07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 11, 2012

ஸாதிகாவிடம் இருந்து கீதமஞ்சரி பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி ஸாதிகா - தான் ஏற்ற பொறுப்பினை சரிவர நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடம் இருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு பதிவுகள் இட்டு, தன்னுடைய ஆறு பதிவுகள் உள்ளிட்ட இருநூற்று நாலு பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார். இது ஒரு சாதனையாக இருக்குமென நம்புகிறேன். பெற்ற மறு மொழிகளோ 386. அறிமுகப் படுத்தப்பட்ட பதிவர்களோ 198.

அறிமுகப் படுத்துவதில் சாதனை படைத்த சகோதரி ஸாதிகா ஹாஜா இத்தனை பதிவுகளையும் தேடிப் பிடித்து - பல்வேறு தலைப்புகளில் - சுயச்சரம், அனுபவச்சரம், கதைச்சரம், அறுசுவைச் சரம், கட்டுரைச்சரம், கவிச்சரம், கதம்பச்சரம் எனப் பகுதி வாரியாக பதிவிட்டு, இயன்றவரை பதிவர்களின் புகைப்படங்களுமிட்டு, பதிவுகளாக்கி இட்டமை நன்று. இவரது உழைப்பு பாராட்டத் தக்கது.

சகோதரி ஸாதிகா ஹாஜாவினை நன்றி கலந்த நல்வாழ்த்துகள்டன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்க அன்புடன் இசைந்துள்ள சகோதரி கீதமஞ்சரியினை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இவர் பெயர் கீதா மதிவாணன். பதிவுகளில் கீதா என்றே குறிப்பிட்டுக் கொண்டிருந்தவர், பதிவுலகில் பலருடைய பெயர் கீதா என்றிருப்பதால் குழப்பம் தவிர்க்க கீதமஞ்சரி என்னும் இவரது வலைப்பூவின் பெயரையே இவரது பெயராகவும் பயன்படுத்தத் துவங்கியுள்ளார். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்துள்ளார். வீட்டிலிருந்து ஒரு நல்லதொரு இல்லத்தரசியாக குழந்தைகளையும் குடும்பப் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்கிறார். இவருக்கு தமிழின்மீது தீராத காதலே உண்டு. தமிழ் மொழி, கலாச்சாரம், பாரம்பரியம், கலைகள் மீது அளவிலாப் பற்றுக் கொண்ட போதும், குடும்பநலனை முன்னிட்டு, தற்சமயம் ஆஸ்திரேலியாவில் வசித்துவருகிறார்.

கணவர் இயந்திரப் பொறியியலாளர். மகள் பன்னிரண்டாம் வகுப்பிலும், மகன் ஏழாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். கைவேலைப்பாடுகளில் இவருக்கு விருப்பம் உண்டு என்றாலும், அதைவிட எழுதுவதிலும் படிப்பதிலும் ஆர்வம் அதிகம் உடையவர்.

சகோதரி கீதமஞ்சரியினை நாளை காலை இந்திய நேரப்படி ஆறு மணி முதல் பதிவிடத் துவங்குக எனக்கூறி விடை பெறுகிறேன்.

நல்வாழ்த்துகள் ஸாதிகா ஹாஜா

நல்வாழ்த்துகள் கீத மஞ்சரி

நட்புடன் சீனா


21 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வலைச்சர ஆசிரியபொறுப்பை செம்மையாக நிறைவு செய்ததற்கு சாதிகாவுக்கு வாழ்த்துகள். புது ஆசிரியர் பொறுப்பு ஏற்கவரும் கீதமஞ்சரிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. புதிய ஆசிரியருக்கும், முந்தைய ஆசிரியர்க்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இனிய 7 நாட்கள் ஸாதிகாவிற்கு நன்றியும், கீதமஞ்சரிக்கு நல்வரவும் கூறி வாழ்த்துகிறேன். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. vazhthukkal !
    pani seythavarukkum-
    ini seypavarukkum!

    ReplyDelete
  6. வாங்க சகோதரி வாங்க..உங்களது அறிமுகங்களைக் காண ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
  7. வலைச்சர ஆசிரியராக கடந்த ஒரு வாரமாக அரும்பணியாற்றி ஸாதனை புரிந்துவிட்டு வெளியேறியுள்ள ஸாதிகா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    சாதனை என்றும் முடிவற்றது.

    அது ஒரு தொடர்கதையே.

    ஸாதிகா போனால் என்ன, நான் இருக்கிறேன் சாதனைகளைத் தொடர என சபதம் ஏற்று புதிதாகப் பதவி ஏற்க வரவிருக்கும் திருமதி கீதமஞ்சரி அவர்களை கரவொலி எழுப்பி அனைவரும் வரவேற்கக் காத்திருக்கிறோம்.

    திருமதி கீதமஞ்சரி அவர்களே!

    வாருங்கள், வாருங்கள் !!

    வருக வருக வருக

    புதுப்புது அறிமுகங்களை அள்ளித்

    தருக தருக தருக

    தங்கள் வலைச்சர ஆசிரியர் பணியும் மிகச்சிறப்பாக அமைய அன்பான வாழ்த்துகள் மேடம்.

    W E L C O M E ;)))))

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  8. அன்பு சகோதரி கீதா,
    தங்களின் வலைச்சரப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வலைச்சர் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. சகோதரி ஸாதிகாவிற்கு வாழ்த்துக்கள். நிறைய அறிமுகமில்லாத கேள்விப்படாத தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    ReplyDelete
  11. பாராட்டுக்கள் ஸாதிகா.வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.உங்களைப் பர்ரி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  12. பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறோம்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் கீத மஞ்சரி.

    ReplyDelete
  14. ஸாதிகாவின் பணி மிக அருமையானது- இன்னும் தொடர்ந்தால் நன்று எனத் தோன்றுளவுக்கு. அவருக்கு நல்வாழ்த்துக்கள்! புதிய ஆசிரியராக பொறுப்பேற்கும் தோழி கீதமஞ்சரிக்கு நல்வரவு! அழகிய அறிமுகங்களைத் தருவதற்கு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. வலைச்சர ஆசிரியர் பணியை வெகு நேர்த்தியாகவும் சிரத்தையுடனும் செய்து முடித்த ஸாதிகாவுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    என்னை வாழ்த்தி வரவேற்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் அன்பான நன்றி. தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் கீத மஞ்சரி.

    ReplyDelete
  17. சென்ற வார ஆசிரியருக்கும் இந்த வார ஆசிரியருக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்....

    ReplyDelete
  18. வாங்க கீதா மேடம்! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. //இருநூற்று நாலு பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார். இது ஒரு சாதனையாக இருக்குமென நம்புகிறேன். //

    நிச்சயமாக பெரும் சாதனை.பாராட்டுக்கள் சகோதரி .

    ReplyDelete
  20. தனது ஆசிரியப் பணியை சிறப்பாக செய்த ஸாதிகா அவர்களுக்கும், இந்த வார ஆசிரியர் கீதமஞ்சரிக்கும் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது