07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 27, 2007

கைவந்த கலை

=========================================================
கைவந்த கலை

எனக்கு மிகவும் கைவந்த கலை என்று சொன்னால்
அது கதை சொல்வதும், கதை எழுதுவதும்தான்.

கதை சொல்வதிலும்,எழுதுவதிலும் ஒரு டெக்னிக்
இருக்கிறது

கேட்பவரையோ, அல்லது படிப்பவரையோ ஈர்க்கும்
சக்தியுடன் அது சொல்லப்பட வேண்டும் அல்லது
எழுதப்பட வேண்டும்.

Jeffery Archerரின் சிறுகதைகளைப் படித்தீர்களென்றால்
இது சட்டென்று பிடிபடும்.

அவர் கதையை முதல் வரியிலேயே ஆரம்பித்து
விடுவார். கடைசி வரிவரை கதையைச் சுவாரசியமாகச்
சொல்லிக்கொண்டு போவார். உள்ளே வந்துவிட்ட வாசகன்
நகராமல் பார்த்துக் கொள்ளும் விதமாகக் கதையின்
போக்கு இருக்கும்.

கதையின் முடிவு பஞ்ச்சிங்காகவும், எதிர்பாராத
விதமாகவும் இருக்கும்.

நடை எளிமையாகவும், அழுத்தமாகவும் இருக்கும்
தேவையில்லாத சொற்கள் இருக்காது!
எல்லாம் வித்தியாசமாக இருக்கும்

அவருடைய இரண்டொரு கதைகளைப் படிப்பவன்
அவருடைய ஆத்மார்ந்த ரசிகனாகிவிடுவான்

Twist in the tale என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்பில்
மொத்தம் 12 சிறுகதைகள் இருக்கும். அத்தனையுமே
விதம் விதமான களங்களில் விதம் விதமான பாத்திரப்
படைப்புக்களுடன் அசத்தலாக எழுதப்பெற்றிருக்கும்

அவருடைய கதைகளைத் தொடர்ந்து படிக்கும் வாசகனுக்கு
நாமும் இது போல ஒர் சிறுகதையாவது எழுத வேண்டும்
என்ற உந்துதல் வந்து விடும்

அதுதான் சிறுகதையின் இலக்கணம்!

பதிவுலகத்திற்கு வந்த புதிதில் அடியவன் எழுதிய
முதல் பதிவே ஒரு சிறுகதைதான்.

மகாபாரதத்தில் நடந்ததாகக் கேள்விப்பட்டிருந்த
ஒரு சம்பவத்தை என்னுடைய கற்பனையில் விரிவாக்கிக்
கதையாக எழுதிப் பதிவிட்டேன்.

அந்தப் பதிவிற்கு வந்தது ஒரே ஒரு பின்னூட்டம்தான்
அதில் இருந்த வாசகங்கள் நூறு பின்னூட்டங்களுக்குச் சமம்
அதை இட்டவரின் பெருமைபற்றி அப்போது எனக்குத்
தெரியாது. பின்னால்தான் தெரிந்து கொண்டேன்

அவர்தான் வலைப்பதிவுலகின் ராஜகுரு
திரு. ஞானவெட்டியான் அய்யா அவர்கள்.

நான் வலையுலகிற்கு வரும் முன்பே மாதப்பத்திரிக்கை
யொன்றில் தொடர்ந்து சிற்கதைகளும், கவிதை ஆய்வுத்
தொடர் ஒன்றையும் எழுதிக் கொண்டிருந்ததால், முதல்
பதிவிற்குப் பிறகு 7 நாட்களுக்குள் அடுத்தடுத்து பல
சிறுகதைகளைப் பதிவிட்டேன்

அவைகளெல்லாம் நான் எதிர்பார்த்த அளவிற்கு
வரவேற்பைப் பெறவில்லை!

என்ன காரணம் என்று பிறகுதான் தெரிந்து கொண்டேன்

என் கண்களைத் திறந்து பதிவுலகின் உண்மை நிலையைப்
பல கோணங்களிலும் பார்க்க வைத்தவர் அந்த சிங்கைக்காரர்
ஜி.கே தான்.

இதுவரை வெளிப்பத்திரிக்கைகளில் 36 கதைகள்
எழுதியுள்ளேன்.

அவைகள் ஒவ்வொன்றும் A4 Size Paperல் 6 பக்கங்கள்
அளவிற்கு வரும். சில 8 பக்கங்கள் வரும். அதையெல்லாம்
படிக்ககூடிய பொறுமை பதிவுலக இளைஞர்களிடம்
(அவர்கள் 81%) இருக்கின்ற மாதிரி எனக்குத் தெரியவில்லை!

இருந்தாலும் இன்று துணிச்சலாக என்னுடைய
6 சிறுகதைகளுக்கான சுட்டிகளைக் கீழே கொடுத்துள்ளேன்
படிக்க விருப்பமிருப்பவர்க்ள் மட்டும் படித்து விட்டுச்
சொல்லுங்கள் அவைகள் எப்படி இருக்கின்றன என்று!
--------------------------------------------------------
எனது சிறுகதைகள்

1.கலியுகத்தின் முதல் தீர்ப்பு
எனது முதல் பதிவு (23.12.2005)

2. மதிப்பும் மரியாதையும்
26.12.2005

3. தந்தி மீனி ஆச்சி
26.12.2005

4. ஆயா வீடு
26.12.2005

5.மேங்கோப்பு மேனா
29.12.2005

6. உல்லாசம் பொங்கும் தீபாவளி
31.12.2005

---------------------------------------
அன்புடன்,
SP.VR. சுப்பையா
இந்த வார ஆசிரியர்,
வலைச்சரம் - இணையத் தமிழ் இதழ்
--------------------------------------------------

12 comments:

  1. ஐயா,

    கதைகளை படிக்க வேண்டும். படித்துவிட்டு மீண்டு(ம்) வருவேன்.

    இது அடென்டன்ஸ் பின்னூட்டம் !
    :)

    ReplyDelete
  2. ////கோவியார் சொல்லியது:
    கதைகளை படிக்க வேண்டும். படித்துவிட்டு மீண்டு(ம்) வருவேன்.///

    அவசரமில்லை. மெதுவாகப் படிய்யுங்கள்!

    ReplyDelete
  3. // சென்ஷி said...
    ஐயா,

    கதைகளை படிக்க வேண்டும். படித்துவிட்டு மீண்டு(ம்) வருவேன்.

    இது அடென்டன்ஸ் பின்னூட்டம் !
    :) எனக்கும்.. :))

    சென்ஷி

    ReplyDelete
  4. /// கதைகளை படிக்க வேண்டும். படித்துவிட்டு மீண்டு(ம்) வருவேன்.
    இது அடென்டன்ஸ் பின்னூட்டம் !
    :) எனக்கும்.. :))
    சென்ஷி ////

    வெறும் அடென்டன்ஸ் மட்டும் போதுமா?

    நீங்கள் எல்லாம் வந்து வகுப்பில் அமரும்வரை பாடம் எதுவும் நடத்தப் போவதில்லை.

    அப்புரம் நானும் அடென்டன்ஸ் மட்டும் போட்டு விட்டுப் போய்விடுவேன்:-)))

    ReplyDelete
  5. துளசி அக்கா நீங்களாவது அவர்களைப் போல இல்லாமல் படித்துவிட்டு வந்து சொல்லுங்கள்!:-)))

    ReplyDelete
  6. /1.கலியுகத்தின் முதல் தீர்ப்பு
    எனது முதல் பதிவு (23.12.2005)
    /

    ஐயா,
    இந்த கதைய படிச்சப்போ, மகாபாரத்தில் நடந்தது-னு நினைச்சேன்..
    சரியாபோச்சு போங்க... இது உங்க கற்பனையா..?? 'நல்ல கததான்'..!

    ReplyDelete
  7. ஐயா , வந்தாச்சு. மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  8. ஐயா,

    முதல் கதையைப் படிச்சு அங்கேயே தீர்ப்பு சொல்லியாச்சு.

    பின்னே நான் கண்ணனாச்சே !
    :))

    ReplyDelete
  9. ///தென்றல் அவர்கள் சொல்லிய்ய்து: ஐயா,இந்த கதைய படிச்சப்போ, மகாபாரத்தில் நடந்தது-னு நினைச்சேன்.. ////

    உண்மைதான்!
    நடந்த சம்பவம் ஒரு செய்தியாக எனக்குக் கிடைத்தது. அதைக் கதையாக நான் உருவகம் செய்து எழுதினேன்

    ReplyDelete
  10. ///வல்லி சிம்ஹன் அவர்கள் சொல்லியது:ஐயா , வந்தாச்சு. மீண்டும் வருகிறேன். ///

    ஆகட்டும் சகோதரி! அவசரம் எதுவும் இல்லை! படித்து விட்டு வந்து உங்கள் விமர்சனத்தை இரண்டொரு
    வரியிலாவது எழுதுங்கள்

    ReplyDelete
  11. ///கோவியார் ச்சொல்லியது:முதல் கதையைப் படிச்சு அங்கேயே தீர்ப்பு சொல்லியாச்சு.///

    அடடா, தீர்ப்பிற்கே தீர்ப்பா?

    ///பின்னே நான் கண்ணனாச்சே !
    :)) ///

    அப்படியென்றால் கம்சன் யார்?

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது