07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 6, 2007

மின்னும் புதியவர்கள்..

வலைச்சரம் ஆசிரியராக செய்ய வேண்டியவை என்று நான் பட்டியலிட்டதில் எனக்குப் பிடித்த, நான் படிக்கும் புதியவர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்துவதும் ஒன்று. பெண்கள் தின வாரமாத்தில், அறிமுகப்படுத்தும் புதிய பதிவர்கள் அனைவரும் பெண்களாக அமைவது ஒரு எதேச்சையான நிகழ்வே.

சில மாதங்களாகவே தமிழ்ப்பதிவுகளுக்குப் புதுவரவுகளில் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிலும் பலவகையான எழுத்துக்கள் காணக் கிடைக்கின்றன. வலையுலகில் பெண்மொழி இன்றைய தொலைக்காட்சி சீரியல்கள் போல் ஒரே விதமான சோக கீதங்களாக இல்லாமல், விளையாட்டு, வம்பு, உரிமைக்குரல், விழிப்புணர்வு என்று பலவிதங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அடுத்தவருக்காக பிரார்த்தனை செய்வதிலும், தொடர்பே இல்லாத இன்னொரு உயிருக்காக வருந்தும் இரக்க உணர்விலும் முன்னணியில் இருக்கும் பெண்களின் பண்பாக, பிரார்த்தனை நேரம் என்று தாயுள்ளத்தோடு தனிப் பதிவே தொடங்கி செயல்பட்டு வரும் கௌசி பற்றி முதலில்... சின்னச் சின்னக் கவிதை இடுகைகளுடன் நுழைந்த கௌசி, சாந்தியின் பாலின சர்ச்சை பற்றிய பதிவில் தான் முதன்முதலில் கவனம் பெற்றார். அந்த நேரத்துப் பதிவுகளில் வராத விவரங்கள் பலவற்றைத் தேடி ஆராய்ந்து எழுதிய இவரது இடுகை, சாந்தியையும் தாண்டி ஒலிம்பிக்கின் வேறு பல பிரச்சனைகளையும் தொட்டுச் சென்றது. பெண்ணுரிமை பற்றிய கௌசியின் பார்வையும் ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களும், பாரதி பிறந்தநாளைப் பற்றிய பதிவும் பெரிய அலைகளை எழுப்பவல்ல, சின்னச் சின்னக் கற்கள். வைரமுத்துவின் நூறுவண்ணக் கனவைப் பற்றிய இவரது இடுகை எனக்கு மனதிற்கு மிகவும் நெருக்கமானது. பெரிய அறிவாளியோ, அறிந்தவளோ இல்லை என்று சொல்லிக் கொண்டே பலவிசயங்களைப் பற்றிப் பரவலாக எழுதிக் கொண்டிருக்கும் கௌசி இன்னும் அதிகம் எழுத வேண்டும் என்று இந்தப் பதிவின் மூலம் வேண்டுகோள் வைக்கிறேன். கொஞ்சம் லைட்டாகவும் ஏதாச்சும் எழுதுங்களேன் கௌசி...

அடுத்தபடியாக, புதிதாக வந்து, சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பவர் கண்மணி. பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்பது பொதுவாக சமூகத்தில் புழங்கும் ஒரு கருத்து. ஒரு மனோரமா, ஒரு கோவை சரளாவுக்குப் பின் காமெடி நடிகைக்கான இடம் கூட தமிழ்ச் சினிமாவில் பல நாள் காலியாகத் தான் இருந்தது. அப்படி இருக்கையில், விளையாட்டாக, சின்னச் சின்ன வாழ்க்கை நிகழ்வுகளில் தானும் சிரித்து, அடுத்தவர்களையும் சிரிக்க வைக்கும் சில பெண்கள் வியப்புக்குரியவர்களாகிறார்கள். இந்த விதத்திலேயே, எனக்கு கண்மணியை மிகவும் பிடிக்கும். போன டிசம்பரில் வலைக்கு வந்து, நான்கு மாதங்களில், அரைசதத்தைத் தொடப் போகும் கண்மணியின் ஒவ்வொரு பதிவுமே ஒவ்வொரு விதமான நகைச்சுவை தான். சாய்பாபா-கலைஞர் சந்திப்பை ஒட்டி, இவர்கள் பாபாவைச் சந்தித்தால், தமிழ்மண பின்னூட்ட உயரெல்லையை ஒட்டி, 24ஆம் புலிகேசியை 30ஆக்கிய கதை, ஜோதியில் சேருவதற்காக கண்டாக்டரிடம் போன பதிவு, மதன்ஸ் திரைப்பார்வை என்று உள்குத்து வெளிக்குத்து கவலையில்லாமல், அடித்து ஆடிக் கொண்டிருக்கிறார் கண்மணி. சமீபத்தில் சுப்பிரமணிக்கு இனிஷியல் வைத்தது படித்து சிரி சிரியென்று சிரித்துக் கொண்டிருந்தேன்.
"அம்மணி கண்மணி, ரெண்டு வாண்டுக்கு அம்மாவா நீங்க? கல்யாணம் ஆன பின்னும் சிரிச்சிகிட்டிருக்கீங்களா?!! அதிசயமாக்கீதும்மா..!! இன்னும் நல்லா சிரிச்சி எங்களையும் சிரிக்க வையுங்க :) "

அடுத்து நான் தவறாமல் படித்துவிடும் மற்றொரு பதிவர் "மை பிரெண்ட்". பலநாட்களாக எழுதிக் கொண்டிருந்தாலும் டிசம்பர் போலத்தான் எல்லாம் தமிழில் எழுதத் தொடங்கி இருக்கிறார் மை பிரெண்ட். இவருடைய உலகை அழிக்கும் ரப்பர் பதிவை நண்பர் ஒருவர் பரிந்துரைத்ததால் இவரின் இடுகைகளைப் பார்க்கத் தொடங்கினேன். தோஹாவின் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், மலேசிய அரியணை மாற்றங்கள், இயற்கைப் பேரிடர்கள் என்று தன் நாட்டின் பல்வேறு நிகழ்வுகளையும் செய்திப் பகிர்வுகளும், திரைப்பட விமர்சனங்களும் என்று பலவும் காணக் கிடைக்கிறது இவரின் நட்புலகில் (The World of My Friend). கதையல்ல நிஜம் என்ற மை பிரெண்டின் குழந்தைப்பருவத் தொடர், விறுவிறுப்பான திருப்பங்களைக் கொண்ட வித்தியாசமான மர்மத்தொடராகவும், நகைச்சுவை கலந்த ஜாலியான தொடராகவும் இருக்கிறது. அமைதியான பெண்குரல் ஒன்றும் ஒளிந்திருக்கிறது மை பிரெண்டின் பதிவுகளில். மை ப்ரெண்டின் பதிவுகளில் எனக்குப் பிடித்த பதிவு இது. இந்தப் பதிவு படித்த பின் கேட்ட அந்தப் பாடலும் எனக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.. அந்த மர்மத் தொடரை சீக்கிரம் முடிங்க தாயி..

ஒரு தாயாக, தன் குழந்தைகளின் மொழியை முன்வைக்கும் சிறுமுயற்சிகள், ஏற்கனவே நாம் படித்திருக்கும் உலக சினிமா விமர்சனங்களைத் தன்பார்வையில் தரும் மனிதம், பெண்களே அதிகம் சிறுநீரக தானம் செய்கிறார்கள் என்பது போன்ற செய்தி விமர்சனங்கள், கௌசியை எழுத வைத்த பெண்ணுரிமை பற்றிய பதிவு, சமையல் என்று பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்துக் கொண்டே வருகிறார் முத்துலட்சுமி. அம்மாவுடன் கொண்டாடிய பண்டிகைகள் பற்றிய பதிவும் அண்டை வீட்டாராக புறாக் குடும்பமொன்றை வளர்த்த பகிர்வும் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகள். இடைவெளியின்றி சீராக எழுதிக் கொண்டிருக்கும் முத்துலட்சுமி இன்னும் பரவலான விசயங்கள் பற்றியும் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. (கவிதை எழுதி காலத்தை வீணடிக்காதீங்க லட்சுமி :)))) )

நான் படிக்கும் புதுப் பதிவர்கள் இவர்கள் என்பதைத் தவிர, இன்னும் சில புதிய பதிவர்கள் விட்டுப் போயிருக்கலாம். இன்னும் இன்னும் அதிக பதிவர்கள், ஆரோக்கியமான பதிவுகளுக்காக வலைப்பதிவுலகம் என்றென்றும் ஆர்வத்துடன் காத்திருக்கிறது.

21 comments:

  1. ஆஹா பொன்ஸ் ரொம்ப நன்றி.
    தினம் தினம் இட்லி தோசை சமைச்சு போரடிச்சு போய் ஒருநாள் பிசா சாப்பிட போறமாதிரி ...அப்பப்ப ஆசைக்கு
    கவிதை எழுதிக்கறேனே ப்ளீஸ். :-)

    ReplyDelete
  2. வலது பக்கம் வட்டு மாற்றும் இயந்திரம் நல்லா இருக்கு.
    பதிவுக்கு பின்னூட்டம்??
    படிக்காம எப்படி போடுவது.
    அப்புறம் வந்து போடுகிறேன்.
    :-))

    ReplyDelete
  3. மங்கை பற்றி எழுதவில்லையே ?

    ReplyDelete
  4. டெக்னிக்கல் விஷயங்களை எழுதும் தீபா பற்றி எழுதலாம்.

    ReplyDelete
  5. அருமை பொன்ஸ்,

    வலைப்பூவில், பெண்களின் பங்கும் அதிகரிப்பது, மிக மகிழ்ச்சியான ஒன்று,

    அதற்கு, தனிக்கட்டம் கட்டி வரவேற்பதில், என்பங்கு வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

    ReplyDelete
  6. முத்துலட்சுமி, என்னிக்காவது பிஸ்ஸா சாப்பிட்டால் பரவாயில்லை.. அடிக்கடி சாப்பிட்டால் உடல்நலத்துக்குக் கேடு :), ஏதோ பார்த்து பண்ணுங்க.. :))

    குமார், அது சிந்தாநதி வேலைங்க :)

    அனானி, மங்கை மாதிரி புகழ்பெற்ற சீனியர் பதிவர்கள் பத்தி எல்லாம் நான் எழுதினா அவ்வளவு தான்! :) அவங்க ஏற்கனவே நிறைய பேருக்குத் தெரிஞ்ச பதிவர், நான் அறிமுகப் படுத்த வேண்டியதே இல்லை :)

    தீபா பற்றி முந்தைய பதிவில் எழுதியாச்சு.. பார்த்திட்டு சொல்லுங்க..

    ReplyDelete
  7. கொழுவியும் பெண்தானே..
    கொழுவன் தான் ஆண்.

    ReplyDelete
  8. அன்பிற்கினிய பொன்ஸ் இப்பத்தான் நெல்லை சிவா சொல்லி உங்க வலைச்சரம் பார்த்தேன். முதல் சரம் முன்னமே பார்த்து விட்டேன்.அதில் தீபா சயந்தன் பற்றியெல்லாம் எழுதியிருந்தீர்கள்.நீங்கெல்லாம் கணிணித் துறை சார்ந்தவர்கள் ஆகையால் நிறைய அறிந்து தருகிறீர்கள். அது மாதிரி பதிவர்கள் பற்றித்தான் எழுதுவீர்கள் என்று நினைத்தேன். வலைஇச்சரம் 2 பகுதி சிவா சொல்லும் வரைகண்ணில் சிக்கவில்லை.பணி முடித்து இப்பத்தான் வந்தேன்.[என்னவென்று அறிய ஆர்வமா?மிக உன்னதமான ஒன்று என் 50 பதிவில் சொல்கிறேன்.]
    நெகிழ்ந்து போனேன். ஏதொ என்னைப் பற்றி நாலு வார்த்தை பெருமையாக சொன்னதற்காக இல்லை.அவிழ்த்துப் போட்ட நெல்லிக்காய் மூட்டை மாதிரி எங்கே எங்கேயோ இருந்து கொண்டு கண்ணில் படும் பதிவுகளை வாசிப்பவர்களுக்கு மத்தியில் நாம் என்னத்தைக் குப்பைக் கொட்டப் போகிறோம்.கும்மி அடிக்கவும் கூட்டமில்லை என்று நினைத்திருந்தேன்.பின்னூட்டம் மட்டுமே ஒரு பதிவுக்கான அங்கீகாரம் தருவதில்லை ,அப்பதிவின் சாரமே ஒரு பதிவையும் அதை எழுதிய பதிவரையும் அங்கீகரிக்கும் என்பதை வலைச் சரத்தின் மூலம் புரிய வைத்த சகோதரி உங்களுக்கு நெஞ்சார்ந்த என் நன்றிகள்.
    நிச்சயம் சொல்கிறேன் இந்த வலைச்சரம் எனக்கு உற்சாகம் ஊட்டியதுபோலமேலும் பலப் பல புதிய பதிவர்களையும் ஊக்கப் படுத்தும்.
    நன்றி.

    ReplyDelete
  9. latchumi sollithaan therinjathu

    enna seniour pathivarnnu solli paaati aakiteengalea pons..:-(((...
    (chumma damaas....)

    nalla muyarchi..romba nalla irukku Pons...thodarnthu seyyunga...

    //மங்கை மாதிரி புகழ்பெற்ற சீனியர் பதிவர்கள் பத்தி எல்லாம் நான் எழுதினா அவ்வளவு தான்!//

    ethavathu kovamnna kooptu thittu Kannu...ippidi ellaam sabaila maanatha vaangatha saami...

    (sorry for tanglish...)

    ReplyDelete
  10. நன்றி பொன்ஸ்
    குறிப்பிட்டுச் சொல்லும்படி சாதிக்கவில்லை. இருந்தாலும் எனக்குச் சரியென்று பட்டதை ஆணித்தரமாக,ஆதாரத்துடன் சொல்ல ஆசைப் படுவேன்.கொஞ்சம் நிதானமாவும் சொல்வேன் .என் இடுகைகளின் எண்ணிக்கை சொல்லுமே என் வேகத்தை. லைட்டுக்கு கண்மணி
    வெயிட்டுக்கு கௌசி
    பதிக்கத் தமிழ் மணம்
    படிக்க நீங்கள் [பதிவர்கள்]
    சரியா?மிக்க நன்றி தங்கச்சி [வயது தந்த உரிமை]

    ReplyDelete
  11. அதிகலவில் பெண்கள் எழுதவருவது தமிழ்மணத்தில் நிகழும் ஆரோக்கியமான மாற்றமே.

    தமிழ்மணம் வெறும் கலாய்த்தல் களமாக மட்டும் இல்லாமல் கலந்தாய்வுகுரிய களமாகவும் இருப்பதற்கு பல புதிய வரவுகளின் பங்கு பெருமளவில் உள்ளது

    ReplyDelete
  12. அடடே.. சர்ப்ரஸ் எல்லாம் கொடுக்குறீங்க? நீங்க அந்த ஓசாமா, பின்லேடன் போஸ்ட் படிச்சிட்டு சிரிச்சுட்டு போனது மட்டும்தான் எனக்கு தெரியும். அதுக்கு பிறகு உங்களை என் வலைப்பக்கம் பார்க்கவே இல்லை நான்.. நான் ஏதோ, என்னுடைய பதிவுகள் உங்களை ஈர்க்கவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால், நீங்க சத்ததமில்லாமல் வந்துட்டு போயிட்டு இருக்கீங்கன்னு "உங்கள் நண்பன் சரவணனின்" மொழி விமர்சனத்தின் பின்னூட்டத்தில்தான் தெரிந்துக்கொண்டேன்..

    என்னுடைய முதல் தமிழ் இடுகைகளிலிருந்து ஒவ்வொன்றும் நீங்க படித்ததை கேட்க எனக்கு மிக்க மகிழச்சி..

    உங்களைப்போல் சீனியர் பதிவர்கள், நண்பர்களின் மூலம்தான் நானும் எழுததுவதை கற்றுக்கோண்டேன்.

    ReplyDelete
  13. பொன்ஸ் அக்கா, (உங்களை அக்கான்னு கூப்பிடலாம்ல?)

    ஒரு சின்ன திருத்தம்.
    "தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகள், மலேசிய அரியணை மற்றங்கள், இயற்க்கை பேரிடர்".. எல்லவற்றுக்கும் நீங்க ஒரே சுட்டிகளை கொடுத்திருக்கீங்க..

    தோஹா: http://engineer2207.blogspot.com/2006/12/129.html

    மலேசிய அரியணை மற்றம்:
    http://engineer2207.blogspot.com/2006/12/132.html

    இயற்கை பேரிடர்:
    http://engineer2207.blogspot.com/2006/12/blog-post_7897.html

    எல்லாம் ஒரு விளம்பரம்தானே.. அதான்.. ஹிஹிஹி...

    ReplyDelete
  14. கதையல்ல நிஜம்ன்னு நான் எழுதி வெளியிட்டது மூன்றே பகுதி மட்டும்தன்.. அதுக்கு சரியாக வரவேற்ப்பு கிடைக்காததால், உண்மை சம்பவம் நன்றாக நான் எழுதவில்லையோ என்று நான் நினைத்து அப்படியே விட்டுவிட்டேன். அப்படியே ஆணி பிடுங்குற வேலை அதிகமாயிட்டததால, அதை பற்றி மறந்தே போய் விட்டேன்..

    ஆனாலும், இங்கு நான் இந்த தொடரை பற்றி சொல்லனும்ன்னா, இது 100% உண்மை கதை. கொஞ்சம் கூட கலப்படம் இல்லை.. :-)

    நீங்க வேற இங்கே சொல்லிட்டீங்க.. இந்த கதையை திரும்பவும் எழுத ஆரம்பிக்கிறேன்.. ;-)

    ReplyDelete
  15. நீங்கள் இங்கு அறிமுகப்படுத்தி வைத்த ஒவ்வொருவர் வலைகளையும் நானும் இப்போது சில நாட்களாய் தொடர்ந்து படித்துக்கொண்டு வருகிறேன்.

    கௌசி, கண்மணி, முத்துலட்சுமி அவர்கள் நன்றாகவே எழுதுறாங்க.. அதுவும் கண்மணியின் காமெடி எழுத்துக்கள் என்னை மிகவும் ககவர்ந்த ஒன்று. இவர்களைப்போலவே இன்னும் சில புது பதிவர்களும் கலக்கிட்டு இருக்காங்க.. ;-)

    ReplyDelete
  16. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நெல்லை சிவா

    கொழுவி, புதுப் பதிவர்கள் அறிமுகம் இங்கே.. உங்களை மாதிரி கனகாலமா கொழுவறவங்களைச் சொல்ல மாட்டம் :))

    கண்மணி,
    //பின்னூட்டம் மட்டுமே ஒரு பதிவுக்கான அங்கீகாரம் தருவதில்லை ,அப்பதிவின் சாரமே ஒரு பதிவையும் அதை எழுதிய பதிவரையும் அங்கீகரிக்கும் //
    இந்தப் புரிதல் வந்த பின் எழுதும் பதிவுகளின் தரம் கண்டிப்பாக அதிகமாக இருக்கும் சகோதரி. நானும் உங்களைப் போல் முதல் மூன்று மாதங்கள், பின்னூட்டங்களையும் கும்மிகளையும் பார்த்து வியந்த, அதுவே அங்கீகாரமென மயங்கிய ஆத்மா தான் :)

    மங்கை,
    நீங்க வேற, உண்மையாவே நீங்க புகழ்பெற்ற பதிவர் தான். உங்களுக்கு எப்படி நிரூபிக்கப் போறேன்னு தெரியலியே!! :))

    கௌசி,
    நிறைய எழுதுங்கள்.. உங்கள் இடுகைகள் இன்னும் கொஞ்சம் நீளமாக இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து :)

    சோமி,
    கலாய்க்கும் போது, கலாய்த்தல், கலந்து பேசும் போது, பேச்சு :) இரண்டில் ஒன்று குறைந்தாலும் பதிவர்களிடியிலான புரிதல் குறைந்து போக வாய்ப்பு அதிகம் :)

    மை பிரண்ட்,
    சுட்டிகளைச் சரியாக இணைத்துவிட்டேன்.. எல்லா இடுகைகயின் சுட்டியையும் தேடியதில் கொஞ்சம் குழம்பிப் போய் தவறாக இட்டுவிட்டமைக்கு என் வருத்தங்கள் தோழி. நிறைய எழுதுங்கள்..

    ReplyDelete
  17. பொன்ஸ்! என்னைப்பற்றி தேடினேன்.
    காணவில்லை. உங்கள் நினைவுக்கு வருமாறு எழுதுவேன் இனி.

    ReplyDelete
  18. ம்ம்ம் - சிலவற்றை எழுத வேண்டும் என வந்தேன். மறுமொழிப் பெட்டிக்கு மேல் உள்ள குறிப்பு என்னைத் தடுத்து விட்டது. தர்ம சங்கடங்களைத் தவிர்க்கிறேன்.

    இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. முதல் வலைச்சர ஆசிரியரின் பதிவுகளை படித்து மகிழும் பாக்யம் பெற்றேன்.

    நல்லதொரு பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  20. அன்பின் வை.கோ - முதல் வலைச்சர ஆசிரியரின் பதிவைனைப் படித்து மறுமொழி இட்டது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  21. அன்பின் வை.கோ - வலைச் சரத்தின் முதல் ஆசீரியரின் ப்திவுகளைப் படித்து மறுமொழி இட்டமைக்கு நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது