07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 10, 2014

அரட்டைக் கச்சேரி -- நிறைவு.









இன்று  உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.என் கடமையை சரி வரச்செய்தேனா...... நான் குறிப்பிட வேண்டிய பதிவர்கள்  எல்லோரையும் பற்றி சொல்லமுடிந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்வேன். மிகச் சிலரை மட்டுமே என்னால்  சொல்ல முடிந்தது.

இவரைப் பற்றி எழுதவில்லையே 
அவருடைய பதிவுகள் பற்றி சொல்லவில்லையே ! என்கிற பதட்டத்துடன் தான், நான் இன்று உங்களிடமிருந்து பிரியா விடை பெறுகிறேன்.

சரி............இருக்கும் நேரத்தில் மேலும் சில பதிவர்கள் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

தளிர் என்னும்  தளத்தில்  எழுதி வரும் திரு. சுரேஷ்  பதிவுகள் அத்தனையும்
அருமை.
நீங்கள் பதம் பார்க்க   கிழிந்த நோட்டு.
அவர் கவிதைகள் படித்து  ரசிக்கலாம் இங்கே
சுரேஷின் சாமியாட்டம் பார்க்கலாம் வாருங்கள்.
இவர் சிறுகதையும் எழுதுகிறார்.
தன்  குற்றம் என்னும் இவர் சிறு கதையைப் படித்தால் உண்மைச் சம்பவம் போலவே இயல்பாக இருக்கும் .படித்து ரசியுங்கள்.
மின்மினி பூச்சிகளைப் பற்றியக் கதை மிகவும் சுவாரஸ்யம்.

பிரச்சினை என்று வந்தால் தீர்த்து வைப்பீர்களா? அப்படிஎன்றால் சுயம்பு  என்னும் தளத்தில்  எழுதிவரும் விக்னேஷ் அவர்களுக்கு பெரிய பிரச்சினையாம். தீர்த்து வைக்க சொல்கிறார். முடியுமா பாருங்கள்.
 இவர் பள்ளிக்குப் போய்  பாடம் கற்றுக்கொண்டாரோ இல்லையோ  பல்லியிடம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார். என்ன என்று பாருங்களேன். நல்ல நகைச்சுவை கலந்து எழுதியிருக்கிறார்.
ஜால்ரா மனிதர்கள் பற்றி சொல்வதை கேளுங்கள் இங்கே.


மனசு என்னும் தளத்தில் திரு. குமார்  மழை எத்தனை ரம்மியமானது என்று சொல்கிறார்  படியுங்கள்.
 நாம் எப்படியெல்லாம் ஏமாத்தப் படலாம் என்பதை இங்கே படிக்கலாம்.
திருமணத்தில் இருக்கும்  மூட நம்பிக்கைகள் பற்றி  சாடுகிறார்.. அவசியம் படிக்க வேண்டியப் பதிவு.
இவருடைய கிராமத்து நினைவுகளை  நம்முடன் இங்கே பகிர்கிறார் படியுங்கள்.

திருமதி ராஜியின் கற்றலும், கேட்டலும் படித்துப் பாருங்கள் .திரும்பாதோ அந்த தீபாவளி என்கிறார். ஏன் என்று அவரிடமே கேட்போம்.
தாய்மை உணர்வை எப்படி படம் பிடித்திருக்கிறார் பாருங்கள்.
தாய் தன்  பதினாறு வயது பெண்ணிற்கு சொல்லும் கதை  இங்கே  படிக்கக் கிடைக்கும்.
கடிகார முள்ளில் பூவாய் என்கிற பதிவில் அழகிய கவிதை ஒன்று காத்துக் கிடக்கிறது, படிப்போம்  வாருங்கள் .

பூப் பறிக்கக் கோடாலி எதற்கு? என்று கேட்கும் திரு. Killergee அவர்கள்
சுட்ட  பழம் பற்றி சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்போமா?
டிரைவிங் லைசென்ஸ் வேண்டுமா? அப்படிஎன்றால் முதலில் அவர் சொல்லும் வாகனம் ஓட்டியிருக்க வேண்டுமாம். அநேகமாக எல்லோருமே ஓட்டியிருப்போம். அதை விடுங்கள்......பதிவில் அவர் சொல்லியிருக்கும் வாகன ரகங்கள் படித்து முடிப்பதற்குள் மூச்சு முட்டும்.. படித்து விட்டு சொல்லுவீர்கள் பாருங்கள்.

தென்னாட்டுக் காந்தி, காமராஜர் என்ன படித்திருக்கிறார் ?
எவ்வளவு சாதனைப் படைத்திருக்கிறார் என்று நம் கில்லர்ஜீ பட்டியலிடுகிறார் பாருங்கள்.கூண்டுக்குள்  இருக்கும் விலங்குகளின்  வலியை  நாம் உணரலாம் இந்தப் பதிவைப் படித்தால் .
முதுகு வலி தீர வீட்டிலிருக்கும் பொருட்களை விற்க வேண்டுமாம்.
நான் சொல்வது புரியவில்லையா? கில்லர்ஜீயிடமே உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.


கடமை முடிந்து விடை பெறுகிறேன். அரட்டைக் கச்சேரி ஓய்ந்தது ," ஸ்வீட் எடு, கொண்டாடு " என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
இங்கே ஒன்று சொல்ல வேண்டும்.இங்கே தான் அரட்டைக் கச்சேரி ஓய்ந்திருக்கிறது. என் சொந்தக் கடையில் தொடர்கிறேன்.... அங்கு வாருங்கள்  உரையாடுவோம்.


என்னோடு தொடர்ந்து பயணித்து  ஊக்கமளித்த சைலண்ட் வாசகர்கள் மற்றும் பின்னூட்டமிட்டு  ஊக்கப்படுத்திய   நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நன்றிகள்  பல.
வலைச்சரத்தில்  வாய்ப்பளித்த  திரு. சீனா ஐயா அவர்களுக்கும் இத்தருணத்தில் என் மனம் நிறைந்த நன்றிகள்.

                                                               



image courtesy--google.




20 comments:

  1. வணக்கம்
    அம்மா.
    ஒரு வார காலமும் மிகச்சிறப்பாக பணியை செய்து பலரை அறிமுகம் செய்து வைத்தீர்கள் . பாராட்டுக்கள் இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா.

    எல்லம் தொடரும் தளங்கள்தான்... அறிமுகத்திற்கு நன்றி..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நாள் தோறும் என்னை ஊக்கப்படுத்தி வந்ததற்கு நன்றி ரூபன்.

      Delete
  3. இரண்டு வாரமாக வலைச்சரம் பக்கம் வரவில்லை....
    எனக்கு மீண்டும் ஒரு அறிமுகம் தங்கள் மூலமாக.... நன்றி அம்மா.
    விவரம் தெரிவித்த சகோதரர் ரூபன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    அறிமுகமான அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி குமார்.

      Delete
  4. தாங்கள் நடத்திய அரட்டைக் கச்சேரி - நாளும் பயனுள்ளதாக இருந்தது. பணியேற்ற நாளில் இருந்தே - ஸ்வீட் எடு.. கொண்டாடு!.. மகிழ்ச்சி தான்!..

    சிறப்புடன் பணியினை நிறைவு செய்த தங்களுக்கு பாராட்டுகள்.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கும், தினம் என்னை ஊக்கப்படுத்தி வந்ததற்கும் நன்றி துரை சார்.

      Delete
  5. வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து முடித்துவிட்டீர்கள். ரிலாக்ஸ் ப்ளீஸ், மிஸஸ் ராஜி! :)))

    -----------------------

    என்னைப் பொறுத்தவரையில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு மிகவும் கடினமான ஒன்று. ஏன் என்றால் வலையுலகில் நாம் கற்றது கை மண் அளவுதான். ஒரு சில சிறந்த பதிவர்களை நாம் "ஓவர்லுக்" பண்ணுவதைத் தவிர்க்க முடியாது என்பது என் புரிதல். அப்படி விடுபட்ட திறமைமிக்க பதிவர்கள் வலைச்சர ஆசிரியர்களுடைய "லிமிட்டேஷன்"களை புரிந்துகொண்டால் நன்று! (ராஜி அவர்களே! இதை வலச்சர ஆசிரியராக வரும் எல்லோருக்கும் பொதுவாகத்தான் சொல்லுகிறேன்!)

    ReplyDelete
    Replies
    1. வருண்,
      நீங்கள் சொவது போல் நிறைய பதிவர்களிக் குறிப்பிட முடியாமல் போனதில் வருத்தம் தான். ஒரு சிலரையாவது குறிப்பிட முடிந்ததே என்கிற மனத்திருப்தியுடன் விடை பெறுகிறேன்.

      நாள்தோறும் என்னை ஊக்கப்படுத்தி வந்ததற்கு நன்றி வருண்.

      Delete
  6. வலைச்சர ஆசிரியர் பதவியை வெற்றிகரமாக முடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி கோபு சார்.

      Delete
  7. வலைச்சர ஆசிரியர் பொறுப்பை வெகு சிறப்பாக செய்து நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள் ராஜலக்ஷ்மி பரமசிவம்.
    இனி உங்கள் தளத்தில் சந்திப்போம்.
    இன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி கோமதி.

      Delete
  8. என்னையும் மதித்து, எனது பதிவுகளை ஆராய்ந்திருக்கிறீர்கள் என்றே சொல்வேன், குறிப்பாக தென்னாட்டு காந்தி காமராஜரின் பதிவை தேர்ந்தெடுத்தது மிகமிக நல்லதேர்வு எனக்கும் வலைப்பதிவில் அதுவும் தங்களைப்போன்ற மூத்தபதிவர்களிடமிருந்து அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பது பெரிய விசயமே நிச்சயமாக நான் சந்தோசமாக கர்வமின்றி பெருமைப்படுகிறேன் அம்மா, நன்றி வேண்டாம் தங்களை வணங்குகிறேன்.
    தகவல் அளித்த நண்பர் ரூபன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தரமான பதிவுகளை அள்ளித் தரும் உங்கலைப் போன்றப் பதிவர்களை கண்டிப்பாக பாராட்டியேயாக வேண்டும் அதைத் தான் நானும் செய்திருக்கிறேன். மிக மிக சுவாரஸ்யம் உங்கள் பதிவுகள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

      Delete
  9. என்னுடைய இத்தனை பதிவுகளை அறிமுகம் செய்த விதத்திலேயே தாங்கள் பதிவுகளை ஆழ்ந்து படித்து ரசிப்பவர் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. மிகச்சிறப்பான பணி! நான் தொடரும் சகபதிவர்களுடன் என் அறிமுகம் மீண்டும் ஒருமுறை வலைச்சரத்தில் என்றபோது பெரிதும் மகிழ்ந்தேன்! மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. விரிவானக் கருத்துரைக்கு நன்றி சுரேஷ். உங்கள் பதிவுகளை மிகவும் விரும்பிப் படிப்பவள் நான். தொடருங்கள் உங்கள் எழுத்தை..... வாழ்த்துக்கள்.

      Delete
  10. ஒரு வாரம் சென்றதே தெரியவில்லை. இன்றைக்கு நீங்கள் அறிமுகப்படுத்திய தளிர் சுரேஷ், சுயம்பு விக்னேஷ், மனசு குமார், கனவுகள் ராஜி மற்றும் தேவகோட்டை கில்லர்ஜி அனைவருமே சிறந்த பதிவர்கள். இவர்களது வாசக்ர்களில் நானும் ஒருவன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    த.ம.2

    ReplyDelete
  11. சிறந்த அறிமுகங்கள்

    ReplyDelete
  12. வணக்கம் அம்மா..

    என் பதிவு வலைச்சரத்திலா? ஆதிசயம் ஆனால் உண்மை.. வலைச்சரத்தில் எனது பதிவுகளை அறிமுகம் செய்ததற்க்கு மிக்க நன்றிகள் அம்மா.. திரு. ரூபன் அவர்களுக்கும் எனது நன்றிகள்... பரபரப்பான சென்னையில் மிகவும் பரபரப்பாக வேலை தேடிக்கொண்டிருப்பதால் சில நாட்களுக்கு வலை பக்கம் வரமுடியவில்லை..தற்ப்போது தான் அறிந்துகொண்டேன்... மிக்க நன்றி அம்மா...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது