07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 26, 2011

2500 வலைபூக்கள் கொண்ட லிஸ்ட் – உலவுக்கு நன்றி


வணக்கம் மக்களே...

இந்த வாரம் முழுக்க நிறைய புதிய வலைப்பூக்களையும் பயனுள்ள, ரசனையான இடுகைகளை பலவற்றையும் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று முற்றிலும் புதிய முயற்சியுடன் களமிறங்கி இருக்கிறேன்.

விஷயத்திற்கு போவதற்கு முன், என்னுடைய வலைப்பூ ஒன்றை விளம்பரப்படுத்திக்கொள்கிறேன். நான் கிட்டத்தட்ட நானூறு வலைப்பூக்களை பின்தொடர்ந்துவருகிறேன். இந்நிலையில் சமீபகாலமாக என்னுடைய DASHBOARDல் சில வலைப்பூக்களின் அப்டேட்ஸ் ஒழுங்காக வராமல் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. எனவே, எனது சொந்த பயன்பாட்டிற்காக My Virtual Dashboard என்னும் இந்த வலைப்பூவினை தயாரித்தேன். இந்த வலைப்பூவில் நான் பின்தொடர்ந்து வரும் தளங்களின் இடுகைகள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். இதையே நான் இப்போது எனது DASHBOARD ஆக பயன்படுத்தி வருகிறேன். விருப்பப்பட்டால் நீங்களும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.


சரி, தலைப்பு கொண்ட கருவுக்கு போவோம். இதுவரைக்கும் ஒவ்வொரு வலைப்பூக்களாக அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தேன். இப்போது தங்க முட்டையிடும் வாத்து ஒன்றினை உங்களுக்கு பரிசளிக்க இருக்கிறேன்.

அதுதான் உலவு தளத்தின் இந்த ப்ரோபைல் பக்கம். இங்கே உலவு தளம் பின்தொடரும் அனைத்து வலைப்பூக்களும் இணைப்புகளோடு அகர வரிசைப்படி உள்ளன. இதுதான் ரகசியம், இங்கிருந்து தான் நிறைய புதிய வலைப்பூக்களை தேடி எடுக்கிறேன். நேற்றிரவு வரை இந்த ப்ரோபைல் பக்கத்தில் எல்லாம் சரியாக இருந்தது. திடீரென இன்று காலை வலைப்பூக்களின் லிஸ்ட் காணாமல் போயிருந்தது. பதறியடித்து உலவு நிர்வாகத்திற்கு மெயில் அனுப்பி, எங்களுக்காக மீண்டும் ப்ரோபைல் பக்கத்தின் செட்டிங்க்ஸை மாற்றும்படி வேண்டுகோள் வைத்தேன். எனது அந்த வேண்டுகோளை ஏற்று மீண்டும் வலைப்பூக்களின் லிஸ்டை கொண்டுவந்த உலவு தளத்திற்கு 2500 நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். என்ன புரியலையா...? இந்த லிஸ்டில் மொத்தம் 2500 வலைப்பூக்கள் உள்ளன. மேலும், இந்தப்பக்கம் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். இந்த பக்கத்தை புக்மார்க் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பயனுள்ளதாக இருக்கும். மேலும், இனி வலைச்சர ஆசிரியராக வருபவர்களுக்கு கண்டிப்பாக இது உதவி செய்யும்.


இந்த 2500 வலைப்பூக்களின் பெயர்களையும் இணைப்புகளையும் காப்பி பேஸ்ட் கூட செய்திருக்கலாம். ஆனால் இப்படி ஒரு பெட்டகத்தை நமக்கு தந்த உலவு தளத்தை பெருமைப்படுத்தும் வகையில் இந்த இணைப்பும், தலைப்பும். யாராவது இந்த இடுகைக்காக நன்றி சொல்ல விரும்பினால் உலவு நிர்வாகத்திற்கு உங்கள் நன்றிகளை தெரிவியுங்கள்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

17 comments:

 1. வந்தேன்..
  இரண்டவது வெட்டு..

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி பிரபா

  2500 வலைப்பூக்களின் தொகுப்புகளை தொகுத்து வழங்கிய உலவு நிர்வாகத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றி நன்றி :)

  ReplyDelete
 3. p.p உங்க பெரும் தன்மைக்க நல்ல ஒரு உதாரணம் மிக்க நன்றி...

  ReplyDelete
 4. @ அஞ்சா சிங்கம், # கவிதை வீதி # சௌந்தர், Jaleela Kamal, vanathy, சி.பி.செந்தில்குமார், மாணவன், ♔ம.தி.சுதா♔, தமிழ்வாசி - Prakash

  வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே...

  ReplyDelete
 5. @ தமிழ்வாசி - Prakash
  // உங்கள் கேள்விகளை கேளுங்கள். பதிலளிக்க காத்திருக்கிறார். //

  வலைச்சர பொறுப்பு முடிந்ததும் நானே தனிப்பட்ட முறையில் நிறைய கேள்விகளையும் வேண்டுகோள்களையும் முன்வைக்க காத்திருந்தேன்... சரி, உங்கள் முயற்சியின் மூலமாகவே கேட்கிறேன்...

  ReplyDelete
 6. கடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...

  ReplyDelete
 7. ///
  வலைச்சர பொறுப்பு முடிந்ததும் நானே தனிப்பட்ட முறையில் நிறைய கேள்விகளையும் வேண்டுகோள்களையும் முன்வைக்க காத்திருந்தேன்... சரி, உங்கள் முயற்சியின் மூலமாகவே கேட்கிறேன்...///

  உங்களை வரவேற்கிறேன் பிரபா..

  வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
  கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

  ReplyDelete
 8. சூப்பர் டேட்டா பேஸ்..!!பதிவுலக குடோன்.

  ReplyDelete
 9. நன்றி பிரபாகர். இப்போது பார்த்தால் உளவு ப்ரோபைலில் வலை பூக்கள் லிஸ்ட் தெரியலையே. நீங்கள் அனைத்து வலை பூக்கள் பெயரையும் பகிர்ந்திருக்கலாம்.

  ReplyDelete
 10. // இப்போது பார்த்தால் உளவு ப்ரோபைலில் வலை பூக்கள் லிஸ்ட் தெரியலையே. நீங்கள் அனைத்து வலை பூக்கள் பெயரையும் பகிர்ந்திருக்கலாம். //

  தெரிகிறதே... மறுபடியும் முயன்று பாருங்கள்...

  ReplyDelete
 11. உலவுக்கு நன்றி. புதிய தளங்கள் நிறைய உள்ளன.
  http://tamilpoint.blogspot.com/p/tamil-blogs.html
  மென்படுத்தும் போது மிகவும் பயன்படும்

  ReplyDelete
 12. அருமைங்க

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது