07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 24, 2014

இயக்குநர் சிகரத்திற்கு இரங்கற்பா. !




       இயக்குநர் சிகரத்திற்கு இரங்கற்பா. !
                                    சி.குருநாதசுந்தரம்.

நல்லமாங்குடியில் பிறந்த
நல்லவனே !

நீ
பிரிந்த நொடிகளில்
இதயங்கள் பிளந்தன.

நினைவுகளை நீர்த்துப்போகச்செய்த
வாழ்வின் தடங்களை
விட்டுச்செல்லும் சமகாலமனிதருள்
நீ
விலகி நிற்கின்றாய் !

உன் சிகரம் தொடும்
உயிர்த்துடிப்பினை
எங்கினித் தேடுவோம்?

சிவாஜிராவைச் சிகரமாக்கிச்
சுமந்த இமயமே !

கமலென்ற கல்லில்
நடிகச்சிலை செதுக்கிய
சாகசச் சிற்பியே !

உன்
இமயத்துள் தான்
நட்சத்திரக்கூடுகள் உயிர்த்திருப்பதாக
உரக்கச்சொல்கின்றன திரையரங்குகள் !

அதனால் தான்
தாதாசாகேப்பால்கேவையும்
உன் வசமாக்கினாய் !

இருகோடுகளும் நீர்க்குமிழிகளும்
இதயத்தில் இன்னும்
நீங்கவில்லை ..
நீங்காத படைப்பின் வெளி !

கையளவு மனசின்
இரவுகளுக்காய் தவமிருந்த
தாய்மார்களின் விழித்த இரவுகள்
உன்
விழித்த உழைப்புக்குக் கிடைத்த
வெற்றியன்றோ?

தண்ணீர் தண்ணீர் பார்த்துத் தான்
சமூக அவலங்களை
உரக்கப்பேசும் உந்துதல்
இங்கு சாத்தியப்பட்டது.

காணாமல்போன குடும்ப உறவுகளை
நிழல்பிம்பத்தில் நிஜமாக்கிய
ஒளித்திரள் ஓவியனே !
நீ
நினைவுகளை வெல்லும்
உண்மைச் சரித்திரம்.

என்
மனத்தை வென்ற
உறவின் சித்திரம்!

எப்படியிங்கு
நீர்க்குமிழி பொய்யாகிப்போனது.?
தெரியாத கண்ணீர்குமிழிகள்
உன்னைத் தேடுகின்றன.

உன்
நினைவுகள் அழியாது,
வரலாறுகள் வற்றுவதில்லை…


(வலைச்சரப் பூக்கள் இப்பாவினை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன், பொறுத்தருள்க.)

12 comments:

  1. இயக்குநர் சிகரத்திற்கு அருமையான இரங்கற்பா. அவருடைய ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வரலாறு. கல்லூரி நாள்கள் தொடங்கி இவரால் ஈர்க்கப்பட்டு பெரும்பாலான படங்களைத் திரும்பத்திரும்ப பார்த்து ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன். அவருக்கு மறைவில்லை. தன்னுடைய படைப்புகள் மூலமாக அவர் என்றும் வாழ்பவர் அவர்.
    http://ponnibuddha.blogspot.com/
    http://drbjambulingam.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. மறக்கமுடியாத மனிதர்களூள் அவரும் ஒருவர்.

      Delete
  2. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
    Replies
    1. சிறப்புப்பதிவு பார்த்த உங்களுக்கு மிக்க நன்றி.

      Delete
  3. Replies
    1. படைப்பாளிக்கு இரங்கல் தெரிவிப்பது நம்மைப் போன்றவர்களின் கடமை. மிக்க நன்றி.

      Delete
  4. Replies
    1. மிக்க நன்றி.ஐயா.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது