07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, November 3, 2012

எங்கள் சரவெடி 6


                   
58)  அழியாச்சுடர்கள் அவர்களே சொல்லியுள்ள படி நவீன இலக்கியக் கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம். தமிழின் அத்தனை இலக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இங்கு படிக்கலாம். உண்மையிலேயே பெட்டகம்தான். ஒருமுறை பார்த்துவிட்டு போதும் என்று சொல்ல முடியாத தளம்.
               
59)  kashyapan மிக மூத்த பதிவர்களில் ஒருவர். தீக்கதிர் பத்திரிகையில் சப் - எடிட்டராக இருந்தவர். அரசியல் மற்றும் தனது பொதுவான கருத்துகளை இவர் தனது தளத்தில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். பின்னூட்டத்தில் சம்பந்தப் பட்டவர்களை விளிக்கும்போது அவர்கள் பெயரைச் சொல்லி 'அவர்களே' என்று அழைத்துதான் தன் கருத்துகளைச் சொல்வார். (உதாரணம் "அப்பாதுரை அவர்களே..."). கற்றுக் கொள்ள வேண்டிய, எங்களால் பின்பற்ற முடியாத (!), பாடம்.
               
60)  முன்னர் அன்பே சிவம் என்ற பெயரிலும் இப்போது ரேகா ராகவன் என்ற பெயரிலேயேயும் வலைப்பூ நடத்துகிறார். ஒருபக்கக் கதைகள், கவிதை இவர் பக்கத்திலிருந்து!
           
61)  இலக்கியம் : பெயரே தளத்தின் நோக்கத்தைச் சொல்லும். இலக்கியத்தில் மூழ்க இந்தப் பக்கத்துக்குச் செல்லலாம். சீனத்து இலக்கியப் பட்டு என்ற இந்தப் பதிவு படிக்க, ரசிக்க. மறைந்த எழுத்தாளர் சூடாமணிக்கு அஞ்சலி. 
            
62)  உப்புமடச் சந்தி... வானம் வெளித்தபின்னும் ஹேமாவின் இன்னொரு தளம்.கட்டுரைகள், ரசித்தவை, மருத்துவக் கட்டுரை என்று பல்வேறு விஷயங்களும் எழுதுகிறார். புகைப் படம் ஒன்றைக் கொடுத்து 'எங்களை' எல்லாம் கவிதை எழுத வைத்தார்!
           
63) சித்தர்கள் இராச்சியம் சித்தர்களைப் பற்றிச் சொல்லும் சுவாரஸ்யத் தளம். மாதிரிக்கு சதுரகிரியும், போகரும்! சித்தர்கள் சொல்லும் பல மருத்துவக் குறிப்புகளைஇந்தத் தளத்தில் வாசிக்கலாம்.
             
64) மூலிகைவளம் திரு குப்புசாமி நடத்தும் மிக உபயோகமான தளம். இன்சுலின் செடி,அஸ்வகந்தா, அருகம்புல் என்று இன்னும் பலவற்றையும் பற்றித் தெரிந்து கொள்ள இந்த தளத்துக்குச் செல்லலாம்.
              
65),66)  குறை ஒன்றுமில்லை லக்ஷ்மி அம்மா மூத்த பதிவர்களில் ஒருவர். சமையல் பகுதிகள், பயண அனுபவங்கள், கதை   எல்லா தளங்களிலும் எழுதுபவர். இவரின் இன்னொரு தளம் தமிழ்விரும்பி. படித்தது, ரசித்தது ஆகியவற்றை இங்கும் பகிர்கிறார்.
               
67) டி.என். முரளிதரன் குரூப் IV பரீட்சை முடிவுகள், VAO பரீட்சை முடிவுகள் ஆகியவற்றை இவர் தன் தளத்தில் பார்க்கக் கொடுத்தது சிறப்பு. இதைப் படிக்கும்போது பாலகுமாரன் ரசிகர் என்று தெரிகிறது. 
                
68) பிரியமுடன் வசந்த் திருமணமாகும்வரை மிக ஆக்டிவ் ஆக பதிவுகள் போட்டுக் கொண்டிருந்தார் முதலில் பல்வேறுசுவைகளிலும்பதிவுகளிட்டாலும், பின்னர் கவிதைகள் இவரது ஸ்பெஷலாகிப் போயின. நீண்ட விடுமுறை விட்டிருக்கிறார் தன வலைப்பக்கத்துக்கு. 
             
69) middleclassmadhavi சுவாரஸ்யம் குறையாத நல்ல பல பதிவுகள் தந்து கொண்டிருந்த இவரும் சமீப காலமாக நீண்ட விடுமுறைதான் விட்டிருக்கிறார். வல்லமையில் இவர் எழுதிய ஒரு நிறைவான சிறுகதை.  பதின்மபருவத்துக் குழந்தைகளிடம் எப்படி பெற்றோர் நடந்துகொள்வது என்று அலசும் பதிவு.
               
70) மன்னை மைந்தர்களில் ஒருவன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் மாதவன் எழுதும் சுவாரஸ்யப் பக்கம். மாத்தி யோசிக்கும் இயல்புடையவர். இதை இவரின் பின்னூட்டங்களிலும் காணலாம். நகைச்சுவையான பதிவுகள், பின்னூட்டங்கள் இடும் இயல்புடையவர்.  ஏன் இப்பல்லாம் ஒண்ணும் எழுதறதில்லை மாதவன்?
             
71) எண்ணச் சிதறல் திருமதி கீதா சந்தானத்தின் பக்கம். அவ்வப்போது எழுதுவார். ஆனால் சுவாரஸ்யமாக எழுதுவார். எங்கள் ப்ளாக்கின் கதைப் போட்டியில் கலந்து கொண்டு இவர் எழுதிய கதை. திண்ணைப் பேச்சு என்ற தலைப்பில் இவரின் சுவாரஸ்யப் பதிவு. 
               
=================    ==============================     ======================  

எங்கள் வலையுலக அனுபவங்களை வைத்து, 

பதிவர்களுக்குப் பத்து யோசனைகள்: 
        
#1. ஐ எஸ் ஓ சான்றிதழ் பெற விழையும் தொழிற்கூடங்கள் / உற்பத்தியாளர் / சேவை மையங்கள், "வாடிக்கையாளர் திருப்தி" (customer satisfaction) என்னும் பதங்களை அடிக்கடி கேள்விப்படுவார்கள். வலைப் பதிவுகளுக்கு, வாசகர்கள்தான் வாடிக்கையாளர்கள். பதிவர் = உற்பத்தியாளர். வாசகர்களின் (வாடிக்கையாளரின்) உண்மையான கருத்துகளுக்கு, செவி சாயுங்கள், மதிப்பு கொடுங்கள். மாற்றம் தேவை 
என்றால், மாற்றங்கள் செய்யுங்கள். வலைப் பதிவர்கள் ஐ எஸ் ஓ சான்றிதழ் பெறவேண்டும் என்று சொல்ல வரவில்லை. பதிவு படித்து திருப்தியடைந்த வாசகர், திரும்பத் திரும்ப உங்கள் பதிவுகளைப் படிக்க வருவார். நீடித்த வாசகர் ஆதரவு, ஒரு வலைப்பதிவு நீண்ட நாள் வாழ வழி கோலுகிறது! 

#2. புதிய பதிவர்கள், இயன்ற வரையிலும், சிறிய பதிவுகளாக பதியுங்கள். உங்கள் பதிவின் மொத்த நீளம், ஒரு கம்பியூட்டர் திரை அளவு - அல்லது ஒன்றரை திரை நீளம் என்று இருத்தல் நல்லது. 

#3. ஒரு பதிவில் ஒரு ஐடியா மட்டும் வாசகர்களுக்கு அளிக்கப் பாருங்கள். ஒரே பதிவில் நிறையக் கூறி வாசகர்களைக் குழப்பாதீர்கள். 

#4. சும்மா மேடைப் பேச்சு பேசுவதைப் போல, பிரவாளமாக (வளவளவென்று) எழுதாமல்,  சிறிய பாராக்கள், ஒவ்வொரு பாராவிலும் இரண்டு அல்லது மூன்று வாக்கியங்கள். ஒவ்வொரு வாக்கியத்திலும் அதிக பட்சம் பதினைந்து வார்த்தைகள். இவ்வாறு எழுத முயன்று பாருங்கள். 

#5. பதிவுகளில், தொடர்கதைகள் படிப்பவர்கள் மிகவும் குறைவு. வந்தோமா, பார்த்தோமா, படித்தோமா, கருத்துரைத்துவிட்டு (அல்லது கருத்துரைக்காமல்)வேறு பதிவுகளுக்குப் போனோமா - என்று இருப்பவர்கள்தான் அதிகம். (Click in / click out).  புகழ் பெற்ற / பெயர் பெற்ற எழுத்தாளர்களின் கதைகள் / பதிவுகள் மட்டும் அதிக அளவில் படிப்பவர்கள் இருப்பார்கள். 

#6. எங்களுக்குத் தெரிந்து, ஆன்மிகம், கர்நாடக சங்கீதம் பற்றிய பதிவுகள் அதிக அளவில் வரவேற்பு பெறுவதாகத் தெரியவில்லை. விதிவிலக்குகள் சில இருக்கலாம். 

#7. பதிவுலகில் கவிதைகள் பதிவது என்பது ஒரு ரிஸ்கான சமாச்சாரம். வெகு சிலரால் மட்டுமே கவிதை கொண்டு வாசகர்களைக் கவர இயலும். கவிதைகள் பதிவோருக்கு, ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கின்றது என்று அவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அந்த வகையில், கவிதைப் பதிவுகள் பயனுள்ளவையே! 

#8. திரை இசை, திரைப் பின்னணிப் பாடகர்கள், நடிகர்கள் பற்றிய பதிவுகள்,புத்தக விமரிசனம், திரைப்பட விமரிசனம், சொந்த அனுபவங்கள், பயணக் கட்டுரைகள், மற்றவரைக் காயப்படுத்தாத நகைச்சுவைப் பதிவுகள் ஆகியன பதிவுலகில் அதிக அளவில் வரவேற்பு பெரும் விஷயங்கள். 

#9. தலைப்பு முக்கியம் தலைவரே! பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கின்றோம் என்பது மிகவும் முக்கியம். பதிவு பக்கம் வருபவர்களில், பத்துப் பேர்களில் இரண்டு பேர்தான் பதிவை முழுமையாகப் படிக்கின்றார்கள். மீதி எட்டுப் பேர் தலைப்புகளைப் படித்துவிட்டு, அது பிடித்திருந்தால்தான் பதிவைப் படிப்பார்கள். உங்கள் பதிவுகளில், அதிகம் ஹிட் வாங்கிய பதிவுகள் என்னென்ன, அதன் தலைப்பு என்ன, அதற்கு நீங்கள் கொடுத்த லேபிள் / கீ வார்த்தைகள் என்ன என்று கொஞ்சம் அலசிப் பாருங்கள். ஹிட் சமாச்சாரம், பதிவர்கள், மற்றும் அவர்களைப் பின் தொடர்பவர்களின் இயல்பைப் பொறுத்தது. எதையும் இதுதான், இப்படித்தான் என்று அறுதியிட்டுக் கூற இயலாது. 

#10. மனிதராகப் பிறந்தவர்கள் அனைவரும் சமம். யாரும் மற்றவர்களைவிட உயர்வோ தாழ்வோ கிடையாது. உங்களுக்கு எப்படி ஒரு நம்பிக்கை மற்றும் கருத்து கொள்ள, சொல்ல உரிமை இருக்கின்றதோ, அதே போல, எதிரான நம்பிக்கை, கருத்துகள் கொள்வதற்கு, சொல்வதற்கு மற்றவர்களுக்கு உரிமை உண்டு. அதை இங்கிதமாக சொல்பவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள்.  பதிவுலகில் சண்டை, சச்சரவுகளை ஏற்படுத்தும் பதிவுகள் வேண்டாம். 
=================    ==============================     ====================== 
        
மீண்டும் நாளை சந்திப்போம்! 
                     

30 comments:

  1. அறிவுரை பத்தும் முத்து.

    ReplyDelete
  2. பகிர்ந்துள்ள வலைப்பூக்கள் அருமை. யோசனைகள் அதை விட அருமை.

    ReplyDelete
  3. சரவெடியும் நன்று. அதையும்தாண்டி அழகான கருத்துக்களை கூறியிருக்கின்றீர்கள். இது மிகவும் பயனுள்ளவையே.

    ReplyDelete
  4. சிறப்பான பத்து யோசனைகளுக்கு மிக்க நன்றி... பாராட்டுக்கள்...

    அனைத்தும் சிறப்பான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    தமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...

    ReplyDelete
  5. அறிமுகங்கள் அனைத்தும் நன்று.

    சொல்லி இருக்கும் யோசனைகள் அனைத்தும் மிக நன்று..

    ReplyDelete
  6. மிக்க நன்றி அறிமுகத்திற்கு!

    திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி, இந்த சுட்டுதலைத் தெரிவித்ததற்கு!

    ReplyDelete
  7. நன்றி இதுவரை கருத்துரைத்துள்ள
    அப்பாதுரை, இமா, விச்சு, திண்டுக்கல் தனபாலன், வெங்கட் நாகராஜ், மிடில்கிளாஸ் மாதவி.

    ReplyDelete
  8. யோசனைகள் அனைத்தும் மிக நன்று

    ReplyDelete
  9. வலைச்சரத்தில் தொடர்ந்து ஒலித்து வரும் ”எங்கள் சரவெடி”யை படித்து வருகிறேன்! இன்று உங்கள் வலையுலக அனுபவங்களை வைத்து, " பதிவர்களுக்குப் பத்து யோசனைகள் “ தந்துள்ளீர்கள். நல்ல யோசனைகள்! கடைசியாக சொன்ன 10-ஆம் யோசனை அனைவ்ருக்குமே தேவை.


    ReplyDelete
  10. நல்ல பகிர்வுகள், நீங்கள் தந்திருக்கும் யோசனைகள் அனைத்தும் பதிவர்களுக்கு மிகமிகப் பயன்படும் விஷயங்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  11. நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.சித்தர் ராச்சியம் மிகவும் பிடித்த பதிவுகளில் ஒன்று.
    கஷ்யபன் தான் ரேகா ராகவனா.ஆஆஆ.

    சொன்ன பத்து யோசனைகளையும் செவி கண் படுத்தி இருக்கிறேன்.அதைப் பின்பற்ற முயற்சிக்கிறேன். நன்றி எங்கள் ப்ளாக்.

    ReplyDelete
  12. காஷ்யபன், ரேகா ராகவன், இலக்கியம் உப்புமடச் சந்தி, டி.என்.முரளீதரன், பிரியமுடன் வசந்த், மிடில்கிளாஸ் மாதவி, மாதவன், கீதா சந்தானம் போன்றவர்களை உங்கள் ப்ளாக் பின்னூட்டங்களில் தான் பரிச்சயம். படித்ததில்லை. மற்றபடி அருமையான அறிமுகங்கள் கொடுத்திருக்கீங்க. இத்தனையும் படிக்க நேரம் எங்கே இருந்து கிடைக்கிறதுனும் புரியலை. இங்கே கிடைக்கும் இரண்டு, மூன்று மணி நேரத்துக்குள்ளே எல்லாத்தையும் பார்க்கணும். :))))))

    ReplyDelete
  13. பதிவு படித்து திருப்தியடைந்த வாசகர், திரும்பத் திரும்ப உங்கள் பதிவுகளைப் படிக்க வருவார். நீடித்த வாசகர் ஆதரவு, ஒரு வலைப்பதிவு நீண்ட நாள் வாழ வழி கோலுகிறது! //

    யாருமே வரலைனாக் கூட விடமாட்டோமுல்ல! எழுதுவோம், எழுதுவோம், எழுதிக்கொண்டே இருப்போம். :))))

    ReplyDelete
  14. //எங்கள் வலையுலக அனுபவங்களை வைத்து, பதிவர்களுக்குப் பத்து யோசனைகள்//

    ஆஹா! அவை என்ன சாதாரண யோசனைகளா என்ன?

    தேவரகசியங்கள் அல்லவா! ;)

    தேவரகசியங்களை இப்படி ஓபனாகவே போட்டு உடைத்து, அருமையாகவே சொல்லி விட்டீர்கள். ;)))))

    உங்களின் இந்த செயலுக்கே ISO தரச் சான்றிதழே தரலாம், சார்.

    சொல்லாதது ஒன்று விட்டுப்போய் உள்ளது என நினைக்கிறேன்.

    சில பதிவர்கள் தினமும் ஒரு பதிவும், சிலர் தினம் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவும் தந்து அசத்துகிறார்கள்.

    படித்த செய்திகளில் பிடித்தது என்று ஏதேதோ COPY + PASTE கூட செய்கிறார்கள்.

    தங்கள் பதிவுகளின் எண்ணிக்கையை ஏற்றிக்கொண்டே போவதிலேயே இவர்கள் குறியாக இருக்கிறார்கள்.

    இவர்களின் இத்தகைய பதிவுகளுக்கும் வாசகர்களின் வரவேற்பு குறைவாகவே உள்ளது என்பதே கசப்பானதோர் உண்மை.

    >>>>>>>>>

    ReplyDelete
  15. பதிவர்களைப்பற்றிய, பதிவுகளைப்பற்றிய இன்றைய தங்களின் அறிமுகங்களும், ஒவ்வொருவரின் தனிச்சிறப்பு பற்றிய சிறு விளக்கங்களும் வழக்கம் போல அருமையாகவே உள்ளன.

    அனவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    தங்களுக்கும் என் நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  16. சிறப்பான அறிமுகங்கள். வலையுலகுக்கு யோசனைகள் நன்று. உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  17. கருத்துரைத்த நண்பர்கள், அவர்கள் உண்மைகள், தி.தமிழ் இளங்கோ, பால கணேஷ், வல்லிசிம்ஹன், கீதா சாம்பசிவம், வை.கோபாலகிருஷ்ணன், கோவை2தில்லி ஆகியோருக்கு எங்கள் ஆசிரியர் குழு சார்பில் என் நன்றி.

    சரவெடி 7 இன்று மாலை ஐந்து மணிக்கும், சரவெடி 8 நாளைக் காலை ஐந்து மணிக்கும் வலைச்சரத்தில் வெளியாகும்.

    எங்கள் ஆசிரியர்கள் குழு சார்பில், ஸ்ரீராம் இனி வருகின்ற கருத்துரைகளுக்கு நன்றி தெரிவிப்பார். என்னைக் கலாய்த்தது போலவே, எல்லோரும் இவரையும் கலாய்க்கும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன்!

    ReplyDelete
  18. வலைச்சரம் சரவெடி அருமை. எல்லா நல்ல வலைப்பதிவுகளைப் படிக்க அமைந்த சிறப்பு. எனது வலைப்பதிவும் அதில் சேர்த்தமைக்கு மிக்க நன்றி. நன்றி. தனபால்.

    ReplyDelete
  19. ஒவ்வொரு நாளும் சரவெடி வெடித்தால் கிடைக்ககூடியது மிக அருமையான அரிய விஷயங்கள்பா....

    இன்றைய சரவெடியில் யோசனைகள் பத்து என்று சொல்லி அற்புதமான விஷயங்களை சொல்லி இருக்கீங்க... இப்படி இருங்க இப்படி இருக்காதீங்க...இப்படி செய்யுங்க இப்படி செய்யாதீங்க.... கண்டிப்பா வாசிக்கும் பதிவர்கள் இதை நாங்கள் கருத்தினில் கொள்வோம்பா... அன்புடன் பகிரும் நல்லவை எல்லாமே நிலைத்து இருக்கும் நன்றியுடன் கண்டிப்பாக.... அதேபோல் வலைப்பூவில் நாம் செய்யவேண்டியது என்று சொன்னவை மனதில் பதித்துக்கொண்டேன்பா...


    அறிமுகப்படுத்தும்போது எங்கள் கண்ணோட்டத்தில் அறிமுகப்படுத்தப்போறோம்னு நீங்க சொன்னது அட்டகாசம்... ஏன்னா அறிமுகப்படுத்தும் விதம் அப்படி தான் அசத்தலா இருக்கு ஒவ்வொருவரையும்...

    மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் எங்கள்பிளாக் குழுவினருக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்..

    ReplyDelete
  20. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியவர்களுக்கெல்லாம் சென்று அவர்கள் வலைப்பூவில் அறிவிக்கும் அன்பு உள்ளம் கொண்ட திண்டுகல் தனபாலனுக்கு (எனக்கும் என் வலைச்சரத்தில் வந்து சொல்லி இருக்கீங்கப்பா) மனம் நிறைந்த அன்புநன்றிகள் தனபாலன்... பலன் எதிர்ப்பாராது செய்யப்படும் எதுவும் இறைவனுக்கு செய்யும் சேவைப்போன்றது என்பதை இந்த நேரத்தில் நினைத்துக்கொள்கிறேன்பா... உங்களின் சேவை அப்படி தான் தனபாலன்....

    ReplyDelete
  21. நீங்கள் அறிமுகப்படுத்திய எல்லா பதிவாலர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பத்து கட்டளைகள் ரொம்பவும் தேவையான, பதிவர்கள் அறிய வேண்டிய ஒன்று!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. வலைச்சரத்தில் எங்கள் சரவெடிகளை தொடர்ந்து படித்து வருகிறேன். வலைப் பதிவுகள் பற்றிய புள்ளி விவரங்களும், இந்த சரவெடியில் பதிவர்களுக்கான ஆலோசனைகளும் நான் விரும்பிப் படித்தவை. எண்ணச்சிதறல் பற்றியும் சரவெடியில் குறிப்பிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  23. அறிமுகங்களும் அறிவுரைகளும் மிக நன்று! கடைபிடிப்போம்! தொடர்வோம்! நன்றி!

    ReplyDelete
  24. மிகசரியான பத்து யோசனைகள்
    நீங்க சொல்வதெல்லாம் மிகச்சரியே//

    அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. நன்றி திரு குப்புசாமி... உங்கள் வலைப்பக்கம் எல்லோரும் அறியப்படவேண்டிய ஒரு பக்கம்.

    நன்றி மஞ்சுபாஷிணி... //ஏன்னா அறிமுகப்படுத்தும் விதம் அப்படி தான் அசத்தலா இருக்கு ஒவ்வொருவரையும்...// மிக்க நன்றி! :))

    நன்றி ரஞ்சனி நாராயணன் மேடம்...

    நன்றி திருமதி கீதா சந்தானம்..

    நன்றி 'தளிர்' சுரேஷ்...

    நன்றி ஜலீலா கமால்...

    ReplyDelete
  26. புதிய தளங்கள் சிலவற்றை அறிந்து கொண்டேன்.

    யோசனைகள் அனைத்தும் மிக அருமை.

    ReplyDelete
  27. படிக்கத் தவறிய அல்லது அறியாத பயனுள்ள பதிவுகளை வலைசரத்தின் மூலம் அறிமுகப் படுத்துவதற்கு நன்றி.
    என் வலைப் பதிவையும் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete

  28. நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி T N MURALIDHARAN.

    ReplyDelete
  29. அறிமுகம் செய்தமைக்கு நன்றி

    Interest கொறையுது .. Also, நம்ம ஆர்வீஎஸ் ஏற்கனவே சொன்ன மாதிரி இருக்குற கொஞ்ச நஞ்ச நேரமும் முகப்புத்தகத்துல போயுடுது....
    முடிஞ்ச வரைக்கும் try பண்றேன் (இனிமே வாரத்துக்கு ஒரு போஸ்டாவது போடா முடியுதான்னு பாக்கலாம் )
    ஆனா... பிளாக் ஃபாலோ பண்ணிட்டுத்தான் இருக்கேன் :-)

    ReplyDelete
  30. http://thiru-padaippugal.blogspot.in/
    http://thiru-science.blogspot.in/
    http://thiru-nandri.blogspot.in/நன்றி ஐயா. வலைப்பதிவருக்கும் வலைஆசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கும் இதனைத் தெரிவித்த திண்டுக்கல் தனபாலன்அவர்களுக்கும் நன்றி. மேற்குறித்த வலைத்தளங்களையும் பார்வையிட்டுப் பயனடைய வேண்டுகின்றேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது