07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 9, 2008

03 - வலைச்சரம் - சிரிப்பு வருது சிரிப்பு வருது!!


வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும்
சிரிச்சா என்ன செலவா ஆகும் ?

அட உண்மை தாங்க மனம் விட்டு வாய்விட்டு சிரிக்கறதால நோய்கள் குணமாகுமாங்க.


குறைந்த இரத்த அழுத்தம் சரியாகுதல், நோய் எதிர்ப்பு சக்தி அப்படி இப்படின்னு நிறைய சொல்றாங்க இங்க. உண்மையச் சொல்லனும்னா சிரிப்புங்கறது ஒரு தொத்து வியாதிங்க. வேணும்னா பாருங்களேன் நீங்க காலைல மகிழ்ச்சியா சிரிச்சுட்டே உங்க மனைவி/கணவன்/நண்பர், எதிர்படும் புதியவர் என யாரையாச்சும் பாருங்க. உடனே உங்கக் கிட்ட இருந்து சிரிப்பு அவங்களுக்கும் பரவிடும். அவங்க கிட்ட இருந்து இன்னொருத்தர் இப்படி பரவிட்டே போய்டும்


சிரிப்புல பலவகை இருக்குன்னு கலைவானர் பாட்டுல கேட்டு இருப்பீங்க. சிரிக்க வைக்கப் பலவழிகளும் உண்டுங்க. அதுல சில நேரம் லேசா எரிச்சல் வந்தாலும், சில நேரம் பல்பு வாங்கினாலும் குறைஞ்ச பட்ச புன்னகைக்கு வழி வகுக்கும் கடி ஜோக்ஸ். அதுவும் இந்த மொபைல் வந்தாலும் வந்தது எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ் ரொம்பவே படுத்தல். இதுக்கு பேர் போன நம்ம யோசிப்பவர் பதிவு இங்கே.

உதாரணம் பாருங்க !!

***********
டீச்சர் : ஏபிசிடி எத்தனை எழுத்துக்கள்?

பையன் : நாலு

டீச்சர் : மொத்தமாக!

பையன் : ஐந்து

டீச்சர் : என்னது?

பையன் : நாலு

டீச்சர் : அறிவு கெட்டவனே!

பையன் : எட்டு

டீச்சர் : நிப்பாட்டு!!

பையன் : ஐந்து

டீச்சர் : ?!?!
**************
இவரோட அண்ணே ஜோக்ஸ்கள படிச்சுத் தான் பாருங்களேன் ? மினிமம் புன்னகைக்கு கேரண்டி உண்டு.

சிரிப்புன்னா நம்ம கைப்புள்ள நினைவுக்கு வராம இருக்குங்களா யாருக்காச்சும் ? அதுவும் அவரின் உலகப் புகழ்பெற்ற சூரியப் புகைப்படம்

இந்த சரித்திரப் புகழ்பெற்ற புகைப்படம் எடுக்கப் பட்ட வரலாறை மேலே குறிப்பிட சுட்டியில் சென்று படியுங்கள்.

இவர் எழுதிய தடிப்பசங்க தொடரும் நகைச்சுவைக்கு உத்தரவாதமான ஒன்று தான். பொதுவாகவே இவரு எழுதும் எல்லாமும் மிதமான அல்லது சற்றே அதிக நகைச்சுவையுடன் கூடியிருக்கும் எழுத்துக்களே.

வருத்தப் படாத வாலிபச் சங்கத்துல இவரு தானுங்க தல. அடிக்கடி ஆளுங்களை கூட்டியாந்து அவங்கள வச்சு ஆப்பு வாங்கறதுல பெரிய ஆளு.

என்னதான் சொல்லுங்க. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு
ரொம்ப நல்ல்ல்ல்ல்லவரு!

இப்படி பேசிட்டே ஹாஸ்ய ரசம் எழுதும் கோமாவை மறந்துட முடியுமா என்ன ? பத்திரிகைக்கு எல்லாம் எழுதிருக்காங்க.

அய்யய்யோ கண்மனி டீச்சர் உங்களோட கும்மி பதிவும், பாப்பா சங்கப்பதிவும் மறந்துட இருந்தேன்.

அபியப்பா பத்தியும் அவரோட குசும்புகளையும் அவரோட வாக்குத் தவறாத நேர்மையயும் அவரோடப் பதிவுல நீங்களே படிச்சுக்கோங்க. ஹ்ம்ம்... அபிஅம்மா எப்படித் தான் சமாளிக்கறாங்களோ ?

சரித்திரப் புகழ் படம் தவிர்த்து மேலே இருக்கும் அனைத்துப் படங்களும் நான் எடுத்தவையே. அப்படியே நான் முயற்சித்த சில நகைச்சுவையையும் படித்துப் பாருங்க. சற்றே பெரிய சிறுகதை ஷியாமளி அத்தை

நாளைக்கு என்ன எழுதலாம்னு கொஞ்சம் யோசனை சொல்லுங்க மக்கா!!

அதுவரை டாட்டா


16 comments:

 1. நான் தான் முதல் போனி

  ReplyDelete
 2. நெம்ப சிம்பிளா தொடுக்கிறீங்க..

  இடுகைகளுக்கு பதிலா, நீங்களே தேடிப் பிடிச்சிக்கோங்க என்று...

  அடேங்கப்பா....


  என்ன டெக்குனிக்கங்கடா சாமிகளா... :P

  ReplyDelete
 3. இன்னாத்துக்கு அம்புட்டு நோவு...பேசாம, தமிழ்மணம் சுட்டியயைக் கொடுக்க அடுத்து வரும் ஆசிரியருக்கு சிபாரிசு செய்யுறேன்.. :P

  ReplyDelete
 4. ஆனாலும், அந்தப் படம் டாப்புங்கோ..

  எனனாது, டாப்பு இல்ல, பாட்டமா..

  ஆன்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 5. //நெம்ப சிம்பிளா தொடுக்கிறீங்க..

  இடுகைகளுக்கு பதிலா, நீங்களே தேடிப் பிடிச்சிக்கோங்க என்று...

  அடேங்கப்பா....


  என்ன டெக்குனிக்கங்கடா சாமிகளா... :P//

  என்னங்கைய்யா... குடுத்திருக்க பதிவு சுட்டி முழுக்கவே நகைச்சுவைச் சார்ந்தது. தனியா குடுக்க முடிஞ்ச சுட்டி குடுத்தோமில்ல... முக்கியம அந்த சரித்திரப் புகழ் படம் ? சும்மாவா சொல்லுங்கப்பே! சொல்லுங்க!

  ReplyDelete
 6. கலக்கல், நோகாம முடிச்சிருக்கீங்க ;-)

  ReplyDelete
 7. கடைசி படம் மாதிரி நீங்க எதும் படம் ட்ரை பண்ணதில்லயா மாமா? :P

  ReplyDelete
 8. பாவம் கைப்ஸ்.. அந்தப் பதிவையே எத்தனை பேர் வெளிச்சம் போட்டு(!) காட்டுவீங்க? விட்ருங்க, வலிக்கும், அழுதுருவாரு...

  ReplyDelete
 9. மே ஐ கம் இன்சைட்!?!?!?

  ReplyDelete
 10. /
  TBCD said...
  நெம்ப சிம்பிளா தொடுக்கிறீங்க..
  /
  :)))

  ReplyDelete
 11. /
  TBCD said...
  நெம்ப சிம்பிளா தொடுக்கிறீங்க..

  இடுகைகளுக்கு பதிலா, நீங்களே தேடிப் பிடிச்சிக்கோங்க என்று...

  /
  :))))))))

  ReplyDelete
 12. /
  TBCD said...
  நெம்ப சிம்பிளா தொடுக்கிறீங்க..

  இடுகைகளுக்கு பதிலா, நீங்களே தேடிப் பிடிச்சிக்கோங்க என்று...

  அடேங்கப்பா....


  என்ன டெக்குனிக்கங்கடா சாமிகளா... :P
  /
  :))))))))))))))))))))))))))

  ReplyDelete
 13. கைப்ஸ் பதிவு சூப்பர்

  ReplyDelete
 14. //சேதுக்கரசி said...

  பாவம் கைப்ஸ்.. அந்தப் பதிவையே எத்தனை பேர் வெளிச்சம் போட்டு(!) காட்டுவீங்க? விட்ருங்க, வலிக்கும், அழுதுருவாரு...//

  ஹாஹா.. இதான் கோயம்புத்தூர் குசும்பு :)

  ReplyDelete
 15. நல்ல வேளை... அம்புட்டுத்தான் சொல்லுவேன்! :)

  ReplyDelete
 16. //உடனே உங்கக் கிட்ட இருந்து சிரிப்பு அவங்களுக்கும் பரவிடும். அவங்க கிட்ட இருந்து இன்னொருத்தர் இப்படி பரவிட்டே போய்டும்//

  இது உண்மைதான்:)

  சூப்பர் தொகுப்பு .நன்றி:)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது