸ் சொல்கிறார் என்று கேளுங்கள். மேலும், இளம்பெண்களிடம் ஈகோ வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறார்.

முன்னவரைப் போலவே இவரும் பெண்களுக்காக ஒரு அட்வைஸ் சொல்கிறார். பெண்கள் என்றாலே அட்வைஸ் தான் போல. குறிப்பாக கல்யாண பெண்களுக்காக ஒரு வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார். அவரது வீட்டு பணியாள் குறித்து எழுதப்பட்ட எங்க வீட்டு மலைஸ் இடுகையும் ரசிக்க வைக்கிறது.

3. புதிய வசந்தம் http://puthiyavasantham.blogspot.com/
இவர் ஒரு ஆல்-ரவுண்டர் என்று சொல்லலாம். ரிலாக்ஸ் கவிதை என்ற பெயரில் கவிதையும் எழுதியிருக்கிறார். கலங்க வைக்கும் விலைவாசி பற்றி கவலையும் படுகிறார். அதேசமயம் வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று சொல்லித்தரவும் செய்கிறார்.

4. அவ(ரை)னை நினைத்த நொடிகள்... http://avanidamnaan.blogspot.com/
தன்னுடைய காதலைப் பற்றியும் காதலரைப் பற்றியும் எழுதுவதற்காகவே வலைப்பூ ஆரம்பித்திருக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இவரது காதலரும் ஒரு பதிவர்தான். பிள்ளையார் சுழி போட்டு காதலை ஆரம்பித்த கதையை சொல்லியிருக்கிறார் கேளுங்கள். இவர்கள் வித்தியாசமாக கொண்டாடிய காதலர் தினக்கொண்டாட்டம் கலியுக காதலர்களுக்கு ஒரு முன்னாதரணம்.

5. பூமகளின் பூக்களம் http://poomagal.blogspot.com/
திரைவிமர்சனங்கள் எழுதும் பெண்பதிவர் என்ற முறையில் இவர்மீது அதிகப்படியான மரியாதை உள்ளது. தமிழ் சினிமா மட்டும் என்றில்லாமல் உள்ளூரிலிருந்து உலகம் வரை பொளந்து கட்டுகிறார். தமிழ் சினிமா விமர்சனங்களில் பூவும், பாலிவுட் விமர்சனங்களில் தாரே ஜமீன் பர் படமும், ஹாலிவுட் விமர்சனங்களில் அவதாரும் அதிகம் ரசிக்க வைத்தன.

6. மலைச்சாரல் http://harininathan.blogspot.com/
பெரும்பாலும் கவிதைகளால் நிறைக்கப்பட்ட ஒரு வலைப்பூ. அவ்வப்போது கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. எந்த பெண்ணையும் தரக்குறைவாய் எண்ணக்கூடாது என்று சீரியஸாக அட்வைஸ் செய்கிறார். நவீன சுயம்வரம் பற்றி கவிதை ஒன்றை வடித்திருக்கிறார் பாருங்கள்.

7. மிடில் கிளாஸ் மாதவி http://middleclassmadhavi.blogspot.com/
இவரும் ஒரு ஆல்-ரவுண்ட் பர்பாமன்ஸ் காட்டும் பென்பதிவரே. சவால் சிறுகதை போட்டிக்காக இவர் எழுதியிருக்கும் சவாலே சமாளி சிறுகதை பிரமிக்க வைக்கிறது. இங்கே ஒரே இடுகையில் புத்தக விமர்சனம், எழுத்தாளர் பாலகுமாரனின் வலையுலக அபிப்ராயம் கடி ஜோக் என்று கதம்பம் தொகுத்திருக்கிறார் பாருங்கள்.

8. மைத்துளிகள்... http://maiththuli.blogspot.com/
இவர் ஒரு பதிவர் அல்ல, எழுத்தாளர் என்றுதான் சொல்லவேண்டும். அது ஏன் என்பது இவருடைய வலைப்பூவில் நுழைந்ததும் உங்களுக்கே புரியும். இவரது இடுகைகளில் துரு துரு துப்பாண்டி எனும் இடுகை என்னுடைய பேவரிட். மேலும், 2010ம் ஆண்டில் இவரது ஹீரோ யாரென்று சொல்கிறார் கேளுங்கள்.

9. வள்ளுவம் http://valluvam-rohini.blogspot.com/
இவருக்கு அறிமுகம் தேவைப்படாது என்றேண்ணுகிறேன். பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களை சந்தித்த அனுபவத்தை நான் சந்தித்த வி.ஐ.பி. என்ற பெயரில் சிலாகித்து எழுதியிருக்கிறார். நம் தேசத்தலைவர்களுக்கு இது தேவையா...? என்று சமூகக்கோபம் காட்டவும் செய்கிறார். இவரது மாதொரு வலைப்பூவில் ஹியூமர் கிளப் அனுபவங்கள் பற்றி எழுதியிருக்கிறார் அதையும் படியுங்கள்.

10. ஹைக்கூ அதிர்வுகள் http://ananthi5.blogspot.com/
அதிவேகமாக வளர்ந்துவரும் ஒரு பெண் பதிவர். பதிவுகளை காட்டிலும் பின்னூட்டங்களுக்காக அதிகம் ரசிக்கப்படுபவர். ஆண்களே! இது உங்களுக்கான பதிவு...:))) என்று சொல்லி என்ன எழுதியிருக்கிறார் என்று படியுங்கள். கள்ளக்காதல் சில...!! நொறுங்கும் இதயம் பல...!! என்று சீரியஸாக சொல்கிறார். கூடிய விரைவில் கவுண்டமணி செந்தில் ரசிகர் மன்றத்திற்க்காக அதிரடி நகைச்சுவை தருவதற்கு தயாராக இருக்கிறார் என்பது எக்ஸ்க்ளுசிவ் நியூஸ்.

டிஸ்கி 1: பெயர் குறிப்பிட மறந்த பதிவுலக சகோதரிகள், தாய்மார்கள் அடியேனை மன்னித்தருள வேண்டுகிறேன்.

டிஸ்கி 2: எங்கேயாவது மேடம், அக்கா வகையறா சொலவடைகளை தவற விட்டிருந்தால் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

44 comments:

 1. அட..இன்று மகளிர் மட்டுமா...அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. மகளிர் திரட்டி இவர்களை வாழ்த்துகிறது

  ReplyDelete
 3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 4. மகளிர் அறிமுகம்...வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நல்ல அறிமுகங்கள்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்களும் நன்றிகளும் பிரபா :)

  ReplyDelete
 7. வாழ்த்துக்களும் நன்றிகளும்....

  ReplyDelete
 8. பதிவு எழுத வந்து ஒரு வருஷம் ஆனால், சீனியர் ஆக பதவி உயர்வு. ஜூப்பரு! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...
  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. பிரபலங்களை தவிர்த்து, அறிமுகப்படுத்தபட்டமை சிறப்பு. எல்லோரும் அறியப்பட வேண்டியவர்களே. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. அறிமுகங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...! :-)

  (சீனியர் பதிவர் எல்லாம் ஒன்றும் இல்லங்க.. நன்றி )

  ReplyDelete
 11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அனைவர்க்கும் வாழ்த்துகள்..!!

  ReplyDelete
 13. நல்ல அறிமுகங்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. உங்கள் உழைப்பு இந்த பதிவில் வெளிப்படுகிறது. நல்ல அறிமுகங்கள் பிரபா

  ReplyDelete
 15. மிக அருமையான அறிமுகங்கள்..

  எங்களைப் பற்றியும் பகிர்ந்தமைக்கு நன்றி பிரபா..:))

  ReplyDelete
 16. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. எல்லோருக்கும் என் இனிய வாழ்த்துகள்...

  ReplyDelete
 18. என்னது???? சீனியரா???
  அடப்பாவிகளா...
  நா உள்ள வந்து இப்ப தான் ஒரு வருஷம் ஆகியிருக்கு.

  இப்படி எதையாவது சொல்லி ஓரமா உக்கார வச்சிடாதீங்கப்பூ..

  மற்றபடி அறிமுகங்கள் அனைத்தும் அருமை..

  ReplyDelete
 19. ஆனந்தி, மாதவி, ஹரிணி தெரிந்தவர்கள்.. மற்ற அனைவரும் புதியவர்கள்.. பார்க்கிறேன்.. நன்றி..

  ReplyDelete
 20. அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. sorry typo error,..

  நல்ல தொகுப்பு,.. அறிமுகத்திற்கு நன்றி

  ReplyDelete
 23. அனைவரும் புதியவர்கள்...அருமை!

  ReplyDelete
 24. புதிய அறிமுகங்கள் தான்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. தேர்தல் நெருங்கிடுச்சின்னு இப்பவே தாய்க்குலத்தைக் கவர் பண்ண ஆரம்பிச்சிட்டீகளா! பலே!

  ReplyDelete
 26. மகளிர் ஸ்பெசல், நல்ல ஐடியா...!
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html

  கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு

  ReplyDelete
 28. பெண்கள் ஸ்பெஷல் நன்று;
  நன்றி!
  ...32...

  ReplyDelete
 29. அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

  மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. @ கலாநேசன், மகளிர் திரட்டி, Pari T Moorthy, தமிழ்வாசி - Prakash, vanathy, மாணவன், வைகை, Chitra, தமிழ் உதயம், Ananthi (அன்புடன் ஆனந்தி), டக்கால்டி, எஸ்.கே, ஆனந்தி.., சேலம் தேவா, அமுதா, ! சிவகுமார் !, சசிகுமார், Thenammai, இரவு வானம், MANO நாஞ்சில் மனோ, பத்மா, இந்திரா, தம்பி கூர்மதியன், middleclassmadhavi, jothi, அன்புடன் அருணா, VELU.G, மனம் திறந்து... (மதி), பன்னிக்குட்டி ராம்சாமி, NIZAMUDEEN, ஆயிஷா

  வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

  ReplyDelete
 31. @ Chitra, Ananthi (அன்புடன் ஆனந்தி), பத்மா, இந்திரா
  மேடம்... நீங்க எல்லாம் தன்னடக்கத்தோடு இப்படியெல்லாம் சொன்னால்கூட நீங்கள் சீனியர் பதிவர்கள்தான்...

  ReplyDelete
 32. @ ஆனந்தி..
  // Thanks Praba..:)) //

  என்ன மேடம்... ஒரே வரியில முடிச்சிட்டீங்க உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்த்தேனே...

  ReplyDelete
 33. @ தம்பி கூர்மதியன்
  // ஆனந்தி, மாதவி, ஹரிணி தெரிந்தவர்கள்.. மற்ற அனைவரும் புதியவர்கள்.. பார்க்கிறேன்.. நன்றி.. //

  யோவ்... இந்த நக்கல்தானே வேனாம்ன்னுறது நாலாம் நம்பர் பதிவரை உமக்கு யாரென்றே தெரியாதோ...?

  ReplyDelete
 34. @ மனம் திறந்து... (மதி)
  // தேர்தல் நெருங்கிடுச்சின்னு இப்பவே தாய்க்குலத்தைக் கவர் பண்ண ஆரம்பிச்சிட்டீகளா! பலே! //

  ஆஹா எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க...

  ReplyDelete
 35. //யோவ்... இந்த நக்கல்தானே வேனாம்ன்னுறது நாலாம் நம்பர் பதிவரை உமக்கு யாரென்றே தெரியாதோ...?
  //

  இப்போ தெரியும் பிரபா.!!! இந்த பக்கத்தை பாத்துவிட்டு அங்கே சென்றேன்.. நீங்க சொன்னமாதரி அவுங்க காதல பத்தி தான் எழுதிட்டிருக்காங்க.. ஆனா சரியான போர்.!!! ஆமாம் அவிங்க காதலரும் பதிவர்னு சொன்னீங்களே அவரு பாவம்.!!! (யாரா இருக்கும்.???)

  ReplyDelete
 36. @ தம்பி கூர்மதியன்
  // இப்போ தெரியும் பிரபா.!!! இந்த பக்கத்தை பாத்துவிட்டு அங்கே சென்றேன்.. நீங்க சொன்னமாதரி அவுங்க காதல பத்தி தான் எழுதிட்டிருக்காங்க.. ஆனா சரியான போர்.!!! ஆமாம் அவிங்க காதலரும் பதிவர்னு சொன்னீங்களே அவரு பாவம்.!!! (யாரா இருக்கும்.???) //

  முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு தல...

  ReplyDelete
 37. கடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...

  ReplyDelete
 38. மிக்க நன்றி தோழரே !!
  என்னை முதலாவது நபராக
  அறிமுகபடுத்தியமைக்கு!!!
  மகளிருகாகாக நீங்கள் எடுத்து கொண்ட முயற்சியை தொடர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 39. லேட்டாக வந்த காரணம் கணினி என் வசம் இல்லை.இன்றுதான் பார்த்தேன் .நன்ரி என் வள்ளூவம் மகளிர் மட்டும் வரிசையில் இருக்கிறது நன்றி..எனக்குப் பிடித்த பதிவுகளையே நீங்களும் அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 40. நன்றி பிரபா.

  நான் ரொம்ப நாளா எழுதினாலும் அதிகம் பிரபலம் ஆகலை.. நீங்களாவே இங்கு என்னைப் பற்றி சொன்னதில் மகிழ்ச்சி..

  ஆமா, என் விமர்சன பதிவு மட்டும் தான் படிச்சீங்களோ??

  நான் கவிதையல்லவா அதிகம் எழுதுபவள்..

  இப்படி சாச்சுப்புட்டியே பிரபா.. ;-)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது