07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 6, 2012

தேன் மதுரத் தமிழோசை


    முகமூடிகளையே அணிந்து அணிந்து 
    தன் முகம் மறந்த அப்பாவியாய் தமிழன்

    வளர்க்கும் வீட்டுக்காரனுக்குப் பயன்படாமல் 
    பக்கத்துவிட்டில் காய்காய்க்கும் கொடியாய் தமிழன்

    தன் வீடு தீப்பற்றி எறிய 
    எதிர்வீட்டில் தண்ணீர் ஊற்றும் பேதையாய் தமிழன்

    நுனிக் கிளையிலிருந்து கொண்டு 
    அடிக்கிளையை வெட்டும் அறிவாளியாய் – தமிழன்

    தன் வீடு இருளில் கிடக்க 
    எதிர் வீட்டுக்கு விளக்கேற்றும் புத்திசாலியாய் – தமிழன்

    பிறமொழி கலவாத் தமிழில் ஒரு நிமிடம் பேச 
    உன்னால் முடியுமா? என்று கேட்டால் 

    திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து 
    திருதிருவென விழிக்கும் குழந்தையாய் – தமிழன்

    சரி! தமிழில் தான் உன்னால் பேசமுடியவில்லை 
    ஆங்கிலமாவது தமிழ் கலக்காமல் பேசுவாயா? என்றால் 

    பெருங்கல்லை இவன் தலையில் வைத்ததுபோல 
    நொந்துபோய் பார்க்கிறான் – இன்றைய தமிழன்

    இப்படியொரு தலைமுறை இப்போது உருவாகியுள்ளது
    பொய்யில்லை
    வகுப்பறையில் ஆங்கிலத்தில் சுற்றறிக்கை வாசித்தால் 
    ஆசிரியரை வியப்போடு பார்க்கிறார்கள்
    அக்கம்பக்கத்து மாணவர்களிடம் 
    என்ன ஏது என்று வினவுகிறார்கள்

    சரி இளந்தலைமுறைதான் இப்படியென்றால் 
    பழைய தலைமுறையைப் பார்த்தால்

    பழம்பெருமை பேசிப்பேசியே 
    உணர்ச்சிவசப்பட்டுக்கிடக்கிறார்கள். 

    அறிவியல் மண்ணை அளந்து 
    விண்ணை அளந்து 
    அளக்க இடம் கேட்டு நிற்கும்போது 
    இவர்கள் யாரோ கண்டறிந்த பொருள்களுக்கு 
    என்ன பெயர் வைக்கலாம் என்று 
    பட்டிமன்றம் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்


    தமிழ்பேசுவதே இழிவெனக் கருதும் இளந்தலைமுறை
    தமிழ்மட்டும் தான் மொழி என்று கருதும் பழைய தலைமுறை! 

    இவ்விரண்டுக்கும் நடுவே இவர்களுக்கு இடைப்பட்ட தலைமுறை பிறமொழி பேசாமல் தமிழ்பேச முயன்று சமூகத்தி்ல் தமிழை இன்று நாம் தொடர்புகொள்ளும் இணையஉலகத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்

    தமிழின் சிறப்புகளை இயம்பும் பதிவுகளை இன்று காண இருக்கிறோம்..

    1.தேன்மதுரத் தமிழோசை என்றவலைப்பதிவின் வாயிலாக        என் தமிழை உலகமே கேள் என சத்தமிட்டுச் சொல்லும் கிரேஸ் அவர்களின் பதிவை வாசிக்கும்போது பாரதியின்,

    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
    இருந்ததும் இந்நாடே - அதன்
    முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
    முடிந்ததும் இந்நாடே - அவர்
    சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
    சிறந்ததும் இந்நாடே - இதை
    வந்தனை கூறி மனதில் இருத்தி என்
    வாயுற வாழ்த்தேனோ - இதை
    வந்தே மாதரம் வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ?

    என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

    2. தமிழா தமிழா என்ற வலையில் எழுதும்                   காஞ்சனாஇராதாகிருஷ்ணன் அவர்களின் தமிழுக்கும் அமுதென்றுபெயர் என்ற இடுகை தமிழின் சிலேடை நயத்தை இனிமையாக விளக்கிச்செல்கிறது. இன்றைய இரட்டை அர்த்தத்தில் பேசுவோருக்கெல்லாம் சிலேடை என்றால் இதுதான் என்பதை உணரச்செய்வதாக இவ்விடுகை அமைகிறது..

    3உன் குழந்தையை ஆங்கில பள்ளியில் சேர்க்கும் வேளையில் முத்தமிழ் அன்னையை முதியோர் இல்லத்தில் விட்டுவிடாதே! 
    தமிழை வளர்க்க தவறினாலும் தேய்ந்து போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்... இது நம் தாய்மொழியல்லவா நண்பா...
    உன்னையும் என்னையும் விட்டால் தமிழ்த் தாய்க்கு வேறு பிள்ளைகள் இல்லை என்பதை உணர்ந்து கொள் நண்பா என்று அன்புடன் உரைக்கும் காத்திக்கின் கிறுக்கல் என்னும் வலைப்பதிவில் தாய்மொழி தமிழின் பெருமை நாம் காணவேண்டிய இடுகையாகும்.
    4. அந்திமாலை என்ற வலைப்பதிவு நாளொரு திருக்குறளை குறள்காட்டும் பாதை என்ற தலைப்பில் வெளியிட்டுவருகிறது. திரட்டிகளில் எப்போது இவ்வலைப்பதிவு கண்ணில் பட்டாலும் சென்று படித்துவிடுவது எனது வழக்கம்.

    5. தென்றல் என்னும் வலைப்பதிவில் எழுதிவரும் அன்பர் ஜெயராஜன் அவர்களைப் பலரும் அறிந்திருப்பீர்கள். தமிழின் நயத்தை கதைகள்,பொன்மொழிகள், சிந்தனைகள் என பல்வேறு தலைப்பின் கீழ் நாள்தோறும் தருகிறார்.  பேசுதல் என்ற இடுகையைத் தங்கள் பார்வைக்காகத் தருகிறேன்.

    6. அன்புநண்பர் குமரன் அவர்களின் கூடல் என்னும்  
     வலைப்பதிவில் அவர் தமிழ் இலக்கியமரபுகளை அழகாகப் பதிவுசெய்துவருகிறார்.  எனக்கு அவர்வலையில் மிகவும் பிடித்தது பாரி என்ற தொடராகும்.
                      
     7. இரா.கி ஐயா அவர்களின் வளவு என்னும் வலைப்பதிவில் 
      தமிழ்ச்சொல்லாக்கம் குறித்த பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளைக்    
      காணமுடியும்.

      8. நயனம் என்றவுடன் என்நினைவுக்குவருவது சிலப்பதிகாரம் அந்த  
      அளவுக்கு மனதில் பதியும்விதமாக சிலம்பை மட்டுமின்றி தமிழின்  பெருமைகளை நயம்பட எடுத்துரைக்கிறது இந்த வலைப்பதிவு.

      9. திருக்குறள் என்னும் வலைப்பதிவு மைக்ரோ-டிவிட்டர் என்று  
     திருக்குறளை அழைக்கலாமா என்று ஆராய்ச்சி செய்கிறது.

        10. சுப.நற்குணன் அவர்களின் திருந்தமிழ் என்னும் வலைப்பதிவின்  வழியே நான் பல தமிழ்ப்பதிவர்களை அறிந்துகொண்டேன்.  இணையம்  வழி தமிழ் கற்றல் கற்பித்தல் என்னும் தொடர்பதிவு இவரது   தமிழ்பற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.


என்ற சிந்தனையை இன்று தங்கள் முன்வைக்கிறேன்.

..../\.....நாளை சந்திப்போம்..../\.....


51 comments:

  1. அமுதத்தமிழ் பற்றிய அழகான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. பண்ணு தமிழ் பிரமாதம்!!

    ReplyDelete
  3. வலைச்சரப் பணியை இரண்டாம் முறையாக ஏற்றிருக்கும் முனைவருக்கு முதற்கண் வாழ்த்துக்கள்!

    பல, நல்ல பதிவர்களை,இங்கே சுட்டியுள்ளீர்! நன்றி! முதுமையின் காரணமாக முன்போல் எழுதவோ வலைகளைப் படிக்கவோ மறுமொழி இடவோ அதிகம் இயலவில்லை முடிந்த அளவு இயங்குகின்றேன்! தொய்வின்றி தங்கள் பணி தொடரட்டும்!

    ReplyDelete
  4. தமிழின் பெருமையை உணர்த்தும் விதமாக பதிவு உள்ளது. நன்றி முனைவர் அவர்களே.

    ReplyDelete
  5. தமிழில் தோய்ந்து நற்றமிழ்த் தளங்களை எடுத்துரைத்திருக்கிறீர்கள் முனைவரே. கடைசியில் குறிப்பிட்டிருப்பதைப் படிக்க முடிந்தது. மிக ரசித்தேன். அருமை.

    ReplyDelete
  6. 'பண்ணு' தமிழ் வேண்டாம் தான்! அப்படியே பேசிப்பேசி பழகிவிட்டது. மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன். என் குழந்தைகளுக்கும் சொல்லுகிறேன். புதிதாக கண் திறந்தது போல இருக்கிறது.

    உங்களால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இனிய தமிழ் வலைகளறிமுகங்கள்.
    மிக நன்று நன்று.
    இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
  8. தங்கத்தமிழ் அறிமுகங்கள் சிறப்பு.

    ReplyDelete
  9. அனைத்தும் சிறந்த தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    த.ம.5

    ReplyDelete
  10. நல்ல பதிவு முனைவரே
    நீங்கள் கவிதையில் சொன்னதுதான் சரி
    இலக்கியமாக
    இலக்கணப் பிறழாமல்
    பேசவோ எழுதவோ முயற்ச்சிக்க வேண்டாம்
    குறைந்தது தமிழை தமிழாய் பேச எழுத கொண்டாலே போதும்

    பிரஞ் ,ஜப்பானீஸ் ,சைனீஸ் நாட்டில் மொழி பற்றுபோல்

    இது நம்மிடையே துளிகூட இல்லை

    ReplyDelete
  11. அருமையான பதிவு . மனித மூளையின் சிறப்பை தெளிவாக உணர்த்தும் கடைசி படம் மிக அருமை .

    ReplyDelete
  12. தமிழின் சிறப்பை தரும் தளங்களை தேடி பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி! தொடருங்கள்!

    ReplyDelete
  13. வணக்கம்
    இரா.குணசீலன் (சார்)

    1ம் நாளைப் போல 2ம் நாளும் அனைத்துப்பதிவுகளும் அழகான தமிழ் நயமிக்க பதிவுகள் படிப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் (சார்) 03ம் நாளும் சிறப்பாக பதிவுகள் அமைய எனது வாழ்த்துக்கள் (சார்)

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. தமிழை நேசிப்பவரால் தான் தமிழை இத்தனை அழகாய் வெளிப்படுத்த இயலும்....

    தமிழை பேசினாலே போதும் என்ற நிலை....

    பண்ணு வேண்டாம் தமிழிலேயே பேசுங்க என்று சொல்லும் நயம் மிக சிறப்பு...

    குணசீலனுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து தளங்களின் அன்பு உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்...

    ReplyDelete
  15. நாம் செய்து வரும் சிறிய தமிழ்த் தொண்டைப் பாராட்டியதோடு மட்டும் நின்று விடாமல் 'வலைச்சரத்தில்' ஏனைய தமிழ் உள்ளங்களுக்கும் எமது தளத்தை அறிமுகம் செய்து வைத்த முனைவர்.இரா. குணசீலன் அவர்களுக்கும், எமது தளத்திற்கு வருகை தந்து எம்மைப் பாராட்டிய அனைத்து வாசக உள்ளங்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.

    "ஒன்றுபட்டு உயர்வோம்"
    இ.சொ.லிங்கதாசன்
    ஆசிரியர்
    www.anthimaalai.dk

    ReplyDelete
  16. அன்பின் குணா - அருமையான பதிவு - பன்ணு தமிழ் - மாறுமா ? மாற்ற வேண்டும் - முயல்வோம். அனைத்து அறிமுகப் படுத்தபப்ட்ட தளங்களையும் சென்று பார்ப்போம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  17. அன்பின் குணா - இறுதியில் தாய் மொழியின் சிறப்பு அருமை. மனைதனின் மூளை வேலை செய்யும் முறை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. அன்பின் குணா - அருமையான அறிமுகங்கள் - சென்று பார்த்தேன் - மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  19. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி புலவரே

    ReplyDelete
  20. தங்கள் வருகைக்கு நன்றி சரண்சக்தி.

    ReplyDelete
  21. அழகாகச் சொன்னீ்ர்கள் செய்தாலி

    ReplyDelete
  22. மகிழ்ச்சி விஜய்பெரியசாமி.

    ReplyDelete
  23. நண்பர் திண்டுக்கல் தனபாலன் இங்குவந்து பார்த்தபின், என் வலைப்பதிவிற்கும் வந்து முன்னிகை (comment) அளித்தார். அவரின் அறிவுறுத்தலுக்குப் பின் நானும் இங்கு வந்து பார்த்தேன். ”வளவு” என்னும் என் வலைப்பதிவை இங்கு தாங்கள் குறிப்பிட்டுப் பரிந்துரைத்ததற்கு நன்றி. தங்களுடைய வலைப்பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
  24. மகிழ்ச்சி மஞ்சுபாஷினி.

    ReplyDelete
  25. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீனா ஐயா.

    ReplyDelete
  26. தமிழ் மணக்கிறது அறிமுகங்களில்

    ReplyDelete
  27. சிறந்த பகிர்வு.
    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி இராமகி ஐயா.

    ReplyDelete
  29. எளிய தமிழ் இனிமையாக இருக்கிறது.

    ReplyDelete
  30. வணக்கம் முனைவரே...
    வலைச்சர ஆசிரியர் பணி ஏற்றமைக்கு
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    தமிழே தமிழின் சுவை கூறியதுபோல இருக்கிறது...
    தங்கள் தமிழைக் கண்டு மயங்கி இருந்த வண்டாம்
    எங்களுக்கு இன்னும் சில தமிழ் மலர்களை
    அடையாளம் காட்டியமைக்கு நன்றிகள் பல..
    பணி சிறக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  31. மிக்க மகிழ்ச்சி கவிஞர் மகேந்திரன்.

    ReplyDelete
  32. நல்ல பதிவு நண்பரே !! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. பண்ணு வேண்டாம் தமிழிலேயே பேசுங்க என்று சொல்லும் நயம் மிக சிறப்பு.

    அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து தளங்களின் அன்பு உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. பண்ணு தமிழ் நமக்கு தேவையா? என்ற படத்தை நிறைய இடங்களில் பதாகையாக வைக்கலாம். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது