07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 25, 2012

நேசிப்போம்! -- (கிறுக்கல்கள் - 7)

               கடவுளின் கருணையில் கொடுக்கப்பட்டவை அனைத்தும் விசித்திரமானவை. வாழ்க்கையின் அர்த்தமே விசித்திரமாய் தோன்றிடும் பல சமயம். சந்தோஷத்தருணங்களை நினைவூட்டுகையில் அழுகை வரும் சில சமயம், வருத்தமான தருணங்கள் சிலதை நினைத்தால் சிரிப்பு வரும். சந்தோஷம், அழுகை, சிரிப்பு, கோபம், வெறுப்பு அனைத்தும் விளக்கமுடியாத மனித உணர்வுகள். 
                 இங்கு "நான்" என்று எதுவுமே இல்லை, எல்லாமே "நாம்" தான். யாருமின்றி இங்கு "நான்" மட்டும் தனித்திருக்க இயலாது. மனித உணர்வுகள் ஒவ்வொன்றும் நம்மையும் நம்மோடு இருப்பவர்களையும் சார்ந்தது. நாம் காட்டும் கோபமும், வெறுப்பும், பேசும் வார்த்தைகளும், செய்யும் செயல்களும் ஒருவரை காயப்படுத்துமெனில் அதில் நாம் அடைவது என்ன? அப்படி செய்து எதை சாதித்துவிடப்போகிறோம்? 
            நம்மை நாம் ரசிப்போமெனில் பிறரையும் நேசிக்கத்தோன்றும்! பிறரையும் நேசித்தோமெனில் அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிடுவோம். நாம் தளர்ந்து சோர்வுருகையில் நமது சூழலை உற்று நோக்கினாலே தளர்வுகள் நீங்கிவிடும். 

கோபம் கூட 
அழகு தான் 
மீண்டும் பேசிச் சிரித்திட 
நேரம் தேடுகையில்! 
வெறுப்பு கூட 
நல்லது தான் 
தனிமையை ஒதுக்க 
போரடுகையில்! 

 கடந்து செல்லும் காலமும், அதில் விழுங்கப்படும் வயதும் என்றும் திரும்பப்போவதில்லை. நாம் கடக்கும் பாதையில் நம்மை நேசிப்போம்! முழுமையாய் அனைத்தையும் நேசிப்போம்!



~~~~****~~~~

வாழ்க்கையை சுவாரஸ்யமாக்க!!!--6

எதிர்பார்ப்புகள்! என்றுமே நம்மை வீழ்த்தத்துடிப்பவையே!எதிர்பார்த்தது நடக்காவிடில் அதை ஏற்றுக்கொள்ள மனம் தடுமாறும். முதற்புள்ளி வைக்கும் முன்னே சந்தோஷமான முற்றுப்புள்ளிக்கு கனவு காண்பதை விட சிறந்த முதற்புள்ளிக்கு முயற்சி செய்வோம்!

~~~~****~~~~

 இன்றைய அறிமுகங்கள்!


26.           "அறிவைப் பகுத்து அறிவோம்" என்று அறிவைப்பற்றிய மிக அருமையான அலசலையும் அதன் வெவேறு வளர்ச்சி காலகட்டங்களையும் சொல்லியிருக்கிறார் தண்ணீர் பந்தல் வே சுப்பிரமனியன் அவர்கள்!
 --
27.             வாழ்க்கையின் எதார்த்தத்தையுன் இன்றைய அவசர உலகத்தில் நாம் தொலைத்த பழைய தருணங்களை மிட்பவையாய் "பனைமரத்திடலும் பேய்களும்!' என்று அனுபவக்கவிதையை பதிந்திருக்கும் கீதமஞ்சரி அவர்கள்!

28.            தானம் என்றால் என்ன? தானத்தில் சிறந்த தானம் எது? என்று அலசி கூறி இருக்கிறார் கடம்பவனக் குயில் அவர்கள்!

29.             "தனிமையும் தவிப்பும்" என்று தனிமையில் இருக்கையில் மாரடைப்பு வந்தால் எப்படி சமாளிப்பது என்று நதிக்கரையில் சமீரா அவர்கள் சொல்லி இருக்கியார்கள்.

30.              உழைப்பின் பெருமையை எட்டுக்கால் பூச்சியும், எரும்பும் சொல்வது போலான ரசிக்கும்படியான அழகிய கவிதையை பதிந்திருக்கும் மோ.சி.பாலன் அவரகள்.

~~~~****~~~~


வணக்கம் தோழமைகளே!
             இன்று அனைவருக்கும் சந்தோஷமான செய்தி, இன்றோடு நான் ஏற்ற வலைச்சர ஆசிரியர் பொறுப்பு நிறைவடைகிறது! அதனால் இன்று  எனக்கான நேரமிது சில நன்றிகளுக்கும் மன்னிப்புகளுக்காகவும்!!! ஒரு மாதமாக நடந்து முடிந்த பரிட்சை, மின்வெட்டு, வீடு மாற்று வேலை, மெதுவான இணைய இணைப்பு இதற்கு மத்தியில் ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு திருப்திகரமாகவே செய்துள்ளேன் என்கிற நம்பிக்கையில் வலைச்சரத்திலிருந்து விடை பெறுகிறேன்! எனது பதிவுகளில் ஏதேனும் தவறுகள் பிழைகள், குறைகள் இருந்திருந்தால் [கண்டிப்பாக இருக்கும்! ஒரு கருத்தினைச் சொல்லும் பதிவு அனைவரையும் திருப்தி படுத்திவிடாது ஒவ்வொருவரின் கண்ணோட்டமும், எதிர்பார்ப்பும் ஒவ்வொரு மாதிரி] என்னை மன்னியுங்கள் தோழமைகளே!
                   வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தது மட்டுமின்றி தினம் வலைச்சரம் வந்து என்னை ஊக்கப்படுத்தியும் சில சொந்த வேலை காரணமாக  முடியாத நேரத்தில் கேட்டவுடன் நான் அறிமுகப்படுத்திய பதிவர்களின் அண்மைய பதிவினிற்கு சென்று தகவல் கொடுத்துதவிய,  திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும், இத்தகைய நான் எதிர்பார்க்காத வாய்ப்பினை எமக்களித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும், அவ்வப்போது எனது பதிவுகளை சிரமம் பார்க்காமல் தமிழ்மணத்தில் இணைத்துக்கொடுத்த திரு.திண்டுக்கல் தனபாலன் அண்ணா அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகள்!
                        எனது பதிவுலக பயணத்தின் முதற்புள்ளியும், ஆரம்பமும் ஆனா எனது தோழி சிவரஞ்சனி சதாசிவம் -கு எனது நன்றிகள் என்றென்றும்! பொழுதுபோக்காய் ஆரம்பித்து பின்னாளில் எனது கிறுக்கலையே கொஞ்சம் செதுக்கி உயிர்பித்துக் கொடுக்க தூண்டுபவையான கருத்துரைகளை கொடுத்து, ஒரு விருதினையும் [எனது பாதையின் முதல் மைல்கல்!] கொடுத்து என்னை இந்த பதிவுலகிற்கு அறிமுகப்படுத்திய திரு. ரமணி ஐயா  அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!
                        நீங்களின்றி இந்த பதிவுலகம் இல்லை! எனது சக பதிவர்களே எனது பதிவுலக பயணத்தில் என்னோடு துணைவந்தும் எனது கிறுக்கல்களை ரசித்து அவ்வப்போது வண்ணத்தீட்டல்களால் என்னை ஊக்கப்படுத்திப்போகும் அழகிய ஓவியங்களே தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
         மேலும் என்னை அறிந்தும் அறியாமலும் பல பதிவர்கள் என்னை இந்த வலைச்சர பயணத்தில் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி எனது பயணத்தை இனிதாக அமைத்து தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மட்டுமின்றி ஒரு சிறு சிறப்பு அறிமுகம்! அதை ஏற்றுக்கொள்ளும்படி அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!
  1. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் - சிரித்து மகிழுங்கள்! - யார் முட்டாள்?
  2. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் -  யாரது???? - மனிதனின் மிகப்பெரிய எதிரி யார்?
  3. இராஜராஜேஸ்வரி அவர்கள், -ஆன்மீக உலா - தகதகக்கும் தங்கக்கோவில்!                                                                                                                                                        
  4. 2008rupan அவர்கள், - தீண்டட்டும் - என் சுவாசக்காற்றே! 
  5. 99likes அவர்கள், - தொழில் நுட்பம் 
  6. lakshmi அவர்கள், - சமையல் அறை! சாப்பிடலாம் வாங்க!
  7. Siva Ranjani அவர்கள் - வருடிவிட்டுப்போகிறது - கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும்!
  8. சேக்கனா M.நிஜாம் அவர்கள், - தேட வேண்டியது! பசுமை எங்கே? இயற்கை எங்கே? 
  9. Jaleela Kamal அவர்கள்,  - - சமையலறை - சாப்பிடலாம் வாங்க!
  10. மகேந்திரன் அவர்கள், - நம்பிக்கையை தேடி! - சிற்றிறகை விரித்துவிடு!
  11. கவியாழி கண்ணதாசன் அவர்கள், - அலசுங்கள் - மனிதனா? மனிதமா?
  12. இரவின் புன்னகை அவர்கள், - காதல் வலி - உயிர் முடிச்சு!
  13. உ ஷா அன்பரசு அவர்கள்,- நாமும் சொல்லுவோமே!- அந்த மூன்று சொற்களை நீங்களும் சொல்லுவீங்களா?
  14. கோவை2தில்லி அவர்கள்,- தீருவதில்லை - ஆடைகளின் மீது மோகம்!
  15. சிகரம் பாரதி அவர்கள், - காதல் துளி- நீ-நான்-காதல்!
  16. s.suresh அவர்கள்,- மனம் மயக்கும் ஹைக்கூ கவிதைகள்!
  17. angelin அவர்கள், - சுவாரஸ்யமான மீண்டும் பள்ளிக்கு போகலாம்:))) அந்த நாள் ஞாபகம்:)
  18. NIZAMUDEEN அவர்கள் - சிந்திக்க! - சில சிந்தனைகள்!
  19. அம்பாளடியாள் அவர்கள்,- பெண்ணை கொஞ்சம் - மணப்பெண் தேவை!
  20. Ranjani Narayanan அவர்கள் - அறிந்து கொள்வோம் - பூமி தினம்! 
  21. Sury Siva அவர்கள், - வேண்டியது- சந்தியில்!
  22. Seshadri.e.s அவர்கள், - எதார்த்தம் - முதியோர் இல்லம்!
  23. ரமணி அவர்கள், - நிஜம் - வசந்த வாழ்வு எளிதாய்ப் பெற!
  24. வெங்கட் நாகராஜ் அவர்கள், - நாவின் ருசிக்கு அல்ல - ப்ரூட் சாலட்!
  25. ezhil அவர்கள், - விடை தேடுவோம் - ரூபாய் நோட்டையா தின்னப் போறீங்க?
  26. kovaikavi அவர்கள், -  படித்துப்பாருங்கள் - கவிதை பாருங்கள்!
  27. பால கணேஷ் அவர்கள், - ருசித்திடுங்கள் - மொறு மொறு மிக்ஸர்!
  28. தி.தமிழ் இளங்கோ அவர்கள், இன்றும் அன்றும் - தங்கம் விலை- 86 வருட பட்டியல்!
  29. Sasikala அவர்கள், காதல் - காதல் தூது!
  30. Asiya Omar அவர்கள், - சமையலறை - சாப்பிடலாம் வாங்க!
  31. வே.சுப்பிரமணியன் அவர்கள், அறிவோம் - தன்னைத் தானறிதல் 
  32. சந்திரகௌரி அவர்கள் -  தொலைத்தது என்ன?- அறுபடும் வேர்களும் அந்நியமாகும் உறவுகளும்!
  33. அருணா செல்வம் அவர்கள்- யோசிப்போமே! - பெண்ணின் பெருமை!       
  34. Semmalai Akash அவர்கள் - காதல் பேசுகிறது! - முதல் பார்வை!  
  35. சே.குமார் அவர்களுக்கு நன்றி[அவரது வலைப்பூவினை அறிய முடியவில்லை! யாரேனும் சொல்லுங்கள்!]        
                      பிராஜக்ட் விஷயமாக நேற்றய திடீர் பயணத்திற்கும், தடையில்லாத மின் இணைப்பையும், அதி வேகமான இணைய இணைப்பையும் எமக்களித்து எனது ஒரு வார கால வலைச்சர பயணத்தை எளிதாக்கிய எனது கல்லூரி இன்று விடுமுறை  அதற்கு மத்தியிலும் மாட்டிகொண்டு விழிக்கிறேன் வீட்டில் மிதமான இணைய இணைப்போடும், மின்வெட்டோடும். அனைத்திற்கும் மத்தியில் திரட்டிய அறிமுகப்பதிவு இது, இங்கு அறிமுகப்படுத்தபட்ட அனைவரும் ஒரு வார காலமாக எமக்கு கருத்துரைத்து ஊக்கப்படுத்தியவர்கள்! இதில் நான் அறியாத பதிவர்களின் அறிமுகத்திற்காக அவர்களது அண்மைய பதிவுகளை மட்டுமே படித்து அறிமுகம் செய்ய முடிந்தது! தவறுகள் பிழைகள் ஏதேனும் இருந்தால் என்னை மன்னிக்கவும் தோழமைகளே!
                    அனைவரிடமும் இருந்து விடைபெறுகிறேன் (வலைச்சரத்தில் மட்டுமே). இத்தகைய வாய்ப்பினால் நான் அறியாத ஏராளமான பதிவர்களை கண்டறிய முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி! இந்த ஒரு மாத காலமாக சக பதிவர்களின் பதிவுகள் குவிந்துகிடக்கின்றன மெயிலிலும் டேஷ்போர்டிலும், அதுபோக புக்மார்க்ஸ்-ம் நீண்டு விட்டது. இனி வேறென்ன வேலை?? இதோ வந்துட்டேன்!!!!!!!!!

27 comments:

  1. 15 comments:

    kovaikkavi said...
    ''..நாம் கடக்கும் பாதையில் நம்மை நேசிப்போம்! முழுமையாய் அனைத்தையும் நேசிப்போம்!...''
    இந்த வரிகள் பிடித்தது. இன்னம் மேலே சொன்ன கருத்துகளும் அருமையாக உள்ளது.ஓ!.....நான் தான் முதலா!!!!ஆச்சரியம்!...கொஞ்சம் ரி.வி பார்த்து நானே வரப் பிந்தி விட்டது. காலையில் பார்த்த போது புதிய பதிவு வரவில்லை. இந்த வாரத்திற்கு நன்றி. அறிமுகப் பதிவர்களிற்கும் தங்களிற்கும் மீண்டும் மிகுந்த நன்றி. புதிய வேலை இனிமையாகத் தொடரட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.
    November 25, 2012 4:32:00 AM GMT+05:30

    ReplyDelete
  2. திண்டுக்கல் தனபாலன் said...
    ஒவ்வொரு தினமும் அருமையான கருத்துகளோடு பல தளங்களையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    /// நம்மை நாம் ரசிப்போமெனில் பிறரையும் நேசிக்கத்தோன்றும்! பிறரையும் நேசித்தோமெனில் அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிடுவோம். ///

    சிறப்பான வரிகளுக்கு நன்றி...
    tm1
    November 25, 2012 5:20:00 AM GMT+05:30

    ReplyDelete
  3. 2008rupan said...
    வணக்கம்
    யுவராணி தமிழரசன்

    ஒருவார காலமும் மிகவும் செம்மையாக பதிவுகளை தொகுத்து வழங்கிய விதம் அனைத்து வாசகர்களையும் கவர்ந்துள்ளது உங்களுக்கு எனது நன்றிகள் இறுதி நாள் அன்று என் தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி ,இனி உங்களின் வலைப்பூ பக்கம் சந்திப்போம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஆஹா, யுவராணி

    வணக்கம்.

    இன்று வழக்கமான ஐந்து தவிர மேலும் முப்பத்தைந்து கூடுதல் அறிமுகங்களா?

    வெரி குட் ... சபாஷ் !

    இன்று அடையாளம் காணப்பட்டுள்ள 40-1= 39 பதிவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள், அன்பான
    வாழ்த்துகள்.

    நேற்று இரவு முழுவதும் தூங்காமல் கடுமையாக உழைத்துள்ளீர்கள் எனப்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.


    மீண்டும் மீண்டும் வருவேன் >>>>>>>

    November 25, 2012 6:42:00 AM GMT+05:30

    ReplyDelete
  5. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //கோபம் கூட அழகு தான்
    மீண்டும் பேசிச் சிரித்திட
    நேரம் தேடுகையில்! //

    அழகான ஆறுதலான வரிகள். ! ;)))))

    >>>>>>>>>

    ReplyDelete
  6. இராஜராஜேஸ்வரி said...
    இராஜராஜேஸ்வரி அவர்கள், -ஆன்மீக உலா - தகதகக்கும் தங்கக்கோவில்!

    எமது பதிவை அறிமுகப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete
  7. வை.கோபாலகிருஷ்ணன் said...
    வாழ்க்கையை
    சுவாரஸ்யமாக்க!!!--6
    ======================

    எதிர்பார்ப்புகள்! என்றுமே நம்மை வீழ்த்தத்துடிப்பவையே!

    எதிர்பார்த்தது நடக்காவிடில் அதை ஏற்றுக்கொள்ள மனம் தடுமாறும்.

    முதற்புள்ளி வைக்கும் முன்னே சந்தோஷமான முற்றுப்புள்ளிக்கு கனவு காண்பதை விட

    சி ற ந் த
    மு த ற் பு ள் ளி க் கு
    மு ய ற் சி
    செ ய் வோ ம் !//

    அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    >>>>>>>>>

    November 25, 2012 6:48:00 AM GMT+05:30

    ReplyDelete
  8. தி.தமிழ் இளங்கோ said...
    கடந்த ஒரு வார காலமாக வலைச்சரத்தின் ஆசிரியையாக இருந்து நல்ல பல செய்திகளையும் பல பதிவர்களின் அறிமுகத்தினையும் தந்த சகோதரி யுவராணி தமிழரசனுக்கு நன்றி! தொடர் மின்வெட்டிற்கு இடையிலும் பல்வேறு பணிகளுகளுக்கு மத்தியிலும் பணி செய்து இருக்கிறீர்கள். நல்ல பயிற்சி!

    (தொடர்ந்து வலச்சரத்தினை படித்து வந்தேன். உடல்நலக் குறைவு காரணமாக எல்லா பதிவுகளிலும் உடனுக்குடன் கருத்துரை எழுத முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும்)

    உங்கள் பதிவினில் மீண்டும் சந்திப்போம்!
    November 25, 2012 6:58:00 AM GMT+05:30

    ReplyDelete
  9. வை.கோபாலகிருஷ்ணன் said...
    தங்களால் இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ள பதிவுகள் யாவும்

    த க த க க் கு ம்

    த ங் க க் கோ வி ல் !

    போலவே ஜொலிக்கின்றன. ! ;)))))
    November 25, 2012 7:01:00 AM GMT+05:30

    ReplyDelete
  10. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //துணைவந்தும் எனது கிறுக்கல்களை ரசித்து அவ்வப்போது வன்னத்தீட்டல்களால் என்னை ஊக்கப்படுத்திப்போகும் அழகிய ஓவியங்களே தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!//

    ”வன்னத்தீட்டல்களால்”

    என்பதற்கு பதிலாக

    ”வண்ணத்தீட்டல்களால்”

    என்று இருந்தால் இன்னும்

    ஓவியங்கள் பளிச்சென்று

    இருக்கும் யுவராணி.


    முடிந்தால் மாற்றி விடுங்கோ, ப்ளீஸ்.

    ஓவியங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனாலேயே இந்த்ச்
    சின்னத் திருத்தத்தினைச் சுட்டிக் காட்டியுள்ளேன்.

    VGK

    >>>>>>>>>>
    November 25, 2012 7:08:00 AM GMT+05:30

    ReplyDelete
  11. வை.கோபாலகிருஷ்ணன் said...
    சொன்னதும் தட்டாமல் வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை துணிச்சலுடன் ஏற்றுக்கொண்டு, கடந்த ஒரு வாரமாக மிகச்சிறப்பாகவே பணியாற்றி,பல்வேறு பதிவர்களையும் அவர்களின் வலைத்தளங்களையும் [அறிமுகப்படுத்தி]
    அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளீர்கள்.

    இன்றைய சிறப்பு அறிமுகம் என்ற பகுதியும் மிகச்சிறப்பாகவே அமைத்துள்ளீர்கள்.

    அதில் என்னுடைய நகைச்சுவைச் சிறுகதையான “யார் முட்டாள்” என்பதனை அறிமுகம் செய்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    எதை எழுதினால் மிகவும் அழகாகவே, ஆர்வமாகவே, முழு ஈடுபாட்டுடன் எழுதுகிறீர்கள்.
    மகிழ்ச்சியாக உள்ளது.

    இருப்பினும் ஆங்காங்கே ஒருசில எழுத்துப்பிழைகள் மட்டுமே காண முடிகிறது. அதற்கும் E & O E என்பதுபோல தினமும் கடைசியில் சொல்லிவிடுகிறீர்கள்.

    ஒருசில எழுத்துப்பிழைகளை என் கண்களுக்குப்பட்டவரை இதுவரை தங்களுக்கு மெயில் மூலம் சுட்டிக் காட்டியுள்ளேன்.

    வலைச்சரத்தில் மட்டுமல்லாது தங்களின் பதிவுகளிலும் ஆங்காங்கே சிற்சில எழுத்துப்பிழைகளை நான் காண்கிறேன்.

    அவற்றை மட்டும் கொஞ்சம் சிரமப்பட்டு, தாங்கள் திருத்திக்கொண்டால், போதும். உங்களுக்கு தமிழ் எழுத்துலகில் மிகப்பிரகாசமான எதிர்காலம் நிச்சயம் உண்டு.

    அதற்கு என் அன்பான ஆசிகள்.
    வாழ்த்துகள்.

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    யு வ ரா ணி !


    என்றும் அன்புடன் தங்கள்
    VGK
    November 25, 2012 7:25:00 AM GMT+05:30

    ReplyDelete
  12. வே.சுப்ரமணியன். said...
    //இங்கு "நான்" என்று எதுவுமே இல்லை, எல்லாமே "நாம்" தான்.// ஒட்டுமொத்த ஜென் தத்துவங்களையே அசைத்துப்பார்க்கும் வரிகள்!

    அனைத்து அறிமுகங்களுமே மிக மிக திறமையானவர்கள்!

    ஏற்கனவே விருதின் மூலம் என்னை உற்சாகப்படுத்திய தாங்கள் தற்பொழுது வலைச்சரத்திலும் என்னை அறிமுகப்படுத்தி, பெரும் ஊக்கம் கொடுத்திருக்கிறீர்கள்! எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள்!

    தங்களது கற்றலுடன் யாவும் சிறக்க வாழ்த்துக்கள்! நன்றி!
    November 25, 2012 8:36:00 AM GMT+05:30

    ReplyDelete
  13. மஞ்சுபாஷிணி said...
    தொடர்ந்து வலைச்சரத்தில் ஆசிரியர் பணி ஏற்று சிறப்பாக அழகாக தொகுத்து வழங்கிய அன்புத்தோழி யுவராணிக்கு என் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா... தொடர்ந்த வேலைப்பளு அதனால் வர இயலவில்லை..

    அருமையான தளங்கள் நீங்கள் அறிமுகப்படுத்தியவை அத்தனையும் அற்புதமானவை....

    வலைச்சர ஆசிரியர் பணி தொய்வில்லாமல் எத்தனை இடையூறு இருந்தாலும் மின்வெட்டு வீடுமாற்றும் வேலை பரிட்சை சமயம் எல்லாவற்றிலும் சிறப்பாக அழகாக செய்தமைக்கு யுவராணிக்கு அன்புநன்றிகள்.....

    அறிமுகப்படுத்தப்பட்ட அத்தனை சிறப்பான அன்பு உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...
    November 25, 2012 10:24:00 AM GMT+05:30

    ReplyDelete
  14. middleclassmadhavi said...
    Well done! Congrats.
    November 25, 2012 10:53:00 AM GMT+05:30

    ReplyDelete
  15. வெங்கட் நாகராஜ் said...
    வலைச்சரத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு பாராட்டுகள்.
    November 25, 2012 1:02:00 PM GMT+05:30

    ReplyDelete
  16. அனைவருக்கும் வணக்கம்!

    காலை பதிவிட்டதில் சிறு பிரச்சனை காரணமாக மதியம் அதையே மறுபடியும் பதிவு செய்யும்படி ஆகிவிட்டது! அதனால் மதியம் வரை கருத்துரை இட்டவர்களின் கருத்தினை அப்படியே கட் காபி செய்துள்ளேன் எந்த திருத்தமும் நான் இதில் செய்யவில்லை என்பதை இங்கே தெரிவிக்கிறேன்!

    ReplyDelete
  17. கோபம் கூட
    அழகு தான்
    மீண்டும் பேசிச் சிரித்திட
    நேரம் தேடுகையில்!
    வெறுப்பு கூட
    நல்லது தான்
    தனிமையை ஒதுக்க
    போரடுகையில்!
    சிறப்பாக தங்கள் பணியை செம்மையாக செய்து முடித்த விதம் பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  18. ஏற்றுக்கொண்ட பணியினை சிறப்பாக நிறைவேற்றியமைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துகள்

    ReplyDelete
  19. நேசமின்றி வாழ்வில் வாசமேது .நேசம் வேண்டும்//http://kaviyazhi.blogspot.com/2012/08/blog-post_141.html
    இதையும் படியுங்களேன்

    ReplyDelete
  20. நீங்கள் செய்த பணிகள் மூலம் சேவையில் உயர்ந்து நிற்கிறீர்கள் !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  21. ஒரு வார கடும் உழைப்பு; சிறப்பான பணி. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. வலைச்சர வாரத்தின் இறுதிப் பகிர்வை கலக்கலாக முடித்துள்ளீர்கள்.

    வாழ்த்துக்கள்...

    வேலைப் பளூவின் காரணமாக உங்கள் பகிர்வுகளைத் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. நேரம் கிடைக்கும்போது வலைச்சரத்தின் மூலம் மீண்டும் வாசித்து விடுகிறேன்.

    ReplyDelete
  23. வலைசரத்தில் என்னை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி யுவராணி!!
    என்னைபோல அறிமுக படித்திய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தங்கையே!!

    பல புதிய வலைப்பூக்களை அறிய முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி!!
    உங்களை எழுத்துக்கள் ரசிக்கும் படி உள்ளது!! வாழ்த்துக்கள் யுவராணி!!

    ReplyDelete
  24. எதிர்பார்ப்புகள் குறித்து நீங்கள் கூறியது சரியே. எதிர்ப்பார்ப்புகள் இருந்தால் ஏமாற்ற்ங்கள் இருக்கும். அதுவே நம் கடமையை செய்துகொண்டேயிருந்தால் அது என்றாவது பலனளிக்கும் நன்றி

    ReplyDelete
  25. சிறப்பாக பணியாற்றிய தங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. நிறைய அறிமுகங்களை பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  27. அன்புள்ள யுவராணி,
    உங்கள் வலைச்சர வாரத்தில் என் பூமி தினத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி. ஊரில் இல்லாததால் இந்த தாமதமான நன்றி அறிவிப்பு.மன்னிக்கவும்.

    பல இடையூறுகள் நடுவில் சிறப்பாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தி உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது