07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 7, 2013

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்...

"முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன், யானும்; ஓர் பெற்றி மேலிட்டு
'ஆஅ! ஒல்' லெனக் கூவு வேன்கொல்? -
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே."

பாலைத் திணையில் ஔவையார் பாடிய இப்பாடலுடன் வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்!

இப்பாடலின் பொருள்: தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி, தோழியிடம், "நான் முட்டுவேனா? தாக்குவேனா? புரியவில்லை! என் காதலன் பொருட்டு 'ஆ' என்றும் 'ஒல்' என்றும் கத்துவேனா? துன்பம் தருகின்ற காற்று வருத்த, என் பிரிவு நோய் அறியாது தூங்கும் இந்த ஊர்க்கு நான் என்ன செய்வேன்?" என்று கூறுகிறாள். தலைவியின் வருத்தத்தைக் கூறுவதாக அமைந்த குறுந்தொகைப் பாடல் (எண்.28).

பாலைக்குத் தனி நிலம் இல்லை.கதிரவன் வெப்பத்தால் காய்ந்து வளம் குன்றிப் போன இடங்களே பாலையாகும். வறண்ட பகுதிகளில் வளரும் பாலை என்ற மரத்தின் பெயரால் இப்பெயர் பெற்றது.

குறிஞ்சியும் முல்லையும் திரிந்து பாலை நிலமாகும் என்றனர் நம் முன்னோர். காதலர் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலைத்தினையின் உரிப்பொருளாகும்.
சுரம், பல்லி, கள்ளி, மூங்கில்,கழுகு, வேனிற்காலம், இறத்தல், செந்நாய் ஆகியவை பாலைத் திணையோடுத் தொடர்புடைய சிலச்  சொற்களாகும்.

பாலைத் திணையோடுப்  பொருந்துவதாக நான் எண்ணும் சில வலைத்தளங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

1. திரு. எம்.கே.முருகானந்தன் அவர்கள் முருகானந்தன் கிளிக்குகள் என்ற தன தளத்தில் அழகியப் படங்களுடன் பதிவுகள் இடுகிறார். பிரிவை ஏற்று வருந்துவதாக இவர் எழுதிய கவிதை மறுபுறம் திரும்பிவிடு அன்பே!
அவரின் இன்னும் சில அழகிய கவிதைகள்:
வீடு நனைகிறது ஓநாய்கள் மலர்கின்றன 
மேகங்களே மேகங்களே இன்னும் தாமதம் ஏன்?
நம்பிக்கைத் தரும் அருமையான கவிதை வாடிச் சரிந்த மலருக்கு பிரியாவிடை.
அவரின் நோய் தீர்க்கும் மருத்துவருக்கும் நோய் வந்ததே.. கற்பூரவல்லி பற்றி சில தகவல்கள் சொல்கிறது..மருத்துவரும் மனிதன் தானே என்ற உண்மையும் சொல்கிறது.

2. குணமதி அவர்களின் உலகம் முழுதும் பரவியிருந்த மொழி வாசியுங்கள், தமிழ் பற்றி பல தகவல் அறிந்து கொள்ளுங்கள்.
பிரித்தெழுதுவதா சேர்த்தெழுதுவதா, எது சரி? தமிழ் பாடல்களில்  சொற்களைப் பிரித்தோ சேர்த்தோ எழுதும்பொழுது கவனத்துடன் பொருள் மாறாமல் செய்ய அறிவுறுத்துகிறது. அயலர் சிலரின் தமிழைப் பற்றிய கருத்துக்கள் என்று இவர் சொல்லும் சொன்னார்கள் என்ற பதிவைப் பாருங்கள்!  தமிழ் இலக்கியங்களிலும் தமிழ் அறிஞர்களும் சொல்லியதை இவர்களும் சொன்னார்கள் என்ற பதிவில் பாருங்கள்.
குதிரைப் பற்றி அழகானத் தகவல்கள் இப்பதிவு.

3. அருணா அவர்களின் அன்புடன் அருணா என்ற வலைப்பூ நட்சத்திரப் பூக்களுடன் சிரிக்கிறது.மழை இன்மையை அழகாகச்  சொல்கிறார் மழையே நலமா?
என்ற கவிதையில். இவரின் தொடர் எல்லைகளுக்கு அப்பால் என்ற பதிவு சிலிர்க்க வைக்கிறது. 

4. சோமாயணம் என்ற தளத்தில் ஐவகை நிலமும் அவளே என்று புதுத்திணைப் படைக்கிறார் கலாநேசன் சரவணன் அவர்கள்! அட, இந்தப் பதிவைப் பாருங்கள்..பறந்துகொண்டேயிருப்பேன் ...அப்துல் கலாம்.

5. முதல் பிரிவு  என்ற வலைப்பூவை எழுதிவருகிறார் எவனோ ஒருவன் அவர்கள். பிரிவை காதல் பரிசாக இவர் பார்க்கிறாரே காதல் பரிசுகள் என்ற பதிவில்! காதல் பிரிந்தால் அனாதை ஆகிவிடுவரோ?

6. இணையகவி என்ற வலைப்பூவில் திரு.ராஜ்குமார் அவர்கள் சொல்லியிருக்கும் யார் மிருகம்-குட்டிக்கதை மனிதருக்குப் பாடம் சொல்கிறது. ஒரு நாள் காதலியைப் பார்க்காவிட்டாலும் நெஞ்சம் வலிக்கிறது என்கிறார் சொல்லாத காதல் கவிதையில்.

7. பறத்தல் - பறத்தல் நிமித்தம் என்ற வலைப்பூவில் நிலாமகள் அவர்களின் 
 பிரிவின் கொடுந்துன்பம் ஒரு தாயின் பரிதவிப்பைச் சொல்கிறது. இவரின்
கத்திரி வெயிலுக்கில்லை ஒரு கத்திரி என்ற கவிதை சித்திரைச் சூரியனால் விலங்குகள் படும் துன்பத்தைப் பேசுகின்றது.

8. நா.நிரோஷ் அவர்களின் சில்லறைக் கவிதைகள் என்ற வலைப்பூவில்
காதல் கடனும்.... கண்ணீர் வட்டியும் என்ற கவிதை வித்தியாசம். காதல் பிரிவைப் பாடும் மேலும் ஒரு பதிவு அத்தான் என் அத்தான் - இரு காதல் கவிதைகள்.

9. மழைப்பூமி அவர்களின் மழைப்பூமி என்ற தளத்தில் குறிஞ்சியும் முல்லையும் திரிந்து பாலையாக மாறிவிடுமோ பூமி என்று கவலை தரும் பதிவு சுற்றுப்புறச் சூழல் மாசு!

 10. அன்புடன் பிரசன்னா என்ற வலைப்பூ எழுதி வரும் பிரசன்னா அவர்களின் குட்டி கவிதைகள் - காதல் பிரிவுகள் கவிதை அருமை. மனதைத் தொடும் கவிதை என் முதற்காதலி.
11. ஒரு அன்னத்தூவியின் இழைகள் என்ற வலைப்பூவில் திரு.கார்த்திக் சிவசுப்ரமணியம் அவர்கள் எழுதியுள்ள கவிதை வேனில் மரம். இவரின் மற்றுமொரு கவிதை புறக்கணிப்பு தனிமை பற்றி பேசுகிறது.
கைம்மை என்ற கவிதையும் பிரிவை உணர்த்துகிறது.

12. பாசமலர் அவர்களின் பெட்டகம் என்ற வலைப்பூவில்  ஒற்றைச் சிவப்பு ரோஜா என்ற கவிதை அருமை. உன் கண்களால் நீ தேடிடும் வேளையில் "என்னை நீ தேடும் அந்த ஒரு நாளில் ஒருபோதும்
என்னை நீ காண மாட்டாய்" என்று சொல்கிறது.


13. எம்பிம்பங்கள் என்ற வலைப்பூவில் வெயில் பற்றிய அழகியக் கவிதை வேனிற்காலம்

14. கழுகின் 7 கொள்கைகள் தெரியுமா? அறிவுக்களஞ்சியம் என்ற திரு.ஆன்டன் அவர்களின் பதிவைப் பாருங்கள்.

இந்தப் பதிவுகள் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்!

இந்த ஒரு வார காலமாய் என் பதிவுகளைப் படித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. வலைச்சர ஆசிரியர் பொறுப்பிலிருந்து பிரிந்தாலும் (பாலை) தேன் மதுரத் தமிழில் உங்களுடன் பேசுவேன்(குறிஞ்சி) என்று சொல்லி விடை பெறுகிறேன்!

எனக்கும் பல தளங்களை அறிவதற்கு வாய்ப்பாக அமைந்தது. வாய்ப்பு கொடுத்த திரு.சீனா ஐயா அவர்களுக்கும் நன்றி!

நட்புடன் ,
கிரேஸ்
தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் முழங்கிடச் செய்வோம்!

16 comments:

  1. அருமையான பதிவு. திணையின் துணை கொண்டு முடித்த விதம் அழகு. சிறப்பாக ஆசிரியர் பணியை செய்து முடித்தற்கு வாழ்த்துக்கள் கிரேஸ் :).

    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)


    ReplyDelete
  2. பாடலின் விளக்கம் அருமை...

    அறியாத பல தளங்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இந்த வாரம் பல புதிய தளங்களை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல... உங்களின் தேடலுக்கு வாழ்த்துக்களும் பலப்பல...

    ReplyDelete
  4. அருமையான அறிமுகங்கள்.
    பல எனக்குப் புதியவை.

    எனது 'முருகானந்தன் கிளிக்குகள்" வலைத் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. மருத்துவம் அல்லாத எனது புளக்கை அறிமுகப்படுத்திய முதல் ஆளாக நீங்கள்தான் இருப்பீர்கள் என எண்ணுகிறேன். மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  5. பாலைத் திணை விளக்கம் மிகஅருமை.

    அழகாகத்தொகுத்து பல அறிமுகங்களை இங்கு எமக்கு அறிமுகப்படுத்தினீர்கள்.
    அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

    அருமையாகப் பணியாற்றி இன்று நிறைவு காணும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் நல் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  6. சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி .அனைவருக்கும்
    என் வாழ்த்துக்கள் உறவுகளே !

    ReplyDelete
  7. அருமையான வாரம்
    அருமையான அழகான அறிமுகங்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. //அருமையான பதிவு. திணையின் துணை கொண்டு முடித்த விதம் அழகு. சிறப்பாக ஆசிரியர் பணியை செய்து முடித்தற்கு வாழ்த்துக்கள் கிரேஸ் :).// - நன்றி ஸ்ரீனி!

    ReplyDelete
  9. //பாடலின் விளக்கம் அருமை...
    இந்த வாரம் பல புதிய தளங்களை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல... உங்களின் தேடலுக்கு வாழ்த்துக்களும் பலப்பல...//
    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

    ReplyDelete
  10. //பாலைத் திணை விளக்கம் மிகஅருமை.
    அழகாகத்தொகுத்து பல அறிமுகங்களை இங்கு எமக்கு அறிமுகப்படுத்தினீர்கள்.
    அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!
    அருமையாகப் பணியாற்றி இன்று நிறைவு காணும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் நல் வாழ்த்துக்களும்!//

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இளமதி!

    ReplyDelete
  11. //சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி .அனைவருக்கும்
    என் வாழ்த்துக்கள் உறவுகளே !// - நன்றி அம்பாலடியாள் அவர்களே!

    ReplyDelete
  12. //அருமையான வாரம்
    அருமையான அழகான அறிமுகங்கள்
    வாழ்த்துக்கள்// -- நன்றி திரு.ரமணி!

    ReplyDelete
  13. நல்ல அறிமுகங்கள் கிரேஸ்.. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  14. மிக்க நன்றி...கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிதாய் எதுவும் வலைத்தளத்தில் எழுதவில்லை. வலைத்தளம் பக்கம் வராத என்னையும் நினைவில் வைத்து அறிமுகப்பதுதியதற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  15. அன்புக்கு நன்றி, கிரேஸ். எதிர்பார்க்கவில்லை, வேப்பம்பூக்களின் அளவேயான என் பதிவுகள் யார் கண்களிலும் படுமென. ஔவையையும் பாலையையும் நினைவுகூரும் வலைப்பதிவை வந்தடைய நேர்ந்தது கூடுதல் மகிழ்ச்சி. தமிழ் பேசும் சக வலைப்பூக்களின் அறிமுகமும் கூட.

    நன்றியும் அன்பும்,
    கார்த்திக்.

    ReplyDelete
  16. வலைச்சர அறிமுகத்துக்கு மகிழ்வும் நன்றியும். சக பதிவர்களுக்கும்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது