07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 28, 2011

வலைச்சரத்தில் நான் - ஒரு இன்ப அதிர்ச்சி


அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.


முதலில் என்னை வலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியராக இருக்க அழைத்து இன்ப அதிர்ச்சி தந்த சீனா ஐயா அவர்களுக்கும் அறிமுக பதிவிட்ட கயல்விழி முத்துலெட்சுமி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல் பதிவு என்னைப்பற்றிய அறிமுகமாக இருக்க வேண்டும் என்பதால் இந்த பதிவு.

      நான் மூன்று மாத காலத்திற்கு முன்பு பதிவுலகத்திற்குள் நுழைந்தேன். எழுத்தின் மீது இருந்த ஆசையால் எழுத வந்தவன். ஆரம்பத்தில் எனக்கு பிடித்த மூன்று இசைத்திரட்டுகள், என்னை அழவைத்த கருவாச்சி காவியம் என சில பதிவுகளை எழுதிவிட்டு யாராவது வந்து பார்ப்பார்களா? கருத்து சொல்வார்களா? என்று காத்திருப்பேன். philosophy prabhakaran அவர்களும் ரஹீம் கஸாலி(என்னை வலைச்சரத்தில் இரண்டாவது முறையாக அறிமுகம் செய்தவர்) அவர்களும் தான் முதன் முதலில் கருத்திட்டவர்கள். அவர்கள் இருவருக்கும் என் நன்றிகள்.

 

குறிப்பாக பிரபாகரனுக்கு நிச்சயம் நன்றி சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் 10 நபர்களாக இருந்த பின்தொடர்பவர்களை ஒரே நாளில் 38 நபர்களாக மாற்றியது அவர் என்னைப்பற்றி அவரது வலைப்பூவில் தனியாக இட்ட பதிவினால் தான். பலரிடம் என்னை கொண்டு சென்றது அவர் தான். நான் முன்னேற பலமுறை ஆலோசனை கூறியுள்ளார். இந்த வாரம் நான் எழுதப்போவது கூட அவரின் ஆலோசனையோடுதான்.

 

விருதகிரி விமர்சனம் தான் நான் எழுதிய ஒரே திரைப்பட விமர்சனம். ஏர்டெலின் மறுஅடையாளச்சூடு என்னும் என் பதிவு தான் அதிகம் பேர் படித்த என் பதிவாகும். பிறகு MNP ஐ பற்றியும் நான் ஒரு பதிவிட்டேன். முதியோர் இல்லம் மற்றும் சிறுவனும் நாய்குட்டியும் என இரண்டு சிறுகதைகளும், காதல் என்றால் என்ன என ஒரே ஒரு கவிதையும் எழுதியுள்ளேன். தற்போது Operation ஆரியபட்டா என்னும் சிறு தொடர்கதை ஒன்றை எழுதிவருகிறேன். மேலும் சில மென்பொருள்களைப்பற்றியும் எழுதியுள்ளேன்.

ரொம்ப நல்லவங்க என்னும் பெயரில் மூன்று பதிவுகள் இட்டுள்ளேன். அதில் ஒன்றைத்தான் திரு எல் கே அவர்கள் வலைச்சரத்தில் குறிப்பிட்டிருந்தார்(அவருக்கு என் நன்றிகள்). மேலும் நேரு குடும்பம் மற்றும் மு.க.குடும்பம் என இரு பதிவுகளும் இட்டுள்ளேன். என்னைப்பற்றி அதிகமாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

இந்த ஒருவார காலத்தில் எனக்கு முன்பே வலைப்பூவை ஆரம்பித்தவர்களும் பல நாட்களாக எழுதிக்கொண்டிருப்பவர்களும் குறிப்பிடப்படுவார்கள். அதனால் அவர்கள் ஒரு சிறுவன் நம்மைப்பற்றி எழுதுகிறான் என்று எண்ணி வருந்தவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு என்றும் அன்புடன்,
உங்கள்
பச்சைத்தமிழன் பாரி தாண்டவமூர்த்தி

      குறைகளோ, ஆலோசனைகளோ இருந்தால் தெரிவிக்கவும். என் மின்னஞ்சல் முகவரி-tpari88@gmail.com

27 comments:

 1. வாழ்த்துக்கள் பாரி. பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துங்கள்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் நண்பா. கலக்குங்க

  ReplyDelete
 3. @எல் கே வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.....

  ReplyDelete
 4. @ரஹீம் கஸாலி ..வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே...

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் பாரி... உங்களுடைய அறிமுகங்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்..

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் நண்பரே!. கலக்குங்க!

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் நண்பரே :)

  ReplyDelete
 8. வாழ்த்துகள். உங்கள் பணி சிறக்க...

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் நண்பரே.... சிறப்பாகச் செய்யுங்கள்!

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் நண்பா. கலக்குங்க.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள்! இந்த வாரமும் சிறப்பாக அமைய வரவேற்கிறோம்!

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள். புதியவர்களின் வருகையை என்றும் விரும்புகிறேன். நிறைய புதியவர்களையும் கொண்டுவாருங்கள்.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் நண்பரே !

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் நண்பா. கலக்குங்க ...

  ReplyDelete
 15. வலைச்சரத்தில் வெற்றிமாலை சூட வாழ்த்துகள், பாரி!

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் நண்பரே சிறப்பான அறிமுகங்களை தொகுத்து வழங்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. @ பாரத்... பாரதி..., தமிழ் பிரியன்,மாணவன்,தமிழ் உதயம், பன்னிக்குட்டி ராம்சாமி, சே.குமார், Chitra,கக்கு - மாணிக்கம், வை.கோபாலகிருஷ்ணன், வேடந்தாங்கல் - கருன் , ! சிவகுமார் !,Lakshmi.....அனைவரின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி....இந்த வாரம் முழுவதும் தங்கள் ஆதரவை எனக்கு அளிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
  *********************************
  அலோசனைகள் இருந்தால் tpari88@gmail.com என்னும் முகவரிக்கு தெரிவிக்கவும்....
  *********************************

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள்! சிறப்பாக அமைய வரவேற்கிறோம்!

  ReplyDelete
 19. வாழ்த்துகள் சகோ தொடருங்கள்

  ReplyDelete
 20. கலக்குங்க கலக்குங்க மக்கா....

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் நண்பரே..

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் நண்பரே!... அறிமுகங்களை தொடருங்கள்..

  வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
  கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

  ReplyDelete
 23. @Harini Nathan,நேசமுடன் ஹாசிம்,MANO நாஞ்சில் மனோ,கந்தசாமி.,தமிழ்வாசி - Prakash,சி.பி.செந்தில்குமார்....

  அனைவரின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி....
  இந்த வாரம் முழுவதும் தங்களின் ஆதரவை எனக்கு அளிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
  ***************************************************
  ஆலோசனைகள் இருந்தால் tpari88@gmail.com என்னும் முகவரிக்கு தெரிவிக்கவும்....
  ***************************************************

  ReplyDelete
 24. இன்ப அதிர்ச்சியோடு, உங்களைப்பற்றிய
  அறிமுகங்களைத் தந்தீர்கள்.
  மேலும் தங்கள் அறிமுகங்கள்பற்றி
  அறிய காத்திருக்கிறோம்...
  ...25...

  ReplyDelete
 25. =>25=>

  வடை கொடுத்ததற்கு நன்றி!

  ReplyDelete
 26. @NIZAMUDEEN..வருகைக்கு நன்றி நண்பரே...
  தொடந்துவாருங்கள்....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது