07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 11, 2012

கல்வி + அறிவு = வாழ்க்கை!

கல்வி என்றால் என்ன?
கல்வியை கல்விநிலையங்களில் மட்டும்தான் பெறமுடியுமா?
அச்சடித்த காகிதங்களிலும்..
வாங்கும் மதிப்பெண்களிலும்..
வைத்திருக்கும் பட்டங்களிலும் தான் கல்வி இருக்கிறதா?

நகலெடுக்கும் இயந்திரங்களா மாணவர்கள்?
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளா மாணவர்கள்?

கல்விச் சாலைகள் கூடா? கூண்டா?
பறவைகள் கட்டும் கூட்டில் அவற்றுக்கு சுதந்திரம் இருக்கும்.
கிளிகள் வாழும் கூண்டுக்குள்..???கல்வியால் கிடைக்கும் அறிவு வாழ்க்கைக்குப் பயன்படும்போது அந்த வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கையாக அமைகிறது. அந்த வாழ்க்கை தரமான நல்லதொரு சமூகத்தை உருவாக்கத் துணைநிற்கிறது!

கல்வி என்பது படிக்கும் ஏட்டில் மட்டும் இல்லை!
நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் இருக்கிறது என்றே நம்புகிறேன்.

கல்விச் சாலைகள் திறக்கப்படும்போது 

சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன'


என்ற சிந்தனையோடு இன்று கல்விகுறித்த தேடல்மேற்கொண்ட பதிவுகளைக் காணப்போகிறோம்.

41.உஷா அன்பரசு அவர்களின் எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் என்ற இடுகை ஒவ்வொரு பெற்றோர்களும், ஆசிரியர்களும் படிக்கவேண்டிய சிந்தனைகளை உள்ளடக்கியதாக உள்ளது.

42. எழுந்துநில் விழித்துக்கொள் என்ற வலையில் இடம்பெற்றுள்ள இன்றைய கல்வி என்ற பதிவு கல்வியின் பரிணாம வளர்சி்யை அழகாக எடுத்துச்சொல்லுகிறது.

43. முனுசாமி அவர்கள் வன்னகம் என்ற வலைப்பதிவில் இன்றைய கல்விமுறை என்ற கட்டுரையில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் இளங்கலை பட்டம் பெற்ற ஒருவரது அறிவு இன்று முதுகலை பட்டம்பெறும் ஒருவருக்கு வருவதில்லை என்ற ஆற்றாமையைப் புலப்படுத்திச்செல்கிறார்.

44. சாளரம் என்ற வலைப்பதிவு காலந்தோறும் கல்வியின் படிநிலைகளை இந்தியக் கல்விவரலாறு என்ற தலைப்பில்அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது.

45. அருண்ஜோசப் அவர்கள் புதிய கல்விமுறை பற்றிக் கூறும்போது “பள்ளிகளில் பாடங்களை எந்திரகதியாக உரத்த குரலில் படிக்கும் குழந்தைகள், அவற்றின் அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்வதில்லை. இதனால் அவர்களுக்கு அடுத்தடுத்து புத்தகங்களைத் தேடிப் படிக்கும் ஆர்வம் வருவதில்லை“ என்ற உண்மையைப் புலப்படுத்திச்செல்கிறார்.

46. அவர்கள் எழுத்தறிவு குறித்த புள்ளிவிவரங்களை அழகுபட மொழிந்துசெல்கிறார்.

47. மு.சுந்தரபாண்டியனின் ஆழ்கடல் என்னும் வலைப்பதிவில் மூன்றே வரிகளில் அறிவைத் தேடுவதைவிடக் கடினமானது எதுஎன்று சொல்லியிருக்கிறார்.

48. மதுரை சரவணன் அவர்களின் எது விழுமியம் தரும் கல்வி என்பதை அடையாளப்படுத்தியிருக்கிறார்.

49. என் இராஜபாட்டை இராஜா அவர்களின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனத்திற்கு என்னும் பதிவு பெற்றோர்களும் மாணவர்களும் படித்து உணரவேண்டிய பதிவாக உள்ளது.

50. சம்பத் அவர்களின் தமிழ்பேரண்ட்ஸ் என்னும் வலையில் குழந்தைகளின் வளர்ப்பு குறித்த பல்வேறு தகவல்களைத் தொடர்ந்து வழங்கிவருகிறார்.


இந்த உலகம் ஒரு விசித்திரமான பள்ளிக்கூடம்
இங்கு பாடம் நடத்தியபிறகு தேர்வுவைப்பதிலை
தேர்வு வைத்தபிறகு பாடம் சொல்லித்தரப்படுகிறது

என்ற சிந்தனையை இன்று தங்கள் முன்வைக்கிறேன்.

23 comments:

 1. இந்த சிறியவனின் வலை தளத்தையும் அறிமுக படுத்தியமைக்கு நன்றி

  ReplyDelete
 2. சிறப்பான தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 3. வணக்கம்
  இரா,குணசீலன்(சார்)

  இன்றைய பதிவானது கல்வி-அறிவு-வாழ்க்கை பற்றியது,அதிலும்
  (கல்விச் சாலைகள் திறக்கப்படும்போதுசிறைச்சாலைகள் மூடப்படுகின்றன')
  நல்ல கருத்து அனைத்து தளங்களும் எனக்கு புதியவை, வாழ்த்துக்கள் சார்
  அனைத்து பதிவுகளையும் தொடருகிறேன்,,,,,

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. புதிதாய் வலைப் பதிவு பக்கம் வந்திருக்கிறேன், அறிமுக படுத்தி முகவரி தந்துள்ளீர்கள். மிக்க நன்றி!

  ReplyDelete
 5. இந்த உலகம் ஒரு விசித்திரமான பள்ளிக்கூடம்
  இங்கு பாடம் நடத்தியபிறகு தேர்வுவைப்பதிலை
  தேர்வு வைத்தபிறகு பாடம் சொல்லித்தரப்படுகிறது

  என்ற சிந்தனையை அழகுற தந்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. இன்றையப்பகிர்வு எல்லோருக்குமே பாடமாய்....

  கல்வி இருந்து அனுபவ அறிவு இல்லை என்றால் தோல்வியின் தழுவல் வெகு சீக்கிரம்...

  அனுபவம் இருந்து கல்வி இல்லை என்றால் வெற்றியின் இலக்கைத்தொட்டுவிடும் தூரம் தான் முயற்சி இருந்துவிட்டால்...

  கல்வியும் அறிவும் இருந்துவிட்டால் வாழ்க்கையில் என்றும் ஏறுமுகம் தான்...

  ஏட்டுப்படிப்பு மட்டுமே கல்வி இல்லை என்றும்.... நிகழப்படும் ஒவ்வொரு அனுபவத்தில் இருந்து நாம் பெறும் பாடங்கள் பலகோடி என்றும் அறியப்பெற்றேன்பா...

  கல்வி என்றால் சொல்லுவதை திருப்பிச்சொல்லும் கிளிப்பிள்ளைகளாக இன்றையக்கல்வியை சுட்டிக்காட்டி அதுவா? இல்லை பிள்ளைகளின் சிந்தனையைத்தூண்டி நல்வழிப்படுத்தி எதிர்க்காலத்தை தானே தீர்மானிக்கும் அளவுக்கு அறிவை மேம்படுத்தும் மிக அற்புதமான பணியை கல்வி செய்கிறது என்பதை சிறப்பாகச்சொன்ன பகிர்வு குணசீலா....

  அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து தளங்களும் கல்வியின் ஊற்றாகவே இருக்கிறதுப்பா...

  இன்றைய சிந்தனை என்னவாக இருக்கும்....

  உலகத்தை பள்ளிக்கூடமாகவும்... ஒவ்வொரு அனுபவம் என்னும் தேர்வில் இருந்து நாம் பெறும் பாடம் தான் அடுத்ததாய் நாம் எடுத்துவைக்கும் அடி இன்னும் கவனமாகக்கொள்ளவைக்கிறது என்று சொன்னது மிக அருமை குணசீலா...

  மிக சிறப்பான பகிர்வு இன்றையப்பகிர்வு குணசீலா...

  பிள்ளைகளுக்கு எந்த வகையான கல்வி ஆசுவாசம், அறிவு, பண்பு, வெற்றி என்று பகிர்ந்தமைக்கும், அறிமுகப்படுத்தப்பட்ட தளங்களின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், இன்றைய சிறப்பான சிந்தனை முத்துக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் குணசீலா...

  ReplyDelete
 7. அன்பின் குணா

  அருமையான சிந்தனையில் விளைந்த கருத்து - வாழ்க்கை என்னும் பள்ளி தேர்வை நடத்திய பிறகு பாடம் சொல்லிக் கொடுக்கிறது. என்ன அருமையான கருத்து - கல்வி தொடர்பான பதிவு நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 8. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் இராஜா.

  ReplyDelete
 9. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் சுரேஸ்

  ReplyDelete
 10. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ரூபன்.

  ReplyDelete
 11. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் உஷா அன்பரசு.

  ReplyDelete
 12. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் இராஜஇராஜேஸ்வரி.

  ReplyDelete
 13. தங்கள் ஆழ்ந்த வாசித்தலுக்கும் நீண்ட மறுமொழிக்கும் நன்றிகள் மஞ்சுபாஷிணி.

  ReplyDelete
 14. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் சீனா ஐயா.

  ReplyDelete
 15. கல்விச்சாலை திறக்கப் படும் போது மனித நேயமும் திறக்கப் படுகிறது.(சிறக்கிறது).
  நல்ல பதிவு. மிக்க நன்றி.அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 16. வணக்கம் முனைவரே...
  இன்றைய தலைப்பும் அதற்கான விளக்கமும்..
  அதன் சிறப்பை சொல்லும் பதிவர் அறிமுகமும்
  நெஞ்சில் நிறைந்தது....

  கத்தி,அரிவாள்,வேல்கம்பு என
  கையில் தூக்கிக்கொண்டு அலைந்த மானிடரை
  சிந்தையை ஒருமுகப்படுத்து
  உன் உணர்வுகளை கட்டுப்படுத்து
  மந்தையில் நிற்கும் ஆடுகளாய் இல்லாது
  சிந்தனையை சீர் செய் என
  நம்மை வடிவாக்கியது கல்வி அல்லவா.....

  அதன் சிறப்பை கூறி தங்கள் வலைச்சரப் பணியை
  சிறப்பாக முடித்துள்ளீர்கள்...

  என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் முனைவரே...

  ReplyDelete
 17. அதிக மின்வெட்டால் உடனே வரமுடியவில்லை...

  அனைத்தும் சிறந்த தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  வலைச்சரப் பணியை சிறப்பாக முடித்துள்ளீர்கள் முனைவரே... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 18. அழகான பதிவு. கல்வி பற்றிய அற்புதமான சிந்திக்க வைக்கும் சில விளக்கங்கள். எல்லாமே அருமை தான்.

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 19. நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

  ReplyDelete
 20. தீபத்திருநாளில் எல்லா வளமும் செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்க
  என இத்திருநாளில் வாழ்த்துகிறேன்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது