07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 27, 2007

அசத்திய பதிவுகள் - பகுதி 2

========================================================

அசத்திய பதிவுகள் - பகுதி 2

இதற்கு முன் பதிவில் என்னை வியக்கவைத்த
தமிழ்மணப் பதிவுகள் என்ற தலைப்பில் 27 பதிவுகளை
உங்களுக்காகத் தேடிப்பிடித்துக் கொடுத்திருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக இன்று மேலும் 23 பதிவுகளுக்கான
சுட்டியைக் கொடுத்திருக்கிறேன்

அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்.
படித்த பதிவுகள் சில இருக்கலாம். அதனால் என்ன?
மீண்டும் ஒருமுறை படியுங்கள்!
--------------------------------------------------------------

28. தமிழ்மணத்தில் யுத்தப் பிரகடனம்
பதிவர் பெயர்: கொழுவி

சென்ற மாதம் தமிழ்மணத்தில் ஒரு இறுக்கமான
சூழ்நிலை நிலவியபோது - நகைச்சுவையோடு
அசத்தாலாக வந்த பதிவு. இந்தப்பதிவு!.
பதிவிற்கு வந்த பின்னூட்டங்களும் அதற்கு கொழுவி
கொடுத்திருந்த பதில்களும் பதிவிற்கு மேலும் சுவை
சேர்த்தன! படித்திராதவர்கள் அவசியம் படிக்க வேண்டிய
பதிவு!!!!

29. கவிதைகளில் வரும் முருங்கைக்காய்
பதிவர் பெயர் - செல்லி

30. இன்னும் இருக்கிறது ஆகாயம்.
பதிவர் பெயர்: பெருசு

33 அந்தக் காலப் பிரபலங்களின் போட்டோ
பதிவர் பெயர்: சின்னக்குட்டி

34. தமிழ் சினிமாவின் தலை சிறந்த பத்து வசனங்கள்
பதிவர் பெயர்: வெளிகண்ட நாதர்

35 குறும்பாறு
பதிவர் பெயர்: குறும்பன்

36. மேற்கில் கலாச்சாரம் உண்டு - ஆன்மீகம் இல்லை!
பதிவர் பெயர்: எழில்

37. ஆழி என்றொரு உலகம்
பதிவர் பெயர்: சிறில் அலெக்ஸ்

38. பெண்ணல்ல...மழை!
பதிவர் பெயர்: சிவனாம்ஜி

39. LET'S HIT THE NAILS!
பதிவர் பெயர்: தருமி

40. படிச்சவன் பாட்டைக் கெடுக்கிறான்
பதிவர் பெயர்: மா.சிவகுமார்


42. சேரனின் முத்தையாவும் என் முத்துவும்
பதிவர் பெயர்: முத்து குமரன்


43. மகளின் தத்துவம்
பதிவர் பெயர்: பாஸ்டன் பாலா

45. பாரதியின் பாடல்களில் அறிவியல் படிமங்கள்
பதிவர் பெயர்: ஜடாயு

46. கோவை ஐ.டிபார்க் படங்கள் & பரப்பளவு
பதிவர் பெயர்: சிவபாலன்

47. எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ?
பதிவர் பெயர்: நரசிம்ஹன் ராகவன் (டோண்டு)

48. சுவாமியே சரணம்!
பதிவர் பெயர்: மணியன்

49. கனவில் சென்னைi
பதிவர் பெயர்: தமிழி

50. மென்ட்டாலிட்டி மாற்றப்படுமா?
பதிவர் பெயர்: மோகன் தாஸ்
--------------------------------------------------------
இந்தப் பதிவுத் தேடலுக்கு எனக்கு சுமார் 6 மணி
நேரம் பிடித்தது! பதிவு மனதில் இருந்தாலும் சுட்டியைப்
பிடிப்பதற்கு நான் பட்ட பாடு - அதற்கு ஒரு தனிப்பதிவு
போடலாம்!

இன்னும் பல பதிவுகள் நினைவில் உள்ளன!
பதிவின் நீளம் கருதியும், அதைவிட உங்களின் பொறுமை
கருதியும் இத்துடன் அதை நிறைவு செய்கிறேன்
வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது மேலும் ஒரு
ஐம்பது பதிவுகளை அடையாளங்காட்டுகிறேன்

இந்த ஐம்பதில் பெயர் வாராத நண்பர்கள் என்னைத்
தவறாக நினைக்கவேண்டாம். மீண்டும் ஒரு வாய்ப்பு
வரும் போது என்னை அசத்திய உங்கள் பதிவு
அதில் நிச்சயம் இடம் பெறும்!!!!!!!!!!!!!!!

வேறு ஒரு தலைப்பில் ஒரு ஆய்வு பாக்கி உள்ளது
அந்த ஆய்வுடன் மீண்டும் சந்திக்கிறேன்!

அன்புடன்,
SP.VR.சுப்பையா
இந்த வார ஆசிரியர்
வலைச்சரம் - இணையத் தமிழ் இதழ்
=================================
(தொடரும்)

30 comments:

  1. சுப்பையா சார்

    என்னுடைய பதிவையும் சேர்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றி!! மகிழ்ச்சி!!

    உண்மையில் எப்படி இவ்வளவு நேரம் உங்களால் செலவிட முடிந்தது என்பதை அறியும் போது வியப்பாக உள்ளது. உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள ஏராளம் உள்ளது என்பதை காட்ட இதுவும் ஒரு உதாரணம்.

    நன்றி

    ReplyDelete
  2. கோவையில் இருக்கும் எனக்குக்கூட கண்ணில் படாத, கோவையைப் பற்றிய மகிழ்விக்கும் செய்தியை மிகவும் சிறப்பாகப் பதிவிட்டிருந்தீர்கள் சிவபாலன்!
    அதனால் மனதில் பதிந்துவிட்ட அந்தப் பதிவைத் தெரிவு செய்தேன்!
    நன்றி!

    ReplyDelete
  3. ஹைய்யோ ஹைய்யோ....

    பதிவுகள் அசத்தறது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படி
    'ரவிவர்மாவாஆஆஆஆஆஆஅ'ப்போட்டு
    என்னை அசத்துறீங்களே!!!!!

    அந்தநாய் எப்படி உக்கார்ந்துருக்குப் பாருங்க........... சூப்பர்.

    ஹைய்யோ!!!!!!

    ReplyDelete
  4. எங்கள் டீச்சருக்கு மகிழ்ச்சியைத் தரும் விதமாக ரவிவர்மா படங்களை பதிவிட்ட வாத்தியார் வாழ்க வாழ்க!

    ReplyDelete
  5. ரவி வர்மா மாதிரி ஒரு சிரஞ்சீவி ஓவியர் இனிக் கிடைப்பாரா சகோதரி?

    நாம் செய்த பாக்கியம் அவருடைய ஓவியங்களை ரசிக்கும் வாய்ப்பையும், மனதையும் இறைவன் கொடுத்துள்ளான்!
    அதற்காக சந்தோசப் படுவோம் சகோதரி!

    இப்போது உன்ங்கள் ஊரில் அதிகாலை 5.30 மணி அல்லவா?
    இந்த நேரத்திலேயே கணினிமுன்
    உட்கார்ந்து விட்டீர்களா?
    அதுவும் ஒரு அசத்தலான விஷ்யம்தான்!:-)))

    ReplyDelete
  6. ///இலவசக் கொத்தனார் அவர்கள் சொல்லியது:எங்கள் டீச்சருக்கு மகிழ்ச்சியைத் தரும் விதமாக ரவிவர்மா படங்களை பதிவிட்ட வாத்தியார் வாழ்க வாழ்க! ///

    அடடே, வாழ்த்துப் பெறுவதற்கு இப்படிக்கூட வழியிருக்கிறதா?:-)))
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. "உள்ளேன் ஐயா !!!"

    இது வருகைபதிவு !

    ReplyDelete
  8. வணக்கம் திரு எஸ்பி விஆர் சுப்பையா,

    உங்களுக்கு weird கேள்வி சுற்றை அனுப்பியிருக்கிறேன். பதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

    நன்றி

    அன்புத்தோழி

    ReplyDelete
  9. //// கோவி.கண்ணன் said...
    "உள்ளேன் ஐயா !!!" இது வருகைபதிவு !///

    வருகைப் பதிவேட்டில் பதிந்தது மட்டும்தானா?
    பாடங்களை யார் படிப்பார்கள்?

    ReplyDelete
  10. ////// அன்புத்தோழி said...
    வணக்கம் திரு எஸ்பி விஆர் சுப்பையா,

    உங்களுக்கு weird கேள்வி சுற்றை அனுப்பியிருக்கிறேன்.
    பதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் /////
    முன்பே வேறு ஒரு பதிவுலக நண்பர் முந்திக்
    கொண்டு விட்டார் சகோதரி!.
    கோவியார் கேட்டு நான் பதிவுட்டுள்ளேன்
    சுட்டி இங்கே உள்ளது
    http://devakottai.blogspot.com/2007/03/blog-post_23.html

    ReplyDelete
  11. //இந்தப் பதிவுத் தேடலுக்கு எனக்கு சுமார் 6 மணி
    நேரம் பிடித்தது! பதிவு மனதில் இருந்தாலும் சுட்டியைப்
    பிடிப்பதற்கு நான் பட்ட பாடு//
    கூகிள், கூகிள் ப்ளாக் தேடல்னு பயன்படுத்தி சுலபமா கண்டுக்கிடலாமே சுப்பையா சார்..

    ReplyDelete
  12. http://devakottai.blogspot.com/2007/03/blog-post_23.html

    March 27, 2007 10:21:00 AM IST
    பொன்ஸ் said...

    ///பொன்ஸ் அவர்கள் சொல்லியது: //இந்தப் பதிவுத் தேடலுக்கு எனக்கு சுமார் 6 மணி
    நேரம் பிடித்தது! பதிவு மனதில் இருந்தாலும் சுட்டியைப்
    பிடிப்பதற்கு நான் பட்ட பாடு//
    கூகிள், கூகிள் ப்ளாக் தேடல்னு பயன்படுத்தி சுலபமா கண்டுக்கிடலாமே சுப்பையா சார்///

    இனி அப்படிச் செய்கிறேன். உரிய நேரத்தில் - தேவைப் படும் நேரத்தில் வழிகாட்ட ஆளில்லை!
    எனது கணினி அறிவெல்லாம் முட்டி மோதி நானாக்க க்ற்றுக் கொண்டதுதான். இந்தக் காலத்து இளைஞர்களைப் போல முறைப்படி
    கற்றுக் கொள்ள்வில்லை. எல்லாம் அனுபவ பாடம்தான்!

    ப்திவுலகத்திற்கு வந்த பிறகு நிறைய அன்பர்களின் உதவி கிடைக்கிறது. பயனுள்ள
    பல் தொழில் நுட்பக் கட்டுரைகள் கிடைக்கின்றன
    அதுதான் மிகவும் மகிழ்ச்சியான் விஷ்யம் சகோதரி!

    ReplyDelete
  13. சுப்பையா சார்
    என் பதிவையும் பரிந்துரைத்தமைக்கு மிக நன்றி, சார்,
    ஒரு உற்சாக மாத்திரை சாப்பிட்ட மாதிரி இருக்கு.
    நன்றி.

    ReplyDelete
  14. //// செல்லி said... சுப்பையா சார்
    என் பதிவையும் பரிந்துரைத்தமைக்கு மிக நன்றி, சார்,
    ஒரு உற்சாக மாத்திரை சாப்பிட்ட மாதிரி இருக்கு./////

    உங்கள் பதிவில் இருந்த முனைவர் தமிழப்பன் எழுதியாகக்
    குறிப்பிட்டிருந்த இந்த வெணபா மிகவும்
    சிறப்பாக இருந்தது சகோதரி!
    "இஞ்சி முருங்கை இனியதோர் நெல்லிக்காய்
    கொஞ்சம் உருளையதும் கூட்டிவர - பஞ்சனைய
    சோறிட்டான் பாயசத்தால் சொக்கவைத்தான் சச்சியைப்போல்
    வேறெவர்தாம் செய்வார் விருந்து."

    ReplyDelete
  15. //28. தமிழ்மணத்தில் யுத்தப் பிரகடனம்
    பதிவர் பெயர்: கொழுவி

    சென்ற மாதம் தமிழ்மணத்தில் ஒரு இறுக்கமான
    சூழ்நிலை நிலவியபோது - நகைச்சுவையோடு
    அசத்தாலாக வந்த பதிவு. இந்தப்பதிவு!.
    பதிவிற்கு வந்த பின்னூட்டங்களும் அதற்கு கொழுவி
    கொடுத்திருந்த பதில்களும் பதிவிற்கு மேலும் சுவை
    சேர்த்தன! படித்திராதவர்கள் அவசியம் படிக்க வேண்டிய
    பதிவு!!!!//

    வரும் ஏப்பிரல் 2ந் திகதி வலையுலகில் தனது இரரண்டாம் ஆண்டை சிறப்பாக நிறைவு செய்யும் கொழுவிக்கு இது மேலும் உற்சாகம் தருவதாக அமையும்.

    ஐயா!
    உங்கள் ரசனையை ரசித்தேன். நன்றி

    ReplyDelete
  16. வாத்தியாரைய்யா,

    வணக்கம். உங்கள் மனதில் எனது கிறுக்கல் இடம் பிடித்தது படித்து மகிழ்ச்சி :)

    திரு

    ReplyDelete
  17. //// மலை நாடன் அவர்கள் சொல்லியது: வரும் ஏப்பிரல் 2ந் திகதி வலையுலகில் தனது
    இரண்டாம் ஆண்டை சிறப்பாக நிறைவு செய்யும் கொழுவிக்கு இது மேலும்
    உற்சாகம் தருவதாக அமையும். ஐயா! உங்கள் ரசனையை ரசித்தேன். நன்றி ///

    உண்மைதான் மலைநாடன் அவர்களே!
    பதிவுகளால் நாம் அடையும் சிறந்த பயன், சக பதிவர்களாலும், வலைக்கு
    வரும் வாசகர்களாலும் பெறுகின்ற மனமுவந்த பாராட்டுக்கள்தான்!

    ஆமாம! கொழுவி அவர்கள் கண்ணில் இந்தப் பதிவு பட்டதாகத்
    தெரியவில்லையே?

    ReplyDelete
  18. ////திரு..அவர்கள் சொல்லியது: உங்கள் மனதில் எனது கிறுக்கல் இடம் பிடித்தது படித்து மகிழ்ச்சி :)///

    ///தட்டுவது உடைக்க அல்ல
    உருவாக்கவே சிற்பி
    உனக்கு மட்டுமே தெரியும்!////

    மனதிற்குள் வந்தது கிறுக்கலல்ல
    இனம் தெரியாத உவகை!

    ReplyDelete
  19. /அந்தநாய் எப்படி உக்கார்ந்துருக்குப் பாருங்க........... சூப்பர்.
    /

    டீச்சர், சொன்னதுக்கப்புறம் தான் கவனிச்சேன் ..:) நன்றி டீச்சர்!

    நன்றி அய்யா!

    /சி.பா சொன்னது...உண்மையில் எப்படி இவ்வளவு நேரம் உங்களால் செலவிட முடிந்தது என்பதை அறியும் போது வியப்பாக உள்ளது. /
    அந்த இரகசியத்தை சொன்னா நாங்களும் கற்றுக்கொள்வோம், அய்யா! ;)

    ReplyDelete
  20. என்னுடைய சபரி பயணம் உங்களை கவர்ந்தது மிக்க மகிழ்ச்சி. நன்றிகள். அசத்திய பதிவுகளை பட்டியலிட்டு பாராட்டும் உங்கள் பண்பு போற்றுதற்குறியது. இந்த இரு பதிவுகளும் நல்ல தொகுப்பாக விளங்குகிறது.

    ReplyDelete
  21. /////தென்றல் said...
    அந்த இரகசியத்தை சொன்னா நாங்களும் கற்றுக்கொள்வோம், அய்யா! ////

    அதில் ஏது ரகசியம்?

    ஆர்வமும், ஈடுபாடும் இருந்தால் செய்ய முடியாதது என்ன இருக்கிறது
    சொல்லுங்கள் மிஸ்டர் தென்ற்ல்!

    ReplyDelete
  22. மணியன் said...
    என்னுடைய சபரி பயணம் உங்களை கவர்ந்தது
    மிக்க மகிழ்ச்சி. நன்றிகள். அசத்திய பதிவுகளை
    பட்டியலிட்டு பாராட்டும் உங்கள் பண்பு போற்றுதற்
    குரியது.////

    ஆன்மிகம் + பயணம் இரண்டையும் கலந்து உரிய
    படங்களுடன் [பதிவு சிறப்பாக இருந்தது. புதியவர்களைக்கூட
    சென்று வந்தால் என்ன என்று சிந்திக்க வைக்கும்படி இருந்தது!

    /// இந்த இரு பதிவுகளும் நல்ல தொகுப்பாக
    விளங்குகிறது.///

    நன்றி, நண்பரே!

    ReplyDelete
  23. சுப்பையா சார்.. வ்அலைச்சரம் எப்படி அமையவேண்டும் என வடிவமைத்துக் கொடுத்துள்ளீர்கள். ரெம்ப அருமையாக இந்தப் பணியை செய்ததற்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

    ReplyDelete
  24. ////சிறில் அலெக்ஸ் said...
    சுப்பையா சார்.. வ்லைச்சரம் எப்படி அமையவேண்டும் என வடிவமைத்துக் கொடுத்துள்ளீர்கள். ரெம்ப அருமையாக இந்தப் பணியை செய்ததற்கு வாழ்த்துக்களும் நன்றியும்.///

    பரவாயில்லை! நமக்குள் எதர்கு நன்றி பாராட்டுதல் மிஸ்டர் சிறில்!

    வலைச்சரத்தின் அலுவலகம் (வார்ப்புறு) அருமையாக உள்ளது
    முகப்பில் முந்தும் பாய்மரக் கப்பலின் படமும் அருமை!

    இவற்றை உருவாக்குவது எப்படி என்று எனக்குச் சொல்லிக் கொடுங்களேன்:-)))

    ReplyDelete
  25. நானுமா..?

    மிக்க நன்றி

    ReplyDelete
  26. ///// தருமி said... நானுமா..?
    மிக்க நன்றி! //////

    Let us hit the nails
    Right on their heads!
    என்று எவ்வளவு சிறப்பாக ஒரு சமூகப் பிரச்சினைய
    அலசிப் பதிவிட்டிருக்கின்றீர்கள்!
    அந்த ஒரு பதிவு நுறு பதிவுகளுக்குச் சமம்!

    நானுமா? என்ற் கேட்கிறீர்களே?
    நியாயமா?

    ReplyDelete
  27. வசிஷ்டர் வாயால் ...

    நல்ல வார்த்தைகளுக்கு நன்றி

    ReplyDelete
  28. நன்றி ஐயா.. நம்மை ரசித்தீர்கள் என்பது மகிழ்வு தருகிறது.

    ReplyDelete
  29. /////// கொழுவி said... நன்றி ஐயா.. நம்மை ரசித்தீர்கள் என்பது மகிழ்வு தருகிறது.////

    என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள்?
    அனைவரையும் ரசிக்க வைத்த பதிவல்லவா அந்தப் பதிவு!
    'சமர்' என்ற சொல்லை உங்களிடம் இருந்துதான் தெரிந்துகொண்டேன்

    ReplyDelete
  30. சுப்பையா சார்,

    கூகுளில் தேடுகையில் இந்த பதிவு அகப்பட்டது. இப்போது தான் பார்க்கிறேன்.

    என் பதிவு ஒன்றை இந்த பட்டியலில் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி. ஆனால் அதன் சுட்டி நா. கண்ணன் அவர்களின் ரவிவர்மா பதிவுக்குப் போகிறது ?!

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்தப் பதிவின் சுட்டி -
    http://jataayu.blogspot.com/2006/12/blog-post_14.html

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது