07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 21, 2014

மன்னிப்பு கோரலும், நன்றி கூறலும்.

 
தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
கணபதி பப்பா மோரியா
गणपति पप्पा मोरिया
காணொளி
செந்தூரப்பூவினும் மென்மையான எனது வலை உறவு சொந்தங்களே வணக்கத்துடன் உங்கள் கில்லர்ஜி வலைச்சரத்தில் கடைசியாக எழுதிக்கொல்வது
எனது ஐயா ஞானி ஸ்ரீபூவு அவர்களை ஹீரோவாக சித்தரித்து கடந்த ஒரு 9 நாட்களும் தங்களை மகிழ்வித்தேனா ? இல்லையா ? 80 தங்களுக்கே தெரியும் பலரும் ஞானி ஸ்ரீபூவு பள்ளியில் வந்து ஆசிரியரை அடிப்பார் என்று ! அப்படி அவர் செய்தார் என்றால் ? அவர் ஞானி அல்ல ! சரிதானே (இதை சரியாக கணித்து கருத்துரை தந்த எனது தேவகோட்டை சகோதரி (எஜிப்த்) திருமதி. ஆர். உமையாள் காயத்ரி அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்டை இந்த இடத்தில் வழங்க கடமைப்பட்டு இருக்கிறேன்) ஆசிரியரை நான் என்றுமே மதித்து நடந்தவன், நடப்பவன் அதனால் தான் என் மனதில் திரு. குருந்தன் ஆசிரியர் இன்னும் இருக்கிறார் அவர் என்னை அடித்ததே இல்லை, என்னை மட்டுமல்ல ! சகோதரி திருமதி. பொன்னம்மா அவர்களையும் அடித்ததில்லை தாங்கள் நினைக்கலாம் என்ன ? திடீரென சகோதரி ஆம் நண்பர்களே இரண்டாவது படிக்கும் வயதில் காதல் வருமா ? அதுவும் அன்று இப்பொழுது வரும் திரைப்படங்களின் உதவியால் இனி வரலாம் பொன்னம்மாவின் பெயரைத்தவிற வேறு எந்த பெண்களின் பெயரும் சத்தியமாக எனக்கு நினைவில் இல்லை நான் ஒன்றாவது தொடங்கி மருத்துவக்கல்லூரி போகும் வரை (என்னையா ? திடீர்னு வலைப்பூவை காதுல, சுத்துறே) இல்லைங்க நான் பள்ளிக்கூடத்துக்கு மருத்துவக்கல்லூரி வழியாகத்தான் போவேன் அதைத்தான் சொல்ல வந்தேன் ஒன்றாவது தொடங்கி நாலாவதோடு எனது பள்ளி வாழ்க்கை முடிந்து விட்டது (அதற்க்கு பிறகு படிக்க வைக்க முடியவில்லையா ? வறுமையா ? இல்லை நண்பர்களே.... வளமை ஆம் மிராசுதாரின் பேரனுக்கு பணத்திற்க்கா ? பஞ்சம் வேறு காரணம் என்ன ? சேஷ்ட்டை அதான் ’’சட்டீர் ’’ ’’சட்டீர் ’’ ’’சட்டீர் ’’) நாலாவது ஆசிரியரின் பெயர்தான் மரியாதைக்குறிய திரு. குருந்தன் அவர்கள் பொன்னம்மாவை நான் ஞாபகம் வைத்து இருப்பதற்க்கு காரணம் பள்ளியில் முதல் ராங்க் மாணவன் நான் முதல் ராங்க் மாணவி சகோதரி திருமதி. பொன்னம்மா அவர்கள் எங்கள் இருவருக்கும் போட்டி இருந்து கொண்டே இருக்கும் ஆகவே கடைசியாக அன்று கண்டதுதான் நான் சகோதரி திருமதி. பொன்னம்மா அவர்களை இன்று எப்படியும் அவருக்கு பேரன்-பேத்திகள் இருப்பார்கள் என்றே கருதுகிறேன் அந்த சகோதரி எல்லா நலனும் பெற்று வளமுடன் வாழ்வார்கள், வாழவேண்டுமென இந்த தருணத்தில் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் இப்பொழுது என் மனதில் படுவது என்ன ? தெரியுமா ? அடுத்த முறை எனது இனிய இந்தியாவுக்கு வரும் பொழுது அவரை எப்படியாவது திரு. குருந்தன் ஆசிரியர் அவர்களிடம் காண்பித்து அவர் மூலமே பொன்னம்மாவை சந்தித்து இந்த வலைச்சரத்தில் அவர்களைப்பற்றி தொடுத்ததை சொல்ல வேண்டுமென்ற ஆவல் தோன்றுகிறது போதுமே.... பொன்னம்மாவைப்பற்றி...

நண்பர்களே... பல இடங்களில் இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு என சொல்லியிருக்கிறேன் சும்மா ஒரு கப்சாவுக்காக அவர் இறக்கும்போது எனது பனிரண்டாவது அகவை என ஞாபகம் அவரைப்பார்த்து பயப்புடுவேன் காரணம் அவரது மீசை மற்றபடி அவருடன் பழகியது குறைவானாலும் நிறைவு காரணம் அவருடைய தாத்தாவுடைய தாத்தாவின் பெயர் வரை எனக்கு தெரியும் எல்லாம் அவரிடம் கேட்டதுதான் அதைப்பற்றி எழுதவேண்டுமானால் பெருங்கதை (ஆமாமா, உங்க வீட்ல கதைக்கா ? பஞ்சம்) எனது மகன் தமிழ் வாணனுக்கு எனது இன்ஷியலோடு எனது அப்பா, தாத்தா, தாத்தாவின் அப்பா, அவரின் அப்பா இப்படியே ஏழு நபர்களின் பெயர்களை சொல்லிக்கொடுத்து இருக்கிறேன் நான் பிழைத்திருந்தால் நாளை எனது பேரனுக்கும் சொல்லிக்கொடுத்துப்போவேன் இதையேன் சொல்கிறேன் என்றால் ? இன்றைய குழந்தைகளுக்கு தாத்தாவின் பெயரே தெரியவில்லையே 80தை நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது நண்பர்களே முடிந்தவரை நமது மூதாதையர்களின் பெயர்களை சொல்லிக்கொடுங்கள்.
 இதை தாங்கள் ரசித்திருப்பீர்கள் எனது கற்பனையில் நடக்காததை நடந்ததுபோல் சித்தரித்தேன் இதில் பல உயிரோட்டமுள்ள எனது குடும்பத்தினரை உலவ விட்டுள்ளேன்... எனது குடும்பத்தார்கள், சொந்த பந்தங்கள் படிக்கும்போது ஒருவிதமான உணர்ச்சிகள் பொங்கும் 80ல் எமக்கு சந்தோஷமே ஆம் நண்பர்களே..
தெய்வத்திரு. ஞானி ஸ்ரீபூவு அவர்கள் மிராசுதார் (ஐயா)
தெய்வத்திருமதி. பூ. சுப்பம்மாள் அவர்கள் (அப்பத்தா)
தெய்வத்திரு. பூ. முருகன் அவர்கள் (பெரியப்பா)
தெய்வத்திரு. பூ. கணபதி அவர்கள் (அப்பா)
தெய்வத்திரு. பூ. பேச்சி முத்து அவர்கள் (சித்தப்பா)
தெய்வத்திரு. பூ. மாரி முத்து அவர்கள் (சித்தப்பா)
திரு. பூ. களஞ்சியம் அவர்கள் கோயமுத்தூர் (சித்தப்பா)
&
திருமதி. மீனாம்பாள் கணபதி அவர்கள் (பாசமான அம்மா)
நண்பர்களே... நீங்கள் ரசித்திருக்கலாம், சிரித்திருக்கலாம், ஆனால் ? இதை எழுதி முடிக்கும் பொழுது எனது கண்கள் கசிந்திருந்தன..... ஆம் இவர்களைப்பற்றி நான் வலைச்சரத்தில் மாலையாக கோர்த்ததை அவர்கள் பார்த்தால், எவ்வளவு சந்தோஷப்படுவார்கள் என்பதை நினைத்துப்பார்க்கிறேன் இருப்பினும் இதைக்காண எனது துணைவியே இல்லை என்கிற பொழுது நான் ரொம்ப தூரம் ஆசைப்படுவது கொஞ்சம் கூடுதலே இந்த தருணத்தில்
//தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடமை
அம்மா பெரிதன்று அக மகிழ்க//
என்ற குமர குருபர சுவாமிகளின் பொன்மொழியை நினைத்து ஆறுதல் கொள்கிறேன் இதையேதான் மறைந்தும் நம் நெஞ்சங்களில் வாழும் கவிஞன் நமக்காக எளிமையாக மொழி பெயர்த்து தந்தான் இப்படி கீழே...
காணொளி
 என் மனைவிக்காக நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன் பலரும் படித்திருக்கிறார்கள் வலைச்சரம் மூலமாக புதிதாக வந்த உறவுகள் மற்றும் படிக்காதவர்கள் மௌன மொழி ’’கிளிக்’’கி பார்க்கலாமே போதும் சரி அடுத்த விசயங்களுக்கு போவோமா ? ஊர்கோலம் இருங்க கொஞ்சம் சூட்தண் குடிச்சுட்டு வர்றேன்
அன்பு நெஞ்சங்களே... தில்லை அகத்தாரே  முனைவர் திரு. P.ஜம்புலிங்கம் அவர்களே இந்த வாரம் நாங்களும் அரைசெஞ்சுரி அடிச்சோம்ல... நான் நினைச்சேனே ? முழுசதமும் அடிச்சுருப்பேன் நீங்கதான் கில்லர்ஜியிடமிருந்து வித்தியாசமாக எதிர்பார்க்கிறோம்னு சொல்லி சொல்லி எனது சிந்தனையை ரணகளமாக்கி, ரத்தக்குளமாக்கிட்டீங்களே... அதனால, இப்புட்டுதான் முடிஞ்சது அடுத்த வலைச்சர ஆசிரியர் கிடைத்தால் (?) (அடுத்துமா ? ஐயாசாமி ஆளை விடப்பா.. யாரது ? இடையிலே) நிச்சயம் 100 சதம் அடிக்க முயற்சிக்கிறேன் நமது சிந்தனைகள் ரணமாகும் பொழுது சூட்தண் குடிக்கச்சொல்லி எனது ஐயன் ஞானி ஸ்ரீபூவு அவர்கள் அதன் செய்முறையையும் சொல்லிக்கொடுத்து இருக்காரு.. அது எப்படினு ஏற்கனவே உங்கள் எல்லோருக்குமே பதிவுல சொல்லியிருக்கிறேன் அந்தப்பதிவை படிக்காதவர்கள் இதை  கிளிக்கி படித்துக்கொள்ளவும்.
நண்பர்களே ஒரு நற்செய்தி நான் மதவாதி அல்ல ஆனால் ? கீதாசாரத்தில் வரும்....
என்ன நடந்ததோ அது நன்றாக நடந்தது
என்ன நடக்கிறதோ அதுவும் நடக்கிறது
இந்த நடைமுறை யதார்த்தத்தை நம்புபவன் இதை உலக அளவிலான சுமார் 25 மொழிகளை தேர்ந்தெடுத்து மொழி மாற்றம் செய்து எனது வலைப்பூவில் வெளியிடலாமென தீர்மானித்திருக்கிறேன் இதற்க்கு எப்படியும் ஒரு வருடம் ஆகலாம் இது வெற்றியடைய தங்களின் வாழ்த்துகளை தருவீரே.....
 
 
இனிய உறவுகளே.... என்னை கில்லர்ஜி யில் தொடரும் பதிவர்கள் அடுத்த பாராவை படிக்கச்செல்லலாம் நான் வலைச்சர ஆசிரியராக இருந்த கடந்த வாரத்தில் புதிய சொந்தங்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அவர்களிடம் ஒரு கேள்வி வலைச்சரம் என்பது ஒரு மிகப்பெரிய ஆலமரம் பல விழுதுகளை படர விட்டுள்ளது இந்த ஆலமரத்தினிலே அற்புத மாடத்திலே பதிவர்கள் என்ற நாமெல்லாம் வந்து இளைப்பாறும் மாடப்புறாக்கள் அதில் சிறகு முளைக்கத்தொடங்கிய இந்த கில்லர்ஜி யும் ஒரு குஞ்சு இந்தக்குஞ்சை வளர்த்து பருந்தாக வளர்த்து விடவேண்டாம் ஒரு காக்கையாகவாவது வளர்த்து விடுங்கள் நான் வலைச்சரத்தையும், உங்களையும், என்னையும் பிரிக்க விரும்பவில்லை தங்களது கடந்த வார வரவுகள் வலைச்சரத்துக்காகவா ? எனக்காகவா ? எனக்காக ? என்றால் ? இந்தவாரம் இன்றைய மனிதர்கள் எவ்வளவு விசயங்களை இழந்து எதையோ நோக்கி ஓடுகிறோம் என்பதை வலியுறுத்தி அன்றைய மனிதர்கள். பதிவுக்கு ஏன் ? வரவில்லை அதன் தொடச்சியாக அடுத்து வரும் இன்றைய MONEYதர்கள் அதற்காகவாவது வாருங்கள் எனது எழுத்துக்களில். கருத்துக்களில் குற்றம் ,குறையிருப்பின் தாராளமாக எழுதலாம் எல்லாம் தெரிந்தவர் எவருமில்லை, எவரும் எல்லாமும் தெரிந்து கொள்வதும்மில்லை நான் மதுரை விழாவில் பேசியதுபோல ஜிலேபியின் சக்களத்தி என்று சொல்வார்களே ஜூஜூபி அந்த மாதிரியான பதிவுகளைத்தான் தற்போது தூவிக்கொண்டு இருக்கிறேன் எனது சிந்த்தனையின் வெளிப்பாடுகள் இன்னும் வெளிவரவில்லை 80தே எனக்கு மட்டும் தெரிந்த உண்மை உங்களிடம் காசோ, பணமோவா கேட்டேன் ? எவ்வளவோ நேரம் ஒதுக்கி நானாட, நாயாட இந்த மாதிரி ப்ரோக்ராம் பார்க்கிறீர்கள் பயனுள்ள நல்ல விசயங்களை மட்டுமே நான் தருகிறேன் இதைக்காணக்கூடாதா ? நான் எனது ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன் என்னுள் எழுந்தவை இந்த விண்ணில் விதைக்கவா ? இல்லை என்னுள் புதைக்கவா ? இதுவே எமது சிரம் தாழ்ந்த கேள்வி
நேற்று முன்தினம் ஞானி ஸ்ரீபூவு அவர்கள் என்னை காமராஜரை எதுக்குடா ? முறைச்சுப்பார்க்கிறே ? என்று கேட்டாரே.. அதில் இல்லையா ? கர்மவீரர் காமராஜரைப்பற்றிய எனது சிந்தனை யாரும் செல்லவில்லையே அந்தத்தலைவனைக்காண.... ஒருவேளை அவர் மோடி மஸ்தானோ ?
 

பார்த்தீர்களா ? எந்த காரணத்திற்காக நான் பிள்ளையாரை வெறுத்தேனோ ? இந்த அரபு தேசத்தில் சட்டப்படி பிள்ளையாரின் பெயரில்தான் (எனது தந்தையார் தெய்வத்திரு. கணபதி அவர்கள்) வாழவேண்டிய சூழல் அதனாலென்ன ? எனக்கு உயிர் கொடுத்த தந்தைக்கு இதைக்கூட நான் கொடுக்ககூடாதா ? என்ன ? கில்லர்ஜியை கொன்று விட்டார்கள் ஆம் கொலைகாரனை கொன்றால்தான் என்ன ? எனது அலுவலகத்தில் பெயர்ப்பலகைகூட அவரின் பெயரே சற்றே வருத்தமாக இருக்கிறது காரணம், கில்லர்ஜியின் பெயர் வராமல் எனது தந்தையின் பெயர் வந்து விட்டதால் அல்ல U.A.E அரசு அலுவலகத்தில் தொங்கும் இந்த பலகையை எனது தந்தையார் காணாமல் போய் விட்டாரே... என்ற வேதனையே.... இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ? இந்தப்பெயரை அரபியில் எழுதியிருப்பது ஜானாபாதி ஏற்கனவே இறந்தவரை மீண்டும் கொல்வதா ? காரணம் அரேபியர்கள் G யை J என்றுதான் உச்சரிப்பார்கள்.
எனது தந்தையார் பெயர் ணபதி
எனது பெயர் KILLER
இப்படி எனது பெயரை எழுதினால் சமூகம் என்னை ‘’கொலைகாரன்’’ என்று சொல்லி விடுமே (இப்ப மட்டும் என்ன ? வாழுதாம்) என்று அஞ்சியே... எனது பாஸ்போர்டில் தந்தையின் பெயரை முன்னிருத்தி கில்லர்ஜியை பின்னிருத்தினேன் அது அப்படியே பின்னுக்கே போய் விட்டது சரி வலைப்பூவில் கில்லர் என்று போட்டால் பயந்து யாரும் வரமாட்டார்கள் ஆகவே தந்தையின் பெயரில் முதல் எழுத்து G
KILLER. G
இப்படி போட்டால் ? பொருத்தமில்லையே... ஆகவே KILLER gee எப்பூடி ? உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ அப்பாடா... போதுமா ?
திரு. G.M. பாலசுப்பிரமணியன் அவர்களே...
திரு. நா. முத்து நிலவன் அவர்களே...
திரு. ஊமைக்கனவுகள் அவர்களே...
திரு. மணவை. ஜேம்ஸ் அவர்களே...
திருமதி. மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களே...
திருமதி. சசிகலா அவர்களே...
இன்னும்..... அவர்களே..... இவர்களே... எவர்களேயாயினும் இதாங்க தங்கமலை ரகசியம்.
 இனிய நண்பர்களே... தங்களுக்காக கடந்த ஒருவாரமும் ஞாயிற்றுக்கிழமை ஞானம்பாளுக்கு விரதம் இருக்கத்தொடங்கி, சனிக்கிழமை சங்கீதாவுக்கு விரதம் இருந்து தினம் 9 நவரத்தினங்களை ஜொலிக்க விட்ட கருங்கல் நான் முதல் பதிவரான இனிய நண்பர் திரு. துரை செல்வராஜூ அவர்கள் தொடங்கி.... இன்றைய கடைசி பதிவரான எனது திண்ணைப்பள்ளிக்கூட நண்பி வரை பெயருக்கு கீழே இஷா தொடங்கி... அனிம்னபூத் அபாட் என எழுதியிருந்தேன்.
இது என்ன ? தெரியுமா ? (இதைதானய்யா ? காலம் பூராம் கேட்டுக்கிட்டு இருக்கோம்) அதாவது இது பிலிப்பைன்ஸ் நாட்டின் மொழியான தகாலன் ஆகும் இதன் அர்த்தம் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, தொடங்கி இன்றோடு அறுபத்து நான்கு இதை ஒரு பதிவாக ஆடியோவில் 100 வரை பேசி பதிவிடுகிறேன்
அடுத்து தலைப்புகளில் நாந்தாங்கோ..... கில்லர்ஜி தொடங்கி இன்றைய மன்னிப்பு கோரலும், நன்றியுரையும் வரை தலைப்பில் ஒரு தவறு இருக்கிறது அது தெரியுமா ?
இதற்க்கான விடைகளை எனது கில்லர்ஜி யில் கருத்துரையில் எழுதலாம்
விடைகள் வரும் 2015 ஜனவரி 14 ஜய வருடம் தை மாதம் புதன்கிழமை உகாண்டா நாட்டு நேரம் இரவு 11.59 pm க்கு முன்பு வரை எழுதும் விடைகளை ஏற்றுக்கொண்டு கண்டு பிடித்து விட்டார் என அறிவிக்கப்படும்.
நான் நிறைய எழுத வேண்டுமென நினைத்தேன் பதிவு நீண்டு விட்டதால்....
அனிம்னபூத் அபாட்
நமக்கு வித்தியாசமாக எதையாவது கொடுப்போமே... அப்பிடினு தோணுச்சு அதுனால நான் எப்படியும் சுமார் 85 வருஷத்துக்கும் மேலே தொடர்ந்து படிச்சுக்கிட்டு வர்ற இந்த பதிவை தங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் புகைப்படத்துல இருக்கிறவரு என்னோட திண்ணைப்பள்ளிக்கூட
 நண்பி. திருமதி. குஜாலாம்பாள்.
 06.01.1835.
கீழே சொடுக்குங்க இப்பவே சொல்லிப்புட்டேன் பயப்புடக்கூடாது.....
 

அன்பு இதயங்களே... வணக்கம் இது எமது மன்னிப்பு கோரலும், விடை பெறலும்... முதலில் மன்னிப்பு தருவீரே காரணம் இதில் நிறைய நண்பர்களை அறிமுகப்படுத்த முடியாமல் விடுபட்டவர்கள் மட்டும் இந்த காணொளியை காணவும் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்தானே சிலரது மனம் அமைதி பெறுகிறது
காணொளி கேட்பீரே...
இதற்க்கு உங்களிடமிருந்து விரிவான கருத்துரையை எதிர்பார்க்கிறேன்.

அன்பு நெஞ்சங்களே... கடந்த ரம்ஜான் லீவுக்கு நண்பர் திரு. சொக்கன் சுப்பிரமணியன் அவர்கள் எனக்கு ஒரு ஆஸ்திரேலியா விசிட்  விசா அனுப்பினார் அங்கு போன எனக்கு அவர் செய்த துரோகத்தை விலாஎலும்பு முறிந்து போகும் அளவுக்கு உட்கார்ந்து எழுதி வைத்துள்ளேன் அதை விலாவாரியாக தங்களுக்கு எனது கில்லர்ஜி வலைப்பூவில் வழங்குகிறேன் கண்டிப்பாக படித்து சிலிர்பீரே... அல்லது சிரிப்பீரே...
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

இன்றைய கொசுறுகள்
Killergee உலகம் எப்படி, போயிருச்சு பார்த்தியா ? செல்போணுக்கு உள்ளே..
கில்லர்ஜி – அப்படினா ? இப்ப நீங்க எந்த இடத்திலே இருக்கீங்க ஃப்ரதர் ?
Killergee - ?  ? ?
 

நன்றி
शुक्रिया
ధన్యవాదాలు
നന്നി
Thanks
شــكرا
சலாமத்
இஸ்தூத்தி
ஒல்லது
 * * * * *
அன்புடன்
 என்றும் உங்கள்
Devakottai KILLERGEE Abu Dhabi
(கில்லர்ஜி தேவகோட்டையான்)
 
நேற்று இரவு புதிய ஆசை கனவுல முளைத்தது நண்பர் திரு. கரந்தையார், நண்பர் திரு. சே.குமார் அவர்களைப்பார்த்து பொறாமைப்பட்டேன் நாமலும் தொடர்கதை எழுதினால் என்ன ? என்று ஆனால் ? புலிகளைப்பார்த்து எலி ஆசைப்படலாமா ? வீட்டுக்குள் புலி வந்தால் பயந்து ஓடுவார்கள் எலி வந்தால் ? வெளக்கமாத்தை வைத்து ‘’சட்டீர்’’ (இங்கும் சட்டீரா ?) அடித்து விட்டால் ? அதான் பயமாகீது.....
 
மதிப்பிற்குறிய ஐயா திரு. ஜியெம்பி மற்றும்,  திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு ஞானி ஸ்ரீபூவுவைப்பற்றி நிறைய இருக்கிறது கில்லர்ஜியில் எழுதுகிறேன்.
 
எமது வலைப்பூ கில்லர்ஜியில் அன்றைய மனிதர்கள். ‘’கிளிக்’’கலாமே.
 
 
 மனசை தமிழ்ப்படத்து கசாநாயகனைப்போல தந்த இறைவன் MOONஸி யை ஆங்கிலப்படத்து வில்லனைப்போல கொடுத்துட்டானே....
தேவகோட்டை சந்தனக்காட்டில்....

நண்பர்களே கில்லர்ஜி க்கு இன்னொரு பெயர் உண்டு  அதுதான்.

கீழே சொடுக்குக...

வாழ்க ! தமிழ்.


* * * * * * * * * * * * * * * * * *

95 comments:

  1. தம. 1
    தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன்.

    பெயர் ரகசியம் வெளியிடப்பட்டது...

    கலகலன்னு போச்சு ஒரு வார காலம்.

    இன்று மனசு பாரமாகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மணத்தில் கடுகு போட்டு மணக்க விட்டமைக்கு ஒரு ராயல் சல்யூட்.
      ரகசியத்தை எவ்வளவு நாளைக்குத்தான் பூட்டி வைக்க முடியும்
      சந்தோஷம்
      ஒருவேளை நான் பிரிந்து போவதாலே... நன்றி

      Delete
  2. வித்தியாசமான விந்தை மனிதர் தங்களின் வித்தியாசமான அறிமுகங்கள் இவ்வாரம் முழுதும்...வித்தியாசமாக ஒளி, ஒலி....பரப்பாகியது...



    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்க்கு நன்றி.

      Delete
  3. ஒவ்வொருத்தருக்கும் கீழே போட்டு இருந்ததை பற்றி கூகுளில் பார்த்தேன் நம்பர் என தெரிந்து கொண்டேன் அப்போதே...ஆனால் மொழி எது என பார்க்கவில்லை.

    கருத்து நீண்டு கொண்டே போவதால் எல்லாவற்றிற்கும் ஒரு சபாஷ்....சகோ.

    வாழ்த்துக்களுடன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்களும் நன்றியும்.

      Delete
  4. உலகம் சுற்றும் வாலிபனின் வலைச்சரத்தை விட்டு விடைபெற்றாலும் நாங்கள் அவரை விட்டுவிடப்போவதில்லையே!
    மன்னிக்கவும் ஜி.
    என்னால் தொடர்ந்து பின்னூட்டம் இட முடியவில்லை.
    ஆசிரியராக ஒரு வாரம் பணியாற்றியதால் எவ்வளவு கஷ்டம் ஹோம் வொர்க் நோட்ஸ் ஆப் லெசன் எல்லாம் எழுதியிருப்பீர்கள் என்று தெரிகிறது.
    தங்களது அன்பை, என்றும் மறவேன்.
    பெயர் ரகசியம் தெரிந்ததில் பெருமகிழ்ச்சி.
    உண்மையில் தங்களின் பன்மொழிப் புலமையும், இருகை எழுத்தும் ஆச்சரியம் ஊட்டுகின்றன.
    பூப்பறிக்க வருகிறேன் அங்கு!!
    நன்றி
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. அட நமக்கு முன்னாடியே ரெண்டுபேர் முந்திகிட்டாங்களா?
      அப்ப த ம 3
      நன்றி

      Delete
    2. வருக கவிஞரே தங்கள் மீது எனக்கு கோபம் உள்ளது உண்மையே..... என்ற உண்மையை இங்கு பதிவு செய்கிறேன்
      ரகசியம் அறிந்து மகிழ்ச்சியா ? இப்பொழுது உங்களது தொந்தரவிலிருந்து விடுதலை பெற்றதற்க்கு எனக்கு மகிழ்ச்சி.

      வருகை (இன்றாவது) வந்து பாராட்டிற்க்கு நன்றி.
      மஹாத்மா காந்தியோடு நான் பொறாமைப்படுவதால் உங்களுக்குப் பொறாமையா ?
      பூப்பறிக்க வாங்க கோடரியோடு காத்திருக்கிறேன்

      Delete
    3. ஆமாமா, அவங்க தெனம் வர்றவங்க...

      Delete
  5. வலைச்சரத்துல போட்டு ஓட்டும் போட்டுட்டோம் ஜி!..

    இத்தனை நாட்களும் மிகவும் வித்தியாசமான படைப்புகளுடனும், காணொளியுடனும், படங்களுடனும் எங்களையும் உங்களுடன் பயணிக்க வைத்தமைக்கு னாங்கள்தான் நன்றி கூற வேண்டும்.

    நண்பர் சொக்கனைப் பற்றி விலாவாரியாக எழுதி, விலா எலும்பு உடைன்சதுனாலதான் அப்படி விலாவைப் பிடித்துக் கொண்டு இருக்கீங்களொ??

    அருமையான வாரமாக்கி எங்கள் எல்லோரையும் மகிழ்வித்தீர்கள் ஜி! மிக்க நன்றி! மீண்டும் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க என்ன தயக்கம் ஜி?! இன்னும் நீங்கள் நிறைய படைப்பீர்கள்.

    டெக்னாலஜியிலும் தாங்கள் களை கட்டிவிட்டீர்கள்....நன்றி நன்றி

    வாழ்த்துக்கள் ஜி!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எங்கு சென்றாலும் உங்களைத் தொடர்ந்து கொண்டேதான் இருப்போம்...நீர் சித்தப்பா என்றால் நாங்கள் பெரியப்பா....புரின்சுதா....அதான் நீக மயில் மேல பறந்தீங்கன்னா நாங்க பிள்ளையார் மாதிரி இங்க இருந்துகிட்டே உங்களத் தொடர்ந்து வருமோம்ல...ஞானப்பழம் கிடைக்கும் ....ஞானி ஸ்ரீபூவு கொடுப்பாரு...ஹஹஹ்

      Delete
    2. ஓட்டளித்தமைக்கு நன்றி
      சரி நன்றி கூறுங்கள் நன்றி கூறவேண்டும்னு சொன்னால் போதுமா ?

      ஆமாமா, எல்லாருமே துரோகம் செய்யிறவங்களாத்தானே இருக்காங்க... சிலபேர் மோசடிக்காரவுங்களாவும் இருக்காங்களே... விலா எலும்பு வலியை சரியாக புரிந்து கொண்டது தாங்கள் மட்டுமே..

      மீண்டுமா ? ஐயா சாமி ஆளை விடுங்க நான் ஒருமாதம் லீவு போட்டு உகாண்டா போறேன்
      வாழ்த்துகளுக்கு நன்றி.

      Delete
    3. குடும்ப உறவுகாளாய் இருப்பதில் சந்தோஷமே,,, //ஞானப்பழம்// இதை யார் தின்பது ? சொல்லவே இல்லை.
      நன்றி.

      Delete
  6. Replies
    1. வருக ரத்தினச்சுருக்கமாய் முடித்து விட்டீர்களே.... ‘’வாவ் !!!!!!! (அவ்வ்வ்வ்வ்வ்வ்)

      Delete
  7. நண்பரே...

    பல முறை பின்னூட்டங்கள் குறிப்பிட்டிருக்கிறேன்... நான் சற்று அதிகமாகவே உணர்ச்சிவசப்படுபவன்...

    இந்த பின்னூட்டத்தில் நிறைய எழுத நினைத்தேன்... ஏனோ வார்த்தைகள் கிடைக்கவில்லை !

    நீங்கள் விரும்புவதைவிடவும் அதிகமான சிறப்புகளை வாழ்வில் பெற வாழ்த்துகிறேன்.

    என்றும் தோழமையுடன்
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா, உணர்ச்சியை கட்டுப்படுத்துங்க...

      எழுதுவதற்க்கு வார்த்தை கிடைக்கவில்லையா ? நமது இனிய தமிழில் 247 எழுத்து இருக்கிறதே ஆங்கிலத்தில் 26 இருக்குனு சொல்லக்கேள்வி

      மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா தொடரந்து மலரட்டுமே.... நட்பூ.

      Delete
    2. இக்கருத்தினை வழிமொழிகின்றேன்!
      ஆம் மீசைக் கார அய்யா!
      "சொல்வதெல்லாம் உண்மை"
      குழலின்னிசை கருத்து இசை இசைகாததன் மர்மம்
      இப்போது புரிந்திருக்குமே?
      சொல்லத்தான் நினைக்கிறேன்
      வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன்!(கருத்து கருப்புசாமியை போல!)
      நன்றி!
      புதுவை வேலு

      Delete
    3. இக்கருத்தினை வழிமொழிகின்றேன்!
      ஆம் மீசைக் கார அய்யா!
      "சொல்வதெல்லாம் உண்மை"
      குழலின்னிசை கருத்து இசை இசைகாததன் மர்மம்
      இப்போது புரிந்திருக்குமே?
      சொல்லத்தான் நினைக்கிறேன்
      வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன்!(கருத்து கருப்புசாமியை போல!)
      நன்றி!
      புதுவை வேலு

      Delete
    4. குழலூதி வந்த குதூகலமானவரே தங்களின் தொடர் வரவு இருக்கட்டும் நன்றி.

      Delete
  8. வலைச்சரம் பொறுப்பை அழகாய் நிறைவு செய்தீர்கள். வாழ்த்துக்கள்.
    குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள், அனைவரையும் இடம்பெற செய்தமைக்கு வாழ்த்துக்கள்.
    காணொளிகள் எல்லாம் அருமை.

    கீதாசாரத்தை பலமொழிகளில் மொழி மாற்றம் நீங்கள் செய்யபோவது மகிழ்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வருக மனமார்ந்த பாராட்டுக்கும், வாழ்த்திற்க்கும் நன்றிகள் கோடி
      மீண்டும் நன்றி

      Delete
  9. பெயர் ரகசியம் அருமை. இவ்வாரம் அழகான ஒரு தொடர் பயணம் சிறப்பாண பணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பெயர் ரகசியம் அறிந்ததனால் வாழ்த்தியமைக்கு நன்றி.

      Delete
  10. இனி தங்களின் தளத்தில் சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. சந்தித்தால் ? சந்தோஷமே நண்பா நன்றி

      Delete
  11. மன்னிப்பு ஆஹா அழகான கற்கை மொழி!ஹீ

    ReplyDelete
    Replies
    1. ஆஹா கற்கை ஸூப்பரப்பூ.

      Delete
  12. அஹா அருமை. எவ்ளோ பெரிய இடுகை.. :) -- இதை தேவயானி ஸ்டைலில் படிக்கவும்.:)

    வாழ்த்துகள் கில்லர்ஜி :)

    ReplyDelete
    Replies
    1. எனது பதிவுக்கு முதல் முறை வருகை தந்த தி கிரேட் தேவகோட்டை கவிஞருக்கு ஒரு சல்யூட் AND நன்றி.

      Delete
  13. வணக்கம்
    எவ்வளவு சிரமத்துக்கு மத்தியில் சிறப்பாக பணியை செய்து முடித்த தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
    நன்றியுரை மிக அருமையாக உள்ளது
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க, ரூபன் இத்தனை பேரிடமிருந்து பாராட்டு கிடைக்கும்போது அந்த சிரமத்தின் ரூபம் கண்களுக்கு தெரியவில்லை நண்பா..... நன்றி

      Delete
  14. வலைச்சர ஆசிரியராக சிறப்பாக பணியாற்றியமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே.... வாழ்த்துகளுக்கு நன்றி

      Delete
  15. ஊரிலிருந்து திரும்பியதும்விட்டுப் போனவற்றை படித்து முடித்தேன். இப்படி ஒரு வித்தியாசமான வலைசர அறிமுகத்தை இதுவரை பாரத்ததில்லை.
    படங்கள் அட்டகாசம் . பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா பாரதீயின் பாராட்டு கிடைத்ததில் நன்றி.

      Delete
  16. அன்பின் ஜி!..

    மனம் சற்றே கலங்குகின்றது..
    வலைச்சர ஆசிரியராக பணியேற்று வெகு சிறப்பாக பணியாற்றி
    நிறைவு செய்தமைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்..

    மேன்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே.. முதல் பதிவில் என்ன ? சொன்னேன் முடிவில்தானே கலங்க வைத்தேன்... அதுதானே கில்லர்ஜியின் பாணி....

      மகளை திருமணம் செய்து கொடுத்து வாழவைக்க சந்தோஷமாக அனுப்புகிறோம் ஆனால் ? கண் கலங்குகிறதே... ஏன் ? அதுபோல்தான், இதுவும் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

      Delete
  17. வணக்கம்
    அசத்தலான பணி வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முடிவில் வருகை தந்து அசத்தியமைக்கு நன்றி தோழரே...

      Delete
  18. எழுமைக்கும் ஏமாப்பு ...
    ஏழாவது வாக்கு ...

    ReplyDelete
    Replies
    1. இந்த ஏழைக்கு ஏழாவது வாக்கு தந்தமைக்கு ஏழுமலையான் அருளட்டுமென பிரார்திக்கிறேன் தோழா...

      Delete
  19. அசுர உழைப்பு ஜி... வாழ்த்துக்கள் பல....

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஜி விலா எலும்பு கழண்டு போச்சு ஆனால் ? அனைவரது பாராட்டும் கண்டு அது சூ, சூனு காணாமல் போச்சூ.....

      Delete
  20. தங்கமலை இரகசியத்தை அறிந்து கொண்டேன் நண்பரே
    தங்களின் அயரா, தளரா உழைப்பு வியக்கவைக்கின்றது
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருக தங்கமலை இரகசியம் கண்டு தாங்கள் சந்தோஷம் கண்டதை கண்டு நான் சந்தோஷிக்கிறேன் நண்பரே...

      நண்பரே, வியக்க வைத்ததா ? அப்படியானால் ? இந்த வியப்பு ஆரம்பம் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் தொடர் வருகைக்கு நன்றி நண்பரே...

      Delete
  21. Replies
    1. பத்தாவதாய் குத்து விட்டமைக்கு நன்றி.

      Delete
  22. இன்றைய தினமே வலைச்சரத்தின் முதல் தினமாக இருந்திருக்க கூடாதா என்று நினைக்க வைத்த தொகுப்பு ஜீ..

    ஆசிரியர் மேல் இருக்கும் மதிப்பும் , பெற்றோர் மூதாதையர் மேலிருக்கும் மரியாதையும் துணைவியார் மீது வைத்திருக்கும் பற்றும் மிக அழகாக உங்கள் எழுத்துகள் சொல்லிவிட்டது...

    இத்தனை நாள் எங்கள் எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த உங்கள் எழுத்துகள் இன்று மனதை பாரமாக்கிவிட்டது... உறவுகளின் மேன்மையை மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். பிள்ளைகளுக்கு நம் மூதாதையர்களின் பெயர்களை சொல்லித்தாருங்கள்... எத்தனை சத்தியமான வார்த்தை... ஆமாம் உண்மையே... நிறைய நல்ல நல்ல விஷயங்களை சொல்லிக்கொண்டே சென்ற நீங்கள் மனதை நெகிழவும் வைத்து விட்டீர்கள் ஜீ.

    மன்னிப்புக்கோரலும் நன்றி நவிலலும் மிக அற்புதமாய் எழுதி இருக்கிறீர்கள்.

    அப்பாவின் பெயர் மட்டுமல்ல, மூதாதையரின் ஆசிகளும் என்றென்றும் ஆசிர்வாதமாக உங்களை தொடர்ந்துக்கொண்டே இருக்கும்..

    ஒவ்வொரு நாளும் வலைச்சரத்தில் வித்தியாசமாக எழுத எத்தனை உழைத்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் வரிகள் சொல்கிறது சாட்சியாய்..

    பிலிப்பைன்ஸ் மொழியில் நீங்க எழுதியது என்பதை அறிய தந்தமைக்கு நன்றிகள்.

    நாட்கள் போனதே தெரியவில்லை... சீக்கிரமே ஒரு வாரம் முடிந்தது போன்று இருக்கிறது.

    மீண்டும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பாகும் வாய்ப்பு கிடைத்தால் இதே போல் ரசனையாக எழுதி ஜமாய்ப்பீர்கள் எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பீர்கள் என்ற எதிர்ப்பார்ப்போடு இன்றைய வலைச்சர தொகுப்பு சொல்லிவிட்டது ஜீ.

    நெஞ்சார்ந்த அன்பு வாழ்த்துகள் ஜீ.

    த,ம.11

    ReplyDelete
    Replies
    1. வருக, இந்த வாரம் முழுவதும் தொடர் ஆதரவு தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் என்னை இந்த வலையில் பிடித்து ஐயா அன்பின் சீனா அவர்களிடம் கொடுத்ததே தாங்கள்தான் இதை பதிவில் எழுதாததற்க்கு காரணம் உண்டு தாங்கள் மட்டுமல்ல நிறைய நண்பர்களை குறித்து எழுத வேண்டும் இதில் பதிவு நீண்டு போனதால் விடக்கூடிய சூழல் அதனால் என்ன ? இருக்கிறதே... கில்லர்ஜியில் இடம், வால்மீகியில் இடம் ஆகவே அதனைக்குறித்து தனிப்பதிவாக எழுதப்போகிறேன்

      //மாதா, பிதாக்களை, குருவை மதிக்காதவன் குவைத் போனாலும் முன்னேற முடியாது இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு//
      ஆகவே அதனைச்செய்தேன்.

      மனைவி எனது ஜீவன் உள்ளவரை மறக்க முடியாத, மறக்க கூடாத ஜீவன்.

      இதைத்தானே தொடக்கத்தில் (நாந்தாங்கோ..... கில்லர்ஜி) சொல்லியிருந்தேன்.

      ஆம் எமது ஆதங்கமே அது.

      மனமார்ந்த வாழ்த்துகளுக்கு, எமது மனமார்ந்த வாழ்த்துகள்.

      அடுத்து என்னமோவுல... இருங்க மேலே போயிட்டு வர்றேன்..

      ஆங், பிலிப்பைன்ஸ் மொழி தாங்கள் கேட்டதில்லையா ?

      நேரம் போனது ஏன் ? தெரியவில்லை ஒருவாரமாக, தூங்கினீங்களா ?

      மீண்டுமா ? என்னை டென்சன் ஆக்காதீங்க சொல்லிப்புட்டேன் ஆமா...

      வாழ்த்தியமைக்கு மீண்டும் 1 ½ கிலோ நன்றி.

      Delete
  23. ஒரு வார பதிவுகளில் உங்களுடைய கடுமையான உழைப்பு தெரிந்தது ,வெற்றிகரமாய் காரியத்தை முடித்ததற்கு வாழ்த்துகள்...பெயரில் gee வந்த காரணம் அறிந்தேன் ,killar எப்படி வந்தார் ?
    த ம 12

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்க்கும் நன்றிகள் பகவான்ஜி.

      இப்பத்தான் கண்டத்திலிருந்து தப்பிச்சேன் மறுபடியும் ஏன் ? பகவானே என்னை சோதிக்கிறீங்க.... (வலைப்பூவுல இதெல்லாம் சகஜமப்பூ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

      Delete
  24. கடந்த ஒரு வார காலமாக, வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்று, அப் பணியினை திறம்படச் செய்த அன்பு நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.
    த.ம.13

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் வருகைக்கும், வாழ்த்திற்க்கும், வாக்கிற்க்கும், இவ்வார தொடர் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  25. அன்புள்ள ஜி,

    ’ ஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றும்’ இளங்கோவடிகளின் இனிய வரிகள் நினைவிற்கு வந்தன. வலைத்தளத்தில் ஒரு வாரகாலம் நண்பர்களை வளைத்துப் போட்டு வாகை சூடினீர்!

    நமோன மகாவென்று பெரியப்புவை பெர்லின் ஒய்யாரமாக திருவரங்க அரங்கநாதனைப் போல் படுக்க வைத்து விட்டீர்கள்.... ஆமாம் அவரும் எத்தனை நாளுக்குத்தான் தூங்காமலே தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார். படுத்திருக்கட்டும்... அவராவது நிம்மதியாக உரங்க வரம்... இல்லை இல்லை இடம் கொடுப்போம்!

    மௌனம்தான் பேசியதோ? பேசிய வர்த்தைகண்டு மௌனியாகிப் போனேன். தங்களுக்குள் இடைவெளி எப்படி என்று உணர முடியவில்லை... ஈகோ என்று சொன்னது தெரிந்ததது. இதிலிருந்து ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ வேண்டும் என்பதை உணர்த்தியிருந்தீர்கள்... இல்லை யென்றால் வாழ்க்கை நம்மை விட்டுச் செல்லும் என்பது உணர முடிந்தது.
    எது எப்படியோ இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று.
    ‘நீயும் நானும் ஒண்ணாச் சேரும் காலம் வாராதோ’ என்று எதிர்ப்பார்ப்பு தெரிந்தது.
    திரு. குருந்தன் ஆசிரியர் அவர்களிடம் காண்பித்து அவர் மூலமே பொன்னம்மாவை சந்தித்து இந்த வலைச்சரத்தில் அவர்களைப்பற்றி தொடுத்ததை சொல்ல வேண்டுமென்ற ஆவல் நிறைவேற வேண்டும். அப்போது தங்களின் மகிழ்ச்சி இருட்டிப்பாகும். மகிழ்ச்சியாக இருக்கங்கள். தமிழ்வாணனைப் பார்த்துக் கொள்ளுங்கள்... தங்களின் கனவுகளெல்லாம் அவன் நனவாக்கட்டும்.

    வாரம் முழுதும் வசந்தமாக இருந்தது. மிகுந்த சிரத்தை எடுத்து காணொளி காட்சிகள் எல்லாம் கொடுத்து அசத்திவிட்டீர்கள். அருமை. மிகவும் சிறப்பாக செய்ததற்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

    ‘திங்கள் போற்றுதும்... திங்கள் போற்றுதும்’ என்று சொல்லலாம் என்றால் மாப்பு வச்சுட்டாயா ஆப்பு!
    -நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருக மணவையாரே... இளங்கோவடிகள் வடித்த கவிதையை தங்களின் நினைவிற்க்கு கொண்டு வந்தமைக்கு நான் காரண(கர்த்தாவாக) இருந்தது கண்டு மகிழ்ச்சியே..

      ஆம் நண்பரே அவரும் ஓய்வெடுக்கட்டும்

      மௌனமொழியை கண்டு கருத்திட்டமையை கண்டு பதில் அறியா பாவியாகி மௌனித்திருக்கிறேன் மணவையாரே...

      ஆம் நண்பரே, ‘’ஈகோ’’வைக்களைந்தாலே... நமக்குள் ஈர்ப்பு சக்தி உண்டாகும் 80தை எல்லோருமே உணர்ந்தால் ஈனமில்லை வாழ்வில்.

      ஆம் நண்பரே.. கடந்த ஒருவாரத்தில் உதித்த புதிய ஆசை எமக்கு.

      மனம் நிறைந்த பாராட்டுக்கு நன்றி

      திங்கள் போற்றுதும்... திங்கள் போற்றுதும்’ நண்பரே இவ்வளவு நேரம் நல்லாத்தானே எழுதிக்கிட்டு வந்தீங்க... ய்யே……ன் ? (From வடிவேலு)

      Delete
  26. சகோ படிக்கப் படிக்கப் படிக்கத்தூண்டும்நகைச்சுவையான
    விருவிருப்பானபதிவு, ஆனா இனிமேல் வரும் ஆசிரியர்கள் கொஞம்
    யோசிப்பாங்களோ....................?

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க, யோசித்தால்தானே... எழுதமுடியும் (அவ்வ்வ்வ்வ்வ்வ்)

      Delete
  27. அண்ணா!!!
    பதிவு ரன்டகா ,ரண்டானு செம கலக்கல்!! இஇப்போ தெரிஞ்சுருச்சு பெயர்காரணம்:)) ஒருவாரமும் photoshop , கலர் எழுத்து, விதவிதமா பேரு!!! சூப்பர்ணா!!

    ReplyDelete
    Replies
    1. அடடே இது, ஸூப்பராகீதே.... தினம் வந்து இந்த மாதிரி ‘’ஐடியா ஐஸ்வர்யா’’ மாதிரி கொடுத்திருக்கனும் இப்படி ஆடிக்கும், அமாவாசைக்கும், ஆடியசைஞ்சு வந்தா.....

      இருப்பினும் ¾ கிலோ நன்றி

      Delete
  28. சூப்பர்,கலக்கல் பதிவுகள்.உங்கள் ஆசிரியப்பணியை மிகவும் திறம்பட,நகைச்சுவையாக ஒருவாரகாலம் நடத்தி முடித்திருக்கிறீங்க. பெயர்க்காரணம் அறிந்துகொண்டாயிற்று. இப்பதிவு செண்டிமெண்டாக முடித்திருக்கிறீங்க. உண்மையில் நீங்க சொன்னமாதிரி நம்பிள்ளைகளுக்கு முன்னோர்களின் பெயர்கள் கண்டிப்பாக தெரியப்படுத்தனும்.நல்லவிதமாக அபாரமாக பணியை முடித்தமைக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்து வாழ்த்தியமைக்கு 1 ½ கிலோ நன்றி.

      Delete
  29. பெரும்பாலும் பிரிவை நினைத்து நான் கவலைப்பட்டதில்லை . என்னுடைய கல்லூரி இறுதி ஆண்டின்போது கூட நண்பர்கள் அனைவரும் கதறி அழுதுகொண்டிருக்கும்போது , ஜாலியாய் திரிந்துகொண்டிருந்தேன் . ஊரைவிட்டு கல்லூரிபடிப்பிற்காக வெளியூர் செல்லும்போது கூட அவ்வளவு பாரமாய் இல்லை . என்னவோ இன்று மாத்திரம் சிறு கவலை மனதுள்ளே குடிபுகுகிறது . இருந்தாலும் தங்களின் வலைப்பூ இருப்பதனால் , அந்த கவலை ஓரளவு குறையும் என்று மனதைத்தேற்றி கொள்கிறேன் அண்ணா ! இனிமையான நாட்கள் வேகமாய் போவது உண்மை என மீண்டும் தங்களின் வாயிலாக உணர்கிறேன் ! நன்றி அண்ணா !!!

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே எல்லா நாட்களுமே தங்களை கலாய்த்து பின்னூட்டமிட்ட நான் இன்று மட்டும் ஏனோ வார்த்தையின்றி தவிக்கின்றேன்,

      வாருங்கள் நண்பா, எனது கில்லர்ஜிக்கும், வால்மீகிக்கும் அதில் தொடர்ந்து கலாய்க்கலாம் தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி.

      Delete
  30. நிறைவாக பணி செய்து வெற்றிக்கொடி கட்டிவிட்டீர்கள் சகோதரரே ! வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் சக்சஸ் பார்முலாக்களூக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர் ஆதரவை கில்லர்ஜியிலும், வால்மீகியிலும் எதிர் பார்க்கிறேன் நன்றி.

      Delete
  31. அருமையான் பதிவுகள் உங்களின் உழைப்பில் மிளிர்ந்தன அனைத்தும்..இத்தனை நகைச்சுவை உணர்வு,கற்பனை வளம் இருக்குமென நினைக்கவில்லை...வாழ்த்துகள் சகோ...

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க, நானும் வந்துட்டேன் அப்படினு கடைசி பஸ்ஸு பிடிச்சாவது வந்தீங்களே.... அகத்காக மட்டும் 1 ½ கிலோ நன்றி.

      Delete
  32. தங்கமலை ரகசியத்தை சொல்லி.வேட்டி சட்டையுடன் காட்சி அளித்த கில்லர் ஜி வாழ்க! வளர்க!! வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்படன் முடித்து வெற்றி வாகை சூடிய நண்பர் கில்லர்ஜீ மேலும் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. தங்களின் தங்கமான மனசிலிருந்து வந்த வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே....

    ReplyDelete
  34. சிவாஜி படத்தில் ரஜினி ஸ்டைலுக்கு மாறிட்டீங்க போலிருக்கே!! வலைச்சரம் இறுதி அல்ல, உங்கள் வலைப்பூவில் தொடர்ந்து எழுதுங்க, தொடர்பில் இருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே,,,,
      ஆனால் சினிமாக்காரனோடு என்னை சேர்த்துப்பேசுவதை மானக்கேடாக நினைப்பவன் நான் இவங்களெல்லாம் செய்வதற்க்கு முன்பே நான் எனது கெட்டப்பை மாற்றிக்கொண்டே இருந்தவன், இருப்பவன்
      நன்றி

      Delete
  35. அருமையாக வலைச்சர ஆசிரியப் பணியைச் செய்து
    முடித்துள்ளீர்கள்! பெருமையே!.. வாழ்த்துகிறேன்!
    தங்களின் பெயரை அறியத்தந்ததும் நம் முன்னோர்களின் பெயரையும்
    அவர்கள் பற்றிச் சிறிதேனும் நம் பிள்ளைகளுக்கும் அறியத்தரவேண்டும்
    என்னும் நல்ல கருத்தும் மிக அருமை!
    மனதை நெருடும் பதிவாக இன்று பலவிடயங்கள் பகிர்ந்துள்ளீர்கள்!
    யாவும் நலமாக அமையும் சகோ!
    தொடர்ந்து உங்கள் பதிவுலகப் பதிவுகளில்
    சிறப்பிக்க வேண்டி வாழ்த்துகின்றேன்!

    ReplyDelete
  36. தங்களின் வருகைக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள் அண்ணா...
    கலக்கலான வாரமாக கொண்டு சென்றீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. நல்லது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  38. ஆஹா, இந்த ஒன்பது நாட்களும் கலக்கிட்டீங்க நண்பரே. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    "//எனது மகன் தமிழ் வாணனுக்கு எனது இன்ஷியலோடு எனது அப்பா, தாத்தா, தாத்தாவின் அப்பா, அவரின் அப்பா இப்படியே ஏழு நபர்களின் பெயர்களை சொல்லிக்கொடுத்து இருக்கிறேன் நான் பிழைத்திருந்தால் நாளை எனது பேரனுக்கும் சொல்லிக்கொடுத்துப்போவேன் //"

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு படம் என்று சொல்லுவார்கள். இந்த ஒரு விஷயமே போதும் தாங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிவதற்கு.

    அப்புறம் நான் உங்களுக்கு விசிட்டர் விசா அனுப்பிய புண்ணியத்துக்கு, நீங்க இங்க வந்து என்னைய பார்க்காம ஊரைச் சுத்திப்பார்த்த்துவிட்டு போயிருக்கீங்க. இதுக்கு நான் தான் என்னுடைய வலைப்பூவில "கஷ்டப்பட்டு எடுத்த விசிட்டர் விசாவும் பார்க்காமல் சென்ற நண்பரும்" அப்படின்கிற தலைப்புல ஒரு பெரிய பதிவை போடணும். தெரிஞ்சுக்குங்க..

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே... இதில் இந்த விசயங்கள் எனது குடும்பத்தில் எனக்கே தெரியும் திடீரென யாரிடமாவது கேட்பேன் தினறி விடுவார்கள்.

      "கஷ்டப்பட்டு எடுத்த விசிட்டர் விசாவும் பார்க்காமல் சென்ற நண்பரும்" ஆஹா தலைப்பு கிடைச்சுருச்சே... இதை உல்டா பண்ணிடுறேன் நன்றி.

      Delete
  39. பதில் தெரியறதுக்காகவே காத்திருந்தேன்... இன்றுதான் வர முடிந்தது... அருமையாய் தங்கள் பணியைச் செய்துள்ளீர்கள். அதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பதில் தெரிஞ்சுடுத்தோனா ? நல்லது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  40. வித்தியாசமான முறையில் வலைச்சரத்திலும் அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே,,,,

      Delete
  41. கொடுத்த பணியை உங்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நிறைவு தருவதாய் முடித்திருக்கிறீர்கள்.

    தொடர்ந்து அசத்துங்கள் கில்லர் ஜி.

    ReplyDelete
    Replies
    1. வருக, லேட்டாக வந்து லேட்டஸ்டாக கருத்துரை தந்தமைக்கு.நன்றி. சகோ

      Delete
  42. அருமை! உங்கள் பதிவுகள் அத்தனையும் படித்தேன். எல்லாவற்றுக்கும் தமிழ்மண வாக்கும் அளித்தேன். உங்கள் நகைச்சுவை உணர்வு அபாரம்! 'வலைச்சர'த்தில் எழுதும் பலரும், தங்களுடைய எல்லாப் பதிவுக்கும் வாசகர்களை வரவழைப்பது எப்படி என மண்டையைப் பிய்த்துக் கொள்வது அவர்கள் பதிவில் தெரியும். ஆனால், மண்டையில் பிய்த்துக் கொள்ள எதுவும் இல்லாத நீங்களோ, சிரமமே இல்லாமல், ஒரு முழக் கதையை வைத்துக் கொண்டு, அதை இணுக்கு இணுக்காகப் பிய்த்துப் பரிமாறி 9 நாட்களைச் சுவையாக ஓட்டி விட்டீர்கள்! உங்களால் அறிமுகப்படுத்தப்படுபவர்களை / பரிந்துரைக்கப்படுபவர்களை அறிய ஆர்வமில்லாதவர்கள் கூட இந்தக் கதையின் முடிவைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு பதிவுக்கும் தவறாமல் வந்திருப்பார்கள்! நல்ல யோசனை!

    ஞானி ஸ்ரீபூவுவின் வாக்கு என்ற பெயரில் நீங்கள் பொழிந்த பொன்மொழிகள் அனைத்தும் அட்டகாசம்!!

    'கில்லர்ஜி' பெயர்க் காரணத்தை அறிவித்ததற்கு நன்றி! இருந்தாலும், நாங்கள் எல்லோரும் நினைத்தது, இது முழுக்கவே புனைபெயர் என்று. ஆனால், 'ஜி' மட்டும்தான் புனைவு. உண்மைப் பெயரே 'கில்லர்'தான் என்று கூறியிருப்பது இன்னும் நம்ப முடியாததாகவே இருக்கிறது. அத்தனை ஆண்டுகளுக்கு முன்பே உங்கள் வீட்டில், உங்களுக்குக் 'கில்லர்' என்று பெயர் வைத்தார்களா என்ன?

    தலைப்புகள் அத்தனையிலும் ஒரு (?!) தவறு இருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். கண்டுபிடிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே, வருகைக்கும், தமிழ்மண வாக்கு அளித்தமைக்கும் நன்றி விடயங்களை சரியாக கணித்தமைக்கும் மீண்டும் நன்றி கில்லர்-ஜி தான் பெயர் ஓகே, தலைப்புகளை கண்டு பிடிப்பதற்க்கு வாழ்த்துகள்

      Delete
  43. ஆனால், தலைப்புகளின் பெயர்க் காரணங்களை நீங்கள் விளக்கவே இல்லை. ஒவ்வொரு பதிவின் தலைப்பிலும் யாராவது ஒரு பெண்ணின் பெயர் சொல்லி அவருக்கு அன்று விரதம் என்று கூறியிருப்பதும், கூடவே ஏதாவது ஒரு படத்தின் பெயரையும், அதன் இயக்குநர், வெளியான ஆண்டு ஆகியவற்றையும் நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஏன்?

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமாக இருக்க வேண்டுமென்பதற்காக விரதமிருந்தேன்.

      முதல் பதிவு முதல் மரியாதை

      இரண்டாவது பதிவு இரண்டு மனம்

      இப்படியே.....

      Delete
  44. படங்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருப்பதற்கான காரணம் புரிந்துவிட்டது. அவை அந்தந்தப் பதிவின் எண்ணிக்கையைக் குறிக்கின்றன. ஆனால், மற்றபடி, தலைப்புகளில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. தலைப்பு 80சரிதான்

      தலைப்பின் பெயர்களில் ஒன்றில் தவறு இருக்கிறது....

      Delete
  45. தகாலன் பாஷையா எப்படியோ புதுவிதமா அசத்தியிருக்கிங்க சரத்தை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தகாலன் மொழியை கண்டு வாழ்த்தியமைக்கு நன்றி

      Delete
  46. அவ்வப்போது சில அவசர பணிகள் காரணமாக சில பதிவுகளைப் பார்க்க விடுபாடு ஏற்பட்டுவருகிறது. அந்த வகையில் தங்களது இப்பதிவை நான் தாமதமாக, தாங்கள் நினைவூட்டி, பார்க்க நேர்ந்தது. தங்களின் எழுத்தில் காணப்படும் வளர்ச்சியை நாங்கள் உங்களிடம் கண்டது உண்மையே. முன்னரே நான் கூறியபடி நான் எதையும் மிகைப்படுத்தவில்லை. தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்கள், நேர்த்தியான தொழில்நுட்பம், மகிழ்ச்சி, சோகம், தவிப்பு, ஏக்கம் என்ற பல நிலைகளிலான மன எண்ண ஓட்டங்களுக்கிடையே வேகத்தைக் குறைக்காமல் மிக சிறப்பாக ஆசிரியப்பணியைச் செய்துள்ளீர்கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. தொடர்ந்து எழுதுவோம், சந்திப்போம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  47. எனது நினைவூட்டலுக்கு மதிப்பு கொடுத்து வந்து கருத்துரை வழங்கிய முனைவர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது